Friday, February 27, 2015

அவசியம் பார்க்க வேண்டிய சஸ்பென்ஸ் த்ரில்லர் - நடு இரவில்


ரஜினி படம் ரிலீஸ் என்றால் காத்திருந்து எதிர்பார்த்து ரிலீஸ் ஆனதும் ஓடிபோய் பார்த்த அனுபவம் உண்டு..  அதேபோல சில உலக படங்கள் பார்க்க ஆசைப்பட்டு , வாய்ப்பு கிடைக்காமல் தவித்து , வாய்ப்பு வரும்போது ஆவலாக பார்த்த அனுபவம் உண்டு.

அதேபோல பார்க்க ஆசைப்பட்டு , வெகு நாள் காத்திருந்த ஒரு படம்தான் “ நடு இரவில்’  இயக்கம் எஸ் பாலச்சந்தர்.

இவரது இயக்கத்தில் வந்த பொம்மை  , அந்த நாள் , அவனா இவன் போன்ற படங்களை பார்த்து விட்டேன்...  நடு இரவில் படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.. நெட்டில் பார்க்கும் அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை..
இந்த சூழலில்தான் சமீபத்தில் சில நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.. செம மகிழ்ச்சி.. என் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா/?

அறிமுகப்பாடல்கள் , எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற செண்டிமெண்ட் காட்சிகள் , இன்னார் பெருமையுடன் வழங்கும் இன்னார் நடிக்கும் இந்த படம் என எதுவும் இல்லாமல் முதல் நொடியிலேயே படம் ஆரம்பித்து விடுகிறது..அந்த காலத்திலேயே இப்படி ஓர் ஆரம்பமா என வியந்தேன்... பணக்கார முதியவர் ஒருவர் தன் துப்பாக்கியில் குறி பார்ப்பது போல முதல் காட்சியே படத்தின் தன்மையை சொல்லி விடுகிறது..

சில நிமிடங்களிலேயே முக்கியமான கதாபாத்திரங்கள் , கதை எதை நோக்கி செல்லப்போகிறது என தெரிந்து விடுவதால் , படத்தில் ஈர்க்கப்பட்டு விடுகிறோம்.. இப்போதைய படங்களில்கூட இந்த விறுவிறுப்பு இருப்பதில்லை..

ஒரு தீவில் ஒரு பணக்கார முதியவர்  தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.. சில வேலைக்காரர்கள்.. மன நலம் சரியில்லா மனைவியை அவ்வபோது பார்த்து செல்லும் டாக்டர் நண்பன்...இவர்களைத்தவிர அங்கு யாரும் இல்லை...

அந்த பணக்காரர்க்கு கேன்சர் என்றும் சில தினங்களில் மரணம் உறுதி என்றும் அதனால் , கடைசி  நாட்களை மன நிறைவுடன் செலவிட , அவரது உறவினர்களை அழைத்து இருப்பதாகவும் சொல்கிறார் டாக்டர்.. தனது திருமணத்தை ( கலப்பு மணம் ) ஒப்புக்கொள்ளாமல் இழிவு செய்த உறவினர்க்ளை பணக்காரர் விரும்பவில்லை..ஆனாலும் டாக்டர் சொல்லுக்கு கட்டுப்பட்டு ஒப்புக்கொள்கிறார்..


அவர்கள் வந்ததில் இருந்து , அந்த தீவில் அச்சமூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன..பியனோ அதுவாகவே இசைக்கிறது... சிலர் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர்...

அந்த பணக்காரர் பழிவாங்க இப்படி செய்கிறாரா... அல்லது உறவினர்களை கொன்று விட்டு சொத்தை ஆட்டையை போட டாக்டர் விரும்புகிறாரா... அல்லது உறவினர்களில் ஒருவர் இப்படி செய்கிறாரா..அல்லது மன நலம் அற்ற மனைவி இப்படி செய்கிறாரா என எல்லோர் மேலும் சந்தேகிக்கிறோம்.. கடைசியில் மர்மம் விலகுகிறது..


இந்த கதையை விட , எடுத்த விதம் அற்புதம்.. ஒளிப்பதிவு , இசை , நடிப்பு , மெல்லிய நகைச்சுவை, அச்சமூட்டும் அமைதி , நிழல்கள் தரும் அமானுஷ்ய தன்மை என படம் பார்ப்பது அற்புத அனுபவம் அளிக்கிறது..

டைட்டில் இன்றி படம் ஆரம்பிக்கிறது ..  ஒவ்வொரு உறவினராக பணக்காரர்க்கு அறிமுகம் ஆகும்போது , டைட்டில் போடும் யுக்தி சூப்பர்..

அப்போதும் கூட இயக்கம் யார் என்பது போடப்படுவதில்லை..

குறிப்பிட்ட ஒருவரை எல்லோரும் சந்தேகிக்கிறார்கள்>.. படம் முடியபோகும் நிலையில் , முக மூடி அணிந்த ஒருவனை சுட்டு சாய்த்து விட்டு, அந்த சந்தேகப்பேர்வழியை கொன்று விட்டதாக நினைத்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள்>

அங்கே என்ன சத்தம் என ஒரு குரல்... பார்த்தால் , யாரை கொன்று விட்டதாக நினைத்தார்களோ அவர் சிரித்தபடி ஸ்டைலாக நிற்கிறார்...இந்த இடத்தில் இயக்கம் - எஸ் பாலச்சந்தர் என போடப்படுகிறது... செம கைதட்டல்  .... இத்தனை ஆண்டுகள் கழித்தும் கைதட்டல் வாங்கும் அவரது மேதமையை வியந்தேன்..

இயக்கம் மட்டும் அல்ல.. நடிப்பிலும் கலக்கியவர் எஸ் பாலச்சந்தர்... தன் படங்களை ரசிக்கும் தகுதி வினியோகஸ்தர்களுக்கு இல்லை என நினைத்தவர் , திடீரென சினிமாவை விட்டு முழுக்க முழுக்க விலகி விட்டார்.. அதன் பின் இசையில் முழு மூச்சாக ஈடுபட்டு , பிற்காலத்தில் வீணை பாலச்சந்தர் என அழைக்கப்பட்டார்...


பணக்காரராக மேஜர் சுந்தர்ராஜன்  அவரது  மனைவி பொன்னியாக (பண்டரிபாய்) வேலைக்காரர்களாக  கொட்டாப்புளி ஜெயராமன், சோ, ராமானுஜம் மற்றும் சரோஜா
 மருத்துவராக எஸ்.பாலசந்தர் அண்ணன்(சி.வி.வி. பந்துலு), அண்ணனின் மகள்(வி.ஆர்.திலகம்) மற்றும் அவளின் கணவன்(கோபாலகிருஷ்ணன்), கோபக்காரத் தம்பி (ஈ.ஆர்.சகாதேவன்), அவரின் மனைவி (எம்.எஸ்.எஸ்.பாக்கியம்), மகள் (கல்பனா), கண்பார்வை இழந்த மற்றும் ஒரு தம்பி (வி.எஸ்.ராகவன்), அவரின் மகள் (சௌகார் ஜானகி), இரண்டு மகன்களுடன் (விஜயன், சதன்) வரும் மற்றொரு தங்கை (எஸ்.என்.லட்சுமி), இறந்துபோன மற்றொரு அண்ணனின் மனைவி (எஸ்.ஆர்.ஜானகி) , அவரது மகன் (மாலி)


என படம் முழுக்க நட்சத்திர பட்டாளங்கள் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளனர்..

இசையும் பாலச்சந்தர்தான்... இரண்டு இனிய பாடல்கள்...சற்று அமானுஷ்யம் கலந்த பாடல்கள்>.

மொத்த்ததில் நடு இரவில் --- கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்


விறுவிறுப்பற்ற உலக கோப்பையும் ஒலவையாரும்


மயிலைப்பார்த்த வான் கோழி டான்ஸ் ஆட ஆசைப்பட்டது போல் , கால் பந்து உலக கோப்பை பாணியில் கிரிக்கெட் நடத்த முயன்று அசிங்கப்பட்டு விட்டார்கள்.

கால் பந்தில் கால் இறுதிக்கு எந்த எட்டு அணிகள் வரும் என்பதில் ஒரு பரபரப்பு இருக்கும்... ஆனால் கிரிக்கெட் ஆடுவதே எட்டு நாடுகள் என்பதால் , கால் இறுதிக்கு வரும் அணிகள் எவை என்பதில் பெரிய சஸ்பென்ஸ் இல்லை...

ஆனால் இந்த அளவுக்கு விளம்பரம் இல்லாமல் நடந்து வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

தமிழகம் - மகாராஷ்ட்ரா... மும்பை- கர்னாடகா அணிகள் அரை இறுதியில் மோதுகின்றன..

பல முறை இறுதி வரை வந்து கோப்பையை தவற விட்ட தமிழகம் இம்முறையாவது வெல்லுமா என பார்க்க வேண்டும்..

காலிறுத்க்கு வரும் எட்டு என்ற எண்ணிக்கை சித்தர் பாடல்களில் முக்கிய இடம் வகிப்பதை பார்த்திருக்கலாம்...

எட்டு எட்டாய் மனித வாழ்க்கையை பிரிச்சுக்கோ என பாட்ஷாவில் ரஜினி பாடுவாரே.. அது சித்தர் பாட தாக்கம்தான்..

ஒரு முறை ஒட்டக்கூத்தர் ஔவையாரை கிண்டலாக பேசி ஒரு விடுகதை போட்டார்.

அவ்வையும் சளைக்கவில்லை..கேலியாக பதில் சொன்னார்

எட்டேகால் லட்சணமே எமனேவும் பரியே
மட்டில் பெரியம்மை வாகனமே - முட்டமுட்டக்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது
எட்டு என்பது தமிழில் அ என்ற எழுத்தையும் கால் என்பது வ என்ற எழுத்தையும் குறிக்கும்...


அதாவது அவ லட்சணமே..எமனின் பரி என்பது எருமை..
பெரியம்மை எனும் மூதேவியின் வாகனம் கழுதை..

அவலட்சணமே,, எருமையே. கழுதையே..குட்டிச்சுவரே... யாரைப்பார்த்து என்ன பேச்சு பேசி விட்டாய்... என கேட்டார்.

அல்லது ஆரை என்பதே நீ கேட்டதுக்கு பதில் என சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்///இந்த பாடலில் இருக்கும் சுவாரஸ்யம்கூட உலக கோப்பையில் இல்லை

Monday, February 23, 2015

ரயில் பயணங்களில்- 2


ரயில் பயணத்தில் அந்த பெரியவர் அனைவருடனும் இயல்பாக பேசினார்.

வழக்கமாக பெரியவர்கள் அட்வைஸ் கொடுப்பார்கள்... இவர் அப்படி இல்லை.. ஒவ்வொருவரிடம் இருந்தும் ஏதேனும் தெரிந்து கொள்ள முயன்றார்... முக நூல் என்றால் என்ன , வாட்சப் , இன்டர்னெட் , ரயில்வே ஆன்லைன் புக்கிங்க் என என்ன பேசினாலும் ஆர்வமாக கேட்டார்.

பின் நவீனத்துவம் , இலக்கியம் என மொக்கை போட்டாலும் கேட்டார்.. அனேகன் பற்றி பேசினாலும் கேட்டார்...

ஒரு வேளை , எல்லாம் தெரிந்து கொண்டு சும்மா கின்டலுக்காக கேட்கிறாரோ என தோன்றினாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் , மெல்லிய புன்னகையுடன் சிரித்த முகத்துடன் நிதானத்துடன் பேசி வந்தார்..

நானும் அவரும் ஆளுக்கொரு கடலை பாக்கெட்ட் வாங்கி கொறித்தபடி பேசிக்கொண்டு இருந்தோம்...

அப்போது டி டி ஆர் செக்கிங்க் வந்தார்,,.. அதிர்ச்சி..

அவரிடம் ஐடி ப்ரூஃப் இல்லை... அபராதம் கட்ட பணமும் இல்லை..தனது கடலை பாக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு தேடிப்பார்த்தார்,,பயன் இல்லை..

 நான் உதவ எத்தனித்தேன்... நான் பார்த்துக்கொள்கிறேன் என அவருக்கே உரிய புன்னகையுடன் சொன்னார்...

அபராதம் கட்டாதவர்கள் கீழே இறங்குங்க்கள் என சொல்லி , டிடி ஆர் அனைவரையும் அழைத்தார்.

தம்பி,,,,அந்த கடலையை கொடுங்க்க என அலட்டிக்கொள்ளாமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டு டிடி ஆரை பின் தொடர்ந்தார்,..

தக்காளி...இவ்வளவு பிரச்சனையில் மிக்சர் தேவையா என நினைத்துக்கொண்டேன்..

கொஞ்ச நேரத்தில் தன் சீட்டுக்கு வந்தார்...  கூட போனவர்கள் சிலர் அபராதம் கட்டினார்களாம்... சிலர் இறங்க்கி விட்டனர்,,,, இவரோ அபராதம் கட்டாமல் எப்படியோ சமாளித்து விட்டார்...

செம கேரக்டர் என நினைத்துக்கொன்டேன்..

இந்த பிரச்சனைகளுக்கு இடையே ஊர் வந்து விட்டது...

கடைசி நிமிடத்தில் ஃபாமிலி ஃப்ளாஷ் பேக் சொன்னார்..

அடச்சே,,,இவ்வளவு நேரம் கேட்காமல் போனேனே என நினைக்கும் அளவுக்கு செம..

ஆனால் நேரம் போதவில்லை...

போன் நம்பர் வாங்கிக்கொண்டு , அடுத்த நாள் பேசினேன்..

சில ரயில் நட்புகள் , ரயிலுடன் முடிவதில்லைரயில் பயணங்க்களில்


இரவு நேரம்,,கிண்டி ரயில் நிலையத்தின் ரேஸ் கோர்ஸ் சாலை நுழைவு வாயிலில் ஒரு பெரியவர் பரிதாபமாக  நின்று கொண்டு இருந்தார்..
என்ன சார் என் விசாரித்தேன்.

டிக்கட் கவுன்டர் மூடி விட்டார்கள்.. என்ன செய்வது என்றார்..

இது ஒரு பிரச்சனையா... மேம்பாலம் வழியாக எதிர்புறம் போய் விடுங்க்கள்... அந்த கவுன்டரில் டிக்கட் கிடைக்கும்,,, என்றேன்..

மேம்பாலம் வழியாக போகும்போது யாரேனும் டிடி ஆர் டிக்கட் கேட்டால் என்ன செய்வது என்றார்.

கேட்கமாட்டார்கள்.. கேட்டால் இப்படி விபரம் சொல்லுங்கள் என்றேன்..

முடியாது,, ஃபைன் போட்டு விடுவார்கள் என்றார்.

தக்காளி..அப்படி என்றால் பஸ் ஏறி போக வேண்டியதுதான் என்றேன்,,

பஸ் இல்லை என்றார்..

இன்று யார் முகத்தில் விழித்தோமோ என   நினைத்தபடி , சரி..என்னுடன் வாருங்க்கள்.. டிக்கட் வாங்கி தருகிறேன். என அவருக்கு துணையாக போய் டிக்கட் வாங்கி கொடுத்து விட்டு , வரும்போது , டி டி ஆர் என்னிடம் டிக்கட் கேட்டார்..


Saturday, February 21, 2015

ஆச்சரயம்மூட்டிய இஸ்லாமிய சித்தர்


ஒரு பைத்தியக்காரன் ஊரில் சுற்றிக்கொண்டு இருந்தார். யாரும் அவரை செய்யவில்லை.. ஒருவர் ம்ட்டும் அவரை விசாரித்தார். அய்யா உங்களுக்கு யார் வேன்டும்.

அவர் சொன்னார்..

நான் இப்ராஹிமை தேடி வந்தேன்..

- அட.. அவரா... அவர் ஊருக்கு போய் விட்டாரே..

அந்த பைத்தியக்காரன் திகைத்தார்..

- பாவம். அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை.. சரி , நீ வாங்கிக்கொள் என சொல்லிவிட்டு , முகத்தில் காறி உமிழ்ந்து விட்டு தன் வழியே செனறார். அதன் பின் அந்த " பைத்தியக்காரனை " யாரும் பார்க்கவில்லை..

அப்படி உமிழப்பட்டவர் இஸ்லாமிய மகான் ஆனார்..பல பாட்ல்கள் இயற்றினார்... சித்தர் பாடல்கள் போல ரகசிய அர்த்தங்க்கள் நிரம்பிய பாடல் படைத்தார்...

அவரது தர்க்கா இன்றும் தமிழகத்தில் இருக்கிறது...

________________________________________

இப்போதைய உலக கோப்பை கிரிக்கெட் போன்ற போரான உலக கோப்பையை பார்த்தது இல்லை...

டாப்8 நாடுகள் எப்படியும் க்வார்ட்டர் ஃபைனல் போய் விடும்.. மொத்தம் விளையாடும் நாடுகளே எட்டுதான் எனகிறபோது என்ன சுவாரஸ்யம் இருக்கிறது...

டாப் சிக்ஸ் என இருந்தாலாவது சுவாரஸ்யம் இருந்திருக்கும்...

ஆனாலும் மெக்கல்லம் ரசிக்க வைக்கிறார்... ஃபுட்பாலில் ராபர்ட்டொ பாஜியோ, க்ரிக்கெட்டில் லான்ஸ் க்ளுஸ்னர் என சூப்பர் ஸ்டார்களுக்கு ஆன்டிகிளைமேக்ஸ்தான் அமைவது வழக்கம்.பார்ப்போம்.

_____________________________________________


நான்வெஜ் சாப்பிட்டு இருக்கிறேன்.. கோயிலுக்கு வர மாட்டேன் என்பர் சிலர்.

நான் ஓர் ஆலயம் போனேன். கடா வெட்டி விருந்து.... ஆலயத்திலேயே பரிமாறினார்கள்.

செம விருந்து....

சில ஜாதிகளில் இது அனுமதிக்கப்பட்டது.... சிலவற்றில் இது ஆச்சாரம்..

உயர்வு தாழ்வு இல்லாமல் , எல்லா ஜாதிகளும் சமமாக மதிக்கப்பட்டால் , எல்லா ஜாதிகளும் இருப்பது சுவாரஸ்யமாகவே இருக்கும் என தோன்றுகிறது

_______________________________________

ஒரு டீக்கடை..செம கூட்டம்..

க்யூவில் நின்று டீ வாங்கினேன்

சார் , ஒரு நிமிஷம் என என் டீ கப்பை வாங்கி , பாலால் ஒரு வட்டம் போட்டு விட்டு மீண்டும் கொடுத்தார் டீ மாஸ்ட்டர்.. கூட்டத்துக்கான காரணம் புரிந்தது

____________________________________
Thursday, February 12, 2015

இந்தியன் படத்தின் மூலக்கதை இயக்குனர் மறைவு

நான் ரசித்துப்பார்த்த முதல் சில படங்களில் ஒன்று பாலம். வித்தியாசமான படம். தமது கோரிக்கைக்காக பாலம் ஒன்றை சில இளைஞர்கள் கைப்பற்றி வைத்துக்கொள்வார்கள். அதன் பின் அரசு பேச்சு நடத்தும் , கோரிக்கையில் வெல்வார்கள் என கதை செல்லும்.. இதில் சுவையான விஷ்யம் என்றால் இந்த பால கைப்பற்றல் குறித்து அரசியல் பிரமுகர்களின் பேட்டி டீவியில் வரும். உண்மையான அரசியல் பிரமுகர்களே பேசி இருப்பார்கள் . கலைஞர் , ராமதாஸ் போன்றோர் புரட்சிக்கு , அதாவது நாயகனுக்கு ஆதரவாக பேசி இருப்பார்கள். சோ மட்டும் சற்று வித்தியாசமாக , தீவிரவாதம் தப்பு என பேசி இருப்பார். நாயகனுக்கு எதிராக இருந்தாலும் அந்த காட்சி அப்படியே படத்தில் இருக்கும்.
இந்த காட்சி அப்போது பரவலாக பரபரப்பாக பேசப்பட்டது. படமும் செமையாக இருக்கும். அதன் இயக்குனர் கார்வண்ணன் கவனிக்கப்படும் இயக்குனர் ஆனார்.
இவர் நந்தனம் கலைக்கல்லூரியில் எம் ஏ படித்தவர். படிக்கும்போதே எம் ஜி ஆர் கையால் மெடல் வாங்கியவர். படித்து முடித்த பின் , வேலையின்றி ஒரு நாள் சாலையில் சென்ற இவரை அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் கவனித்து விட்டார். தன் காரில் ஏறச்ச்சொல்லி பேசியபடி வந்து இருக்கிறார்.
சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு புதிய ஆட்டோ ஒன்று வாங்கி அனுப்பினார் எம் ஜி ஆர். எப்போதோ பார்த்த மாணவன்மேல் அன்பு காட்டி , அவன் வாழ்வுக்கு வழிகாட்டும் வகையில் ஆட்டோ வாங்கி கொடுத்தார் எம் ஜி ஆர். அந்த ஆட்டோவை எம்ஜி ஆர் வாங்கி தந்த ஆட்டோ என பெருமையாக தன் இல்லம் முன்பு நிறுத்தி இருந்தார் கார்வண்ணன்.
பாலம் படத்துக்கு பின் மீண்டும் முரளியை வைத்து புதிய காற்று என்ற படம் எடுத்தார், லஞ்சம் வாங்குபவர்களை தேடி தேடி நாயகன் கொல்வதால் அனைவரும் லஞ்சம் வாங்க பயப்படுவதாக கதை... இதுதான் பிற்காலத்தில் இந்தியன் படம் ஆனது .
மூன்றாம் படி , தொண்டன் , ரிமோட் , பாய்ச்சல் என நீண்ட இடைவெளிக்கிடையே நல்ல படங்கள் கொடுத்து வந்தார்.
இனி அப்படிப்பட்ட நல்ல படங்கள் கொடுக்க அவர் இல்லை...  அவரது இறுதிச்சடங்கு இன்று 13.02.2015ல் நடக்கிறதுWednesday, February 11, 2015

சூப்பர் ஸ்டார் அஜித்... ஆன்மிக விழாவில் விவேக் பரபரப்பு பேச்சு


 சென்னை மீனம்பாக்கத்தில் நடந்த ஆன்மிக கண்காட்சியில் விவேக் கலந்து கொண்டார்.  மரம் நடு விழாவில் கலந்து கொண்ட அவர் , ஆன்மிகம் குறித்தும் இந்திய ஞான மரபு குறித்தும் சுவையாக பேசினார்.

அஜீத் பெயரை அவர் சொன்னபோதெல்லாம் அரங்கில் கைதட்டல் கேட்டது.... அதனால் மகிழ்ந்த அவர் அஜித்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கி பேசினார்...

சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது டாக்டர் பட்டம் போல ஆகி விட்டாலும் அவர் பேச்சு சுவையாகவே இருந்தது..

இரண்டு வருடங்களாக ஏன் நடிக்கவில்லை...என்னை அறிந்தல் படம் , குரு என்பதன் அர்த்தம் என விரிவாக பேசினார்..


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா