Friday, November 30, 2012

எடியூரப்பா பாஜகவில் இருந்து விலகல் - ஏன் , எதற்கு ?

 நீண்ட நாட்களாக பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த எடியூரப்பா ஒரு வழியாக பா.ஜ கவில் இருந்து வெளியேறி புதிய கட்சி உருவாக்கி இருக்கிறார், ஆனால் , அவர் பேச்சு இது மொத்தமும் நாடகமோ என எண்ண வைத்துள்ளது.

பிஜேபி அரசை கவிழ்க்க மாட்டேன், அந்த கட்சிதான் எனக்கு முகவரி தந்தது , கட்சியில் இருந்து கண்ணீருடன் தான் வெளியேறுகிறேன், இது மிகவும் துக்ககரமான  நாள் என்றேல்லாம் பேசி இருக்கிறார்.

ஆர் எஸ் எஸையோ , பிஜேபி தலைவர்களையோ எதிர்த்து எதுவும் பேசவில்லை. பிஜேபியின் கைப்பிள்ளைகளான நிதின் கட்காரியையும் , அனந்த குமாரையும் பற்றியும் மட்டும் போனால் போகட்டும் என விமர்சித்து பேசி இருக்கிறார். இவர்களை திட்டி ஒன்றும் ஆக போவதில்லை என  அவருக்கு நன்றாகவே தெரியும்.

இவர் கட்சியில் இருந்து விலகுவதாகவே இல்லை. ஆனால் வழக்குகள் பாயும் என்ற நிலையில், காங்கிரஸ் சார்பு நிலை எடுத்தால் பாதுகாப்பு என நினைத்தார். ஆனால் , காங்கிரசில் ஏற்கனவே பல தலைவர்கள் இருக்கும் நிலையில் , இவரை வரவேற்க அவர்கள் தயாராக இல்லை. பிஜேபியையும் முறைத்து கொண்டாயிற்று , வேறு வழியில்லாமல்தான் விலகி இருக்கிறார்,  அவர் தவறு செய்து இருந்தால் , அந்த தவறுக்கு பிஜேபியும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் , ஆனால் இந்த விலகலால் , பிஜேபி தவறே செய்யாதது            போலவும் , அவர்தான் அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பு என்பது போலவும் , பிஜேபி ஒரு கருத்தௌ உருவாக்க முயலும்.


கொஞ்ச நாள் கழித்து கண்கள் பனிக்க , இதயம் இனிக்க இருவரும் இணைவார்கள்.. குஜராத் தேர்தலுக்காக  காத்திருக்கிறார்கள்...


மற்றபடி மக்கள் நலனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். 

Thursday, November 29, 2012

நாகூர் சந்தன கூடு விழாவுக்கு அரசு உதவி - இரு வேறு கருத்துகள்


   நண்பர் ஒருவர் எஸ் எம் எஸ் அனுப்பி இருந்தார் . இஸ்லாம் மத கோட்பாடுக்களுக்கு எதிரான ஒரு விஷ்யத்துக்கு தமிழக அரசு ஸ்பான்சர் செய்வதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நானும் எழுத வேண்டும் என்றும் சொல்லி இருந்தார்.

அப்படி என்ன நடந்தது என விசாரித்த போது தெரிய வந்தது இது.  அரசு வெளியிட்ட செய்தி குறிப்பை பாருங்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், 10-வது தலைமுறை பரம்பரை ஆதீனமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ் எஸ்.எஸ். காமில் சாஹிப் காதிரி சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, இந்தியாவில் உள்ள புனித தலங்களில் சிறப்பு வாய்ந்ததும், இஸ்லாமிய புனித தலங்களில் முக்கியமானதும், சமூக நல்லிணக்கத்திற்கும், சமுதாய ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக ஹஸ்ரத் செய்யதினா செய்யது அப்துல் காதர் ஷாஹுல் ஹமீது நாகூர் தர்கா விளங்கி வருகிறது என்றும், நாகூர் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) ஆண்டுதோறும் இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டின் ஜமாத்துல் ஆகிர் மாதத்தில் நடைபெறுகிறது என்றும், புனித சமாதியில் சந்தனக்கூடு நாளன்று சந்தனக் கட்டைகள் அரைத்து சந்தனம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமாதியில் பூசப்படுகிறது என்றும், இந்த சந்தனம் பூசும் விழா மிக மிக புனிதமானது என்றும் தெரிவித்து, இவ்விழாவிற்கு புனித சமாதியில் பூசுவதற்காக சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகள், 3 லட்சம் ரூபாய் செலவில் விலை கொடுத்து வாங்கப்படுவதாகவும், புனிதமிக்க ஹஸ்ரத் ஆண்டகை அவர்களின் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழாவின்போது புனித சமாதியில் சந்தனம் பூசுவதற்காக வாங்கப்படும் சந்தனக்கட்டைகளை மானியமாக அரசு வழங்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார்.
நாகூர் தர்காவின் முன்னாள் தலைவரும், பரம்பரை ஆதினமுமாகிய ஹஸ்ரத் அல்ஹஜ்
எஸ். எஸ். சையத் காமில் சாஹிப் காதிரியின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், நாகூர் ஆண்டகை அவர்களின் பெரிய கந்தூரி விழாவின் சந்தனக்கூடு நாளன்று புனித சமாதியில் பூசும் உபயோகத்திற்காக தேவைப்படும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுமார் 40 கிலோ சந்தனக் கட்டைகளை விலையேதும் இல்லாமல் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


தர்க்கா வழிபாடு இஸ்லாம் கோட்பாடுகளுக்கு எதிரானது என சில இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.  எகிப்து போன்ற நாடுகளில் தர்காக்கள் இடிக்கப்படுகின்றன.

ஆனால் , தர்க்கா செல்வது ஏக இறைவனுக்கு இணை வைப்பது ஆகாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.  உடல் நலம் சரியில்லை என மருத்துவரிடம் செல்கிறோம். அதற்காக மருத்துவரை இறைவனுக்கு இணை வைக்கிறோம் என்று அர்த்தமா என லாஜிக்கலாக கேட்கிறார்கள் அவர்கள்.

 இறை நேசர்களுக்கு உரிய மதிப்பு கொடுப்பது இஸ்லாத்தில் ஏற்கப்பட்ட ஒன்று , அதை மீறி , இறைவனுக்கு இணை வைப்பு என்ற நிலைக்கு ஒரு போதும் சென்றதில்லை என்கிறார்கள் அவர்கள்.

       கவிஞர் அப்துல் ரகுமான் , இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் போன்றெரெல்லாம் தர்க்கா வழிபாடுகளை ஏற்க கூடியவர்கள்.  மார்க்கத்துக்கு எதிரான செயலாக இருந்தால் , அவர்கள் எப்படி இந்த வழிபாட்டை ஏற்பார்கள் என்ற கேள்வியும் யோசிக்க வைக்கிறது.

      ஆனாலும் இதில் கருத்து கூறும் அளவுக்கு எனக்கு இஸ்லாமிய அறிவு கிடையாது . எனவே இதை செய்தி என்ற அளவில் பதிவு செய்கிறேன்.

              என்னை பொருத்தவரை குணங்குடியார் தர்க்கா போன்ற இடங்களுக்கு அவ்வபோது செல்லக்கூடியவன். சுஃபியிசம் என்னை கவர்ந்த ஒன்று. குணங்குடியார் பாடல்களின் அடிமை.. ஆனால் இந்த செய்தி  குறித்து நான் கருத்து சொல்வதை விட , இஸ்லாமிய அறிஞர்கள்தான் கருத்து சொல்ல முடியும்.

இன்ஷா அல்லா  . இஸ்லாமிய அறிஞர்கள் பேட்டி எடுத்து வெளியிட முயற்சிகள் செய்ய இருக்கிறேன்.
     Wednesday, November 28, 2012

மிருகங்களுடன் “ உறவு” கொளவது தண்டனைக்குரியதா ? அயல் நாட்டு அக்கப்போர்


மிருகங்களுடன் பாலுறவு வைத்து கொள்வதை சட்ட விரோதம் என அறிவிக்க  ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது . இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மிருகங்களுக்கும் , மனிதர்களுக்கும்  நிலவும் பந்தத்தை உடைக்க அரசுக்கு உரிமை இல்லை எனவும் , இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் , மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று. 1969ல் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.  தாராளாமாக செய்து கொள்ளுங்கள். ஆனால் , வாயில்லா ஜீவன்கள்.. அதிகம் வலிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சட்டம் கூறியது.  அத்து மீறி ரண களம் ஆகிவிட்டால் , ஃபைன் போட்டு விடுவார்கள்.


ஆனால்  மிருகங்களை கொடுமைப்படுத்துகிறார்களா , மிருகங்கள் இந்த உறவை ஏற்கின்றனவா என்பதில் எல்லாம் குழப்பம் நிலவியது. இந்த பிரச்சினையே வேண்டாம் என நினைத்த அரசு , இந்த உறவுக்கு முழுமையாக தடை விதிக்க இருக்கிறது. டிசம்பர் 14ந்தேதி , இதற்கான தீர்மானத்தில்ல் வோட்டெடுப்பு நடக்க இருக்கிறது.
சட்டம் கொண்டுவர மும்முரமாக இருக்கும் ஜெர்மன் மந்திரி 

மிருகங்கள் தமது துணையோடு இருப்பது இயல்பு. யாரேனும் அந்த துணையை விரட்டி விட்டு , தான் துணை சேர ஆசைப்பட்டு , கையும் களவுமாக பிடிபட்டால் 25,000 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

இதற்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசை எதிர்த்து , வழக்கு தொடர இருக்கிறார்கள் .

போராட்ட குழுவின் தலைவரான micheal kiok கூறுகையில்,  ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கஷ்டம். அவள் உறவை விரும்பாத நிலையிலும் கூட , அவள் அதை விரும்புவதாக நினைத்து கொண்டு , நாம் உறவில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. ஆனால் விலங்குகள் அப்படி அன்று. அவற்றுக்கு விருப்பம் இல்லாவிட்டால் , வெளிப்படையாக தெரிந்து விடும். எனவே அவற்றின் விருப்பம் இல்லாமல் உறவு என்ற பேச்சுக்கு இடம் இல்லை “ என லாஜிக்கலாக பேசுகிறார்.  மேஜராகி விட்ட ஆணும் , பெண்ணும் காதல் திருமணம் முடிப்பதை ஏற்பது போல , “ மனம் “ ஒத்து , ஒரு மிருகமும் மனிதனும் உறவு கொள்வது எப்படி தவறாகும் என்பது அவர் கேள்வி.

 மிருகம் அந்த உறவை விரும்பவில்லை என்பதை எப்படி நிரூபிக்க முடியும் , நிரூபிக்க முடியாத ஒன்றுக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும் என்ற கேள்வி , கோர்ட்டில் எடுபடும் என்றே தோன்றுகிறது.

அரசின் இந்த முடிவுக்கு மிருக நல சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திள்ளனர். ஆனால் , மிருக வதை தடுப்பு இந்த சட்டத்தினால் நின்று விடப்போவதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.  காரணம் பல்வேறு வடிவங்களில் மிருக வதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு வகைதான் , உறவு சமாச்சாரம்.

ஆனால் இந்த உறவு சமாச்சாரம் மிருக வதை அல்ல என அழிச்சாட்டியம் செய்கிறார்கள்  சிலர். இது , மிருகங்களுக்கும் அவற்றின் காதலர்களுக்குமான தனிப்பட்ட விவகாரமாம். அதில் யாரும் தலையிடக் கூடாதாம்..

ம்ம்... என்ன சொல்ல ?


Tuesday, November 27, 2012

கமலுக்கு ஒன்றும் தெரியாது- சாரு நிவேதிதா பரபரப்பு பேச்சு - காணொளி


சாருவுடன் உரையாடுவது  , அவர் உரைகளை கேட்பது என்பது அலாதியான அனுபவம். உக்கிரமான எழுத்துகளை படைத்த சாருவா இவர் , என நாம் நினைக்கும் அளவுக்கு இனிமையாக பழகுவார். அவரே சொன்னதுபோல , எழுதும்போது அவர் வேறு ஒரு மனிதராக மாறி விடுவார் போலும்.

அவர் எழுத்து ஒரு விதத்தில் உச்சங்களை தொடுகிறது என்றால் அவர் உரைகள் இன்னொரு விதத்தில் உச்சங்களை தொடும். முழு ஈடுபாட்டுடனும், வார்த்தை அலங்காரங்கள் இல்லாமல் உண்மையையே ஆயுதமாக கொண்டும் பேசுவார்.

சென்னையில் நடந்த படிமை திரைப்பட்ட பயிற்சி துவக்க விழாவில் , சாரு மிகச்சிறந்த உரை ஆற்றினார். அதை ஏற்கனவே ரிப்போர்ட் செய்து இருந்தேன்

ஒன்றும் தெரியாத உலக நாயகன் - படிமை விழாவில் சாரு ஆவேசம்

ஆனாலும் , அவர் பேச்சில் இருந்த passion , என் எழுத்தில் வரவில்லை. எனவே அந்த உரையின் காணொளி , இதோ உங்கள் பார்வைக்கு.... அவர் உடல் மொழியையும் , குரலில் இருக்கும் தீவிரத்தையும் கவனியுங்கள்.....

Sunday, November 25, 2012

நன்றி கெட்ட கல்கி- பாலகுமாரன் பரபரப்பு கட்டுரை


வாழ்க்கையில் பல புத்தகங்கள் படித்து இருப்போம். முதல் முதலாக படித்த எழுத்து எது என கேட்டால் சொல்வது கொஞ்சம் கடினம்தான்.  முதல் முதலாக   இதயத்தை தொட்ட நாவல் எது என கேட்டால் சொல்லி விடலாம்.

   யோசிது பார்த்தால், நினைவின் அடுக்குகளில் பல எழுத்துகள் இருப்பதை உணர் முடிகிறது. ஆனால் என்னை முதன் முதலாக ஒரு கற்பனை ராஜாங்கத்தில் சிறகடிக்க வைத்த நாவல் என்றால் அது கல்கியின் சிவகாமியின் சபதம் தான். அதில் இருக்கும் ரொமாண்டிக் விஷ்யங்கள் , சின்ன வயதில் ஒன்றும் புரியவில்லை. ஆனால் அரசர்கள், சிற்பம் , பிட்சுக்கள் , மாறுவேடம் , மகேந்திர வர்வமரின் கெட்டிக்காரத்தனம் , போர் , கோட்டை , முற்றுகை என பல சிஷ்யங்கள் கற்பனை தூண்டி , வேறோர் உலகத்துக்கு எடுத்து சென்றது.

பொன்னியின் செல்வன் நாவல் , பிற்காலத்தில்தான் படித்தேன் . படித்து விட்டு , பலருக்கு ரெக்கமண்ட் செய்து இருக்கிறேன். நான் ரெக்கம்ண்ட் செய்து படித்தவர்கள் , மேலும் பலருக்கு ரெக்கமண்ட் செய்வதை பார்த்து வருகிறேன். காலத்தை கல்கி எழுத்து வென்று விட்டது என்றே தோன்றுகிறது.

   பாலகுமாரன் நாவல்கள் கல்லூரி காலங்களில் படிக்க ஆரம்பித்தேன் . அவரது அனைத்து எழுத்துகளையும்  கிட்டத்தட்ட படித்து விட்ட்டேன். அவர் எழுத்துகளுக்கு முத்தாய்ப்பாக உடையார் அமைந்து இருந்தது. வரலாற்ரு நாவல்கள் பல படித்து இருந்தாலும், உடையார் வேறொரு வடிவில் சிறப்பாக அமைந்து இருந்தது.


  ஆக, எனக்கு உடையாரும் பிடிக்கும் , பொன்னியின் செல்வனும் பிடிக்கும். இரண்டுமே ராஜராஜ சோழனைப் பற்றிய நாவல்கள்.


இந்த நிலையில், ஒரு கட்டுரையை சமீபத்தில் படிக்க நேர்ந்தது.  அதில் ஒரு பகுதியை நீங்களும் படித்து பாருங்கள்..

***********************************************************


                அவர்கள் நன்றி மறந்தார்கள்; நான் அப்படி இல்லை- பாலகுமாரன் 

 வரலாற்று ஆசிரியர்கள் துணை இல்லாமல் ஒரு நாவலாசிரியன் ஒன்றும் செய்து விட முடியாது.

   நீலகண்ட சாஸ்திரிகளின் “ பிற்கால சோழர்கள் “ என்ற இரண்டு தொகுதிகளை படிக்காமல் ஒரு பொழுதும் இரா. கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படுகிற கல்கி, அவரது பொன்னியின் செல்வனை எழுதி இருக்க முடியாது. ஆனால் நானறிந்த வரை எந்த சரித்திர ஆசிரியரைப் பற்றியும் கல்கி அவர்கள் விவரிக்கவில்லை. நன்றி சொல்லவில்லை. இது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது.

    ஒருவேளை நன்றி சொல்லும் மரபு அன்று இல்லாமல் இருந்து இருக்கலாம். பிற்பாடு சரித்திர கதைகளில் பிரகாசம் பெற்ற சிலரும் புத்தகங்களை சொல்லி இருக்கிறார்களே தவிர , தனிப்பட்ட முறையில் இன்னாரின் எழுத்தால்தான் இந்த நாவல் பிறந்தது என சொன்னது இல்லை.

    ஆனால் என்னுடைய உடையார் நாவல் ஆறு பாகத்திலும் , எனக்கு உதவி செய்த சரித்திர பேராசிரியர்களை , கல்வெட்டு ஆய்வார்களை , ஆராய்ச்சியாளர்களை இனம் கண்டு முகமன் கூறி வணங்கி வாழ்த்தி இருக்கிறேன்.

Friday, November 23, 2012

நச்சினார்க்கினியார் , முஸ்தஃபா வாக மாறியது ஏன் ?- நெகிழ்ச்சியான சம்பவம்


மணவை முஸ்தபா....  அறிவியல் தமிழில் முத்திரை பதித்த பெயர் இது. பல்வேறு துறைகளி ல் , அறிவியல் சார்ந்த புதிய கலைசொற்களை உருவாக்கியவர் இவர்.

     ந்ச்சினார்க்கினியார் என்ற பெயரில்தான் ஆரம்பத்தில் எழுதி வந்தார். ஆனால் ஒரு உணர்வு பூர்வமான சந்தர்ப்பத்தில் முஸ்தபா என்ற பெயரில் எழுத ஆரம்பித்து, தான் சார்ந்த இஸ்லாம் மதத்துக்கு பெருமை சேர்த்தார் .   

     அவர் ஏன் பெயர் மாற்றினார் என்பதற்கு ஒரு சுவையான காரணம் இருக்கிறது.. படித்து பாருங்கள் .

*********************************************************************************************


கல்லூரிக் காலத்தில் நச்சினார்க்கினியர் என்ற பெயரோடு இருந்த தாங்கள் மணவை முஸ்தபா என்ற பெயருக்கு மாறியது ஏன்? எப்போது?


Manavai Mustafa
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமையில் விவாத அரங்கம் நடைபெற்றது. மாணவர்கள் ஒரு அணியாகவும் ஆசிரியர்கள் ஒரு அணியாகவும் விவாதிக்க ஏற்பாடு. மாணவர்கள் அணிக்கு நான் தலைமை தாங்குகிறேன். விவாதத் தலைப்பு இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் வளர்ந்திருக்கிறதா? என்பதாகும். ஆசிரிய அணியினர் வளர்ந்திருக்கிறது என்றும் மாணவ அணியினர் வளரவில்லை என்றும் வாதிட்டனர். இறுதி வாக்கெடுப்பில் வளரவில்லை என வாதிட்ட மாணவ அணியினர் பெறும் வெற்றி பெற்றனர். இது பேராசிரியர் தெ.பொ.மீ.அவர்கட்கு பெரும் வியப்பளித்தது.

“அதிலும் பெருக்கத்தை வளர்ச்சியாகக் கருத முடியாது. மாறும் இயல்பு கொண்ட மனித வாழ்க்கைக்கு மாறாத உண்மைகளை உள்ளடக்கமாகக் கொண்ட இலக்கியங்களே வாழும் வெற்றியினைப் பெற முடியும். அத்தகைய இலக்கியங்களே வளர்ச்சிக்கு அடிப்படையாகும். அத்தகு அறிவாற்றல் மிக்க இலக்கியங்கள் அதிகம் உருவாகாது. வெறும் உணர்ச்சிக்கு இரைபோடும் இலக்கியங்கள் வளர்ச்சியைக் குறிக்காது. வேண்டுமானானல் அவை பெருக்கத்தைக் குறிக்கலாம். அது வளர்ச்சியாகாது” என நான் எடுத்து வைத்த வாதம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தம் உரையில் எடுத்து வைக்கும் வாதத் திறன் மாணவ சமுதாய எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எனவே இன்று முதல் முஸ்தபாவை நம்மிடையே வாழும் நச்சினார்க்கினியராகக் காண்போம் எனக் கூறி, எனக்குப் புதுப் பெயரைச் சூட்டினார். அன்று முதல் அப்பெயர் நிலை பெற்றது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகப் படிப்பு முடிந்து வெளியேறும் போது, பேராசிரியர் தெ.பொ.மீ என்னை அழைத்து, இனிமேல் நீ முஸ்தபா என்ற பெயரால் அழைக்கப் படுவதையே நான் விரும்புகிறேன். இனி, நீ உன் சொந்தப் பெயரையே பயன்படுத்த வேண்டும். ஏன் என்று கேட்கக் கூடாது. சமயம் வரும்போது, நானே அதற்கான காரணத்தைச் சொல்வேன் எனக்கூறி கட்டளையிட்டார். அவ்வாறே நானும் நடந்து கொண்டேன். பேராசிரியர் எதைச் சொன்னாலும், செய்தாலும் என் நன்மைக்காகவே என்ற நம்பிக்கை எப்போதும் எனக்கு உண்டு.

நான் மணப்பாறையில் பிறக்காவிட்டாலும் ஐந்து வயது முதல் அவ்வூரில் வளர்ந்தவன். என் பள்ளி வாழ்க்கையில் பல்வேறு வகைகளில் எழுத்து, பேச்சு மற்றும் இலக்கியத் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சிப் பாசறையாக, குறிப்பிடத்தக்க நிலைக்களமாக மணவை இருந்ததால் நன்றியுணர்வோடு என் பெயரை மணவை முஸ்தபா என வைத்துக் கொண்டேன்.

என் பெயரை மாற்றச் சொன்னதன் இரகசியத்தை என் குருநாதர் தெ.பொ.மீ அவர்கள் தான் மறைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் (45 ஆண்டுகளுக்குப் பின்) என்னிடம் வெளிப்படுத்தினார்.

நான் ஆரம்பத்தில் உன் சிந்தனைச் செயல்பாடுகளின் அடிப்படையில் உன் எதிர்காலத் தமிழ்ப் பணிகளைப் பற்றி நிறைய கற்பனை செய்திருந்தேன். நான் எண்ணியதை விடச் சிறப்பாக உன் தமிழ்ப் பணி அமைந்துள்ளது. அதிலும் நீ முனைப்புடன் செய்து வரும் காலத்திற்கேற்ற அறிவியல் தமிழ்த் தொண்டின் பெருமை இஸ்லாமிய சமுதாயத்தின் பெருமையாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் நச்சினார்க்கினியன் என்ற பெயரிலிருந்து (மணவை) முஸ்தபா எனும் பெயருக்கு மாறச் சொன்னேன், என்று கூறிய போது தன் மாணவன் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையும் தொலை நோக்கும் என்னை நெஞ்சுருகச் செய்துவிட்டது. இதுதான் என் பெயர்மாற்ற வரலாறு.

Thursday, November 22, 2012

பாரதிராஜா, வைகோ - யார் சொல்வது சரி? நீங்கள் திராவிடனா , தமிழனா ?


  ஆரியர், திராவிடர் என்பது எனக்கு கொஞ்சம் குழ்ப்பமான சமாச்சாரமே இருந்து வருகிறது. திராவிடம் என சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், திராவிடன் என நாம்தான் சொல்லிக்கொண்டு அலைகிறோம். மலையாளிகளோ , கன்னடர்களோ , தெலுங்கர்களோ அப்படி சொல்லிகொள்வதும் இல்லை.. நினைத்து கொள்வதும் இல்லை. எனவே நம்மை திராவிடர்கள் என சொல்லிக்கொண்டு இழப்புகளை சந்தித்து வருகிறோம். நாம் எல்லாம் தமிழர்கள் என்ற பேச்சுகளும் நன்றாகத்தான் இருக்கிறது..

கொருக்குப்பேட்டை வாசி , சென்னை வாசி, தமிழன் ,  திராவிடன் , ஆசியன் என்பதை எல்லாம் தாண்டிய நிலையில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட , நடைமுறை வாழ்வில் ஓர் அடையாளத்துடன் வாழ வேண்டி இருக்கிறது. அந்த அடையாளத்துக்கு உண்மையாகவும் இருக்க வேண்டி இருக்கிறது.  நம் அனடை மாநிலங்களில், நம்மை திராவிடர்கள் என ஒப்புக்கொள்ளாவிட்டாலும் , வட இந்தியா சென்றால் , தென்னிந்தியர்களை ஒன்றாகத்தான் வகைப்படுத்துகிறார்கள் . 

தமிழ் நாட்டுக்குள் இருக்கும்போது , திராவிடன் என்ற அடையாளம் நல்லது செய்து இருக்கிறதா இல்லையா என்பதை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது என தோன்றுகிறது.  திராவிடம் என சொன்னாலும் , அண்ணா போன்ற உண்மையான திராவிட தலைவர்கள் , தமிழுக்குத்தான் பெருமை சேர்த்தார்கள் என்பதை மறுக்க முடியாது.  சமஸ்கிருதத்தை கலந்து எழுதுவது , வட மொழி சொற்கள் ஆதிக்கம் போன்றவை ஒழிய திராவிட இயக்கம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் , படிப்படியாக அன்று இருந்த வட மொழி ஆதிக்கத்தின் இடத்தை ஆங்கிலம் பிடித்து இருப்பதை எங்கும் பார்க்கிறோம். இதற்கு காரணம் , திராவிடம் என்ற மாயையில் நாம் மூழ்கியதுதான் என சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது , “ திராவிடர்கள் “ யாரும் உதவிக் குரல் எழுப்பவில்லையே... 

இது குறித்த விரிவான விவாதம் தேவை என நினைக்கிறேன். 


   இது குறித்து , இயக்குனர் பாரதிராஜாவுக்கும் , வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.


தா பா பிறந்த நாள் விழாவில் பாரதிராஜா பேசினார்.. 


பாரதிராஜா 

ஈழப்பிரச்சினையில் நாம் தோற்று விட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்து விட்டனர். தமிழினம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திராவிடத்தை பேசிக்கொண்டே ஈழத்தை காப்பாற்றாமல் விட்டு விட்டார்கள். பேசியே தமிழர்களை மழுங்கடித்து விட்டனர். 

இதற்கு பின் பேசிய வைகோ ஆவேசமாக காணப்பட்டார். பேசி விட்டு கோபத்துடன் கிளம்பி விட்டார்.. 


வைகோ 

பாரதிராஜாவே , வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என பேசிவிட்டு போய் இருக்கிறீர்கள் . திராவிடத்தைப் பற்றி பேசுவது சிலருக்கு பொழுது போக்கு. திராவிடம் இல்லை என்றால் இங்கே எதுவுமே  இல்லை. அண்ணா , பெரியார் இல்லாமல் இங்கே எதுவும் நடந்து இருக்காது.  இனி திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால் , நாங்கள்  பத்து வார்த்தை பேச வேண்டி வரும்,


அதன் பின் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். பாரதிராஜா 
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்***********************************************************************************


ம்ம்... நான் திராவிடனா அல்லது தமிழனா எனக்கு குழப்பமாக இருக்கிறது . நீங்கள் திராவிடனா , தமிழனா ? 


Wednesday, November 21, 2012

பிணத்தின் மீது சிறு நீர் கழிக்கும் ஹிந்து நாளிதழ்- நண்பர் நிர்மல் பதிலடி


பால்தாக்கரே மரணத்தை பலர் எதிர் கொண்ட விதம் ஆச்சர்யம் அளித்தது.. சிலர் அவரை தெய்வமாக போற்றினார்கள். சிலரோ தூற்றினார்கள். இந்த நிலையில், தன் வாழ் நாள் முழுதும் தாக்கரேவை திட்டி வரும் நண்பர் நிர்மலில் கருத்து , வித்தியாசமாக இருந்தது.

பார்ப்பனீயத்தை உயர்த்தி பிடிக்கும் ஹிந்துவில், தாக்கரேயை விமர்சித்து ஒரு கட்டுரை வந்து இருந்தது, அதற்கு நண்பர் நிர்மல் அளித்த பதில்.. 
   ஆகிறத பாருங்கலே - நிர்மல் 
.

இந்த கட்டுரையும் சரி அது வெளியிட்ட நேரமும் சரி - ஒரு அழுகலான மனம் 

உடையவனின் படைப்பாகவே எனக்கு தோனுது. எனக்கு பிடிக்கவே 

பிடிக்காத தாக்கரேவை பிடிக்க வைத்துவிட்டது இந்த அதி புத்திசாலியின் 

கட்டுரை. தர்க்கம் சில நேரங்களில் ஒய்வெடுக்கணும் .

அப்படிப்பட்ட தருணம்தான் இது, ஊரில கூட சொல்லுவாங்க ஆகிறத 

பாருங்கப்பான்னு .அதுதான் சரி,


இக் கட்டுரை உரைக்கும் எல்லா அதி புத்திச்சாலித்தனத்துக்கும், 

புத்தி ஜிவித்தன்மைக்கும் இந்த இடம் / நேரம் சரியானாதாக இல்லை.  மேலும் அது ஒன்றும் யாருக்கும் தெரியாத ரகசியமும் இல்லை,  


சோம்பேறியுமா, கூத்தும், வெட்டி பந்தாவுமாக வாழ்ந்து வந்த கூட்டத்திற்க்கு 

ஒரு ஆள் தன்  நம்பிக்கை ஊட்டியிருக்கிறார் அதுதான் 25 லட்சம் பேர் 

எண்ணிக்கையை காட்டுது. அதிகம் படித்தும் அதிக தர்க ஞானங்களை வளர்ந்த நாம் சில 

நேரங்களில் ஒதுங்கிருப்பது நலமென படுகிறது.

பிணத்தின் மேல் ஒன்னுக்கு பேய்துள்ளது இந்த 


கட்டுரை. இப்படிப்பட்ட அதி புத்திசாலிகள்தான் நமக்கு ஓன்றுபட்ட பாரத 

வகுப்பு எடுக்கிறார்கள்.  
Someone told Violence Of Puritans is more harsher than of 
Pornography. - The Violence in this article is immense - ought to be rejected on first sight

Tuesday, November 20, 2012

நன்றி மறந்த மணி ரத்னம் - கோவைதம்பி ஆவேசம் சில நேரங்களில்,  அவாளை நம் ஆட்கள் அளவு கடந்து தாக்குகிறார்களோ என தோன்றும்.  உதாரணமாக ஜாதி பெயர்களில் எத்தனையோ  உணவங்கள் , நிறுவனங்கள் இருக்கின்றன.  அதை எல்லாம் விட்டுவிட்டு, அவாள் பெயரில் உணவகங்கள் அமைத்தால் திட்டுகிறார்களே என வருத்தமாக இருக்கும்.


ஆனால் அவாளில் சிலர் நடந்து கொள்வதை பார்த்தால் , இப்படி திட்டுவது நியாயம்தானோ என தோன்றுகிறது.

சமீபத்தில் மணிரத்தினம் பேட்டி ஒன்று வெளிவந்து இருந்தது. சினிமாவையே அவர்தான் காப்பாற்றுவதாக பேட்டி கொடுத்து இருந்தார். அதில் இதய கோயில் படம் இயக்க ஒப்பு கொண்டது தான் செய்த பெரிய தவறு என்றும், அது  மோசமான படம் என்றும் சொல்லி இருந்தார்.

ஒரு காலத்தில் கொடு கட்டி பறந்தவர் கோவைத்தம்பி. பல வெற்றி படங்களை தயாரித்தவர் . அவர் தயாரிப்பில் வெளிவந்த இதய கோயில் படத்தின் இயக்குனர் மணி ரத்தினம் என தெரிய வந்தபோது , அப்போதைய சினிமா ரசிகர்களுக்கு குழப்பம். யார் இந்த மணி ரத்தினம். புது ஆளுக்கு வாய்ப்பு கொடுத்து , கோவைத்தம்பி ஏன் விஷ பரீட்சை செய்கிறார் என நினைத்தார்கள் . 

அது வரை வெற்றி கரமாக இருந்த இளைய ராஜா - கோவைதம்பி கூட்டணி இதில்தான் முறிந்தது. காரணம் மணி ரத்தினம். இந்த படம் மூலம்தான் மணிரத்னம் என்றால் யார் என்றே தமிழ் நாட்டுக்கு தெரிய வந்தது . இந்த நிலையில் , ஏறிய ஏணியை எட்டி உதைப்பது போல , இந்த படத்தை அவர் விமர்சித்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இந்த விமர்சனத்துக்கு , இதய கோயில் தயாரிப்பாளர் கோவைத்தம்பி அளித்த பதில் 

‘‘அந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் மணிரத்னத்தை யார் என்றே தெரியாது. அவர் என்னை நேரில் பார்த்தது போலவும், இந்த கதைக்குள் அவரை அறியாமல் சிக்கிக்கொண்டது போலவும், மிகவும் மோசமான படம் ‘இதயக்கோவில்’ என்றும் 28 ஆண்டுகளுக்கு பின்பு கூறியிருக்கிறார்.
கொடிகட்டி பறந்த மதர்லேண்ட் பிக்சர்ஸ் வைர விழா, தங்க விழா, வெள்ளி விழா படங்களை தந்தது தமிழக மக்களுக்கு தெரியும். எத்தனையோ இளைஞர்கள் இருக்க, தவறான வழிகாட்டுதலால் மணிரத்னத்தை ‘இதயக்கோவில்’ டைரக்டர் ஆக்கியது என் தவறுதான். அன்று முதல் மதர்லேண்ட் பிக்சர்சுக்கு இறங்குமுகமாக மாறியது உண்மைதான்.
எனக்கும், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது ஏன் என்பது மணிரத்னத்தின் மனசாட்சிக்கு தெரியும். அந்த படத்தில் எனக்கு மூன்று பட செலவு ஏற்பட்டது. விவரம் தெரியாமல், காட்சிகளை சுட்டுத்தள்ளியது என் பொருளாதாரத்தை சுட்டு பொசுக்கியது. என்னைப் பொறுத்தவரை, ‘இதயக்கோவில்’ வெற்றி படம்தான்.
திராவிட இயக்கத்தில் பற்றுடையவன் என்ற முறையில், அவர் இயக்கிய ‘இருவர்’ படத்தை நண்பர்களிடம் நான் கடுமையாக விமர்சனம் செய்ததுதான், என்னையும், என் நிறுவனத்தையும் அவர் தாக்குவதற்கு காரணம் என்று என் மனசாட்சி சொல்கிறது.

Monday, November 19, 2012

வாய்ப்பாட்டு கவிதையும் , நிஜ கவிதையும் - பார்த்ததில் பிடித்தது..

சொந்த பத்திரிக்கை இருக்கும் ஒரே காரணத்தால் , சிலர் கவிஞராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள முடிகிறது.

1 X 2 =2

2X2= 4

3x 2 = 6


என்று வாய்ப்பாடு எழுதுவதுபோல சிலர் எழுதிவிட்டு , இதுதான் கவிதை என சாதிக்கிறார்கள்.

உதாரணமாக , காதலி உங்களை பிரிந்து விட்டாள் என வைத்து கொள்ளுங்கள். ஒரு பேப்பரை கிழித்து எறிவது போல , வெகு சாதாரணமாக , கவனிப்பை ஈர்க்காமல் அந்த பிரிவு நடந்து விட்டது என தோன்றுகிறது..

அது போதும்,. வாய்ப்பாடு கவிதை தயார் . பேப்பர் கிழித்து எரிவது போல என்பதற்கு நிகரான உவமைகளை அடுக்கி கொண்டே போனால் அது கவிதை என சொல்லிக்கொள்கிறார்கள்.பாருங்கள்..

ஊறுகாயை தொட்டுக்கொள்வது போல...


தண்ணி அடிக்கையில் ஊறுகாயை தொட்டுக் கொள்வது போல 
பெண்கள் மைக்ரோ செகண்டில் சைட் அடிப்பது போல
பேனாவில் மை ஊற்றுவது போல
ஒரு பென்சிலைச் சீவுவதுபோல 
 நாற்காலியில் இருந்து எழுவது போல
மேடையில் இருப்பவர்கள் ,  நாசூக்காக கொட்டாவி விடுவது போல
ஒரு கண்ணாடி டம்ளரை மேஜையில் நகர்த்துவதுபோல

புத்தகத்தை மூடி வைப்பது போல
ஒரு புத்தகத்தின் 167ஆம் பக்க ஓரத்தை படிப்பதுபோல

ஷேவ் முடிந்ததும் மீசையை ட்ரிம் செய்து கொள்வது போல
ஒரு பழைய பயணச் சீட்டைக் கசக்கி எறிவதுபோல

எரி நட்சத்திரம் தோன்றி மறைவது போல
ஒரு தீக்குச்சியை வெறுமனே கொளுத்துவதுபோல

விளக்கை ஏற்றுவது போல 
ஒரு அலைவரிசையிலிருந்து இன்னொரு அலைவிரிசைக்கு மாறுவதுபோல

கம்ப்யூட்டரை ஷட் டவுன் செய்வதைபோல 

நிகழ்கிறது
உன் நீங்குதல்

தடையமில்லாமல்
யாருடைய தூக்கமும் கலைந்துவிடாமல்
நீ எப்போதும் இங்கு இருந்திருக்கவே இல்லை
என்பது போல


இதில் கம்யூட்டர் ஷட் டவுன் என்பது படிமமாம்.. இப்படி சொல்லி , அப்பாவிகளை நம்ப வைக்கிறார்கள்.
உரை  நடையை கவிதை என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள்.

அதே நேரத்தில் , சில நாவல்களில் உன்னதமான கவிதைகளில் காண முடியும். அந்த வகையில் , எனக்கு மிக மிக பிடித்த கவிதை சாரு நிவேதிதாவின் சீரோ டிகிரியில் இடம் பெற்றுள்ளது..


 நண்பர் நிர்மல் , இதை ஒளி ஓவியமாக யூ ட்யூபில் அப்லோட் செய்து இருக்கிறார். கவிதையின் சாரத்தை முழுக்க முழுக்க உள்வாங்கி , அட்டகாசமாக செய்து இருக்கிறார்,..

பெண்மையை போற்றும் இந்த கவிதை , உங்கள் பார்வைக்கு.


Sunday, November 18, 2012

துரோகபுத்திரனின் அடுத்த victim - நீயும் அழகு, உன் கவிதையும் அழகு ; கேவலபுத்திரனாக மாறிய அவலம்.

தன்னை நம்பியவர்களை , நம்ப வைத்து கழுத்தறுப்பது துரோக புத்திரன் ஸ்டைல். காலச்சுவடு கண்ணன் , சாரு நிவேதிதா , ஜெயமோகன் , வசு மித்ர , கனி மொழி என அவர் துரோக லிஸ்ட் மிகப்பெரிது.


     அந்த துரோக லிஸ்ட்டில் லேட்டஸ்டாக சேர்ந்து இருப்பவர் கவிஞரும் , இயக்குனருமான லீனா மணி மேகலை. துரோகபுத்திரனால் சிறந்த கவிஞர் என புகழப்பட்டவர்.  

நீங்களும் அழகு , உங்கள் கவிதையும் அழகு என இங்கிதம் தெரியாமல் பேசியவர்தான் இந்த து.பு . 

  இப்படி இங்கிதம் தெரியாமல் பேசும் இவர் , மற்ற பெண்கள்தான் தன் பின் அலைவதாக செய்திகளை உருவாக்கி விடுவார். 

  காலச்சுவடு பத்திரிககையில் பணியாற்றியபோது , தன் செல் போனை ஆன் செய்து வைத்து, மீட்டிங்கை லைவ் டெலிகாஸ்ட் செய்து காலச்சுவடு கண்ணனுக்கு துரோகம் செய்தார். இது போன்ற காரணங்களால் , அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின் , அரசியல் தலைவர் ஒருவரின் மகள் ஒருவர்தான் பணம் கொடுத்து கை தூக்கி விட்டார். அந்த நன்றி கூட இல்லாமல் , அவரைப்பற்றிய அவதூறான செய்திகளை கவிதைகள் ( ?! ) மூலமும் , அரட்டைகள் மூலம் தன் ரசிகர்களிடையே புழங்கவிட்டார்.

 சாருவின் பெயரை கெடுக்க வேண்டும் என்ற ஆசையில், ஒரு பெண்ணை பலி கடாவாக்கி, சாருவை பாலியல் ஸ்கேண்டலில் சிக்க வைத்தார். 

   இதெல்லாம் ப்ழைய கதை.

   இப்போது தன் ஒரிஜினல் முகத்தை லீனா மணி மேகலையிடம் காட்டி இருக்கிறார். 

     அப்படி என்ன பெரிய தவறு செய்து விட்டார் லீனா மணிமேகலை ? ஒன்றும் இல்லை. தான் எழுதிய புத்தகங்களுக்கு சன்மானம் கேட்டார் . அவ்வளவுதான். 

 உடனே துரோக புத்திரனுக்கு கோபம் வந்து விட்டது. ஆபாச அர்ச்சனைகளை ஆரம்பித்தார் . ஒரு பெண் உரிமை குரல் கொடுத்தால் , கருத்து ரீதியாக பதில் அளிக்கும் கல்ச்சர் தெரியாத , துரோகி உடனடியாக அவதூறுகளை ஆரம்பித்தார்.  அவர் ரசிகர்கள் இன்னும் கேவலமான கமெண்ட் போட ஆரம்பித்தனர்.

             ஒரு சராசரி பெண் இத்தனை எதிர்ப்புகளை பார்த்து முடங்கி போய் இருக்க கூடும். ஆனால் லீனா மணிமேகலை இந்த ஆணாதிக்க சீண்டல்களால் துவண்டு போகாமல் , பதிலடி கொடுத்து துரோக புத்திரனை ஆஃப் செய்துள்ளார் அவர் .
லீனா மணிமேகலை அவர்களின் பதிலடி உங்கள் பார்வைக்கு 

************************************************************

      மானம் கெட்ட பிழைப்பு பிழைக்கும் ** புத்திரன் - லீனா மணிமேகலை 

            
        அவதாரப்புருஷன் மனுஷ்யபுத்திரனுக்கு,

 சில வருடங்களுக்கு முன் வரை என் ஆவணப்படத் திரையிடல்களுக்கெல்லாம் முன்வரிசையிலமர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாராட்டிய நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் இருக்கே அதை என்ன செய்ய? நீங்கள் வியாபாரியான பிறகு நான் எடுத்த படங்கள் இவை. கல்லா கட்டும் பிஸியில் பார்க
்க வரவில்லை. நீங்கள் படங்களைப் பார்க்காமலே அதைப்பற்றி குத்தல் கமெண்ட் எழுதுகிறீர்கள் எனறு உங்கள் லைக் தொண்டர்களுக்குத் தெரியுமா?

என் கவிதைகள் குறித்த ஏளனங்களால், உங்கள் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு கொண்டாட்டமாகத்தான் இருக்கிறது. ஒற்றையிலையன முதல் தொகுப்பை வெளியிட்டு, அசலான பெண் குரல் இது என்று கவிஞர் சுகுமாரனின் கருத்தை அமோதிக்கிறேன் என்று நீங்கள் எழுதிவைத்து பேசியதை மறக்கடித்தது, எழுத்தாளர்களிடமிருந்து உறிஞ்சிய சில்லறைக்காசுகள் என்பதையும் சொல்லிடுங்க. வரலாறு முக்கியமில்லையா? மலையாள பத்திரிகை பேட்டிகளிலெல்லாம் சல்மா பின்னும், என் பின்னும் ஏன் ஒளியனும். நாங்கள் தான் அறிவற்றவர்கள் ஆச்சே?

நான் நடித்த செல்லம்மா பார்த்துவிட்டு, ”நீ தான் இனி தமிழகத்தின் ஸ்மிதா பட்டீல்” என்று என் வீட்டுக்கு வந்து கையைப்பிடித்துக்கொண்டு பேசியதை ஜெரால்டு நினைவு கூர்ந்தார். பாவம், காலச்சுவடு விரட்டி விட்டபின், அநாதரவாக நின்ற உங்களை உயிர்மை என்று பெயர் வைத்ததலிருந்து முதலிரண்டு புத்தக கண்காட்சியிலும், முதல் வெளியீட்டு விழாக்களிலும் உங்களுக்கு ஆதரவாக நின்றுவிடவேண்டுமென வாகன ஓட்டியாகக்கூட அலைந்து திரிந்த அப்பாவியாகவே ஜெரால்டு இன்னும் இருக்கிறார்.

”நீங்களும் அழகு, உங்கள் கவிதைகளும் அழகு”, ”என்னை எப்படியாவது வணக்கம் தமிழகத்தில் விருந்தினராக அழைத்து விடுங்கள், ஏதாவது திரைப்படத்தில் பாடல் எழுத வைத்துவிடுங்கள்” என்றெல்லாம் பேசிய மனுஷ்யபுத்திரனாக இருந்து தான் இன்று வளர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் கை நீட்டிப் பேசும் இடத்திலேயே நான் இருந்திருக்கிறேன்.

எழுத்தாளர்களைச்சுரண்டி ஓசியில் வாழும் வாழ்க்கையை வாழும் உங்களுக்கு அடக்கம் வேணுங்க! இல்லை மரியாதை கெட்டுத்தான் போகும். கடந்த காலத்தை மறந்து விட்டால் அது மிக மோசமான கத்தியாக மாறி கழுத்தை நெறித்துவிடும். மேலும் நீங்கள் பேசினால், மேலும் நானும் பேசுவேன். நிறைய இருக்கே, பத்து வருஷமாச்சே!
மனுஷ்யபுத்திரனிடம் எந்த கேள்விக்கும் பதிலில்லை. சும்மா பதினாறு வயதினிலே, கஜினி என்று உளறிக்கொண்டிருக்கிறார். உயிர்மை என்ற பதிப்பகம் வருவதற்கு முன்னரே, கனவுப்பட்டறை மூன்று புத்தகங்களை கொண்டு வந்துவிட்டது. அதில் என் முதல் தொகுப்பும் பதிப்பிக்கப்பட்டது. சந்தில உயிர்மையிடம் கேட்டதாக சிந்து பாடுகிறார். கனவுப்பட்டறை தொடர முடியாத நிலையில் இருப்பதையறிந்து, பரத்தையருள் ராணியைக்கொண்டு வர மனுஷ்யபுத்திரன் வி
ட்ட தூதெல்லாம் இங்கே எழுதினேன் என்றால் எவ்வளவு மானங்கெட்ட பொழப்பு பிழைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகும். இவனுங்களும் இவனுங்க கோதாவும்! ஓசியில் எழுத்தாளர் எல்லாம் மானங்கெட்டு எழுதற வரைக்கும் இவர் ஜம்முன்னு முகப்புத்தகத்தில் எழுத்தாளர்களையெல்லாம் கிண்டல் பண்ணி எழுதிட்டுத்தான் இருப்பார். அதுக்கு ஒரு கூட்டம் பஜனை பாடிட்டுத்தான் இருக்கும்.

Saturday, November 17, 2012

துப்பாக்கி எதிர்ப்பு எதிரொலி- காப்பிபேஸ்ட் நடிகரின் தந்திர வியூகம்    துப்பாக்கி பட குழுவினர் பிரச்சினைகளுக்குரிய காட்சிகளையும் , வசனங்களையும் நீக்கி பிரச்சினையை முடித்து வைத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.

  அவர்கள் வேண்டுமென்றே இஸ்லாமிய் சகோதரர்களை புண்படுத்தி இருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.  எது எப்படியோ, தவறை திருத்திக் கொண்டதற்காக பாரட்டலாம்.

ஆனால் வேண்டுமென்றே , இதே தவறை செய்து , படம் எடுத்து வருகிறார் காப்பிபேஸ்ட் ஹாசன். பிரபஞ்ச நாயகன் என தன்னை அழைத்து கொள்ளும் அவர் , இதற்கு முன்பு அவர் இஸ்லாமியர்களை கிண்டல் செய்து எடுத்த பட **னை போல **வன்.  படம் வந்த வேகத்திலேயே திரையரங்குகளை விட்டு சென்று விட்டதால் , அதற்கு எதிர்ப்பு எழவில்லை.


       இப்போது எடுத்து வரும் சுயரூபம் படத்தில் இதே தவறை மீண்டும் செய்து இருக்கிறார். துப்பாகி படத்துக்கு எழுந்த எதிர்ப்பு அவரை யோசிக்க வைத்துள்ளது.

     சில ஆண்டுகளுக்கு முன் , பிராமணர்களை கிண்டல் செய்து பாக்யராஜ் படம் ஒன்று எடுத்தார். எதிர்ப்பு எழுந்தால் என்ன செய்வது என யோசித்து , பிராமணரான பாலகுமாரனை பினாமி இயக்குனராக்கி படம் எடுத்து , பாலகுமாரன் பெயரிலேயே படத்தை வெளியிட்டார்,.

  அந்த பாணியில் , தற்போது இயக்குனர் அமீரை கேடயமாக பயன்படுத்த முடிவு செய்துள்ளார் காப்பிபேஸ்ட்.

சுயரூபம் படத்தில் அமீரை நடிக்க வைத்துள்ளார்.   இதன் மூலம் எதிர்ப்பை தடுக்கலாம் என கணக்கிட்டுள்ளார்.

                அவர் தந்திரம் பலிக்குமா என பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும் .
       
   

Wednesday, November 14, 2012

துப்பாக்கி படமும் , இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளும்.யார் செய்தாலும் தவறு தவறுதான். ஆனால் ஒரு தவறை ஓர் இனத்துடனோ , மதத்துடனோ , மொழியுடனோ சம்பந்தப்படுத்துவது தவறு.

    ஆனால் சில படங்களில் இஸ்லாமிய சகோதரர்களை புண்படுத்துவது போல காட்சிகள் இருப்பது கவனத்துக்குரியது.
இந்த நிலையில் விஜயின் துப்பாக்கி படம் வெளியாகி நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. ஆனால் இந்த வெற்றிக்கு திருஷ்டி பரிகாரம் போல இஸ்லாமியரை படம் புண்படுத்துயுள்ளது வருந்தத்தக்கது.

உண்மையில் அந்த பட குழுவினருக்கு புண்படுத்தும் நோக்கம் இல்லாமல் கூட இருந்து இருக்கலாம். ஆனால் படம் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்பதை மறுக்க முடியாது.

இதற்கு எதிர்ப்பு வரும் என எப்படி தெரியாமல் போயிற்று என தெரியவில்லை.

அல்லது தெரிந்தே இப்படி செய்கிறார்களா என்றும் புரியவில்லை...
இது போல படம் எடுப்பவர்கள் சொல்லும் சமாதானங்களும் , அவற்றின் போதாமையும்..


சினிமா என்பது வெறும் பொழுது போக்குதானே ? இதில் புண்பட என்ன இருக்கிறது?

       ஒருவனை ஜாலியாக அடித்தாலும் , விளையாட்டாக அடித்தாலும் வலிக்கத்தான் செய்யும். சில தெலுங்கு படங்களில் தெலுங்கான மக்கள் பேசும்   ஸ்டைலை கிண்டல் செய்தது அந்த காலத்திலேயே பிரச்சினை ஏற்படுத்தியது.  யாராக இருந்தாலும் , ஒரு குறிப்பிட்ட தரப்ப்பினரை தொடர்ந்து எதிர்மறையாக காட்டுவது , கண்டிப்பாக புண்படுத்ததான் செய்யும்.


ஆப்கானிஸ்தானில் இருந்தோ , பாகிஸ்தானில் வரும் தீவிரவாதிகளை இஸ்லாமியர்கள் என்றுதானே காட்ட முடியும் ?


 ஒரு குறிப்பிட்ட நாட்டை நேரடியாகவோ , மறைமுகவோ இப்படி காட்டுவதே தவறு. இப்படி தொடர்ந்து , ஒரு குறிப்பிட்ட ஒரு நாட்டை மட்டும் குறிவைத்து கருத்தியல் தாக்குதல் நடத்துவதும் விரும்ப்பத்தக்கதல்ல.


இஸ்லாமியரை வில்லனாக காட்டவே கூடாதா ?


பாகிஸ்தானில் நடப்பது போல ஒரு படம் எடுத்தால் , அதில் எல்லா பாத்திரங்களுமே இஸ்லாமியராக இருப்பார்கள் . அதில் ஓர் இஸ்லாமியன் வில்லனாக இருப்பது வித்தியாசமாக தெரியாது.

அதில் ஒரு தமிழனை வில்லனாக காட்டினால் , வித்தியாசமாக தெரியும் அல்லவா ? அதே போல , இயல்பான ஒரு கதையில் ( உதாரணமாக தோப்பில் முகமது மீரான் நாவல்களில் வருவதை போல )  வில்லன் ஒருவன் இஸ்லாமியனாக இருந்தால் வித்தியாசமாக தெரியாது. ஆனால் , பயங்கரவாதி என்றாலே இஸ்லாமியன் என காட்டுவதுதான் இடிக்கிறது.


ஆக, என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் இது போன்ற படங்கள் இஸ்லாமிய சகோதரர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதை மறுக்க முடியாது.

என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.

Tuesday, November 13, 2012

ஹீரோ ஹோண்டா விளம்பர எதிர்ப்பு என்ன சாதித்தது? கேபிள் சங்கர் , தமிழ் ஸ்டுடியோ அருண் கருத்து


சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட விஷ்யம் , ஹீரோ ஹோண்டா விளம்பரம். 

ஜாதி பெயரை பயன்படுத்தியது தவறு என்பது சிலர் கருத்து. ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்வானதாக இந்த் விளம்பரம் சித்திரிக்கிறது என்கின்றார்கள் அவர்கள்.

ஜாதி பெயர் பல வணிக நிறுவனங்களில் , உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதை எல்லாம் தடுக்காமல் , ஹீரோ ஹோண்டா விளம்பரத்தை மட்டும் எதிர்ப்பது விளம்பட ஸ்டண்ட் அல்லது அறியாமை.  இதன் மூலம் , ஹீரோ ஹோண்டாவுக்கு இலவச விளம்பரம் கொடுத்ததை தவிர வேறு எதையும் இந்த எதிர்ப்பு சாதிக்கவில்லை என்பது இன்னொரு தரப்பு.


இது குறித்து , திரு கேபிள் சங்கர்  மற்றும் தமிழ் ஸ்டுடியோ திரு . அருண் ஆகியோர் கருத்துகள் உங்கள் பார்வைக்கு....
                     
                    நான்கு மடங்கு ரீச் - கேபிள் சங்கர் 


ஹீரோ கம்பெனிக்காரர்கள் சென்ற வாரம் தினசரிகளில் கொடுத்த விளம்பரத்தினால் அவர்களுக்கு கிடைத்த ரீச்சை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அந்த விளம்பரத்தில் ஒரு ஆணும், குழந்தையும், ஹீரோ பைக்கும் இருக்க, ஆணுக்கு சேகர் ஐயர் என்றும், பெண்ணுக்கு ஸ்வேதா ஐயர் என்றும், வண்டிக்கு ஹீரோ ஐயர் என்று பெயர் போட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். வடநாடுகளில் தங்கள் பெயர்களுடன் ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. அது போல ஹீரோ வண்டியும் அவர்களுடன் சேர்ந்ததால் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டது என்பதை சொல்லத்தான் விழைந்திருந்தார்கள். ஆனால் நம்மூர் வழக்கப்படி ஜாதிப் பெயரைப் போட்டதினால் அந்த விளம்பரம் பல பேரால் அனைத்து சமூக தளஙக்ளிலும் ஷேர் செய்யப்பட்டு, சாதாரணமாய் கிடைத்திருக்க வேண்டிய விளம்பரத்தை விட, நான்கு மடங்கு கிடைத்துவிட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்த நாள் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஜாதிப் பெயரை எடுத்து மீண்டும் அதே விளம்பரத்தை கொடுக்க, இன்னும் பெரிய ஹிட். எது எப்படியோ ஐயர் என்று போட்டதால் கிடைக்க வேண்டியதுக்கு  மேலேயே கிடைத்துவிட்டது  விளம்பரம்.

                               
Hero Motors இன் வெற்றி -  தமிழ் ஸ்டுடியோ அருண் 

எதையும் எழுத வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியதை வேறு யாரு சொல்வார்கள். எனவே எழுதுகிறேன். கடந்த வாரம் முழுவதும், முகநூலின் விவாதத்தில் இடம்பெற்ற Hero Motors இன் விளம்பரம்.. ஐயர் என்று போட்டு இருந்ததால் அதுப் பற்றி மிக பரவலான தெறிக்கும் விவாதம் நடைபெற்று, இறுதியில் Hero Motors அந்த விளம்பரத்தை மாற்றியதை தங்கள் புரட்சியின் மூலம் கிடைத்த வெற்றியாக முகநூல் நண்பர்கள் 
அறிவித்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்கள். ஆனால் அது வெற்றியல்ல, உணர்ச்சிவசப்படும் தமிழர்களின் தோல்வியாகவே அதை நான் பார்க்கிறேன். எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்பட்டு அதன் எதிர்கால எதிர்வினைகள் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாத இது மாதிரியான வெற்றிகள் கொடுக்கும் எதிர்வினையை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த விளம்பரத்தை மிக சிறப்பாக ஒரு Sensational விசயமாக கொண்டுவந்து பைசா செலவில்லாமல் Hero Motors இன் தமிழகப் பிரிவு வெற்றி பெற்றிருக்கிறது.

உணர்ச்சி இல்லாதவன் மனிதன் அல்ல.. ஆனால் எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்படுபவன் அதற்கான எதிர்வினைகளையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். மாறாக இது மாதிரியான போராட்டங்களை வழி நடத்தி செல்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை தன் சுயக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வைகோவின் கட்சியும், வைகோவின் தோல்வியும் பறைசாற்றும் உண்மை இதுதான்.

ஐயர் என்று விளம்பரப் படுத்தியதால் உங்களில் எத்தனை பேர் அந்த வண்டியை இனியும் வாங்காமல் இருப்பீர்கள்? அதான் பெயர் மாற்றியாகிவிட்டதே.. இனி வாங்கினால் என்ன என்றுதான் எதிர்வாதம் செய்வீர்கள்? அதுதான் Hero Motors இன் வெற்றி.. போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே

Monday, November 12, 2012

தீபாவளி ”கொண்டாடாதீர்கள்” - நண்பர் அராத்து ”உருக்கமான”வேண்டுகோள் !!!


 ஒரு நண்பர் கால் செய்திருந்தார் . பொதுவான விஷ்யங்கள் சிலவற்றை பேசிக்கொண்டு இருந்து விட்டு , முடிக்கும்போது ”ஹேப்பி தீபாவளி”  என ஃபார்மலாக சொல்லித் தொலைத்து விட்டேன். 

நண்பர் டென்ஷன் ஆகி விட்டார் . “ எனக்கு தீபாவளி வாழ்த்து சொல்லாதீர்கள். சிவகாசியில் தொழிலாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் , இந்த வெடிகளை அவர்கள் உருவாக்குகிறார்கள். இந்த் பட்டாசுகள் வெடிக்கும்போது அவர்கள் கதறல் சத்தம்தான் என் காதுகளுக்கு கேட்கிறது. எனவே நான் தீபாவளி கொண்டாடப்போவதில்லை “ என்றார்.

எனக்கு பிரமிப்பாக இருந்த்து. என்னே சமூக அக்கறை என வியந்தேன். மனிதன் என்றால் இப்படியெல்லவா இருக்க வேண்டும் என நினைத்து கொண்டேன். சரி, இவர் பாணியில் நாமும் தீபாவளியை புறக்கணித்து விட்டு , வேறு ஆக்க பூர்வமான பணியில் ஈடுபட வேண்டும் என உறுதி எடுத்து கொண்டேன். ஆனால் ஆக்க பூர்வமான வேலைகளுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையே..

என்வே நண்பர் செய்வதையே நாமும் செய்யலாம் என முடிவு செய்து , அவரிடமே கேட்டேன் “ கரெக்டா சொன்னீங்க பாஸ்.. தீபாவளியை புறக்கணித்து விட்டு என்ன செய்ய போகிறீர்கள் ? “

தீபாவளிக்கு செலவிடும் தொகையை , சிவகாசி தொழிலாளர்களுக்கு அனுப்ப போகிறேன், விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து உதவ போகிறேன் என்றெல்லாம் சொல்லப்போகிறார் என எதிர்பார்த்தேன்.

அவர் கூலாக சொன்னார்.

“ இந்த முறை தீபாவளி கொண்டாடப்போவதில்லை பாஸ். நண்பர்களுடன் சனிக்கிழமையே கிளம்பி கேரளா சுற்றுலா செல்கிறேன். மூன்று நாள் ஜாலியாக இருந்து விட்டு வரப்போகிறேன் “ என்றார் .


இதுதான் தீபாவளி புறக்கணிப்பா என மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி பார்த்தால் , எல்லோருமேதான் தீபாவளியை புறக்கணிக்கிறார்கள் . தீபாவளி கொண்டாடாமல் தொலைக்காட்சியில் நடிகைகள் பேட்டிகளோ , சினிமாவோ பார்க்கிறார்கள். 

நானோ தீபாவளியன்று விடுமுறை என்பதால் நன்றாக தூங்கு ஓய்வெடுப்பேன். ஆனால் நான் தீபாவளியன்று தீபாவளி கொண்டாடுவதாகத்தான் இது வரை நினைத்து வந்தேன். நானும் இதுவரை தீபாவளியை புறக்கணித்து வந்து இருக்கிறேன் என்பது இப்போதுதான் எனக்கே புரிகிறது.

ஆனால் காரணமே இல்லாமல் புறக்கணித்து இருக்கிறேன். ஏதாவது சமூக காரணத்தை சொல்லி இருக்கலாம். மிஸ் செய்து விட்டேன்.  

இந்த தீபாவளியிலும் , தீபாவளி கொண்டாடமல் , கறிசாப்பாடு , ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு,   நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்ற போகிறேன். புறக்கணிப்புக்கான காரணம் பிறகு அறிவிக்கப்படும்.

அதற்கு முன் நண்பரும் , இலக்கியவாதியும் , சிந்தனையாளருமான அராத்து அவர்கள் தீபாவளியை புறக்கணிக்க விடுத்துள்ள உருக்கமான வேண்டுகோளை படித்து விடுங்கள்.


தீபாவளி- அராத்து உருக்கமான வேண்டுகோள் 
காந்தி உண்ணாவிரதத்தை பிரபலப்படுத்தினாலும் படுத்தினார் , நம்மாளுங்க அதிலேருந்து எது எடுத்தாலும் நெகடிவ் அப்ரோச்.ஒரு பிரச்சனைன்னா அதை எப்படி சால்வ் பண்றது ? எப்படி மாத்தறதுன்னு பாஸிடிவா , பிராக்டிகக்லா திங்க் பண்றது இல்லை.

ஈழத்துல பிரச்சனையா ? பிறந்த நாள் கொண்டாட மாட்டேன்.

சிவகாசியில பிரச்சனையா ? தீபாவளி கொண்டாட மாட்டேன் .


காவிரி பிரச்சனையா ? பொங்கல் கொண்டாட மாட்டேன்.

நீங்க கொண்டாடவில்லையெனில் பிரச்சனை தீந்துடுமா ? அதிலும் தலைவர்கள் சொல்லும்போது எரிச்சலாக உள்ளது. எதையாவது செய்யாமல் இருப்பதற்காடா நீ தலைவன் ?

அப்பன் ஆத்தா செத்தாலே , எங்களுக்கு இந்த வருஷம் தீபாவளி கிடையாது ,சும்மா குழந்தைகளுக்காக கொஞ்சம் டிரஸ் , ஸ்வீட் அப்புறம் கொஞ்சம் வெடி வாங்கிருக்கோம் , அவ்வளவுதான் என சொல்லிவிட்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளை பார்க்கும் சமூகம் நம் சமூகம்.

ட்வின் டவரை சிதைத்த போதோ , கடும் புயலால் பாதிக்கப்பட்ட போதோ வெள்ளைக்காரன் நான் க்றிஸ்த்மஸ் கொண்டாட மாட்டேன் , நியூ இயர் கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து இருக்கிறானா ? தெரியவில்லை.

எல்லாம் நல்லா சீன் கிரியேட் பண்ணிட்டு , அறிவு ஜீவி இமேஜை போத்திகிட்டு , புது டிரஸ் போட்டுகிட்டு ,1000 வாலா வெடிச்சிட்டு , இட்லி கறி குழம்பு வடை பாயாசம் தின்னுட்டு , சிறப்பு நிகழ்ச்சிகள் பாத்துட்டு ….குட்டி தூக்கம் போட்டுட்டு ….ஹேப்பி தீபாவளி …சே சே ….தீபாவளி கொண்டாடாதீர்கள்.

Friday, November 9, 2012

கற்பழிப்பு கடவுள் செயலாம் - ஒபாமாவுக்கு உதவிய குடியரசு கட்சியின் லூஸ் டாக்


 தேர்தல் முடிவுகள் , பிரச்சாரத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. ஆனால் பிரச்சாரமும் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை.  நம் ஊரில் பிரச்சாரம் , அன்பளிப்புகள் , பண கவர் போன்றவை மட்டுமே தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது உண்டு.

அமெரிக்க தேர்தலில் பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவங்கள் ஓரளவு தேர்தல் போக்கை பாதித்தன.

ஆரம்பத்தில் ஒபாமா மிகவும் முன்னணியில் இருந்தார். ஆனால் ரோம்னியின் அதிரடி பிரச்சாரம் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. ஒபாமா மிகவும் சாஃப்டாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். லேசாக  நிறவெறியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவின் வேலை இல்லாத்திண்டாட்டம் , வெள்ளையர்களை அதிகம் பாதித்த நிலையில், ரோம்னியின் பிரச்சாரத்துக்கு பலன் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். விளைவாக ரோம்னிதான் வெல்வார் என்ற நிலை ஏற்பட்டது.

அப்படியே ஒபாமா வென்றாலும் கூட , மொத்த வாக்குகள் ரோம்னிக்குதான் அதிகம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது ( இப்போது கூட - ஒபாமா அதிக வாக்குகள் பெற்றாலும் கூட - இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவுதான் . )

முதல் கட்ட விவாதத்தில் அதிரடியாக பேசி தன் நிலையை மேலும் வலுவாக்கி கொண்டார் ரோம்னி.

ஆனால் அதன் பின்புதான் ரோம்னியின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிக வாய் அவருக்கே பாதிப்பு ஏற்படுத்தியது.

குறிப்பாக பெண்களின் வெறுப்பை நன்றாக சம்பாதித்து கொண்டார். அவர் லூஸ் டாக் போதாது என அவர் கட்சியினரும் நன்றாக லூஸ் டாக் விட்டனர்.

அபார்ஷன் பற்றிய விவாதத்தில் அவர் கட்சியினரின் உளறினர். ஒருவர் உதிர்த்த பொன்மொழி “ கற்பழிப்பு கொடூரமானதுதான். ஆனால் அந்த  கொடூரத்துக்கு இடையிலும் குழ்ந்தை உருவாகிறது என்றால் அது கடவுள் செயலாகும். அந்த கருவை கலைப்பது தவறு “ என்பது போல பேச பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு மன்னிப்பு கேட்டாலும், பெயர் கெட்டது கெட்டதுதான் .

அதே போல வெள்ளையர்களை சோப் போடும் முயற்சியில் ,  மற்றவர்கள் வாக்குகளை கணிசமாக இழந்தார் ரோம்னி.

கடைசி கட்ட விவாதத்தில் ஒபாமாவின் பேச்சு அட்டகாசம். குறிப்பால , அமெரிக்காவின் கப்பல் படை ப்லம் ஒபாமா ஆட்சியில் குறைந்து விட்டது என்ற ரோம்னியின் குற்றச்சாட்டுக்கு , ஒபாமாவின் பதில் ஃபர்ஸ்ட் கிளாஸ்


ஆனாலும் போட்டி கடுமையாகவே இருந்தது. கடைசி வில்லனாக வந்ததுதான் , சாண்டி புயல். இது பிரச்சார வேகத்தை தடுத்தது. ஆனால் அதிபர் என்ற முறையில் ஒபாமா நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகள் ஒபாமாவுக்கு பெரிய ப்ளசாக அமைந்தது.


தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரிவது இதுதான்.

பெருவாரியான வெள்ளையர்கள் ரோம்னிக்குத்தான் வாக்களித்து இருக்கின்றனர். இதே டிரண்ட் எல்லா பிரிவினரிடம் இருந்து இருந்தால் , ரோம்னி அபார வெற்றி பெற்று இருப்பார்.

ஆனால்,


  • சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒபாமா அலை வீசி இருக்கிறது.
  • பெண்கள் மத்தியிலும் ஒபாமாவுக்கே அதிக ஆதரவு.
  •  நடு நிலை வாக்காளர்களும் ஒபாமாவுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
  • இளைஞர்கள் பெருவாரியாக ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்
  • ரோம்னி ஒரு செல்வந்தர். அவருக்கு ஏழைகளின் நிலை புரியாமல் பேசுகிறார் என்ற ஒபாமாவின் பிரச்சாரம் எடுப்பட்டுள்ளது. குறைவான வருமானம் உள்ளவர்கள் , ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா மீதான பயம் போய் விட்டது, மீண்டும் நம் பலத்தை நாம் காட்ட வேண்டும் என வெறியூட்டும் பேச்சுகளை பேசி, வெற்றி பெறும் நிலையில் இருந்தார் ரோம்னி. 

ஆனால் , சில பிரிவு மக்களிடையே வீசிய ஆதரவு அலைதான் ஒபாமாவை வெற்றி பெற வைத்துள்ளது.

   முன்பே சொன்னது போல ஒபாமாவின் வெற்றி உலக அமைதிக்கு நல்லது. 

Thursday, November 8, 2012

பைக் விளம்பரமும் , நம் மக்களின் இலவச விளம்பரமும்- அபத்தங்களின் ஆவேச நடனம்
அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.

“ தமிழ் நாட்டில் பிரமாணர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த நிலையில் அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது சரியா? இதனால் என்ன பயன் ? “

அண்ணா பதில் அளித்தார்.

“ நாங்கள் பிரமாணர்களை எதிர்க்கவில்லை. பிராமணீயம் என்பதைத்தான் எதிர்க்கிறோம். பிராமணீயம் என்பது பிராமணர்களால் உருவாக்கப்பட்டாலும் , அதை போற்றி வளர்ப்பது மற்றவர்கள்தான். எனவேதான் பிராமணீயம் என்பது அச்சுறுத்தும் ஒன்றாகவும் . எதிர்க்கப்பட ஒன்றாகவும் இருக்கிறது “ என்றார்.

     பிராமணியத்தை வெறுக்க கூடிய பிராமணர்களும் இருக்கலாம். பிராமணீயத்தை ஆதரிக்கும் அபிராமணர்களும் இருக்கலாம். இது ஜாதி சார்ந்தது அல்ல. இது ஒரு மன நிலை.

சமீபத்தில்  நடிகர் கமல் , தன் படத்தை பார்த்துதான் ஹாலிவுட் இயக்குனர் டொரண்டொனோ காப்பி அடித்ததாக பிருடா விட்டு கிண்டலுக்கு உள்ளானார். கமல் சொன்னதை வழி மொழிந்து பேச பாலசந்தரோ மற்ற பார்ப்பனர்களோ தயாராக இல்லாத நிலையில், பகுத்தறிவு பாசறையை சேர்ந்த சத்யராஜ் ஒரு கூட்டத்தில் , கமல் சொன்னதை வழி மொழிந்து பேசினார். கமலை பார்த்து தான் இன்ஸ்பைர் ஆனதாக அந்த ஹாலிவுட் இயக்குனர் சொன்னதாக பேசினார்.

இதுதான் பார்ப்பணீயம் .

இன்று அந்த பார்ப்பணீயம் எனக்கு பெரிய தலை வலி ஏற்படுத்தியது. மெயில் இன் பாக்ஸ் முழுதும், ஒரு இரு சக்கர வாகனத்தின் விளம்பரம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு தீவிரமாக அவர்கள் விளம்பரம் செய்ய மாட்டார்களே என்று குழம்பி போய்   அனுப்பியது யார் என பார்த்தேன். அனுப்பியது அவர்கள் இல்லை.

நண்பர்களும் , நலம் விரும்பிகளும்தான் அனுப்பி இருந்தார்கள். இவர்கள் ஏன் அந்த நிறுவனத்துக்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள் என பார்த்தபோதுதான் , விஷ்யம் தெரிந்தது.

அந்த வாகன விளம்பரத்தில் , ஒரு ஜாதி பெயரை பயன்படுத்தி இருந்தார்கள். பாராட்டியோ, திட்டியோ இல்லை. ஒரு ஃபீல் கொண்டுவருவதற்காக.

ராஜ்குமார் , ராம்குமார் மற்றும் ஸ்ப்லெண்டர் குமார் என்று சொல்லி, பைக்கும் குடும்பத்தில் ஒருவன் என்ற ஃபீல் கொண்டு வரும் முயற்சி.

தம் அனுமதி இல்லாமல் எப்படி தம் ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என கேட்டு , ஐயர்கள் சண்டைக்கு போய் இருந்தால் லாஜிக்காக இருந்து இருக்கும். ஆனால் அய்யர் அல்லாத நண்பர்கள் , இதற்காக உணர்ச்சி வசப்பட்டு , கவனத்துக்கு வராமல் போய் இருக்க கூடிய அந்த விளம்பரத்தை, எனக்கு அனுப்பி இருந்தார்கள்.

எனக்கு மட்டும் அல்ல.. ஒவ்வொருவரும் தலா ஆயிரம் பேருக்காவது அனுப்பி இருப்பார்கள் என யூகிக்கிறேன். இது போல தமிழ் நாட்டில் எத்தனை பேர் செய்தார்கள் என தெரியவில்லை. ஐய்யர் என்ற பேருக்கு இவ்வளவு மவுசா என அந்த இரு சக்கர வாகன நிறுவனம் மகிழ்ந்து போய் இருக்கும். சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் ஏஜன்சி ஊக்கத்தொகை பெற்று இருக்கும்.

             பெரியார் , அண்ணா போன்றோர் வழி காட்டிய மண்ணில் ,  இப்படி ஒரு அபத்தமான நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.
             


Sunday, November 4, 2012

சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் , பாலியல் கமெண்ட் எழுதலாமா- ஞானி ஆதங்கம்


சின்மயி விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் தலையிட்டு , அவரை பெரிய ஆளாக்கி வருகின்றனர். கண்டிக்கத்தக்க கருத்துகளை சொல்லி , மற்றவர்களை புண்படுத்தியவர் சின்மயி. ஆனால் அவர் புண்பட்டுவிட்டது போல ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஷ்யம் தெரிந்தவரும் , நடு நிலையாளரும் , விமர்சகருமான ஞானி இருதரப்பில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஞானியின் அந்த கட்டுரை இதில்..அதில் சில வரிகள் , பெரியாரை பெரிதும் மதிப்பவன் , ஆராதிப்பவன் என்ற முறையில் என்னை வருத்தம் அடைய செய்தது.

உதாரணமாக

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியாரை படித்த யாரும் பெண்மையை இழிவு செய்யும் வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. பெரியார் அளவுக்கு பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. ஒரு சினிமா பாடல் கேட்டு மனம் மாறும் அளவுக்கு ஒரு பெரியார் கொள்கைகள் வலுவற்றவை அல்லவே என  நினைத்தேன்.

ஆனால் ஞாநி அவர்கள் சொல்ல வந்ததது , பெரியாரை படித்து இருந்தாலும் , அவர் கருத்துகளை முழுமையாக உள்வாங்காத சிலர் பாலியல் வக்கிர கமெண்டுகள் எழுதுகிறார்கள் . இது பெரியாரின் கருத்துகளில் இருக்கும் போதாமை அல்ல.. நம் கிரகிப்பு தன்மையில் இருக்கும் போதாமை. இதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே பெரியாரை ஆழ்ந்து படித்தால் , கண்டிப்பாக நம்மை பக்குவப்படுத்துவார் என்பதற்கு உதாரணமாக ஞானி அவர்களே இருக்கிறார்.

இதோ ஞானியின் விளக்கம்

அன்புள்ள பிச்சைக்காரன்,
என்னை பக்குவப்படுத்தியவர்களில் பெரியாரும் முக்கியமானவர்.  இது தொடர்பாக உங்கள் கருத்துதான் என் கருத்தும். பெரியார் , மார்க்ஸ் , அம்பேத்கார் போன்றோரை படித்தவர்கள் , அவர்கள் பெயர்களை தம் வாதங்களில் முன் வைப்பார்கள். அவர்கள் வலியுறுத்திய சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் என அறியப்பட்டவர்கள் பாலியல் வக்கிர கமெண்டுகளை எழுதும் முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம் . அப்படிப்பட்டவர்கள் மூளையில் பதிந்த அளவு , மனதில் பதியவில்லை என நான் சுட்டிக்காட்டும் இடம் அதுதான். டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் போல சிலர் இருப்பது நம் கவலைக்குரியது என்பதையே நம் கட்டுரை சொல்கிறதே தவிர பெரியாரையோ , இதர முன்னோடிகளையோ குறை சொல்லவே இல்லை.
அன்புடன் ,
ஞாநி

Saturday, November 3, 2012

சின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்

சின்மயி விவகாரத்தில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசி வருகிறார்கள்.. சிலர்  நியாயமாகவும் பேசி வருகிறார்கள்.

நடு நிலையுடனும் , நிதானத்துடனும் யோசிக்கும் ஞானி என்ன சொல்லப் போகிறார் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் , அவர் கட்டுரை அதிர்ச்சியளித்தது.

சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இதை இழுத்து இருக்கிறார் அவர்.

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியார் நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் ஒருபோதும் பாலியல் வக்கிரங்களில் ஈடுபடமாட்டார்கள் . சாமி கும்பிடாவிட்டால் , அவர் பெரியாரிஸ்ட் என தமிழர்கள் பொது புத்தியில் பதிந்துள்ளது. அவர் கடவுள் மறுப்பு என்ற விஷ்யத்தை தவிர பல தளங்களிலும் இய்ங்கியவர். குறிப்பாக பெண் விடுதலைக்காக அவரைபோல குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

    பெண்ணை அடக்கி வைக்க ஆண்கள் செய்யும் தந்திரங்களையும் , அதில் இருந்து பெண்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக சொல்லி இருப்பார், பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஒன்றே போதும்.

இதை எல்லாம் படித்தவர்கள் , கண்டிப்பாக ஒரு போதும் பெண்மையை இழிவு செய்ய மாட்டார்கள்.

ஒரு சிலர் பெரியார் பெயரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் , அவர்கள் பெரியாரை படித்து இருந்தால் , பெரியாரின் குரல் அவர்களது தலைக்குள் இருந்து எதிர் தட்டு தட்ட வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.. காரணம் உண்மையான பெரியாரிஸ்ட்டிடம் இருந்து வக்கிர சிந்தனைகள் ஒருபோதும் வெளிப்படாது.


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம்.
   

பெரியார் சிந்தனைகளை விடவா , சினிமா பாடல் சக்தி வாய்ந்தது ? பெரியார் சிந்தனைகளில் புடம் போட்ட ஒருவரை சினிமா பாடலோ , மீடியாவோ எந்த விதத்திலும் கெடுத்து விடாது.

தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன்


பெரியார் கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிந்து நல் வாழ்வு காட்டி வருகிறார்.  இந்த உண்மையை மறந்து இருக்கிறார்  ஞானி அவர்கள்.

என்னை பொருத்தவரை இரு தரப்புமே தவறு செய்து இருக்கிறார்கள் . ஆனால் இதற்காக பெரியாரை இந்த விவகாரத்தில் இழுப்பது வருந்தத்தக்கது. தனி மனித பலவீனம் அனைவரிடமும் உள்ளதுதான் ,  தனிப்பட்ட முறையில் தவறு செய்து விட்டு , பிரச்சினை வந்தால் கட்சி , ம்தம் , இனம் , மொழி சார்ந்து தப்பிக்க நினைப்பது , தான் சார்ந்த கட்சி , மதம் , இனம் , மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா