Wednesday, May 30, 2012

ஊட்டியில் ராமாயணம், அடுத்து பாண்டிசேரியில் பகவத் கீதையா- பீதியில் இலக்கிய வாசகர்கள்

சிவகுமாரின் கம்ப ராமாயண சொற்பொழிவை கேட்டதில் இருந்து , பலருக்கும் ராமாயணத்தை பற்றி தெரிந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.

ஆனாலும் ஊட்டியில் அமர்ந்து கொண்டு , சிலர் ராமாயண விளக்கம் அளித்தனர் என கேள்விப்பட்டபோது நடு நிலை இலக்கிய வாசகர்கள் குழம்பி போனார்கள். எந்த இடத்தில் எதை பேசுவது , என்ன செய்வது என்று ஒரு இது இருக்கிறதா இல்லையா.

பிரபல திரைப்பட வசனகர்த்தா திரு, ஜெயமோகன் அழைப்பின் பேரில் நடந்த சந்திப்பில்தான் இந்த கூத்து நடந்தது.

இதை கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் , ஒரு வேளை பாண்டிசேரியில் , சாரு வாசகர் கூட்டம் நடத்தினால் அங்கு பகவத் கீதை பற்றி விளக்க உரை அளிக்கப்படுமா என பீதியுடன் கேட்டார்.

பகவத் கீதை படிக்க வேண்டுமானால் வீட்டில் உட்கார்ந்து படி. பாண்டிச்சேரில் ப்கவத் கீதை படிக்க பாண்டிச்சேரிக்கு ஏன் போக வேண்டும் என எரிச்சலாக கேட்டேன்.

அவர் சொல்லித்தான் , ஜெய மோகன் வெப் சைட் பார்த்தேன். கம்ப ராமாயண விபரம் அறிந்தேன்.

படித்து சிரித்து கொன்டேன்..

 அவர் எழுதுகிறார்

ஒவ்வொரு கூட்டத்துக்கும் இருபதுபேர்வரை புதியவர்கள் வருவதுண்டு. அவர்களில் பெரும்பாலானவர்கள் கூட்டம் மிக அற்புதமாக நடந்தது என்று சொல்வார்கள். ஆனால் அடுத்த கூட்டத்துக்கு வருவது இல்லை.



எப்படி வருவார்கள் ?  நவீன இலக்கிய போக்குகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் அல்லது ஊட்டியின் அழகை ரசிக்கலாம்  , அல்லது ஜெயமோகனின் சினிமா அனுபவங்க்களை தெரிந்து கொள்ளலாம் என வந்து இருப்பார்கள். சம்பந்தமே இல்லாமல் கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால் என்ன அர்த்தம் ? அதை பேச அதுவா இடம்?


அறிவாளிகளுக்கு மட்டும்தான் இந்த நிகழ்ச்சி  நன்றாக இருக்கும் , என செக் வைத்து விடுவதால் , பலரும் நிகழ்ச்சி சூப்பர் என மையமாக சிரிக்கின்றனர். சரி, கம்ப ராமாயணத்தை விளக்குங்கள் என கேட்டால் சொல்ல தடுமாறுகிறார்கள்..


கம்ப ராமாயண உபன்யாசத்துக்கு போகிறோம் என வைத்து கொள்ளுங்க்கள் . அங்கே சினிமாவை பற்றி பேசினால் திகைப்பு ஏற்படதா?

அது போல சினிமாக்காரர் ஒருவர் நடத்தும் சந்திப்பில் , கம்பராமாயண பேசியது பலரை திகைக்க வைத்துள்ளது.

பாண்டிச்சேரிக்கு அழைத்து சென்று , பகவத் கீதை சொற்பொழிவு ஆற்றாமல் இருக்க வேண்டுமே என்பதே நடு நிலையாளர்களின் தற்போதைய பதைபதைப்பு..

Tuesday, May 29, 2012

என் இதயம் கவர்ந்த பேரழகி - வேறு யாரும் சைட் அடித்தால் நடப்பதே வேறு.


கலீல் ஜிப்ரான் தன் இதயம் கவர்ந்த பேரழகியை பற்றி சொல்கிறார். வேறு யாராவது சைட் அடித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்கிறார்.

படித்து பாருங்கள்..

*****************************************************************



வசீகரக்காரி - கலீல் ஜிப்ரான் 

என் இதயம் கவர்ந்த பேரழகி இந்த தனியறையில்தான் நேற்று அமர்ந்து இருந்தாள். கண்ணாடி கோப்பையில் ஒயின் அருந்தியவாறு , இந்த இருக்கையில்தான் , தன் அழகு மேனியை சாய்த்து இருந்தாள்.

இது நேற்றைய கனவு. காரணம் என் இதயம் கவர்ந்த தேவதை தொலை தூரம் ஒன்றுக்கு போய் விட்டாள்.

என் கண்ணாடியில் இன்னும் அவள் விரல் ரேகை தடம் இருக்கிறது. அவள் மூச்சின் நறுமணம் இன்னும் என் ஆடைகளை விட்டு நீங்கவில்லை. அவளது தேனினும் இனிய குரலின் எதிரொலி இன்னும் என் அறைகளில் கேட்கிறது.

ஆனால் என் இதய ராணி , தனிமை வெறுமை ஆகியவற்றில் என்னை விட்டு விட்டு எங்கோ சென்று விட்டாள்.


என் படுக்கை அறையில்  அவள் ஓவியம் தொங்குகிறது. அவள் எனக்கு தீட்டிய காதல் மடல்களை , பவளங்களும் முத்துகளும் பொதிக்கப்பட்ட வெள்ளி பெட்டியில் பாதுகாத்து வைத்து இருக்கிறேன். இவை அனைத்தும் நாளை வரை என்னுடன்தான் இருக்கும் - காற்று அடித்து செல்லும் வரை . அதன் பின் நிசப்தம் மட்டுமே கோலோச்சும்.

நான் காதலிக்கும் அந்த பெண் , நீங்களும் உங்கள் இதயங்களை பறி கொடுத்த பெண் போன்றவள்தான். அவள் அழகு விசித்திர தன்மை கொண்டது- கடவுளே வடிவமைத்தது போல. பறவையை போன்ற அமைதியையும் , நாகத்தை போன்ற  நளினத்தையும் , மயிலை போன்ற வசீகரத்தையும் , ஓனாயின் வேகத்தையும் , இரவின் ஆர்வமூட்டும் அச்சத்தையும் கொண்டவள் அவள்.


  இவளை இளம் பிராயத்தில்  இருந்தே   நான் அறிவேன். அவள் செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து இருக்கிறேன்.  நான் படிக்கும் நூல்களில் அவள் முகத்தை பார்த்து இருக்கிறேன். ஓடைகளின் சலசலப்பில் அவள் குரல் இனிமையை உணர்ந்து இருக்கிறேன்.

என் இதயத்தையும் , ஆன்மாவின் ரகசியத்தையும் அவள் முன் திறந்து காட்டி இருக்கிறேன்.

என் இதய தேவதை இனி நான் பார்க்க முடியாத இடம் சென்று விட்டாள்.

அவள் பெயர் என்ன தெரியுமா? வாழ்க்கை என்பதே அவள் பெயர். அவள் பேரழகி . அனைத்தையும் வசீகரிப்பவள். நம் வாழ்க்கையை உறிஞ்சி விடக்கூடியவள். நம் கனவுகளையும் , ஆசைகளையும் குழி தோண்டி புதைப்பவள்.

வாழ்க்கை எனும் பெண் , தன்னை நேசிப்பவர்களின் கண்ணீரால் குளிப்பாள். தன்னால் வீழ்த்தப்பட்டவர்களின் ரத்தம் கண்டு மகிழ்வாள்.

பலரை காதலில் வீழ்த்துவாள். ஆனால் யாரையும் தன்னை அடைய விட மாட்டாள்.


     வாழ்க்கை ஒரு வசீகரக்காரி..


    தன் அழகால் நம்மை வளைப்பாள்..


     அவள் தந்திரத்தை அறிந்தோர் பிழைப்பார்கள்


   அப்பாவிகள் சிக்கிக்கொண்டு விழிப்பார்கள்.





Monday, May 28, 2012

பெட்ரோலுக்கு வரலாறு காணாத கடும் நெருக்கடி- விலை உயர்வை ஏற்க வைக்க விபரீத ஐடியா ??

சென்னைக்கு வந்த திடீர் சோதனையாக பெட்ரொல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பெட்ரோல் பங்குகள் , எரிபொருள் கை இருப்பு இல்லை என மூடப்பட்டு உள்ளன.
எனவே திறந்து இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெட்ரோல் பங்க்குகிற்கு நிற்கும் வரிசை , சாலை வரை நீண்டு , சாலையிலும் நெரிசல் ஏற்படுத்துகிறது.

மணலியில் இருந்து வர வேண்டிய பெட்ரோல் வராததால் இந்த பிரச்சினை என்கிறார்கள். சமீபத்தில் வரலாறு காணாத விலை உயர்வு செய்யப்பட்டது. எவ்வளவு காசு ஆனாலும் , பெட்ரொல் கிடைத்தால் சரி என்ற மன நிலையை ஏற்படுத்த செய்யப்படும் , செயற்கை நெருக்கடியா என மக்கள் பேசிக்கொண்டனர்.

பெட்ரொலுக்கு காத்து இருக்கும் வாகனங்கள், நெரிசல் - பிரத்தியேக படங்கள்















Sunday, May 27, 2012

பிரமாதமான பட்டினத்தார் கோயிலில் , பிச்சைக்காரன் ஒருவன்!!

ஒரு முறை நண்பர் நிர்மலிடம் பேசுகையில், விடுமுறை தினங்களில் - குறிப்பாக ஞாயிறன்று - காலை பத்து மணி வரை ஜாலியாக தூங்குவது என் வழக்கம் என்றேன்.  இதற்கு பதில் அளித்த நிர்மல் , தான் விடுமுறை தினங்களில் வழக்கத்தை விட சீக்கிரமே எழுந்து விடுவதாக சொன்னார். அப்போதுதான் விடுமுறையின் அதிக நேரத்தை பயன்படுத்த முடியும் என்றார்.

   அவர் லாஜிக் என்னை கவர்ந்தது. இப்போதெல்லாம் முடிந்தவரை சீக்கிரமே எழுந்து விடுமுறைகளை பயன்படுத்தி கொள்கிறேன். இதனால்தான் நிறைய படிக்க முடிகிறது , முக்கியமானவர்களை சந்திக்க முடிகிறது. தர்க்கா போன்ற புதிய இடங்களுக்கு செல்ல முடிகிற்து.

குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்றதால் சில நல்ல அனுபவங்கள் கிடைத்தன. அடிக்கடி செல்லும் எண்ணம் மனதில் பதிந்து விட்டது.

அதே போல வட சென்னையில் ஜீவ சமாதி ஆகியுள்ள இன்னொரு மகான் பட்டினத்தார். திருவொற்றியூரில் இவரது அடக்கஸ்தலம் ஆலயமாக கட்டப்பட்டுள்ளது. அங்கு செல்வது என முடிவு செய்து , அதிகாலை எழ அலாரம் வைத்து விட்டுதான் தூங்க சென்றேன். அந்த ஆலயத்தை பற்றி சாரு சொன்னதில் இருந்து , அங்கு போக வேண்டும் என்ற ஆவல் அதிகமானது.

கடலை ஒட்டி இவரது ஆலயம் இருக்கிறது. பேருந்தில் சென்றால் ஆலயம் அருகிலேயே இறங்கலாம். திருவொற்றியூர் சென்றால் , தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி , அருகில் இருக்கும் மார்க்கெட் சாலை வழியாக சற்று தூரம் நடந்து , ஆலயத்தை அடையலாம்.

 முன்பு ஒரு முறை சென்று இருந்த போது பார்த்ததை விட , மாற்றி கட்டி இருக்கிறார்கள்.  பட்டினத்தாரையே சிவனாக கருதி பூஜை செய்கிறார்கள்.  நான் சென்று இருந்த நேரம் அன்னதானம் வழங்கினார்கள். காலையில் சாப்பிடாமலேயே கிளம்பி விட்டதால் , நிம்மதியாக சாப்பிட்டேன்.  என் அனுபவங்களை சொல்வதற்கு முன் பட்டினத்தார் குறித்த ஃப்ளாஷ் பேக்.

ஒருவன் கெட்டவனாக இருந்து ஞானியாக மாறும் டெம்ப்ளேட் ஃப்ளேஷ் பேக்காக இல்லாமல் , ஒரு சராசரி மனிதனின் கனவுகள் , உறவுகள் , செண்டிமெண்ட் என இயல்பான வரலாறாக இருப்பது பட்டினத்தார் வரலாற்றின் ஹை லைட்.

*********************************************************
காவிரிப்பூம்பட்டினத்தில் சிவநேசர், ஞானகமலாம்பிகை என்னும் சிவபக்த தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் வெண்காடர். இவரும் நல்ல சிவபக்தர்.
ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த இவருக்கு , திருமணமாகி வெகு நாட்கள் குழந்தை இல்லை.


வியாபாரத்தில் கொடி கட்டி பறந்த அவருக்கு இது ஒரு குறையாகவே இருந்தது. குழந்தைகாக பல முயற்சிகள் செய்தும் பலனில்லாத நிலையில், திருவுடைமருதூர் சென்று வேண்டினால் , தீர்வு கிடைக்கும் என கனவில் ஒரு குரல் கேட்டடது. அங்கே சென்றார். அங்கே சிவ சருமர் எனும் சிவபக்தர் குழந்தை ஒன்றுடன் காத்து இருந்தார்.


தன் கனவில் சிவன் தோன்றி, குழந்தையை கொடுக்க சொன்னதாக சொல்லி தன் கையில் இருந்த குழந்தையை கொடுத்தார் அவர். சிவசருமர் முன் பின் பழக்கம் இல்லாதவர். த்னக்கு வந்த கனவு போலவே , அவருக்கும் வந்ததால், ஆச்சர்யம் அடைந்த வெண்காடர் குழந்தையுடன் ஊர் திரும்பினார். மருதவாணர் என பெயரிட்டு வளர்த்தார்.


குடும்ப தொழிலை அவனுக்கும் கற்று கொடுத்தார். அவனோ வியாபாரத்தை எளிதாக க்ற்று கொண்டு , தந்தைக்கே கற்று கொடுக்கும் அளவுக்கு வளர்ந்தான். வெண்காடருக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உலகுக்கே அதிபதிபோல உணர்ந்தார். உறவினர்களும் , சொந்தங்களும் சூழ அரசர் போல வாழ்ந்தார். வெண்காடர் என பெயர் சொல்லி அழைக்க விரும்பாத மக்கள் , பட்டினத்தார் என மரியாதையோடு அழைத்தனர். அனைவருக்கும் உதவிகள் செய்து சிறப்புற வாழ்ந்தார். 




தன் மகனை வியாபாரத்துக்காக வெளி நாடு அனுப்பினார். வெளி நாடு வியாபாரத்தை முடித்து கொண்டு மகன் வீடு திரும்பினான். மாபெரும் வரவேற்பு கொடுத்து அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.


அவன் கொண்டு வந்த பெட்ரி மிகப்பெரிதாக இருந்தது. செம லாபம் போல என மகிழ்ச்சியில் திண்றிய அவர் , ஆவலுடன் பெட்டியை திறந்து பார்த்தார்.


அதிர்ந்தார். உள்ளே முழுதும் எரு விராட்டியும் தவிடு மட்டுமே இருந்தன. 
கோபத்தில் கண் மண் புரியவில்லை. “ ஊர் பேர் தெரியாத உன்னை வளர்த்ததற்கு நீ காட்டும் நன்றியா இது.. அனாதை பயலே “ என திட்டினார்.


அவன் புன்னகைத்தான். “ இது வரை நீங்கள் காட்டிய அன்பு , ஒரு வியாபாரத்தால் மாறி விட்டதா? இப்படித்தானே உங்கள் மீது மற்றவர்கள் காட்டும் அன்பும் இருக்கும்?  எல்லா உறவுகளும் , சொந்தங்களும் இப்படித்தானே? சரி..  நான் கொண்டு வந்த பெட்டியை நன்றாக பாருங்கள் “ என சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியேறினான்.


அவன் அமைதி இவரை சிந்திக்க வைத்தது. பெட்டியை நன்றாக தேடி பார்த்தார். காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே ன்று எழுதப்ப்பட்ட ஓலை துணுக்கு இருந்தது. அவர் அப்போது இருந்த மன நிலையில் , அந்த வாசகம் பல செய்திகளை அவருக்கு உணர்த்தியது.




 தான் வியாபாரத்தில் கில்லாடியாக இருப்பதில் எல்லாம் பெரிய பெருமை இல்லை. எதற்கும் எந்த அர்த்தமும் இல்லை என உணர்ந்தார். உறவுகள் , செண்டிமெண்ட் , அந்தஸ்து , செல்வாக்கு என எதுவும் நிலையற்றதில்லை என்பதை உணர்ந்து , அனைத்தையும் துறந்து , துறவியானார். நிலையானதை தேடி அலைந்தார். காலப்போக்கில் அவர் சீடராக சேர்ந்த பத்ரகிரியாருக்கு முக்தி கிடைத்தது . இவருக்கு கிடைக்கவில்லை.


இறைவனை இறைஞ்சினார். அவருக்கு கசப்பு சுவைமிக்க கரும்பு கொடுக்கப்பட்டது. இது இப்போது இனிப்பாக மாறுகிறதோ , அப்போது முக்தி கிடைக்கும் என சொல்லப்ப்பட்டது.




அவர் பல இடங்களுக்கு சென்று விட்டு , திருவொற்றியூர் வந்தார். அங்கே கரும்பு இனித்தது!! சிறுவர்களுடன் ஒரு விளையாட்டு விளையாடினார். அவரை மண்ணில் புதைக்க வேண்டும். தன் சக்தியால் அவர் வெளியே வந்து விடுவார் என்பது சவால்.


சிறுவர்கள் அவரை புதைத்தனர். சொன்னபடியே வந்து விட்டார். அவர்களுக்கு ஆச்சர்யம். இன்னும் ஆழமாக தோண்டி புதைத்தனர். இப்போதும் வந்து விட்டார்.
வெளியில் இருந்து..

வழிகாட்டி பலகை

ஆலய தோற்றம்


 நானோர் பரதேசி, நல்லோர் கால் தூசி

பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன். அய்யனே என் அய்யனே

ஒரு முறை சென்று பாருங்கள்


மேலும் ஆழமாக தோன்றி புதைத்தனர். இப்போது வரவில்லை. பயந்து போன சிறுவர்கள் , பெரியவர்களை அழைத்து வந்து தோண்டினர்.
அங்கே..


பட்டினத்தார் இல்லை..


லிங்கம் ஒன்று இருந்தது..


அதுதான் இன்றைய கோயில்


********************************


கோயொல் விசிட் திருப்தியாக இருந்தது. அவர் பாடல்கள் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தன.  இனிமையாக இருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், தியானம் செய்ய முடியவில்லை.

எனவே கிளம்பினேன். வரும் வழியில் வள்ளலார் ஆலயம் இருப்பதை முதல் முறையாக பார்த்தேன். அமைதியான சூழல் . தியானம் செய்ய வசதி செய்து தந்தார்கள். தியானம் நிறைவாக இருந்தது.


****************************************

சாப்பிடகூட நேரம் இன்றி , வீடு திரும்பினேன்.ஆடை மாற்றி விட்டு, அமர்ந்தால் கதவு தட்டப்பட்டது.

ஹவுஸ் ஓனர் !!


” புதிதாக ஒரு டிஷ் செய்தோம் . சாப்பிட்டு பாருங்கள் “  கொடுத்து விட்டு சென்றார்கள்.

*****************************************

 இன்று சீக்கிரம் எழ வேண்டும், ஆலயம் செல்ல வேண்டும், நண்பரை சந்திக்க வேண்டும் ( அந்த நண்பர் குறித்து பிறகு ) என எதுவுமே திட்டமிடவில்லை. அனைத்துமே மற்றவர்கள் யோசனை. இன்று முழுக்க என் காசில் நான் சாப்பிடவில்லை.  கொஞ்சம் raw ஆக சொல்ல வேண்டும் என்றால் , மற்றவர்கள் இட்ட பிச்சையில்தான் , இன்றைய தினம் சென்று இருக்கிறது.

இன்னும் யோசித்து பார்த்தால் , நம் வாழ்க்கையே பலர் போட்ட பிச்சைதான், வெறும் கையோடுதானே நாம் வந்தோம்?!!

ம்ம். அடுத்த பிறவி என ஒன்று இருந்தால் , அதிலும் நான் பிச்சைக்காரன்தான்!!!

இது வரை பிச்சை இட்ட எத்தனையோ பேரை மறந்து கூட போய் இருக்க கூடும் , அனைவரையும் நினைவுக்கு கொண்டு வந்து நன்றி செலுத்தும் உணர்வை தந்தது இந்த கோயில் விசிட்..

*****************************

பட்டினத்தார் பாடல்கள் சில


உடுக்கக் கவிக்கக் குளிர்காற்று வெய்யில்,ஒடுங்கி வந்தால் 
    தடுக்கப் பழைய வொரு வேட்டியுண்டு; சகமுழுதும்
    படுக்கப் புறந்திண்ணை எங்கெங்கும் உண்டு: பசித்துவந்தால் 
    கொடுக்கச் சிவனுண்டு; நெஞ்சே நமக்குக் குறைவில்லையே!



இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தாம்


ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து
மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்
செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்
கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே. 

சுடப்படுவா ரறியார் புரம்முன்றையுஞ் சுட்டபிரான்
திடப்படு மாமதில்தென் ஒற்றியூரன் தெருப்பரப்பில்
நடப்பவர் பொற்பாத நந்தலைமேற்பட நன்குருண்டு
கிடப்பது காண்மனமே, விதியேட்டைக் கிழிப்பதுவே. 






Thursday, May 24, 2012

விஜயகாந்த் ஏன் “ இச்” சை தவிர்த்தார்?- கருணாநிதி கமெண்ட்

செய்திகளை உடனுக்குடன் சுட சுட படிப்பது ஒரு த்ரில் என்றால், பழைய செய்திகளை - குறிப்பாக பத்திரிக்கைகளில் அந்த காலத்தில் வந்த துணுக்குகளை படிப்பதும் சுவையாக இருக்கும்.

அந்த வகைகளில் பழைய கால துணுக்குகள் சில உங்கள் பார்வைக்கு

*******************************************************
   நடிகை ஜெயலலிதா அமைச்சர் ஆகிறார் ??

நடிகை ஜெயலலிதாவிடம் நிருபர் ஒருவர் கேட்டார் . “ எம் ஜி ஆர் உங்களுக்கு மந்திரி பதவி கொடுக்கப்போகிறாராமே ? “
இதற்கு ஜெயலலிதாவின் பதில் கேள்வி “ அமைச்சர் பதவி என்பது குழந்தைக்கு சாக்லேட் கொடுப்பது போன்றது என நினைத்து கொண்டு இருக்கிறீர்களா “

நிருபரின் கமெண்ட் “ அது குழந்தை எந்த அளவுக்கு சாக்லேட்டுக்காக போராடுகிறது என்பதை பொருத்தது “




    அமிதாப் பச்சன் அரசியலில் குதிப்பாரா ?

உங்கள் நண்பர் ராஜீவ் காந்தி அரசியலில் தீவிரமாக இறங்கி விட்டாரே. நீங்களும் அரசியலில் குதிப்பீர்களா என பலர் கேட்கிறார்கள். முன்பு ராஜிவ் காந்தி ஏர் இந்தியாவில் சேர்ந்த போது , நீங்களும் ஏர் இந்தியாவில் சேர்வீர்களா என ஏன் யாரும் கேட்கவில்லை - அமிதாப் பச்சன் பேட்டி


            மதிய டிபன் திட்டம் ? 

தெலுங்கு தேச அரசு பள்ளிகளில் சோறு போடுவதற்கு பதில் ரொட்டியும் , பாலும் தர திட்டமிட்டு வருகிறது. அப்படி செய்தால் அது மதிய உணவு அல்ல. மதிய டிபன் - முன்னாள் அமைச்சர் ரோசையா


         யார் வேண்டுமானாலும் செய்யலாம் 

பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்ததில் தனி சிறப்பு ஏதும் இல்லை. காந்தியின் நடை உடைகளை பிரதிபலித்தாலே போதும் , காந்தி போன்ற தோற்றம் வந்து விடும் . ஒரு சராசரி நடிகன் கூட இதை செய்யலாம் - அமிதாப் பச்சன்


    இச் ஏன் இல்லை ? 

நான் நடித்த தமிழ்செல்வன் படத்தின் ப்ரிவீயூவுக்கு கலைஞரை அழைக்க சென்று இருந்தேன் . அழைப்பிதழை பார்த்த தமிழ் குடிமகன் , தமிழ்ச்செல்வன் என எழுத வேண்டும் . தலைப்பில் ச் விடுபட்டு போய் இருக்கிறதே என குறிப்பிட்டார். இதை கேட்ட கலைஞர் சொன்னார் “  ‘ இச் ‘ இருந்தால் சென்சாரில் அனுமதிக்க மாட்டார்கள். எனவேதான் ”இச்” சை தவிர்த்து விட்டார்கள் போலும்
- ஒரு விழாவில் நடிகர் விஜ்ய காந்த் பேச்சு





Wednesday, May 23, 2012

நான், கிருஷ்ணதேவராயன் - வாசிப்பு அனுபவம்

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. என் வாசிப்பு ஆரம்பித்ததே வரலாற்று நாவலில் தான் - சிவகாமியின் சபதம்.
சிலருக்கு வரலாற்று நாவல்கள் போரடிக்கும். ஏற்கனவே நடந்த சம்பவங்கள். அவற்றில் பெரும்பாலானவை நமக்கே தெரியும். அதன் பின் படிப்பதில் என்ன சுவாரஸ்யம் ?

ஏற்கனவே நடந்த சம்பவங்களை புள்ளிகளாக்கி தம் கற்பனை திறனை பயன்படுத்தி கோலமிட தெரிந்தவர்கள்தான் வாசிப்பை சுவை ஆக்குகிறார்கள். சிலரோ வரலாற்றை சிதைத்தோ , திரித்தோ அலங்கோலம் ஆக்கி விடுவார்கள்.


சாண்டில்யன் வர்னணைகளுக்கு , (குறிப்பாக பெண்களை வர்ணிப்பத்தில் ) அதிக இடம் கொடுப்பார். கல்கி சாகசங்களுக்கு அதிக இடம் அளிப்பார். வர்ணனைகள் கட்டுக்க்குள் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் ஒரு பாணி வைத்து இருப்பார்கள்.

ரா கி ரங்கராஜன் எழுத்துகளை அந்த காலத்தில் இருந்தே படித்து வந்தாலும் , அவர் எழுதிய சரித்திர நாவலை படித்தது இல்லை. நண்பர் கோபி சொல்லித்தான் “ நான் , கிருஷ்ணதேவரயான் “ எனும் நாவலை படிக்கும் ஆர்வம் வந்தது.

சமீபத்தில்தான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

இது தொடர்கதையாக வந்தபோது, நான் தீவிர பாலகுமாரன் ரசிகன் . அவர் நாவல் தவிர எதையும் படிக்க மாட்டேன்.

இன்று நான் லீனியர், பின் நவீனத்துவம் என வாசித்து கொண்டு இருக்கும் ந்லையில், மரபான வடிவில் ஒரு நாவல் படிப்பது நல்ல மாற்றமாக இருந்தது.

மரபான வடிவம் என்றாலும் , இந்த நாவலில் ஒரு புதுமை இருக்கிறது.  ஒரு கதாபாத்திரமே கதை சொல்லும் வகையில் சிறுகதை எழுதலாம். ஆனால் நாவல் எழுத முடியாது. அதிலும் வரலாற்று நாவல் எழுத முடியாது.அப்படி யாரும் எழுதியதாக தெரியவில்லை.

கதா நாயகனே கதை சொல்வது போன்ற சவாலான பாணியில் இந்த நாவலை படைத்து இருக்கிறார் ரா கி ர.

பட்டாம்பூச்சி நாவல் படித்தவர்கள் இவர் எழுத்தின் கவர்ச்சியை மறக்க முடியாது. அது போன்ற எளிமையான , சகஜமான தமிழில் , நாவல் முழுதும் நம்மை கட்டி போட்டு விடிகிறார். தொடர்கதைகளுக்கென்றே சில வார்த்தை பிரயோகங்கள் உண்டு. இப்போதெல்லாம் தொடர் கதைகள் வருவதில்லை. எனவே ரொம்ப நாள் கழித்து , பழைய வார்த்தைகளை படிக்கையில் சந்தோஷமாக இருந்தது..


மொழி நடை எளிமையாக இருந்தாலும், இந்த நாவலை எழுத , கடுமையாக உழைத்து இருக்கிறார். விபரங்கள் திரட்டி இருக்கிறார்.


கதையின் ஓர் இடத்தில் நட்சத்திரத்திங்களின் நிலையை வைத்து , அரசர் எதிரியை வீழ்த்துவது போல சித்திரக்கப்பட்டு இருக்கும். இதை படித்த விஞ்ஞானி ஒருவர் தான் எழுதும் அறிவியல் புத்தகத்துக்கு , ரா கி ரவிடம் தகவல் உதவி கேட்டாராம். அந்த அளவுக்கு சிறு சிறு விஷ்யங்களை கவனித்து எழுதி இருக்கிறார்.

கசையடி, எக்காளம் , விளக்கை தூண்டுவதற்கு பணியாள், அரசரவை கூட்டம் என ஏராளமான சுவையான விஷயங்கள்.

வெளி நாட்டு படையெடுப்புகளால் திணறி வந்த இந்திய பண்பாட்டை காக்க , துறவி ஒருவர் கொடுத்த தூண்டுதலால் உருவாக்கப்பட்டதுதான் விஜய நகர பேரரசு. இதில் முக்கியமான மன்னர் கிருஷ்ண தேவராயர். இவரைப் பற்றிய நாவலை எங்கிருந்தும் தொடங்கலாம். எப்படியும் கொண்டு செல்லலாம்.

ஆனால் காதலை அடிப்படையாக கொண்டு நாவலை தொடங்கி , காதலை மையமாக வைத்தே நாவலை கொண்டு செலவ்தில்தான் , ரா கி ரவின் அனுபவம் முத்திரையை பதிக்கிறது.

காயத்ரி, சின்னா தேவி, திருமலா தேவி என்ற மூன்று பெண்கள்தான் இந்த நாவலை ஆக்ரமித்துள்ளனர்.

இதே நாவலை பால குமாரன் எழுதி இருந்தால் , கிருஷ்ணதேவராயரை குறைகளற்ற அரசராக வர்ணித்து , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருப்பார்.
ஆனால் இந்த நாவலில் அரசரின் குறைகளும் சொல்லப்படுவது இயல்பாக உள்ளது.

சாண்டில்யன் எழுதி இருந்தால் , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருக்க மாட்டார். சின்னா தேவியை வர்ணித்து எழுதி வேறு வகை எழுச்சியை உருவாக்கி இருப்பார்.

ஆனால் இந்த நாவலில் , காதல் சம்பவங்கள் குறைவே. காதல் உணர்வே அதிகம்.

தொடர்கதையாக எழுதப்பட்டதால், ஒவ்வொரு அத்தியாயமும் சஸ்பென்சுடம் முடிய வேண்டிய கட்டாயம்.  அத்தியாய தொடக்கம், முந்தைய அத்தியாயத்தை நினைவு படுத்த வேண்டிய அவசியம் போன்றவை தவிர்க்க முடியாது. எனவே ஒரே நாவலாக படிக்கும் போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது மட்டுமே நாவலின் குறை.

கடைசி பக்கங்களில் அவசரமாக வந்து செல்லும் மூன்றாவது மனைவி பாத்திரம் மனதில் பதியவில்லை. அதே போல கிருஷ்ண தேவராயரின் முந்தைய தலை முறை பற்றியும் தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.

மற்றபடி வரலாற்ரு தகவல் கச்சிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிற்றரசர்கள் நிலை, மதுரை வரலாறு, நாயக்க வம்சம் , அப்பாஜி, தெனாலி ராமன் , கொக்கோகம்  , காம சாஸ்திரம் மூன்று நாள் மன்னர் ,    என பல தகவவல்கள்  கொடுத்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.


வெர்டிக்ட்

நான், கிருஷ்ணதேவராயன் - நான் ஸ்டாப் எண்டெர்டெய்ணர்

 நாவல் : நான் , கிருஷ்ணதேவராயன்
எழுதியவர் : ரா கி ரங்கராஜன் 

Sunday, May 20, 2012

மெரினாவில் மக்கள் கடல்- ஈழப் படுகொலைக்கு நினைவேந்தல்

ஹிட்லர் நடத்திய படு கொலைகளை படித்து பதறி இருக்கிறோம். ஆனால் நம்  இனமே அது போன்ற பேரழிவுக்கு உள்ளாகும் என கனவிலும் நினைத்து இருக்க மாட்டோம். ஒரு நாட்டின் அரசே அந்த நாட்டு மக்களை கொன்று குவித்தது ஒட்டு மொத்த மனித குலத்துக்கே தீராத களங்கம்.

பேரழிவு நடந்து மூன்று ஆண்டுகள் ஆவதை ஒட்டி, படுகொலை செய்யப்பட்டவர்களின்  நினைவாகவும், போராளிகள் புதைக்கப்படுவதில்லை , விதைக்கப்படுகிறார்கள் என உலகுக்கு உணர்த்தவும் , சென்னை மெரீனாவில் மெழுகுவர்த்தி நினைவேந்தல் நடந்தது.

இன்றைய தகவல் தொழில் நுட்ப கால கட்டத்தில் , இது போன்ற போராட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகின் கவனத்தை ஈர்க்க கூடியவை.
எனவே இந்த நிக்ழ்ச்சிக்கு போயே ஆக வேண்டும் என நினைத்து இருந்தேன்.  நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக குரல் கொடுக்க ஒரு வாய்ப்பு இருக்கும்போது, அதை விட முக்கிமான ஒன்று வேறு எதுவும் இல்லை என முடிவு செய்து மெரினா சென்றேன்.

அங்கு இருந்த கூட்டத்தை பார்த்ததும் தமிழன் என்ற வகையில் உள்ளபடியே பெரு மகிழ்ச்சி அடைந்தேன்.

அழைத்து வரப்பட்ட கூட்டமாகவோ, கட்சியினர் கூட்டமாகவோ , இல்லாமல் பெருமளவில் பொது மக்கள் கலந்து கொண்ட நிகழ்சியாக இருந்தது. குடும்பம் , குடும்பமாக பலர் வந்து இருந்ததை பார்த்து நெகிழ்ச்சியாக இருந்தது,

கட்சியினர் பலரும் திரளாக வந்து இருந்தனர். வைகோ , நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வந்து இருந்தனர். 

தனி ஈழம் மலரும்  போன்ற கோஷங்களை வை கோ எழுப்பினார். 

இளைஞர்கள் ஏராளமாக இருந்தது , எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை அளித்தது.

கடற்கரையின் இருளை கிழித்து கொண்டு மெழுகு வர்த்தி ஒளி வீசியது , சும்மா பொழுது போக்க கடற்கரை வந்தவர்களின் கவனம் ஈர்த்தது.  கண்டிப்பாக அடுத்து ஏதேனும் கூட்டங்கள் நடந்தால் , கண்டிப்பாக அவர்களும் கலந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

மெரினாவை விட்டு புறப்பட்டபோது , தற்போது நிலவும் இருள் விலகி ஒளி பிறக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. 









  

























Friday, May 18, 2012

சினிமா வாய்ப்புக்காக காம்ரமைஸ் செய்யாத சாருவின் நச் விமர்சனம் - வழக்கு எண் 18/9

பெண்மையையும் , வறுமையையும் கேவலப்படுத்தி வழக்கு எண் 18/9 என்று ஒரு படம் வந்தது.  காசு செலவழித்து படம் எடுக்கிறார்கள் , எப்படி எடுப்பது என்பது அவர்கள் விருப்பம்.
ஆனால் அதையாவது ஒழுங்காக எடுத்தார்களா என்றால் பல படங்களை காப்பி அடித்து எடுத்து இருந்தார்கள்.

 நடைமுறையில் ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அதே போல விளிம்பு நிலை மக்களும் கஷ்டப்படுகின்றனர். அவர்கள் எல்லாம் இந்த படத்தின் சினிமாட்டிக் கிளைமேக்சை பார்த்து எரிச்சல்தான் அடைந்தனர். இந்த படத்தில் வரும் கடைசி காட்சிகள் எல்லாம் சாத்தியமே இல்லை.

சாதாரண சினிமா ரசிகனின் வீக் பாயிண்டை குறி வைத்து படம் எடுக்கப்பட்டாலும் , வறுமையால் நேரடியாக பாதிக்கப்பட்ட, கஷ்டப்படும் மக்களால் இந்த படத்தை ஏற்க முடியவில்லை .

 நான் முதன் முதலில் பார்த்தபோதே கூட்டம் இல்லை.

ஆனால் ஊடகங்களிலோ மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. படம் முடிந்ததும் மக்கள் எழுந்து நின்று கை தட்டுகிறார்கள் என்றெல்லாம் கதை அளந்து கொண்டு இருந்தன.


உண்மை நிலை அறிய , படம் வெளிவந்த இரண்டாவது  ஞாயிறு அன்று வட சென்னையில் உள்ள அகஸ்தியா திரை அரங்கு சென்று இருந்தேன்.  மதிய காட்சிக்கு கூட்டமே இல்லை. விடுமுறை நாளிலேயெ இந்த நிலை. ஊடகங்கள் செயற்கையாக வெற்றி வெற்றி என்கின்றன.









இந்தியாவின் வறுமையை காட்டி படம் எடுத்தால் , வெளி நாட்டினர் ரசித்து பார்ப்பார்கள். அதே போல இந்த படம் சில மேட்டுக்குடியினருக்கும் , அறிவு ஜீவியினருக்கும் பிடித்து இருக்க கூடும்.

படம் பிடிக்கா விட்டால் கூட, சினிமா வாய்ப்பை மனதில் கொண்டு படத்தை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் உண்மை நிலையை தண்டோரா மணிஜி போன்ற வெகு சிலர் மட்டுமே எழுதினார்கள் . ஆனாலும் ஊடகங்களின் வீச்சு பெரிது. அவை இந்த படத்தை உலக படம் என்ற ரீதியில் எழுதுவதால், எதிர் விமர்சனங்கள் செய்வோர் மீது கண்டனங்கள் பாய்ந்தன. “ அதுதான் ஊடகங்களே பாராட்டுகின்றனவே. அவற்றை விட நீ விபரம் தெரிந்த ஆளா “ என்று பாய்ந்தனர்.



தமிழ் நாடே கோமாளித்தனத்தில் சிக்கி தடுமாறியது.

இந்த நிலையில், சாரு நிவேதிதா நச் என ஒரே வார்த்தையில் படத்தை விமர்சித்தார் .


Oh, shit…


இதுதான் அவர் விமர்சனம்.

****************************************************

வழக்கு எண் 18/9 என்ற படத்துக்கு நானும் கணேஷ் அன்புவும் இன்று சென்றோம்.  என்னால் பத்து நிமிடம் கூட படத்தைப் பார்க்க முடியவில்லை.  எழுந்து வெளியே ஓடி விடலாம் என்றால் நான் கடைசி சீட்டில் அமர்ந்திருந்தேன்.  அரங்கம் ஒரே இருட்டாக இருந்தது.  என் மொபைல் போனில் டார்ச் இல்லை.  இருட்டில் விழுந்து கிழுந்து வைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.  பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் சங்கடப் படுத்தி வெளியேற வேண்டுமே என்ற தயக்கம்.  பல்லைக் கடித்துக் கொண்டு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன்.  இடைவேளை என்ற எழுத்து வந்ததுமே கணேஷிடம் சொல்லிக் கொண்டு ஓடியே வந்து விட்டேன்.  மலத்தை மிதித்து விட்டது போல் இருந்தது.  ஒஸ்தி போன்ற குப்பைகள் ஆயிரம் மடங்கு தேவலாம்.  இந்த சீரியஸ் சினிமா பண்ணுபவர்களின் லொள்ளு தான் தாங்க முடியவில்லை.  தமிழிலேயே நான் பார்த்த ஆக மட்டமான படங்களில் இது ஒன்று.  உவ்வே… குமட்டிக் கொண்டு வருகிறது…



*******************************************************


சாரு என ஒருவர் இல்லாவிட்டால் , இந்த படத்தை உலகப்படம் என்றே முடிவு செய்திருப்பார்கள். விபரம் தெரிந்தவர்கள் மத்தியில் தமிழ் சினிமா ரசனை கேவலப்பட்டு போய் இருக்கும்.

நேர்மையான, விஷ்யம் தெரிந்தவர்களும் தமிழ் நாட்டில் இருக்கிறார்கள் என்ற ஆறுதலை தந்த சாருவுக்கு நம் தலைமுறை கடமைப்பட்டு இருக்கிறது..

__________________________________________________________-

Thursday, May 17, 2012

இளைப்பாறுதல் தரும் இணையற்ற இஸ்லாம் மகான் - தேடலில் கிடைத்த பொக்கிஷம்

கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என ஒரு முடிவுக்கு வந்து விட்டால் பிரச்சினை இல்லை. தேடலும் இல்லை.
நிம்மதியாக எரிந்த கட்சி எரியாத கட்சி விவாதம் செய்து கொண்டு ஜாலியாக இருக்கலாம்.

என்னை பொருத்தவரை எந்த முடிவுக்கும் நான் இது வரவில்லை. கடவுள் எனும் அனுபவத்தை பெற்றதில்லை. கடவுளை பார்த்ததில்லை. அதே சமயம் , கடவுள் என்பவர் இல்லை என அறுதி இட்டு சொல்லும் அளவுக்கும் ஆதாரங்களை சேகரிக்கவில்லை.

தேடல் தொடர்கிறது.

இந்த தேடலில் நான் அவதானித்த விஷ்யங்களில் ஒன்று, ” எம்மதமும் சம்மதம் , எல்லா மதங்களும் ஒரே விஷயத்தை சொல்கின்றன ” போன்ற கருத்துகள் வெறும் பிதற்றல்கள் என்பதே.

எல்லாமும் படிப்புதான் என்றாலும் , எஞ்சினியரிங் என்பது வேறு. மெடிக்கல் என்பது வேறு. எல்லாம் ஒன்றாக முடியாது.

அதே போல எல்லா மதங்களும் ஒன்று கிடையாது. ஒவ்வொன்றும் ஒரு பாதையை காட்டுகின்றன. நமக்கு பிடித்த பாதையை நாம் தீர்மானித்து கொள்ள வேண்டும்.  நடை முரையில் அப்படி செய்வதில்லை. நமக்கு பொருத்தமான பாதையை அறிவு பூர்வமாக யோசித்து தீர்மானிப்பதில்லை. எந்த மதத்தில் பிறக்கிறோமோ எந்த மதத்தை பின்பற்றுகிறோம். கடவுள் இல்லை என நம்பக்க்கூடிய குடும்பத்தில் பிறந்தால் , மத நம்பிக்கை இல்லாமல் வளர்கிறோம்.

என்னை பொருத்தவரை , எந்த முன் தீர்மானமும் இன்றி , தேடலில் ஈடுபட்டு வருகிறேன்.

இந்த தேடலில் ஒரு பகுதியாக இஸ்லாமிய நூல்களை படிக்கும்போது வியப்பாக இருந்தது . ஒரு தொலைக்காட்சி வாங்கினால் , manual கொடுக்கிறார்கள் அல்லவா.. அதே போல வாழ்க்கைக்கு தேவையான செயல்முறை குறிப்பேடு போல , அத்தனை விஷ்யங்களும் இஸ்லாமிய நூல்களில் உள்ளன.

அதே போல இறை உணர்வு என்ற உன்னத நிலையை அடைய தெளிவான வழிமுறைகள் உள்ளன.

இதில் சுஃபி வழிமுறை என ஒன்று உண்டு. இந்த வழிமுறையை சில இஸ்லாமியர்கள் ஏற்பதில்லை.

மக்காவில் “ காபா” எனும் இறையாலயம் உள்ளது. இந்த ஆலயப்பணிக்கென்றே தம்மை அர்ப்பணித்து கொண்டவர்கள் “ பனு சுஃபா “ எனும் குலத்தினர். இதில் இருந்தே சுஃபி எனும் பெயர் வந்தது.

இந்த சுஃபி வழிமுறையில் பல வகைகள் உள்ளன. சிஷ்தியா , காதிரியா , சுஹ்வர்த்தியா , நஃப்ஷ்பந்தியா என்ற நான்கு இந்தியாவில் பிரபலமாக உள்ளன . பாரசீக மொழியில் சுஃபி இலக்கியங்கள் ஏராளம். “ குல்ஷனே ராஸ் “ மற்றும் “இன்சானுல் காமில் “ ஆகிய இரண்டு நூல்கள் முக்கியமானவை.

சுஃபி நெறி என்ன சொல்கிறது ?  இஸ்லாம் மதத்தில் பிறந்து விட்டால் , ஆட்டோமேடிக்காக அல்லாவின் அருளை பெற்று விடலாம் என்ற கருத்து தவறு என்கிறது.

அல்லாவின் அருளை முயன்று பெற வேண்டும் என்கிறது சுஃபித்துவம். டெல்லிக்கு புதிதாக போகிறோம் . வழிகாட்டி ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா ? டில்லி பயணத்துக்கே இப்படி என்றால் ஆன்மீக பயணத்துக்கும் வழிகாட்டி தேவை என்கிறது சுஃபித்துவம். ஆனால் இந்த வழிகாட்டி இறைவனுக்கு நிகர் அல்ல . இதை சரியாக புரிந்து கொள்ளாமல் சில இஸ்லாமியர்கள் சுஃபித்துவத்தை எதிர்ப்பதுண்டு.

இந்த வழிகாட்டியை ஷைகு என்பார்கள். அவரிடம் “ முரீது “ எனும் தீட்சை பெற்று கடும் பயிற்சிகள் செய்தால்தான் அல்லாவின் அருள் கிடைக்கும் என்பது சுஃபித்துவம். “ கல்வத் “ எனும் யோக நிட்டைகள் போன்ற ஏராளமான விஷ்யங்கள் உள்ளன.

இந்த வழிதான் சரி என சொல்லவில்லை. இந்த வழிமுறைகளை பயன்படுத்தாமலேயே அல்லாவின் அருளை பெற முடியும்தான் . அல்லா அருள் எதற்கு , அன்றாட வாழ்க்கை ஜாலியாக நடந்தால் போதும் என்றும் வாழ முடியும்தான். அல்லாவை விட என் கடவுள்தான் பெரிது என சிலர் சொல்ல கூடும்தான்.

அந்த பிரச்சினைகளுக்கெல்லாம் நான் போக விரும்பவில்லை. சுஃபித்துவம் என்பதை மட்டும் இப்போதைக்கு பார்க்கிறோம். அவ்வளவுதான்.


இப்படிப்பட்ட சுஃபி ஞானியர் உலகம் முழுக்க இருந்தாலும் , நம் தமிழ் நாட்டிலேயே ஒரு ஞானி இருந்து இருக்கிறார் என்பது பலருக்கு தெரியாது.
குணங்குடி மஸ்தான் என்ற பெயர் ஆன்மீக உலகிலும் , இலக்கிய உலகிலும் பிரபலம் என்றாலும் , சாதாரண மக்களிடையே பிரபலம் இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில், ஆன்மீக சூப்பர் ஸ்டாராக இருந்து இருக்கிறார். அவர் பெயரால் சென்னையின் ஒரு பகுதி அழைக்க்படுகிறது.


அவர் ஓர் இஸ்லாமியர் என்பதால் இந்து மதத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை. அவர் பாடல்கள் சிலவற்றை தவறாக புரிந்து கொண்ட இஸ்லாமியர்களும் , அவரை பெரிய அளவில் போற்றுவதில்லை . அவர் புத்தகங்களை தீயிட்டு அழித்த சம்பவங்களும் நடந்துள்ளன.


ராமனாதபுர மாவட்டம் , தொண்டியில் பிறந்தவர் அவர். கடும் ஆன்மீக பயிற்சிகளால் , உயர் நிலை அடைந்தார். பல இடங்கள் சுற்றி திரிந்து ஆன்மிக சேவைகள் செய்த இவர் , சென்னைக்கு வந்து சேர்ந்தார். ராயபுரம் பகுதியில் ஆஸ்ரம் அமைத்து தங்கினார். அவரை எதிர்த்தவர்கள் கூட , அவர் அருமை புரிந்து , பிறகு மனம் மாறினர்.

மத வேற்றுமை இன்றி அனைவரும் , அவரை மதித்தனர். தொண்டியார் என அழைக்கப்பட்டார். அவர் மறைவுக்கு பின் , தொண்டியார் பேட்டை என அவர் வாழ்ந்த இடம் அழைக்கப்பட்டு, பிறகு தண்டையார் பேட்டை என மாறியது.

******************************


குணங்குடி மஸ்தான் பாடல்களின் நெடு நாள் ரசிகன் நான். ஆனால் அவர் தர்க்கா சென்னையில் இருப்பது அல்ட்டிமேட் ரைட்டர் சொன்னபின் தான் எனக்கு தெரிந்தது. அல்ட்டிமேட் ரைட்டர் அந்த தர்க்காவிற்கு அழைத்தபோது , நான் சென்னையில் இல்லை. எனவே அவருடன் செல்ல முடியவில்லை. தனியாகவே கிளம்பினேன்.

அந்த தர்க்கா எங்கு இருக்கிறது என தெரியவில்லை. தண்டையார்பேட்டைக்கு பெயர் கொடுத்தவர் ஆயிற்றே . அனைவருக்கும் தெரியும் என நினைத்தேன்.
ஒருவர் சொன்ன வழியில் சென்று பார்த்தால் , அங்கு இருந்தது பள்ளி வாசல். அட பாவிகளா. பள்ளி வாசலுக்கும் , தர்க்காவுக்கும் வித்தியாசம் தெரியாதா?

சரி. இஸ்லாமியர்களிடன் கேட்கலாம் என்றால் , அவர்கள் சொன்ன தர்க்கா வேறு இடம்.

கடைசியில் ஃபேஸ்புக்கில் , நம் நண்பர்களிடம் கேட்டேன்.   நண்பர்கள் சுரேஷ் குமாரும் , செல்வ குமார் கணேசனும் தெளிவாக விலாசம் சொன்னார்கள்.


செல்வகுமார் கணேசன்
சுரேஷ் குமார்




அவர்கள் இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு , அந்த ஞானியின் தர்க்கா சென்றேன். அந்த பகுதியில் , மஸ்தான் கோயில் என அது பிரபலமாக உள்ளது.



பலர் பல வேண்டுதல்களுடன் வந்து இருந்தார்கள் . தனியாக போனவன் நான் மட்டுமே. ஆனால் தனியாக போனதும் நல்லதாக போயிற்று.
ஒருவர் மட்டுமே அமர்ந்து தொழுகை செய்யக்கூடிய  , நிலவறை அங்கே இருக்கிறது. குணங்குடியார் அங்குதான் தொழுகை செய்வாராம்.

நான் தனி ஆள் என்பதால், அங்கு அமர்ந்து தியானிக்க அனுமதித்தார்கள். தியானிக்க சரியான இடம்.  கண் மூடி அமர்ந்தேன். ஒரு மணி நேரம் போனதே தெரியவில்லை.

இவ்வளவு நேரம் தியானித்தெல்லாம் ரொம்ப நாள் ஆகி விட்டது. மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

மீண்டும் வர வேண்டும் என எண்ணமிட்டவாறு வெளியே வந்தேன். அது வரை வாட்டி வதைத்த வெயில் குறைந்து, குளிர்ச்சியாக இருந்தது. மனமும் குளிர்ந்து இருந்தது..

******************************************************

ஆச்சிதனைத்தேடி ஆசை வைத்து அலையாமல்
பூச்சியாய் ஏனோ பிறந்தேன் பராபரமே




தந்தை தாய் என்றே தயங்குகின்ற பாவி மனக்கண்
திறக்க வந்தருள் செய் கண்ணே றகுமானே

***************************************************

சில குறிப்புகள்.

1. வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது அந்தந்த தலங்களுக்கு உகந்த பொருட்களை கொண்டு சென்று கொடுப்பது நல்லது. இந்த தர்க்காவிற்கு எடுத்து செல்ல வேண்டியது , நல்லெண்ணெய் அல்லது நெய் ( தீபம் ஏற்ற )

2. மிகவும் பட்டினியாகவோ. அதிகம் சாப்பிட்டு விட்டோ செல்ல வேண்டாம். தியானிப்பது கடினம்


3. வேறு மத வழிபாட்டு தலங்களுக்கு செல்லும்போது , அந்த தலத்திற்குரிய நெறிமுறைகளை அனுசரிப்பது நல்லது.  ( தர்க்கா செல்லும் அன்று , நான் வேறு இந்து கோவில்களுக்கு செல்வதை தவிர்த்தேன். இந்து மத அடையாளங்கள் இல்லாமல் பார்த்து கொண்டேன் ) .



 நிலவறை




Monday, May 14, 2012

இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்?- என் அனுபவங்கள்


நேரடியாக பயன் தரக்க்கூடிய புத்தகங்கள் ஒரு புறம்...  தொழில் நுட்ப புத்தகங்கள், மொழி சார்ந்த புத்தகங்கள், குறிப்பிட்ட விஷ்யத்தை சொல்லி தரும் புத்தகங்கள் போன்றவை இந்த பிரிவில் வரும்.

காலி ஃபிலவர் சூப் எப்படி செய்வது என்பதை ஒரு சமையல் புத்தகத்தில் படித்து உடனடியாக செய்து பார்க்கலாம். weather , climate என்ன வித்தியாசம் என ஓர் ஆங்கில மேம்பாட்டு புத்தகத்தில் படிக்கலாம். ஓர் இயந்திரம் எப்படி இயங்குகிறது, எப்படி பழுது  நீக்குவது போன்றவற்றை புத்தகம் சொல்லி தரும்.

இதெல்லாம் உலக வாழ்க்கைக்கு நேரடியாக உதவ கூடியவை.

இலக்கியம் படிப்பதால் என்ன பயன் என்பது அடுத்த கேள்வி.
மேற்கண்ட புத்தகங்கள் போல , இதன் பலன் வெளிப்படையாக தெரியாது. வாசிப்பு இன்பத்துக்காக மட்டுமேதான் இதை படிக்க வேண்டுமா? தென்றலை ரசித்தால் என்ன பலன் என கேட்க முடியுமா? தென்றலை ரசிப்பது என்ற செயலே போதுமே.. அதனால் பலன் என தனியாக ஏதும் வேண்டுமா என்ன?


நாவல்கள் , சிறுகதைகள் போன்றவற்றை வாசிப்பு அனுபவம் மற்றும் அந்த வாசிப்பு சுகத்துக்காக மட்டுமே படித்தால் போதும். ஆனால் அனத வாசிப்பு நம்மில் கலந்து மறைமுகமாக பலனளிக்கும் என்பதும் உண்மையே.

வாசிப்பிலேயே பல வகைகள் . சிலர் மற்றவர்களிடம் பேசுவதை தவிர்க்க , வாசிப்பை ஒரு தப்பித்தலாக பயன்படுத்துவார்கள் ( நான் சில சமயம் இந்த டெக்னிக்கை கையாள்வது உண்டு ) ஆனால் இந்த டெக்னிக்கை அதிகமாக பயன்படுத்தினால், உலகில் இருந்து சக மனிதர்களிடம் இருந்து தனிமைப்பட்டு விடுவோம்.

வாழ்க்கை என்பது உலகுடன் நாம் கொள்ளும் தொடர்புதான். வாசிப்பு நம்மை தனிமை படுத்தினால் , நாம் வாசிக்கும் விதத்தில் த்வறு இருக்கிறது என பொருள்.

உலகை வெறுத்து குடி போதையில் தஞ்சம் அடைவதை போல வாசிப்பு மாறி விடக்கூடாது.

என்னை பொருத்தவரை, சாரு  நிவேதிதா போன்றோரின் எழுத்துகள் , உலகை எனக்கு வேறு வகையில் அறிமுகம் செய்து வைத்தன. உலகுடனான என் தொடர்பை செம்மை படுத்தி கொடுத்தன.


பெண்கள் மேலான என் பார்வையை, ஆணாதிக்க சிறுமையை மாற்றி அமைத்தது சீரோ டிகிரிதான்.

எனக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என இப்போதெல்லாம் பெண்களிடம் விட்டு கொடுத்து போகிறேன் என்றால் அதற்கு காரணம் சாருவின் எழுத்து.


அதே போல பால குமாரனின் எழுத்துகள் என்னை நிறைய மாற்றி இருக்கின்றன. ஒரு முறை பாலகுமாரனை அவர் இல்லத்தில் தனியாக பார்த்து பேசினேன்.

என் எழுத்தில் என்னவெல்லாம் படித்து இருக்கிறாய். அதில் உனக்கு என்ன கிடைத்தது என்றார் அவர்.

எப்போதோ படித்தவை எல்லாம் என் இதயத்தில் ஏதோ ஒரு மூலையில் இருப்ப்பது எனக்கே அப்போதுதான் தெரிந்தது.. சட சடவென பாயிண்ட் பாயிண்டாக அவர் நாவல்களில் இருந்து முக்கியமானவற்ரை சொன்னேன். சில எந்த நாவலில் வருகிறது என அவருக்கே தெரியவில்லை. மறந்து விட்டார்,. அதை எல்லாம் நினைவு படுத்தினேன்.


ஒரு விஷயத்தை ஆழ்ந்து படித்தால் , அதில் நம்மில் ஒரு பகுதியாகவே மாறி விடுகிறது என்பதை நான் உணர்ந்தது அன்றுதான்.

   வாழ்க்கையின் முக்கியமான சந்தர்ப்பங்களில் யோசித்து முடிவெடுக்க நேரம் இருக்காது. சட் என முடிவு எடுக்க வேண்டி வரும். நாம் யார் என்பதை நமக்கே அடையாளம் காட்டும் தருணங்கள் அவை. நல்ல வாசிப்பு இருப்பின், நாம் சரியாக நடந்து கொள்ள அவை உதவும்.

 வாசிக்க வாசிக்கத்தான் இன்னும் வாசிக்க வேண்டியது ஏராளம் என்பது புரிகிறது..

 புலி மானை வேட்டையாடுகிறது. வாழ்க்கையில் சில நேரங்களில் புலியாக வேட்டையாடுகிறோம், சில சமயம் மானாக ஓடுகிறோம். புலி , மான் ஆகிய இரண்டின் பார்வையிலும் வாழ்க்கையை பார்க்க சொல்லித்தருபவை இலக்கியங்கள்தான்.

என்னை பொருத்தவரை, அன்றாட வாழ்வின் வெம்மை தாக்கினாலும் , எத்த்னை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா என வாழ்க்கை ரசிக்க சொல்லித்தந்தவை சாருவின் எழுத்துகள்.

அவருக்கு நன்றி.

ஆனால் சாருவின் எழுத்துகளுக்கு நான் நேரடியாக வந்து சேரவில்லை. அவர் எழுத்துக்கு என்னை அழைத்து வந்து சேர்ந்த்த அனைத்து எழுத்தாள்ர்களுக்கும் நன்றி


Sunday, May 13, 2012

”கவிஞர் “ வைரமுத்துவும் நானும்

என் கல்லூரி காலத்தில் அடிக்கடி நடக்கும் பஞ்சாயத்து கவிஞர்களில் சிறந்தவர் வாலியா , வைரமுத்துவா ?

அதில் வைரமுத்துவை ஆதரித்து பேசுவதில் முன்னணியில் இருந்தவன் நான். வைரமுத்து என்றால் எங்களுக்கெல்லாம் அந்த அளவு ஈர்ப்பு.
சின்ன வயதில் சினிமா பாடல் என்றால் நடிகர்களை வைத்துதான் வகைப்படுத்துவோம். இசை அமைப்பாளர் , பாடலாசியர் எல்லாம் தெரியாது..ரஜினி பாட்டு, கமல் பாட்டு , எம் ஜி ஆர் , சிவாஜி பாடல்கள் என்றுதான் தெரியும்.

கொஞ்சம் விபரம் தெரிய ஆரம்பித்த பின்புதான் பாடல் வ்ரிகளை கவனிக்க ஆரம்பித்தேன், அப்படி கவனிக்க ஆரம்பித்த புதிதில் , எனக்கு படித்த பெரும்பாலான வரிகளை வைரமுத்துதான் எழுதி இருந்தார்..

“ வானம் எனக்கொரு போதி மரம்.. நாளும் எனக்கொரு சேதி தரும் “
“ மெத்தை வாங்கினேன்.. சுகத்தை வாங்கல “  “  கடவுள் மனிதனை படைத்தானா , மனிதன் கடவுளை படைத்தானா.. ரெண்டு பேரும் இல்லையே “

என அந்த வயதில் சுவையான வரிகள் மனதை கவர்ந்தன. இப்படிப்பட்ட நல்ல கவிஞரை இளையராஜா பகைத்து கொண்டாரே என இளைய்ராஜா மேல் வருத்தமும் இருந்தது..

அந்த காலத்தில் இளையராஜா பணியாற்றாமல் பெரிய பட்ஜெட் படங்கள் ஏதும் வராது.. ஓரிரெண்டு படங்கள் இளையராஜா இல்லாமல் வரும். அவற்றில் வைரமுத்து கண்டிப்பாக இருப்பார்.

சந்திரபோஸ் , அம்சலேகா போல பலர் இளையராஜாவுக்கு மாற்றாக பயன்படுத்தி கொள்ளப்பட்டனர். அவற்றில் வைரமுத்து இருப்பார்.

வானமே எல்லை, ரோஜா, அண்ணாமலை என்ற மூன்று படங்களை பாலசந்தர் தயாரித்தார்.. மூன்றிலும் இயக்குனர்கள் வெவ்வேறு. நடிகர்கள் வெவ்வேறு.. ஆனால் பாடலாசியர்கள் ஒருவரே... வைரமுத்து.

அந்த அளவுக்கு இளையராஜாவுக்கு எதிராக தன் கொடியை பறக்க விட்டு கொண்டு இருந்தார் வைரமுத்து.
புத்தகங்கள் வாங்கும் பழக்கம் அப்போதுதான் ஆரம்பித்து இருந்தது,  நான் வாங்கிய முதல் புத்தகங்களில் அதிகம் வைரமுத்து புத்தகங்களே.

அவரையே உலகில் மிகப் பெரும் கவிஞராக நினைத்து வந்தேன்.
ஆனால் இலக்கிய வாசிப்பு அதிகரிக்க அதிகரிக்க, கவிதை என்ற விஷயம் புரிய ஆரம்பித்தது.

கவிதை என்பது வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.. அது ஓர் உணர்வு. அதில் பல உயரங்களை தொட முடியும் . தொட்டு இருக்கிறார்கள் என்பது புரிய ஆரம்பித்தது..

கவிதைகளில் எத்தனை எத்தனை வடிவங்கள்.. எத்தனை எத்தனை உணர்வுகள். பிரமித்து போனேன்..

ஆயிரம் பக்க புத்தகம் தரும் உணர்வை மூன்று வரிகளில் சொன்ன ஜப்பானிய ஹைக்கூ ஒன்றை படித்து கண்ணீர் விட்டு அழுததும் ஒருமுறை நடந்தது..

திரைப்படத்தில் பாடல் எழுதுவ்து சாதாரண விஷ்யம் அல்ல.. அதற்கு கடும் உழைப்பு தேவை. திறமை தேவை.

இந்த இரண்டும் கொண்டவர் வைரமுத்து. திரைப்பாடலாசியர்களில் முக்கியமானவர் அவர்.

ஆனால் சிறந்த கவிஞரா . சிறந்த நாவலாசிரியா என்று யோசித்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நல்ல எழுத்தாளர் , உழைப்பாளி என சொல்லலாமே தவிர , உரைனடை கவிதை போன்றவற்றில் பெஸ்ட் என சொல்ல இயலாது..

ஒருவர் நன்றாக நடிக்கிறார் என்பதால் அவர் சிறந்த தலைவராகவும் இருப்பார் என நினைப்பது தவறு.. அதே போல ஒருவர் சிறந்த பாடலாசியர் என்பதால், அவர் சிறந்த இலக்கியவாதி என நினப்பதும் தவறு என்பதே என் கருத்து


அதே நேரத்தில் வைரமுத்துவின் திரைப்பாடல்களுக்கு நான் என்றும் ரசிகன்


Saturday, May 12, 2012

சாரு செய்து வரும் மவுன புரட்சி


அல்ட்டிமேட் ரைட்டர் சாரு ஒரு முறை சொன்னார்..
“ என் அளவுக்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக , யாராவது படித்து கொண்டே இருந்தால், உலக சினிமாக்களை பார்த்து கொண்டே இருந்தால், யார் வேண்டுமானாலும் அறிவாளியாகி விட முடியும் “

அவர் சொல்வதில் உண்மை இருக்க கூடும். அறிவாளியாக அவர் சொன்ன வழி ஓகே.. ஆனால் அவர் அளவுக்கு அன்பு மிகுந்தவராக , தெளிவு மிகுந்தவராக, குழந்தை போன்ற இன்னசன்ஸ் நிரம்பியவராக மாறுவதற்கு  எந்த வழிமுறையும் கிடையாது.

தமிழ் நாட்டில் அவர் ஒரு மவுன புரட்சியே ஏற்படுத்தி வருகிறார் என்று சொன்னால் மிகையாகாது.

அவரை பொதுவெளியில் பாராட்டினால் , ஃபார்மலாக பாராட்டுவதாக தோன்றலாம். தனிப்பட்ட முறையில் பேசும்போதும் , இதே எண்ணத்தைதான் அவர் வாசகர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்.  இந்த அளவுக்கு வாசகனின் வாழ்க்கையில் இடம் பிடித்து  ஓர் எழுத்தாளர் தமிழில் யாரும் இல்லை.

தனிப்பட்ட முறையில் நண்பர் நிர்மலுடன் பேசி கொண்டு இருந்தேன். அவர் அனுமதி இல்லாமல் அந்த உரையாடலை இங்கே தருகிறேன்..

____________________________________________________________________


Pichaikaaran 
அடுத்த பிறவி என ஒன்று இருக்குமானால், சாரு ஆசிரியாகவும் நான் மாணவனாகவும் பிறக்க ஆசை


Nirmal 
yes, I treat him as Guru


Pichaikaaran 
recnetly i read a french novel.. my friend told it is good...but as a charu's student, that novel was far below my expectation.

Nirmal 
yes

Pichaikaaran 
for a typical tamil film fan, vazahkku en ... may be difrent
but for me it is not

Nirmal 

The important aspect in charu writing is he did not use non linear as a writing form, he use as a political tool.
yes, even without seeing I agree. I saw Aravan, it is துரிதஸ்கலிதம்

Pichaikaaran 
ha ha

Nirmal 
No one can reach orgasm in crativity in Tamil

vasntha balan in final frame put " ban life sentece," as a message
who is he to tell message

Pichaikaaran 


stupids
vazhakku en could be a master piece, if that director  had read some charu writings

Nirmal 
oh really, but still this people do not have any innocence boss, crativity can not be achieved without innocence boss. கொக்கரக்கோ can not bring wonder, only உதயா can
recently I was telling a friend, let our director let them try to make one BF to world standard or a cartoon to a world standard.

Pichaikaaran 
hm

Nirmal 
We are born as politician boss
even we dont need to make cartoos, atleast let them write good dubbing atleast, u see jacky chan cartoon, full of cinema vadivel dialogue

Pichaikaaran 
i luv ur perception...this is what excile talks about.... the diffrence between man with brain and man with heart

Nirmal 
there is one cartoon called Bhim, no character will talk like a childish

Pichaikaaran 
kokrakko vs udhaya
but many missed it

Nirmal
yes, கோக்கரக்கோ கொள்கை வைத்து பெண்களை இடை போடுகிறார், சுரேஸ் எந்த கொள்கையும் இல்லாது படுத்துகிறார்

Pichaikaaran 
sss

Nirmal 
காதல் காதல் அன்பு அன்பு இப்படி அலைவனுக்கு பெயர் காமுகன், ஸ்கண்டலில் பாட்டிவுடுவாங்க
எந்த கொள்கையும் வேண்டாம் புண்ணக்கும் வேண்டாம் அன்பு அது போதும் அதுதான் உதயா
பலருக்கு கொக்கரக்கோ புரட்சிக்கார்னா தெரிகிறான்

Pichaikaaran 
aama

Nirmal 
நானும் அப்படிதான் பெண்களை பார்ப்பேன். இன்று வரை, பாற்றமுடியவிலை
பெண் எனக்கு எப்போதும் ஒரு போட்டியாளராக பார்க்கிறேன்

Pichaikaaran 
உண்மைதான்
சாரு தன் எழுத்தால் , மவுன புரட்சி செய்து வருகிறார் என்பது பலருக்கு தெரியாது.. சாரு எழுத்தை தொடர்ந்து படிப்பவன் , பெண்களை மதிக்க ஆரம்பித்து விடுவான்
ஒரு சின்ன உதாரணம்..சமையல் என்பது பெண்கள் வேலை என்ற எண்ணத்தை சாரு மாற்றி இருக்கிறார்

Nirmal 
yes boss
nowdays I am not fighting with ladies with whom I come across in our every day
I approach them with great respect

Pichaikaaran 
நல்ல ரசனையை உருவாக்கி8 இருக்கிறார்.. சாப்பிடுவதில் இருந்து , படிப்பது , இசை , வேலை என அனைத்திலும் உயர்ந்ததை எதிர்பார்க்கும் மன நிலையை உருவாக்கி இருக்கிறார்

Nirmal 
yes boss

Pichaikaaran 
உண்மையான பெண் உரிமை இப்படித்தான் வர முடியும்

Nirmal 
by giving respect. what a lady has to do is upto the individaul lady
Respect even when there is no agreement.

Pichaikaaran 
correct

Nirmal 

 what feminsit are thinking is by competting with men they can earn respect, but it may be possible but not 100%, only very few % exceptional women get that respect

Pichaikaaran 

ஆண்கள் இடத்தை பெண்களோ , பெண்கள் இடத்தை ஆண்களோ பிடிக்க இயலாது..பெண்களை பெண்களாகவஎ வைத்து , எல்லா உரிமைகளிடன் அவர்கள் வழ வழி செய்ய வேண்டும். பெண்ணுரிமைக்காரர்கள் , பெண்களை ஆண்களாக்க பார்க்கிறார்கள்

Nirmal 

yes, one thing boss, in our world some people likes to be slave, some likes to be master
its upto the individual
some people will be master in some places and slave in some places
either MAster or slave is upto the individual, but Respect is must for both master abd slave.

Pichaikaaran 
master and servant are essential for the world to function
yes yes

Nirmal 
there may be a lady who does not wante to be a master say example social gathering, lions club, etc...., to get respect some husband will force them that ends in total failure

________________________________________________________

Tuesday, May 8, 2012

என்னை கவர்ந்த , உணர்ச்சி வசப்படாத உன்னத விமர்சனம்- வழக்கு எண் 18/9

சினிமாவில் நல்ல படம் , கெட்ட படம் என எதுவும் கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை.

எனக்கு பிடித்து இருக்கிறது , பிடிக்கவில்லை என சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு சராசரி படத்தை உலகப்படம் அது இது என ஆர்வ மிகுதியால் சிலர் பில்ட் அப் செய்ததை பார்த்து கவலையாக இருந்தது.

தன் விருப்பத்தை அவர்கள் சொல்கிறார்கள். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால்  புதிதாக யாராவது வலையுலகை பார்த்தால் ,  ஒட்டு மொத்த ரசனை மீதே சந்தேகம் வந்து விடுமே என்பதே கவலை.

ஒரு பெண்ணை திட்டமிட்டு கவிழ்க்கும் விதி பட கதை அம்சம் , கஷ்டப்பட்டுவர்கள் மேலும் மேலும் கஷ்டப்பட்டே சாக வேண்டும் என்ற ஃபாசிச சிந்தனை ,  மனிதனின் மறுபக்கம் படத்தின் திரைக்கதை யுக்தி , படம் முழுக்க வக்கிரத்தை காண்பித்து விட்டு கிளைமாக்சில் பிராயசித்தம் செய்யும் அலுத்து போன தந்திரம் ,  டிபிக்கல் தமிழ் ரசிகனை மயக்கும் சினிமாட்டிக் முடிவு போன்ற அம்சங்கள் கொண்ட வழக்கு எண் 18/9 படத்தை , படித்தவர்கள் நிரம்பிய பதிவுலகத்தில் சரியாக அணுகுவார்கள் என்று நினைத்த எனக்கு ஏமாற்றமே காத்து இருந்தது.

ஆனால் தண்டோரா மணீஜியின் விமர்சனம் ஆறுதலாக இருந்தது.


அவர் விமர்சனத்தில் இருந்து....

****************************************

உண்மை குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்று போகிற போக்கில் சொல்லி விடுகிறார்கள்.. ஆனால் படம் முடிந்து நாம் வீட்டுக்கு போவதற்குள் அவன் வெளியில் வந்திருக்க கூடும்..ஆக  படம் பார்ப்பவரின் உணர்ச்சிகளை உசுப்பி விட்டு கல்லா கட்டுவதை தவிர வேறெந்த நேர்மையான நோக்கமும் வழக்கு என்ணில் இல்லை...கிளைமாக்சில் நம்பியாருக்கும், அசோகனுக்கும் என்ன நடக்குமோ அதுதான் இதிலும் நடக்கிறது..ஆனால் நிஜத்தில் அப்படியா என்ன? ஜோதியின் வாழ்க்கை அவ்வளவுதான்..வேலு சிறையில்தான் இருக்க வேண்டும்..ஆர்த்தி ஐ.ஐடி..ஐஐஎம்மோ சேர்ந்து கான்பூருக்கோ..பிலாய்க்கோ போய்விடுவாள்.. அப்படி முடித்திருந்தால் அதுநேர்மையான திரைப்படமாக இருந்திருக்கும்.. 

வழக்கு எண் 18/9

வழக்கமான படம் இல்லைதான்..ஆனால் வழக்கத்தை ஒன்றும் அப்படி மீறியும் விடவில்லை

*************************

நன்றி மணிஜி சார்...




Sunday, May 6, 2012

திருவண்ணாமலை கிரிவலம் - விசிட் ரிப்போர்ட்

வெளியூர் பயணம் ஒன்றுக்கு திட்டமிட வேண்டும் என்று நண்பர் நிர்மல் சமீபத்தில் சொன்னார்.   வட  மானிலம் ஒன்றுக்கு இருவரும் சென்று வரலாம் என் பேசிக்கொண்டு இருந்தோம். முடிந்தால் அந்த பயணத்திற்கு ஒரு வி அய் பியையும் அழைக்க வேண்டும் என்பது யோசனை. அந்த வி அய் பி வந்தால் இந்த பயணம் பொலிவு பெறும் .

ஒருவேளை அவர் வரவில்லை என்றாலும் , ஒவ்வொரு பயணமும் ஏதாவது சொல்லித்தரும் என்பதால், இருவர் மட்டும் செல்லலாம் என பேசினோம்.

பேசி முடித்தவுடந்தான் தோன்றியது. சமீபத்தில் அருகில் இருக்கும் ஊர்களுக்குகூட செல்லவில்லையே. அலுவல் ரீதியாக செல்வது வேறு. சும்மா நாமாக எங்கும் செல்லவில்லையே என யோசித்தேன்.

அப்படி முடிவானதுதான் திருவண்ணாமலை ட்ரிப். அலுவலக நண்பர் ஒருவர் கிரிவலம் குறித்து அடிக்கடி பேசுவார். நான் இது வரை சென்றதில்லை என்பதால், அந்த அனுபவம் பெறலாமே என நினைத்தேன். அவருடன் சேர்ந்து செல்ல முடிவு செய்தேன்.

ஆனால் கடைசி நேரத்தில் அவர் வர முடியவில்லை. தனியாகத்தான் செல்ல வேண்டும் . கிரிவலத்தின் முக்கியத்துவம் குறித்து சில தகவல்கள் சொன்னார். சுற்றும்போது சொல்ல வேண்டிய ஒரு மந்திர வார்த்தையும் சொன்னார்.

நான் ரொம்ப சீரியசாகவெல்லாம் செல்ல விரும்பவில்லை. ஒரு பார்வையாளனாக சென்று , கிரிவலம் என்ற அனுபவத்தை பெற விரும்பினேன். அவ்வளவுதான்.

சென்னையில் இருந்து பஸ் ஏறினேன் .போகும் வழியில் ஒருவருடன் பேசியபோதுதான் அது சித்ராபவுர்ணமி என தெரியவந்த்து. சித்திரகுபதனுக்காக பவுர்ணமியாம். சித்திரகுப்தந்தான் மரண கடவுளான எமனின் கணக்க்காளன். நம் பாவ புண்ணியங்களை கணக்கு போட்டு , எமனிடன் சொல்ப்வன். சித்திரகுபதனை சித்ராபவுர்ணமியன்று வேண்டி கொண்டால், நமக்கு சாதகமாக கணக்கு எழுதுவானாம்.

அப்படி வேண்டுவதற்கு சில முறைகள் இருக்கிறதாம், காஞ்சிபுரத்தில் அவனுக்கு கோவில் இருக்கிறதாம்.

இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். ஒரு பயணம் செல்லும்போது பல விஷ்யங்கள் நம் காதில் விழுகின்றன. சிலர் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் சில ஆலயங்கள் செல்கின்றனர். அதே போல அமாவாசை அன்று செல்ல வேண்டிய ஆலயங்களும் உள்ளனவாம். இவர்கள் ரெகுலராக செல்வதால் , அப்படி செல்பவர்களிடையே ஒரு நட்பு வளையம் ஏற்பட்டு விடுகிறது.

 நள்ளிரவு 12.30க்கு திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இறங்கினேன். அந்த நேரத்தில் ஏராளமானோர் திரண்டு இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நடக்கலானேன். மொத்தம் 14 கிலோ மீட்டர்களாம். என்னால் நடக்க முடியுமா என தயக்கமாக இருந்தது. சரி,  வருவது வரட்டும் என நடக்க ஆரம்பித்தேன்.

தனியாக சென்றதும் நல்லதாக போயிற்று. ஆங்காங்கு சில முக்கிய இடங்களை பார்த்தவாறு செல்ல முடிந்தது.

ரமணர் ஆசிரம் , சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆசிரம் என்று நிதானமாக பார்த்தபடி சென்றேன்.ஆனால் இவற்றை எல்லாம் விட , பிரகாசமாக இருந்தது நித்யானந்தாவின் ஆசிரம்தான். பரபரப்பாக இயங்கி கொண்டு இருந்தது. அரச்சியல்தலைவருக்கு இணையாக கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. சமீபத்து பிரச்சினைகளால் அவர் இமேஜ் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை.

இரவு முழுதும் நடப்பதால் , இரவை முழுதும் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பலதரப்பட்ட மக்களை சந்த்க்கும் அனுபவமும் கிடைக்கிறது.

இரவின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்தபடி சென்றதால் , 14 கிலோ மீட்டரை நடந்து முடித்ததே தெரியவில்லை. நிதானமாக , பல இடங்களையும் சென்று பார்த்தபடி நடந்ததால் , மலையை சுற்றி முடிக்கும்போது காலை எட்டு மணி.

என்னை போல புதிதாக செல்பவர்கள் , சீக்கிரமே அங்கு சென்று விட வேண்டும். அப்போதுதான் இன்னும் பல இடங்களை நன்கு பார்க்க முடியும் ,. சில புத்தகங்கள் வாங்க விரும்பினேன். ஆனால் நேரம் இல்லாமல் போய் விட்டது.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கிரிவலம் சென்றாலும் கூட , மனதில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை உணர முடிந்தது.

இதுபோல விசேஷ நிகழ்ச்சி இல்லாத சாதாரண நாளில் , இன்னொரு முறை வரவேண்டும் என நினைத்து கொண்டு சென்னை பஸ் ஏறினேன்.

 பரபரப்பான நள்ளிரவு

சுட சுட தேனீர்

கிரிவலம் ஆரம்பம்

ஆலயம்

பிரகாசம் குறையாத நித்யானந்தா

இமேஜ் சரிவு இல்லை



வருங்கால தமிழகமே ?!!! 


காவல்த்துறையா? காவல் துறையா ? 

அதிகாலை

இரவு முதல் காலை வரை கிரிவலம் 

சூரிய உதயம்



அடுத்த பவுர்ணமி ஞாயிறு அன்று வருகிறது.  முதல் முறை கிரி வலம் செல்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.





Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா