Thursday, June 28, 2012

படித்தும் பதர்களாக போவது ஏன்? சாரு பேட்டியின் வீடியோ தொகுப்பு

இணையத்தில் தற்போது நடந்து வரும் எழுத்து தீவிரவாத தாக்குதல் அனைவருக்கும் தெரியும். படிப்பே ஓர் ஆயுதமாக மாறுவதை திகைப்புடன் அனைவரும் கவனித்து வருகிறார்கள்.

இந்த பிரச்சினை வருவதற்கு முன்பே , சாரு இதைப்பற்றி எச்சரித்தார் என்பது ஒரு சுவாரஸ்ய தகவல். சிறுமலை சந்திப்பின் போது அளித்த சிறப்பு பேட்டியில், சரியான முறையில் படிக்காவிட்டால் , படிப்பே ஆபத்தாகி விடும் என எச்சரித்தார். அந்த பேட்டியின் தொகுப்பு உங்கள் பார்வைக்கு.

 நண்பர் நிர்மல்தான் இதை எடிட் செய்தவர். அவருக்கு நன்றி..

இதோ ..அந்த பேட்டிக்கான சுட்டி ..
http://youtu.be/VwvqEpdoZJA

Sunday, June 24, 2012

உங்கள் படிப்பை வைத்து அதிகாரம் செய்ய முனையாதீர்கள்- ஒழுக்கலாறு எழுத்தாளர் பற்றி சாரு நிவேதிதா நச் கமெண்ட் !!தினம் தோறும் படித்து கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கும் சாரு நிவேதிதா சற்று ரிலாக்ஸ் செய்து கொள்ள வாசகர் வட்ட சந்திப்புக்கு சம்மதித்தார். ஆனால் சென்ற சந்திப்பின்போது, லேப்டாப்பும் கையுமாக வந்து இருந்தார். எழுத்து வேலையில் பிசியாக இருந்தார்.

இந்த முறை எந்த வேலையையும் கொண்டு வரவில்லை. ஆனால் வாசகர்களும் நண்பர்களும் அவரை ஒரு நொடி கூட சும்மா இருக்க விடவில்லை. கிரிக்கெட், அரட்டை,  மது, இலக்கிய விவாதம், உலக சினிமா , லோக்கல் சினிமா, வாக்கிங் என அவரை ஆளுக்கு ஒரு புறம் இழுத்து கொண்டு இருந்தனர்.

இந்த நேர நெருக்கடியிலும் , சந்திப்புக்கு வர இயலாத சில நண்பர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒப்புக்கொண்டார்.

அவருடன் பேசுவது ஒரு உன்னத அனுபவம். அறிவுப்பூர்மாக பேசாமல் உணர்வு பூர்வமாக பேசுவார். தெளிவாக தன் கருத்துகளை எடுத்து வைப்பார். அவருடன் பேசியதில் இருந்து......


***************************************************************8

1.     யார்ழ் பத்தேல் செக்ஸுக்கும் மரணத்திற்க்கும் தொடர்பு இருப்பதாக் சொல்கிறார், உங்கள் படைப்புகளிலும் இதை காண  முடிகிறது, அதை பற்றி ?

ஜ ஜனன மரணம் . செக்சோட அடிப்படை என்ன ? ஓர் உயிரை உருவாக்குவது. ஆனா அந்த உயிர் உருவாகும்போது , மற்ற உயிர் அணுக்களை அழித்து விட்டுதான் பிறக்கிறது. நானோ சிறுகதையில் எழுதியது போல.   இன்னொன்று , ஜனனம்  என்றாலே அதற்கு அடுத்து மரணம். காஸ் அண்ட் எஃபெக்ட் போல.  மரணத்துக்கு பின் என்ன ? யாருக்கும் தெரியாது . அதே போல பிறப்புக்கு முன் ? யாருக்கும் தெரியாது. பெரும் சூனியம்.
ச் செக்ஸ் எனும் செயலின்போது , தியானம் போல தூக்கம் போல நம்மை மறக்கிறோம். மரணத்தின் போது நாம் இல்லாமல் போகிறோம். அதே போல செக்சின் போதும் இல்லாமல் போகிறோம். என்வேதான் செக்சை சிறிய மரணம் என்கிறார்கள்.
ம மரணமும் உயிர்ப்பும் எப்படி ஒரே இடத்தில் ??
இ இவை இரண்டு பாம்புகள் மாதிரி. ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அதுதான ஜனன மரணம். ரோலண்ட் பார்த் கூட இதைப்பற்றி பேசி இருக்கிறார்.
ந்

    நேற்று வாசகர் ஒருவர் , இளைய சமுதாயம் பற்றி சொன்னார். உங்கள் கருத்து ?

    எந்த இளைய சமுதாயம் என்ற கேள்வி வருகிறது. இந்திய இளைய சமுதாயமா? இணையம் வந்த பின் , எல்லா இளைஞர்களும் ஒரே வார்ப்பில் வார்க்கப்படது போல ஆகி விட்டது . பெரு  நாட்டு இளைஞனின் கனவும் , இந்திய இளைஞனின் கனவும் ஒன்றுதான். பணம் ஈட்டுவது. ஒரு பொலிவிய நாட்டு இளைஞனுக்கு தன் நாட்டின் வரலாறு பற்றி கவலை இல்லை. அமெரிக்கா செல்வதுதான் அவன் கனவு. ஐரோப்பியாவில் மட்டும்தான் இளைஞர்கள் கரப்ட் ஆகவில்லை என்பது என் கருத்து.

இலக்கியத்தில் மொராக்கோ மற்ற நாடுகளை முந்தி செல்வதாக சொன்னீர்களே?

       இலக்கியத்தை பொருத்தவரை இது உண்மைதான்.  வறுமை நிலை இருந்தாலும் , இலக்கியம் இருந்து கொண்டே இருக்கிறது.  நோபல் பரிசு பெறும் தகுதி உடைய பதினைந்து பேரை என்னால் சொல்ல முடியும் . எல்லோரும் இலக்கியம் படிப்பதாக நான் சொல்லவில்லை. படித்த வர்க்கத்தினருக்கு இலக்கியம் தெரிந்து இருக்கிறது. நம் நாடு இங்குதான் பின் தங்கி இருக்கிறது. நம் நாட்டில் படித்தவர்கள் , அதிகார வர்க்கத்தினர், வசதியானவர்களுக்கு இலக்கியம் தெரியவில்லை. பாமரனுக்கு இலக்கியம் தெரியவில்லை என்பதை ஒரு குறையாக நான் சொல்லவே இல்லை. அவனுக்கு உணவு கிடைப்பதே பெரிய பிரச்சினையாக இருக்கிறது. ஒரு தலைமுறையே டாஸ்மாக்கினால் வீணாகி விட்டது என்றே சொல்ல வேண்டும். விஷ சாராயத்தினால் உடம்பும் , மனமும் பாழாகிறது.
  
   மதுவுக்கு அடிமையாவதை இந்த அளவுக்கு எதிர்க்கிறீர்கள்.. நீங்கள் கடும் உழைப்பாளி என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உங்களிடம் இருந்து மதுவை மட்டும் சிலர் கற்க விரும்புகிறார்களே ?
      அதுதானே ஈசியாக இருக்கிறது. எனக்கு குடி என்பது ஒரு கொண்டாட்டம். எப்போதாவது குடிப்பேன். தினமும் குடித்தால் எழுத முடியாது. எனக்கு பிடிக்கவும் பிடிக்காது. ஆனால் குடிப்பதையே சிலர் முழு நேர தொழிலாக வைத்து கொண்டுள்ளனர். இதுதான் தவறு .

உ உங்கள் எழுத்தில் பாலுணர்வுதான் அதிகம் இருப்பதாக , படிக்காத சிலர் சொல்கிறார்கள். ஆனால் படித்தவர்களுக்குதான் உங்கள் எழுத்தின் உன்னதம் புரியும். சீரோ டிகிரி வெளி வந்த கால கட்டத்தை விட இன்றுதான் அதிகம் கொண்டாடப்படுகிறது. ஆக , மக்களிடம் இலக்கிய விழிப்புணர்வு வந்து விட்டதாக நினைக்கிறீர்களா? 
     
           ஓரளவு பரவாயில்லை என்று சொல்லலாம். சீரோ டிகிரியை அந்த காலத்தில் நானேதான் பதிப்பித்தேன். இன்று பரவாயில்லை. சில பதிப்பகங்கள் பதிப்பிகிறார்கள். ஒரு பத்தாயிரம் பேர் படிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு ஜன தொகை கொண்ட நாட்டில் பத்தாயிரம் என்பது மிக குறைவு.

      இன்றைய இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது? தேக்க நிலையிலா அல்லது ஆரோக்கியமான பாதையிலா ?
மி
     ஜப்பானில் மிக சிறந்த திரைப்படங்கள் வெளியாகின்றன . ஈரான் போன்ற நாடுகளிலும்கூட. அரேபிய   இலக்கியம் செழிப்பாக இருக்கிறது. ஐரோப்பிய இலக்கியம் , லத்தீன் அமெரிக்க இலக்கியங்களை எல்லாம் கடந்து சென்று விட்டது. ஃபிரான்ஸில் எல்லாம் , கூட்டமான ரயில் வண்டிகளில் கூட ஆயிரம் பக்க புத்தகங்களை படித்து கொண்டு செல்வதை பார்க்க முடியும்.  நம் நாட்டில் வாசிப்பு மிக குறைவு.

    நம் நாட்டில் இலக்கியம் தெரியவில்லை என வருத்தப்படுகிறீர்களே..தமிழே தெரியவில்லை என்ற நிலை உருவாகி வருகிறதே..

        உருவாகி வரவில்லை..ஏற்கனவே உருவாகி விட்டது . பல பள்ளிகளில் தமிழில் பேசினால் அபராதம். தமிழ் பேசினால் அவமானம் என்ற மோசமான நிலையை உருவாக்கி வருகிறார்கள். இலக்கியம் தெரியாது என்பது கூட கொடூரம் அல்ல. டாஸ்மாக்கும் , தமிழ் தெரியாது என்ற நிலையும்தான் அபாயகரமானது.


      அதிகாரத்தை எப்போதும் எதிர்த்து வருகிறீர்கள். ஆனால் எழுத்தாளர்களிலேயே பலர் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்த முனைகிறார்கள் . வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் குடிக்க கூடாது. அதிகாலையில் எழ வேண்டும். ஒழுக்கலாறு ஓம்பல் வேண்டும் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார்கள்.  எனவே படிப்பால் என்ன பயன் என்ற கேள்வி எழுகிறதே?

     என் எழுத்து எப்போதுமே அதிகாரத்துக்கு எதிரானது. அதிகாரம் என்பது அரசாங்கம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல.  நம் ஒவ்வொரிடமும் பயங்கரமான அதிகார வெறி இருக்கிறது. ஒரு தந்தையாக நம் பிள்ளைகள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். கணவனாக மனைவியை அடக்கி ஆள்அ நினைக்கிறோம். எழுத்தாளனாக வாசகர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறோம். இப்படி அனைத்து அதிகாரத்தையும் ஒழித்து விட்டு , சமதுவமாக வாழ வேண்டும் என்பதே என் எழுத்துகளின் அண்டர் கரண்ட். அப்படித்தான் நான் வாழ்ந்து வருகிறேன் என்பது என் நண்பர்களுக்கு தெரியும். ஆனால் ஒன்று, ஃப்ரீடம் என வரும்போது இன்னொன்றும் இருக்க வேண்டும் . ரெஸ்பான்சிபிலிட்டி. பொறுப்பு இல்லாத ஃப்ரீடம் மிகவும் பயங்கரமாக போய் விடும். அந்த ஃப்ரீடத்தை நான் சொல்லவே இல்லை. உங்கள் சுதந்திரம் மற்றவர்களை கஷ்டப்படுத்த கூடாது. 
   
       ரயிலில் கத்தி பேசுவது, சாலை விதிகளை மதிக்காத்தது போன்றவற்றை நாம் பொருட்படுத்துவதில்லை. தனி மனித ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டுமே என நம் ஊரில் நினைக்கிறார்களே? 
        என் எழுத்து வாழ்க்கையில் நாம் காம்ப்ரமைஸ் செய்து கொண்டதே இல்லை. இதைத்தான் ஒழுக்கம் என்கிறேன். ஒரு காலத்தில் பல தார மணம் , பால்ய விவாகம் போன்றவை இயல்பாக இருந்தது. இன்று அவை ஒழுக்கம் கெட்ட செயல். இதெல்லாம் மாறக்கூடியது. தேசத்துக்கு தேசம் இந்த ஒழுக்க விதிகள் மாறும்.
     ஆனால் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத நேர்மை , மற்றவர்களை துன்புறுத்தாமை போன்றவைகளை நான் ஒழுக்கம் என நினக்கிறேன்.   உயிர்மையில் நான் எழுதிய கறாரான சினிமா விமர்சனங்களால் , பல எதிரிகளை சம்பாதித்தேன். நேர்மைக்கு எனக்கு கிடைத்த பரிசு வறுமை. ஆனாலும் நேர்மையாக வாழ்கிறேன். இதுதான் ஒழுக்கம்.


     வாழ்க்கையை கொண்டாடுதல் , ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்தல் போன்ற மன நிலை உங்களுக்கு எப்படி வந்தது ?
       தெரியவில்லை ,. எப்போதும் இப்படித்தான் இருக்கிறேன். ஆனால் ஒன்று சொல்லலாம். இலக்கியம் நிறைய படித்தால் இப்படி ஆகலாமோ என தோன்றுகிறது. ஆனால் படித்தும் பயங்கரவாதிகளாக இருப்பவர்களும் இருக்கிறார்கள். படிப்பையே ஆயுதமாக பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். படிப்பை knowledge ஆக எடுத்து கொள்கிறீர்களா . wisdom ஆக எடுத்து கொள்கிறீர்களா என்பதே முக்கியம். நான் விஸ்டமாக எடுத்து கொண்டேன். அதனால்தான் விஸ்டத்துடன் இருக்கிறேன். நீங்கள் டெக்னிக்கலாக , அறிவு பூர்வமாக படித்தால் உங்கள் படிப்பு ஆயுதமாகி விடும் , மற்றவர்களை அதிகாரம் செய்ய முனைந்து விடுவீர்கள்.

     படித்தே ஆக வேண்டிய புத்தகம் என ஒரு புத்தகத்தை அடிக்கடி சொல்வீர்கள் ..அதைப்பற்றி ?


         Zorba the greek என்ற கஸான்காகிஸின் நாவலை ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டும். ஓரளவு ஆங்கிலம் தெரிந்தால் கூட போதும். படிக்கலாம், அனைவரும் படிக்க வேண்டும் என விரும்புகிறேன். இதை படித்தால் உங்கள் வாழ்வே மாறி விடும்.

        பார்த்தே ஆக வேண்டிய சினிமா ?

          கிம் கி டுக்கின் , ஸ்பிரிங் சம்மர் ஆட்டம் என்ற படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் , இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.  உங்களை ஒரு ஞானி ஆக்கும் ஸ்டஃப் படத்தில் உண்டு.


******************************************************

         பின் குறிப்பு - இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் வீடீயோ வடிவம் விரைவில் வெளியிடப்படும். 


               

டு


Tuesday, June 19, 2012

அராத்துவை வெட்கப்பட வைத்த கிசு கிசு - இறைவனுடன் இரண்டு நாட்கள் - பார்ட் 2

வாசகர் வட்ட சந்திப்பில் சாருவின் பேச்சு , இலக்கிய விவாதம் போன்ற ஆழமான விஷ்யங்களை பார்க்கும் முன்பு, ஹை லைட்ஸ்
***************************************


இலக்கிய மணமும் , மலர்களின் மணமும்

செடியின் புன்னகை மலரோ !!

இலக்கியத்தை நோக்கி வளைந்து நெளிந்து செல்லும் பாதை

காரசாரமான விவாதத்துக்கு போட்டியா?

தண்ணியில் மிதக்கலாம் :)

அறிவுப் பசியில்... 

இங்கிவனை யான் பெறவே , என்ன தவம் செய்து விட்டேன்

தளபதிகள்....

ஆண்டவனை விட ஆதவனே மேல் என்பேன் - பிரபுராஜ்

தீராத விளையாட்டு பிள்ளை

சத்தாண உணவு 
 • கலந்துரையாடலின் போது சாம் பேசுகையில், சாரு பரிந்துரைந்த உலக திரைப் படங்கள் அனைத்தையும் தான் பார்த்து விட்டதாக சொல்லி , பட்டியலிட்டார். நடக்கப்போகும் விபரீதத்தை உணர்ந்த புத்திசாலி வாசகர்கள் நைசாக இடத்தை காலி செய்தனர்.  அவர் பேச்சில் கவரப்பட்ட சாரு, “  இவர் விபரம் தெரிந்த வாசகராக இருக்கிறாரே..உங்களில் எத்தனை பேர் அவர் சொன்ன படங்களை பார்த்து இருக்கிறீர்கள் ? “ என்றார்.  அதிர்ச்சி அடைந்த பலர் ( நான் உட்பட ) பரிதாபமாக விழித்தனர். டென்ஷன் ஆன சாரு “  படிக்கத்தான் மாட்டேன் என்கிறீர்கள் . சினிமா பார்ப்பதில் என்ன சிரமம்... அடுத்த முறை இந்த படங்களை பார்த்து இருக்க வேண்டும் “ என அசைன்மெண்ட் கொடுத்து விட்டார்.
 • அராத்து தனக்கே உரிய நையாண்டி பேச்சால் பலரை சிரிக்க வைத்து கொண்டு இருந்தார். அவ்வப்போது வெட்கப்பட வைத்து கொண்டு இருந்தார். ஆனால் அவரையே வெட்கப்பட வைத்து விட்டார் இரு நண்பர். அவர் யார் என சொன்னால் , அவருக்கு  பிரச்சினைகள் வரும் என்பதால் விஷ்யத்தை மட்டும் சொல்கிறேன்.  காசு போட்டால் காண்டம் வரும் மெஷின் இருக்கிறது அல்லவா? அது போல நடிகைகளின் பெயரை சொன்னால் , உடனடியாக அவர் சம்பந்தப்பட்ட கிசு கிசு சொல்லக்கூடியவர் இவர். அந்த கிசுகிசு எந்த பத்திரிக்கையிலும் இது வரை வந்திராத , ஒரிஜினல் மேட்டராக இருக்கும். ஒரு நடிகையை , ஒரு இயக்குனர் கஷ்டப்பட்டு ஒத்துழைக்க வைத்தாராம். முக்கியமான நேரத்தில் இயக்குனருக்கு கடும் அதிர்ச்சியாம். அவர் ஏன் அதிர்ச்சியானார் என்பதைக் கேட்டு அராத்து வெட்கப்பட்டார் பாருங்கள்.. அடடா.. காண கண் கோடி வேண்டும்.
 • கலந்துரையாடலின் கட்டுப்பாட்டு அதிகாரி ப்ரியமுடன் துரோகி, கடும் நிபந்தனைகள் விதித்து , கறாராக அமல் படுத்தினார். பலரும் முணுமுணுத்தனர். பவர் கரப்ட்ஸ் என சாரு சொன்னதை நினைவு படுத்திய அராத்து , துரோகி தன் அதிகாரத்தை தவ்றாக பயன்படுத்துவாக முறையிட்டு பார்த்தார்..ம்ஹூம் ,, பலனில்லை.
 • ஒரு கட்டத்தில் சாருவிடமே மோத வேண்டிய நிலை ஏற்பட்டது.  “ யாரும் கெட்ட வார்த்தைகள் பேச கூடாது. அன்பு மிகுதியால் உணர்ச்சி வசப்பட்டு சாருவை அவன் இவன் என்றெல்லாம் பேசக் கூடாது. ” என்பது துரோகியின் கண்டிஷன். உடனே மைக்கை வாங்கி ( பறித்து ? ) பேசிய சாரு , ” நான் காதலிக்கும் எழுத்தாளனை அவன் இவன் என்றுதான் செல்லமாக அழைப்பேன். அதே போல கெட்ட வார்த்தை என எதுவும் இல்லை. என் ஊரான நாகூரில் , சாதாரணமாக ஒருவரிடம் பெயர் கேட்பதாக இருந்தாலும் , ஒ***  ***** , உன் பெயர் என்ன ? “ என்போம், அவர் “ங்க்**   ** , என் பெயர் ** “ என்பார்..இதையெல்லாம் தவறாக அங்கு யாரும் நினைப்பதில்லை “ என்றார்.   இதற்கு பதில் சொன்ன துரோகி “ சாரு.. நீங்கள் பேசலாம்.. மற்றவர்கள் பேச கூடாது.. ஏனென்றால் அவர்கள் சாரு அல்ல “ இந்த நச் பதிலால் , துரோகியின் ஆதிக்கம் கடைசி வரை நீடித்தது.
 • கலந்துரையாடலின் போது , சாருவுக்கு அருகில் நான் அமர்ந்து இருந்தேன். சாருவுக்கு ஒரு தட்டில் சிக்கன் வைத்து கொடுத்தார்கள். ஒரு லெக் பீஸ் எடுத்து கொள்ள அவரிடம் அனுமதி கேட்டேன், சிரித்தபடி அனுமதித்தார். அதன் பின் அனுமதி கேட்காமலேயே அவர் ப்ளேட்டில் பாதியை சாப்பிட்டவன் நான் என்பது யாருக்கும் தெரியாது.
 • ஒவ்வொரு வாசகர் பேசும்போதும் ஆர்வத்துடன் அவர்கள் பேசுவதை கேட்டார் சாரு. தேவைப்பட்டால் உடனடியாக விளக்கமும் அளித்தார். 
 • வருண் என்ற வாசகர் பேசும்போது அந்த வாசகரின் ஆங்கில அறிவை நினைவு வைத்து இருந்து பாராட்டியது ஆச்சர்யமாக இருந்தது.
 • ”எனக்கு டீ ஷர்ட் ஒன்று தேவைப்பட்டது. வாங்க வேண்டும் என நினைத்து கொண்டு இருந்த போது , இந்த வாசகர் பரிசளித்தார். மிக்க நன்றி “ என நினைவு வைத்து நன்றி சொன்ன போது , அந்த வாசகர் முகத்தில் பரவசம் , மகிழ்ச்சி.
 • இனிமையாக பழக கூடியவரான பிரபு ராஜிடம் இவ்வளவு இலக்கிய வெறி இருப்பதை அன்றுதான் கவனித்தேன். ஆதவன் , நகுலன் போன்றோர் மீதான காதலை அவரால் கட்டுப்படுத்திக்கொள்ளவே இயலவில்ல்லை. தன்னிலை மற்ந்து உணர்ச்சி பெருக்கில் , உன்னத ஒரு மன நிலையில் இருந்த அவர் ஆன்மீக உச்சத்தை தொட்டு விட்டார் என்பதை உணர முடிந்தது . 
 • எல்லோரும் தண்ணி அடித்தால் உளறுவார்கள். ஆனால் அராத்து தண்ணி அடித்தபின்புதான் நிதானமாக பேசினார். விளையாட்டுப்பிள்ளையாக காட்சி அளிக்கும் அவர் , சீரியசாக பேசியதை வியப்புடன் கவனித்தேன் . “ mind attitude - not the mind aptitude- determines man's altitude என்பார்கள். என் மனப்போக்கை மாற்றியவர் சாரு. சாருவிடம் பேசினால் , வாழ்க்கை குறித்த உங்கள் பார்வையே மாறி விடும் . சந்தோஷமாக வாழ்க்கையை கொண்டாடினாலும் , பொறுப்புணர்வு தவறாதவர் சாரு.  சிலர் தாம் படுக்கையை அப்படி அப்படியே போட்டு விட்டு சென்று விடுவார்கள்.. சாரு பொறுப்பாக அதை மடித்து அதன் இடத்தில் வைத்து விட்டு செல்வார்.  வாழ்க்கை குறித்த அவர் பார்வையை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை “ சாருவை பற்றி அவர் பேசுகையில் , அவர் கண் கலங்குவதை பார்த்து என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.
 • ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டும் சார்ந்ததல்ல. கட்டுப்பாடுதான் மிகப்பெரிய கொண்டாட்டம் என்றார் சாரு.. உடனே கூட்டத்தில் ஒரு குரல் எழுந்தது.. : இந்த விழா முடியும்வரை,. நாம் யாரும் குப்பைகளை கண்ட இடத்தில் போடக்கூடாது. இயற்கையை சீர் குலைக்க கூடாது “ கடைசி வரை இந்த கட்டுப்ப்பாட்டுடன் நடந்து கொண்டனர் வாசகர்கள். 
 • கூட்டத்தில் பதிவர் பிச்சைக்காரன் பேசியவதாவது:
                 இலக்கியம் படைக்க பலரால் முடியலாம்.
              ஆனால் இலக்கியமாகவே வாழ உன்னால் மட்டுமே முடியும்.
              நீ சரித்திரம் படிக்கும் எழுத்தாளன் அல்ல. 
              சரித்திரம் படைக்கும் எழுத்தாளன் .
              கவியரசர்  தமிழ் நாட்டுக்கு இல்லை எனும் பழி பாரதியால் தீர்ந்தது
             எழுத்தரசர் இல்லை எனும் பழி உன்னால் தீர்ந்தது
               இலக்கியம் எனும் அமுது அளிக்கும், 
                பாலூட்டும் தாயானாய்..
             நான் வாலாட்டும் நாயானேன் ..
 • இதில் ஒரு வரியை சாரு குறிப்பிட்டு பதில் அளித்தார். விரிவாக பிறகு.


       

Sunday, June 17, 2012

சாருவை படிக்காதீர்கள்- வாசகர் பரபரப்பு பேச்சு - இறைவனுடன் இரண்டு நாட்கள் - பார்ட் 1வழக்கத்தை விட உற்சாகமாக சாரு வாசகர் வட்ட சந்திப்பு நடந்தது.  இலக்கியம்  , உலக சினிமா ,  சிரிப்பு, உண்ர்வு பூர்வ தருணங்கள் , வாக்கு வாதங்கள்,. சர்ச்சைகள் , சினிமா கிசு கிசு , விருந்தோம்பல் , தியானம் , படகு சவாரி , கிரிக்கெட் போட்டி என ஏராளமான நிகழ்வுகள், 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக , சாருவின் எழுத்துகளை யாரும் படிக்காதீர்கள், beware of charu என வாசகர் உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

  வழக்கமாக சென்னை அல்லது சென்னை சுற்றுப்புறங்களில் வாசகர் வட்ட சந்திப்பு நிகழும். தென் மாவட்டங்களில் சந்திப்பை நிகழ்த்த வேண்டும் என பலர் குரல் கொடுத்து வந்தனர். அதனால் இம்முறை திண்டுக்கல் அருகே நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சீரிய உள்ளம் கொண்ட செல்வகுமாரும் , வெள்ளை உள்ளம் கொண்ட கருப்புசாமியும் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வைத்து இருந்தனர்.

அதே போல வாகன வசதி , ஒருங்கிணைப்பு போன்றவற்றையும் வட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர். ராஜ ராஜேந்திரன் தலைமையிலான அணியில் , நான் சென்னையில் இருந்து புறப்பட்டேன். 
இயற்கை அழகு கொஞ்சும் சாலை வழியே பயணம் . வளைந்து நெளிந்து பாதையில் வாகனம் மலையேற தொடங்கியதுமே , சாரு நல்ல இடமாக தேர்ந்து இருக்கிறார் என்பது புரிந்து விட்டது.

வரவேற்பு பேனர் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார்கள். 


கொஞ்ச நேரம் ரிஃப்ரெஷ் , உணவு முடிந்த பின் உடனடியாக அறிமுக நிகழ்ச்சி தொடங்கியது. தென் மாவட்டங்க்ளில் பலரை சந்தித்தது மிக மிக மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல ஓசூர் , கிருஷ்ணகிரி போன்ற இடங்களிலும் இருந்தும் வந்து இருந்தார்கள்.

சென்னைக்கு வெளியே  நிகழ்ச்சியை நடத்தியது சிறந்த முடிவு. 
வெள்ளை சட்டை , வேட்டி அணிந்து வந்த சாரு, நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார். சந்திப்பின் முக்கிய அம்சம் என்னவென்றால் , மனிதனை மனிதனாக மதிப்பது.  சில எழுத்தாளர் சந்திப்பில் வாசகனை பள்ளிக்கூட மாணவன் போல கருதி ஏராளமான கட்டுப்பாடுகள் விதிப்பார்கள். சாருவிடம் மனிதனை நேசிக்கும் பண்பு உள்ளதால் , அப்படி ஏதும் இங்கு இல்லை.

தண்ணி அடிக்க கூடாது , அல்லது தண்ணி அடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.. நீ நீயாக இருக்கலாம், வாழ்க்கையை கொண்டாடு - அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் என்பதை சொல்லித்தரும் , பயிலரங்கு போல இருந்தது என்றே சொல்லலாம். 

முதல் நிகழ்ச்சியாக வாசகர் வட்ட விவகாரங்கள் குறித்து பேசினார். த்னது மகிச்சிகளை ,ஏமாற்றங்க்ளை , துரோகங்களை , உன்னத மனிதர்களைப்பற்றி பேசினார்.

தனி மனித ஒழுக்கம் குறித்து உணர்வு பூர்வமாக பேசினார்,

ஒரு காலத்தில் 13 வயதில் திருமணம் செய்வது இயல்பு. இன்று அது தவறு. ஆக , இதெல்லாம் மாறக்க்கூடியது. ஒழுக்கம் என்பது செக்ஸ் மட்டும் சம்பந்தப்பட்ட விஷ்யம் அல்ல. நேர்மையாக இருப்பது, மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருப்பது போன்றவைதான் ஒழுக்கம். நான் கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்து இருந்தால் , சாமியார்களிடமும் , சினிமா காரர்களிடமும் ஏராளமாக சம்பாதித்து இருக்க முடியும், நான் அப்படி செய்யவில்லை..இப்படி எந்த எழுத்தாளன் ஒழுக்கமாக தன் வேலையை செய்கிறான் என ஆவேசமாக பேசினார்.

பால்ய மணம் குறித்து பேசும்போது முக்கியமாக சம்பவம் ஒன்றை சொன்னார்.
100 வய்தான பாட்டி, இறக்கும் தறுவாயில் தன் ஃபிளாஷ் பேக்கை பேத்தியிடம் சொன்னார்.. ”அந்த காலத்தில் துவைப்பதற்கு வெகு உயரமான கல்லை பயன்பட்த்துவோம். எனக்கு அது எட்டாத உய்ரம் . கஷ்டப்பட்டு துவைப்பேன் “ 

இதை கேட்ட பேத்திக்க்கு , அந்த உய்ரமான கல்லை பார்க்க ஆசை. பாட்டியின் வீட்டுக்கு சென்றாள் . பாட்டி குறிப்ப்பிட்ட இடத்துக்கு சென்ற அவளுக்கு அதிர்ச்சி. அங்கே உய்ரமான கல் ஏதும் இல்லை..  வெகு வெகு சிறிய கல் மட்டுமே இருந்தது.

பிறகுதான் புரிந்தது. பாட்டிக்கு ஐந்து வயதிலேயே திருமணம் ஆகி ஏழு வயதில் கணவ்ன்  வீடு வந்தவள். அந்த வயதில் அந்த சிறிய கல், மாபெரும் உய்ரமாக தோன்றி இருக்கிறது.

இது போல பல தகவகள் , உலக சினிமா , புத்தகங்கள் என ஏராளமான தகவல்களை கொட்டினார் சாரு.

வாழ்வை கொண்டாடுங்கள் என்றார் சாரு.  அது அவர் எப்போதும் சொல்வதுதான். ஆனால் , தண்ணி அடிப்பது மட்டுமே கொண்டாட்டம் என நினைக்காதீர்கள் என சொன்னதுதான் அந்த பேச்சின் ஹை லைட். நான் ஒரு போதும் குடிக்கு அடிமை அல்ல. யாரும் இதை பழகாதீர்கள். குடி குடியை கெடுக்கும் என அரசு சொல்வது சரியானதுதான். என் வீட்டில் பல பாட்டில்கள் குடிக்கப்படாமல் அப்படியே கிடக்கின்றன. உங்களை பார்த்த சந்தோஷத்தில் குடிக்கிறேன். அவ்வளவுதான்.

என்னிடம் உழைப்பை , படிப்பை , தீவிரமாக செயலாற்றுவதை கற்று கொள்ளுங்கள். குடியை கற்கதீர்கள் . கட்டுப்பாடுடன் , ஒழுக்கத்துடன் இருப்பதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய கொண்டாட்டம் என முத்தாய்ப்பாக சொன்னார்.


அப்படி அவர் சொன்னதுதான் , அந்த இரண்டு நாளும் நடை முறையில் இருந்தது. எங்கெங்கும் கொண்டாட்டம் மட்டுமே இருந்தது. ஆனால் அது மற்றவர்களை கஷ்டப்படுத்தாமலும் , வற்புறுத்தாமலும் இருந்தது.

ஒருவர் செய்வதையே எல்லோரும் செய்ய வேண்டும் என்ற ஆட்டு மந்தை மனப்பானமை அறவே இல்லை. உனக்கு ராமயணம் படிப்பது , விவாதிப்பது பிடித்தால் , அதை பிடித்தவர்களும் செய். எல்லொர்ரும் அதை கேட்க வேண்டும் என சொல்லாதே . அதுவும் அடக்கு முறைதான்.


அப்படியெல்லாம் , வகுப்புகளோ பேருரைகளோ இல்லாமல்,  கொண்டாட்டமான வாழ்க்கை என்பது திய்ரிட்டிக்கலாக இல்லாமல் , நடை முறையில் இருந்தது. மகிழ்ச்சிதான் இறைத்த்ன்மை என வைத்து கொண்டால் , அந்த இரண்டு நாளும் ., இறைத்தன்மை அங்கு பூரணமாக நிலவியது. 


உதாரணமாக அந்த வித்தியாசமாக சூழ்லில் , புதிய நண்பர்களுடன் கிரிக்கெட் ஆடுவது சிலருக்கு பிடித்து இருந்தது ( அதில் எனக்கு பேட் வேண்டாம் , பந்துதான் வேண்டும் என அராத்து அடம் பிடித்தது தனி கதை ) சிலருக்கோ கிரிக்கெட் எங்கு வேண்டுமானாலும் ஆடலாம். அந்த மலை பிரதேசத்தை நன்கு அனுபவிப்போம் என்ற எண்ணம் இருந்தது.. இந்த இரண்டும் ஏற்கப்பட்டது என்பதே முக்கியம்.

அதே போல, தண்ணி அடிப்பது அல்லது அடிக்காமல் இருப்பதெல்லாம் பெர்சனல் சாய்ஸ். இதை போய் ஓர் எழுத்தாளன் கண்டிஷன் போடுவது என்பதெல்லாம் சாருவிடம் கிடையாது..


நான் சில நண்பர்களுடன் போட்டிங் சென்று இருந்தேன். மலைப்பிரதேசங்களுக்கு உரிய இனிய  நறும்ணம் , பறவைகளின் ஒலி என கேட்டவாறே இலக்கின்றி சுற்றினோம்.
அதன் பிறகு நள்ளிரவில் நடந்த கலந்துரையாடல், உணர்வு பூர்வமாக இருந்தது. அதைப்பற்றியெல்லாம் தனியே எழுத வேண்டும், விரிவாக பிறகு எழுதுவேன். 


சீரோ டிகிரியைப்பற்றிய சம்பவங்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.

சில வாசகர்கள் பேசுகையில், சீரோ டிகிரி புரியவில்லை என்றார்கள். சீரோ டிகிரியை புரிந்து கொள்ள விளக்க உரை ஏதும் படிக்க வேண்டுமா என்றனர்.

அடுத்து பேசிய சு.ரா உணர்ச்சி பூர்வமாக காணப்பட்டார்.


சாருவின் எழுத்து மந்திர சக்தி வாய்ந்தது. அவர் எழுத்தை படிக்க ஆரம்பித்தால் , மற்ற எழுத்துக்ளை படிக்க மனம் வராது.. உங்களை அந்த அளவுக்கு மயக்கி விடுவார். beware of charu  என உணர்வு பூர்வமாக பேசினார். 

சீரொ டிகிரி கவிதை ஒன்றை படித்து காண்பித்தார். இதில் என்ன புரியவில்லை. இதி என்ன செக்ஸ் இருக்கிறது என கேட்டு அவர் வாசித்த போது , பலரும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்தனர். தன்னிலை மறந்து வேறு ஏதோ ஓர் உலகில் இருப்பது போல இருந்தது.

அந்த நள்ளிரவில், குறைந்த வெளிச்சத்தில், இந்த உணர்ச்சி வெளிப்பாடு இன்னும் துல்லியமாக தெரிந்தது. சாரு அந்த கவிதையை வாசித்த போது , அவருக்குள் வேறொரு தேவதை புகுந்து கொண்டு அவரை பேச வைத்தது போல இருந்தது. 

கவிதையின் இறுதி பகுதியின்போது பலரும் கதறி விட்டனர் .இந்த நிகழ்ச்சிக்கு பின் ஆடல் பாடல் துவங்கியது. சிலர் குளிருக்கு பயந்து பம்மிவிட்டார்கள். ஆனால் சாரு தலமையில் குத்தாட்டம் பரபரப்பாக நடந்தது.

( சாருவுடன் கலந்துரையாடல் விரிவாக அடுத்த பதிவில் )
Thursday, June 14, 2012

அண்ணா நூலக விவகாரம் - திண்ணையில் நடு நிலை பதிவர் கட்டுரை

 நலிந்தவர்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கங்கள் , வசதியானவர்களுக்கு ஆதரவாகவே நடந்து  கொள்கின்றன. காரணம் பத்திரிக்கைகள் , இண்டர்னெட் , தொலைக்காட்சி போன்றவை வ்சதியானவர்கள் கைகளில் இருப்பதால், வசதியானவர்கள் குரல்தான் அரசை எட்டுகிறது.

ஆகவே ஊடகங்களிடம் நல்ல பேர்  எடுக்க முய்றசிக்கும் அரசுகள் , ஏழைகளின் ஆதரவை இழக்கின்ற்ன. தேர்தல் அன்று வாக்களிக்க செல்வது , ஏழைகள்தான். வசதியானவர்கள் அல்ல.


சந்திரபாபு நாயுடு தோல்விக்கும் , எம் ஜி ஆர் வெற்றிக்கும் இதுவே காரணம்.  அண்ணா நூலக விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜெ. எம் ஜி ஆரை பின்பற்ற போகிறாரா அல்லது நாயுடுவையா?

திண்ணையில் ஒரு நடு நிலை பதிவர் எழுதிய கட்டுரை உங்கள் பார்வைக்கு..

http://puthu.thinnai.com/?p=5923

Sunday, June 10, 2012

சாருவிடம் சாமியார் சீ டி கேட்ட மீன்கடைக்காரர்- கேணி சந்திப்பில் ருசிகரம்

கேணி சந்திப்பை ஞானி தொடர்ச்சியாக நடத்தி வருவது பரவலான வரவேற்பை பெற்று வருகிறது , பயனுள்ளதாகவும் இருக்கிறது.

ஜூன் 10, 2012ல் சாரு இதில் பங்கேற்கிறார் என்பது ஆச்சர்யமாகவும் இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. அவரிடம் கேட்பதற்காக சில கேள்விகளை தயார் செய்து கொண்டு போய் இருந்தேன் . ஆனால் கடைசிவரை என்னால் கேட்க இயலவில்லை. அந்தளவுக்கு பலரும் கேள்வி கேட்டனர்.
இந்த அளவு கூட்டத்தை தானே எதிர்பார்க்கவில்லை என சாரு குறிப்பிட்டார்.

வரவேற்று பேசிய ஞானி சுவையான விஷ்யம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில்

“ சாருவை அழைக்க வேண்டும் என முடிவு செய்த போது , சிலர் அவரைபோயா அழைக்கிறீர்கள் என்றார்கள். சிலர் அவரை இப்போதுதானா அழைக்கிறீர்கள் என்றார்கள்.இப்படி இரண்டு எக்ஸ்ட்ரீம்களுக்கு மத்தியில் வாழ்பவர் சாரு ” என்றார் .


அதன் பின் சாரு பேசினார். தூறல் போல மெதுவாக ஆரம்பித்த அவர் பேச்சு , அடைமழை போல போக போக வேகம் எடுத்தது.

அவர் பேசுகையில் ,

"  பல புத்தகங்கள்    எழுதி இருக்கிறேன். ஆனால் பேசுவது என்பது வேறு விஷ்யம். எழுதும்போது ஒரு வித உன்னத நிலைக்கு எழுதுகிறேன். எனவே சாதாரண நிலையில் இருக்கும்போது , அதைப்பற்றி பேசுவது கடினம். சாமியாடிகளைப் பார்த்து இருப்பீர்கள்.. மற்ற நேரங்களில் அவர்கள் சாதரண மனிதர்கள்தான்.

எழுத்தாளர்களைப் பற்றியும் பேச முடியாது. நாய்களை பார்த்து இருப்பீர்கள். நாய்கள் மனிதர்கள் மீது கொண்ட அன்போடு இருக்கும், ஆனால் சக நாய்களின் வயலண்டாக நடந்து கொள்ளும் .அது போலத்தான் எழுத்தாளர்களும்.

நான் தற்போது தமிழில் எழுதுவதை நிறுத்தி விட்டு , மொழி பெயர்ப்பில் ஈடுபட்டு  வருகிறேன். தமிழில் எழுதும் ஆர்வம் எனக்கு குறைந்து விட்டது. எழுவதற்கான ஸ்பேஸ் இங்கு இல்லை. பத்திரிக்கைகள் இப்படி என்றால் இணையமும் இப்படித்தான் இருக்கிறது. என் வாசகர் வட்டத்திலேயே நிலை இப்படித்தான் . சினிமாவை பற்றி எழுதினால் விவாதம் செய்கிறார்கள். இலக்கியம் எழுதினால் யாரும் சீந்துவதில்லை.

சில ஆயிரம் பேருக்காக பிளாக்கில் எழுதுவதை நான் விரும்பவில்லை.,.இவ்வளவு பாடுபட்டு, உழைத்து வெறும் பிளாக் எழுத்தாளானாக இருக்க விரும்பவில்லை.

ஒரு தமிழ் எழுத்தாளன் தமிழில் எழுத மாட்டேன் என சொல்கிறான் என்றால் தில் இருக்கும் அவலத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

கேரளாவில் கேட்டால் தெரியும் , நான் பேசாத கல்லூரிகள் இல்லை.

நம் ஊரில் போர்னோவைப்போன்ற டீ வீ  நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு இருக்கிறோம். அதை ஏன் பார்க்க வேண்டும்? பார்த்து விட்டு ஏன் திட்ட வேண்டும்? என் வீட்டில் தொலைக்காட்ச்சி இல்லை. இதனால் தொலைக்காட்சி பார்க்க விரும்பும் ந் உறவினர்கள் என் வீட்டுக்கு வருவதில்லை. நான் அவர்கள் வீட்டுக்கு போனாலும் உடனே கிளம்பி வடுவேன்.

தமிழ் தெரியாத தலைமுறை உருவாகி வருகிறது. ஆயிரம் பக்க நாவல்கள் எல்லாம் இப்போது படிப்பார்களா என்பதே தெரியவில்லை.பலருக்கு தமிழ் எழுதவே தெரியவில்லை. எதையும் படிக்காமலேயே எழுத வந்து விடுகிறார்கள்.

சரி,,இப்பொது நாம் உரையாடலாம்.. உங்களைப்பற்றி அறிந்து கொள்ள நானும் ஆர்வமாக இருக்கிறேன்.

******************************************************


ஞானி - ஆயிரம் பேர் படிக்கும் பிளாக்கில் எழுத மாட்டேன் என்கிறீர்களே... புத்தகம் எழுதினால் மட்டும் எவ்வளவு விற்பனை ஆக போகிறது. தமிழில் ஆயிரம் புத்தகம் விற்பதே பெரிய விஷ்யம். ஆக இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?


ராச லீலா நாவலை , பிலாக்கில்தான் தொடராக எழுதினேன். பிலாக்கில் வெளியாவதற்கு முன் மலையாள கௌமுதியில் மொழி பெயர்க்கப்பட்டு பிரசுரமானது. பத்திரிக்கையின் ரீச் அதிகம். ஐம்பது லட்சம் பேர் படிப்பார்கள். அதைதான் சொல்கிறேன்.

ஞானி பத்திரிக்கைகளில் எழுதுவதால் அவர் ரீச் அதிகம், பலர் என்னை ஞானி என நினைத்து ஓ பக்கங்களுக்காக என்னை பாராட்டி டார்ச்சர் செய்கிறார்கள். சென்ற வாரம் ஒரு நண்பர் என்னை எழுத்தாளர் என ஒருவரிடம் அறிமுகப்படுத்தினார்.  உங்களை படித்து இருகிறேனே.. குமுதத்தில் எழுதினீர்கள்.. பின் விகடனில் , பின் கல்கியில் விடாப்படியாக எழுதுகிக்றீர்களே என்றார் அவர்.  அவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. இதற்கு பயந்துதான் என்னை எழுத்தாளர் என சொல்லாதீர்கள் என்கிறேன்.

சென்ற மாதம் மீன் வாங்க போனேன்.  மின்கடைக்காரர் என்னை பார்த்ததும் , சார் , சிடி கிடைக்குமா என கள்ள குரலில் கேட்டார். சிடியா என திகைத்தேன். அதுதான் சார் , சாமியார் சி டி என்றார். என்னை அந்த சாமியாரோடு இணைத்து புரிந்து கொண்டு இருக்கிறார். இப்படி இருக்கு நிலை.

இணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அலுவலகத்தில் இலவசமாக கிடைப்பதால் , பலர் எழுதுகிறார்கள்.. இன்று ஞாயிறு என்பதால் , பலருக்கு இந்த நிகழ்ச்சி நடப்பதே தெரியாது. காரணம் அலுவலகம் விடுமுறை. நெட் கிடையாது. ஞானி - நீங்கள் முன் வைக்கும் , அசோகமித்திரன்  சிங்காரம் போன்றவர்கள் பெரிய பத்திரிக்கைகளில் எழுதியதில்லையே, பிறகு ஏன் இந்த வாதத்தை முன் வைக்கிறீர்கள்?

 வேறு யாரும் கேள்வி கேட்க மாட்டார்களா? ( வளாகத்தில் பலத்த சிரிப்பு  )

அசோக மித்திரன் போன்று சிலர் மட்டுமே அறிந்த எழுத்தாளராக இருக்க நான் விரும்பவில்லை. அவர் மலையாள பத்திரிக்கைகளில் எழுதி இருந்தால் பெரும் புகழ் பெற்று இருப்பார்.

நித்தியானந்தா மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமா ..கூடாதா ?

 நோ கமெண்ட்ஸ். அவரோடு சட்டப் போர் நடத்த எனக்கு வலு இல்லை. ஏதாவது பேசினால் எனக்கு நோட்டீஸ் அனுப்ப , ஒரு வழக்கறிஞர் அணியையே எனக்கு எதிராக வைத்து இருக்கிறார்.

சாரு மஜும்தார் கொண்ட மதிப்பினால்  சாரு என்று பெயர் வைத்து கொண்டீர்கள். கம்யூனிச இயக்கம் குறித்து தற்போதைய நிலைப்பாடு என்ன ?

   அந்த இயக்கம் மேல் நம்பிக்கை போய் விட்டது. காரணம் சர்வாதிகாரம். மக்களுக்கு எதிரானதாக அந்த இயக்க்கம் மாறி விட்டது. சுதந்திரம் பறிக்கப்பட்டு , ம்க்கள் ரொட்டி துண்டுக்காக அலைய விடப்பட்டுள்ளனர். ஏனென்றால் பவர் கரப்ட்ஸ். அதிகாரம் எப்பேர்பட்டவனையும் கெடுத்து விடும்.
ஆனால் பல ஐரோப்பிய நாட்கள் , வெளியே சொல்லாமல் மார்க்ஸிய கொள்கைகளை பின் பற்றி வருகின்றன. அங்கெல்லாம் பசி கிடையாது. பணக்காரர்களுக்கு கடும் வரி விதிக்கபடுகிறது.நிவேதிதா என்ற பெயர் வைத்து கொண்டீர்களே. அது சார்ந்த மதிப்பீடு ?

பவர் கரப்ட்ஸ் என சொன்னது இதற்கும் பொருந்தும். இந்திரா காந்தி சர்வாதிகாரியாக திக்ழ்ந்த கால கட்டத்தில் , ஒரு சாமியாரை சந்திக்க போனார். அந்த சாமியார் தன் வழக்கப்பட்டி, இந்திராவின் நெற்றியில் உதைத்து ஆசி வழங்கினார். ஆக, துறவு நிலை என்பது ஒரு அதிகார சக்தியாக உருவெடுகிறது. ஆனால் , இதையெல்லாம் கடந்த ஒரு உள்ளார்ந்த தேடலில் நான் இருக்கிறேன் . இந்த தேடல் ஒரு நாஸ்திகனுக்கும் கூட வரலாம்.

பின் நவீனத்துவம் , ஸ்ட்ரக்ட்ரலிஸம் போன்ற பிரிவுகள் தேவையா? 

நல்ல கேள்வி. பிடித்த கேள்வியும் கூட . இந்த இசங்கள் பற்றி பேசும் யாரும் ( சில விதி விலக்குகள் தவிர ) யாரும் நல்ல நாவல்கள் கொடுத்ததில்லை. இவற்றை ஒரு கிராமராக வைத்து கொண்டு , படைப்பை உருவாக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் தெரியாத சிலர் நல்ல நாவலக்ள் தந்துள்ளனர்.

எனக்கு போஸ்ட் மாடர்னிசம் உதவி இருக்கிறது. ஒரு காலத்தில் எழுத்தாளன் எழுத்தில் ஆதிக்கம் செலுத்தினான். அவன் சர்வாதிகாரி மாதிரி. அவன் சொல்வதைத்தான் , வாசகன் படிக்க வேண்டும். ஆனால் போஸ்ட் மாடர்ன் எழுத்தில், வாசகனின் கிரியேட்டிவிட்டிக்கு வேலை கிடைக்கிறது. ஃபாஸ்ட் ஃபுட் உணவு மாதிரியல்ல இது. நீங்களே சமைத்து சாப்பிடுவது போல இது. எனவேதான் பல நாவல்களில் ஆரம்பமோ முடிவோ இல்லாததுபோல இருக்கும், இவற்றை வாசகன் தான் உருவாக்க வேண்டும்.
ஆனால் இது போன்ற இச்ங்களை பலர் வெறும் கிராமராக பயன்படுதுவதால் , அவற்றை படிக்கவே முடியவில்லை


உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும்.,ஆனால் உங்கள் கடவுள் நம்பிக்கை எனக்கு உடன்பாடு இல்லை .


கடவுள் நம்பிக்கை குறித்து  பொது வெளியில் விவாதிக்க விரும்பவில்லை. அது என் பெர்சனல் சாய்ஸ்.

முன்பு கடவுளை நம்பாமல் இருந்தேன், ஏன் கடவுளை நம்பவில்லை என யாரும் கேட்கவில்லை. ஆனால் கடவுளை நம்புவது தவறு என்பது போன்ற கில்ட் ஃபீலிங்கை உருவாக்க முயல்கிறார்கள்.

ரஸ்புட்டீன் பற்றி எழுதினேன். அதற்கும் ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இல்லை. அவன் ஒரு ம்ந்திரவாதி. அவ்வளவுதான்.

 நான் மதங்களை கடந்த ஆன்மீகத்தில் இருக்கிறேன்,  தினமும் சர்ச்சுக்கு செல்கிறேன். கோயில்களுக்கும் செல்கிறேன்

அதிஷா : கேரளா போன்று தமிழ் நாட்டில் எழுத்தாளனை கொண்டாடுவதில்லை என்கிறீர்கள்.  ஆனால் கேரள எழுத்தாளர்கள் போல தமிழ் எழுத்தாளர்கள் பொது பிரச்சினைக்காக போராடுவதில்லையே ? பின் எப்படி மக்கள் கொண்டாடுவார்கள் ?


தமிழ் நாட்டில் எழுத்தானுக்கு என்ன இடம் இருக்கிறது ? போராடினால் என்ன இம்பாக்ட் இருக்கும் ?  ஓர் எழுத்தாளன் போராடினால் ,. யார் போராடுகிறான் என்பதே அரசுக்கு தெரியாது.

நீங்கள் நினைப்பது போல கேரளாவில் எழுத்தாளர்கள் யாரும் போராடுவதில்லை. அதனால்தான் என்னை போன்றோர் சென்று போராட்கிறோம். கொக்கோ கோலா போராட்டத்தில் நான் கலந்து கொண்ட போது, என்னை எதுவும் செய்து விடக்கூடாது என போலிசுக்கு அரசு உத்தரவு இட்டு இருந்தது, அந்த அளவுக்கு எழுத்தானை மதிக்கிறார்கள்..
முதல்வருக்கு கேள்விகள் கேட்டு மலையாள பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட்டேன். அதற்கு பெரிய முக்கியத்துவம் கிடைத்தது.


(  ஞானி குறுக்கிடுகிறார் ) சாரு சொல்வது முழுக்க உண்மை. கூட்ங்குளம் பிரச்சினைக்காக எழுத்தாளர்கள் கூட்டறிக்கை வெளியிட்டோம் . உங்கள் ( திரு . அதிஷா ) பத்திரிக்கை உட்பட யாரும் வெளியிடவில்லை ( பலத்த கைதட்டல் )


ஆங்கில புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஏன் தமிழுக்கு கிடைப்பதில்லை?

இதே கேள்வியைத்தான் நான் பல காலமாக கேட்டு வருகிறேன். ஆங்கிலம்படிப்பதே நாகரிகம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தமிழில் பேசுவதே அவமானம் என நினைகிறார்கள். ஹோட்டலில் ஆங்கிலத்தில்தான் ஆர்டர் எடுக்கிறார்கள்.
டாஸ்மாக்கிலும் , காய்கறிக்கடையிலும் மட்டுமே தமிழ் பேசப்படுகிறது. கல்வி நிறுவனங்களில் தாய் மொழிக்கு இடம் இல்லை என்ற நிலை வேறு எங்கும் இல்லை.


எழுத்தில் உங்கள் இன்ஸ்பிரேஷன் யார் ? உங்கள் எழுத்தில் சிருங்கார ரசம் அதிகம் இருக்கிறதே ஏன் ? 
எனக்கு சார்ஜ் குறையும் போது சீரோ டிகிரியை படித்து உற்சாகப்படுத்தி கொள்வேன். வெகு நாட்களாக படிக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது..


என்னை இன்ஸ்பைர் செய்தது சினிமா என்று சொல்லலாம். ஒரு நாளுக்கு இரண்டு படங்கள் பார்த்தெல்லாம் உண்டு. பல தமிழ் எழுத்தாளர்கள் என்னை எர்ச்சலூட்டியே வந்தனர். சுந்தர ராமசாமி , புதுமைபித்தன் போன்றொர் என்னை கவரவே இல்லை, ஆனால் மவுனியிடம் நிறைய கற்று கொண்டேன். கரிச்சான் குஞ்சு , கு பா ரா, லா ச ரா போன்றொர்களும் என்னை கவர்ந்தனர். பின்பு அஷோக மித்திரன் , இ பா போன்றோர்கள் கவர்ந்தனர்.

நகுலனை படித்த பின்பு , இவன் தான் நம் ஆள் என உணர்ந்தேன். அவரின் இலக்கிய வாரிசாகவே என்னை உணர்கிறேன்.

சிருங்கார ரசம் பற்றி சொன்னீர்கள். என் நாவல்களில் அந்த ரசமே கிடையாது. நம் சமூகத்தில் செக்ஸ் சிருங்காரமாக இல்லை என்பதையே நான் முன் வைக்கிறேன். சந்தேகம் இருந்தால் நாளை தின தந்தி வாங்கி படியுங்க்ள் . பாதுக்கு மேல் செக்ஸ் ரிலேட்டட் குற்றங்கள்தான். செக்ஸ் ஏன் நம் சமூகத்தில் தவ்றான செயலாக மாறியது என்பதையே அலசுகிறேன்.


 நான் ஆசிரியராக பணியாற்றுகிறேன். டி வி நிகழ்ச்சிகள் குறித்து பேசினீர்கள். இவற்றில் இருந்து மாணவர்களை காப்பாற்ற நீங்கள் சொல்லும் தீர்வு என்ன ?

நாம் டீ வி பார்ப்பவராக இருந்து விட்டு மாணவர்களுக்கு அறிவுரை சொல்ல இயலாது. நாம் முன் மாதிரியாக இருக்க வேண்டும் , நான் ஆசிரியராக இருந்து , ஒரு மாணவன் டீ வி சீரியல் பற்றி பேசினால் , அதைப்பற்றி எனக்கு தெரியாது என சொல்லி விடுவேன். அன்பினால் மட்டுமே மாற்றம் நிகழும் என நினைக்கிறேன்.

சாலையில் என்னை ஒருவன் இடித்து விட்டான் . பயங்கர வலி. அவனோ என்னை முறைத்தான். “ சாரி பிரதர் “ என அமைதியாக சொன்னேன்.. சண்டையை எதிர்பார்த்த அவன் குழம்பி போய் விட்டான். அமைதியாக போய் விட்டான்.

என் நாய் பக்கத்து வீட்டு வாசலில் மலம் கழித்து விட்டது, அந்த வீட்டு அம்மையார் சத்தம் போட்டார். பாவம் அப்போதுதான் , சுத்தம் செய்து இருந்தார் போலும். சண்டையை தவிர்க்க விரும்பினேன். சட் என புது சட்டையை கழட்டி , மலத்தை துடைத்து குப்பையில் வீசினேன். சட்டை நஷ்டம் . ஆனால் சண்டை தவிர்க்கப்பட்டது.

நீங்கள் ஏன் சிறுகதை எழுதுவதில்லை ?

நான் எழுதுவது எல்லாமே ஃபிக்சன் தான் , நாவல் , குறு நாவல் , சிறு கதை என்றெல்லாம் பிரிப்பதில்லை. என் வாழ்க்கையே ஃபிக்‌ஷனாகத்தான் பார்க்கிறேன், நான் ஒருவருடன் பேசுகையில், ஒரு கேரக்டர் இன்னொரு கேரக்டருடன் பேசுவ்தாக எண்ணி கொள்வேன்.


கூடங்குளம் குறித்து நீங்கள் ஏன் கருத்து சொல்லவில்லை ?

அதில் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. இது குறித்து விஞ்ஞானிகள்தான் பேச முடியும் , நான் அல்ல. எனக்கு தெரியாத ஒன்றை பற்றி நான் என்ன பேச முடியும்?

பாலியல் கல்வி குறித்து ?

நம் நாட்டில்தான் குழந்தைகளுடன் உட்கார்ந்து அடல்ட்ஸ் ஒன்லி படம் பார்க்கிறோம். வெளி நாடுகளில் , குழந்தைகள்  குழந்தைகளுக்கான ப்டம் பார்க்கிறார்கள். வாரணம் ஆயிரம் படத்தை குழந்தைகள் பார்க்க வெளி நாடுக்ளில் அனுமதி இல்லை. இப்படி எல்லாம் ப்ல பிரச்சின்கள் நம்மிடம் இருக்கின்றன. இதில் பாலியல் கல்வி என்பது துணை பிரச்சினைதான்


ஆன்மீகம் பற்றி  சொன்னீர்கள். ஆரியர் படை எடுப்பு, சனாதான தர்மம், ஜாதி வேற்றுமை, சுரண்டல் , ஏகாதிபத்தியம் - இதைப்பற்றியெல்லாம் விளக்காத உங்களை நான் எப்படி கொண்டாடுவது ?

உங்கள் கேள்வியை புரிந்து கொள்ளவே எனக்கு பாதி நாள் தேவைப்படும் . எனக்கு கேள்வி புரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். என்னை விட்டு விடுங்கள்.

இது எஸ்கேபிசம் . உங்களை எனக்கு பிடிக்கவில்லை.

எனக்கு ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் உடனே வெளியேறி விடுவேன்.  என்னை பிடிக்கவில்லை என சொல்ல உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது. இனி என் எழுத்துகளை படிக்க வேண்டாம்.

 நாய்க்காக சட்டையை இழந்ததை சொன்னீர்கள். இப்படி செய்ததற்கு பதில், சாரி மேடம், என் நாய் செய்த தவறுக்கு மன்னியுங்கள் என அந்த பெண்ணிடம் சொல்லி இருக்க வேண்டும் . அதன் பின் மலத்தின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ப தண்ணீரும்  , டெட்டாலும் , பழைய துணியும் , துடைப்பமும் எடுத்து வந்து இருக்க வேண்டும்.  பிறகு அதை கழுவி விட்டு இருக்க வேண்டும் . அது காய்ந்த பின் , மீண்டும் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும், இப்படி செய்யாமல் புது சட்டையை இழந்து விட்டீர்களே ?

 நான் இப்படி எல்லாம் யோசித்து செயலாற்றுவதில்லை. அந்தந்த கணத்தில் தோன்றுவதை செய்கிறேன். என் வாழ்க்கை ஒரு மித் போலத்தான் இருக்கும்.

தேடல் என்பதற்கு நான் சில இலக்கணக்கங்கள் வைத்து இருக்கிறேன். உங்கள் தேடல் என விளக்குங்கள். என் இலக்கணத்துக்குள் வருகிறதா என பார்க்க வேண்டும்.

என் தேடல் என்பது என் தனிப்பட்ட விஷ்யம். சில காலம் கழித்து இதெல்லாம் முட்டாள்தனம் என நான் நினைக்கலாம். அல்லது தேடியதை கண்டடையலாம். இதெல்லாம் தனிப்பட்ட விஷ்யங்கள்..

முன்பு ஒரு டி வி பேட்டியில், எனக்கு பிடித்த உண்வு உப்புமா என்றீர்கள். சமீபத்தில் இட்லி பிடிக்கும் என எழுதி இருக்கிறீர்கள். ஏன் இப்படி மாற்றுகிறீர்கள். பார்க்க விரும்பும் நபர் என ஒருவரை சொன்னிர்கள். ஏன் அப்படி சொன்னீர்கள்?

 நான் பல நாவல்கள் , சிறுகதைகள் , கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். அதை படித்து விட்டு வந்து கேட்காமால் , கேட்க வேண்டுமே என எதையோ கேட்காதீர்கள். சரி.. நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். நான் பார்க்க விரும்பும் , பார்க்கவிருக்கும் நபர் பிரியங்கா சோப்ரா.. போதுமா?


எழுத்தானை கொண்டாடுவதில்லை என்கிறீர்கள். ஆனால் இங்கு உடகார இடம் இல்லாமல் நின்று கொண்டு உங்கள் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். இதைப்பற்றி.

வாசகர்கள்  கொண்டாடுகிறார்கள் , நான் சொல்வது அதுவல்ல. பாப்லா நெருதோ அம்ர்ந்த பாருக்கு எழுத்தாளர் மார்க்கெஸ் வந்து இருப்பதை கேள்விப்பட்ட , பிடல் கேஸ்ட்ர அவரை பார்க்க அங்கு வந்தார். இதையே  நான் சொல்கிறேன்.


Thursday, June 7, 2012

இனிய மார்க்கம் இஸ்லாமும் , இணையத்தில் சிலரின் குழப்பமும்

குணங்குடி மஸ்தான் தர்க்கா சென்று வணங்கியதை சில நாட்கள் முன்பு எழுதினேன். என் உணர்வுகளை புரிந்து கொண்ட நண்பர்கள் தாமும் ஒரு நாள் தர்க்கா செல்ல விரும்புவதாக சொல்லி , செல்லும் விபரங்களை கேட்டார்கள்.

அதே நேரம் இதை சிலர் கேலியும் செய்தார்கள். நாத்திக நண்பர்களோ , மாற்று மதத்தினரோ கேலி செய்வதை புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் இஸ்லாம் நண்பர்கள் சிலரே கூட இதை கிண்டல் செய்தனர்.

இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் . இறை நேசர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என குழப்பினர்.

தான் வந்தால் எழுந்து நிற்க கூடாது என முகமது நபியே சொல்லி இருக்கிறார் என ஆதாரத்தையும் முன் வைத்தனர் . இது என்ன மேட்டர் என ஆராய்ந்து பார்த்த போதுதான் , அவர்கள் சொல்வதில் இருக்கும் தவறு புரிந்தது.

நபி அவர்கள் அப்படி சொன்னது உண்மைதான். அப்படி அவர் சொன்னார் என்றால் அதற்கு காரணம் அவரது தன்னடக்கம். அது பொதுவான விதி அன்று. வேறு பல இடங்களில் , தகுதியானவர்கள் வந்தால் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என அவர் சொல்லி இருப்பது இஸ்லாமிய நூல்களில் பதிவாகி இருக்கிறது.

உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


அவ்வளவு ஏன் ? மனிதன் இறந்த பின்னும் கூட மரியாதைக்கு உரியவனே என்கிறார் நபி. பிரேத ஊர்வலத்தை கண்டால் , அந்த ஊர்வலம் கடந்து செல்லும் வரை எழுந்து நிற்க வேண்டும் என்பது அவர் அறிவுரை.


ஆக, நபி தன்னடக்கத்துக்காக சொன்ன ஒன்றை , பொது விதியாக கருதுவது தவறு.


சரி. இறை நேசர்களுக்கு சக்தி உண்டா என்பது அடுத்த கேள்வி.

அடக்கம் செய்யப்பட்ட இறை நேசர்கள் நிலை என்ன என்பதை நச் என இஸ்லாமிய நூல்கள் சொல்கின்றன.


மய்யத் அடக்கம் செய்யப்பட்ட உடன் நீல நிற கண்களுடைய இரண்டு கறுப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். 
 அவ்விருவரும், ''இந்த மனிதர் பற்றி என்ன கூறிக் கொண்டிருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். ''அவர் அல்லாஹ்வின் அடியார் அவனது தூதர் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயாமக முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்'' என்று தான் கூறிக் கொண்டிருந்ததாக கூறுவர்.
அதற்கவ்விருவரும், ''நீர் அவ்வாறு தான் கூறிக்கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்'' என்று கூறுவர். பிறகு அவரது அடக்கஸ்தலம் 70வதுக்கு 70 முழமாக விரிவுப்படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பிறகு அவரிடம், ''நீர் உறங்குவீராக'' என்று கூறிப்படும். அப்போது அவர், ''நான் என் குடும்பத்தினரிடம் சென்று சொல்ல வேண்டும்'' என்பார். அப்போது அவ்விருவரும், ''நெருக்கமான உறவினர் தவிர மற்றவர்கள் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழப்பும் வரை உறங்குவீராக'' என்று கூறுவர்.

தேவை ஏற்பட்டால், வேண்டியவர்கள் எழுப்பினால் எழுப்பக்க்கூடிய தற்காலிக தூக்கம் போன்றதே இறை நேசர்கள் அடக்கம் ஆதல் என்பது எவ்வளவு அழகாக மணமகன் உறக்கம் என் சொல்லி இருக்கிறார்கள் என கவனியுங்கள்.
இறை நேசர்களை அடக்கம் செய்து விட்டு வருகிறீர்கள் அல்லவா? அப்போது எழும் உங்கள் காலோடி ஓசையை , அடக்கஸ்தலத்தில் இருந்து அந்த இறை நேசர்கள் கேட்பார்கள் என்கின்றன இஸ்லாம்  நூல்கள்.

ஆனால் ஏக இறைவனே மட்டுமே வணங்க வேண்டும் என்கிறது இஸ்லாம். இறை நேசர்கள் அடக்க ஸ்தலங்களுக்கு சென்று மரியாதை செலுத்தலாம் . அப்படி செய்வது நல்லது .

இந்த உண்மைய புரிந்து கொண்டதால்தான் ஏ ஆர் ரகுமான் , கவிஞர் அப்துல் ரகுமான் போன்றோர் தர்க்காக்களை ஏற்கின்றனர்.
இஸ்லாம் பெரியோர்களின் பெரும்பான்மை கருத்துக்கு மாறாக , இணையத்தில் மட்டும் சில இஸ்லாமிய நண்பர்கள் , தர்க்கா வழிபாட்டை கேலி செய்கின்றனர்.. 
என்ன செய்வது ?Wednesday, June 6, 2012

சாரு வாசகர்களுக்கு சவால் விட்ட நண்பரும் , என் பதிலும்..

சாரு நிவேதிதா அளவுக்கு தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த எழுத்தாளரும் இல்லை. அவரைப் போல எதிர்ப்புகளை சந்தித்தவர்களும் யாரும் இல்லை. இன்னும் நூறு ஆண்டு கழித்து வாழ இருக்கும் தலை முறைக்குதான் சாருவின் உன்னத புரியும். 

சாருவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் நடப்பதால், புதிதாக வாசிக்க துவங்குபவர்கள் விஷ்யம் ஏதும் தெரியாமலேயே சாருவுக்கு எதிரான மன நிலையை பெற்று விடுகிறார்கள்.  பின்பு விஷ்யம் தெரிந்த பின் சாருவின் வாசகர்கள் ஆகிறார்கள்.

 நம் வலைப்பூவில் வந்த சமீப கட்டுரை ஒன்றுக்கு நண்பர் ஒருவர்  எதிர் வினை ஆற்றி இருந்தார். சிலர் உள் நோக்கத்துடனும் , துவேஷத்துடனும் எதிர் வினை ஆற்றுவார்கள். ஆனால் இந்த நண்பர் தன்னைப் பற்றிகூறும்போது
 “ நான் தமிழுக்கு மிக புதியவன். தாய்மொழி என்னவோ தமிழ்தான். ஆனாலும் இலக்கிய பரிச்சயம் எல்லாம் பெரிதாக எதுவும் கிடையாது. ஏதோ போகிறபோக்கில் கிடைப்பதை படித்து சென்று கொண்டிருக்கிறேன்.” 
என்றார்.

எனவே இவருக்கு துவேஷமோ , உள் நோக்கமோ  இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். அந்த அடிப்ப்படையில் இவருக்கும் , இவரை போன்ற புதிதாக வாசிக்க ஆரம்பித்து இருப்பவர்களுக்கும் சில விளக்கங்கள் கொடுக்க விரும்புகிறேன்.

கேள்வி 1    சாரு எங்கே வித்தியாசப்படுகிறார் ? 

                             நிமிர்ந்த  நன் நடை , நேர் கொண்ட பார்வை ,  நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் - இவற்றை சாருவிடம் மட்டுமே பார்க்க முடியும். சமீபத்தில் வழக்கு எண் என்றோர் குப்பைப் படம் வெளி வந்தது.  விபரம் புரியாத சிலர் , வித்தியாசமானதை ஆதரிக்கிறோம் என சொல்லிக்கொண்டு உலகப்படம் அது இது என உணர்ச்சி வசப்பட்டார்கள். ஒரு சிலருக்கு உண்மையிலேயே படம் பிடித்து இருந்தது. சரி.. ரசனை ஒவ்வொரு விதம். அதில் தவறில்லை.

ஆனால் சில இலக்கியவாதிகளும் , அறிவு ஜீவிகளும் கூட படம் குப்பை என தெரிந்திருந்தாலும் கூட , படம் அபாரம் என புகழ்ந்தனர், காரணம்? சினிமா வாய்ப்பு, டிவியில் பேட்டி கொடுக்க கிடைக்கும் வாய்ப்பு.

சர்ரு மட்டுமே ஒன் மேன் ஆர்மியாக படத்தின் மீது காறி உமிழ்ந்தார். 

எப்போது? படம் சூப்பர் ஹிட்... படம் முடிந்ததும் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர் என ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டு கொண்டிருந்த நிலையில்.
        
இந்த உண்மைதான் சாருவை மற்ற எழுத்தாளர்களிடம் இருந்து வேறு படுத்துகிறது. 

உண்மை ஜெயிக்க தாமதமாகலாம் . ஆனால் கண்டிப்பாக ஜெயிக்கும்.

வழக்கு எண் படத்தை பற்றி இப்போது அதன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்? படம் நல்ல படம்தான்.. ரசிகர்கள்தான் சரி இல்லை.. ஆதரிக்காமல் ஏமாற்றி விட்டார்கள் என்கிறார்கள்.  ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டுவதாக அவர்கள் விட்ட புருடாவை அவர்களே வாபஸ் வாங்கி இருக்கிறார்கள்.. 

இதற்காக உலகமே தன்னை கொண்டாட வேண்டும் என்று சாரு நினைப்பதும் அதற்கு ரசிக பெருமக்களான உங்களை போன்ற ஒரு சிறு கூட்டமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது.

சிறு கூட்டமா? ஹா ஹா.

சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த கூட்டத்தை பார்த்து சில துரோகிகள் அதிர்ந்து போனார்கள். சாருவுக்கு நிகரான கூட்டத்தை கூட்ட வேண்டுமானால் ரஜினியால் மட்டுமே முடியும் என நினைத்து , ரஜினியை வைத்து கூட்டம் நடத்தினார்கள். சாருவை சிறு கூட்டம் மட்டுமே பின்பற்றுகிறது என்றால் அவர்களுக்கு ஏன் அவ்வளவு பதட்டம் ?


பாரதியோடு தன்னை ஒப்பிட்டு பேசிக்கொள்கிறார், தமிழர்களை திட்டிக்கொண்டே... என்ன அநியாயம்...! தமிழர்களை மட்டுமல்ல, ஒருவரையுமே ஏசியவனல்ல பாரதி.

சாரு தமிழர்களை திட்டுகிறார் என்றால் இதற்கு காரணம் தமிழர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்பதால்தான். தமிழர்கள் மீது கொண்ட அன்பினால்தான். மனம் நொந்து போய்தான் திட்டுகிறார்.

இதே காரணத்தால்தான் , பாரதியும்கூட தமிழர்களை திட்டி இருக்கிறார். நேரம் கிடைத்தால் படித்து பாருங்கள்.

கீழ் கண்ட கவிதை எழுதியவர் சாருவா , பாரதியா என யோசித்து பாருங்கள்..

நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த 
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால் 
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு 
கோடியென் றாலது பெரிதாமோ ? 

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன் 
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால் 
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு 
நெடுநா ளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச் 

சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே 
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு 
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார் 
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச் 
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால் 
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன் 
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு) எண்ணிலா நோயுடையார் - இவர் 

எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார் 
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர் 
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார் 
நண்ணிய பெருங்கலைகள் - பத்து 
நாலாயிரங் கோடி நயந்து நின்ற 
புண்ணிய நாட்டினிலே - இவர் 
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார்

என் கேள்வி எல்லாம், சாரு என்ன நிலைப்பாடு எடுக்கிறாரோ அதையே நீங்களும் எந்தவொரு ஆய்வுக்கும் உட்படுத்தாமல் வழிமொழிவது எந்தவகையில் தர்மமாகும்?

சமீபத்திய உதாரணம் காட்டவா...

வழக்கு எண் திரைப்படம் உங்களுக்கு பிடித்திருந்ததாக எழுதி இருந்தீர்கள். இப்பொழுது? 


சாரு எழுத்துகளை படிக்காமல் இருந்து இருந்தால் , கண்டிப்பாக அந்த பட கிளைமேக்சை விசில் அடித்து ரசித்து இருப்பேன். ஆனால், இந்த படத்தை பார்த்த உடனேயே இது கேவலமான படம் புரிந்து விட்டது .  நான் ஒருபோதும் இந்த குப்பையை பாராட்டவில்லை.

இது குறித்து சாரு என்ன சொல்கிறார் என பாருங்கள்.

சினிமா பற்றி இதுவரை அரை டஜன் புத்தகங்களை எழுதியிருக்கிறேன்.  அதைப் படிக்கும் என்னுடைய வாசகருக்கு வழக்கு எண் என்ற படம் ஒரு குப்பை என்பது தானாகவே புரிந்து விடும். 

நான் ஒரு சவால் விடவா?

சாருவின் வாசகர் வட்டத்தில் இருக்கும் அனைவரும் சாரு எழுதிய ஒரு நாவலின் கதையை சொல்ல வேண்டும், கூட்டமாக உட்கார்ந்து அல்ல... தனித்தனியாக சொல்ல வேண்டும். இதுதான் கதை, என்று எல்லோரும் ஒரே கதையை சொல்லிவிட்டால்.... 


 நண்பரே .. உலக இலக்கியம் எங்கேயோ சென்று விட்டது. ஆனால் தமிழ் நாட்டில் சாருவைத்தவிர வேறு எந்த எழுத்தாளரும் , ஒரு சிறிய வட்டத்தை தாண்டி வெளியே செல்லவில்லை. தமது வாசகர்களுக்கு புதிய எல்லைகளை அறிமுகப்படுத்தவில்லை என்பதையே உங்கள் கேள்வி காட்டுகிறது.

ஜெனிவாவில் சங்கர்லால் என்ற கதையை யார் படித்தாலும் கதை ஒன்றுதான்.  ஒருவர் ப்யங்கர குற்றம் செய்து இருப்பார்.. சங்கர்லால் அதை கண்டு பிடிப்பார்.

ஐந்தாம் கிளாஸ் மாணவன் முதல், கல்லூரி ஆசிரியர் வரை யார் படித்தாலும் இதுதான் கதை. கதாசிரியர் என்ன எழுதி இருக்கிறாரோ அதுதான் கதை.

ஆனால் பின் நவீனதுவத்தில் எழுத்தானை விட வாசகனே முக்கியம். வாசகனின் புத்திசாலித்தனத்துக்கு நிறைய வேலை இருக்கும். வாசகனின் புரிதலே நாவலை தீர்மானிக்கும். 

அதாவது ஜீரோ டிகிரியைப் பற்றிய என் புரிதல் , ஆரம்ப காலத்தில் வேறு மாதிரி இருந்து இருக்கும். இப்போது என்னிடம் கேட்டால் , நான் சொல்வது வேறு மாதிரி இருக்க கூடும். இது போன்ற நாவலை படிப்பதே ஒரு கலை.. death of author , deconstruct the text என்றெல்லாம் நிறைய விஷ்யங்கள் இருக்கின்றன. சாருவை தொடர்ந்து படித்து வாருங்கள்.. ஒரு புதிய உலகம் உங்களுக்காக காத்து இருக்கிறது. 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா