Friday, September 30, 2011

பிரபஞ்ச வரலாற்றில் மாபெரும் கண்டுபிடிப்பு- சில சந்தேகங்கள்

இது வரை நடந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் உச்சமாக , புதிய கண்டு பிடிப்பு நிகழ்ந்துள்ளதாக அறிவியல் உலகம் பெருமையில் மகிழ்ந்து போய் இருக்கிறது.. அறிவியலாளர்கள் பிரமித்து போய் இருக்கின்றனர்... ஒரு வேளை இந்த கண்டு பிடிப்பு உறுதி செய்யப்பட்டால், நாம் இது வரை படித்த அறிவியலின் அடிப்படையே தகர்ந்து போய் விடும்.. ஒரு செயல் என்றால் அதற்கு விளைவு இருக்க வேண்டும் என்பது நம் அடிப்படை நம்பிக்கை.. நிகழ்காலம் என்பது இறந்த காலத்தில் இருந்து , எதிர்காலம் நோக்கி செல்லும் பயணத்தில், ஒரு மைய இடம் என நினைக்கிறோம்... இது எல்லாம் தவறாகி விடும் , இந்த புதிய கண்டுபிடிப்பு நிரூபிக்கப்படும் பட்சத்தில்..

அப்படி என்ன பெரிய கண்டுபிடிப்பு?

ஒளியை விட விரைவாக பயணம் செல்லக்கூடிய பொருளை கண்டுபிடித்து இருக்கிறார்களாம். ஒளியை விட வேகமாக எதுவும் எல்ல முடியாது என்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கொள்கை தவறாகி விட்டதாம் ..
இதுதான் அந்த கண்டுபிடிப்பு.

எப்படி இதை செய்தார்கள்?

நியூட்ரினோக்கள் என்ற பொருட்களை ஜெனிவாவில் உருவாக்கினார்கள்.. இவற்றை இத்தாலியில் இருக்கும் ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்தார்கள்..இது அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரம், ஒளி அங்கு செல்ல எடுத்து கொண்ட நேரத்தை விட குறைவாக இருந்தது.

அதாவது ஒளியை விட விரைவான பொருள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது..

ஒளியை விட விரைவான பொருள் இருக்க முடிந்தால், கடந்த காலத்துக்கு செல்லுதல் போன்ற வினோதமான செயல்களும் சாத்தியம்தான் என்பது அறிவியல்... ( இது எப்படி என்பதற்கு , முந்தைய பதிவுகளை பார்க்கவும் )


நாங்கள் பல முறை ஆராய்ந்து இந்த முடிவை அறிவிக்கிறோம்... தவறாக அறிவித்து அசிங்கப்படக்கூடாது என்பதற்காக முயற்சி எடுத்து இதை செய்து இருக்கிறோம்... யார் வேண்டுமானாலும் சோதித்து பார்த்து கொள்ளுங்கள் என்கிரன்றனர் இதை நடத்திய விஞ்ஞானிகள்..

இதை தகுந்த சோத்னைக்கு உட்படுத்திய பின்பே அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள்... அப்படி அதிகாரபூர்வமாக அறிவித்தால், நமது நம்பிக்கைகள், கருத்துக்கள், செயல்-விளைவு தத்துவம், என எல்லாமும் மாறிவிடும்..

இது ஒரு புறம் இருக்க, இது தவறாக இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது...

எப்படி?

1 செல்லும் ஊடகத்தை பொறுத்து, ஒளியின் வேகம் லேசாக மாறுபடக்கூடும்.. ஆனால் நியூட்ரினோக்கள் சீரான வேகத்தில் செல்லும்... ஊடகம், ஒளியின் வேகத்தை குறைத்து இருக்க கூடும்..

2. சோதனை நடந்த அந்த இத்தாலி பிரதேசத்தில், சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது.. எனவே அவர்களின் தூர கணக்கீடு தவறாக போய் இருக்கலாம்.. வேகம் = தூரம் / நேரம்.. தூரம் தவறு என்றால் வேகம் தவறாக கண்க்கில் வரும்..

3 எத்தனையோ நட்சத்திரங்களை ஆராய்கிறார்கள்..எரி நட்சதிரங்களை , தன் ஒளியை வைத்து அறிகிறர்கள்...ஒளியை விட சீக்கிரமா எதுவும் வந்து அடைந்ததாக சரித்திரம் இல்லை

4

இபப்டி பல சந்தேகங்களும் இருக்கின்றன...

என்னதான் நடக்க போகிறது என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்..

Tuesday, September 20, 2011

நாழிகை தமிழ் சொல்லா? - அந்த காலத்தில் கடிகாரம் இருந்ததா?

அந்த காலம் மாதிரி இல்லை... எல்லாம் சீரழிந்து வருகிறது என்பது எப்போதும் வழங்கி  வரும் ஒரு நிரந்தர புலம்பல்... ஆனால் சில விஷ்யங்களில் நிலை மாறி வருகிறது என்பது இனிமையான செய்தி...

மூத்தவர்களை விட , இளைய சமுதாயத்தினர் பல விஷ்யங்களில் தெளிவாக இருக்கின்றனர்.. முன் எப்போதையும்விட தமிழ் ஆர்வம அதிகரித்து இருப்பதும், தமிழ் மொழிக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டு இருப்பதும் தெரிகிறது... இணையத்தில் புது புது தமிழ் வார்த்தைகள் அறிமுகம் ஆகிக்கொண்டு இருக்கின்றன.. இந்த நல்ல செயலில் பெரும் பங்கு வகிப்பவர்கள் இளைஞர்கள்தான் ..

தூய தமிழை பயன்படுத்துதல் என வரும்போது ஒரு சிக்கல் வருகிறது... எது தூய தமிழ் என்பதே அது,

உதாரணமாக , நாவாய்ப்படை என்பது ஆங்கிலத்தில் இருந்து ( நேவி ) தமிழுக்கு வந்தது என சிலர் தவறாக நினைக்கின்றனர்,.. உண்மையில்  நாவாய் என்பது அந்த காலத்திலேயே வழக்கில் இருந்த சொல்... இது போன்ற தவறான கருத்துக்களால் தமிழின் சில சொற்கள் தம் பெருமையை இழக்க வேண்டி இருக்கின்றன.. அதே நேரத்தில், உண்மையிலேயே அன்னிய சொற்கள் சிலவும் கலந்து இருக்கின்றன என்பதும் உண்மை..

இப்போதைய கேள்வி , நாழிகை என்பது தமிழ் சொல்லா?

நண்பர் பிலாசபி பிராபாகரனுடன் நேரில் பேசுவது வேறு அனுபவம். ஆனால் அவர் எழுத்தில்தான் அவரது முதிர்ச்சி , விஷ்ய ஞானம் அதிகம் தெரியும். அப்படிப்படவர், விபரங்கள் தெரிந்தவர் , இந்த சந்தேகம் எழுப்புகிறார் என்றால் அது நியாயமான சந்தேகம்..

நாழிகை என்ற சொல் இன்றும் பயன்படுகின்ற தமிழ் சொல்தான்.. ஆனால் இதை பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்தான் பயன்படுத்துகிறார்கள்.. எனவே இந்த வார்த்தை , சம்ஸ்கிருத வார்த்தையோ என்ற சந்தேகம் எழுவது இயல்பானது.. எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது ஒரு காலத்தில்..

ஆக மூன்று கேள்விகள்...

1 அந்த காலத்திலேயே , நேர கணக்கீடு தமிழகத்தில் இருந்ததா?

2. நாழிகை என்ற அளவு இருந்ததா?

3. இப்போது ஏன் இந்த சொல் ஒரு குறிப்பிட்ட சமூக மக்களின் வார்த்தையாக மாறி விட்டது ? ( கொஞ்ச நாழில வந்துறேன் என சொல்வது வெகு சிலரே )


***************************************************

நிமிடம் , நொடி போன்றவை அந்த காலத்திலேயே இருந்தன,.. ஆனால் அந்த நொடி, நிமிடங்களின் வரையறை இப்போது பயன்பாட்டில் இருக்கும் நொடி, நிமிடம் என்ற சர்வதேச வரையறையில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கும்...

ஒரு மீட்டர் , ஒரு கிலோ என்றால் , எந்த நாட்டிலும் அதே அளவாக இருக்க வேண்டும் என்பதால்தான், சர்வதேச வரையறைகள் பின்பற்று வருகின்றன...

 நிமி என்றால் இமை... கண் இமைப்பை அடிப்படையாக கொண்டு காலம் கணக்கிடப்பட்டதால் நிமையம் , நிமிடம் என அந்த வார்த்தை உருவானது... ஒன் நிமிட்ல ( மினிட்ல )  வந்துறேன் என சிலர் பேசும் ஆங்கிலம் மூலம், மினிட் என்ற ஆங்கில வார்த்தைதான் தமிழாகி விட்டது என நினைப்பது தவ்று..

அந்த காலத்தில் காலம் அறியும் கருவியை கழுத்தில் அணிவது வழக்கம்...  கடிகை ஆரம் என காரண பெயர் பெற்று, கடிகாரம் என்றானது... சிலர்சரி, தனிப்பட்ட உபயோகத்துக்கு கடிகை ஆரம் .. பொதுவாக வைக்கப்ப்டும் ( சுவர் கடிகாரம், மணி கூண்டுகள் போன்றவற்றுக்கு ) என்ன பெயர்இந்த பயன்பாடுக்குத்தான் அந்த காலத்தில் நாழிகை வட்டில் எனும் கருவியை பயன்படுத்தினர்...இதற்கான ஆதாரங்கள் நம் இலக்கியங்களில் உள்ளன..

நாழிகை கணக்கர்கள் என சிலர் இருந்தனர்.. நேரத்தை அவ்வப்போது மணி ஓசை மூலமோ, குரல் மூலமோ அரசவையில் அறிவித்து கொண்டு இருப்பது இவர்கள் வேலை..

பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது கான்கையர் தோன்ற வாழ்த்தி
எறினீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுனீர்க்கன்னல் இணைத்தென்று இசைப்ப


என்ற முல்லைப்பாட்டு இதைத்தான் சொல்கிறது..

இதில் வரும் குறு நீர் கன்னல் என்பதுதான் நேரம் காட்டும் கருவி.. பொய் பேசாத நாழிகை கணக்கர்கள், மன்னனை வாழ்த்தி நேரம் இசைப்பார்கள் என்பது இதன் அர்த்தம்..

வேதாளிகரோடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப


என்று மதுரை காஞ்சி படம் பிடித்து காட்டுகிறது

இந்த பழம் பாடலை பாருங்கள்..


முரியும் வெண்டிரை முதுகயம் தீப்பட முழங்கழ லெரியம்பின்
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என்செய்கேன்
எரியும் வெங்கதிர் துயின்றது பாவியேன் இணைநெடுங் கண்துயிலா
கரிய நாழிகை ஊழியில் பெரியன கழியுமா றறியேனே


சூரியன் அஸ்தமித்த இரவு வேளையிலும் தூக்கம் வரவில்லை என்பது சுருக்கமான பொருள்... சூரியனுக்கு அழகு தமிழில் வெங்கதிர் , அஸ்தமனத்துக்கு துயின்றது என சொல்லும் பாடல், நேரத்தை சொல்லும் நாழிகையை வேறு மொழியில் இருந்து எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவு..

ஆக சமஸ்கிருத கலப்பு ஆரம்பமாகும் முன்பே, ஆங்கிலம் உருவாவதற்கு முன்பே , தமிழர்கள் காலம் காட்டும் கருவிகள் பயன்படுத்தியதும், நாழிகை வட்டில் பயன்படுத்தியதும் தெரிகிறது..

ஒன்பதாம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட , ஓர் அழகிய தமிழ் பாட்டை பாருங்கள் ( ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான சூளாமணியில் இருக்கிறது )

இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்


சங்க பாடல்கள் முதல், ஒன்பதாம் நூற்றாண்டு பாடல்கள் வரை, இந்த சொல் பயன்பாட்டில் இருந்து வருவது தெரியும்

ஆனால் நாழிகை என்பது ஏன் சிலரின் வார்த்தையாக உள்ளது?

அந்த காலத்தில்,, 6 மணி, முப்பது நிமிடம்,.20 வினாடி. ஆறு நொடி என துல்லியமாக தெரிந்து கொண்டு வேலை செய்யும் தேவை பெரும்பாலாருக்கு இல்லை...

உலோகங்களை காய்ச்சி ஊற்றும் உலோகவியலில் இந்த தேவை இருந்தது... ஆனால் இந்த துறைக்கும் பொது மக்களுக்கும் சம்பந்தம் இல்லை..

பொது மக்களுக்கு நெருக்கமான ஜோதிட துறையில், துல்லியமான நேர கனக்கு அவசியம்.. எனவே ஆன்மீகம் , ஜோதிடம் சார்ந்தவர்கள் மட்டுமே நாழிகை என்ற சொல்லை பயன்படுத்தினர்..

காலப்போக்கில் அது குறிபிட்ட மக்களின் வார்த்தையாக மாறியது இப்படித்தான்..

மற்றபடி சம்ஸ்கிருதத்துக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை..இல்லை... இல்லவே இல்லை

Monday, September 19, 2011

அணு மின் உலைகள் ஆபத்தானவையா?- ஞானி பிரத்தியேக பதில்கள்

 மின்சாரம் கட் ஆகி டிவி பார்க்க முடியாத கோபத்தால், ஆட்சியே மாறியதை அறிவீர்கள்.. மின்சாரம் அந்த அளவுக்கு நம்முடன் இணைந்து போய் இருக்கிறது..Gnani Photo

அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம் , காற்றாலைகள் ( கொஞ்சூண்டு சூரிய மின் சக்தி )  என்றெல்லாம் மின்சாரம் உற்பத்தியாகிறது... அதிக பட்ச மின்சாரத்தை, குறைந்த பட்ச எரிபொருளை பயன்படுத்தி தயாரிக்க ஒரே வழி அணு மின் உலைகள்தான் என்கின்றனர் சிலர். அது என்ன குறைந்த பட்ச எரி பொருள்..?

அனல் மின் நிலையங்கள் என்றால் நிலக்கரி எரி பொருள்.. கிலோக்க்கணக்கில் கரியை எரித்து கிடைக்கும் மின் சாரத்தை அதை விட குறைந்த அளவேயான யுரேனியம், தோரியம் போன்றவற்றில் இருந்து பெறலாம் .. அளவும் குறைவு, சீர்கேடும் குறைவு என்பது இவர்கள் வாதம்... 

நிலக்கரி தோண்ட தோண்ட கிடைத்து கொண்டே இருக்காது, கொஞ்ச நாளில் தீர்ந்து விடும்.. எனவே அணு மின் சாரம் காலத்தின் கட்டாயம்...  வளர்ந்த நாடுகளில் அணு மின்சாரம் அவர்கள் மின் தேவையை பெருமளவில் பூர்த்தி செய்கிறது , என்றெல்லாம் இவர்கள் சொன்னாலும், சிலர் கடுமையாக எதிர்கிறார்கள்...

இது குறித்து பத்திரிக்கையாளர் , விமர்சகர்  ஞானியிடம் சில கேள்விகளை முன் வைத்த போது அவர் அளித்த பதில்கள்
Gnani Photo
_____________________________________________________




  • அணு உலை என்பதே கூடாது என்பது உங்கள் நிலைப்பாடா அல்லது இந்தியாவில் அது கூடாது ( திறமையின்மை, பாதுகாபின்மை போன்றவற்றால்) என்பது உங்கள் நிலைப்பாடா? பாதுகாப்பான முறையில் அமைக்கப்படும் அணு உலையை ஏற்கிறீர்களா? எப்படியும் நமக்கு மின்சாரம் தேவை .. காடுகளையும், சுற்றுபுற தூய்மையையும் அழிக்காமல் , மின் உற்பத்தி செய்ய ஒரே வழி அணு சக்திதான் என்கிறார்களே..
 • 53 
  • பாதுகாப்பான முறையில் அணு உலை என்பதே கிடையாது. அணுக்கழிவுகளை கதிர்வீச்சு நீங்கச் செய்ய இதுவரை தொழில்நுட்பம் இல்லை. அவை பல்லாயிரக்கணக்கான் ஆண்டுகள் இருந்து ஆபத்தை ஏற்படுத்துபவை. எல்லா அணு உலைகளையும் நான் எதிர்க்கிறேன். அணுசக்தி தூய வழி என்பது தவறு. அது உண்மையல்ல.
  • அணுகுண்டுக்கான மூலப்பொருள் உருவாக்கும் முயற்சியாகவே அணு உலைகள் உருவாக்கப்பட்டன. அதன் உப பொருளே மின்சாரம். அதை முகமூடியாகக்காட்டி அணு ஆயுதம் தயாரிக்கத்தொடங்கினார்கள். இப்போது முகமூடி தேவை இல்லை. ஆனால் அணு உலை தயாரிப்புத்தொழிலின் லாபியினால் அவை நம் தலை மீது கட்டப்படுகின்றன.
  • அப்படி பார்த்தால், வளர்ந்த நாடுகளில் அதை தடை செய்து இருப்பார்களே.. ஆனால் அங்கும் அணு சக்தி உள்ளதே...
 • 4
  • வளர்ந்த wநாடுகள் ஒவ்வொன்ராக  இவற்ரைக் கைவிட்டு வருகின்றன. கடைசியாக இப்போது பிரான்ஸ் மொத்த மின்சக்தியில் 25 சதவிகிதத்தை அணு உலையிலிருந்து பெறும் நாடு. அனைத்தையும் 2050க்குள் மூடுவது என்று முடிவு எடுத்துவிட்டது. நாம் அணுமின்சாரம் பெறுவது வெறும் 2.75 சதவிகிதம்தான். இது 10 சதவிகிதம் ஆவதற்கே 2050 ஆகிவிடும் என்கிறார்கள்.

  • கார்பன் வெளியேற்ரம், சுற்று சூழல் சீர்கேடு என்ப்தற்கு கிடைக்கும் ஒருமித ஆதரவு , அணு சக்தி எதிர்ப்புக்கு இல்லையே... கட்சிகள் கூட இதை உறுதியாக எதிர்ப்பதில்லையே.. இதற்கு காரணம், அணு சக்திமேல் இருக்கும் அச்சம் என்பது அறிவியல் பூர்வமானது அல்ல என எடுத்துக்கொள்ள முடியுமா?


  • பெரும்பாலான கட்சிகள் அணுகுண்டையே ஆதரிப்பவை. குண்டை ஆதரிக்காத கட்சிகள் அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது என்ர பிரசாரத்தில் நீண்ட காலமாக ஆழ்ந்துபோய்விட்டார்கள். அணுக் கழிவு, கதிர்வீச்சு பற்றியெல்லாம் போதுமான அறிவு இல்லாமையே பல அரசியல் கட்சிகளின் தெளிவற்ற நிலைக்குக் காரணம். அணு சக்தி பற்றிய அச்சம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது. அதைப் பற்றிய அச்சமின்மைதான் அறிவியல்பூர்வமில்லாதது.

  • யாரேனும் போராட்டம் நடத்தினால் ஆதரவு தருவீர்களா? 

  •  யாரேனும் மனித சங்கிலி போன்று ஏற்பாடு செய்தால் நிச்சயம் பங்கேற்பேன். இடிந்தகரைக்கு செல்ல விரும்பினேன். உடல்நலம், வேறு வேலை பளுவினால் செல்ல இயலவில்லை. 1988 89ல் இடைந்தகரையில் இதே போல ஒரு பெரும் திரளான மீனவர்கள் முன்புகூடன்குளம் திட்டம் ஏன் கூடாது என்பது பற்றி பேசியிருக்கிறேன். அப்போது அணு எதிர்ப்பு இயக்கம் ஒன்றை நான், நாகார்ஜுனன், ரவி ஸ்ரீனிவாஸ் இன்னும் பல நண்பர்கள் சேர்ந்து சிறிய அளவில் செய்துகொண்டிருந்தோம்.

  • அதிகரித்து வரும் மின் தேவைக்கு வேறு எப்படித்தான் சந்திப்பது.. அனல் மின நிலையங்களால் சுற்றுசூழல் சீர்கேடு ஏற்படும். தவிர அதன் எரிபொருள் ஆதாரம் தீர்ந்து கொண்டே வருகிறது.. காற்றலை, நீர் மின் நிலையங்கள் போன்றவை எல்லாம் பெரிய அளவில் பயன்படாது... அணு சக்திக்கு மாற்று என்ன?

  • முதலில் அணு மின்சக்தி எதற்கும் மாற்று இல்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இப்போது அணுமின்சக்தி வெறும் 2.75 சதவிகிதம்தான். இப்போதே காற்று, சூரியசக்தி இந்தியாவில் 5 சதவிகிதம் ! அவை பெரிய அளவில் பயன்படாது என்பது தவறான பிரசாரம். அணு சக்திக்கு செலவிடும் தொகையில் பத்தில் ஒரு பங்கு கூட செலவிடாமலே, அவை அதிகம் தருகின்றன. நான் கடத முப்பது ஆண்டுகளாக அணு உலைகள் எதிர்ப்பில் ஈடுபட்டிருக்கிறேன். அவை பற்றி தொடர்ந்து படிக்கிறேன். i am fully convinced. alternatives are possible by several methods. 

Sunday, September 18, 2011

வினாடியும் நொடியும் ஒன்றா? - தமிழ் படும் பாடு


தமிழர்கள் அந்த காலத்திலேயே பல் துறைகளிலும் கில்லாடிகளாக விளங்கினர் என்பது பலருக்கு தெரியாது.. கணிதம், பொறியியல், கட்டடவியல், மருத்துவம் என அவர்கள் தொடாத துறை இல்லை.

தஞ்சை பெரிய கோயில் இன்றும் நம்மை பிரம்மிக்க வைக்கிறது என்றால், அதற்கு காரணம் அன்றைய தொழில் நுட்பம்..

அன்றைய கண்க்கீடுகள், அளவைகள்,  உலோகவியல், கட்டடம் கட்டும் முறை பற்றியெல்லாம் இன்னொரு பதிவில் விரிவாக அலச உத்தேசம்..

அன்று கூறிய சில, கால வெள்ளத்தால் எப்படி மாறி இருக்கிறது என்பதை மட்டும் ஷார்ட் அண்ட்  ஸ்வீட்டாக இப்போதைக்கு பார்க்கலாம்..

___________________________________________________


ஓர் ஆங்கில புத்தகதை பெருமைக்காக புரட்டியபோது, சில ஆங்கில சொற்களுக்காக அகராதியை நாடினேன்.. செகண்ட் என்ப்தற்கு அதில் அர்த்தம்,  வினாடி அல்லது நொடி என்று இருந்தது..

வினாடியும் நொடியும் ஒன்றுதான் என நினக்கிறோம்.. தப்பு..

கண் சிமிட்டும் நேரம் என்கிறோமே... இரண்டு முறை கண்  சிமிட்டும் நேரம்தான், நொடி என வரையறை செய்துள்ளனர்...  எனவே செகண்ட் என்ற ஆங்கில சொல்லுக்கு இணையானது நொடிதான்.

வினாடி என்றால்?

14.4 செகண்ட் சேர்ந்தால் ஒரு வினாடி.

60 வினாடி = ஒரு நாழிகை ( 24 நிமிஷம் )  ( சித்த நாழில வந்துட்றேன் என்ற வார்த்தை பிரயோகத்தை சிலர் கேட்டு இருக்கலாம்.)

60 நாழிகை = ஒரு நாள்


கால வெள்ளத்தில் பொருள் சிதைந்து விட்டது... அர்த்த மாறிய வேறு சிலவற்றை பார்க்கலாம்
____________________________________

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை... போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..

வாக்கு கற்றவனுக்கு  வாத்தியார் வேலை.. போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை என்பது இப்படி மாறி விட்டது

______________________________________________________


காக்கா பிடித்தல்...

கைய காலை பிடிச்சி வேலையை முடித்தேன் என்பது , கால்கையை பிடித்தேன் என்பதுதான் காக்கா பிடித்தேன் என மாறி விட்டது... காக்கா வலிப்பு என்ப்தையும் கவனிக்கவும்..

____________________________________________


சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

கிராமங்களில் பார்க்கலாம்.. தலையில் பானையை சுமந்து செல்பவர்கள் , தலை மேல் ஒரு துணியை வாட்டமாக அமைத்து அதற்கு மேல் பானையை வைப்பார்கள்..இந்த துணிக்கு சும்மாடு என்று பெயர்..

ஒருவனுடைய குடுமி என்னதான் அடர்த்தியாக  இருந்தாலும் அது சும்மாடு ஆக முடியாது.
சோழியன் குடிமி சும்மாடு ஆகுமா என்பதுதான் திரிந்து சோழியன் குடுமி சும்மா ஆடுமா? என மாறி விட்டது

****************************


Wednesday, September 14, 2011

பதிவுலகம் அழிந்து வருகிறதா?

ஃபேஸ்புக், பஸ் போன்றவற்றால் பிளாக் எழுதுவது குறைகிறதா? பிளாக் உலகம் அழிகிறதா என்பது கேள்வி..

உடனடி ஃபீட் பேக், விவாதம் என சில வசதிகள் அவற்றில் இருப்பது உண்மை.. பிளாக்கில் பிசியாக இருந்த சிலர் அங்கு பிசியாக இருப்பதும் உண்மை..
இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை உண்டு.. ஆர்வம் உண்டு. இதில் உயர்ந்தது தாழ்ந்தது என எதுவும் இல்லை...

சிலருக்கு பரபரப்பு ஏற்படுத்துவது பிடித்து இருக்கலாம். அரட்டை பிடித்து இருக்கலாம்..  கூட்டம் சேர்ப்பது பிடித்து இருக்கலாம்..

இவர்களுக்கும் பிளாக் இடம் அளித்தது...  “ என்ன எழுதவது..ஒன்றுமே இல்லை “ என கூட சிலர் பதிவிடுவதும், அதற்கு சிலர்  விமர்சன பின்னூட்டம் இடுவதும் உண்டு..

ஆனால் இந்து போன்ற கேளிக்கைகளுக்கு பிளாக்கை விட ஃபேஸ் புக், பஸ் போன்றவை உகந்தது என்பதால், மேற்கண்ட பாணியிலான எழுத்துக்கள் தற்போது பிளாக்கில் குறைந்து விட்டன.

அதே நேரத்தில் , கூட்டம் சேர்ப்பதைப்பற்றி கவலைப் படாமல், தம் சிந்தனைகளை , நல்ல தகவல்களை பகிர்பவர்கள். முன்னைக்காட்டிலும் அக்கறை எடுத்து பிளாக் எழுத ஆரம்பித்துள்ளனர்..

தற்போது , பிளாக்கில் ஆரவார எழுத்துக்கள் குறைந்து விட்டதால் , நல்ல எழுத்துக்களை , நிதானமாக படிக்க முடிகிறது..

திரட்டிகளில் இனைத்தல், ஓட்டு  போடுதல் என்பதெல்லாம் தெரியாத சில தமிழ் அறிஞர்கள் பிளாக் எழுதி வருவது இப்போதுதான் என் பார்வைக்கு வந்தது .. கிரேட்.. மிக பயனுள்ளதாக இருக்கிறது..

அதே போல , சரக்குள்ள பழைய பதிவர்கள் மட்டுமே இன்றும் எழுத்தை தொட்ர முடிகிறது என்பதால், அவர்களின் எழுத்தும் மேம்பட்டுள்ளது..

இந்த நிலை எனக்கு மகிழ்வளிக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள் என அனைவரையும் கேட்டு கொள்கிறேன்

Wednesday, September 7, 2011

தூக்கு தண்டனை- மூன்று வித கருத்துக்கள்

அண்ணா ஹசாரே பிரச்சினை சற்று ஓய்ந்த நிலையில், ஊடகங்கள் தூக்கு தண்டனை பிரச்சினைக்கும் போனால் போகிறது என சற்று இடம் ஒதுக்க ஆரம்பித்துள்ளன.  தூக்கு தண்டனை என்பது , மேலோட்டமாக அலச வேண்டிய பிரச்சினை அல்ல , பொழுது போக்கு பிரச்சினையும் அல்ல என்பதால், ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பதே  நல்லது.

கொள்கை ரீதியாக சிலர் சில நிலைகளை எடுத்து இருந்தாலும்,  நடு நிலையாளர்கள் சிலருக்கு இதில் என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. ஆதரிப்பதா எதிர்ப்பதா என பலருக்கு தெரியவில்லை என்பதே உண்மை..

அவர்கள் நலன் கருதி, இந்த பிரச்சினையில் நிலவும் மூன்று தரப்பு நியாயங்களை தொகுத்து தர விரும்புகிறேன்..

1 . தண்டனை கூடாது....

தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவர் , பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். போதுமான தண்டனையை அனுபவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு தூக்கு வழங்குவது தவறு. மேலும் அவர்கள் நிரபராதிகள். ஒரு பேட்டரி வாங்கி கொடுத்ததற்கு தூக்கு என்பது அக்கிரமம்.

2 விடுதலை கூடாது..

கொலை செய்வது மட்டும் அல்ல.. உடைந்தையாக இருப்பதும் குற்றமே... கொலை செய்ய கத்தி வாங்கி கொடுத்தால் , அதுவும் குற்றம் என்ற அடிப்படையில்தான் தண்டனை வழங்க்கப்ப்ட்டுள்ளது. தண்டனை காலதாமதம் ஆனதற்கு அடுத்தடுத்த அப்பீல்களே காரணம். எனவே இதை காரணம் காட்டி விடுதலை செய்ய சொல்வது தவறு. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தூக்கு தண்டனை உண்டு. இதை கொடூரம் என நினைத்தால், எல்லா தண்டனையுமே கொடூரம்தான். பேசாமல் எல்லா தண்டனைகளையும் ஒழித்து விட்டு, நீதி மன்றங்களை அறிவுரை மையங்களாக்க முடியுமா? எனவே அவர்களை விடுதலை செய்ய கூடாது..


3. யாருக்குமே தூக்கு கூடாது..

பேட்டரி வாங்கி கொடுத்தது குற்றமா இல்லையா என்பது தேவை இல்லாத வாதம். தூக்கு தண்டனை ஒட்டு மொத்தமாக ஒழிய வேண்டும். ஆட்டோ சங்கர் உட்பட பொதும்க்களை கொல்லும் தீவிரவாதிகள் உட்பட யாருக்குமே தூக்கு கூடாது.. வேறு கடுமையான தண்டனை தரலாம்.  அமெரிக்காவில் கூட தூக்கு தண்டனையில் சிக்குபவர்கள் ஏழைகள்தான். எனவே இந்த தண்டனை அப்பாவிகளையே பாதிக்கிறது..


இப்படி மூன்று வித கருத்துக்கள் நிலவுகின்றன.. உங்கள் கருத்து என்ன? 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா