Monday, May 30, 2011

மஞ்சள் துண்டு ரகசியம் - கலைஞரின் தத்துபித்துவங்கள்

தேர்தல் தோல்விக்கு பலர் பல காரணங்கள் சொன்னாலும் - ஊழல் , இலங்கை பிரச்சினை, குடும்ப அரசியல், சினிமா , வெயில் - கலைஞர் இதையெல்லாம் ஏற்கவில்லையாம். அவர் ஜாதகத்தில் குரு வலுவிழந்தது விட்டதுதான் காரணம்,. இனி மஞ்சள் துண்டு வேண்டாம் , வெள்ளை துண்டு அணியுங்கள் என சொல்லி சில ஜோசியர்கள் காசு வாங்கி சென்று விட்டனராம்..




எனவேதான் இப்போது வெள்ளை துண்டு அணிய ஆரம்பித்து இருக்கிறாராம் கலைஞர்,,



இந்த செய்தியை அவர் இன்னும் உறுதி செய்யவில்லை.. ஏன் வெள்ளை துண்டுக்கு மாறினார் என இனிமேல்தான் விளக்கம் அளிப்பார்..



இது ஒரு புறம் இருக்க, அவர் என் மஞ்சள் துண்டு அணிகிறார் என புதிய அரசியல் நோக்கர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.. எனவே பொது நலன் கருதி, மஞ்சள் துண்டுக்கு அவர் அளித்த விளக்கங்களை திரட்டி தருவதில் பிச்சைக்காரன் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம் பெருமைப்டுகிறது...



***************************************************







மஞ்சள் துண்டு ஏன்? - கலைஞர் விளக்கம்



1 சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக "ஓஷோ' வின் "தம்மபதம்' எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்'



எனவேதான் ஓஷோவை பின்பற்றி மஞ்சள் துண்டு அணிகிறேன்





2 புத்த மத தத்துவத்தின் அடிப்படையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்



3 டாக்டர் ராமதாஸ் ஒரு நிகழ்ச்சியின் போது , மஞ்சள் துண்டு அணிவித்தார். அவர் நட்புக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் மஞ்சள் துண்டு அணிகிறேன்



4 எனக்கு கழுத்து வலி ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கழுத்து பகுதிக்கு இதமான வெப்பம் தேவை.. இதமான வெப்பம் அளிக்கும் தன்மை மஞ்சள் துண்டுக்கு உண்டு என்று கூறிய அந்த மருத்துவ அடிப்படியில்தான் மஞ்சள் துண்டு அணிகிறேனே தவிர வேறல்ல.



5 ஒரு நாள் தற்செயலாக மஞ்சள் துண்டு அணிந்தேன்.. அது எனக்கு பொருத்தமாக இருப்பதாக , நேர்த்தியாக இருப்பதாக குடும்பத்தினர் , கட்சியினர் கூறவே , அதையே பின்பற்ற துவங்கினேன்



6 எம் ஜி ஆர் என்றால் தொப்பி, பெரியார் என்றால் தாடி என்பது போல ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கும்.. எனக்கும் ஒரு அடையாளம் தேவை என்பதால்தான் மஞ்சள் துண்டு அணிய ஆரம்பித்தேன் .



Thursday, May 26, 2011

காங்கிரசுக்கு பாடம் புகட்டியதற்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் !!

 

தேர்தலில் திமுக தோற்றதை பலரும் பேசுகிறார்கள்.. இதில் ஒரு விஷயம் பத்திரிக்கைகளால் இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது.. வீழ்ந்தது தி முக அல்ல… இதை விட பெரிய தோல்விகளை எல்லாம் அது சந்த்தித்து இருக்கிறது…

ஆனால் பல வருடங்களாக தோல்வியையே காணாத காங்கிரஸ் முதல் முறையாக வீழ்ந்து இருக்கிறது…

1980 – காங்கிரஸ் , திமுக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி… எம் ஜி ஆரின் அ இ அ தி மு க இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி

1984 – காங்கிரஸ்- அ இ அ தி மு க அபார வெற்றி

1991- காங்கிரஸ்- அ தி  மு க வெற்றி

1996 – தமா கா – தி மு க வெற்றி

2001 – த மா கா – அ இ அ தி மு க வெற்றி

2006 – காங்கிரஸ் – திமுக வெற்றி

காங்கிரஸுடன் சேரும் கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலையே இங்கு நிலவியது..

எனவேதான் என்ன நடந்தாலும் சரி, காங்கிரஸை கோபித்து கொள்ள கூடாது என கலைஞர் (தப்பு) கணக்கு போட்டு, இலங்கை பிரச்சினையில் சொதப்பினார்…

இவ்வளவு வலுவாக இருந்த காங்கிரசுக்கு மேல் மக்களுக்கு இருந்த கோபத்தை எதிர் வாக்குகளாக மாற்ற தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள், பதிவர்கள், ட்விட்டர்கள் என பலரும் படாத பாடு பட்டனர்…

இதில் எதுவும் வீன் போகவில்லை என்பது, வாக்களிக்க பல புதியவ்ரகள் வந்ததில் இருந்தே புரிந்தது…

இதில் நாம் தமிழர் இயக்கம், காங்கிரசை மட்டும் குறி வைத்து பிரச்சாரம் செய்தது … நடு நிலை வாக்க்காளர்களை கவர இது உதவியது….

 

 

இந்த நிலையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்திய சீமானுக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

********************************************************************************************************

"கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே.
காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம்.
இருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும்.
அத்தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.
எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள்,

Tuesday, May 24, 2011

ஏன் ? ஏன் ? ஏன் ?

செய்தி தாள்களை , பத்திரிக்கைகளை படிக்கும் போது , சில சம்பவங்களை பார்க்கும்போது ஏன் இப்படி என கேட்க வைக்கின்றன சில செய்திகள்..




1 முன்பெல்லாம் பத்திரிகைளில் கவிஞர் கனிமொழி என குறிப்பிட்டுவார்கள்..இப்போது கருணாநிதியின் மகள் என்றோ திமுக எம் பி என்றோ குறிப்பிடுகிறார்கள்... ஏன்?



2 ஊழல்தான், திமுகவின் தோல்விக்கு காரணம் என பலரும் எழுதுகிறார்கள்... இலங்கை பிரச்சினையையும் ஒரு காரணம் என யாரும் எழுதுவதில்லையே ? ஏன் ?



3 சினிமாவில் ஒரு கட்சியையோ, இயக்கத்தையோ நேரடியாக திட்டுவது போல காட்சி இருக்காது.. ஆனால் கோ படத்தில் நக்சல் இயக்கத்தை நேரடியாக பெயர் சொல்லி திட்ட அனுமதித்து இருக்கிறார்களே ? ஏன் ?



4 முன்பு கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஏற்பட்ட பரபரப்பு , இப்போது கனி மொழி கைது செய்யப்பட்ட போது ஏற்படவில்லையே ?ஏன் ?



5 சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள ஸ்டீபன் ஹாவ்கிங் புத்தகத்தில் கடவுள் குறித்த கருத்துக்கள், மத நூல்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றன ( நேரடியாக பார்த்தல் அவர் கடவுள் இல்லை என சொல்வது போல தோன்றினாலும் ) .. ஆன்மீக பதிவர்கள் இது குறித்து எதுவும் இன்னும் கருத்து சொல்லவில்லையே? ஏன் ?

Saturday, May 21, 2011

மரணத்தை கற்று கொள்ளுதல்

புத்தகங்களில் பல வகை உண்டு என்பதை போல , ஒரு புத்தகத்துக்கும் நமக்கும் இருக்கும் தொடர்பிலும் பல வகை உண்டு. ஒரு புத்தகம் எப்படி அறிமுகமாகிறது, படித்து முடித்த பின் என்ன தோன்றியது என்பதை வைத்து ஒரு புத்தகமே எழுதலாம்..

தேடிப்படிக்கும் புத்தகங்கள் ஒரு வகை..
சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகம் தேடி படித்தது அல்ல... ஒரு நண்பர் சிபாரிசு செய்ததால் வாங்கினேன்.. அப்படியே வைத்து விட்டேன், படிக்காமலேயே... படிக்க வேண்டும் என நினைத்ததும் இல்லை...

தற்செயலாக ஒரு நாள் எடுத்தேன்.. புரட்ட ஆரம்பித்தேன் .. அடடா...  என்ன ஓர் அற்புதமாக புத்தகம் என தோன்றியது...

எதிர்பாராமல் கிடைத்த விருந்து போல் தோன்றிய அந்த புத்தகம்தான், Tuesdays with Morrie ...

ஒரு மாணவனுக்கு பிரத்தியேகமாக ஒரு பேராசிரியர் எடுக்கும் வகுப்புதான் இந்த புத்தகம்... எதைப்பற்றிய வகுப்பு? வாழ்வை பற்றிய , சாவை பற்றிய வகுப்பு.. இந்த வகுப்பில் புத்தகம் எதுவும் இல்லை,, அனுபவத்தை அடிப்படையாக கொண்ட பாடம்தான் இங்கு கற்பிக்க படுகிறது...

தன் மீது பேரன்பு கொண்ட பேராசிரியருடன்,(morrie) நீண்ட நாள் தொடர்பில் இல்லாத ஒரு மாணவன்,( புத்தக ஆசிரியர் )  அவர் விரைவில் இறக்கப்போகிறார் என அறிந்து அவரை சந்திக்கிறான்...

எப்படி இந்த செய்தியை அறிந்தான்?

எந்த பேராசிரியர் கொடிய நோய் ஒன்றால் தாக்கப்பட்டு விரைவில் மரணமடைய போகிறார் என்பது அவருக்கு தெரிய வருகிறது...

தனக்கு மரணம் வரப்போகிறதே என அஞ்சி , வருந்தி இறந்து போகலாம்.. அல்லது மிச்சம் இருக்கும் நாளை அர்த்தம் உள்ளதாக மாற்றலாம்.. இந்த இரு வாய்ப்புகள் அவர் முன் உள்ளன.. இரண்டாவதை தேர்ந்தெடுக்கிறார் இவர்..
இது வரை அவர் சொல்லி கொடுத்த பாடங்களை போல மரணம் என்பதைப்பற்றியும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார் இவர்... தன்னையே ஒரு புத்தகாமாக நினைத்து யார் வேண்டுமானாலும் படித்து கொள்ளலாம் என அறிவிக்கிறார்.. நான் விரைவில் இறக்க இருப்பவன்.. இன்னும் உயிரிடன் இருப்பவன்.. எனவே இறப்புக்கும், வாழ்வுக்கும் பாலமாக இருக்கும் என்னை பயன்படுத்தி மரணம் என்றால் என்ன? மரணம் அடையும் போது என்ன உணர்வுகள் இருக்கும்? வாழ்க்கையை பற்றி மரணம் அடைய இருப்பவன் என்ன நினைப்பான்? என்பது போன்ற விஷ்யங்களை அறிந்து கொள்ள்ளுங்கள் என அறிவிக்கிறார்...

இவரை பற்றி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது... அதை பார்த்துதான், அந்த மாணவன் அவரை பார்க்க வருகிறான்..
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அவரை பார்த்து , பல விஷ்யங்களை பற்றி அவர் கருத்துக்களை கேட்கிறான்...

மரணம் அடையும் கடைசி  நாள் வரை அவர் நடத்தும் சிறப்பு பாடம்தான் இந்த புத்தகம்...

தத்துவம் , ஆன்மீகம் , மனவியல், காதல் , திருமணம் என பல விஷ்யங்களில் ஒரு தெளிவான பார்வையை அளிக்கிறது புத்தகம்..
எளிய , இனிமையான நடை ..ஆங்காங்கு நகைச்சுவை என கடினமான விஷ்யங்களை எளிமையாக சொல்லி செல்கிறது புத்தகம்...


 நான் ரசித்த சில வரிகள்


வாழ்க்கை என்பது எதிர் எதிர் துருவங்களால் ஆனது... ஒன்றை செய்ய நினப்போம். ஆனால் இன்னொன்றை செய்வோம். சிலவற்றை அலட்சியாமாக நினைப்போம். அது தவறு என்றும் உணர்வோம். சில நம்மை புண்படுத்தும்...அப்படி புண்பட தேவையில்லை என்பதும் நமக்கு தெரியும்.. 

இருபுறமும் இழுக்கப்பட்ட ரப்பர் பேண்டின் நடுவில் வாழ்வது போலத்தான் நம் வாழ்க்கை இருக்கிறது..


“ வாழ்க்கை ஒரு ஒரு மல்யுத்த போட்டி போல தோன்றுகிறது”
அவர் சிரித்தார் “ அப்படியும் சொல்லலாம் “


“ கடைசியில் யார் வெல்வார்கள்” கேட்டேன் நான்...


“ யார் வெல்வார்கள்? “ என்னை பார்த்து குறும்பாக சிரித்தார்..


“ அன்பு வெல்லும்.. அன்புதான் என்றும் வெல்லும் “

அப்போது ஓ ஜே சிம்ப்சன் வழக்கு நடந்து வந்தது.. பலரும் ஆர்வத்துடன் வழக்கை கவனித்து வந்தனர்.. அதை பற்றியே எங்கும் பேசி வந்த்னர்...அவர்களுக்கு ஓஜே சிம்பசனுடன் பழக்கம் இல்லை.. அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுடனும் எந்த தொடர்பும் இல்லை... யாரோ ஒருவரின் வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள தம் நாட்களை பலர் வீணடித்து கொண்டு இருந்தனர்..

எப்படி இறப்பது என கற்று கொண்டால், எப்படி வாழ்வது என்பதை கற்றுக்கொள்ளலாம்..

கோபம் , காமம் , ஏமாற்ரம் போன்ற உணர்வுகளை முழுதாக அனுபவியுங்கள்.. ஆனால் அதிலேயே சிக்கி கொள்ளாதீர்கள்... முழுதாக அனுபவித்து விட்ட நிலையில் , அந்த உணர்வை பற்றிய முழு அறிவும் உங்களிடம் இருக்கும்... உதாரணமாக, துக்கம் ஏற்பட்டால், இதுதான் துக்கமா? இதுதான் எனக்கு முன்பே தெரியுமே... அடுத்து என்ன என யோசிக்க வேண்டும்... துக்கம் என்பதிலேயே சிக்குண்டு போக கூடாது ...

இளைஞனான என்னை பார்த்து முதியவரான உங்களுக்கு பொறாமை இல்லையா?


என்னிடம் இல்லாத ஒன்று உன்னிடம் இருந்தால் பொறாமை படலாம்.. நீ இப்போது இருக்கும் நிலையில் நானும் இருந்து இருக்கிறேனே.. நான் இளைஞனாக இருக்கும் நேரம் ஒன்று இருந்தது... அதை அனுபவித்தேன்..இப்போது நீ இளைஞனாக இருக்கும் நேரம்.. இதில் பொறாமைப்பட என்ன இருக்கிறது?

நமக்கு என்ன தேவை என்பதற்கும்  நாம்  என்ன விரும்புகிறோம் என்பதற்கும் இடையே பெரிய குழப்பம் நிலவுகிறது..  நமக்கு தேவை உணவு,தண்ணீர்.. நாம் விரும்புவது பீட்சா, கோலா , பீர் ..

சொல்லிகொண்டே போகலாம்...


மரணத்தை பற்றி பல்வேறு இனங்களின் நம்பிக்கைகளை ஆங்காங்கு சொல்லி இருப்பது, பல்வேறு பிளாஷ் பேக்குகள், சுவையான நிகழ்ச்சிகள், மகாத்மா காந்தி போன்றோரின் பொன் மொழிகள் என இந்த புத்தகம் சுவையான பொக்கிஷமாக திக்ழ்கிறது...

***********************************
பிளஸ் : சுவையான நடை, ஆழமான கருத்துக்கள்


மைனஸ் : ஒரு ஞானி போல பேசும் பேராசிரியர் சில சமயம் சாதரண மனிதர்களின் நம்பிக்கைகளை ஒட்டி பேசுவது , அந்த பேராசியருக்கும் இளம் வயதில் இந்த நோய் ஏற்பட்டு இருந்தால் அதை எப்படி எதிர் கொண்டு இருப்பார் என்ற கேள்வி வருவது, வேலையில் சில பிரச்சினைகள் வருவதால், தன் ஆசிரியரை பார்க்க இந்த மாணவனுக்கு நேரம் கிடைக்கிறது.. இல்லாவிட்டால்,   இதில் அக்கரை காட்டி இருக்க வாய்ப்பில்லை... எனவே ஆர்வத்தால் பாடம் கற்றானா( ரா ? ) அல்லது குருட்டு அதிர்ஷ்டத்தில் பாடம் கற்றானா ( ரா? ) என்ற சந்தேகம் வருவது



வெர்டிக்ட் :  காரணம் எதுவாக இருந்தாலும், மைனஸ் இருந்தாலும், அவுட் பு சிறப்பாக இருக்கிறது...
படிக்க வேண்டிய புத்தகம்.... 


Tuesdays with Morrie
by Mitch Albom 


Thursday, May 19, 2011

செய்தி துளிகள்

1 . சர்வதேச அளவில் இரண்டாவது பெரிய ஊழல் என்ற பெருமையை 2 ஜி ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளது. பதவியை தவறாக பயன்படுதியவ்ர்கள் பட்டியலில் ஏ ராசா முக்கிய இடம் பிடித்துள்ளார்..

டைம் பத்திரிக்கை இந்த “ பெருமையை “ தமிழ் நாட்டுக்கு வழங்கியுள்ளது...

2 58 ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன..  இதில் ப்ளூ பிலிம் இயக்குனர் படங்களுக்கு விருது கிடைக்காதது மகிழ்ச்சி ஏற்படுத்தியது... காப்பி அடித்தல், தமிழ் இலக்கியத்தை படிக்காமல் இருப்பதை பெருமையாக  நினைத்தல் போன்றவற்றை இனிமேலாவது இவர் கை விட்டால் நல்லது...

3 பாண்டிச்சேரியில் , தனித்து ஆட்சி அமைக்க முடிவு செய்தது மூலம் அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டதாக ரங்கசாமி மீது ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.. ஜெவை விரைவில் சந்திக்கப்போவதாக ரங்கசாமி கூறினார்

4 கர்னாடக முதல்வர்- கவர்னர் பிரச்சினை முடிந்தது போல  நேற்று தோன்றியது.. ஆனால் கவர்னர் மீண்டும் பிரச்சினையை துவக்கி விட்டார்... சட்டசபை கூட்ட தொடருக்கு இப்போது அனுமதி இல்லை...  டிஸ்மிஸ் குறித்து மத்திய அரசு ஒரு முடிவுக்கு வ்ரும் வரை பொறுத்து இருக்கலாம் என சொல்லி விட்டார்... இதனால் வெறுத்துப்போன எடியூரப்பா ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு புனித யாத்திரை புறப்பட்டு சென்று விட்டார்


Wednesday, May 18, 2011

கர்னாடக அரசியலில் அதிரடி திருப்பம்- கவர்னர் , முதல்வர் சமாதானம்


கர் நாடகத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சி அமைத்தாலும் அமைத்தது.. தினந்தோறும் பிரச்சினைகள்தான்..
திடீரென சில எம் எல் ஏக்கள் ஆதரவை விலக்கி கொண்டனர்.. எனவே ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டது... ஆனால் சபானாயகர் அதிரடியாக செயல்பட்டு, எதிர்ப்பு எம் எல் ஏக்களை டிஸ்மிஸ் செய்து அரசை காப்பாற்றினார்.
இந்த டிஸ்மிஸ் செல்லாது என கோர்ட் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து மீண்டும் பிரச்சினை ஆரம்பித்தது.. கர்னாடக அரசை டிஸ்மிஸ் செய்ய கவர்னர் பரிந்துரைத்தார்... இதை எதிர்த்து முதல்வர் உள்ளிட்ட எம் எல் ஏக்கள் , அமைச்சர்கள் டில்லி விரைந்தனர்... 
கவர்னரை டிஸ்மிஸ் செய்ய கோரினர்..
இப்போது சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.. 

கர்நாடக பப்ளிக் கமிஷன் வைர விழா, பெங்களூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற கவர்னர் பரத்வாஜும், முதல்வர் எடியூரப்பாவும் ஒருவருக்கொருவர் சிரித்து பேசிக் கொண்டனர்.முன்னதாக விழாவிற்கு வந்த கவர்னரை, முதல்வர் நேரடியாகச் சென்று வரவேற்றார்.

இவ்விழாவில் கவர்னர் பரத்வாஜ் பேசியதாவது:கர்நாடக கவர்னராக நான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். என்னை ராஜினாமா செய்யச் சொல்ல யாருக்கும் உரிமையில்லை. என்னை பதவியிலிருந்து எடுக்க வேண்டுமென்றால், ஜனாதிபதியால் மட்டுமே முடியும்.கர்நாடக மாநில வளர்ச்சிப் பணிகள் திருப்தியாக உள்ளது. எனக்கு கர்நாடகத்தில் யாரும் விரோதிகள் கிடையாது. கவர்னர் அதிகாரத்திற்கு உட்பட்டு, என் கடமையை செய்து வருகிறேன். அதிகாரத்தை மீறி எதையும் செய்யவில்லை. நியாயமாக எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்துள்ளேன், செய்தும் வருகிறேன்.கர்நாடக மாநிலத்தில் கெங்கல் ஹனுமந்தய்யா, நிஜலிங்கப்பா, ஜாட்டி உட்பட சக்தி வாய்ந்த முதல்வர்கள் பணிபுரிந்துள்ளனர். அந்த வரிசையில், எடியூரப்பாவும் கர்நாடக வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறார். தினமும், 18 முதல், 20 மணி நேரம் வரை உழைக்கிறார்.கர்நாடக மக்களால் முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பெரும்பான்மை பலத் தை அவர் பெற்றிருப்பதால், எந்த பிரச்னையும் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்னை தேவையற்றது, பொறுத்தமற்றது. நாங்கள் அரசியல் சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். என் கைகள் சட்டத்தினால் கட்டப்பட்டுள்ளது. ஒரு விருந்தினர் கடவுளுக்கு சமமானவர். அந்த வகையில், கர்நாடகாவுக்கு விருந்தினராக வந்துள்ளேன்.எனக்கு கர்வமோ, ஆசையோ கிடையாது. அரசியலில் தலையிட்டு பெயர் வாங்கும் எண்ணமும் கிடையாது.கர்நாடக கவர்னர் பதவி வகிப்பதில் சந்தோஷப்படுகிறேன். மாநில காவல் துறை, மாவட்ட நிர்வாகங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.எனக்கும், எடியூரப்பாவுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. யாரையும் வேறுபாட்டுடன் பார்ப்பது கிடையாது. என் அலுவலக பியூன் முதல், செயலர் வரை அனைவரிடமும் அன்புடனும், பாசத்துடனும் பழகி வருகிறேன். இதையே நானும் எதிர்பார்க்கிறேன்.குறிக்கோளுடன் வாழ்ந்து, ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். நான் எந்த தவறும் செய்யவில்லை. ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.சட்டசபையில் ஓட்டெடுப்பு நடந்தபோது, கொஞ்சம் அவசரப்பட்டு விட்டனர். அப்போது, சபாநாயகர் எடுத்த முடிவு சரியாக அமையவில்லை என்றார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் எடியூரப்பா பேசியதாவது:நான் அரசியலுக்கு வருவதற்கு முன், அரசு துறையில் சாதாரண பணியாளராக பணிபுரிந்துள்ளேன். முதல்வரான பின், நான் நிறைய பாடம் கற்றுள்ளேன். வரும் இரண்டு ஆண்டுகளில், மாநில நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்துவேன். இந்த வகையில், அனைவருடனும் ஒத்துழைப்புடன் பணியாற்றுவேன் என்றார்.

கவர்னர் பேசும்போது, முதல்வரும், முதல்வர் பேசும்போது கவர்னரும் மாறி மாறி கைதட்டி தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மாலை, கர்நாடக ராஜ்பவனுக்குச் சென்று கவர்னர் பரத்வாஜை, முதல்வர் எடியூரப்பாவும், அமைச்சர்களும் சந்தித்து பேசினர். ஜூன் 2ம் தேதி, சட்டசபை கூட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

எப்படி இருந்த நான்....? மாறியது யார்-- கலைஞர் vs நெடுமாறன்

அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும்.  ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. 


தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று அரசியலுக்கு வந்து இருப்பார்.. இப்போது அவர் மீது ஆயிரம் தவறு சொன்னாலும், திராவிட ஆட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது... தீமைகளும் ஏற்பட்டுள்ளன...


பல தேர்தல் களங்களை கண்ட கலைஞருக்கு, இந்த தேர்தலின் போக்கு கண்டிப்பாக முன்பே தெரிந்து இருக்கும்...   எனவேதான் தேர்தல் முடிவுகளை பற்றி கவலைப்படாமல், எப்படி இருந்த தான் , இப்படி ஆகி விட்டேனே என்ற வேதனையில் ஓர் அறிக்கை வெளியிட்டு இருந்தார் அவர்.. அந்த காலத்தில் தன் சகாக்களாக இருந்தவர்கள் , இப்போது தன்னை விட்டு விலகி விட்டதை எண்ணி வருந்தி இருந்தார்.. அதில் அவரது தனிமையும் , வேதனையும் தெரிந்தது...




நண்பர்கள் ஏன் மாறினார்கள்.. நான் யாருக்கு என்ன தீமை செய்தேன் என்றெல்லாம் பரிதாபமாக புலம்பி இருந்தார்...


இதற்கு பழ நெடுமாறன் பதில் அளித்துள்ளார்...


இரண்டையும் பாருங்கள்..  


*************************************************************




சில நேரங்களில் சில மனிதர்கள் - கலைஞர் 




இதோ ஒரு கடிதம்! இதனை யார் எழுதியது? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது விளக்கிட இருக்கிறேன்.

என் வாழ்க்கையில் எத்தனையோ இனிய நண்பர்கள் - அரசியல் ஈடுபாடு காரணமாக - கலை, இலக்கிய தொடர்பு காரணமாக என்னுடன் பழகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் என் மீது எந்தக் குற்றமும் இல்லாமல், புராணீகர் மொழியிலே சொல்ல வேண்டுமென்றால் - விதி வசத்தாலோ அல்லது கால வித்தியாசத்தாலோ தோழமை உணர்வைத் துண்டித்துக் கொண்டார்கள் - நட்புச் சங்கிலியை அறுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் எதிர்முனையில் போய் நின்றுகொண்டு ஏசியும், பேசியும் எதிர்ப்புக் கணைகளை வீசியும் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நட்பாக இருந்தபோது - அவர்கள்மீது கொண்டிருந்த பாசத்தை - நேசத்தை - பல்லாயிரம் முறை, பல கோடி முறை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போயிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான்; நான் எப்பொழுதுமே அப்படித்தான்!

சிறையிலிருந்து கடிதம்

நட்பு அறுந்து போய்விட்டது என்பதற்காக - நாராச மொழிகளில் நான் அவர்களை அர்ச்சித்தது கிடையாது. ஆனால் அவர்கள் எப்படியெல்லாம் பேசினார்கள்? எப்படியெல்லாம் எழுதினார்கள்? இப்பொழுதுகூட அந்த முறையைத்தான் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். எப்படி இருந்தவர்கள் - என் மீது எவ்வளவு அன்பு செலுத்தியவர்கள் - இப்போது காரணமின்றி நம் மீது சேறு வாரி வீசுகிறார்களே என்று எண்ணிக் கொண்டே - நான் படித்து முடித்த - புத்தக அடுக்குகளைப் பிரித்துப் பார்க்கும்போது - அதில் உள்ள ஒரு கடிதத்தைக்கண்டு, வியப்பு மேலிட்டவாறு - அதைப் படிக்கத் தொடங்கினேன்.

அதுதான் இதோ அந்தக் கடிதம்! முரசொலிமாறன் உடல்நிலை கேடுற்ற நிலையில் இருந்தபோது இந்தக் கடிதம் எனக்கு ஒரு சிறைச்சாலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. எந்தச் சிறைச்சாலை? யார் எழுதியது? என்பதையெல்லாம் நீயே படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்!

"அன்பு கனிந்த தலைவர் கலைஞர் அவர்கட்கு,

சிறை வாழ்க்கையின் தனிமையும் வெம்மையும் எத்தகையது என்பதை என்னிலும் நன்குணர்ந்தவர் தாங்கள் என்பதால் "தொல்காப்பிய பூங்கா''வையே சிறைக்குள் அனுப்பி தமிழ் மணம் நுகர்ந்து மகிழச் செய்த தங்களின் உழுவலன்பு கண்டு நெகிழ்ந்தேன்.

மருத்துவமனையில் நான் இருந்த போது இள.புகழேந்தி என்னைச் சந்தித்து தங்கள் சார்பில் உடல்நலம் உசாவியதோடு "தொல்காப்பிய பூங்கா'' நூலினை அளித்தபோது பெரும் புதையல் கிடைத்த மகிழ்ச்சியடைந்தேன். நூலினைப் படிக்கப் படிக்க நோயும் மறைந்தது, தனிமையும் பறந்தது.

நண்பர் மாறன் உடல்நிலை பற்றிய கவலை ஒருபுறம் வாட்ட, தமிழ் மீது தாங்கள் கொண்டுள்ள கரை காணாக் காதல் மறுபுறம் தூண்ட, தொல்காப்பியப் பூங்காவைப் படைத்தளித்தப் பாங்கினைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

அச்சமூட்டிய தொல்காப்பியம்

முதுகலைப் பட்ட வகுப்பில் எனது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தொல்காப்பியம் - எழுத்து - நச்சினார்க்கினியமும், தங்களின் ஆசிரியராக விளங்கியவரும் எனக்கும் ஆசிரியராக இருந்தவருமான மகா வித்வான் ச.தண்டபாணி தேசிகர் தொல்காப்பியம் - சொல் - சேனாவரையமும் - பேராசிரியர் மு.அண்ணாமலை தொல்காப்பியம் - பொருள் - இளம்பூரணமும் கற்பித்தனர். ஆனாலும் தொல்காப்பியம் படிக்கப் புகும்போதே இனம்புரியாத அச்சமும், தயக்கமும் மாணவப் பருவத்தில் என்னை வாட்டியதுண்டு. பெரும் பேராசிரியர்கள் பாடம் நடத்தி ஒருவாறாக அச்சத்தைப் போக்கினர்.

அந்த நாளிலேயே நீங்கள் "தொல்காப்பிய பூங்கா'' நூலை எழுதியிருந்தால் தேவையற்ற அச்சமும், தயக்கமும் என்போன்றவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.

கற்றறிந்த புலவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய நூல் "தொல்காப்பியம்'' என்ற நிலைமையை மாற்றி அனைத்துத் தமிழர்களும் விரும்பிச் சுவைத்துப் படிக்கும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

தொல்காப்பியத்தின் சிறப்பை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக, தங்களுக்கே உரிய அழகுத் தமிழில், உருவகக் கதைகளாக வடித்துத் தந்துள்ள தங்களின் இந்தத் தொண்டு தமிழர்களால் என்றென்றும் நன்றியோடு நினைவுகூரப்படும் என்பதில் ஐயம் இல்லை. நூலினைத் திரும்பத் திரும்பப் படித்துச் சுவைத்தபோது நூறு மலர்களோடு நிறுத்திவிட்டீர்களே என்ற ஏக்கம்தான் ஏற்பட்டது.

சிறையிலிருந்தாலும் நினைவுகூர்ந்ததோடு தங்களின் பேரன்பினைப் பொதித்து நூலினை அனுப்பியமைக்கு என்றும் கடப்பாடுடையேன்.

தங்களை வாழ்த்தும் வயது எனக்கில்லை. தமிழன்னைக்கு மேலும் பல மலர்களைப் படைக்க வேண்டிக் கொண்டு, தங்களுக்குப் பல்லாண்டு! பல்லாண்டு! கூறுகிறேன்.

மாறன் பூரண நலம்பெற்றுத் தாயகம் திரும்பி, தனது பணியில் தொடர விழைகிறேன்.

பேராசிரியருக்கும், தம்பி ஸ்டாலினுக்கும் எனது அன்பைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

மீண்டும் எனது நன்றி!

அன்புள்ள,

பழ.நெடுமாறன்.

கடலூர் - சிறை,

14-2-03.

சில நேரங்களில்....

யார் எழுதிய கடிதம்? எப்போது எழுதிய கடிதம் என்பதை இப்போது புரிந்து கொண்டிருப்பாய்! இதைப்போல இன்னும் எத்தனையோ நண்பர்கள் எனக்கு உண்டு. ஆனால் அவர்களுக்கு நான் கனவில்கூட தீங்கு எண்ணாத நேரத்தில், அவர்கள் ஏன் தான் என் மீது ஒரு வெறுப்பை வளர்த்துக் கொண்டார்களோ, எனக்குத் தெரியாது! தேவையில்லாமல் என்னைத் திட்டி எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்!

ஆனாலும் நான் முதலில் எழுதியபடி அவர்கள் மீது துவேஷத்தை வளர்த்துக் கொள்ளவில்லை. எப்படி இருந்தவர்கள், இப்படி மாறி விட்டார்களே, அதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருக்கிறேன். இப்படிப்பட்டவர்களை நினைத்துத்தான் "சில நேரங்களில் சில மனிதர்கள்'' என்று என் நண்பர் ஜெயகாந்தன் எழுதினாரோ?

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.



********************************************************************************


பக்குவம் பத்தாது - பழ நெடுமாறன் 




மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம்.

 "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
 தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது.
 "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன்.
 ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள்.
 1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது.
 எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள். உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
 1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள்.
 ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
 காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும்.
 காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர்.
 ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
 தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை.
 இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே!
 கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள்.
 நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள்.
 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள்.
 1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை.
 பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது.
 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது.
 அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை.
 தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார்.
 அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்?
 நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்?
 தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா?
 இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா?
 முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே!
 உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன.
 திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது.
 ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை.
 உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள்.
 மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு?
 கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே.
 அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள்.
 பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது.
 தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா?
 ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்?
 ""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
 கருமமே கட்டளைக் கல்'' 

Monday, May 16, 2011

பழ கருப்பையா vs ஞானி - யார் சொல்வது சரி ?

கல்கி இதழில் எழுத்தாளர் ஞானி தனது கட்டுரையில்,  திமுகவுக்கும்  அதிமுகவுக்கும் சில ஆலோசனை கள் கூறி இருந்தார்..

சசிகலாவை துணை முதல்வர் ஆக்கக வேண்டும்.. அப்போதுதான் அவரை விமர்சிக்க முடியும்.. ஒரு நிழல் தலைவராக அவர் இருப்பது நல்லதல்ல என்பது ஜெயலலிதாவுக்கு  அவர் தந்த ஐடியா.

கலைஞர் ஒய்வு எடுத்து கொள்ள வேண்டும்.. ஸ்டாலினை தலைமையை அழகிரி உட்பட அனைவரும் ஏற்க வேண்டும்.. கலைஞரின் மற்ற குடும்பத்தினர் ஒதுக்கப்பட வேண்டும் என்பது கலைஞருக்கு அவர் தந்த ஐடியா..  தேர்தலுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை என்பதால், திமுக ஜெயித்தால் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என சொல்லி இருந்தார்..

இதற்கு பதில் அளிக்கும் விதமாக , அதிமுக எம் எல் ஏயும் , எழுத்தாளருமான பழ கருப்பையா விடுத்துள்ள அறிக்கை...

************************************************

கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞாநிக்கு என்ன வந்தது?- 
- பழ கருப்பையா

எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்களுக்குள்ள சிக்கல் வாரா வாரம் எதையாவது எழுதியாக வேண்டிய கட்டாயம்!
இந்த வாரம் ஒரு வாரப் பத்திரிகையில் ஸ்டாலின் முதலமைச்சராவதைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார் ஞாநி! கத்தரிக்காய் விற்பவன்கூட ஒரு முதல்வராக வருவதாகக் கற்பனை செய்து சில பக்கங்கள் நிரப்ப விரும்பும் எழுத்தாளர்களை யாரும் மறிக்க முடியாது.  ஆனால் அந்தக் கற்பனை நியாயப்படுத்தப்பட வேண்டாமா?
அலைக்கற்றை ஊழல் போன்ற, ஓர் இந்தியக் குடிமகனின் கற்பனைக்கெட்டாத அளவுக்கு 1.76 லட்சம் கோடி ஊழல் செய்த கருணாநிதியின் குடும்பம் மீண்டும் அதிகாரத்தை அடைந்தால், இந்த நாட்டை இனி விலை கூவி விற்றுவிட மாட்டார்களா? நினைக்கவே நெஞ்சு பதறும் இந்தக் கொடுமை மீண்டும் மக்களுடைய அறியாமையால்கூட பீடம் ஏறிவிடக்கூடாது என்று எச்சரிக்க வேண்டிய ஓர் எழுத்தாளன் அப்படி ஓர் ஊழல் நடந்ததாகவே கண்டுகொள்ளவில்லை என்றால் அந்த எழுத்தால் யாருக்கு என்ன பயன்?
ஆட்சி என்பது சிவப்பு விளக்குக் கார்களின் பவனி அல்ல! அது மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பு!
கடந்த ஆட்சிக்காலம் முழுவதும் நாடு பல மணி நேரம் இருளில் மூழ்கியது.  அம்மாவின் ஆட்சிக் காலத்தில் உபரி மின்சாரம் பக்கத்து மாநிலங்களுக்கு விற்கப்பட்டது!
புதிய தேவைப் பெருக்கத்தின் விளைவாக இந்த மின்வெட்டு என்றால் புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி மின்வெட்டை ஈடுசெய்ய மூன்றரையிலிருந்து நான்காண்டுகள் போதும்.  ஐந்தாண்டுகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில் மின்வெட்டு சென்னையையும் சேர்த்துக் கவ்விக் கொண்டதுதானே கண்ட பலன்!
உற்பத்தியைப் பெருக்காமல் புதிய கிராமங்களுக்கு கருணாநிதி அந்தக் காலத்தில் மின்சாரம் வழங்கியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்டபோது, கம்பி நீட்டுகிறார் கருணாநிதி என்று காமராசர் கேலி செய்தார்! கருணாநிதியின் ஆட்சித் திறன் அன்றும் இன்றும் இது தான்!
அழகிரியை, ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டு ஒரு மாநில அமைச்சராகப் பணியாற்றச் சொல்லுங்கள் என்று கருணாநிதிக்கு யோசனை சொல்கிறார் ஞாநி!
தா. கிருட்டிணன் தன்னைத் தானே வெட்டிக்கொண்டு செத்தார் என்பதும், மதுரை செய்தி அலுவலகத்தில் மூன்று பேர் தங்களைத் தாங்களே எரித்துக்கொண்டு செத்தார்கள் என்பதும் ஞாநியின் கருத்துப்போலும்!
இவ்வளவு பெரிய பாதகச் செயலைச் செய்தவர்கள் அரசியலில் இருக்கலாமா என்று கேட்க வேண்டிய ஞாநி, அழகிரி ஸ்டாலினின் தலைமையை ஏற்காவிட்டால் குடிமுழுகிப் போய்விடும் என்று கசிந்துருகுகிறார்!  அந்தக் குடி ஒன்றிணைந்து பணியாற்றி மீதிக் கொள்ளையை அடிக்க வேண்டுமானால் அழகிரி, ஸ்டாலினின் தலைமையை ஏற்பது இன்றியமையாதது என்று கருணாநிதிகூடச் சொல்லவில்லை.  ஞானி சொல்கிறார்!  கருணாநிதிக்கே இல்லாத கவலை ஞானிக்கு!
2006​ல் அம்மாவின் ஆட்சி இறுதிக் காலத்தில் தமிழ்நாட்டின் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 11.89 விழுக்காடு.  2011​ல் கருணாநிதி காலத்தில் ஆண்டுப் பொருளாதார வளர்ச்சி 4.49 விழுக்காடு.  நாட்டின் வளர்ச்சி மூன்றில் ஒரு பங்காகச் சரிந்துவிட்டது.  ஜார்க்கண்டிற்கும் சத்தீஸ்கருக்கும் கீழே தமிழ்நாட்டைக் கொண்டு போய்விட்ட தி.மு.க. ஆட்சி தொடர்வதற்கு யோசனை சொல்லும் எழுத்து தமிழ்நாட்டின் நலனில் அக்கறை உடைய எழுத்தாக இருக்க முடியுமா?
தன்னுடைய ஆட்சிக் காலத்தில் மழை நீ ர் சேமிப்பு உடனடி இன்றியமையாப் பணி என்று உணர்ந்த நிலையில் முதலமைச்சர் அம்மா மக்களை நெருக்கி அதை நடைமுறைப்படுத்தி அடி ஊற்றைப் பெருக்கச் செய்யவில்லையா? தான் செயல்படுவது மட்டுமல்ல; மக்களையும் செயல்படச் செய்பவர்தான் நல்ல தலைவர்!
தனியார் பள்ளிகளின் கட்டணத்தைச் சீர்படுத்த எண்ணிய கருணாநிதி அரசு குழு மேல் குழுவாகப் போட்டதுதான் கண்ட பலன்! இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க முடிந்ததா? மாணவர்களின் துயரத்தைப் போக்க முடிந்ததா? பராசக்திக்கு வசனம் எழுதுவது வேறு, ஆட்சித் திறன் என்பது வேறு!
சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு கர்நாடகத்திலிருந்து பணம் வருத்தி தூதுவர்கள் மூலம் கொடுத்து, மீதி யானைகளையும், மீதி அதிகாரிகளையும் கொல்வதற்கு வழிவகுத்துக் கொடுத்த பரிவில்லாக் கோழை கருணாநிதி.  அவனைச் சுட்டுக்கொன்று சந்தனக் காடுகளையும், யானைகளையும் காத்த வீராங்கனை அம்மா! எது ஆட்சித் திறன்? சொல்ல வேண்டாமா ஞாநி?
ஜெயலலிதா நாட்டுப் பணியாற்றுகிறவர்கள்; அவர்களின் காரியங்களைப் பார்க்க ஒரு நம்பிக்கையான ஆள் வேண்டும்.  ஜெயலலிதாவை எந்த நேரமும் நெருங்கி நல்லது கெட்டதை அறிந்து செயல்பட வேண்டும். ஜெயலலிதா ஒரு பெண்.  தன்னந்தனியாக வசிப்பவர்கள்.  அவர்களை எந்த நேரத்திலும் நெருங்கிச் செயல்படவும், துணையாக உடனிருக்கவும் இன்னொரு பெண்ணால்தான் இயலும். அந்தத் தேவையை நிறைவு செய்கின்ற ஊழியராக, தோழியாக, உடன்பிறவாச் சகோதரியாக 27 ஆண்டுகளுக்கு முன்பே வந்தவர்கள் சசிகலா!
நேற்றுவரை கனிமொழியும் ஆ.ராசாவும்  வேறோ? நான் வேறோ? என்று பாட்டுப் பாடினார்கள்.  இன்று நீதிமன்ற நெருக்கடி வந்துவிட்டது என்றவுடன்  யாரோ? நான் யாரோ? என்று அறுத்துக் கொண்டு விட்டார்கள்! இதுதான் கோபாலபுரத்துப் பண்பாடு.
மெல்லுவதற்கு எதுவும் இல்லாதபோது சசிகலாவை இழுத்துவைத்துப் பேசுவது சில எழுத்தாளர்களின் இயல்பு!
வாசந்தி, ஜெயலலிதாவைப்பற்றி எழுதி இருந்த நூலுக்கு ஜெயலலிதா உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருப்பதை, சகிப்பு மனப்பான்மை அற்ற தன்மை என்கிறார் ஞாநி!
ஜான்சனோடு பாஸ்வெல் இரண்டறக் கலந்து அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அம்மாவோடு வாசந்தி பழகியவருமில்லை; அவரை அறிந்தவருமில்லை!
ஜெயலலிதாவின் தனி வாழ்க்கை குறித்த செய்திகளை வாசந்தி அறிந்திருக்க நியாயமில்லை.  ஜெயலலிதாவிடம் கேட்டறிந்து எழுதியிருக்க வேண்டும் அல்லது தன்னிடமிருந்த செய்திகளை ஜெயலலிதாவிடம் சரிபார்த்துக் கொண்டிருக்க வேண்டும்! அதுதான் எழுத்து தருமம்!
புத்தகத்தில் சூடேற்றுவதற்காகத் தாறுமாறான செய்திகளை உண்மைபோல் சொல்ல முற்பட்டால், அந்தப் புத்தகத்தின் பிறப்பைத் தடுத்து நிறுத்துவது அறிவுலகின் கடமை!
உண்மைக்கும் உண்மைத் திரிபுக்கும் வேறுபாடு தெரியாமல் வாசந்திக்குப் பரிந்து நிற்கிறார் ஞாநி! வாசந்தியின் எழுத்து உண்மைத் திரிபு! ஈழத்தைச் சுடுகாடாக்கத் துணை நின்ற கருணாநிதி ஒரு தமிழினத் துரோகி அவருடைய ஆட்சி தொடர்வதை ஒரு பேச்சுக்காக ஏற்றுக்கொண்டு எழுதுவதைப் படிக்கும்போதுகூட அடிவயிற்றில் குமட்டுகிறது!
கருணாநிதியுடன் நாளும் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு, அவரைப் புகழ்கிற விழாக்களுக்கெல்லாம் சென்று முதல் வரிசையில் அமர்ந்து கைதட்டிவிட்டு, ஓட்டை இரட்டை இலைக்குத்தானே போட்டிருக்கிறார் ரஜினிகாந்த்!
இதுதான் நாட்டின் மனநிலை!புரிகிறதா ஞாநி?

Sunday, May 15, 2011

கணிப்பு தவறியது ஏன்? நக்கீரன் கோபால் விளக்கம்

தேர்தலும் கருத்து கணிப்பும் பிரிக்க முடியாதவை... பலரும் கருத்து கணிப்புகளை வெளியிடுகிறார்கள்...

சில பலிக்கின்றன.. சில பலிப்பதில்லை...

தாம் சொன்னது நடந்து விட்டால், அந்த பெருமையை ஏற்றுகொள்ளும் பத்திரிக்கைகள், அது நடக்காவிட்டால், விளக்கம் எதுவும் அளிப்பதில்லை..

இந்த நிலையில் நக்கீரன் கணிப்புகள் வெளி வந்து இருந்தன.. அந்த அடிப்படையில், திமுகதான் வெல்லும் என தேர்தல் முடிவு வெளிவரும் சற்று முன்பு கூட நம்பிக்கையுடன் சொல்லிக்கொண்டு இருந்தார் நக்கீரன் கோபால்..

ஆனால் அவர் நம்பிக்கை பொய்த்தது...

ஓகே...இதற்கு விளக்கம் அளிப்பாரா , அல்லது இதை அப்படியே மறந்து பத்திரிக்கை “ தர்மத்தை “ காப்பாரா என எதிர்பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி..
முதல் பக்கத்திலேயெ , நடந்த த்வறுக்கு வருத்தம் தெரிவித்து இருக்கிறார்..

அவரை பாராட்டுவது நம் கடமை..வேறு யாரும் இப்படி செய்து நாம் பார்த்தது இல்லை...

இதோ.. அவர் விளக்கம்

************************************

வருத்தம்

சென்ற தேர்தல்களில் நக்கீரன் கணிப்புகள் நூற்றுக்கு நூறு சரியாக இருந்ததை வாசகர்களும், அரசியல் பிரமுகர்களும், மக்களும் மறக்கவில்லை.. ஆனால் இந்த முறை தவறி விட்டது.

கருத்து கணிப்புகளை மேற்கொள்வதற்கு என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்படுமோ அதே விஞ்ஞான முறையையே கையாண்டோம். முடிவுகளை பாரபட்சமின்றி வெளியிட்டோம்..

தற்போது ஏன் சர்வே தோற்றது என்பதை ஆராய்ந்தோம். சாம்பிள்களில் தவறா, எடுக்கப்பட்ட முறை தவறா, சர்வே முடிவை தொகுதிகளாக மாறுவதில் தவறா என வல்லுனர்களிடம் கேட்டோம். இதெல்லாம் சரியாகவே இருப்பதாக அவர்கள் கூறினர்.
பிறகு ஏன தோல்வி ஏற்பட்டது என ஆராய்ந்தோம்.. நாம் தனியார் நிறுவனங்களை நம்பாமல் நேரடியாக சர்வே செய்தோம். சர்வே படிவத்தின் தலைப்பில் நக்கீரன் என்ற பெயர் இருந்தது. எனவே மக்கள் உண்மையான முடிவை சொல்லாமல், ஜெயலலிதாவுக்கு நக்கீரன் எதிரி என கருதி, மாற்றி சொல்லி இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.. இதனால்தான் கணிப்பு தவறி விட்டது..

என்ன காரணம் சொன்னாலும் தவறு தவறுதான். இதை நேர்மையுடன் ஒப்புக்கொண்டு நக்கீரன் தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவு அளீக்க வேண்டும் என கேட்டு கொள்கிறது.

*******************************************************

 நக்கீரனுக்கு நம் பாராட்டுக்கள்....


என்ன செய்ய போகிறது திமுக ..

தமிழ் நாட்டு அரசியல்  வரலாற்றில் ஆளுங்கட்சி , எதிர் கட்சி என்பதை தாண்டி மூன்றாவது கட்சியும்  குறிப்பிட இடம் பெற்று வந்து இருக்கிறது.
இந்த மூன்றாவது இடம் என்பது முக்கியமானது.. ஆனால் வெகு சில கட்சிகளே இதை உணர்ந்து செயலாற்றி பயன் பெற்றுள்ளன... நாட்டுக்கும் சேவை செய்துள்ளன.. சில கட்சிகள் அந்த வாய்ப்பை வீணடித்துள்ளன...

சற்று சுருக்கமான வரலாற்று பார்வை..

1 . அசத்திய அறிஞர் அண்ணா 

 சுதந்திரம் வாங்கி கொடுத்த கட்சி என்ற பெயரில் வலுவான ஆளுங்கட்சியாக இருந்தது காங்கிரஸ்.. அப்போது இரண்டாவது இடத்தில் இருந்த கட்சிகளால் காங்கிரசுக்கு சவாலாக இருக்க முடியாத நிலையில், மூன்றாவது இடத்தில் திமுக தான் , சவாலாக இருந்தது... காலப்போக்கில் ஆட்சியை பிடித்தது...

தமிழ் வளர்ச்சி, சமூக நீதி போன்ற நன்மைகளுக்கும் காரணமாக இருந்தது...

2 எதிர் நீச்சலில் வென்ற எம் ஜி ஆர்..

அதன் பின் திமுக ஆளுங்கட்சியாகவும், காங்கிரஸ் எதிர்கட்சியாகவும் இருந்தன.. இவை இரண்டையும் மீறி மூன்றாவது அணியாக புறப்பட்ட எம் ஜி ஆர், மூன்றாம் இடத்தில் ஒரு போதும் இருக்கவில்லை.. ஆரம்பத்திலேயே முதல் இடத்தை பிடித்தார்.. காங்கிரஸ் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது..

3. சொதப்பிய காங்கிரஸ்

மூன்றாவது கட்சி என்ற பொறுப்பு மிகுந்த வேலையை காங்கிரஸ் சரியாக செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும்... அதிமுக , திமுக என மாறி மாறி கூட்டு வைத்தல், தற்காலிக பலன்களை மட்டுமே பார்த்தல் போன்ற தவறான நடவடிக்கைகளால், மூன்றாவது இடத்தை சிறிது சிறிதாக , தே மு திகவிடம் இழந்தது

4 வெற்றி பாதையில் விஜய்காந்த் 

திமுக , அதிமுக வுக்கு அடுத்த மூன்றாவது இடத்துக்கு பாஜக , கம்யூனிஸ்ட் , என எத்தனையோ கட்சிகள் முயன்று பார்த்தாலும் , அந்த இடத்தை பிடித்தவர் விஜய்காந்த்தான்.
2006 தேர்தலில், பல இடங்களில் வெற்றி தோல்வியை மாற்றி அமைத்தார் அவர்.. அதன் பின் திமுக ஆட்சிக்கு வந்தாலும்,  மூன்றாவது கட்சி என்ற இடத்தை செம்மையாக பூர்த்தி செய்து, படிப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறார் இவர்..

இந்த தேர்தலில் கிடைத்த இடங்களை வைத்து மட்டும் அல்ல... அவரது ஓட்டு வங்கியை வைத்தும் சொல்லலாம்...  தனித்து நின்றால் திமுகவை விட அதிக ஓட்டுக்களை பெறக்கூடிய நிலையில் இருக்கிறார்... வலுவான கூட்டணி அமைந்தால், அதிமுகவை மிஞ்சும் வாய்ப்பும் இருக்கிறது...

5 என்ன செய்ய போகிறது திமுக ..

இன்றைய நிலயில், அதிமுக மற்றும் தேமுதிக வுக்கு அடுத்த நிலையில், மூன்றாவது நிலையில் இருக்கும் திமுக, என்ன செய்ய போகிறது என்பதே கேள்வி..

மூன்றாம் இடம் என்பது ஆபத்தான் இடம்..   காங்கிரஸ் போல நடந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாம் இடத்தியும் இழக்க போகிறதா அல்லது அண்ணா காலத்தில் இருந்தது போல போர் குணத்துடன் , நேர்மையுடன்  நடந்து கொள்ளப்போகிறதா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்... 

Saturday, May 14, 2011

திமுக தலைமையில் மூன்றாவது அணி?

தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம்தான். ...அதை தாண்டி அடுத்து என்ன என்பதை பார்க்க வேண்டும்..

தமிழ் நாட்டில் மூன்றாவது அணி என்பது ஒரு டம்மி அணியாக , ஒரு கனவாகவே இருந்து வந்தது.. ஆனால் இந்த தேர்தல் முடிவுகள் மூன்றாவது அணிக்கு உயிர் கொடுத்துள்ளன..

சீட்டு எண்ணிக்கையிலும், ஓட்டு எண்ணிக்கையிலும் தேமுதிக தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது... ஆனால் திமுக, காங்கிரஸ் , பாமக, வி சி போன்ற கட்சிகள் தேமுதிக தலைமையை ஏற்று , எதிர்கட்சிகளாக செயல்படுமா என்பது சந்தேகமே..

இந்த நிலையில் திமுக மூன்றாவது அணி அமைப்பதை தவிர வேறு வழி இல்லை... ஆட்சி இல்லாத நிலையில் அதில் எத்தனை பேர் சேருவார்கள் என்பது சந்தேகத்துக்கு உரியது... அதே போல, தனித்து நின்று தேமுதிக பெற்ற வாக்குகளை , தனித்து நின்று திமுக பெற முடியுமா என்பதும் சந்தேகமே... இது வரை அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி அமைத்தே போட்டி இட்டு இருக்கிறது...

இதை பயன்படுத்தி, மூன்றாவது அணி தலைமையை ஏற்க காங்கிரஸ் முயலக்கூடும்.. தன் தலைமையின் கீழ் திமுகவை கொண்டு வர முயலக்கூடும்.. ஆனால் இது வெற்றி பெறாது... கலைஞருக்கு இருக்கும் தலைமை அனுபவம் காங்கிரசுக்கு இல்லை...

அல்லது அனைவரும் விஜய்காந்த் தலைமையில் ஆக்க பூர்வ எதிர்கட்சிகளாக செயல்பட வேண்டும். இதற்கு திமுகவின் ஈகோ இடம் கொடுக்காது..

எனவே திமுக தலைமியிலான மூன்றாவது அணி காலத்தின் கட்டாயம். 

Thursday, May 12, 2011

உலகை படைத்தது கடவுளா? அறிவியலா?- சூப்பர் புத்தகம்

 In the beginning there was neither existence
nor non-existence,
All this world was un manifest energy . . .
The One breathed, without breath, by Its own
power Nothing else was there . . .
— Hymn of Creation, The Rig Veda
 
எத்தனையோ அறிவியல் புத்தகங்கள் வந்துள்ளன. அதில் சற்றே வித்தியாசமான புத்தகம்தான் , ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியுள்ள த கிராண்ட் டிசைன் என்ற புத்தகம்..
ஏன் அப்படி சொல்கிறேன்… ? காரணம் இருக்கிறது..
உலகம், இந்த பிரபஞ்சம் எப்படி தோன்றியது… நாம் எப்படி உருவானோம் என்பது மனித இனத்தின் நீண்ட நாள் தேடல்… எப்படி தோன்றியது என்பது ஒர் கேள்வி என்றால் ஏன் தோன்றியது என்பது இன்னும் சுவாரஸ்யமான கேள்வி..
இதற்கு ஆன்மீகம் சில விடைகளை தருகிறது… அறிவியல் சில விடைகளை தருகிறது… ஒரு தரப்பு சொல்வதை இன்னொரு தரப்பு ஏற்பதில்லை.
எனவே இது சம்பந்தமாக எழுதப்படும் புத்தகங்கள் பெரும்பாலும் ஒரு தலைப்பட்சமாக இருக்கும்.  தகவல்களை மறைத்தோ, திரித்தோ எழுதுவார்கள்…
இந்த நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியல் மேதை , இந்த டாபிக் குறித்து என்ன எழுதி இருக்கிறார் என தெரிந்து கொள்ளும் ஆவலுடன் புத்தகத்தை புரட்டினேன்..
படிக்க படிக்க சந்தோஷம் , வியப்பு, பரவசம், என பல்வேறு உணர்ச்சிகள் ஏற்பட்டன…
 
அவர் என்னதான் சொல்கிறார்…
பாருங்கள்…
 
  • உலகத்தை படைக்க கடவுள் தேவை இல்லை… இயற்பியல் விதிகளே போதுமானவை…
  • உலகை யாரேனும் ஒருவர் உருவாக்கி இருக்க முடியாது.
  • கடவுள் உலகை உருவாக்கி இருந்தாலும், அவர் இஷ்டத்துக்கு உருவாக்கி இருக்க முடியாது..இயற்பியல் விதிகளுக்கு கட்டுப்பட்டே அவர் செயலாற்றி இருக்க முடியும்..
சரி…
இதை எல்லாம் சொல்லி விட்டு , வேறு என்ன சொல்கிறார் என்பதே புத்தகத்தை சுவை மிக்கதாக்குகிறது..
  • ஒன்றும் இல்லாத நிலையில் இருந்தே ( சூனியத்தில் இருந்தே ) உலகம் தோன்றி இருக்கிறது… உலகம் அழிந்து சூனியம் ஆகி விட்டாலும், அந்த சூனியத்தில் இருந்து மீண்டும் உலகம் தோன்றும்.
  • அறிவியல் சொலவ்து எல்லாம் முழு உண்மை என சொல்ல முடியாது… ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து உலகை பார்க்கும் மீன், தன் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ அதைத்தான் உண்மை என நம்பும்.. அதை பொருத்தவரை அதுதான் அதற்கு அறிவியல் உண்மை. அதே போல , நம் புலன்களுக்கு புலப்படும் விஷ்யங்களை வைத்து சில முடிவுகளுக்க்கு வருகிறோம். இது முழு உண்மை என சொல்ல முடியாது… நம் புலன்கள் சார்ந்த உண்மைதான் இது..
  • சில விஷயங்களை தீர்மானமாக கண்டு பிடிக்கவே முடியாது
  • சில பொருட்களை பார்க்க முடியாது.. சில சோதனைகள் மூலம் அவை இருக்கின்றன என நிரூபிக்க முடியும்
  • நாம் செய்யும் சோதனை ,  சோதனையின் முடிவை பாதிக்க கூடும்..
  • காலம் என்பது மாறக்கூடியது… ஒருவருக்கு நூறு வருடங்கள் என்பது இன்னொருவருக்கு ஒரு நாள் ஆக இருக்கலாம் ( சில சினிமாக்களை பார்க்கும் போது வெகு நேரம் படம் ஓடுவதாக தோன்றும். சில படங்கள் சீக்கிரம் முடிவது போல இருக்கும். இது மன ரீதியானது… புத்தகம் பேசுவது இதை அல்ல )
  • க்ரியேஷன் என்பதன் சாத்தியக்கூறுகள் எண்ணற்றவை… ஒவ்வொன்றும் அதனதன் அளவில் உண்மைதான்..
  • அறிவியலின் ஆழத்துக்கு செல்ல செல்ல, நம் அன்றாட வாழ்வின் உண்மைகள் அர்த்தம் இழக்கின்றன….
இதை எல்லாம் படித்தால், அறிவியல் போல தோன்றுகிறதா அல்லது ஆன்மீகம், தத்துவம் போல தோன்றுகிறதா?
அறிவியல் பூர்வமாக உலகம் எப்படி தோன்றியது? கடவுள் இருக்கிறாரா? பிரபஞ்சம் என்பது என்ன? காலம் என்பது என்ன? விரிவாக அடுத்த பதிவில்…
(தொடரும் )

Monday, May 9, 2011

ஒசாமாவுக்காக தொழுகை - என் கருத்து

1 அன்றொரு நாள் ஒரு நண்பனிடம் இருந்து தொலை பேசி அழைப்பு.

“ டேய்.. ச்தாம் ஹுசைனை கொன்னுட்டாங்கடா.... டி வில காட்டுறாங்க..என்னால் பார்க்க முடியல.... ”

கேட்ட எனக்கு அதிர்ச்சி...

எனக்கும் சதாம் ஹுசைனை பிடிக்கும்... அவர் மீது சிலருக்கு விமர்சனங்கள் இருக்கலாம்.. ஆனால் அவரை எனக்கு பிடிக்கும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்..  அன்று  முழுதும் மனதுக்கு கஷ்டமாக இருந்தது..

2 இன்னொரு நண்பன் இதே போல கால் செய்தான், அமெரிக்காவில் அல் குவெய்தா தாக்குதல் நடத்தியபோது...

அமெரிக்காவுக்கு செம நோஸ் கட் என குதூகலித்தான்... ஆனால் அவனுடன் என்னால் ஒத்து போக முடியவில்லை... அப்பாவிகளை கொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை.. ஆனால் அவனுக்கு அமெரிக்கா அடி வாங்கியதில் மகிழ்ச்சி....

3. இப்போது இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது எனக்கு ஈர்ப்பு இல்லை.. ஆனால் இம்ரான்கான் தலைமியில், வாசிம் அக்ரம் , சலீம் மாலிக், வக்கார் யூனுஸ் போன்றவர்கள் இருந்த டீம் என்க்கு மிகவும் பிடிக்கும்...

***********************************************************

இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் மனிதனின் விருப்பு வெறுப்புகள் எப்படியும் இருக்கலாம்...   இதை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும்...

இந்த உரிமை எல்லோருக்கும் இருக்கிறதா என்பது கேள்வி குறி..

 மேற்கண்ட 3 அம்சங்களில் எல்லோராலும் வெளிப்படையாக கருத்து சொல்ல முடியாது என்பதே உண்மை..

சமீபத்தில் , ஒசாமா பின் லேடன் மறைவை ஒட்டி இறுதி சடங்குகளை சிலர் சென்னையில்  நடத்தினர் சிலர்..எங்கோ இறந்தவருக்கு இங்கு நடத்தி என்ன பயன் என கேட்பதில் பயன் இல்லை... எம் ஜி ஆர் மறைவுக்கு பலர் இறுதி சடங்குகளை ஆங்காங்கு நடத்தவில்லயா?

அதுவல்ல பிரச்சினை..

மதம் என்பதை தாண்டி சிலரை சிலருக்கு பிடித்து இருக்கலாம்.. அதை அவரவரர்கள் நம்பிக்கையை ஒட்டி வெளிப்படுதவும் செய்யலாம்.இது இயல்பானது...

இது த்வறு என நினைத்தால் , அவர்களை விமர்சிக்கலாம்... ஆனால் அவர்கள் நம்பிக்கைகளை, அவர்கள் மதத்தை விமர்சிப்பது தவறு...

என்னை பொறுத்தவரை ஒசாமாவை ஏற்கவில்லை..

ஆனால் அவரை போற்றும் நண்பர்கள் பலரை பெற்று இருக்கிறேன்... அதை அவர்கள் பெருமையாக சொல்வதையும் ஏற்கிறேன்..

ஆனால் இஸ்லாமிய நண்ப்ரகள் இது போன்ற விஷ்யங்களில் பொதுவான கருத்துக்களை சொல்ல முடியாமல் இருப்பதை பார்த்து வருந்துகிறேன்

Sunday, May 1, 2011

நர்சிம் – என் கருத்து

 

தமிழர்களுக்கே உரிய மனோபாவம் ஒன்று இருக்கிறது. ஒருவரை ஏன் பாராட்டுகிறோம் என்று புரியாமலேயே பாராட்டுவது , ஏன் திட்டுகிறோம் என புரியாமலேயே திட்டுவது..

உதாரணமாக யாராவது ஒரு சாமியாரை எல்லோரும் புகழ்வார்கள்.. அந்த சாமியார் யாராவது ஒருவரை புண்படுத்தி விட்டார் அல்லது ஏமாற்றி விட்டார் என்றால் சம்பந்தப்பட்டவர் திட்டினால் அது நியாயம். ஆனால் , அவரால் நன்மை அடைந்தவர்கள் கூட அவரை திட்ட ஆரம்பித்து விடுவார்கள்..

எனக்கு தெரிந்து, ஒரு சாமியார் பெயரால் , அவர் சொல்லி கொடுத்த வழிமுறைகள் படி, இயற்கை வைத்திய சாலை ஒன்று நடத்தி வந்தனர் சிலர்.. அதனால் பலர் பயன் பெற்றும் வந்தனர்.. ஒரு நாள் அந்த சாமியார் சர்ச்சையில் சிக்கினார்.. அவ்வளவுதான்… அந்த வைத்திய சாலையில் இருந்த சாமியார் படம் அகற்ற பட்டது..

இவர்களுக்கும் அந்த சாமியார் சர்ச்சையில் மாட்டிய விவாகரத்துக்கும் சம்பந்தம் இல்லை… அவரால் இவர்கள் பலன் தான் அடைந்தனர்.. ஆனாலும் அவரை கை கழுவி விட்டனர் அவர்கள்…

எல்லா துறையிலும் இது போல பார்க்க முடியும்.. நம் கருத்துகள் பிறர் பார்வையிலேயே அமைகின்றன..

 

இந்த பின்னணியில் நண்பர் நர்சிம் அவர்களை பற்றி சொல்ல விரும்புகிறேன்..

அவர் நல்லவர்… கவி உணர்வு படைத்தவர் , தமிழ் ஆர்வம் மிக்கவர் என்பது பலருக்கு தெரியும்..

ஒரு கவிதையில் சந்தேகம் கேட்டதற்காக , தன் வேலைகளுக்கு இடையில் நேரம் ஒதுக்கி, எனக்கு கால் செய்து பல நிமிடங்கள் விளக்கம் அளித்தவர் அவர் என்பது பலருக்கு தெரியாது… அந்த விளக்கத்தில் தமிழ் அருவியாக கொட்டியது.. அதில் பல கேள்விகளை பிறகு கேட்டேன்.. அத்தனைக்கும் விளக்கம் அளித்தவர் அவர்..

அவர் தமிழால் கவரப்பட்டவர்கள் பலர்…

இதை தவிர அவரது நல்ல மனம் , உதவும் குணம் போன்றவற்றையும் அறிந்தவர்கள் பலர்..

இந்த நிலையில், அவரது சில நண்பர்கள் , நட்பின் உரிமையால், நட்பு சார்ந்த கோப தாபங்களால் , அவரை கண்டித்து எழுத வேண்டிய நிலை.. அது நண்பர்கள் என்ற முரையில் அவர்கள் உரிமை…

ஆனால் இதை வைத்து அவரை ஒட்டு மொத்தமாக தவறாக நினைத்து விமர்சிக்கின்றனர் , இந்த விவாகரத்தில் சம்பந்தப்படாத , சிலர்..  இது முற்றிலும் தவறு..

ஒரு மனிதன் என்ற முறையில் நர்சிம் மீது எந்த தவறும் இல்லை… மாறாக  நேர்மையுடன் நடந்து கொண்டுள்ளார்… யாரையும் ஏமாற்றவில்லை.. பலருக்கு நன்மைதான் ஏற்பட்டு இருக்கிறது..

ஆனால் நண்பர்கள் என்ற முரையில் சிலருக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை அவர் நிறைவேற்ற தவறி இருக்க கூடும்… ஒரு பொது மனிதன் என்ற நிலையில், தன்னை பற்றிய முழு விபரத்தையும் அப்படியே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை…  ஆனால் நண்பன் என்ற முரையில் சிலர் இதை எதிர்பார்ப்பார்கள்.. இது அவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டியது..

இதை வைத்து ஒட்டு மொத்தமாக அவர் மீது சேறை வாரி இறைப்பது ஏற்க தக்கதல்ல…

அக்கறையோடு சிலர் வைக்கும் விமர்சனங்கள் நல்லதுதான்.. அது வேறு விஷயம்..

என்னை பொருத்தவரை, நண்பர் நர்சிம் அவர்களுக்கு என தார்மீக ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா