Sunday, October 31, 2010

சாதனையாளர்:கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத மேனேஜ்மெண்ட் குரு

 

ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட் உலகையும் , மேனேஜ்மெண்ட் துறை நிபுணர்களையும் முட்டாளாக்கிய புத்தகமான இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் பற்றி பார்த்தோம்..

முட்டாளாக்கப்பட்டது தெரிந்ததும் பலரும் கொதித்து எழுந்தனர்.. ஒரு படி மேலே போய், அவர்கள் ஆராய்ச்சி எல்லாம் நடத்தவில்லை.. சில நிறுவனங்க்ளிடம் காசு வாங்கி விட்டு , அவற்றை எக்சலண்ட் நிறுவனங்களாக பட்டியலிட்டு விட்டார்கள் என விமர்சித்தனர்..

ஆம்,, அது ஓரளவு உண்மைதான் என்பது போல பிற்காலத்தில் , வாட்டர்மேன் பேட்டியளித்தார்.. ஆனால் அது அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை..

ஏன் அப்படி சொன்னார்,.. ஏன் அது பரபரப்பு ஏற்படுத்தவில்லை என்பதை அறிய சற்று ஃபிளாஷ்பேக்கிற்கு செல்ல வேண்டும்..

எக்சலண்ட் நிறுவனங்கள் , ஊத்தி மூடிகொண்ட பின்னும், வாட்டர்மேன் தாம் சொன்னது சரிதான் என்று நம்பி கொண்டு இருந்தார்.. முன் வேலை பார்த்த வேலையையே தொடர்ந்தார்..

எக்சலண்ட் நிறுவனங்களின் எட்டு பண்பை கண்டு பிடித்தது வாட்டர்மேன் என்றாலும், அதை எழுத்தில் கொண்டு வந்தது , மார்க்கெட்டிங் செய்தது எல்லாம் டாம் பீட்டர்ஸ்தான்..

அவர் எழுதியதை சுருக்கி, புத்தக வடிவுக்குள் கொண்டு வருவதே பெரும்பணியாகி விட்டது.. அந்த அளவுக்கு விரிவாக, பல உதாரனங்கள் , கேஸ் ஸ்டடி என அமர்க்களப்படுத்தி இருந்தார்..

புத்தகம் வரும் முன்பே, நிறைய செமினார்கள் நடத்தினார்.. சினிமா டிரைலர் மாதிரி, புத்தகத்துக்கும் டிரைலர் மாதிரி புக்லட் வெளியிட்டார்… எனவே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது…

தந்திரமாக , தன் வேலையை ராஜினாமா செய்து, ராயல்டி பணம் தனக்கு வருமாறு செய்து கொண்டார்..

இந்த நெளிவு சுளிவு தெரியாத வாட்டர்மேன் , பெரிய பலன் எதுவும் பெறவில்லை…

பிற்காலத்தில் , ஏன் சேம் சைட் கோல் போட்டார் என்பது இப்போது புரிந்து இருக்கும்…

 

டாம் எப்படி பிரச்சினையை கையாண்டார் என பார்ப்பதற்கு முன், அந்த புத்தகதின் தவறு என்ன என பார்க்கலாம்..

எக்சலண்ட் நிறுவனங்களின் பண்புகளாக அவர்கள் சொன்ன அம்சங்களை பாருங்கள்..

 

 • விரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு
 • குறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி
 • வாடிக்கையாளருடன் தொடர்பில் இரு
 • ஊழியரின் செய்லதிறனை அதிகரி
 • ஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு
 • கொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்
 • என்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்
 • அடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு

 

 

இதை சற்று ஆழ்ந்து பார்த்தால் , ஒரு விஷயம் தெரியும்…

ஒரு தொழில் என்றால் , லாபம் என்பதுதான் முக்கியம்.. வியாபாரம் முக்கியம்.. காசு முக்கியம்… இதை சார்ந்த பொது பண்பு எதையும் புத்தகம் சொல்லவே இல்லை..

உதாரண்மாக, எக்சண்ட் நிருவனங்கள், ஆண்டுக்கு 20% லாபத்தை அதிகரித்தன…  மொத்த வியாபாரம் , ஒரு சராசரி நிருவனத்தை விட , இத்தனை சதவிகிதம் அதிகம் என்றெல்லாம் சொல்லி இருந்தால் அதில் அர்த்தம் உண்டு..

வேலை உருப்படியாக சொன்னால் வெற்றி நிச்சயம் என பொத்தாம்பொதுவாக சொன்னால் அதில் அர்த்தம் இல்லை..

 

அ என்ற நிறுவனம் விரைவாக முடிவெடிக்கிறது. எனவே அது எக்சலண்ட் நிருவனம்… ஆ என்ற நிறுவனம் மெதுவாக செய்லப்டுகிறது,, எனவே அது எக்சலண்ட் நிறுவனம் அல்ல என்று எப்படி நிரூபிக்க முடியும்…?

ஆகவே எக்சலண்ட் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க பயன்படுதிய அளவுகோலே தவறு..

 

ஒரு நிறுவனதின் வெற்றிக்கு இந்த பண்புகள் அவசியம்தான்.. ஆனால் போதுமானது அல்ல…

சந்தர்ப்பத்திற்கேற்ப முடிவெடுத்தல் போன்றவை அவசியம்.. வாடிக்கையாளர் திருப்தி அதை விட முக்கியம்..  ஆனால் வாடிக்கையாளர் பற்றி ஒரே ஒரு அம்சம்தான் சொல்லி இருக்கிறார்கள் அவர்கள்…

 

குத்து மதிப்பாக சில அம்சங்களை நிர்ணயம் செய்த அவர்கள் , அட்லீஸ்ட் அந்த அம்சமாவது , எக்சலண்ட் நிறுவனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என ஆராய்ந்தார்களா என்றால் அதுவும் இல்லை…

சும்மா காதில் விழுந்த விஷ்யங்கள்தான் இவர்களின் ஆதாரம்..

ஆக, ஒரு குப்பையை காட்டி மக்களை ஏமாற்றிவிட்டார்கள் என முடிவுக்கு வர கூடாது..

அவர்கள் சொல்வது நல்ல விஷ்யங்கள்தான்.. ஆனால் அவை இவர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது அல்ல… முன்பே உள்ளதுதான்..

தவிர,  இவை இருந்தால் எக்சலண்ட் நிறுவனமாகி விடலாம் என நினைக்க கூடாது..  இவை எல்லாம் அடிப்படை பண்புகள்தான்…

 

ஆனால் டாம் இந்த பிரச்சினைக்கே போகவில்லை..

என் அடுத்த புத்தகத்தில் இதற்கு விடை சொல்கிறேன் என உதார் விட்டு எதிர்பார்ப்பை அதிகபடுத்தினார்..

வாட்டர்மேனை கழட்டி விட்டு, எ பாஷன் ஃபார் எக்சனஸ் என்ற அடுத்த புத்தகத்தை இன்னொருவருடன் சேர்ந்து வெளியிட்டார்.அதன் பின் அவரையும் கழட்டி விட்டு , thriving on chaos என்ற புத்தகத்தை வெளியிட்டார்..

 

எக்ச்லண்ட் நிறுவனம் என்றெல்லாம் எதுவும் இல்லை… காலம் மாறிவிட்டது.. மாறிக்கொண்டே இருக்கிறது.. அதற்கேற்ப மாறாவிட்டால் , காணாமால் போய்விட வேண்டியதுதான் என ஒரு போடு போட்டார்..

கீழே விழுந்தும் மீசையில்  மண் ஒட்டவில்லை என்பது போல , புத்தகம் சரியான விஷ்யத்தைதான் சொன்னது.. காலம்தான் மாறிவிட்டது என்றார் அவர்..

அது உடையவில்லை என்றால் , அதை பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பது பழைய சித்தாந்தம்…

அது உடையவில்லை என்றால் ,. நீ சரியாக செக் செய்யவில்லை.. இன்னொரு முறை சோத்திது உடைந்த இடத்தை கண்டுபிடி..பழுது பார் என்பது புது சித்தாந்த்ம்..

இப்படி கவனமாக இல்லாவிட்டால் , எக்சலண்ட் நிறுவனங்களின் கதிதான் உங்களுக்கு” என்றார் அவர்

சில வெற்றிகரமான நிறுவனங்களை உதாரணமாக காட்டினார்..பழைய எக்சலண்ட் நிறுவனங்களை கைகழுவி விட்டார் என்பதை சொல்ல தேவையில்லை..

இதில் ஒரு காமெடி… தம்மை எக்சலண்ட் நிறுவனமாக எழுத சொல்லி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்பு பேசப்பட்டதல்லவா..

இப்போது, தம்மை சிறந்த கம்பெனி என எழுதி விடுவாரோ என அனைவரும் நடுங்க தொடங்கினர்..

அந்த அச்சம் சரியாக போய் விட்டது..

அவர் சிறந்த கம்பெனி.. இவர்களை போல இருக்க வேண்டும் என உதாரனம் காட்டிய ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் விரைவிலேயே தன் முதல் இடத்தை இழந்தது… நல்ல வேளையாக , இழுத்து மூடப்படவில்லை..

நல்ல எதிர்காலம் இருப்பதாக இவர் கணித்த பியூப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற விமான போக்கு வரத்து நிறுவனம் கூடிய விரைவில் மூடு விழாவை நோக்கி சென்றது..

 

இவர் கணிப்பு , சிந்தனை என எதுவும் சரியில்லாமல் போனாலும், இவரை இன்னும் இந்த ஊர் நம்புகிறது என்றால், அந்த திறமையை மதித்துதான் ஆக வேண்டும்..

சந்தர்ப்பவாதியாக இருங்கள் என்பதுதான் இவரது தற்போதைய உபதேசம்.. அவரும் அதையே பின்பற்றி வருகிறார்…

வாடிக்கையாளர் ஒரே நிறுவனத்திடம் விசுவாசமாக இருத்தல், ஊழியர்கள் ஒரே நிறுவனதில் வேலை செய்தல், ஒரு நிறுவனம் தம் ஊழியரை அக்கறையாக கவனித்து கொள்ளுதல் என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டது,,

மாற்றத்திற்கேற்ப யார் மாறுகிறாரோ அவர்தாம் தாக்குப்பிடிக்க முடியும் என்ற இவர் கொள்கை , இந்த காலத்திற்கு பொறுத்தமாக இருப்பதால், வெற்றிகரமான மேனேஜ்மெண்ட் குருவாகவும், அதிகம் விற்பனை ஆகும் நூல் ஆசிரியராகவும் திகழ்கிறார் இவர் ..

Saturday, October 30, 2010

வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் அறிஞர்களை முட்டாளாக்கிய புத்தகம்

தான் நம்பாத ஒரு விஷயத்தை பிரச்சாரம் செய்வதும், செய்லபடுத்த முடியாது என தெளிவாக தெரிந்தும் ஒரு விஷயத்தை தான் நம்புவதாக பில்ம் காட்டுவதுவதும் உலகம் முழுக்க நடக்கும் விஷ்யம்தான்..

சும்மா டைம் பாசுக்கு பேசுகிறார்கள் என அவர்களுக்கும் தெரியும் , மற்றவர்களுக்கும் தெரியும் என்பதால் இதை எல்லாம் யாரும் சீரியசாக எடுது கொள்வதில்லை..

இதில் ஒரு விசித்திரம் இருக்கிறது..

ஆன்மீகம் பேசும் தலைவர்கள், ஆன்மீக நெறிக்கு விரோதமாக நடந்தாலோ அல்லது நாத்திகம் பேசும் தலைவர்கள் ஆன்மீக சம்பிராதயங்களை பின் பற்றினாலோ அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. எளிமையை வலியிறுத்தும் தலைவரின் விழாக்கள் ஆடம்பரமாக நடந்தாலும் கவலையில்லை

எனக்கு நம்பிக்கை இல்லை.. மற்றவர் உணர்வுகளை மதிக்க  இப்படி செய்ய வேண்டி இருக்கிறது என்று விளக்கமளித்தால் போதும்..எல்லோரும் சமாதானம் ஆகி விடுவார்கள்..

ஆனால் எழுத்தாளர்கள் நிலை வேறு..இது போன்ற hypocrisy யை எழுத்தாளர்கள் செய்தால் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.. அதற்கு பின் அந்த எழுத்தாளரின் புத்தகம் விலை போகாது..

(எழுத்தாளனையும் எழுத்தையும் பிரித்து பார்க்கும் கலாச்சாரம் இங்கு இல்லை என்பதும் ஒரு காரணம் )

நீ எழுவதை உன்னாலேயே பின்பற்ற முடியவில்லை..ஊர்க்கு என்ன உபதேசம் என்று கேட்டு ஒதுக்கி விடுவார்கள்..

 

தமிழ் நாட்டிலேயே இப்படி என்றால், உலக அளவில் கேட்கவே வேண்டாம்.. அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏமாற்ற முடியாது..

ஆனால், சாதாரண பொது மக்களை அல்ல, வாசகர்களை கூட அல்ல, .. கார்பரேட் உலகத்தையும், மேலாண்மை அறிஞர்களையுமே ஒரு புத்தகம் முட்டாளாக்கி விட்டது ..

நம்ப முடியாமல் இருக்கலாம்.. ஆனால் இது உண்மை..

புத்தகத்தை பற்றி பார்க்கும் முன் அதை எழுதியவர் பற்றி பார்க்கலாம்..

டாம் பீட்டர்ஸ்---

1942ல் பிறந்த இவர் , பெண்டகனில் சில ஆண்டுகள் பணி ஆற்றினார். அதன் பின் ஸ்டான்போர்டில் எம் பி ஏ படித்து முடித்து வாஷிங்டன் திரும்பினார்..

அனுப்வமும் படிப்பும் கலந்த திறமை இவருக்கு மேலாண்மை துறையில் வரவேற்பை கொடுத்தது..

ஒரு மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியில் பணியாற்றினார்.. அங்கு வாட்டர்மேன் என்பவரும் பணியாற்றினார்.

சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் , மற்ற நிறுவனங்களில் இருந்து எப்படி தனித்து விளங்கிகிறது என்பதை ஆராய அவர் வேலை செய்த நிறுவனம் உத்தரவிட்டது..

உலகை கலக்கிய புத்தகம்…இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் - 1982

வாட்டர்மேன் சில தனித்த பண்புகளை கண்டு பிடித்தார்.. இவைதான் ஒரு நிறுவனத்தை எக்சலண்ட் நிறுவனமாக்குகின்றன என்றார் அவர்..

இது ஆர்வமூட்டவே, இருவரும் சேர்ந்து அமெரிக்காவின் 43 பெரிய நிறுவனங்களை ஆராய்ந்து ( அல்லது ஆராய்ந்ததாக சொல்லி ) , அவற்றுக்கு பொதுவான எட்டு பண்புகள் இருப்பதாக சொன்னார்கள்..

என்ன பெரிய மேனேஜ்மெண்ட் படிப்பு? இந்த எட்டு பண்புகள் என்ன என்று பாருங்கள்..அதை அப்படியே உங்கள் நிறுவனத்தில் அமல் செய்யுங்கள் .. நீங்களும் எக்சலண்ட் நிறுவனம் ஆகி விடலாம்..

அவ்வளவுதான்..  மிக எளிது…

இப்படி இவர்கள் சொன்னதும், மேலாண்மை துறையின் நிபுணர்களான பீட்டர் டிரக்கர் போன்றோர் திகைத்து விட்டனர்.. ஒரு நிறுவனதை நடத்துவது எவ்வளவு கஷ்டம்.. அதன்  வெற்றிக்கு எவ்வளவோ விஷ்யங்கள் தேவை ஆயிற்றே.. இவர்கள் எட்டு விஷய்ம் இருந்தால், எக்சலண்டை எட்டி விடலாம் என்கிறார்களே என குழம்பினர்..

ஆனால் புத்தகம் எழுதிய இரட்டையர் அசரவில்லை.. நாங்கள் சும்மாவா சொல்கிறோம்.. எக்சலண்ட் நிறுவனங்களை ( ஐ பி எம், பி அண்ட்  ஜி , காட்டர் பில்லர், ஜெனெரல் எலெக்ட்ரிக் டிஜிடல் எக்யூப்மெண்ட் போன்றவற்றை ) ஆராய்ந்துதானே சொல்கிறோம்… என சொல்லவே, விற்பனை வரலாறு காணாத அளவில் ஆனது..

நாமும் எக்சலண்ட் நிறுவனம் ஆக வேண்டும் என நினைத்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி , த்ம் ஊழியர்களுக்கு வழங்கின..

பொதுவான வாசகர்கள் கூட தம் “மேனேஜ்மெண்ட் “ அறிவை வளர்த்து கொள்ள இதை வாங்கினர்.. வாங்கி பரிசளித்தனர்..இது போல எந்த மேனேஜ்மெண்ட் புத்தகமும் விற்பனை ஆகவில்லை என ஒப்பிட கூட முடியாது.. ஒப்பீட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டு விற்பனை ஆனது புத்தகம்..

கல்லூரி மாணவர்களுக்கு இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்பட்டது ( ஒட்டு மொத்த இந்திய நிலவரம் தெரியவில்லை… தமிழ் நாட்டில் இன்றும் இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்படுகிறது.. அந்த ரெகமண்டேஷனில் புத்தகம் வாங்கிய ஏமாளிகளில் நானும் ஒருவன்.. ஹி ஹி )

அவர்கள் தேர்ந்தெடுத்த எக்சலண்ட் நிறுவனங்களின் பொது தன்மை என்ன ?

 • விரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு
 • குறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி
 • வாடிக்கையாளருடன் தொடர்பில் இரு
 • ஊழியரின் செய்லதிறனை அதிகரி
 • ஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு
 • கொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்
 • என்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்
 • அடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு

அட.. இது இருந்தால் போதுமா..இதுதான் மேனேஜ்மெண்டா ..இதுதான் எக்சலண்ட் நிறுவனதின் அடிப்படை பண்பா என ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகமும் வியந்து போற்றியது..

ஒரே ஆண்டுதான்..

அனைவருக்கும் மாபெரும் அதிர்ச்சி காத்து இருந்தது..

எக்சலண்ட் நிறுவனங்கள் என இவர்கள் தேர்ந்து எடுத்து இருந்தார்கள் அல்லவா..

அதில் கிட்டத்தட்ட அனைத்தும், எங்களால் தொழில் செய்ய முடியவில்லை.. நஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை… போய் வருகிறோம் என மஞ்சள் கடுதாசி கொடுத்தன..

அட, ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை.. அனைத்தும் நஷ்டமா..இவற்றை  எப்படி எக்சலண்ட் நிறுவனம் என இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்… அடிப்படை பண்புகளை எந்த அடிப்படையில் வரையரை செய்தனர்,,,  அந்த பண்புகளை இந்த நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன என்பதை எப்படி முடிவு செய்தார்கள் என கேள்விகள் எழுந்தன..தான் நம்பாத ஒரு விஷ்யத்தை, அவர் நிறுவனத்தில்கூட செயல்படுத்தாத விஷ்யத்தை, நஷ்டமாகும் நிறுவனங்கள் பின்பற்றும் விஷ்யத்தை நமக்கு போதித்தார்களா என பொருமினர். என்னதான் ஆராய்ந்தார்கள்

அப்படி ஒழுங்காக ஆராய்ந்து இருந்தால் , இவை எக்சலண்ட் நிறுவனங்கள் அல்ல… நஷ்ட நிறுவனங்கள் என தெரிந்து இருக்குமே என கோப பட்டனர்..

என்ன கோபித்து என்ன ? அதற்குள் புத்தகம் நன்றாக சம்பாதிது விட்டது…

அதிலும் , டாம் பீட்டர்ஸ் மிக நன்ராக சம்பாதித்தார்,,..

அவர் பணியாற்ற நிறுவனதில் இருந்து விலகி விட்டுத்தான் புத்தகம் ரிலீஸ் செய்தார்.. எனவே ராயல்டி பணம் இவருக்கு வந்த்து.. அந்த நிறுவனத்தில் இருந்து இருந்தால், அந்த நிறுவனத்துக்குத்தான் பணம் போய் இருக்கும்..

சரி..எங்கு தவறு நடந்தது..இதற்கு டாம் என்ன பதில் அளித்து சமாளித்தார்..  அதன் பின் அவர் புத்தம் எழுதினாரா? என்ன எழுதினார்? என்பதை விரிவாக பிறகு பார்க்கலாம்..

எது எப்படி இருந்தாலும், ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகை முட்டாள் ஆக்கிய பெருமை , இந்த புத்தகத்துக்கு என்றும் உண்டு..

வரலாறு மறக்க முடியாத புத்தகங்களில் ஒன்று – இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ்

Thursday, October 28, 2010

காமத்துடன் கண்ணாமூச்சி- ஜெயமோகனின் காடு 

காமம்…

கடவுளுக்கு அடுத்தபடி கண்ணாமூச்சி ஆடுவதும் , வெவ்வேறு அர்த்தங்கள் தருவதும் இதுதான்..

சிலருக்கு இது ஒரு பொழுதுபோக்கு, சிலருக்கு எக்சைட்மெண்ட், சிலருக்கு ஆதிக்கம் செய்யும் , அசிங்கம் செய்யும் கருவி…பெருமைக்கு, இனவிருத்திக்கு, சும்மா மற்றவரை சீண்டலுக்கு  காதலை வெளிக்காட்டுவதற்கு  என பற்பல பரிமாணங்கள் இதற்கு உண்டு..

 

பேப்பரை பார்த்தால் , பாதிக்கு மேல் காமம் சார்ந்த குற்றங்கள்தான்.. காமம், காதல் இது பற்றிய எந்த புரிதலும் இல்லாத வாழ்க்கைதான் இங்கு நடக்கிறது..

யோசித்து பார்த்தால், காமம் இல்லாவிட்டால் நாம் யாரும் இல்லை.. என்வே காமத்தை தாண்டி நாம் செல்ல முடியாது.. 

அதே சமயம் காமத்திலேயே சிக்கி உழன்று கொண்டு இருப்பதும் அபத்தம்…

காமத்தை அடக்க நினைது அதிலேயே உழன்று கொண்டு இருபதுதான் நடக்கிரது..

காமத்தை புரிந்து கொள்ளவேண்டும் என்றால் , நம்மை புரிந்து கொள்ள வேண்டும்./. நம்மை புரிந்து கொள்ள வேண்டுமானால் காமத்தை புரிந்து கொள்ள வேண்டும்..

பாலியல் கல்வி போன்றவை எல்லாம் மேலோட்டமான பலனையே தரும்.. 

காமத்தின் பல்வேறு பரிமாணங்களை காடு என்ற ஜெயமோகனின் நாவலில் பார்க்க முடிகிறது..

ஒரு பெண்ணின் அழிவுக்கே , கதை சொல்லியின் மாமாவின் காமம் காரனமாவது, காமத்தை லஞ்சமாக பயன்படுதுவது, ஜஸ்ட் ஒரு கேளிக்கையாக பயன்படுதுவது, வடிகாலாக பயன்படுதும் சிலர், என பலரை இதில் பார்க்க முடிகிறது..

கிரிதரன் ஒரு பெண் மேல் காதல்வயப்படுகிறான்..  அவள் நினைவாகவே அலைகிறான்…

இதில் உடல் கவர்ச்சி இருந்தாலும், காதலே முக்கியமாக இருக்கிறது.. காதல் அனுபவம் இருப்பவர்கள் அவனின் நிலையை நன்கு உணர முடியும்..

காதல் என்பது கடவுளின் சாயல் ..காதல் அனுபவம் என்பது கடவுள் அனுபவம் போன்ரது..

ஆனால் இத்த்கைய காதல் அமைவது மிக மிக அரிது…  வெறும் இனக்கவர்ச்சியோ , எக்சைட்மெண்டோ காதல் அல்ல.. அது நிறைவை தராது..

*************************

கிரிதரன், மாமி, மேஸ்திரி, குட்டப்பன், இரட்டையர்கள் , போத்தி, அய்யர் , புலையன், வேணி, சினேகம்மை, ரெஜினாள், நீலி  என ஒவ்வொரு கேரகடரும் மனதில் நின்று விடுகின்றன..தேவாங்கு கூட மறக்க முடியாமல் மனதில் நின்று விடுகிரது…

என்னை பொருத்தவரை, என்னை கவர்ந்தது மிளாதான்…  காட்டின் பிரதினிதியாக மனதில் பதிவது மிளா எனற மிருகம்..

மிளா (Sambar - Cervus unicolor) என்பது ஒருவகை மான்.. ( படத்தை பார்க்கவும்  )

  நாவலில் இரண்டு கேரட்கடர்கள் முக்கியம்..

 

அதை பார்க்கும் முன், ஆன்மிகம் என்பதை பற்றி ஒரு குரு சொன்னதை பார்த்து விடுவோம்..

தியானம் போன்ற முறைகள் எல்லாம், ஈகோ என்பதை அழித்து மனிதனை ஒரு குழந்தை போல ஆக்குவதற்குதான்.. மனம் என்பது அழிய வேண்டும்..

அப்படி பார்த்தால், மிருகத்திற்கு மனம் இல்லை…  அது முக்தி அடைந்து விட்டதா? குழந்தைகள் , ஈகோ வளராமல் இருக்கும்.. அது யோக நிலையா? அல்லது மனித நாகரிக வாடையே படாமால் வாழும் காட்டு  வாசிகள், போட்டி பொறாமை இல்லாமல் வாழ்கிறார்கள்.. அவர்கள் ஞானனிலை அடைந்தவர்களா?

அப்படி அல்ல…  மனதின் இயல்பான நிலையில் அப்படியே இருக்கும்போது அதை உணர முடியாது..

அதை இழந்துவிட்டு , பல அனுபவங்ளை பெற்று அலுத்து போய், மீண்டும் அந்த இயல்பான நிலையை அடையும்போதுதான், அது என்லைக்ட்மெண்ட் ..அப்போதுத்தான் அதை உணர முடியும்..

அந்த இயல்பான தன்மை இழந்தால்தான்,அதன் அருமையை உணர முடியும் என்பதால்தான், ஆதாம் ஏவாள் ஆகியோர் அந்த பழத்தை உண்டு தம் இயல்பான தன்மையை இழக்க செய்தார் கடவுள்.. உண்மையில் அவர்கள் அந்த பழத்தை சாப்பிட வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம்.. அவர்கள் அதை சாப்பிடகூடாது என நினைது இருந்தால், அந்த பழத்தையே அவர் அழித்து இருக்கலாமே…

ஒன்றை செய்ய கூடாது என்றால்தான் அதை நாம் செய்வோம்.. எனவே தான் அதை சாப்பிட கூடாது என்றார்.. அவர்கள் சாப்பிட்டு தம் இயல்பான தன்மையை இழந்தனர்.. மீண்டும் அந்த இயல்பை அடைவதே வாழ்வின் பயன்…  ( இது கிறிஸ்தவ மத நம்பிக்கை அல்ல… ஒரு தனிப்பட்ட குருவின் சினதனை )

 

இந்த நாவலில் வரு முக்கியாமான இருவர்..குட்டப்பன், அய்யர்…

 

குட்டப்பன் காட்டிலேயெ இருப்பவர், காட்டை நேசிப்பவர்.. தெய்வமாகவே காட்டை நினைக்க கூடியவர்.. தவறை தட்டி கேட்பவர்… 

அய்யரும் அப்படித்தான். காட்டின் அழகை ரசிக்கிறார்… வாழ்வின் இன்பங்களை யாரையும் கஷ்டபடுத்தாமல் அனுபவிக்கிறார்… எதையும் லைட்டாக எடுது கொள்கிரார்.. அக்கிரமத்துக்கு உடன்பட மறுது, பணியை இழந்து காட்டிலேயெ இருந்து விடுகிறார்..

இருவரும் ஒரே மாதிரி இருந்தாலும், அய்யர் கேரக்டர் சிறப்பானது…  ஒரு நல்ல இடத்தை நோக்கி பரிணாம வளர்ச்சி அடைவது இவர்தான்.. குட்டப்பன் மும்பு எப்படி இருந்தானோ அப்படியேதான் சாகிறான்..

நல்லவன் தான்… ஆனால் சிறப்பானவர் இந்த அய்யர்தான்…

 

” காமம் , சுய நலம் தவிர மனித உறவுகளுக்கு வேறு அர்த்தம் உண்டா “ என்ற கிரியின் கேள்வி , நம் கேள்வியாகவே மாறும், நவலை படித்து முடிக்கும்போது…

 

****************

ஒரு சாமியார்…  பிரபல எழுத்தாள்ர்கள் முதல் நடிகர்கள் வரை அவர் சீடர்கள்..  எவ்வளவு பெரிய ஆள் வந்தாலும்,  சாமியாரை பார்ப்பது அவ்வளவு  எளிதல்ல.. கெட் அவுட் என சொல்லிவிடுவார்..

அப்படிப்பட்ட சாமியாரை, கூட இருந்தவர்கள், ஒரு மாபெரும் கோயில் கட்ட வேண்டும் என உசுப்பேத்தினர்…

அதற்கு டொனேஷன் வாங்க அவரை அழைத்து சென்றனர்..

அவரை பார்க்க ஒரு முறை நான் நீண்ட நேரம் காத்து இருந்தும் முடியவில்லை..

இப்போது, அவர் மேல் நம்பிக்கையோ , மரியதையோ இல்லாத ஒரு நன்பனின் தந்தையை ( அவர் பெரிய பணக்காரர் ) டொனேஷன் வாங்க , பார்ப்பதற்கு, நன்பன் வீட்டு வரவேற்பு அறையில் சாமியார் காத்து இருந்தார்..

எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது.. சோகமாகவும் இருந்தது..

அந்த அதிர்ச்சியை இந்த நாவலின் முடிவு ஏற்படுத்தியது…

 

ஒரு முக்கிய கதாபாதிரமாக வரும் யானையின் தலை , பாடம் செய்யப்பட்டு வீடில் மாட்ட்டப்ட்டு இருப்பது , மேட்ரிக்ஸ் படத்தின் ஒரு வசனத்தை நினைவு படுத்தியது..

“ ஒரு காட்டில் சிங்கம் மானை வேட்டையாடும் என்றாலும், மான் இனத்தை சிங்கம் அழித்து விடாது.. சம நிலை இருக்கும்..  அதே போல பூனை, எலியும் சமனிலையில் இருக்கும்..

வைரஸ் மட்டும் அப்படி அல்ல.. கொடூரமானது..  ஒரு இடத்தில் அது நுழைந்தால் , அதை முழுக்க வைரஸ் ஆக்கிரமித்து விடும்., காலபோக்கில் சமனிலை குலைந்து வைரஸ் மட்டுமே இருக்கும்..

இது போன்ற அழிவு சக்தி ஒரே ஒரு உயிரிக்குத்தான் உண்டு.. அந்த உயிரி மனிதந்தான் “

காடு , மலை எல்லாம் அழிந்து வருகின்றன.. எத்தனையோ அபூர்வ உயிரின்ங்கள் அழிந்து வருகின்றன…

மனிதனின் சுய நலம் அவனின் எல்லா உறவுகளியும் பாதிப்பதுபோல இயற்கையையும் பாதிக்கிரது என்பதை சுட்டி காட்டுகிரது காடு..

life is relationship என்றார் ஜெ கே…  ச்க மனிதர்களுடன், இயற்கையுடன் நாம் கொள்ளும் தொடர்பை அருமையாக சித்தரிக்கும் நாவல்தான் காடு..

கண்டிப்பாக படிக்க வேண்டும்

பின் குறிப்பு : விரவில், சென்னை கடற்கரையும் அழிக்கப்பட இருக்கிறது என்பது சென்னை வாசிகள் பலருக்கு தெரியாது..

 

*********************************

 

நாவலின் ஒவ்வொரு வரியையும் ரசித்து படிக்கலாம்..என்றாலும் என்னை கவர்ந்த சில வரிகலை , இங்கு தருகிறேன்..

 

 

அதன் அடியில் சிமிட்டி சுவரில் கிரிதரன் என்ற என் பெயர் எழுதப்பட்டுள்ளது.. இதனருகே மிளாவின் கொம்பு தடங்களும் உள்ளன.

ஓடைக்குள் இறங்கி கைகால் கழுவும் சிலர் என் பெயரை பார்திருக்க கூடும். மிளாவின் குளம்புதடமும் கண்ணில் பட்டு இருக்கும். ஒருவேளை யாராவது சிறுவன் , மிளா தன் கொம்பால் அப்பெயரை எழுதி இருக்கும் என கறபனை செய்து இருப்பான், அல்லது அப்பெயரை எழுதிய எனக்கு குளம்புகள் இருந்திருக்கும் என நினைத்து இருப்பான்..

வரலாறு பலவிதமாக படிக்கப்பட்டும் விளக்கப்படும் வருகிரது

 

மாமா மாமியின் காலடியில் நாய்மாதிரி வாலாட்டி கிடந்தார் என்றால் நாணம்மை.. “ சும்மா சொல்ல கூடாது.. பூலோக சுந்தரி .. கண்ணாடி மாதிரி சரீரம் :”

மாமியின் ஒரு தொடை மறு தொடையில் பிரதிபலித்ததாம்,,

 

  குட்டப்பன் சொன்னான் “ அவனும் அவன் வாசிப்பும்.. ஒரு தாளை காட்டி , இது என்ன எழுத்துனு கேட்டான். அவன் காட்டிய எழுத்தை , சுரண்டி கைய்ல கொடுத்தேன். கொசு செத்து ஒட்டி இருக்கு “

 

“ தீ சிவன்னா, சாம்பல் சக்தி.. தீ கூடிப்போனா சாம்பல் ”

வனத்தடாகத்தில் பூப்பறிது மலைகட்டி அனீது காட்டில் கிளியோட்டும் பெரிய கண் அழகி அறிய மாட்டாள்.. தூங்கும் யானைபோல பெருமூச்சு விட்டு என் மனம் அவள் நினைவை தொடர்வதை “- குறுந்தொகை

அய்யர் கேட்டார் “ நீர் படிச்சது யாரோட உரை ?

நான் படித்தது வேறு .. இருந்தாலும் “ அனந்தராம அய்யர் “ என்றேன்

 

செம்பரத்தி பூ அழகுதான்.. பன்னியின் **** ? பார்க்க ரெண்டும் ஒரே நிறம். ஷேப்பு.. அழகுங்குறது நம் மனசு..பிடிச்சா அழகு .இல்லைனா அசிங்கம்”

அவரில் ஒருபோதும் நான் பார்திராத சலிப்பு சோர்வும் எனக்கு மன நிறைவையும் , உத்வேகத்தையும் அளித்தது

 

அஸ்தமனம் பார்த்தேன் “

“ எப்படி இருந்தது ?”

“திருனடைவாசல் சாத்தற மாதிரி “

“ அடடா/. கவிஞன்யா நீ “

 

----பூவில் தேனும் மதமும் இருக்குற மாதிரி யானையில் மதம் இருக்கு அது சாமிகளின் வரம்..

Tuesday, October 26, 2010

ஜிகாத் என்றால் என்ன ?

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் வீழ்த்தப்பட்டபோதுதான் , ஜிகாத் என்ற வார்த்தை அதிகம் அடிபட ஆரம்பித்த்து..

உலகை உலுக்கும் ஜிகாத என்று பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி வெளியிட்டன..

நாளடைவில் எங்காவது குண்டு வெடித்தால் , அத்னை ஜிகாத்தோடு ஒப்பிட்டு பார்க்க தொடங்கினர் மக்கள்..

சில இஸ்லாமிய தலைவர்களும் ஜிகாத் என்றால் தீவிரவாத செயல் மூலம் அரசை பலவீனப்படுத்தி, இஸ்லாமிய ஆட்சியை நிறுவுதல் என பேசுவதும் ஜிகாத என்ற சொல்லை பார்த்து ச்ற்று அச்சப்படும் நிலையை ஏற்படுதியது..

எந்த மத்த்திலுமே, மத நூல்கள் சொலவ்து ஒன்றாக இருக்கும்... மத தலைவர்கள் சொலவது ஒன்றாக இருக்கும்..

உண்மையில் ஜிகாத் என்றால் என்ன ?

மேலும் எவர்கள் நம்மை சந்திக்க கடினமாக முயற்சிப்பார்களோ அவர்களை நாம் நம் வழியில் நட்த்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நனமை செய்பவர்களுடன் இருக்கிறான் ( 29:70 )

இந்த குர் ஆன் வசனத்தில் ஜிகாத் என்ற சொல் கடினமாக முயற்சித்தல் என்ற அர்த்த்தில் பயன் படுத்த படுகிறது..இறைவனை அடைய கடினமாக முயற்சி செய்தல் என்பதை , கொல்லுதல் என மாற்றி விட்டார்கள்..

சில குறிப்பிட்ட நிபந்தனைகளின்பேரிலேயே போரை அனுமத்திக்கிறது குரான்..

இப்படி நேர்மையான முறையில் போர் செய்த்த்தாலேயே ஆரம்ப கட்டங்களில் , குறைவான பலத்துடன் இருந்த போதும் , முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர்..

மக்காவில் கொடுமைகளுக்கு ஆளான நபிகள் நாயகம் , மதினாவுக்கு குடி புகுந்தார்.. அங்கு எதிரிகள் போர் தொடுத்தனர்.. ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டில் பதர் எனும் இட்த்தில் போர் நடந்த்து..

போர் என்பதை ஒரு தற்காப்பு ஆயுதமாகத்தான் அவர் பயன்படுத்தினார்.. மத மாற்றம் செய்ய அல்ல.

மக்காவை வென்றதும் அனைவருக்கும் மன்னிப்பு வழங்கினார் என்பது வரலாறு..

சிலர் வன்முறை மூலம் மத்த்தை பரப்பலாம் என நினைத்தால் அது இஸ்லாம் கோட்பாடுகளுக்கு எதிரானது..

ஜிகாத் என்றால் என்ன ?

இருவகை உண்டு..

ஜிகாதே அக்பர் அல்லது ஜிகாதே கபீர் என்பது ஒன்று

ஜிகாதே அஸ்கர் அல்லது ஜிகாதே ஸகிர் என்பது மற்றொன்று..

குரானை பரப்புதல் , அதன்படி செயல்படுதல், மற்றவரை செயல்படசெய்தல் என்பது ஒன்று.

இரைவனை அடைய செய்யும் கடினமான முயற்சிகள் மற்றொன்று..

ஜிகாது என்ற சொல் வேறு பொருளிலும் பயன்பட்டு வருகின்றன..

ஜிகாதுகளில் மிக சிறந்த்து , இறைவனிடன் ஏற்று கொள்ள கூடிய ஹஜ் புனித பயணம் என சஹீஹ் புகாரியில் ஒரு நபி மொழி காணப்படுகிரது..

கொடிய ஆட்சியாளரிடம் உண்மையை எடுத்துரைப்பது மிகப்பெரிய ஜிகாது என மிஷ்காத் எனும் நபி தொகுப்பில் உள்ளது..

ஒருவர் நல்ல சினிமா ஒன்றை பார்த்தால், மற்றவரும் அதை பார்க்க வேண்டும் என விரும்புவார்..

சினிமாவே இப்ப்டி என்றால், தான் ஒரு வழியை பின்பற்றி அதன் அழகை அனுபவித்தவ்ர், மற்றவரும் அதை அடைய வேண்டும் என விரும்புவது மனித இயல்பு..

இதை பிரச்சாரம் செய்வது அவர் கடமை என கூட சொல்ல்லாம்.. அதை வன்முறை மூலம் செய்ய வேண்டும் என இஸ்லாம் சொல்லவே இல்லை..

சிலர் அப்படி பேச கூடும்.. அது அவர்கள் சொல்வதை வைத்து ஒரு கருத்தை உருவாக்க வேண்டியதில்லை..

நாமே நேரடியாக உண்மையை அறிய வாய்ப்புகள் இருக்கின்றன..

இறைவன் என்பவன் இருந்தால் அவன் அனைவருக்கும் பொதுவானவனாகத்தான் இருக்க முடியும்..

பிறப்பை வைத்து நம்மை எடை போட போவதில்லை.. செயல்கள்தான் முக்கியம்..

மத விளையாட்டுகளை விட்டு விட்டு , ஒரு பார்வையாள்னாக பார்த்தால் , நம்மை சுற்றி கொட்டி கிடக்கும் நல்ல விஷ்யங்கள் தெரிய வரும்...

குரானை படிக்க நேர்ந்த போது , தங்க சுரங்கத்தை பார்த்த்து போல இருந்த்து.. அந்த சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு

எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும் பாலகுமாரனின் உடையார்

சில நாவல்கள் படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கும்.. ஆனால் படிது முடித்த பின் எதுவும் நினைவு இருக்காது..

இதை குறை என சொல்ல முடியாது.. படிக்கும் சுகம் கிடைக்கும் என்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும்..

படிப்பதை ஒரு அனுபவமாக மாற்றும் சீரோ டிகிரி போன்ற நாவல்கள் ஒருவகை.. படித்து முடித்தாலும் , படித்த்தன் தாக்கம் நீடிக்கும்..

படிக்கும்போது இனிமையாக இருக்கும் சில நாவல்கள், மனதை தாண்டிய ஒரு நிலைக்கு நம்மை எடுத்து செல்லும் சக்தி கொண்டு விளங்கும்..

விஷ்ணுபுரம் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.

பாலகுமாரன் இந்த எல்லா வகை எழுத்திலும் கில்லாடி..

ஆனால் அவரது உடையார் என்ற நாவல் சற்றே வித்தியாசமானது..

தனது அனுபவங்களை நாவலாக்குவது ஒரு விதம்.. ஆனால் ஒரு நாவலுக்காக பல இடங்களை சென்று பார்த்து, பலருடன் பேசி , பல் நூல்களை படித்து , கடும் உழைப்புடன் ஒரு சினிமாவை உருவாக்குவது போல ஒரு நாவலை உருவாக்குவது என்பது பாலகுமாரன் அவர்களால் மட்டுமே முடியும்..

அந்த அளவுக்கு ராஜராஜ சோழன் மீது அவருக்கு ஆர்வம்..

பொன்னியின் செல்வன் படித்து விட்டொமே .. அதே கதைதானே இது என சிலர் நினைக்கலாம்..

வரலாறு மாறாது என்றாலும் பார்வை வெவ்வேறு என்பதை படித்தால்தான் உணர முடியும்..

சோழ வரலாறு என்ன ?

விஜயாலய சோழனுக்கு பின் பராந்தக சோழன் .. அவருக்கு மூன்று மகன்கள் ..

ராஜாதித்தர் கண்ட்ராதித்தர் அரிஞ்சயன்

இதில் முதல் மகன் போரில் இறந்து விட , கண்டராதிதரும் அவருக்கு பின் அரிஞசயனும் ஆட்சி செய்தனர்..

அதன் பின் தான் குழப்பம்.. அரிஞயனுக்கு பின் கண்டராதிதரின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும்.. ஆனால் அப்போது அவர் சின்ன வயதாக இருந்த்தால் அரிஞ்சயனின் மகன் சுந்தர சோழர் ஆட்சிக்கு வந்தார்..

சுந்தர சோழருக்கு பிறகாவது உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்க , இன்னும் சிலர் சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க , உள் நாட்டு குழப்பம்..

சமகால அரசியல் நிலை போன்ற நிலை...

கட்சியனர் ஆதரவு ஒருவருக்கு, மக்கள் ஆதரவு ஒருவருக்கு என்ற நிலை..

கடைசியில் சுந்தர சோழர் மகனான ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர, உத்தம சோழன் ஆதரவாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை..

இன்னிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.. இதை செய்த்து உத்தம சோழன் என்வும் சொல்ல்லாம் ..இல்லை எனவும் சொல்ல்லாம்..

வரலாற்று ஆதாரம் இல்லை..

இந்த நிலையில், உத்தம சோழனுக்கே பதவியை விட்டு கொடுத்து , தியாகி ஆனார் ராஜராஜ சோழன் ( ஆதித்த கரிகாலனின் தம்பி ) என்பதுதான் பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸ்..

அத்துடன் கதை முடிகிரது..

கதை முடிந்தாலும் வரலாறு முடியவில்லை..

ராஜராஜ சோழனுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து, அவர் அரசரனார் என்பது வரலாறு..

உத்தம சோழனை டிஸ்மிஸ் செய்து விட்டு பதவி ஏற்றாரா, அல்லது உத்தம சோழன் தானே பதவி விலகினாரா.. அல்லது கொல்லப்பட்டாரா.. அல்லது மற்றவர்கள் பதவி விலக செய்தார்களா என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை...

ஆனால் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி, ராஜராஜசோழன் ஆட்சியை கண் முன் நிறுத்துவதுதான் உடையார்.. ஒரு வகையில் , பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி.. இன்னொரு வகையில் முற்றிலும் வேறுபட்ட நாவல் ( காரணத்தை பிறகு சொல்கிறேன் )

உத்தம சோழனின் மகனும் , பதவி போட்டியில் இருந்து விலகி விட, ராஜராஜன், அவனுக்கு பிறகு ராஜேந்திரன் என ஆட்சி தொடர்ந்த்து..

பலதுறைகளில் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்த்து என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி பொற்கால ஆட்சி அமைந்து இருக்க வேண்டுமானால், ராஜராஜ சோழன் எப்படிப்பட்ட ஆட்சி நட்த்தி இருக்க கூடும் என்ற மேனேஜ்மெண்ட் , நிர்வாக கலை சார்ந்த பார்வை பார்த்துள்ளார் பாலகுமாரன்..

பொன்னியின் செல்வனை பொறுத்தவரை, அதில் தனி மனித உணர்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார் கல்கி.. அதுவும் சுவையாகத்தான் இருக்கும்...

ராஜராஜன் ஆட்சியின் உச்சமாக பிரமாண்ட ஆலயம் எழுப்ப்பட்ட்தை திறம்பட சொல்லி இருப்பது உடையார் நாவலின் ஹைலைட்..

இதை செய்ய வேண்டுமானால் எந்த அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருக்க வெண்டும், மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் இருந்திருக்க வேண்டும், என்பதை , ஒரு ஃபிக்‌ஷன் போல எழுதி சென்று இருக்கலாம்..

ஆனால் அப்படி எழுதாமால், ஒரு நிர்வாக இயல் புத்தகம் போலவும், சுய முன்னேற்ற நூல் போலவும் , பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலகுமாரன்..

அதே நேரம் வரலாற்று ஆய்வு நூல் போலவும், ஆன்மீக நூல் போலவும், மென் ஆர் ஃபிரம் மார்ஸ் , விமன் ஃபிரம் வீனஸ் போன்ற மனவியல் நூல் போலவும் , அதற்குண்டான உழைப்பை செலுத்தி படைக்கப்பட்டுள்ளது இந்த நாவல்..

பொறியியல் துறையில் இருப்பவர்கள், இதை அணுஅணுவாக ரசிக்க முடியும்.. ஹீட் ட்ரீட்மண்ட், ஆயில் க்வெஞ்சிங் , என்பதெல்லாம் தெரிந்து இருந்தால் இன்னும் ரசிக்க முடியும்...

பாலகுமாரன் இத்தனை நாள் எழுதியதெல்லாம் , இந்த மெகா நாவலை படைப்பதற்கான ஒத்திகைதானோ என தோன்றுகிறது..

ஆன்மீகம், வரலாற்று பார்வைகளை பிறகு சொல்கிறேன்..

நிர்வாகவியலை அவர் கையாண்டு இருப்பதை மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன்.. ( ஆறு பாகம் கொண்ட நாவலைப்பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது )

தொழிலில் , வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ளும் கலை என்பது மிக அவசியம்.. என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம்..

கண்டேன் சீதையை என அனுமான் சொன்னது ஞாபகம் இருக்கலாம்..

சரி, நாவலின் இந்த பகுதியை பாருங்கள்..

ஓடி வந்தவன் சாம்பானுக்கு அருகே வந்து மண்டி இட்டான்

“ ஆட்கள் வருகிறார்கள்.. பதினாறு பதினேழு பேர் மலையேறி வருகிறார்கள் “

சாம்பான் திகைத்தான்

“ அத்தனை பேரும் பெண்கள் “

வந்தவன் தொடர்ந்து சொன்னான்..

சாம்பான் கைபிரம்பு எடுது பளீரென அவனை அடித்தான்.

“ ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென புரிந்து கொள். பெண்கள் வருகிரார்கள் என சொல்லி இருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்து இருக்கும்,, ஆட்கள் வருகிறார்கள்..பெண்கள் என்கிறாயே..பரபரப்பாக ஏதோ சொல்ல வேண்டும் என ஆசை படுகிறாய்... இனி இப்படி செய்தால் உன்னை வெளியேற்றி விடுவேன்..விஷயத்தை சுருக்கமாகவும், நேரடியாகவும் சொல்ல கற்றுக்கொள் “ என கர்ஜித்தான்ன்.

நான் மிகவும் ரசித்த இடம் இது..ஒழுக்கம் குறைந்தவர்களை பைசாசம் எளிதாக தாக்கும்.. அதோ, அருண்மொழியை பாருங்கள்.. நகராதே என்று சொன்னேன்.. இந்த கணம் வரை அவன் நகரவே இல்லை.. அவன் உங்களை விட நல்ல நிலைக்கு வருவான்...

கீழ்படிதல், ஒழுக்கம் போன்றவை இருந்தால்தான் தலைவன் ஆக முடியும் என சொல்லும் இந்த இட்த்தை, அத்ன் பின்புலத்தோடு படித்தால் மிகவும் ரசிக்க முடியும்...

கடைசி வரை வெல்ல முடியாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், ஆயிரம் அரசியல் தவறுகள் செய்தாலும் , ஒழுக்கத்தில் தீ போல இருந்தார் என்பதை மறுக்க முடியாது..

அதே போல , இவ்வள்வு பெரிய நிலையில் இருக்கும் ரஜினி, இன்னும் இயக்குனருக்கு இந்த அளவு கீழ்படிந்து நடிப்பதையும் கவனதில் கொண்டால், வெற்றிக்கு என சில ஃபார்முலாக்கள் இருப்பது தெரியும்..

ஒரு போர் படை தள்பதி , தன் படையினருடன் ஆற்றை கடக்க வேண்டி இருந்த்து...

ஆனால் அதை கடக்க எல்லோரும் பயந்தனர்..

“ ஆழம் அதிகமாக இருக்குமோ ? :”

தளபதி எதுவும் பேசவில்லை/..

தானே இறங்கினார்..

பிறகு மீண்டும் கரை ஏறினார்..

தன் காலில் இருந்த நீர் அடையாளத்தை காட்டினார்..

“ ஆழம் அதிகம் இல்லை..முழங்கால் அளவு தண்ணீர்தான் “

அதன் பின் அனைவரும் ஊக்கதுடன் ஆற்றை கடந்தனர்...

தலைவன் என்பவன் பேசுபவன் அல்லன்.. செயல் மூலம் மற்றவரை ஊக்கப்படுதுபவன்..

இந்த நாவலில் வரும் காட்சியை பாருங்கள்..

மன்னர் சரசரவென ஆற்றில் இறங்கினார்..வண்டி எவ்வலவு தொலைவில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..

“ ஏற்றம் கட்டுங்கள் “ என உத்தரவிட்டார்..

ஒரு மாபெரும் அரசர், ஆற்றில் இறங்கி , மற்றவர்களுக்கு வழிகாட்டும் இந்த இடம் அருமை..

அதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..

வரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

கண்டிப்பாக படியுங்கள்... பயனுள்ள்தாக இருக்கும்..

வரலாற்றில் , இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்

Monday, October 25, 2010

நீங்கள் முற்றிலும் அறிந்த சித்தரா? எழுத்து சித்தர் பாலகுமாரன் விளக்கம்

 

குறைகுடங்கள் ஆர்ப்பரிக்கும் நிலையில், அமைதியாக தன் எழுத்து பணியை தொடர்பவர் எழுத்து  சித்தர் பாலகுமாரன்..

அவரது கேள்வி பதில் ஒன்று …

 

உங்களை சித்த புருஷன் என புகழ்கிறார்களே. இது உண்மையா?

*****************************************rajini bala

எழுத்து சித்தர் பாலகுமாரன்

அவர்கள் புகழ்வது உண்மை. அது அன்பின் வெளிப்பாடு. ஆனால்  ஒரு சித்தருக்கு உண்டான திறமை எல்லாம் எனக்கு இல்லை. என்னால் விபூதி வரவழைக்க முடியாது.. வாயிலிருந்து லிங்கம் எடுக்க முடியாது. அப்படி செய்ய வேண்டும் என நினைத்ததும் கிடையாது.

நான் எழுத்தாளன். அவ்வளவே. நல்ல எழுத்தாளன் என்பது நீங்கள் கொடுத்த மரியாதை. உங்களின் பாராட்டு. வேலைகளில் உண்மையாகவும், திறமையாகவும் இருப்பது என் வழக்கம்., எவர் மீதும் எனக்கு பொறாமை இல்லை. யாரோடும் சண்டை இல்லை. எவர் வளர்ச்சி கண்டும் நான் வெதும்பவில்லை. தானற்ற பிரகாரன் என்ற ரமணர் வாக்கை நம்புகிறேன். வாழ்க்கை நன்றாக நடந்தது.. நடக்கிறது . நடக்கும் என்பது என் தீர்மானம்.

வாலிப வயதில் இருந்த விருப்பு , வெறுப்பு மறைந்து அமைதி பிறந்து இருக்கிறது, எதையும் மிக சரியாக சிந்திக்க முடிகிறது. இதற்காக சித்த புருஷன் என் அழைக்க முடியுமா என தெரியவில்லை..

நல்ல மனிதனாக உருவாக குருனாதரும், இலக்கியமும் உதவி செய்து இருகின்றன, அவ்வளவே..

நல்லது நினைத்தால் நல்லது நடக்கும் என்பது என் அனுபவம்..

கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இறை தூதர் - புத்தக அறிமுகம்

ஒரு குறப்பிட்ட கடவுளை நம்புபவர்களுக்கு எது நடந்தாலும் அது கடவுள் செய்வதாக தோன்றும்..
கடவுள் இல்லை என நம்புபவர்களுக்கு , அற்புதங்கள் என சொல்லப்படுவதெல்லாம் ஏமாற்று வேலை என தோன்றும்..
எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒரு பார்வையாலானாக உலகை கவனிப்பவருக்கு, உலகம் புது புது தகவ்ள்ககளை வாரி வழங்க காத்து இருக்கிறது...
என்னை பொறுத்தவரை, பைபிள் , குரான் , கீதை, மூலதனம் , பெண் ஏன் அடிமை ஆனாள் , தம்மபதம், என எல்ல்லாவற்றையும் ஆழ்ந்து படித்து அதன் சாரத்தை உறிய முயல்வது வழக்கம்..

அந்த வகையில், ஒரு வித்த்தியாசமான புத்தகம் படிக்க நேர்ந்தது...

அல்லா என்பவர் அனைவருக்கும் இறைவன்... அந்தந்த நாடுகளுக்கு ஏற்றபடி பல நபிமார்களை அனுப்பி மக்காளை நல்வழி படுத்துகிறார் அல்லா..

அப்படி அவர் அனுப்பிய நபிமார்களில் ஒருவர்தான் கிருஷ்ணர் என சொல்லி , ஆச்சர்யபடுதியது புத்தகம். (இயேசுவும் கூட நபிமார்களில் ஒருவரே என்பது ஒரு நம்பிக்கை )

அட, என்னாதான் சொல்ல வருகிறார்கள்,,, வித்தியாசமான பார்வையாக இருக்கிறதே என படிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்து பல ஆசாரியங்கள்..

குர்ஆனில் சில நபிம்மார்கள் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.. இதில் குறிப்பிட படாத நபிமார்களை ஏற்க கூடாது என கருத இடமில்லை..
" நிச்சயமாக நாம் உமக்கு ( நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களுக்கு ) முன்னர் பல தூதர்களை அனுப்பி உள்ளோம்..சிலரை பற்றி கூறி உள்ளோம்.. உமக்கு கூறாதவர்கள் சிலரும் உள்ளனர் ( 40 : 79 )
என குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது...

ஹஸ்ரத் தலைமி அவர்களின் நபி மொழி ஒன்றில் இப்படி இருக்கிறது...

கான பில் ஹிந்தி நபிய்யுன் அச்வதுள் லாவணி இச்முஹூ காஹினா
" இந்தியாவில் ஒரு நபி தோன்றினார்.. அவர் கருமை நிறத்தவர் .. அவர் பெயர் காஹினா "

இது போல பல கருத்துக்களை இஸ்லாமிய சான்றோர்கள் நூல்களில் இருந்து எடுத்து காட்டுகிறது புத்தகம்...

இந்துக்கள் கிருஷ்ணரை கடவுளாக வணங்கினாலும், அவர் கடவுள் அல்ல... இறை தூதரே என சுவையாக வாதாடுகிறது இந்த நூல்..

இந்துக்கள் கிருஷ்ணரை பார்க்கும் விதம், அவரை பற்றிய வரலாறுகள், சம்பவங்கள் போன்றவற்றை வேறு ஒரு கோணத்தில் ஆய்கிறது நூல்..

இன்னும் ஒருபடி மேலே போய், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் ) வருகையை பற்றி மகரிஷி வியாச பகவானின் பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார் நூல் ஆசிரியர்..

இன்னும் நிறைய சுவையான தகவல்கல் இருகின்றன...

கண்டிப்பாக படித்து பாருங்கள்.... புத்தகம் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்க வேண்டாம்.. எனாதன் சொல்கிறார்களே என பாருங்கள்..

நமது கிருஷ்ணர் எழுதியவர் : கலீல் அகமது

Sunday, October 24, 2010

இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகிறது? - நேரடி ரிப்போர்ட்
குடும்பத்துடன் பார்க்க முடிகிற படங்கள் மிகவும் குறைவு... நீண்ட நாள் கழித்து , ஒரு நல்ல படம், அனைவரும் பார்க்க முடிகிற படம் என்றால் அது எந்திரன் தான்..

யாராவது நண்பர்கள், உறவினர்கள் என்னை பார்க்க வந்தால் , எந்திரனுக்கு அழைத்து செல்வது என் வழக்கமாகிவிட்டது..
அந்த வகையில், இன்றும் எந்திரன் பார்க்க வேண்டி இருந்தது.. இருபத்தைந்து நாட்கள் , பல திரையரங்குகளில் ஓடி , அனைவரும் பார்த்து விட்டபின்னும் கூட , இன்னும் பிளாக்கில்தான் டிக்கட் கிடைக்கிறது, பெரிய திரையரங்குகளில்.. ஹவுஸ் புல்..

பல இடங்களில் அலைந்து பார்த்து விட்டு, தேவி கருமாரியம்மனில் பார்தோம்..

நல்ல கூட்டம்.. இன்னும் முதல் நாள் உற்சாகம் ரசிகர்களிடம்..

பாபா படம் பார்க்கும் போது, ஆரம்பதில் இருந்த உற்சாகம் போக போக குறைவதை பார்க்க முடிந்தது..
இதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உற்சாகம்தான்..

முதலில் பார்க்கும்போது,கருணாஸ், சந்தானம் இருவரும் வீண் போல தோன்றியது..
இப்போது பார்க்கும் போது , அவர்களின் முக்கியத்துவம் தெரிந்தது..
இதற்கு மேல் போய் இருந்தால் அதிகபிரசங்கித்தனமாக இருந்திருக்கும்..

அதே போல வசனம் மிக மிக அருமையாக ரசிக்கப்படுவதை பார்க்க முடிந்தது..

பாடல் காட்சிகளுக்கு வரவேற்பு அமோகம் ( வீடியோ இணைப்பை பார்க்கவும் )


, இதற்கு மேல் அறிவியல் தகவலையோ, செண்டிமெண்டையோ கலந்து இருந்தால், ஓடாத நல்ல படம் என்ற பட்டியலில் எந்திரன் சேர்ந்து இருக்கும்..

ஷங்கருக்கு பாராட்டுக்கள் ...

Saturday, October 23, 2010

புனிதமான கலர் எது ? ஆன்மிக குருவை பின்பற்றுகிறேன் – கலைஞர் துணிச்சல் பேட்டி

karu இப்போது மஞ்சள் பத்திரிக்கை ஆகி விட்ட தினமணியில் ஒரு காலத்தில் தரமான விஷயங்கள் வந்தன..

பழைய இதழ் ஒன்றை புரட்டினேன்..

அதில் அப்போது பதவியில் இல்லாத கலைஞரை பேட்டி எடுத்து இருந்தனர்..

ஒவ்வொரு கட்சியினரும் அவரது வழிகாட்டிகள் வடிவமைத்த நிறங்களை ஆடைகளில் பயன்படுத்துவார்கள்..

ஆனால் கலைஞர் யாரை பின் பற்றி ஆடை நிறத்தை தேர்ந்தெடுத்தார் என்பதை அறியும்போது ஆச்சர்யமாக இருந்த்து..

பேட்டியின் சில பகுதி- உங்கள் பார்வைக்கு

**********************************************************************************

ஏன் மஞ்சள் துண்டு அணிகிறீர்கள்?

ஓஷோ எழுதிய புத்தகம் படித்தேன்., நேர்மையானவர்கள்,. நல்லவர்கள் அணிவது மஞ்சள் ஆடைதான் என்கிறார் அவர்.. அவர் எழுத்து என்னை கவர்ந்த்தால் , மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன்..

இந்த வயதிலும் தள்ர்ச்சி இன்றி செயல்படுகிறீர்களே? எப்படி ?

கருவில் உள்ள திருனு புராணீகர்கள் சொல்கிறார்களே.. அதுதான் காரணம்னு நினைக்கிறேன். எனக்கு உறுதியாக தெரியாது

**************************************************************************************************************

ஆன்மிகம் , நாத்திகம் என்று எதை வேண்டுமானாலும் ஒருவர் பின்பற்றலாம்.. அது அவரவர் வசதி.. அல்லது என்னைபோல எதையும் பின்பற்றாலும் இருக்கலாம்..

ஒருவர் தனக்கு உண்மையாக இருக்கிறாரா என்பதே முக்கியம்..

 

அந்த வித்த்தில், சம்பிராதயங்கள் எல்லாம் தவறு என்று திராவிடர் இயக்கத்தினர் சொலவ்தை போல தான் உறுதியாக நம்பவில்லை என அவர் சொல்லி இருப்பது குறிப்பிட்த்தக்கது..

அதே போல, கம்யூனிஸ்களின் செவ்வாடை, திராவிடர் இயக்கத்தின் கறுப்பு ஆடை என்பதெல்லாம், அந்தந்த இயக்க தலைவர்கள் உருவாக்கினார்கள்.

ஆனால் ஒரு ஆன்மீக குரு சொன்னதை பின்பற்றி ஆடை அணியும் ஒரே தலைவர் இவராகத்தான் இருக்கும்..

ஜெய ல்லிதாவும் இப்படி யாரோ சொல்வதை பின்பற்றி ஆடை வண்ணத்தை தேர்ந்தெடுத்தாலும் , அதை வெளிப்படையாக சொலவ்தில்லை..

அந்த வகையில் கலைஞரை பாராட்டலாம்

Friday, October 22, 2010

என் மதிப்பு கேவலம் 15 கோடிதானா ? பேரம் பேசும் எம்எல்ஏ சிடி வெளியீடு !!!

ஒரு பட்த்தில் , ராஜேந்தர் ஒரு கொலைகாரனை குறுக்கு விசாரனை செய்வார்,,, அந்த பட்த்தில் ராஜேந்தர் வழக்கறிஞர்..

டே.. நீதாண்டா கொலை செஞ்ச “

“ இல்லை .இல்லை .இல்லை “

“ நீதிபதி அவர்களே... இவந்தான் செஞ்சான் கொலை.. அதுக்குத்தான் நான் விரிச்சேன் வலை.. தண்டனைதான் அதுக்கு விலை “

“ இல்லை நான் கொலை செய்யல “

“ நீதிபதி அவர்களே..இதோ இந்த வெள்ளை சட்டையை பாருங்க.. இத போட்டுட்டுதான் அவன் கொலை செஞ்சான் “

“ நோ “

“ பாருங்க ..ரத்த கரை கூட இருக்கு “

“ பொய் ..பொய்..பொய்,,, நான் கொலை செய்யும்போது சிவப்பு சட்டைதான் போட்டு இருந்தேன்.. வெள்ளை சட்டையை காட்டி இவர் ஏமாத்துறார் “

” கொலையாளியே கொலையை ஒப்புகொண்டு விட்டார் யுவர் ஆனர் “

 

****************************************************************

இதை போலத்தான் கர்னாடகத்தில் பரபரப்பான சம்ப்வங்கள் நடந்து வருகின்றன..

சுயேட்சை எம் எல் ஏக்களை , கட்சி தாவல் தடை சட்ட்த்தின் கீழ் டிஸ்மிஸ் செய்தார் சபானாயகர்..இதை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர்..

” நடவடிக்கை சரிதான்.. நீங்கள் கட்சி தாவினீர்கள்.. கட்சி தாவினீர்கள்.. “ என பி ஜே பி , ராஜெந்தர் பானியில் டார்ச்சர் செய்யவே, அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு , தாங்கள் பீ ஜே பியை விட்டு விலகவில்லை என் கோர்ட்டில் சொல்லி விட்டனர்..

நாங்கள் சுயேட்சைகள் .. பி ஜே பியில் சேரவும் இல்லை.. விலகவும் இல்லை என சொல்லி இருக்க வேண்டும்.. உணர்ச்சி வசப்பட்டு , பி ஜெ பியில் சேர்ந்து இருந்த்தை போல உளறித்தொலைத்து விட்டு இப்போது விழிக்கின்றனர்..

இது ஒரு புறம்..

இன்னொரு புறம் , பி ஜே பியில் இருந்து விலகிய எம் எல் ஏக்கள் வழக்கை கோர்ட் ஒத்தி வைத்து விட்ட்து..

இறுதி தீர்ப்பு வருவதற்குள் , விஷயத்தை சுமூகமாக முடிக்க பி ஜெ பி காய்களை நகர்த்த ஆரம்பித்து விட்ட்து..

இரண்டு காங்கிரஸ் எம் எல் ஏக்கள் அடுத்தடுது ராஜினாம செய்து விட்டனர்.. எனவே எதிர்கட்சிகளின் பலம் குறைந்து விட்ட்து.. நாளை அவர்கள் பி ஜெ பி சார்பில் போட்டியிட்டு வென்று, பி ஜெ பி யின் பலத்தை உயர்த்துவார்கள்..

இதற்கிடையே , தன் கட்சி எம் எல் ஏ வை விலைக்கு வாங்க பி ஜெ பி முயற்சிக்கிறது என கூறி ஒரு சி டி யை வெளியிட்டுள்ளார், ம ஜ த தலைவர் குமாரசாமி..

பேரம் பேசும் சி டி யில் என்ன இருக்கிறது ? பாருங்கள்

***********************************************************************************

சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : எவ்வளவுதான் வேணும்?

ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : நூறு கோடி வேணும். முடியுமா?

சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : ( சிரித்தபடி ) உள்துறை அமைச்சர் அஷோக்கிடம் பேசி பதினைந்து கோடியில் முடிக்கிறேன்

ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : வெறும் பதினைந்தா ?

சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : அஷோக்கிடம் நேரடியாக பேசி முடித்து கொள்ளலாம். அவரை வந்து பாருங்கள்

ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : பணம் கைக்கு வந்தவுடன், ராஜினமா செய்ய நான் தயார்

சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : அஷோக்கை சந்தித்து பேசுங்கள். அமவுண்ட் முடிவானதும் , ரெண்டு கார்ல வந்து பணத்தை கொண்டு போங்க

ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : பணம் முடிவாகாம நான் எங்கும் வர முடியாது.. இப்படித்தான் அஸ்வத்தாவுக்கு 25 லட்சம் தறேனு சொன்னீங்களாம்.. பாவம், அப்பாவி மனுஷன் , நம்பி ராஜினாமா செஞ்சாரு.. கடைசில அஞ்சு கோடிதான் கொடுத்தீங்களாம்.. பாவம் , எங்கிட்ட ரொம்ப வருத்த பட்டாரு..

நான் அப்படி ஏமாற மாட்டேன்..

சுரேஷ் கவுடா ( பிஜெபி எம் எல் ஏ ) : பதினைந்து கோடினா உடனே வாங்கி கொடுத்துடுவேன்

ஸ்ரீனிவாஸ் ( மஜத எம் எல் ஏ ) : குறைந்த்து இருபத்தைந்தாவது வேணும்..

இது மோசடியான சி டி என பி ஜெ பி சொல்லி விட்ட்து..

வாழ்க ஜன நாயகம் !!!!

Thursday, October 21, 2010

பறக்கும் தட்டு ஆராய்ச்சி ஆபத்தானது - ஸ்டீபன் ஹாக்கிங் , இல்லை முக்கியமானது - பீட்டர் டேவன்போர்ட் , அறிவியல் சர்ச்சைகணவன் மனைவி சண்டையில், மனைவி கணவனை அடிப்பதும் , கணவனை மனைவி அடிப்பதும் தமிழ் நாட்டில் சர்வசாதரணமாக தினமும் நடக்கும் விஷயம்தான்.. சண்டையில் பாத்திரங்கள், கரண்டிகள் , தட்டுக்கள் எல்லாம் பறப்பதும் எல்லா வீட்டிலும் நடப்பதுதான்..
பறக்கும் தட்டுக்கள் நமக்கு பழகி போன சமாச்சாரம் ஆகி விட்டது.. ஆனால் வெளிநாட்டில் பறக்கும் தட்டுக்களை பற்றி ஆர்வமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்..
சண்டையில் பறக்கும் தட்டுக்களை பற்றி அல்ல.. வெளி கிரக வாசிகள் அவ்வபோது, வினோதமான பறக்கும் தட்டுகளில் பூமிக்கு விஸ்ட் அடித்து விட்டு மாயமாக மறைவதை பற்றித்தான் இந்த ஆராய்ச்சி..

பறக்கும் தட்டு என்றெல்லாம் எதுவும் இல்லை என சிலர் சொன்னாலும், மர்மமான ஒன்று வானில் பறப்பதை பார்தேன் என போட்டோ ஆதாரம் காட்டுபவர்கள் இருக்கிறார்கள்.. அந்த போட்டவை பார்த்தல், அவை விமானமோ அல்லது மனிதன் செய்த ஒரு பொருளாகவோ தோன்றவில்லை... தவிர, இது போன்ற பறக்கும் தட்டுக்களின் உடைந்த பாகங்களும் சில சமயம் கிடைத்துள்ளன...

எனவே இது குறித்த ஆராய்ச்சிக்கு தேவை இருக்கிறது..
ஒரு வேலை அதில் வேற்று கிரகவாசிகள் இருந்தால் அவர்களை பூமிக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிகள் நடக்கின்றன.. அப்படி நேரில் பார்க்கவிடாலும் , எதவது ஒரு வகையில் தகவல் தொடர்பு கொள்ள முடியுமா எனவும் ஆய்வுகள் நடக்கின்றன..

இந்நிலையில், பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் , தம்பி, இதெல்லாம் வேண்டாம்.. இந்த முயற்சி சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது போன்றது என எச்சரித்து இருக்கிறார்..
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்ததும், அங்குள்ள பஊர்வ குடிகள் வாழ்க்கை அழிந்தது..
அதே போல, வேற்று கிரக வாசிகள் பூமியை கண்டுபிடித்தால், நம் வாழ்க்கை அழிந்து விடும்.. அவர்கள் நம்மை விட கில்லாடிகளாக இருக்க கூடும்.. எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பதோ, பூமிக்கு அழைப்பதோ வேண்டாம் என்கிறார் அவர்..

இது குறித்து, இந்த துறையில் ஆய்வு செய்து வருபவரும், தேசிய ,அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் ஆய்வு மையத்தின் இயக்குனருமான பீட்டர் தேவன் போர்ட் அளித்த பேட்டி..

*******************************************

பறக்கும் தட்டின் மேல் எப்போதிருந்து ஆர்வம் ஏற்பட்டது ?

முதன் முதலில் அதை பார்த்ததில் இருந்து ஆர்வம் ஏற்பட்டது :-)

ஆறு வயது சிறுவனாக இருக்கும்போது, குடும்பத்துடன் சினிமா பார்க்க சென்றோம்.. காரில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென சாலையில் பரபரப்பு.. மக்கள் ஓடிக்கொண்டும் கத்தி கொண்டும் இருந்தார்கள்.. சிவப்பு சூரியன் போல ஒன்று பறந்து கொண்டு இருந்தது.. அந்த சிவப்பு நிறத்தால் , பூமி ஒளிர்ந்தது.. திடீரன் அது வேறு திசையில் பறந்து , மறைந்து விட்டது..
தவிர , நான் ஒரு விஞ்ஞானி.. அறிவியல் வரலாற்றின் உக்கிய கேள்வியை ஆய்ந்து வருகிறேன்..
பூமியில் மட்டும்தான் உயிர் இருக்கிறதா?
இதற்கு திட்டவட்டமான , உறுதியான பதில் என நான் நினைப்பது..

இல்லை.. பூமியில் மட்டும் உயிர் இல்லை.. மற்ற கிரகங்களிலும் இருக்கிறது..


இப்படி சொல்வதற்கு ஆதாரம் இருக்கிறதா?

பல ஆதரங்களை காட்டி விட்டோம்.. நேரில் பார்த்த பலர் சாட்சியங்கள் இருகின்றன.. சரி, அதை கூட நம்ப வேண்டாம்,., சிலர் கற்பனையாக சொல்லி இருக்கலாம்.. அல்லது வேறு எதையாவது பார்த்து விட்டு தவறாக பறக்கும் தட்டு என சொல்லி இருக்கலாம்.. ஆனால் நேரடியான ஆதாரங்களும் உள்ளன.. பறக்கும் தட்டு இரங்கி சென்ற தடங்கள், அவை விட்டு சென்ற உலோக பொருட்கள், என பலதும் கண் முன் காட்ட முடியும்..
பிரிட்டன், ஒரு கோதுமை வயலில் உண்டான மர்ம வளையங்கள் பற்றி இன்னும் சரியான விளக்கம் தர நம்மால் முடியவிலையே?
( ஒரு கோதுமை வயலில் இந்த விசித்திர வடிவம் தோன்றியது.. இரவு தூங்க சென்றபோது இல்லை.. காலை யில் பார்த்த உழவர்கள் திகைத்தனர்.. குறுகிய நேரத்தில் வேறு யாரும் இதை செய்த்திருக்க முடியாது.. அந்த வடிவம் எதோ செய்தியை சொல்வது போல இருந்தது - பார்க்க்க படம்.. - பிச்சைக்காரன் )

பறக்கும்தட்டு குறித்த தகவல் வந்தால் அதை எப்படி கையாள்வீர்கள்..?

வானில் ஒளியை பார்த்த தகவல்தான் அதிகம் வரும்.. ஒருவேளை அது விமான ஒளியாகவோ, நட்சத்திரங்கலோகவோ, கோள் கலாகவோ இருக்கலாம்.. உண்மையான தகவல் என்பதை ஆய்ந்துதான் கண்டுபிகக் முடியும்.. பலரும் ஒரே தகவலை , ஒரே மாதிரியாக சொன்னால் , அது ஓரளவு நம்பகமாக இருக்கும்..,
அவர்கள் என்ன பார்த்தார்கள் என்பதை விவரிப்பதும், உண்மையை கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்..

என்ன ஆதாரத்தை காட்டினால், பறக்கும் தட்டு உண்மையா பொய்யா என்ற விவாதம் முடிவுக்கு வரும் ?

ஒரு வேற்று கிரக வாசியை நேருக்கு நேர் சந்தித்து பேசினால் முடிவுக்கு வரும் :-)

அனால் அதற்காக காத்து இருக்காமல், ராடார் முறையை பயன்படுத்த வேண்டும் என்பது என் திட்டம்.. வானொலி, ஒளி அலைகளை விண்ணில் அனுப்பி, திரும்ப வரும் அலைகளை உணரும் ஆண்டேனாக்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.. யாரவது நம் அழைப்புக்கு பதில் அளித்தால் தெரிந்து விடும்...
இது இந்த பறக்கும் தட்டு சர்ச்சையை முடித்து வைக்கும்..

இது ஆபத்தான வேலை என்கிறாரே ஸ்டீவன் ஹாக்கிங் ?

அவர் சொல்வது தவறு.. கொலமபசுடன் வேற்று கிரக வாசிகளை ஒப்பிட கூடாது.. கொலம்பசுக்கு பொருளாதார நோக்கம் இருந்தது, அவர் குழுவினருக்கும் , பூர்வ குடிகளுக்கும் மோதல் ஏறபட்டது..
ஆனால் , இந்த விஷயத்தில் பறக்கும்தட்டில் வருபவர்களும் ஆராய்ச்சி நோக்கில் வருகிறார்கள்..நாமும் ஆய்வு நோக்கில் இருக்கிறோம்.. எனவே மோதல் இருக்காது..


******************************

அடுத்த முறை வானில் ஏதேனும் ஒளியை பார்த்தால் அது கடவுளாகவும் இருக்கலாம்.. அல்லது பறக்கும் தட்டாகவும் இருக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள்..

Wednesday, October 20, 2010

பேசினால் சார்ஜ் ஆகும் செல்போன்... கடலை பிரியர்களுக்கு உற்சாகமளிக்கும் தொழில் நுட்பம் விரைவில்

சிலருடன் போணில் பேசினால், மனதை ரீ சார்ஜ் செய்தது போல , புத்துணர்வு கிடைக்கும்..
ஆனால் பேசுவதன் மூலம் செல் போன் சார்ஜ் ஏறுமா ?

ஏறும் என்கிறார்கள் கொரிய விஞ்ஞானிகள்..

இவர்கள் சொல்வது போல நடந்தால், நம் செல்போனின் சார்ஜ் இறங்கி விட்டால் , யாருக்காகவது போன் செய்து எந்திரன் படம் பற்றியோ, அல்லது நகுலனின் கவிதைகளில் காணப்படும் தொன்மங்கள் பற்றியோ, ஒரு பத்து நிமிஷம் பேசினால் போதும்.. சார்ஜ் ஏறி விடும்..

" ஸ்பீக்கர் என்ன செய்கிறது? எலக்ட்ரிக் சிக்னலை , ஒலி அலையாக மாற்றுகிறது... எனவே ஒலி அலை , எலக்ட்ரிக் சிக்னலாக மாறுவதும் சாத்தியம்தான்" என்கிறார்கல் டாக்டர் யங் ஜூன் பார்க், ( சாமங் உயர் தொழில் நுட்ப கழகம் ) மற்றும் சாங் வூ கிம் ஆகியோர் .. அட்வான்ஸ் மேட்டிரியல்ஸ் என்ற பத்திரிக்கையின் ஒரு கட்டுரையில் இவ்வாறு தெரிவித்து இருகின்றனர்..

" பேசுவதால் மட்டும் அல்ல.. சத்த அலைகளை எங்கு இருந்தும் பயன்படுத்தலாம்.. டிராபிக் மிகுந்த இடங்கள், வாகன இரைச்சல் என எதையும் பயன் படுத்தலாம் " என்கிறார்கள் இவர்கள்..

அவர்கள் சொல்வதை புரிந்து கொள்ள வேண்டுமானால், piezoelectricity என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..
சில திட பொருட்களுக்கு பீசோ எலக்ட்ரிசிட்டி என்ற இந்த பண்பு இருக்கும்..
என்ன இந்த பண்பு ?
ஒரு பொருளை வளைக்கவோ, அழுத்தவோ செய்தால் அதில் மின்சாரம் உண்டாகும் என்பதே இந்த பண்பு.. உதாரனமாக ஒரு இடத்தில் எவ்வளவு சத்தம் இருக்கிறது என்பதை இதை பயன்படுத்தி அறியலாம்.. சத்த்சம் ஏற்படும்போது , அந்த பொருளில் ஒரு அழுத்தம் ஏற்படுகிறது அல்லவோ.. அதற்கேற்றபடி மின்சாரம் உண்டாகும்.. அந்த மின்சாரப்பை அளப்பது எளிது..அதன் மூலம் சத்தம் எவ்வளவு கண்டு பிட்க்கலாம். இது போல பல பயன்பாடுகள் உள்ளன..
அதே போல, ரிவர்ஸ் பண்பும் இதற்கு உண்டு.. மின்சாரத்தை செலுத்தினால், அதன் வடிவ அமைப்பு மாறும்..
அதாவது, வடிவமைப்பை மாற்றினால் மின்சாரம், மின்சாரம் செலுத்தினால் வடிவ அமைப்பு மாற்றம்..

இந்த பண்புதான், மின் அலைகளை , ஒலி அலைகளாக மாற்ற பல இடங்களில் பயன் பட்டு வருகிறது..இத எதிர்பன்பில்தான் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நடப்பது, ஓடுவது, ஹோட்டல்களில் நடனம், சாலை போக்குவரத்து மூலம் ஏற்படும் அதிர்வுகளால் மின்சாரம் உண்டாக்க முயன்று வருகிறார்கள்..
கொரிய விஞஞானிகள் சற்று வித்தியாசமாக யோசித்து செல் போனை சார்ஜ் செய்ய முயல்கிறார்கள்..

சின்க் ஆக்சைடை இரண்டு எலக்ராடுகள் மத்தியில் வைத்து , ஒலி எழுப்ப பட்டது.. நுறு டெசிபல் அளவில் ஒலி எழுந்த போது , மின்சாரம் உண்டானது..ஐம்பது மில்லி வோல்ட் மின்சாரம் கிடைத்து..

செல் போனுக்கு இதை விட பல மடங்கு அதிக மின்சாரம் தேவை ..
இன்னொரு பிரச்சினை ..
நாம் சாதாரமாக பேசும்போது .,ஐம்பது அல்லது அறுபது டெசிபல் அளவில்தான் ஒலி இருக்கும்... எனவே சார்ஜ் செய்ய வேண்டுமானால், காட்டு கத்து கத்தினால்தான் முடியும்..
இந்த பிரச்சினைகளை நீக்கி, சாதாரண பேச்சு சத்தத்தில் சார்ஜ் செய்யும் கருவியை கண்டு பிடிக்க முயன்று வருகிறார்கள்..

இது விரைவில் விற்பனைக்கு வரும்...

பைக் ஓட்டும்போது பேசினால் , போலீஸ்காரர் பிடித்தால், நான் பேசவில்லை, சும்மா சார்ஜ் செய்கிறேன் என சொல்லி தப்பிக்கலாம்..

வீட்டில், எத்தனை பேர் இது போல சார்ஜ் செய்கிறேன் என சொல்லி விட்டு கடலை வறுக்க போகிறார்கள் என்பது போக போகத்தான் தெரியும்...

Monday, October 18, 2010

எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்

நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன்..
வெள்ளைக்காரன் நம்மை விட சிறந்தவன், "அவாள்" மட்டும் அறிவாளிகள், மற்றவர்கள் முட்டாள்கள் என ஒன்றா , இரண்டா..ஆயிரம் சிந்தனை சிறைகளில் சிக்கி தவிக்கின்றனர் நம்மவர்கள்..
இந்திரன் படத்தை சிலருக்கு பிடிக்கவில்லை..விமர்சிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம்..
ஆனால் ஜாதி வெறியுடன் சிலர் நடந்து கொள்வது நகைப்புக்கு உரியது.. பாரம்பரியம் மிக்க ஒரு தின் பத்திரிகை கூட அப்பட்டமான ஜாதி வெறியை காட்டி இருந்தது..

அவாள் இனத்தை சேர்ந்த அனைவரும் இப்படி இல்லை... சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்தமாக அவர்கள் பெயர் பாதிக்க படுகிறது..

இன்னொன்று , பிராமணர் அல்லாதவர்களின் தாழ்வு மனப்பான்மை.. ஒரு விஷயத்தை அவாள் மட்டும்தான் சிறப்ப்பாக செய்ய முடியும் என கற்பனையாக ஒரு சிந்தனையை பரப்பி வருகிறார்கள்..

என்ன சொல்கிறார்கள் இவர்கள்..

1 கமல்- சுஜாதா கூட்டணிதான் "இயல்பான " கூட்டணி.. அவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தால் , படம் இன்னும் பெரிய ஹிட் ஆகி இருக்கும்

2 சுஜாதா உயிடன் இருந்து இருந்தால், படம் வேறொரு உயர்ந்த தரத்தை அடைந்து இருக்கும்

3 சுஜாதாவின் திரைகதையை ஷங்கர் மாற்றி விட்டார் .. அதே திரைக்கதையாக இருந்தால், படைத்து இருக்கும்.ஆஸ்கார் கிடைத்து இருக்கும்.
4 திரைகதையில் சுஜாதா கில்லாடி.. புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார்..

இதை எல்லாம் பாதித்தால் , எந்த அளவு நம் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என புரியும்

புத்திசாலித்தனம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.. அவாள் மாட்டும் புத்தி சாலை என சொல்வது தவறு என்பதை மறந்து அவர்கள் சொல்லும் வாதத்தை கவனிப்போம்..

1 இயல்பான , புத்திசாலி கூட்டணி என இவர்கள் சிலாகிக்கும் கமல்- சுஜாதா என்ற அவாள் கூட்டணியில்தான் , விக்ரம் என்ற குப்பை படம் வந்தது... அது ஹிட் ஆகவும் இல்லை , நல்ல பெயரும் கிடைக்கவில்லை...
2 சுஜாதா உயிருடன் இருந்து இருந்தால், படத்தின் வசனங்களுக்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு கிடைத்து இருக்காது... சிவாஜி படத்தின் வசனம் வரவேற்பு பெற்றதா என்ன ? ஜாதி வெறியுடன் , தமிழர்களை சில வசங்கள் சீன்டியதுதான் அவர் செய்த சாதனை . எந்திரனுக்கு சுஜாதாவே முழு வசனமும் எழுதி இருந்தால், வசனம் இயல்பாக இருந்து இருக்காது..
கண்டிப்பாக படம் பிளாப் ஆகி இருக்கும்... super படம் ,,மக்களளுக்கு புரியவில்லை என சுஜாதா பேட்டிகொடுப்பார்..
3 சுஜாதாவின் கதைகள் அவர் உயிடன் இருந்த போதே படம் ஆக்கப்பட்டன.. அவர் வசமும் எழுதினர் அப்போது அந்த படங்கள் என்ன சாதித்தன.. ? பெரும்பாலும் பிளாப் தான் ஆகின .. அவர் ஹிட் ரேட் மிக குறைவு..
எந்திரன் படம் முழுக்க முழுக்க ஷங்கரின் கதை.. அதில் வசனம் மட்டுமே சுஜாதா..எனவே அவர் கதையை ஷங்கர் மாற்றி விட்டார் என சொல்வது அபத்தம்..

4 சினிமாவில் சுஜாதவை சும்மா ஊறு காய் ஆகத்தான் பயன் படுத்தி வந்தனர்.. அவர் உண்மையிலே கில்லாடிய இருந்தால், அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரவில்லை? அவர் ஏன் முத்திரை பதிக்கவில்லை?
மணிரத்னம் போன்றவர்கள் இனப்பற்றுடன் வாய்ப்பு வழங்கினர் என்பதுதான் வரலாறு ..


பின் குறிப்பு.. 1 நானும் சுஜாதாவை விரும்பி படிப்பவன்.. அதற்காக ஜாதி வெறியை மறைக்க கூடாது..

2 நான் பிராமண துவேஷம் கொண்டவன் அல்ல .. ஏன் நண்பர்களில் பலர் பிராமனர்கள் தாம்.. பிராமணியம் என்பதை பற்றித்தான் பேசுகிறேன்..

எரிசக்தி தயாரிக்க ஏடாகூட வழிகள்- பேக்டீரியாவையும் விட்டு வைக்காத வினோத ஆய்வுகள் ( பார்ட் - 2 )எரிசக்தி தயாரிக்கும் எக்குதப்பான முறைகளை பார்த்து வருகிறோம்... இவையெல்லாம் உடனடியாக , பெரிய அளவில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என சொல்ல முடியாது.. ஆனாலும் ஆங்காங்கு பயன்பட்டு வருகின்றன ... காற்றாலைகள் எல்லாம் முதலில் வேடிக்கையாகத்தான் பார்க்க பட்டன,,, இன்று அது ஒரு பெரிய தொழிலாக இருக்கிறது ( நான் சில காலம் அதில் வேலை பார்த்தேன் என்பது இங்கு தேவை இல்லாத சுய தம்பட்டம்.. ஹி ஹி )சரி..மேலும் சில ஏடாகூடா தொழில் நுட்ப ஆய்வுகள்..

6 பெரிய கட்டடம் கட்டும்போது மண்ணை தோண்டுகிறார்கள்... அதெல்லாம் சகதியாகி வீணாகிறது...அதே போல , சுரங்கம் அமைக்கும் பணியிலும், நிலக்கரி போன்றவை எடுக்கும் இடத்திலும் , நிலத்தடி நீருடன் கலந்து சக்தியாகி வீணாகிறது..அல்லது சரசாரி பயன்பாட்டில் செலவாகிறது..
கலிபோர்னியாவில் மட்டும் 7 லட்சம் திட வடிவ சகதி , ஆண்டொன்றுக்கு கிடைக்கிறது.. இதன மூலம் பத்து ௦ மில்லியன் kvh மின்சாரம் தயாரிக்க முடியும் ( நாள் ஒன்றுக்கு )
ஆய்வு நிலையில் இருக்கும் இந்த முறை அமுலுக்கு வந்தால், தொழிற்சாலைகளும் பொது நிறுவனங்களும் பயன் பெறும்.
செலவு செய்து சக்தியை அப்புறபடுத்தும் நிலை மாறி , வருவாய் பெறும் நிலை ஏற்படும்..

7 ஜெல்லி பிஷ்... இருளில் ஒளிரும் தன்மை கொண்டது... அதில் இருக்கும் ஒளிரும் தனமை கொண்ட பச்சை ப்ரோட்டின்தான் இந்த ஒளிரும் தன்மைக்கு காரணம்..
இந்த ப்ரோட்டீனை வைத்து ஸ்வீடனில் ஆய்வு செய்ய பட்டது.. ஒரு அலுமினியம் கம்பியில் ஒரு சொட்டு ப்ரோட்டின் விடப்பட்டது.. பிறகு அதன் மீது , புற ஊதா கதிர்களை பாய செய்யும்போது , எலக்ட்ரான் வெளியேறியது... இதன் சர்க்யூட் வழியே செல்லும்போது , மின்சாரம் உண்டானது..
உயிரியல் பேட்டரி செய்யும் சாத்தியம் , பல மருத்துவ பயன்பாடுகளுக்கு ஏற்றது.. சில நுண் கருவிகளை நம் உடலுக்குள் பொறுத்த வேண்டிய நிலை வரும்போது, அந்த கருவிகளில் பயன்படும் பேட்டரிகலாக இந்த உயிரியல் பேட்டரிகள் பயன்படும்..( சூரிய பேட்டரி , இங்கு வேலைக்கு ஆகாது என்பது தெளிவு )
மின்மினி பூச்சி உள்ளிட்ட பல உயிரின்களில் ஆய்வு நடந்து வருகிறது

8 இப்போது காண இருக்கும் முறை எல்லா இடத்துக்கும் பொருந்தாது..

சில பகுதிகளில் இருக்கும் ஏரிகளுக்கு அடிப்புற மண் இடுக்களில். மீதேன் வாயுவும் , கார்பன் டை ஆக்சைடும் அடைபட்டு இருக்கும்...
வெப்பநிலை மாறும்போது, சோடா பாட்டிலில் இருந்து கேஸ் வெளியேறுவது போல, குபீர் என இவை வெளியேறும்.. ஏரி பெரிய சத்துடன் வெடித்து சிதறுவது போல இது இருக்கும்...பல நேரங்களில் உயிர் சேதமும் ஏற்படலாம்... காமரூன் நாட்டில் இதுபோன்ற சம்பவத்தில் பலர் உயிர் இழந்தனர்..
ர்வாண்டா நாட்டில் , இந்த வாயுக்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்கின்றனர்...

ஏரியில் இருந்து உறிஞ்சப்படும் வாயுக்கள் மூலம் 3 .7 மெகாவாட் மின் உற்பத்தி நடக்கிறது.. அடுத்த சில ஆண்டுகளில், நாட்டின் மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இதன் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்..
உடனே இது போல புழல் ஏரியில் அமல் படுத்த முடியுமா என அவசரப்பட கூடாது... இயற்கையாக அமைந்தால்தான் உண்டு...
9 பாக்டீரியா என்றால் படையும் நடுங்கும்.. பாக்டீரியா இல்லாத இடமே இல்லி என்பதால் , அதை வைத்து மின்சாரம் தயாரித்தல் பெரிய வெற்றி கிடைக்கும்..
ஒவ்வொரு உயிருக்கும் தற்காப்பு முறை ஒன்று இருக்கும்... பெக்டீரியவுக்கும் அது உண்டு.. உணவு கிடைக்காத போது , சமாளிப்பதற்காக, பக்டீரியா தன சக்தியை கொழுப்பு அமிலமாக மாற்றி சேகரித்து வைத்து கொள்ளும்... இந்த அமிலம்தாம் பயோ டீசல் தயாரிக்கவும் பயன் படுகிறது.. இந்த இரண்டு தனமியும் சேர்த்து பார்த்த விஞ்ஞானிகள், பேக்டீரியா மூலம் மின் உற்பத்தி சாத்தியத்தை உணர்ந்தனர்,,
பாக்டீரியாவில் இருக்கும் என்சைம்களை செயற்கை முறையில் நீக்கி , அது அமிலம் சுரப்பதை அதிகப்படுத்துதல்.. அதன் பின், அதில் ஆக்சிஜனை நீக்கி விட்டு , பயோ டிசல் உருவாக்குதல் என்பதே இந்த முறை..

பேக்டீரியா நிரப்பி வண்டி ஓட்டும் காலமும் வரலாம்... ஆனால் இப்போதைக்கு முடியாது... செலவு அதிகம் ஆகிறது... போக போக குறைந்த செலவில் தயாரிக்க முடியலாம்

10 கார்பன் பைப்புகள் மிகவும் உறுதி தன்மை வாய்ந்தவை... அதிக எடையை தாங்க வேண்டிய இடங்களில் இவை பயன்படுகின்றன..
இவற்றின் இன்னொரு பண்பு சமிபத்தில் கண்டு பிடிக்க பட்டுள்ளது.. சஊரிய சக்தியை உறிஞ்சும் ஆற்றல் இதற்கு அதிகம் என்பதே அந்த கண்டு பிடிப்பு..
இப்போது இருக்கும் முறையில், கூரை முழுதும், ஒரு தகடு போல ஒன்றை பொருத்தி , சூரிய சக்தியை உறிஞ்சுவதை பார்த்து இருப்பிர்கள்
கார்பன் பைப்புகளை பயன் படுத்தினால், குறைந்த இடத்தில் அதிக சக்தியை உறிஞ்சலாம்.. மின்சாரமும் தயாரிக்கலாம்...

********************************************************************

இது போல பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.. அவை நடைமுறைக்கு வரும் வரையாவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது நல்லது..

Sunday, October 17, 2010

சிரிக்க வைக்கும், சிந்தனையை தூண்டும் மாற்று எரிபொருட்கள்- சூப்பர் ஆய்வுகள்

இயற்கை மாசு படுதல் என்பது உலகளாவிய பிரச்சினையாக உருவாகி வருகிறது.. இந்த வேகத்தில் போனால் , உலகத்தை அழித்தவர்கள் என்ற பெருமைதான் நம் தலைமுறைக்கு எஞ்சும்..
ஆனால் மனித சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது.. அழிக்கும் திறன் இருக்கும் அளவுக்கு ஆக்கும் திறனும் மனிதனுக்கு உண்டு. எனவேதான் , மாற்று எரிபொருளை கண்டு பிடிக்கும் வேலையில் பலர் இறங்கி இருக்கின்றனர்..
இப்போதிய நிலையில் பெட்ரோலியம் சார்ந்த பொருட்கள்தான் எரிபொருளாக உள்ளன.. இதை விட்டால் அணு உலைகள்... தெர்மல் பவர் பிளாண்டை விட , அணு உலையின் திறன் அதிகம்.. ஆனால் பாதிப்பு மிக மிக அதிகம்..
நிலக்கரியால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றாலும் திறன் குறைவு, சுற்றுப்புற மாசு சீர்கேடு அதிகம்.எல்லாவற்றையும் விட , இந்த எரிபொருள் சில ஆண்டுகளில் காலியாகி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..
சூரிய மின்சாரன், காற்றாலைகள் என சில பிரபலம் அடைந்து வருகின்றன.. ஆனால் இதன் பயன் பாடு குறைவு.. போதுமான காற்று இல்லாத இடங்களில் காற்றாலை வேலை செய்யாது.. சில இடங்களில் சூரிய ஒளி இருக்காது..அங்கு என்ன செய்வது.. நிலத்தடியில் மின்சாரம் தேவைப்படலாம்..
எனவே மாற்று எரிசக்தியின் தேவை அதிகரித்து வருகிறது..சில தீர்வுகளும் முன் வைக்கப்பட்டுள்ளன..
இவற்றில் சில காமடியாக இருக்கலாம், கேலியாக தோன்றலாம்.. வினோதமகவும், நடைமுறைக்கு ஒவ்வாத்தாகவும் இருக்கலாம்.. ஆனால் யாருக்கு தெரியும்,,, சர்க்கரையை பயன் படுத்தி , லாப்டாப்பை ரீ சார்ஜ் செய்யும் காலம் வரக்கூடும்..
எல்லா கண்டுபிடிப்புகளும் ஆரம்பத்தில் வினோதமக இருக்கும்..பிறகு ஏற்கப்படும் என்பது வரலாறு... சில கண்டுபிடிப்புகள் , நடைமுரைக்கு ஒத்து வராவிட்டாலும், வேறு கண்டுபிடிப்புக்கு வழிவகுக்கும்...
எனவே இவற்றை தெரிந்து கொள்வது அவசியம்..

வினோதமான மாற்று எரிபொருட்கள்- டாப்10- இதோ உங்கள் பார்வைக்கு
1. சர்க்கரை ( சுகர் )


சர்க்கரை என்பது வாகனத்துக்கு தீங்கானது என்பது பலருக்கு தெரியாது.. ஆனால் இதே சர்க்க்கரையை வாகனங்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தலாம் என்கிறார்கள் , விர்ஜினா டெக் ஆய்வாலர்கள்...
சர்க்கரை, தண்ணீர், சில என்சைம்களை கலந்தால் ஹைட்ரஜன் உண்டாகும்.. இந்த ஹைட்ரஜன் எரிபொருள் கலனில் சேமிக்கப்பட்டு , எரிபொருளாக பயன்படும்...
வழக்கமாக ஹைட்ரஜன் தயாரித்தலை விட , குறைவான செலவில் தயாரிக்கலாம்.,.. மாசு படுதலும் குறைவு..

ஆனால் நாளைக்கே ஜீனியை அள்ளி கொட்டி வாகனம் ஓட்ட முயற்சித்து விடாதீர்கள்.... ஆபத்து...

இது நடைமுறைக்கு வர இன்னும் சில ஆண்டுகள் ஆகும்... குறைந்த பட்சம், சுகர் கோட்ட்ட் பேட்டரிகளாவது விரைவில் நடைமுரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது

2. சூரிய புயல்

சூரியனை சுற்றி சக்தி வாய்ந்த கதிர்வீச்சுகள் நடந்து வீசிக்கொண்டே இருக்கின்றன,,
சூரியனை சுற்று வருமாறு ஒரு செய்ற்கை கோளை ஏவி , அந்த கதிர்வீச்சில் இருக்கும் எல்க்ரானகளை கவர முடியுமா என பார்க்கிறார்கள்.. செய்ற்கை கோளில் இருக்கும் மின்கலம் இதை எரிசக்தியாக மாறும்... அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இது பூமிக்கு அனுப்ப்படும் எனப்து திட்டம்..

ஆனால் அவ்வளவு தொலைவில் இருந்து அனுப்புவது சாதரண விஷயம் அல்ல.. வழியிலேயே இழப்பு அதிகமாக ஆகி விடும்..
குறைந்த பட்சம், இந்த எரிசக்தியை , நாம் அனுப்பியுள்ள மற்ற செயற்கைகோள்களுக்காவது பயன்படுத்த , அதிக சாத்தியங்கள் உள்ளன..

3. மனித கழிவு

பெயரை கேட்டாலே அதிருதுல.. ஆனால் இதற்கும் வாய்ப்புகள் உள்ளன.. ஏற்கனவே மாட்டு சாணம் பயன்படுத்தி எரிபொருள் , மின்சாரம் தயாரித்து வருவது நடைமுரையில் உள்ளது..
சான் பிரான்ஸிஸ்கோவில் நாய் கழிவை , மீத்தேனாக மாற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்..
நாயை வாக்கிங் அழைத்து செல்பவர்கள், அதன் கழிவை சேகரித்து ஒரு குறிப்பிட்ட இட்த்தில் கொட்ட வேண்டும்.. அது மீத்தேனாக மாற்ற்ப்பட்டு, தெருவிளக்கை ஒளிர செய்ய பயன்படுகிறது..

மனித கழிவும் இதே போல பயன்படும்... 70 வீடுகளில் இருந்து சேகரிக்கபடும் கழிவு, ஒரு கார் 10,000 மைல் செல்வதற்கான எரிசக்தியை வழங்கவல்லது
எடின்பர்க்கில் இருக்கும் ஒரு பல்கலைகழகம் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது..

சிறு நீர் கழித்தால் காசு தரும் திட்டம் வந்தால் ஆச்சர்யபடுவதற்கு இல்லை..

சிறிய கிராமங்கள், தொழிற்சாலைகளிலாவது, இது விரைவில் சாத்தியம் ஆகலாம்

4. உயிருள்ள உயிரற்ற மனித உட
ல்
மனித உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை பயன்படுத்தி இன்னொரு ஆராய்ச்சி.. கூட்டம் சேரும் இடங்களில் உண்டாகும் வெப்பத்தை ஒன்று சேர்த்தால், கிடைக்கும் வெப்ப ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுட்பம் ஆய்வில் இருக்கிறது..
உடல் சூட்டை பயனடுத்தி செல்போனை சார்ஜ் செய்ய்யும் தொழில்னுட்பம் உடனடி சாத்தியம்
பிரிட்டனில் இருக்கும் ஒரு எல்கட்ரானில் சுடுகாட்டில், மனித உடலை எரிக்கும்போது உண்டாகும் வாயுவை பயன்படுத்தி , அந்த அறைய இதமான சூட்டில் வைத்து கொள்கிறார்கள்...
வழக்கமாக , இந்த வாயுக்கள் வீணாக சென்று விடும்.. இவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்
5. நடனமாடினால் மின்சாரம்
அழாகன பெண்ணுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தாலே சூடேறும்.. நெருக்கமாக் நடனமாடினால், மின்சாரம் பாயும்... நாம் சொல்வது அந்த மின்சாரம் அல்ல...
பலர் நடனமாடும்போது, தரையில் ஏற்படும் அதிர்வை மின் ஆற்றலாக மாற்றும் தொழில் நுடபம்..பாலங்களில், சாலைகளில் ஏற்படும் அதிர்வுகளை பயன்படுத்தலாம்//
சோதனை முரையில் சில இடங்களில் செய்து பார்த்தனர்.. மின்சாரம் உண்டாகிறது..ஆனால் செலவு அதிகம்...
போக போக , செலவு குறையலாம்ம்

( தொடரும் )

ஜெர்மன் செய்வது சரியே - நண்பர் மாணிக்கத்தின் மாற்று பார்வை


ஜெர்மனி கலாச்சாரத்தை பழகி கொண்டு இருப்பதானால் இருங்கள்..இல்லையேல் வெளியேறுங்கள் . பல கலாச்சாரங்கள் ஒன்றாக இருக்கும் தமாஷ் வேண்டாம் என்ற மன நிலை ஜெர்மனியில் தோன்றி இருப்பதை குறித்து என் கவலையை தெரிவித்து இருந்தேன்..
மற்றவரை ஏற்றுக்கொண்டு வாழவதுதான் நல்லது ..இன்றைய உலகில் அதுதான் அமைதிக்கு நல்லது..ஒவ்வொருவரும் தம் மொழி , இனம் சிறந்த்து என மற்றவரை அதை ஏற்க வற்புறுத்தினால் ஆபத்து என நினைக்கிறேன்..
செய்தியை மட்டும் படித்து நான் சொன்ன கருத்து அது.. ஆனால் அனுபவ ரீதியாக , ஆழந்த சிந்தனையுடன், பதிவர் க்க்கு – மாணிக்கம் பின்னூட்டம் இட்டு இருக்கிறார்..
அவர் கருத்தை ஏற்கிறோமோ இல்லையோ, அவரது வித்தியாசமான பார்வையை நாம் தெரிந்து கொள்வது நமக்கு நல்லது என்பதால் அதை தனி பதிவாக இடுகிறேன்..
இது அவரது கருத்து மட்டுமே... என் கருத்து அல்ல... அவர் கருதுடன் எனக்கு சிலவற்றில் உடன்பாடு இல்லை.. விரிவான விவாதம் தேவை
ஒரு பின்னூட்ட்தை இவ்வளவு ஆழ்ந்த சிந்தனையுடன், தன் அனுபவத்தை கலந்து எழுதிய அவர் எழுத்துக்கு தலை வனங்குகிறேன் ..
இதை முரண்பாடாக எண்ணாமல் கலந்துரையாடலாக எடுத்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்

இனி வருவது அவர் கருத்து

***********************************
கக்கு - மாணிக்கம் said...

ஜெர்மனி ஜெர்மனியருக்கே என்று அந்நாட்டு ஆட்சியாளர் சொல்வதில் என்ன தவறு? இந்திய காலாசாரம்தான் சிறந்து என்று இந்தியர்கள் சொல்வார்கள்தானே?

இந்தியா இந்தியர்களுக்கே என்றால் கூட அதுவும் தவறா? இந்தியாவையும் ஜெர்மனியையும் இந்த தலைப்பை எடுத்துகொண்டு ஒப்பிடுவது தவறு.

சுதந்திரம் அடைந்த பின்னர் நம் நாட்டிற்கு எந்த அந்நியரும் பிற நாட்டவரும் வேலைகாகவோ அல்லது பிழைகவோ , தங்கள் நாட்டு அடக்கு முறைகள் வெறுத்து அகதிகளாகவோ கூட வரவில்லை. (இலங்கை தமிழர்களின்/அகதிகளின் நிலை வேறு.)

ஜெர்மனியில் பிற தேசத்துமக்கள் அணைவரும் வசிகின்றனர். தமிழர்களும் கூட உண்டு. அவர்கள் சிறுபான்மை எண்ணிக்கைதான். சென்ற முப்பது வருடங்களாக நிறைய அரபு நாட்டினர் அங்கு குடியேறி வசித்து வருகின்றனர்.குறிப்பாக சவூதி அரபிய நாட்டினர். அந்நாட்டு குடி உரிமையும் பெற்றுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகியுள்ளது. அதாவது இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அதற்கே உண்டான பக்க விளைவுகளும் அங்குண்டு. மசூதிகளின் எண்ணிகையும் அதிகமாகி வருகிறது. பின்னர் அந்நாடு ஒரு இஸ்லாமிய நாடாக அறிவிக்கப்படும் சந்தர்பம் உள்ளது. இப்பவே தங்களின் மதம் சார்ந்த சட்டமான ஷரியத்தை மட்டும் பின்பற்ற அவர்கள் தீவிரமாக முயற்சி எடுகின்றனர்.

படித்துகொண்டு பகுதி நேர வேலை பார்க்கும் பல ஜெர்மானிய இளைஞர்கள் அணைவருக்கும் தற்போது அங்கு நிகழும் சூழல்கள் வெறுப்பை தந்துள்ளன. நான் முன்பு பயிற்சிக்காக சென்றிருந்தபோது தங்கியிருந்த ஹோட்டலில் மாலை நேரங்களில் வந்து பணியாற்றும் பல படித்துக்கொண்டு இருக்கும் இளையவர்கள் "பிறநாட்டவர்கள் தங்களின் வேலை வாய்ப்பை எடுத்துக்கொள்வதாக " கூறுகின்றனர்.

இதற்கு என்ன சொல்வீர்கள்? இதே நிலை இங்கு இந்தியாவில் நிலவினால் ஏற்றுகொள்வீர்களா? ஆனாலும் அதுவும் நடந்து கொண்டுள்ளது. பிற நாட்டு தெழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் அரபு நாடுகளில் அவர்கள் எல்லாம் எப்படி நடத்தபடுகிறார்கள் என்றாவது தெரியுமா?
அவர்கள் எல்லாம் தம் மதம் பரப்பவும், குடியுரிமை கேட்டும் போராட்டமா செய்கிறார்கள்? அரபு நாடுகளில் அல்லது எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலாவது நீங்கள் ஒரு அடி மண் கூட வாங்க இயலாது. நீங்கள் ஒரு முசல்மானாக இருந்தாலும் கூட இதே விதிதான். அவ்வளவு ஏன் ? எல்லாரும் கொண்டாடும் "நம்ம ஊர்" காஷ்மீரில் ஒரு அடி நிலம் வாங்க எந்த இந்தியனாலும் இயலுமா?
நான் சொல்லுவதெல்லாம் இதுதான்; உள்ளூர் கதையே நாறிகிடக்க, நமக்கு ஏன் ஜெர்மனி பற்றி கவலை?

இன்னுமொன்று. நாம் தான் இன்னமும் அந்த ஹிட்லரை கட்டிக்கொண்டு அழுகிறோம் வேறு வழி வழி இல்லாமல். இன்றுள்ள ஜெர்மானிய தலை முறையினர் ஹிட்லரை ஒரு மன நலம் குன்றிய மனிதனாக எண்ணியே புறம் தள்ளுகின்றனர்.

இது ஒரு கலந்துரையாடல் என்ற அளவில் மட்டுமே கருதப்படவேண்டும் அன்றி சண்டை போடும் முயற்சியாக இல்லாமல் இருக்க விழைகிறேன்.

ஹிட்லர் பாதைக்கு திரும்புகிறதா ஜெர்மனி?வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் வீண் பேச்சு.. ஜெர்மனி கலாச்சாரம்தான் சிறந்த்து என ஜெர்மன் அதிபர் அறிவித்து இருப்பது , ஜெர்மன் மீண்டும் ஹிட்லர் கால ஃபாசிச பாதைக்கு திரும்புகிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
பல நம்பிக்கை, கலாச்சாரம் கொண்ட மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்வது அழகானது... ஒரே மாதிரி இருந்தால் போரடிக்கும் என இயற்கையே இப்படி அமைத்து வைத்து இருக்கிறதோ என்று கூட தோன்றும்..
ஆனால் பாசிச வாதிகள் எல்லா இட்த்திலும் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக கிறிஸ்தவர்கள் நட்த்தும் தொழிற்சாலைகளில் கூட , மற்றவர் நம்பிக்கைக்கும் மதிப்பளித்து நேற்று ஆயுத பூஜை கொண்டாடினார்கள்.. அந்த் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கிறிஸ்தவ்ர்கள், தமக்கு உதவும் கருவிகள், ஆயுதங்களுக்கு மரியாதை செய்கிறோம் என அதை எடுத்து கொண்டார்கள்.. சாமி கும்பிட அவர்களை இந்துக்களும் வற்புறுத்தவில்லை.. ஆனாலும் ஒன்றாக கொண்டாடி, பிரசாதங்களை இந்துக்களும், அதை தொழிற்சாலை தரும் இனிப்பாக , உணவாக கிறிஸ்தவர்களும் எடுத்து கொண்டார்கள்..
இதே போல கிறிஸ்தவ நம்பிக்கை இல்லாத இந்துக்களும் , கிறிஸ்துமஸில் உற்சாகமாக கலந்து கொள்வது இயல்பு..
ஆனாலும் ஒரு சிலர், எனக்கு சாமி நம்பிக்கை இல்லை.. நீயும் கும்பிட கூடாது என தம் விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பவ்ர்களும் உண்டு..ஆனால் இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதால், பெரிய பிரச்சினைகள் இல்லை..
ஆனால் ஜெர்மனியை பொருத்தவரை, என் கலாச்சாரம்தான் சிறந்த்து..மற்றவரை கொல் எனும் ஹிட்லரின் ஃபாசிசம் பெரிய வரவேற்பு பெற்று இருந்த்தும், அதனால் ஏற்பட்ட அழிவுகளும் பழைய கதை..
ஆனால் வரலாறு திரும்புகிறது என்ற கதையாக, வேற்றுமையில் ஒற்றுமை என்பது ஜெர்மனியில் தோல்வி அடைந்து விட்ட்து..மீண்டும் ஜெர்மனி ஜெர்மானியருக்கே என்ற பாதைக்கு திரும்ப வேண்டும் என அதன் அரசு தலைவர் ( நம்ம ஊர் பிரதமர் பதவிக்கு இணையான் பதவி ) அங்கீலா மேக்க்ள் (Angela Merkel) அறிவித்து இருப்பது அங்கு இருக்கும் சிறுபான்மை இன , மொழி மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது..
மற்ற மக்களால் , ஜெர்மன் மக்களின் வேலைவாய்ப்பு பாதிக்க படுகிறது என்று பரவலான கருத்து அங்கே உருவாக்கி வருகிறது- அல்லது உருவாக்கப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது கட்சி கூட்ட்த்தில் பேசிய அவர் , “ 1960 களில் வெளி நாட்டினர் இங்கே வர அனுமதிக்க தொடங்கினோம்.. வேலை முடிந்த்தும் சென்று விடுவார்கள் என நம்மை நாமே ஏமாற்றி கொண்டோம்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. சரி, அனைத்து இன மக்களும், இணைந்து வாழ்வோம்.. வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என எண்ணினோம்.. ஆனால் அது தோல்வி அடைந்து விட்ட்து..
இதை முறைப்படுத்த வேண்டும் என பேசி இருக்கிறார்..
பலர் இணைந்து செயல்படுவ்தால்தான், ஜெர்மனி அபார முன்னேற்றம் கண்டு வருகிறது.. எனவே வெளி நாட்டினர் குடியேறுவது ஜெர்மனிக்கு நல்லதுதான்..அதை அவரும் அறிவார்..
ஆனால் தேர்தல் வர இருப்பதால் இப்படி பேசுகிறார் என்கின்றனர் பார்வையாள்ர்கள்..
தற்காலிக லாபம் தரும் துவேஷ பேச்சுக்கள்தான், நீண்ட கால தீமையை ஏற்படுத்துகின்றன என்பதுதான் வரலாறு.
ஆனாலும் அரசியல்வாதிகள், எல்லா இட்த்திலும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்பதை அறியும்போது , ஒருவித மகிழ்ச்சி ஏற்பட்த்தான் செய்கிறது

Saturday, October 16, 2010

கொடி அசைந்த்தும் மின்சாரம் வந்த்தா ? அசத்தும் தொழில் நுட்பம் !

கொடி அசைந்த்தும் காற்று வந்த்தா,,, காற்று வந்த்தால் கொடி அசைந்த்தா என்பது ஒருபக்கம் இருந்தாலும் , கொடி அசைவதால் மின்சாரம் உருவாக்க முடியும் என்கிறது ஒரு அமெரிக்க் நிறுவனம்..

இது இயற்கையான கொடி அல்ல... மின்சாரம் தயாரிப்பதற்கென்றே உருவாக்கப்படும், 180 அடி உயரமுள்ள கார்பன் ஃபைபர் தண்டுகள்... உரமான புல் போல இருக்கும்.. காற்றில் இவை அசையும்போது மின்சாரம் உருவாகும்..

காற்றாலைகளை பார்த்து இருப்பீர்கள்.. பெரிய மின்விசிறி போல இருக்கும்.. காற்றில் இது சுற்றும்போது மின்சாரம் உருவாகும்... இது நல்ல முறைதான் என்ராலும், உராய்வால் ஏற்படும் மின் இழப்பு , சத்தம், மெயிண்டன்ன்ஸ் வேலைகள் என சில பிரச்சினைகளும் உள்ள்ன.. ( தென் மாவட்டங்களில் இவற்றின் பயன்பாடு அதிகம்.. )

windstalk-825x525 

1 புதிய தொழில் நுட்பம்..

 

windstalk-park-825x425

2 சுற்ற வேண்டாம்.   அசைந்தால் போதும்

 

 

 windmill

3 . தற்போதுள்ள காற்றாலை

இந்த பிரச்சினைகள் இல்லாமல் மின்சாரம் தயாரிக்க இந்த புதிய முறை உதவும்..

கிட்ட்த்தட்ட 60 அடி அகலமுள்ள கான்கிரீட் அடித்தளத்தில் இந்த மாபெரும் உயரமுள்ள கார்பன ஃபைபர் “ புல் “ நடப்படும் .. 180 அடி உயரமுள்ள , இது போன்ற 1200 புல்கள் தேவை ..

காற்றினால் அசையும்போது மின்சாரம் உண்டாகும்... இயக்க ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் ஜெனரேட்டர்கள் ஒவ்வொரு புல்லின் அடியிலும் பொருத்தப்பட்டு இருக்கும்..

சத்தம் இல்லாமல் மின்சாரம் உருவாகும், புல்லின் எண்ணிக்கையை , அடர்த்தியை அதிகரித்து , அவுட்புட்டை அதிகரித்து கொள்ளலாம் போன்று பல அனுகூலங்கள் உள்ளன..

இதே போன்ற அமைப்பை கடலுக்கு அடியில் பொருத்தி , நீரோட்ட்த்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியும் நடந்து வருகிறது..

சோதனை நிலையில் இருக்கும் இந்த ஆய்வுகள் நடைமுறைக்கு வரும்போது , மின்சார தேவைகள் பெருமளவில் பூர்த்தி செய்யப்படும் வாய்ப்பு இருக்கிரது..

அதுவரை, மின் தடையை சகித்து கொள்ள வேண்டியதுதான்...

Friday, October 15, 2010

பரப்பெழுத்து- பிரத்தியேக படங்களுடன் விவாதம் – வயது வந்தோருக்கு மட்டும்

இனிய பதிவர் பிச்சைக்காரனுக்கு...

பரப்பெழுத்து பற்றி பரபரப்பாக எழுதி இருந்தீர்கள்...பரப்பெழுத்து என்ற வார்த்தை பிரயோகம் சரியா என்பது என் கேள்வி.. பிரச்சாரம் என்பதை வேண்டுமானால் பரப்பெழுத்து என சொல்ல்லாம்.. பாப்புலர் எழுத்து என்பதற்கு மாற்றாக பரப்பெழுத்தை எப்படி பயன்படுத்த முடியும் ?

சைலஜா, தமிழ் வளர்ச்சி துறை, ஆர்ட்டிகா..

அன்புள்ள சைலஜா..

பரப்பெழுத்து குறித்த விவாத்த்தில் உங்கள் கருத்து பொருட்படுத்த தக்கதல்ல.. உங்கள் கருத்தை வைத்து விவாதம் செய்யும் அளவுக்கு ஒரு கருத்து சொல்ல வேண்டுமானால் பயிற்சி தேவை..அது உங்களிடம் இல்லை..

ஆனாலும் என் கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்..

ஒரு எழுத்து பிரபலமாக இருக்க வேண்டும் என்றால் , அதை மக்கள் விரும்பவேண்டும்.. பிரச்சாரம் என்பதை மக்கள் விரும்பாமல் போக வாய்ப்புண்டு..அது பரவலாக மக்களை அடையாமல் போக கூடும்.. எனவே அதை பரப்பெழுத்து என சொல்ல முடியாது..

எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் , தப்பும் தவறுமாக எழுதப்படும் எழுத்துக்கள், பாலங்களுக்கடியில் பல்வேறு துர் நாற்றத்தை சகித்து கொண்டு எழுதப்படும் எழுத்துக்கல், கழிவறை சுவரில் எழுத்தப்படும் எழுத்துக்கள் ஆகிவைதான் மக்களை ரசிக்க தூண்டுகின்றன...

எனவேதான் சோவியத் கலை சொற்களிடம் இருந்து கடன் வாங்கி இதற்கு பரப்பெழுத்து பெயர் வைத்தேன்..

பரப்பெழுத்து ரசிகர் ஒருவர் முக்கிய்மான கருத்தை முன்வைத்தார்.. பரப்பெழுத்தை உருவாக்குவது யார் என கண்டு பிடிக்க முடியாது என்பது அவரது அபார கண்டுபிடிப்பு..

தனக்கு பாராட்டு கிடைக்காது என தெரிந்திருந்து ம், அந்த முகம் தெரியாத எழுத்தாளர்கள் தம் பணியை செவ்வனே செய்வது பாராட்டுக்கு உரியது...

lib1 lib2 parapp paraopo

 

 

 

 

1. பறந்த அறிவை பெற நூலகம் உதவுகிறது…

         அறிவு எப்படி பறக்கும்? பரந்த அறிவை சற்று மாற்றி நகைசுவை ஏற்படுத்துவது எழுத்தாளரின் திறமை..

2. நூல்களால் நைந்த , நேயங்கள் தைப்போம்..

நூல்களால் , நேயம் எப்படி நைந்து போகும்… நைந்த நேயத்தை நூல்களால் தைப்போம் என்பதுதான் இப்படி மாறி இருக்கிறது என்பதை சொல்லி தருவதுதான் இலக்கியம்

3. இங்கு சுத்தம் செய்யாதீர்கள்..

அசுத்ததின் “அ “ வை அழித்தது, பரப்பெழுத்து திறன்

4 பரப்போவியம்

 

5. பின் நவீனத்துவ பரப்பெழுத்தை ரசிக்கும் பக்குவம் இன்னும் நம் மக்களுக்கு வரவில்லை என்பதால், படங்களை சென்சார் செய்து விட்டு கருத்தை மட்டும் தருகிறேன்…

 

அ. உலகிலேயே விபச்சார தொழிலில் மட்டும்தான், அனுபவம் இல்லாதவருக்கு டிமாண்ட் அதிகம்..

ஆ. ஒரு விபச்சர விடுதி வாசகம் : இங்கு திருமணமானவர்களுக்கு அனுமதி இல்லை… தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம்.. ஆசைகளை அல்ல

இ பெருங்காற்றில், அழகு பெண்ணின் ஆடை விலகினால், அதிர்ஷ்டம்.. அதே காற்றில் உன் கண்ணில், அதே நேரம் தூசி விழுந்தால்., துரதிஷ்டம்..

ஈ நானோ காரின் இரு பிரச்சினைகள்.. கர்ப்பிணி பெண்ணை அதில் உட்கார வைக்க முடியாது.. ஒரு பெண்ணை கர்ர்ப்பிணி ஆக்க அந்த காரில் முடியாது

சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )

 

சட்டசபையில் இருந்த அனைவரும் நம்ப முடியாமல் திகைத்தனர்.. நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்ட்து..

ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து அரசு தப்பிக்கும் என்று ஒரு குழந்தை கூட நம்பி இருக்காது..

220 பேர் கொண்ட சட்ட சபையில் , 150 எம் எல் ஏக்களுடன் மெஜாரிட்டியாக இருந்த அரசு , 60 பேர் பிரிந்து சென்றதால் சிக்கலுக்கு உள்ளானது..

அவர்களை கட்சி தாவல் தடை சட்டம் எதுவும் செய்ய முடியாது.. கட்சி உறுப்பினரில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து சென்றால் அது கட்சி பிளவாக கருதப்ப்படும்.. கட்சி தாவல் அல்ல...

பேரம் பேச வழியில்லாமல் அனைவரும் வெளி நாடு சென்று விட்டு வாக்களிக்கும் தினம் நேரடியாக சட்டசபைக்கு வந்தனர்,,,

எனவே அரசு கண்டிப்பாக கவிழும் என டி வி சானலகள் முடிவு செய்து மாற்று அரசு குறித்து ஊகங்கள் வெளியிட ஆரம்பித்தன..

விவாதம் தொடங்கியபோது, எதிர்கட்சியை விட காட்டமாக பேசினார்கள் கட்சி மாறிகள்.

முதல்வர் தவறிழைக்கிறார்.. பதவி விலகுதல் அவர் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும் என்றனர்..

கடைசியில் முதல்வர் பேசினார்..

எப்போதும் அமைதியாக இருக்கும் அவர் , கைகளை ஆட்டியும்., மேஜையை குத்தியும் ஆவேசமாக பேசினார்..

மக்கள் என்றும் என் பக்கம் என் சூளுரைத்தார்..

கடைசியில் வாக்கெடுப்பு...

குரல் வாகெடுப்பு அல்ல.. அனைவருக்கும் எலெக்ட்ரானிக் மெஷினில் வாக்களிக்கலாம். முடிவு உடனே தெரியும்..

எதிர்கட்சியினர் பட்டாசு வெடிக்க ஆயத்தமானார்கள்..

ஆளுங்கட்சியினருக்கு சுரத்தே இல்லை... துரோகிகளை திட்டி அறிக்கை விட ஆயத்தமானார்கள்..

முடிவு திரையில் வந்த்து..

சபா நாயகரே திகைத்து விட்டார்...

அரசுக்கு ஆதரவு – 150

எதிர்ப்பு - 70

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி..

அரசு பிழைத்தது...

யாராலும் நம்ப முடியவில்லை... முதல்வர் மட்டும் அமைதியாக இருந்தார்..

********************************************************************************8

“ உன் புன்னகை, பொன் நகையாக ஒளி வீசுதே.. ப்ளீஸ்.. ஒண்ணே ஒண்ணு இச்சு கொடேன் “ வழக்கமான காதலன் போல கெஞ்சினான் சிவா..

” எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் “ பழைய கால காதலிகள் போல பிகு செய்தாள் காமினி...

” இந்த சட்டசபை மேட்டரை முடிச்சுட்டு , உடனே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க போறேன் “

“ ஆமாம்பா.. இந்த மேட்டர்ல என்ன மாயாஜாலம் நடந்த்து,, ஒன்னும் புரியல.. இதை மட்டும் கண்டு பிடிச்சா, தேசிய அளவுல பரபரப்பு ஏற்படும் . ஆனா நீ வேலை வேலைனு அலைய்றது எனக்கு சுத்தமா பிடிக்கல“

சிவா ஒன்றும் பேசாமல் சட்டசபை விவாதங்களை டிவிடி யில் பார்த்துகொண்டிருந்தான்..

வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஆவேசமாக பேசுவது கவனத்தை கவர்ந்த்து,,,

கையை ஆட்டி பேசுவது அதீதமான நாடக பாணியில் இருந்த்து..

அவர் பேச பேச , அதிருப்தி கோஷ்டி தலைவரின் முகம் மாறுவது இன்னும் ஆச்சர்யம் அளித்த்து.. முதல்வரின் பேச்ச்சை கேட்டு மனம் திருந்துகிறார் என நினக்க அவன் அப்பாவி அல்ல..

மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தான்.

திடீரென மின்னல் வெட்டியது,..

“ காட்..இப்படியும் நடக்குமா ? “ அதிர்ந்தான்..

“ காமினி.. ஆள் சிக்கிட்டார்” கூச்சலிட்டான்..

“ என்ன ஆச்சு ? “

“ முதல்வரின் கை , அதிருப்தி தலைவரை நோக்கி சைகை செய்வதை பார்த்தாயா ? “

காமினியும் கவனித்து விட்டாள்..” அவர் கையில் அணிந்திருக்கும் உலகிலேயே காஸ்ட்லியான வைர மோதிரத்தையும் கவனித்தேன் “

******************************************************************************

அதன் பின் அடுத்த நடவடிக்கைகளை திட்டமிட்வது மளமள வென நடந்த்து..

” உலகிலேயே புகழ் பெற்ற வைரம் மயிலாசனத்தில் இருந்து துண்டாடப்பட்டவைதான்.. அது முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து விடைபெற்றது.. அதன் பின் பல கை மாறி அது எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்த்து... சிறிய துண்டு கிடைத்தால் கூட கோடிக்கணக்கில், நம்பவே முடியாத தொகைக்கு விலை போகும்..

இந்த நிலையில்தான் வெளினாட்டு அதிபர் ஒருவர் பரிசாக முதல்வருக்கு அதை அளித்தார்,,, ஆனால் அது அரசுக்குதான் சொந்தம்.. முதல்வர் என்ற முறையில் மட்டும் அதை அவர் பயன்படித்தி கொள்ளலாம்.. பதவி முடிந்த்தும் அரசிடம் ஒப்படைதுவிட்டு செல்ல வேண்டியதுதான்..

ஆனால் இதை ஆட்டையை போடுவதில்தான் முதல்வருக்கும் , உள்துறை அமைச்சருக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பில் முடிய இருந்த்து..

ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் சுதாரித்துகொண்டார்..

சட்டசபை உரையில் பேசும்போது ‘ என்னை நம்பிய மக்களை கைவிட மாட்டேன்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் “ என சாடையாக பேசி, ஆக்‌ஷனையும் காட்டி காரியத்தை நிறைவேற்றி கொண்டார்..

இப்போது நாம் செய்ய வேண்டியது, அந்த வைரம் அரசு கருவூலத்தில் இல்லை என நிரூபிப்பதுதான், அந்த வைரம் உள்துறை அமைச்சர் வசம் இருந்தால் அதை திருடினாலும் தவறில்லை...

ஆளுனர் பரந்தாமன் நேர்மையானவர்.. அவரிடம் இந்த ஆதாரத்தை காட்டினால் போதும் .. அவருக்கு இந்த சந்தேகம் உண்டு .. ஆனால் ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் ”

மூச்சு விடாமல் பேசி முடித்தான் சிவா..

ஒரு நிருபரை காதலித்த்து தவறோ என நினைக்க தொடங்கினாள் காமினி..

*************************************************************************************

” ஆமா காமினி... நான் உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்.. ஆனால் நீ ஒரு நிருபனை காதலிச்ச,, அவன் உன்னை விட வேலையைத்தான் முக்கியமா நினைக்கிறான்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. என் இதய வாசல் உனக்காக திறந்துதான் இருக்கு “

கல்லூரி நண்பன் விமல் உருகி பேசுவதை உணர்ச்சி எதையும் காட்டாமல் கவனித்தாள் காமினி...

“!புதிய மனிதா ..பூமிக்கு வா “ செல்போன் கொஞ்சியது.. சிவாதான்,,,

“ காமினி... முக்கிய்மான விஷ்யம்.. இப்பத்தான் தெரிய வந்த்து.. உள்துறை அமைச்சரிடம் இருந்து வைரம் திருடு போயிருச்சு.. சிலரை சந்தேகப்பட்றாங்க.. ஆனால் திருடனுக்கு தேள் கொட்டுன கேஸ்..

விஷ்யத்தை வெளியே சொல்லாம போலிஸ் தேடுது.. அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.. ஏதாவது துப்பு கிடைத்தா சொல்லு..

அரசு சொத்தான வைரம் தொலைந்த்தை , ரிக்கார்டில் காட்டாத்து பெரிய குற்றம்.. இதை கிண்டினா பல மேட்டர் வெளியே வரும் “

பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான் சிவா..

” என்ன டியர்,,,எனி பிராப்ளம் “ என விமல் கேட்ட்தும்தான் , அவனும் உரையாடலை கேட்டு இருப்பான் என்பது அவளுக்கு புரிந்த்து..பரவாயில்லை.. பாதகம் இல்லை... அவன் உதவ கூடும்..

சுருக்க்மாக சொன்னாள்..

அவனுக்கு பல தொடர்புகள் உண்டு.. எனவே அவனுக்கு இது ஆச்சர்யமாக இல்லை..

மாறாக அவன் சொன்ன தகவல், காமினிக்கு ஆச்சர்யம் அளித்த்து.. யோசிக்க தொடங்கினாள்..

****************************************************************

” ஹலோ ..இன்ஸ்பெக்டர்... நான் காமினி பேசறேன்.. அமைச்சரோட பி ஏ தான் வைரம் திருடி இருக்கான்.. இதை வைத்து பிளாக் மெயில் அரசியல் செய்வது அவன் திட்டம்... சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க.. உண்மை தெரிஞ்ச எனக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்க “

அவசரமாக பேசி முடிக்கவும், சிவா அவள் அறைக்கு வரவும் சரியாக இருந்த்து..

“ சபாஷ்... சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பாதேனு சொன்னது சரிதான்... உனக்கு தெரிஞ்ச விஷய்த்தை எனக்கு சொல்லாம போலிசுக்கு சொல்றியா..துரோகி,,”

அவள் விளக்கம் அளிப்பாள் என நம்பியதற்கு மாறாக, அவள் புயல் போல வெளியே ஓடினாள்...சுதாரிப்பதற்குள் , ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து விட்டாள்.

“ ஏய் .. நில்லு “ ஓடினான் சிவா

**************************************************************************

சென்னையின் முக்கியமான இட்த்தில் இருக்கும் மருத்துவமனை...

” அய்யோ..அவள் இப்ப்டி பேய் போல வண்டியை கிளப்பும்போதே நினைத்தேன்..ஏதாவது ஆகும் என்று... விபத்தில் சிக்கி விட்டாளாமே... என் வண்டி பஞ்சர் ஆனதால் தொடர முடியவில்லை “ புலம்பினான் சிவா..

“ விமல்னு ஒருத்தர் தான் வந்து அவங்களை அட்மிட் செஞ்சாரு,,, இப்ப பரவாயில்லை சார் “ நர்ஸ் சொல்ல “ விமல்..ம்ம்ம்.. அவன் தான் அவளின் மன மாற்றத்துக்கு காரணமா ..? “ பல்லை கடித்தான் சிவா..

“ மிஸ் காமினி.. உங்க பல் டேமேஜ் ஆயிடுச்சு .. வேற ஒண்ணும் பெரிய பிராப்ளம் இல்ல,,, “

டாக்டர் சொன்னார்.

“அமைச்சரோட கார் டிரைவர் எப்படி இருக்கார் ? “ சைகையில் காமினி கேட்டாள்..

” சாரி,,காப்பாத்த முடியல.. ஒகே காமினி... நான் கிளம்புறேன் “ டாக்டர் கிளம்பினார்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********************************************************************

“ என்ன ..காமினியை காணோமா... “ அதிர்ந்தான் சிவா..

” காதலனை பார்க்க போய் இருப்பா” விமல் வீட்டை நோக்கி சிவாவின் கார் சீறியது..

வீட்டில் விமல் இல்லை.. ஆனால்....

... காமினி இருந்தாள்... வாயில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்த்து..

பல்லை கடித்தான் சிவா..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.”

”ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க” அவள் கண்கள் கெஞ்சின..

“ சாவுடீ நாயே” அவன் விசையை அழுத்தும் முன், போலிஸ் நுழைந்தது..

சட் என துப்பாக்கியை மறைத்தான் சிவா..

“ மேடம்.. உங்க உயிரை பணயம் வைத்து துப்பு கொடுத்தீங்க... நன்றி... ஆனால் அந்த பி ஏ வைரம் திருடல.. சும்மா நகை, பணம்னு திருடி இருக்கான்.. எனிவே அவனை கைது செஞ்சுட்டோம்..

வைரம் பத்தி துப்பு கிடைத்தாலும் சொல்லுங்க.. யாருக்கும் பயப்படாதீங்க.. உங்க பாதுகாப்புக்கு போலிஸ் இருக்கும் “

” அரசுக்கு எதிராக சதி செய்வதை தடுக்குமாறு கவர்னரிடம் மனு கொடுக்கனும் .. அவர் அப்பாயின்மெண்ட் கூட இருக்கு “ காமினி எழுது காட்டினாள்..

“ இவங்களை போலிஸ் பாதுகாப்போடு அழைத்து போங்க “: உத்தரவு வர, போலீஸ் ஜீப் கவர்னர் மாளிகை நோக்கி விரைந்த்து.. காமினியுடன் சிவாவும்...

ஆளுனர் பரந்தாமன் அன்புடன் வரவேற்றார்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“ அவங்க பாதுகாப்போட்த்தான் வர்றேன்” காமினி வாய்திறந்து பேச ஆச்சரியமாக பார்த்தான் சிவா,,

“ என்ன அப்படி பார்க்கறீங்க,,, என் நண்பன் விமலும் வைரத்தை கைப்பற்ற முயன்று இருக்கான்,, உங்களை விட பெரிய ஆள் ஆகணும்ங்ற வெறி..

அமைச்சரோட கார் டிரைவர் மூலம் திருடி இருக்காங்க.. ஒரு ஆக்சிடண்ட்ல அவன் மாட்டி உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தான்..அதே ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி , டாக்டர் உதவியோட டிரைவரிடம் இருந்த வைரம் என் கைக்கு வந்துடுச்சு..

போலிஸ் கவனத்தை திசை திருப்ப, துப்பு கொடுக்குற மாதிரி பி ஏ வை போட்டு கொடுத்தேன்,,

விமலோ , நீங்களோ இன்வால்வ் ஆக முடியாது,, ஏன்னா , போலிஸ் பார்வை உங்க மேலையும் இருக்கு. சோ, நானே இதை செஞ்சு முடிச்சேன் “

அவள் புன்னகைக்க, அவள் புன்னகை பொன் நகையாக இல்லாமல், வைர நகையாக , ஜொலித்தது.. வைர பல்லை கழட்டி ஆளுனரிடம் கொடுத்தாள் காமினி...

ஆதலினால் காதல்செய்வீர்; உலகத்தீரே (‘சவால் சிறுகதை’ )

காமினியின் புத்தகத்தில் இருந்து விழுந்த அந்த பேப்பர் , சிவாவின் கண்களை கவர்ந்தது..

அதில் ஏதோ விஷ்யம் இருக்கிறது.. அவன் போலீஸ் மூளை அபாய ஒலி எழுப்பையதை மதித்து அந்த பேப்பரை எடுத்தான்..

என் இதயமே... இன்னும் எத்தனை நாள் நாம் பிரிந்து இருப்பது...

நான் ஒரு மெழுகு வர்த்தி...

நீ வந்து அணைக்கும் வரை

அழுது கொண்டே இருப்பேன்..

 

உன் நினைவில் உயிர் வாழும்,

உன் உயிர் “

படித்து முடித்த்தும் சிவாவின் ரத்தம் கொதித்த்து..

ஒரே தங்கை என அன்பை கொட்டி வளர்த்தால் , என்னையே ஏமாற்றுகிறாளா? அவளுக்கு என மாப்பிள்ளை பார்த்து , எல்லாம் கூடி வரும் நேரத்தில் லவ்வா?

அந்த மாப்பிள்ளைக்கு இவள் புகைப்பட்த்தை பார்த்தே பிடித்து விட்ட்து..எப்ப கல்யாணம் என அவசரப்படுகிறான்.. அவன் வீட்டாருக்கும் பரம திருப்தி..

மாப்பிள்ளை வீட்டார் என்ன நினைப்பார்கள்.. அட்லீஸ்ட் இதை முன்பே சொல்லி இருக்கலாமே..

நல்லவனை காதலித்து இருந்தால் நானே முடித்து வைத்து இருப்பேனே.. காதலுக்கு நான் எதிரி இல்லையே...

போலிஸ்கார இதயத்திலும் காதல் கசியும் என்பது ஷீலாவை கேட்டால் தெரியுமே... இது போல எத்தனை கடிதங்கள் அவளுக்கு எழுதி இருப்பேன்..

**************************************************************************************

மறுபடியும் சிவாவிடமிடம் இருந்து இ மெயில்..

ஷீலா தலையை பிடித்து கொண்டாள்.. தலைவலி...

” நான் உன்னை விரும்புகிறேன்.. நீயும் என்னை விரும்பியே ஆக வேண்டும்” இதுதான் கடிதங்கள் , மெயில்கள், எஸ் எம் எஸ் அனைதுக்குமான் ஒரே பொது மொழி.. வேறு வேறு வார்த்தைகளில் இதைதான் சொல்கிறான்..

விருப்பமின்மையை பல முறை சொல்லியும் புரிந்து கொள்ள மறுக்கிறான்..

காதல் என்பது மற்றவர் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளுதல்.. எதிர்பார்ப்பின்றி அன்பு செலுத்துதல் என புரிந்து கொள்ளாமல், மிரட்டுகிறான்.. என்னை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்ய நினைத்தால், உன் குடும்பம் அனைவரையும் , பொய் வழக்கு போட்டு உள்ளெ தள்ள முடியும்

**************************************************************************

“ ஆமாண்ணா.. நான் ஒருவரை காதலிக்கிறேன் ,,.. அவரைத்தான் திருமனம் செய்ய விருப்பம்... இதை நீங்கள் ஏற்கத்தால் , தற்கொலை செய்து கொள்கிறேன் “

கடித்த்தை பார்த்த உடனேயே , காமினியை மருதுவ மனையில் சேர்த்த்தால், உயிருக்கு ஆபத்து வரவில்லை...

எதேச்சையாக வீட்டுக்கு வந்த பழைய பள்ளி ஆசிரியர் பரந்தாமன் தான் பேருதவியாக இருந்தார்..

“ ரொம்ப நன்றி சார்.. ஆமா என்ன விஷ்யமா வீட்டுக்கு வந்தீங்க..?’

சிவா அன்புடன் கேட்டான்.

“ என் பையன் கல்யாண விஷ்யமா பேச வந்தேன் பா.. சரி இன்னொரு நாள் பேசலாம் “ விடை பெற்றார்..

அந்த மருதுவ மனையில் நர்ஸ் ஆக பணியாற்றும் ஷீலா அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து சுறுசுறுப்பாக பனியாற்றிய நேர்த்தி சிவாவை கவர்ந்த்து...

 

தன் செல் போன் மெசேஜை அப்போதுதான் ஷீலா பார்த்தாள்.

“ இனியும் என்னால் காத்து இருக்க முடியாது... நாளை உன் வீட்டுக்கு வந்து நிச்சயம் செய்ய போகிறேன்.. நீயோ குடும்பத்தாரோ எங்கும் போக முடியாது.. வீட்டை சுற்றிலும் என் ஆட்கள் இருக்கிறார்கள் “

அதிர்ந்தாள்..

காமினியை சோதித்த டாக்டர் , திருப்தியுடன் அந்த இட்த்தை வீடு அகன்றார்.. நாளை டிஸ்சார்ஜ் செய்து விடலாம்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

” நீ இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்க்றது எனக்கு பயமா இருக்குமா.. உன் அண்ணனை எதிர்த்து இந்த கல்யாணம் நடக்காது மா.. என் பையனும் எங்க குடும்பமும் கொடுத்து வச்சது அவ்வளவுதானு நினச்சுக்க்றேன் . உனக்கு எந்த ஆபத்தும் வர கூடாதுமா... உன்னை கஷ்டப்படுத்தி என் பையன் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்லை “ கண்ணீர் விட்ட பரந்தாமனை அன்புடன் பார்த்தாள் காமினி..

குடும்பமே ஒரு பெண் மீது அன்பு செலுத்தும் ஆச்சர்யம்... பிரமிப்பாக இருந்த்து..

”இந்த கல்யானம் கண்டிப்பா நடக்கும் . அண்ணனை மீறி நாளக்கி வந்துட்றேன்.. நீங்க ரெடியா இருங்க”

**********************************************************************************

” எனக்கே தண்ணி காட்டுறியா... என்ன தைரியம் இருந்தா ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சு போவ.. காதலனை பார்க்கும் துடிப்பா.. அதெல்லாம் நடக்காது “

கண்ணீருடன் நின்றாள் காமினி..

“ என்னால அவரை மறக்க முடியாது “

”அப்படியா ” துப்பாக்கியை எடுத்தான் .. “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.
” அட சீ,,, மிரட்டி என்னை பணிய வைக்க முடியாது... வட பழனி கோயில் ல அவர்க்கும் எனக்கும் நாளை கல்யாணம் நடந்தே தீரும்.. முடிஞ்சா தடுத்துக்க “

இவளை கொலவதை விட அவள் காதலனை பிடித்து மிரட்டுவதுதான் நல்லது ..

இப்பொது இவளை தடுத்தாலும் இன்னொரு நாள் மீறி செல்வாள்.. விட்டு பிடிப்போம் . முடிவு செய்தான்...

நாளைக்கு வட பழனி கோயிலுக்கு அவள் காதலன் வர்ரானா... வரட்டும்” புன்னகைது கொண்டான்..

*****************************************************************************************

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

”ஆமா சார்.. உங்க வைரத்தை உங்க கிட்ட ஒப்படைக்க , டைமண்டோட குடும்பமே வந்து இருக்கு .. ஷீலா எனும் இந்த வைரம் , இனி உங்க வீட்ல் ஒளி வீசும் ”

ஷீலாவும் அவள் குடும்பத்தினரும் புன்னகைத்தனர்.. ஷீலா முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு..

” அண்ணன்தான் ஷீலாவை பார்க்க விரும்புறார் னு நினச்சு காவலர்கள் அலட்சியமா இருந்துட்டாங்க.. என்னை கேள்வி கேட்கும் தைரியமும் அவங்களுக்கு இல்லை.. என் புத்தகத்தில் இருந்து விழுந்த கடிதம் ஷீலாவுக்கு , உங்க பையன் எழுதிய கடிதம்ங்கறது, உங்க கிட்ட தமிழ் படிக்க வந்த என்னிடம் எப்படியோ வந்து சேர்ந்த்தும், நான் தற்கொலை நாடகமாடியது ஷீலாவை பார்க்கத்தான் என்பதும், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்த்து உங்களை பார்க்க என்பது அண்ணனுக்கு இன்னும் தெரியாது , “

“ சரி மா.. நாளைக்கு உங்க அண்ணன் பிரச்சினை செய்ய மாட்டாரா ? “

“ மாட்டாரு.. நாளைக்கு வட பழனி கோயில்ல அண்ணன் காத்து இருப்பாரு.. எனக்குத்தான் கல்யாணனம்னு நினச்சு வருவாரு... ஷீலானு தெரிஞ்சா கோபம் கொஞ்சம் குறையும்... கொஞ்சம் இருக்குற கோபத்தையும் இன்னொருவரு போக்கிடுவாரு “

“ யாரும்மா அது ? “

“ அண்ணன் பார்த்து வச்சுகுற மாப்பிள்ளையை அங்கே வர சொல்லி இருக்கேன்.. அவரிடம் என் சம்மத்தை சொல்லி அண்ணனை சந்தோஷ படுத்திடுவேன் “

” அவரை பார்ப்பது அண்ணனுக்கு மட்டும்தான் சந்தோஷமா “ என்று குறும்பாக கேட்ட பரந்தாமனுக்கு பதிலளிக்காமல் வெட்கதுடன் சிரித்தாள் காமினி ...

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா