Wednesday, January 29, 2014

கவிதைகளுக்கு இன்று அவசியம் இல்லை- அசோகமித்ரன் . கவிஞர்கள் றியாஸ் , நேசமித்ரன் , நறுமுகை தேவி எதிர் வினை

அசோகமித்ரன் அழகாக கதைகள் எழுதுவார் ...அவ்வப்போது தகுதி அற்றவர்களை பாராட்டி பேட்டி கொடுத்து சர்ச்சையில் சிக்குவார்..

அந்த வகையில் அவரது சமீபத்திய பேட்டி சர்ச்சையை கிளப்பியது....அது குறித்து சில கவிஞர்களுடன் ஓர் உரையாடல்...

*******************************************************************

அந்த காலத்தில் எழுதி வைக்கும் வசதிகள் இல்ல... நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது..இன்று அதற்கான அவசியம் இல்லை என்கிறார் அசோகமித்ரன்.. உங்கள் கருத்து?

Riyas Qurana 

அறிவை சேகரிக்காமல் வேறு எதையாவது சேகரிக்க உதவலாம். மற்றது மிக முக்கியமானது ஒன்றை நீங்கள் கவனிக்கவில்லை. அந்தக்காலத்தில் கவிதையாக கருதிய வடிவம் தேவையில்லை என்பதையே அ.மி சொல்கிறார். நாங்களும் அது தேவையில்லை என்றுதான் இங்கே கத்திக்கொண்டிருக்கிறோம். இந்தக் காலத்தில் அந்தக் காலத்து சாமான்கள் தேவையில்லை என்பது அவரின் சிறந்த விமர்சனம்.

பிச்சை

வெண்பா..ஆசிரியப்பா போன்ற வடிவங்கள் , இலக்கணங்கள் எதுகைமோனை போன்றவை தேவை இல்லை என்கிறீர்களா

Riyas Qurana

 நினைவில் சேகரிக்க உதவுவதையே அன்று கவிதை வடிவமாக கருதினார்கள் அதுதான் தேவையில்லை. நினைவில் பதிந்துவைக்க உதவிய அனைத்தும். அதற்குள் நீங்கள் சொல்லுவதும் இருந்தால்.

Riyas Qurana 

இலக்கியம் என்ற சொல்லுக்கான நவீன அர்த்தம் இரண்டு நுாற்றாண்டுகளுக்கு உட்பட்டதுதான். அதற்கு முன்பு இலக்கியம் என்று பாவிக்கப்பட்து எது தெரியுமா? கவிதைதான். ஆகவே, இலக்கியமமே தேவையில்லை என்று ஒருவகை விரக்தியில் கூட அ.மி. சொல்லியிருக்கலாம். நேர்கண்டவரின் அற்றலைப் பொறுத்து அவரின் பதில் அமைந்திருக்கிறது. அல்லது, இன்று இப்படி சொல்ல நினைத்திருக்கலாம். அதுதவிர, அமி சொல்வது முக்கியமான ஒரு விமர்சனமல்ல.

Ragu Ram Annur 

வார்த்தைகள் பலவீனமானவை !!!!

Riyas Qurana 

பலமானவைக்கும் வார்த்தை என்று பெயரிடலாம். நீங்கள் எந்த வார்த்தைகளைச் சொல்கிறீர்கள். பலவீனம் எனச் சொன்ன வார்த்தைகளிலாவது பலம் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

Ragu Ram Annur

 நான் உங்களை ஒரு கணம் அன்போடு அணைப்பதை, எத்தனை ஆயிரம் வார்த்தைகளில் நான் வெளிப்படுத்த முடியும் ? வார்த்தைகள், உள்ளத்து உணர்வை சென்று சேர்க்க முடியாமல் நலிந்தே சென்று சேர்க்கிறது...

நறுமுகை தேவி 

அவர் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம்..ஆனால்,இது கவிதைக்கு மட்டுமா?
தாலாட்டு என்பது தாயின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தை தன் தாய் தன் அருகில் இருக்கிறாள் என்ற பாதுகாப்புணர்வோடு உறங்குவதற்கு உணர்த்தப்படும் ஒருவகை ஒலி மட்டுமே என்று கொண்டால் இப்போது அதை மனப்பாடமாகப் பாடிக் கொண்டே தொட்டில் ஆட்டவேண்டியது இல்லை..ஒரு குறுந்தட்டில் பதிந்து சுழல விட்டு விடலாம் அல்லவா..?கவிதை என்பது ஒரு விசயத்தைச் சுவாரசியமாகச் சொல்லும் குறு(ம்)வடிவம்.. (குறுஞ்செய்தி போல்)
எல்லா இடத்திலும் போன் எடுத்துப் பேசுவதை விட குறுஞ்செய்தியை யாருக்கும் தொந்தரவில்லாமல் அல்லது ரகசியமாக அனுப்பி விடலாம்.

அதுபோல எல்லா இடங்களிலும் ’சிறுகதைகளை’ எழுதிக் கொண்டிருக்க முடியாது அல்லவா?

Ragu Ram Annur 

வார்த்தைகள் பலவீனமானவை - ஓஷோ

ஒரு மிகச்சிறந்த பேச்சு என்பது நேர்மையான பொய்யே - மைகேல் நைமி

மலர் ஒரு வேளை தான் அழகாக இருக்கிறேன் என்று வாய் திறந்து கூறினால் அசிங்கம் செய்துவிடுகிறது - லாவோ த்சு
Riyas Qurana

 உள்ளத்து உணர்வு என்பதெல்லாம் மொழியாலானதுதான். நிங்கள் சிந்திப்பதே மொழியால்தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் 

அமி சொன்னதையே நவீன கவிதைக்கான அடிப்படைக் காரணம் / தேவை என்றும் சிலர் சொல்வார்கள். எப்படி கேமரா ஓவியங்களை மாற்றியதோ அப்படி அச்சு ஊடகம் கவிதைகளை மாற்றியது.

Ragu Ram Annur

 மொழி மூலம் தான் சிந்திக்கிறோம் என்பது தெரியாமலா இத பத்தி பேச வந்திருப்பேன் ?

பேச்சற்று நான் நிற்கும் உணர்வுகளை மொழிபடுத்த விளைவது, பலவீனமாக்குகிறது என் உணர்வுகளை...

Ragu Ram Annur 

உங்களுக்கு ஏற்படும் வலி மொழியால் ஆனதா ? உணர்வை வெளிப்படுத்த மொழி பலவீனமாக உதவுகிறது, வெளிப்படுத்த முடியாமல் முடங்கிவிடக்கூடாத உணர்வு எனில், மொழி பெரிதளவில் உணர்விற்கு உதவுகிறது (ஆனால் முழுமையாக இல்லை)

Riyas Qurana 

கவிதையோ, இலக்கியமோ எதுவென்றாலும் அது மொழியாலான நிகழ்வு. அது என்றும் அழிந்துவிடுவதில்லை. மனிதர்கள் இனி மொழியற்றவர்களாகிப்பொவதில்லை என நம்புகிறேன். ஆக, கவிதை ன பாவிக்கப்படும் மொழியாலான நிகழ்வு, புதுப்பிக்கப்படவும், மாற்றமடையவும் சாத்தியம் அதிகம். அது இல்லாது போய்விடாது.

பிச்சை

"கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." என்கிறார் அ.மி... கவிதை என்பது உணர்வு சார்ந்ததல்ல...ஒரு craftmanship மட்டுமே என்பது ஏற்கத்தக்கதா

Ragu Ram Annur 

கூறியவனின் உணர்வை முற்றிலும் உணர்ந்து கொள்வதில் தான் சவாலே, வெளிப்படுத்திவிடலாம் பிக்கு, சென்று சேர்ந்ததா ? படித்த/கேட்ட மனிதர் உள்ளுக்குள் என்ன ஆனார் என்பது தானே இறுதி ?

Riyas Qurana 

மனிதர்களும், சமூகங்களும், மொழிகளும் முற்றிலும் வேறான வடிவங்களில் இருப்பதை கவிதையாகப் பாவித்திருக்கிறார்கள். அமி சொல்லவருவது, கவிதையாக பாவித்த குறித்த வடிவத்தைப் பற்றியது. அது அவரின் பதிலிலே உள்ளடங்கியிருக்கிறது. அதற்கு வெளியெ நேர்வுகளை நாம் சிந்திக்கத் தேவையில்லை என்றே நான் கருதுகிறென்.

Nesamithran Mithra 

நினைவில் மட்டுமே அறிவை சேகரித்து வைக்க முடியும் என்பதால் கவிதை என்ற வடிவம் தேவைப்பட்டது// கவிதை என்பது மேட்னஸ் சம்பந்தப்பட்ட விஷயம் என்று நம்புகிறவன் நான் .கூடுதலாய் ‘அறிவை சேகரித்தல்’ இந்த கூற்றே அபத்தமானதாய் தோன்றுகிறது . அவர் எப்போதும் கவிதையை சந்தேகித்தே வந்திருக்கிறார் .அவரது ’அரசியல் நிலைப்பாடு ’கவிஞர்களால் எப்போதும் சந்தேகிக்கப்பட்டே இருந்து வந்திருக்கிறது. ஆதலால்.... நிற்க ! 82 வயதுப் பெரியவருக்கு ,ஒரு நல்ல கதை சொல்லிக்கு என் அன்பு !
பிச்சை

கொஞ்சம் முயற்சி எடுத்தால் யார் வேண்டுமானாலும் அந்தப் புனித வாக்கை எழுதிவிட முடியும்." Nesamithran Mithra இதை ஏற்கிறீர்களா... மேட்னசை எப்படி முயற்சி செய்து வர வைக்க முடியும்


Riyas Qurana 

உணர்வுகள் என்பது இயல்பானது அல்ல. அது முற்றிலும் கட்டமைக்கப்பட்டதுதான். துயரம் சந்தோசம் என்பதை வேறு ஏதோவொன்றால் (புறத்திலிருந்து) வழங்கப்படுகின்ற ஒன்றாகவும் இருக்கிறது. உணர்வு, சுயம், அகம் சார்ந்தது என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஏனென்றால், அவை ஏற்கனவே தாக்கமுற்ற நிலையிலே இருக்கிறது.


Riyas Qurana 

கவிதை புனிதமானது அல்ல. யாரும் எதையும் எழுதிவிட முடியும் கவிதையை மாத்திரமல்ல.அனைத்தையும், ஆனால் அதை எழுதிய கதைகளைக்கூற முடியும்போதுதான் எழுதியது என்ன என்றெ வெளித்தெரிகிறது.

Ragu Ram Annur 

உணர்வுகள் பெரும்பாலானது வேண்டுமானால் முழுதும் கட்டமைக்கப் பட்டிருக்கலாம்..

தாயன்பு (விலங்குகளிடம் கூட) போல சில உணர்வுகள், இயல்பிலே தான் வரும்


Riyas Qurana 

ஒரு முக்கியமான விசயம் தெரியுமா? கதைகளைக்கூட கவிதையாகத்தான் சொல்ல வேண்டியிருந்தது. கம்பராமாயணம், கீதை இப்படிப் பல.


Nesamithran Mithra 

க்ராஃப்ட்டிங் /எடிட்டிங் எல்லாம் எழுத எழுத வாசிக்க வாசிக்கத் தானாய் கைகூடும் . சித்திரமும் கைப்பழக்கம் செ. நா என்பது எத்தனை நூற்றாண்டு பழைய வாக்கியம்  புனித வாக்கும் இல்லை புண்ணிய வாக்கும் இல்லை . (புனிதம் புண்ணியம் போன்ற சொற்கள் அவரது அரசியலை காட்டிக் கொடுக்கும் சொற்கள்  ) பின் நவீனத்துவம் எல்லாவற்றை கட்டுடைத்து விட்டது .கவிதை மட்டுமல்ல கதைக்கும் இன்னபிற வடிவங்களுக்கும் பொருந்தும். (சாருவின் கதைகள் மீதான சமீப காலத்து ’அபிப்ராயத்தை’ நினைவு கொள்வீர்கள் என நம்புகிறேன் )பாதுகாப்புணர்வுக்கு ஏங்குபவர்கள் அந்த எல்லைகளுக்குள்ளாகவே மொழியிலும் வாழ விழைபவர்களின் மன அமைப்புக்கு நெருக்கமான கதைச்சொல்லிகள் அவர்கள், விடுதலை- மேட்னஸ் சார்ந்து பேச நமக்கு வேறு மொழிப்பரப்பு வேண்டி இருக்கிறது .

Riyas Qurana 

எந்த மொழிக்கும், மிக அதிகமான பங்களிப்பை செய்ததும், செய்துகொண்டிருப்பதும் கவிதை என காலத்துக்கு காலம் நம்பப்பட்ட வடிவங்கள்தான். நிற்க எனக்கு ஒரு சந்தேகம். ம.புத்திரனின் கவிதைகளை அமி படித்திருப்பாரோ..? படித்திருந்தால், இப்படிச் சொல்ல சாத்தியம் அதிகமிருக்கிறது. ஏற்றுக்கொள்ள நமக்கு காரணமும் இருக்கிறது.


பிச்சை

கவிதை என்பதை உணர்வு சார்ந்த விஷ்யமாகவே உலகம் எல்லாம் கருதுகிறார்கள்.. ஒருவித மேட்னஸ் தேவை என்கிறார்கள்.. ஆனால் கேசுவலாக கொஞ்சம் பயிற்சி எடுத்தால்போதும் ,..யாரும் எழுதலாம் என அவர் சொல்வது நெருடலாக உள்ளதே 

 நறுமுகை தேவி

மொழி என்பது ஒரு வடிவம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.ஆனாலும் இந்த மொழியின் மீது ஒரு நூலிழை சந்தேகம் நமக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது.நாம் சொல்வது அவர்களுக்குப் புரியுமோ புரியாதோ என்கிற சலனம் இழையோடிக் கொண்டே இருப்பதால்(!) தான் ’வா’ ’போ’ என்று சொல்லும் போதே கைகளாலும் சைகைகள் கொடுக்கிறோம். ‘இல்லை’
’ஆம்’ என்று சொல்லும் போதே தலையையும் ஆட்டுகிறோம்..
அப்படித்தான் ‘பக்தி இலக்கியங்கள்’/ செய்யுள் வடிவம் மனப்பாடம் செய்யப்பட்ட அன்றைய நிலை இன்று தேவையில்லாமல் இருக்கலாம்.ஆனால்,அதற்காக ஒட்டுமொத்தக் கவிதை என்னும் வடிவமே வேண்டாம் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.அதன் மாற்றம் தேவையாய் இருக்கிறது

உண்மையில் ஒரு பைத்தியக்கார மனநிலையில் எழுதப்படும் கவிதைகள் பல அழகான பரிமாணம் கொள்கின்றன..அது அறிவுசார் நிலை என்ற பொதுப்படையான கூற்று இங்கு ஏற்கத்தக்கதல்ல..


Riyas Qurana 

அப்படிச் சொல்கிறவர்கள் உலகெங்கும் நிறைய இருக்கலாம். அனைத்தும் உணர்வு சார்ந்ததுதான் என சொல்ல வாயப்பிருக்கிறது. அது ஒரு குறிப்பான முன்வைப்பு அல்ல. உணர்வு என்று எதைக் கருதுகிறார்கள் என ஒரு சிறு கேள்வியை அவர்களின் முன் வீசினால், அவர்கள் கலவரப்பட்டுப்போய்விடுவார்கள். ஏனெனில், உணர்வு என ஒரு பொதுச்சொல்லை ஒவ்வொரு வேறுபட்ட மனிதனும் வேறுபட்ட அம்சங்களை உணர்வென அழைக்கலாம். இதைத்தான் என்ற ” அதிகமும் பாதுகாக்கப்பட்ட ஒரு பொதுக் கொள்கை” என்ற வசதியில் பயன்படுத்தலாம். ஆக. இந்த உணர்வு என்றும், சொல்லிக் அர்த்தம் என்று ஏலவே புளக்கத்திலுள்ளவைகளுக்கான புதிய வெளிகளை இன்னும் அகழ்ந்து கொண்டு அதை விரிவுபடுத்த முயற்சிப்பதே இலக்கியம். அல்லது கவிதை.

நான் எப்போதம் பைத்தியகார மனநிலையில் கவிதை எழுதுவதே இல்லை. மிகத் தெளிவாக இருக்கும்போது மாத்திரமே எழுதியிருக்கிறேன். பைத்திய மனநிலையில் எழுதலாமென்று எனக்கு நம்பிக்கை இல்லை. அந்த மனநிலையில் வேறுவகை வேலைகள்தான் செய்திருக்கிறேன். செய்வதையும் பார்த்திருக்கிறேன். அந்த மனநிலையில் எழுதுபவர்கள் பாக்கியவான்கள். நான் அப்படி செய்யாததினால், அந்த மனநிலையில் எழுதலாம் என்பதில் எனக்கு பெரும் சந்தேகமிருக்கிறது.


Lakshmanan Cbe ·

அசோகமித்திரன் சொல்லும் கவிதையின் காலம் முடிந்துபோய்விட்டது.அப்போதும் அது வெறும் நினைவு சேமிப்புக்கிடங்காக மட்டும் இருக்கவுமில்லை 'போலச்செய்தல்' போல் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படும் சொல்லாடல்களின் மூலம் ஒரு பொருளுக்கு சக்தியை ஏற்றிவிடும் 'போலச் சொல்லல்' இருந்திருக்கிறது. கவிதை அசோகமித்திரனை தாண்டிப்போய் வெகுகாலமாகிவிட்டது.

Friday, January 24, 2014

திமுகவை அழித்தது வீரமணிதான் - அழகிரி ஆவேசம்.. கலைஞர் கைதை வரவேற்ற வீரமணியின் உரை இணைப்பு


அழகிரி நீக்கத்தை வரவேற்பதாகவும் , திமுக இதன் மூலம் விஸ்வரூபம் எடுத்து இருப்பதாகவும் தி க தலைவர் கி வீரமணி சொல்லி இருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுத்த அழகிரி , கலைஞர் கைதின் போது வீரமணி சொன்னதை திமுகவினர் மறக்கவில்லை ...திமுக அழிவுக்கே வீரமணிதான் காரணம்... வீரமணி அரசியல் வியாபாரி கூட அல்ல..அரசியல் ****** என சொன்னார் ( டீவியில் சென்சார் செய்தே ஒளிபரப்பானது ).

சரி,  கலைஞர் கைதின்போது வீரமணி என்னதான் பேசினார்?

இதோ ..உங்கள் பார்வைக்கு...

*******************************************************

கலைஞர் கைதின் போது , வீரமணி காணொளிகள் , டாக்குமெண்டுகள் ஆதாரங்களுடன் பெரியார் திடலில் பேசியதன் ஒரு பகுதி...

கடந்த 5 ஆண்டுகாலத்திலே மிக முக்கியமான பணியை தி.மு.க. தலைவர் எதை செய்தார்? அன்றைய முதலமைச்சர் திருவாளர் கருணாநிதி அவர்கள். ரொம்ப இலாவகமாகச் சொன்னார்.

பொது மக்களே நீங்கள் எங்களுக்கு உத்தரவு கொடுத்திருக்கின்றீர்கள். என்ன? ஜெயலலிதா அவர்கள் மீது வழக்கு போடுவது என்று - வேறு எதையும் பொதுமக்கள் தேர்தல் அறிக்கையில் கேட்கவில்லை. நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கின்றீர்கள். எனவேதான் ஜெயலலிதா மீது வழக்கு போடுகின்றோம் என்று சொல்லி 46, 47 வழக்குகளைப் போட்டிருக்கின்றார்கள். தொடர்ச்சியாக வழக்கு, வழக்கு என்று போட்டுக் கொண்டிருந்தார்கள்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை கைது செய்தார். சிறையில் வைத்தார். அப்பொழுதுகூட ஒரு அறிக்கை எழுதினோம். ஆத்திரப்படக்கூடிய தி.மு.க. தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் - பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். ஒரு சார்பு நிலையை திராவிடர் கழகம் ஒரு போதும் எடுக்காது. நடுநிலையில் இருந்து சொல்லுகின்றோம். அந்த நடுநிலை பல பேராலே பாராட்டப்படுகின்றதா - இல்லையா? என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்களுக்குச் சரி என்பதை எடுத்துச் சொல்லுகின்றவன் தான் பெரியார் தொண்டனே தவிர, யாருக்காகவும் என்னுடைய கருத்தை மாற்றிக் கொள்ளாதவன் தான் பெரியார் தொண்டன். ஆகவே அந்த அடிப்படையிலே அப்பொழுது நான் சொன்னேன். ஒரு தவறான முன்மாதிரியை நீங்கள் உருவாக்குகின்றீர்கள்.

ஒரு ஆட்சி நடக்கின்றபொழுது எந்த முதலமைச்சர் வந்தாலும் ஃபைலிலே கையெழுத்துப் போடக்கூடிய நிலை வரும். அமைச்சர்கள் போடுகிறார்கள். அலுவலர்கள் போடுகிறார்கள். ஆகவே முதலமைச்சர், அமைச்சர், அதிகாரிகள் எல்லோர் மீதும் வழக்கு போடுகிற ஒரு தவறான முன் மாதிரியை உருவாக்கி விட்டீர்கள். அவர்களை எல்லாம் கைது செய்து உள்ளே போடுகின்றீர்களே அது எங்கே போய் நிற்கும்? இது எங்கே போய் முடியும்? இது ஒரு தவறான முன் மாதிரி ஆகாதா என்றுஅப்பொழுதே கேட்டோம். நாங்கள் சொல்வதை அவர் கேட்கவில்லை. உடனே தி.மு.க தலைவர் 5 இலட்சம் பேசுகிறது என்று சொன்னார்.

என்னுடைய வாதத்தை சந்திக்க முடியாதவர்கள். என்னைத் தனிப்பட்ட முறையிலே கொச்சைப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப்படாதவன். ஆனால், அவருக்கு என்ன பெயர்? எனக்கென்ன பெயர் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும். சர்க்காரியா என்னைப் பார்த்து விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்தவன் வீரமணி என்று சர்டிஃபிகேட் கொடுக்கவில்லை. ஆகவே நான் அதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. நான் பெட்டி வாங்கிக் கொண்டு பேசுகின்றேன் என்று தி.மு.க. தலைவரே முரசொலியில் கார்ட்டூன் போடுகின்றார். மணி என்பது அவருடைய பெயரிலேயே இருக்கிறது என்று சொல்லுகின்றார்.

இவ்வளவையும் அவர்கள் சொன்ன நேரத்திலே நான் ஒரு கேள்வி கேட்டேன். இதுவரை அந்தக் கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை. சரி. உங்களை ஏறத்தாழ 23 ஆண்டுகாலம் ஆதரித்தோமே- நீங்கள் அதற்கு எத்துணை முறைபெட்டிக் கொடுத்தீர்கள்? எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என்ற கணக்கை தயவு செய்து வெளியிடுங்கள். இதை வெளியிடக் கூடிய தெம்போ, திராணியோ, தைரியமோ உங்களுக்கு உண்டா?

...... ஒரு பொதுத் தலைவரை கைது செய்யும்பொழுது கிளர்ச்சிகள், தேவையற்ற அடிதடிகள், அசம்பாவிதங்கள், துப்பாக்கிச் சூடுகள் இவைகள் எல்லாம் நடக்கும் என்று எண்ணித்தான் இரவிலே கைது செய்தார்கள். கைது செய்வார்கள். பெரிய தலைவர்களை கைது செய்யும்பொழுது நீண்டகாலமாக இருக்கின்ற நடைமுறை இதுதான். இதை நான் நியாயப்படுத்துவதற்காக சொல்லவில்லை.

எத்தனையோ தலைவர்களை இப்படி எத்தனையோ முறை கைது செய்திருக்கிறார்கள். போலீசார் அழைத்தவுடன் வந்திருந்தால் இந்த மாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் இடம் உண்டா? இவர் வீட்டிற்குள்ளேயே இருந்து கொண்டு யாருக்கும் தெரியாமல் செல்ஃபோனில் தகவல் கொடுக்கின்றார் சன் டி.வி.க்கு, மாறனுக்கு. இதற்குரிய ஆதாரங்கள், தொடர்ச்சியாக நடைபெற்ற சம்பவங்கள் - முரசொலியிலே வந்த செய்திகள் - இப்படி கத்தை, கத்தையாக என்னிடத்திலே ஆதாரங்களாக உள்ளன.

எந்த அரங்கத்திலே வேண்டுமானாலும் நான் வாதாடுவதற்குத் தயாராக இருக்கின்றேன். தி.மு.க. தலைவர் அவருடைய வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திடம் தொலைபேசியிலே பேசினேன் என்று சொல்லுகின்றார். தி.மு.க. தலைவர் எதிர்பார்த்த சன் டி.வி. வரவேண்டும். அவருடைய மருமகன் மத்திய அமைச்சர் மாறன் வரவேண்டும். அதற்காக அவரை அழைத்துக் கொஞ்சம் சரளமாகப் பேசுகின்றார்கள். அதை எல்லாம் போலீஸ் டி.வி.யிலே, ஜெயா டி.வி.யிலே காட்டியிருக்கின்றார்கள். தி.மு.க. தலைவரிடம் ரொம்ப மரியாதையாகத்தானே காவல்துறையினர் சொல்லுகின்றார்கள். எதற்காக வந்திருக்கின்றீர்கள் என்று இவர் கேட்கிறார்.அய்யா உங்கள் மீது வழக்குப் போடப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்கள். இதற்கு அரஸ்டு கார்டு என்பதைக் கொண்டு போனாலே போதும்.

மற்றவர்கள் பொத்தாம் பொதுவில் சொல்லுகின்றார்கள். போலீசார் வாரண்டே இல்லாமல் போயிருக்கிறார்கள் என்று; இங்கே பல வழக்கறிஞர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். இதோ குற்றவியல் நடைமுறைச் சட்டம் இருக்கிறது. இதிலே மிக முக்கியமான ஒரு பகுதி இருக்கிறது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், இது 41-ஆவது விதி. வாரன்ட் இல்லாமல் ஒரு குற்றத்தில் கைது செய்யலாம் என்றிருக்கிறது. பதினான்கு வருடம் முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவருக்கு இது தெரியாதா? இது சட்டவிரோதமா? இல்லை. கலைஞர் கருணாநிதி என்பவர் ஒருவர் வருவார். அவருக்காகவே இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்திருக்கின்றார்களா?

போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார். அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார். உடனே, முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார். பாலம் நானா கட்டினேன்? என்று. பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள். (பலத்த கைதட்டல்) தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள்.

இந்த மாதிரி பிரச்சினைகள் வரும் என்பதால்தான் நான் 5 வருடத்திற்கு முன்னாலேயே அறிக்கை கொடுத்திருக்கிறேன். நான் பெரிய தீர்க்கதரிசி என்பதற்காக அல்ல. எப்படி எப்படி இவைகள் எல்லாம் மாறும் என்பதற்காக. முதலமைச்சர் என்ற முறையிலே நீங்கள் (கருணாநிதி) வழக்குப் போடுவதற்கு கையெழுத்து போட்டால் இது எல்லா முதலமைச்சர்களுக்கும் சங்கடத்தை உருவாக்கும் என்று சொன்னோம். அன்றைக்கு என்ன செய்தார்கள்? அரசாங்க உத்தரவைத் திருத்தினார்கள். அல்லது அதற்கு அனுமதி கொடுத்தார்கள். ஆகவே கையெழுத்துப் போட்ட அதிகாரிகள் மீது வழக்கு; கையெழுத்துப் போட்ட அமைச்சர்கள் மீதும் வழக்கு என்று போட்டீர்கள். இப்பொழுது அதே நிலைதான் திரும்பி வந்திருக்கிறது.

காணாமல் போன திருவள்ளுவர் அபூர்வ நாணயம் - எஸ் ரா பேச்சு


சென்னை புத்தக கண்காட்சியில் எஸ் ரா உரையின் ஒரு பகுதி..
ஐராவதம் மகாதேவன் குறித்து பேசுகிறார்..

Wednesday, January 22, 2014

புத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...


புத்தக கண்காட்சி முடிந்து விட்டது... எல்லா ஸ்டால்களிலும் சுற்றி பார்த்ததில் இருந்து ஒன்று தெரிந்தது... இணையத்தில் நாம் விவாதிப்பதற்கும் , நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

நல்ல வாசகர்கள் பலர் இணையத்தில் இயங்குவது இல்லை.. எனவே இணைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை...

சமையல் புத்தகம் , குழந்தைகளுக்கான புத்தகம் , கல்வி சம்பந்தமான புத்தகங்களை விட்டு விட்டு பார்த்தால் , இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாங்குவது குறைவாகவே உள்ளது..

ஆனாலும் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா போன்றோர் புத்தகங்களை கேட்டு வாங்குபவர்கள் , தேடி வாங்குபவர்கள் ஏராளம்.. அந்த வகையில் அராத்துவின் புத்தகங்களையும் தேடி வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரியது...

காரணம் இளைய தலைமுறையில் ஒருவர் புத்தகம் வாங்கும்போது மற்றவர்கள் புத்தகங்களையும் பார்க்கிறார்கள் அல்லவா..

சுஜாதா புத்தகங்களை , இன்ன நாவல் என இல்லாமல் , குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ எதை வாங்கி செல்லும் போக்கு இருந்தது...ஆக அவர் மினிமம் கியாரண்டி... அதே போல கல்கி .கண்ணதாசன் போன்றோர்..

இடது சாரி புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்தது..
ஆனால் தமிழ் சார்ந்த நூல்கள் சரிவர சந்தைப்படவில்லை...

ஆன்மீக நூல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலை...தேர்ந்தெடுத்தே வாங்கினார்கள்...

விளம்பரத்தால் மட்டுமே எந்த புத்தகமும் கூடுதலாக விற்பனை ஆகவில்லை... ஆனால் விளம்பரம் இன்றி சில நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தடுமாறின...டாப் டென் என ஒவ்வொரு பதிப்பகமும் சில லிஸ்ட் வெளியிடும்...  ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா ஸ்டால்களையும் சுற்றியதில் நான் அவதானித்தன் அடிப்படையில் டாப் டென்..

1. பகவத் கீதை - கீதா பிரஸ் ( குறைவான விலை என்பதால் பலரும் வாங்கினர் ) 

2. சுஜாதா கதைகள் ( தலைப்பை பற்றி கவலையின்றி , காசு குறைவாக இருப்பதை அள்ளி சென்றார்கள்... குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகள்,)

3. தற்கொலை குறுங்கதைகள்- அராத்து

4 உடையார் - பாலகுமாரன்

5 . கிமு கிபி - மதன்

6 ராசலீலா-  சாரு நிவேதிதா

7. ப்ளீஸ் , இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபி நாத்

8. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

9 . அராஜகம் 1000 - அராத்து

10 வெள்ளை யானை - ஜெயமோகன்

( அடுத்த பத்து இடங்களில் இருக்கும் புத்தக  பட்டியல் அடுத்து வெளியிடப்படும் ) 

ஜே சி குமரப்பா குறித்து எஸ் ரா உரை
Friday, January 17, 2014

புத்தக கண்காட்சியில் சாருவின் ரகளை- எக்சைல் 2 , டாஸ்மாக் இல்லாத தமிழகம் , காங்கிரசுக்கு எத்தனை சீட்


புத்தக கண்காட்சி என்பதே இனிமையான ஒன்றுதான் என்றாலும் அதில் அறிவார்ந்த எழுத்தாளுமைகளை சந்திப்பது இன்னும் இனிமையானது...
அந்த வகையில் சாருவை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது ( 17.01.2014 )...

 நிகழ்ச்சி ஆறு மணிக்கு என்றால் , ஐந்து மணியிலேயே மக்கள் குழும ஆரம்பித்து விட்டனர்...  வாசகர் வட்ட நண்பர்களை விட , பொதுவான வாசகர்களே அதிகம் வந்து இருந்தனர்..

மனுஷ்யபுத்திரன் தனக்கே உரிய வகையில் நிகழ்ச்சியை நடத்தினார்.. அவரே முதல் கேள்வியையும் - சற்று ஆழமான கேள்வியை - கேட்டு கேள்வி பதிலை ஆரம்பித்து வைத்தார்..

தனது ஒரு நாவலுக்காக இன்னொரு நாவலை பலி கொடுக்கும் சம்பவம் உலகில் இதுவே முதல் முறை என கருதுகிறேன்.. அப்படி ஒரு மேட்டர் சொன்னார் சாரு...

எக்சைல்-2 என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என்றார்..

லக்கி யுவா தனக்கே உரிய பாணியில் அரசியல் கேள்விகளை கேட்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார்,,,  அரசியல் கேள்வியைக்கூட இலக்கியம் சார்ந்தும் மரம் கலந்தும் சந்தித்து தன் முத்திரையை பதித்தார் சாரு.


டாஸ்மால் இல்லாத தமிழகம் சாத்தியமா என்ற கேள்விக்கு அவர் சற்றும் யோசிக்காமல் அளித்த பதில் சரவெடி..

Thursday, January 16, 2014

படிக்க வேண்டிய புத்தகங்கள் - சன் டீவியில் சாருவின் அசத்தல் பேச்சு

சாருவின் சன் டீவீ பேச்சு மிக சிறப்பாக இருந்தது... அதில் இருந்து சில பகுதிகள்..

****************************************************************

1. அகத்தியம் எனும் நூல் காணாமல் போய்விட்டது..


2. அவர் எழுதிய சமஸ்கிருத புக் இருக்கிறது...அதில் நுட்பமான அறிவ்யல் தகவல்கள் உள்ளன

3. ஒரு பத்திரிக்கையில் வரும் கட்டுரையை படிக்கிறார்கள்...புத்தகமாக வந்தால் படிப்பதில்லை...வஞ்சிரம் மீனை விட குறைவான காசுதான் புக் வாங்க செலவாகும்.

4. ஏன் படிக்க வேண்டும் என்றால் நம் பேப்பர்களை பார்த்தாலே போதும்... ஓர் ஆன்ம வெற்றிடம் இருக்கிறது...இதை நிரப்ப வாசிப்பால் மட்டுமே முடியும்..

5 இன்று எழுத எவ்வளவோ ஸ்பேஸ் இருக்கிறது...வாசிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது.. ஆனால் வாசிப்பே எழுதாமல் எழுத வந்து விடுகிறார்கள்..எழுத்து பிழை , அழகியல் இன்மை என இருக்கின்றன.. அன்புள்ள சாருவிற்கு என எழுதுகிறார்கள்... அவன் வந்தான் அவன் வந்தான் என ஒரே பக்கத்தில் பத்து தடவை எழுதுகிறார்கள்...ஒற்று பிழைகளைப்பற்றி கவலைப்படுவதே இல்லை..

6. என் வாசகர்களை இலக்கியம் , இசை , சினிமா என எல்லாம் தெரிந்தவர்களாக உருவாக்குகிறேன்

7. தருண் தேஜ்பால் புத்தகங்கள் படிக்க வேண்டும் ..சங்க இலக்கியம் , தொல்காப்பியம் , பாரதியார் , ப சிங்காரம் , சுஜாதாவின் கடைசி பக்கங்கள் , நகுலம் , கரிச்சான் குஞ்சு , திஜா , ஆதவன் , இபா , நா முத்துசாமி ( நீர்மை மறக்க முடியாது )

8. தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும்... என்ன படித்தாலும்  அதில் தமிழ் கட்டாயமாக ஒரு பாடமாக இருக்க வேண்டும்..

Monday, January 13, 2014

போகரும் புலிப்பாணியும் மோதிய போது.... • Ragu Ram Annur என்னால வீடியோ பாக்க முடில .நல்லா வந்திருக்கா பிக்கு
 • Saravanan Kumar பாத்தீங்களா அவரு கடவுளை வெளியேஅ தேடி தேடி கடைசியில் அவர் இருக்கும் வீடியோ அவருக்கேஆ

  தெரிய மாட்டேங்குது (சும்மா தான் கோபப்டவேண்டாம் ரகுராம் அன்நூர்!!!)
  13 hours ago · Unlike · 2
 • Pichaikaaran Sgl வீடீயோ நல்லா இருக்கானு இவர்தான் சொல்லணும் Saravana Kumar
 • Ragu Ram Annur கடவுள உள்ள பாத்துட்ட மாய இருட்டுல அரண்டவர்கள் கண்களுக்கு நான் வெளிய தேடற பேய் தான்.. சீரியசா தான் சொல்லறேன். கோப்பட்டா பட்டுக்கோங்க
  13 hours ago via mobile · Like · 1
 • Ragu Ram Annur மொபைல் ல வேகம் குறைச்சல் ங்க. இல்லேன்னா பார்த்திருக்கலாம்
  13 hours ago via mobile · Like · 1
 • Saravanan Kumar எனக்கு நண்பர்களித்தில் கோபமேஆ வராது!!!
  13 hours ago · Unlike · 2
 • Pichaikaaran Sgl ஹ ஹா...எனக்கும் அப்படியே 
  13 hours ago · Like · 1
 • Ragu Ram Annur அவரு சொல்றாருன்னா அது எனக்கு வேனாமுங்க... நாளைக்கு யாராச்சும் பார்த்து சொல்லட்டும்
  13 hours ago via mobile · Unlike · 2
 • Saravanan Kumar ஐ இது நல்லாருக்கே! இப்போ எனக்கு accupuncture பிடிக்ம்னு சொன்ன உடேணெஅ நீங்க பிடிக்காதுனு சொல்வீங்களா? இதெலாம் போங்கு ஆட்டம் ரகு ஜீ!
  13 hours ago · Unlike · 2
 • Ragu Ram Annur வராம இருக்கறது பல வகைல நல்லதுதான்
  13 hours ago via mobile · Unlike · 1
 • Pichaikaaran Sgl வீடியோ நல்லா இருக்கா Saravanan Kumar
 • Saravanan Kumar நன்றாக வந்திருக்கிறது குரலும் மிக தெளிவாக இருக்கிறது!!!
  13 hours ago · Unlike · 1
 • Pichaikaaran Sgl வாவ்,,சோ ஸ்வீட்
 • Ragu Ram Annur இந்த சாதாரன கமென்டே உங்களுக்கு புரியலையே.. நான் வீடியொவ பத்தி கேட்டேன்...
 • Ragu Ram Annur இதுல நாலு பரிபாசை 400 வஞ்ஞப்புகழ்சி இருக்கும்... நமக்கேன் வம்பு
 • Pichaikaaran Sgl குரலும் மிக தெளிவாக இருக்கிறது!!!- ஹி ஹி,..இதற்குதான் என் குரலை எடிட் செய்து விட்டேன்
 • Saravanan Kumar அதை விடுங்கள் ரகு ஜீ! தாங்கள் எப்பொழுது எங்களுக்காக (என்னை போன்ற........தேவையான வார்த்தையை போட்டு நிரப்பி கொள்ளவும்.......)ஒரு accupuncture புக் எழுதபோகிறீர்கள்?
 • Saravanan Kumar ரகு ஜீ குறும்பு! எப்பயும் பழுதெல்லாம் பாம்புனு ஏன் நினைக்கிரீர்கல்?

  எனக்கும் இரண்டு கண் (ஒரு கண் பாபாவில் மட்டும் தான் ஹோல் உள்ளது ஹஹஹா)

  ஒரு மூக்கு தான் உள்ளது!
  13 hours ago · Unlike · 1
 • Ragu Ram Annur உங்களுக்கு போகரும் புலிப்பானியும் பரிபாசைத்திரட்டோடு காத்திருக்க நான் எதற்கு...
  13 hours ago via mobile · Unlike · 1
 • Ragu Ram Annur வெளிய பாக்கறவனுக்கு அப்பிடி தான் தெரியும்
  13 hours ago via mobile · Unlike · 1
 • Saravanan Kumar ரகு ஜீ! போகரும் புலிப்பானியும் என்ன பால்த்திரட்ஆ குடுத்தார்கள்?

  மேலும் பாரதியின் வார்த்தைதான் ஞாபகம் வருகிறது இங்கே
  ...

  டொன்'t be serious...
 • Saravanan Kumar அட ரகு ஜீ என் டபால் டபால் என்று கோபப்படுகிறீர்கள்?

  கல்யாணமாகிவிட்டதா?
 • Ragu Ram Annur It's not that I am being serious. It's like traveling on the other plane.. I cannot continue if we don't have the sheer conscious on fellow other travellers.
  13 hours ago via mobile · Unlike · 1
 • Ragu Ram Annur For varmam Bogar gave those magical keys. Exclusively for ur mindset
 • Saravanan Kumar all planes should have land in earth atlast wether it should have travel too moon itself!
 • Ragu Ram Annur Married 4 times!
 • Saravanan Kumar வர்மம் எனக்கு தெரியாது?
 • Pichaikaaran Sgl ரகு..அவர் கொஞ்சம் காமெடியா பேசறார்.......ஆழமான விஷ்யங்களை நகைச்சுவைஅயவும் பேசலாமே
 • Ragu Ram Annur Purpose May differ if it lands even inside a toilet...
  12 hours ago via mobile · Unlike · 1
 • Saravanan Kumar கோபம் உள்ள இடத்தில் குணமும் இருக்கும் (ஒரு முன்னால் கோபக்காரனின் வார்த்தைகள் வேறு யார் நான்தான்......ஹும்ம் எல்லாம் கல்யாணம் ஆகுற வரைக்கும் இருந்துக்சு அப்புறம் அப்புறம்....)
  12 hours ago · Unlike · 1
 • Ragu Ram Annur Avar nagaichuvaiyai pesattum nga. Enakku sirippu varanume?
  12 hours ago via mobile · Unlike · 1
 • Saravanan Kumar  =  --> this is the difference
 • Saravanan Kumar ரகுராம் ஜீ புண்படுத்தினால் மன்னித்துகொள்ளுங்கள்! வேறெந்த நோக்கமும் என்னிடத்தில் இல்லை

  கருத்துக்கள் வேறுபடலாம், அது வேறு இது வேறு!
 • Ragu Ram Annur Moreover!!! Unara unarum unarvudaiyaarodu thaan kooda mudiyum.
  12 hours ago via mobile · Unlike · 1
 • Ragu Ram Annur I don't get hurt as I have No choices personally . It simply getting away when someone not having vision of my very existence...
 • Ragu Ram Annur Don't be sorry... I am Nothing ultimately
 • Saravanan Kumar விடுங்க ரகு ஜீ நான் நல்லா அழுது முடிசிட்டேன்!!!
  12 hours ago · Edited · Unlike · 2
 • Ragu Ram Annur U have proven my statement
 • Saravanan Kumar ரகு ஜீ சத்தியமாக நான் நீங்கள் நினைப்பது போல் இல்லை...நான் மற்றவர்களை விட என்னை இதை

  விட அதிகமா கிண்டல் செய்துகொள்வேன் ---நியம்னா அது எனக்கும் பொதுதான் ஆமா!


  நீங்க ஏன் சட்டுன்னு கோபப்படுறீங்க?
  12 hours ago · Unlike · 1
 • Pichaikaaran Sgl நம்ம அடுத்த சந்திப்புல கண்டிப்பா சரவணனும் இருக்கணும்,,, பாபரப்ப இருக்கும்
  12 hours ago · Like · 1
 • Saravanan Kumar கண்டிப்பாக
  12 hours ago · Unlike · 2
 • Ragu Ram Annur You are reading with a lot of prejudices. Read what I typed.. It's not that I am anger or serious.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா