Monday, August 27, 2012

காளமேகப்புலவர் பண்டைக்கால சாருவா?- இதென்ன கலாட்டா?

மதுபானக் கடையா அல்லது மதுபான கடையா என ஓர் இடுகை இட்டு இருந்தேன். அது தொடர்பாக ,  நண்பர் நிர்மலின் நண்பரான் சங்கர் கால் செய்து இருந்தார்.

” அந்த பெயரில் ஒற்று வருமா வராதா என்பது அடுத்த பிரச்சினை..இது தொடர்பான கட்டுரையில் ,  நீங்களே பல இடங்களில், பல வார்த்தைகளில்  தவறு செய்து இருக்கிறீர்களே.” என உரிமையுடன் ஒரு குட்டு வைத்தார்.  என் அதிர்ச்சி நீங்குவதற்குள் , எந்த கட்டுரை சம்பந்தமாக வேறு சில ஆதாரங்களை சொல்லி விட்டு போனை வைத்து விட்டார். ப்ரூஃப் பார்க்காததால் ஏற்பட்ட பிழை என அவரிடம் சொல்ல வாய்ப்பு இல்லாமல் போட் விட்டது.

அவர் தமிழ் ஆர்வம் மகிழ்ச்சி ஏற்படுத்தியது. அவரைப் பற்றி நிர்மலிடம் பேசியபோது , சங்கரைப் பற்றி உயர்வாக சொன்னார். இலக்கியம், சினிமா என பேச்சு பல திசைகளில் சென்று, காள மேக புலவரை சென்று அடைந்தது.

     காள மேக புலவரை பண்டைக்கால சாரு நிவேதிதா என கருதுகிறேன் என நிர்மல் பேச்சு வாக்கில் சொன்னார். “ அட ,, சுவையான பார்வையாக இருக்கிறதே.. எப்படி இதை சொல்கிறீர்கள் “ என்றேன்.

விளக்கினார்..

அவருடன் பேசியதில் இருந்து..

************************************************** me:  பாஸ்.. என்ன செய்றீங்க? 

 Nirmal:   sunday enjoying

 me:  how u spend sundays?
 Nirmal:  actually today is my night shift, whole family is sleeping I woke up went for outside for a Tea, walking and now in home
 me:  superb
 Nirmal:   நீங்க என்ன செய்வீங்க
 me: சீக்கிரமே எழுந்து ஞாயிற்று கிழமையை முழுதாக அனுபவிக்க எனக்கு பிடிக்கும். இன்றும் அப்படித்தான். சீக்கிரமே எழுந்து , ஒரு படம் பார்த்தேன் ( inglorious basterds) . இப்ப படிச்சிக்கிட்டு இருக்கேன் 
 Nirmal:  oh good boss have u hear abt காளமேக புலவர்
 me:   ஓரளவு அவர் பாடல்கள் படிச்சு இருக்கேன்  பாஸ். 

 தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி


இதை மறக்க முடியுமா? 

 Nirmal:  சூப்பர் பாஸ்

 me:  ஃபேஸ்புக்ல அவரைப்பற்றி சொல்லி இருந்தீங்க... நல்லா இருந்துச்சு

 Nirmal:  அவர்தான் பண்டைய சாருன்னு நினைக்கிறேன்.கலக்கல் பாஸ்.பயங்கரமான வித்தியாசமான் ஆள் போல

 me:  பண்டைய சாருவா ? சாருவையும் அவரையும் எப்படி ஒப்பிடுறீங்க? 


 Nirmal:  not like other poems, his is very postmodern in approach a kind of satire, black humor and all kinds


 me:  ஓலை சுவடி கவிஞன் , கணினி யுகத்திலும் பேசப்படுவது சூப்பர். அதே போல சாருவும் காலம் கடந்து பேசப்படுவார்

 Nirmal:  yes

 me:  சீரோ டிகிரி வந்த போது , யாருக்கும் புரியவில்லை... இன்றுதான் அதிகம் பேச படுகிறது

 Nirmal:  he had sang many poem abt prostitute equal to he wrote poem abt GOd
 me:   அவர் மேல் உங்களுக்கு எப்படி ஆர்வம் ? 


Nirmal:  I could not understand but trying to understand .shankar only told me abt this he knows many song by heart boss
 me:  சங்கரின் தமிழ் ஆர்வததை நான் ஒரு முறை உணர்ந்து இருக்கிறேன்.

 Nirmal:  so for he is one having Pleasure of text in old tamil செய்யுள்


 me:  பாஸ்.. நீங்க இந்த பாட்டை சொல்றீங்கணு நினைக்கிறேன். 


கட்டி தளுவுவதால் கால் சேர ஏறுவதால்
எட்டி பன்னாடை இழுத்ததால் -முட்ட போய்
ஆசைவாய் கள்ளை அருந்துதலால்  அப்பனையும்
வேசையென விரைந்து


 Nirmal:  இதையெல்லாம் நம்ம பாடத்தில சேர்க்கவில்லை
பனையும் - வேசியும் - சூப்பர். 

me hmmmmm
தமிழ் ஓர் அழகான மொழி
 Nirmal:  யெஸ் அதை பரீட்சித்து பார்க்காது ,  அதிகம் புனித படுத்தி, ஒதுக்கி வைத்து விட்டோம். 

 me:  ஆமா . பல்வேறு சாத்தியங்களை முயற்சித்து பார்க்க வேண்டும்
 Nirmal:  ஆமா . மொழி ஒரு கருவி அதனுள் உணர்வை கலந்து வைத்து விட்டோம், இப்போது கருவியை சுழற்றவும் பயம், உறையில் வைக்கவும் பயம், எங்கோ ஒரு இடத்தில் வைத்துவிட்டு அதை பற்றி பேச ஆசை.
பேச மட்டும்தான் ஆசை

 me:  ஆமா. 
கொஞ்சம் கொஞ்சமாக சம்ஸ்கிருதம் போல , மக்களை விட்டு விலகி விடும் போல.Nirmal:  ஆமாம் . 98% பேர் கலைஞர்தான் தமிழை வாழ வைக்கிறார்னு நம்புகிறார்கள்
 me:  ஹா ஹா. சினிமாவை கமல்தான் வாழ வைப்பதாக சிலர் நினைப்பது போல. சரி பாஸ். சாருவையும் , காளமேக புலவரையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் ? 

Nirmal:  வாசகனுக்கு சவால் பாணியிலான எழுத்து , கிண்டல் , நகைச்சுவை, ஆழமான கருத்துகளை எளிதான வாக்கியங்களில் ஒளித்து வைக்கும் குறும்பு , காமத்தையும் கடவுளையும் உணர்ந்து எழுதுதல் என பல ஒற்றுமைகளை சொல்லலாம்.

ஒரு நகைச்சுவை பாடலை பாருங்கள்.

காளமேகம் ஒரு முறை மோர் கேட்டார். அவருக்கு கிடைத்ததோ , கலப்பட மோர். ஒரே தண்ணியாக இருந்தது. அதை கிண்டல் செய்து இப்படி பாடினார். 

கார்' என்று பேர் படைத்தாய்
ககனத்து உறும்போது
'
நீர்' என்று பேர் படைத்தாய்
கொடுந்தரையில் வந்ததற்பின்
வார் சடை மென்கூந்தல் 
பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய்
 முப்பேரும் பெற்றாயே!!!

இது எப்படி இருக்கு ? 
 S

  me:  சூப்பர்
கார் - நீர் - மோர்
ஆயச்சி முலம் தண்ணீர் முப்பேரு பெறுகிறது
   வானத்தில் இருந்தால் மேகம். தரையில் விழுந்தால் நீர்.. உன் பானைக்கு வது விட்டால் மோர்
ஆஹா
செம கிண்டல்

 Nirmal:  கலப்படம் அப்பேவே இருந்திருக்கு
 me:  இப்படி எல்லாம் அந்த பாடல் யோசிக்க வைக்கிறதே. 
 Nirmal:  யெஸ்
 me:  pleasure of text என்பது இதுதானா? 
 Nirmal:  யெஸ்
 me:  wat people like கமல் ஹாசன்  doing is , text for pleasure

 Nirmal:  இப்படி தமிழ் சொல்லிகொடுத்தால்தான் இனி பிள்ளைகள் படிப்பார்கள். இல்லை தமிழ் ஒரு சீரியஸான் மேட்டர்னு அவன் அவன் ஜகா வாங்கிறுவான்

me : இந்த இனிமையான தமிழுக்காகத்தான் அவரை சாருவுடன் ஒப்பிடுகிறீர்களா? 


 Nirmal:  அது மட்டும் இல்லை . எக்சைல் நாவலில் ஐயப்பன் பாட்டு போன்ற சில விஷயங்களை புரிந்து கொள்ளாமல் , சிலர் கிண்டல் அடித்தார்கள். புரிந்து கொண்டவர்கள் மட்டுமே அதன் ஆழத்தை உணர முடிந்தது. அதே போல , காள மேகத்தையும் மேலோட்டமாக பார்த்தால் புரியாது. ஆழ்ந்த வாசிப்பை கோருபவை அவர் எழுத்துகள்.

இதை பாருங்கள் . 


 பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே; மானே! கேள்!
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
கண்டதுண்டு; கேட்டதில்லை காண்!

பூனைக்கு ஆறு கால் என்கிறார் -- எப்படி?

me interesting boss. எப்படி?
 Nirmal:   கொஞ்சம் ஆழ்ந்து பாருங்க. அது பூனைக்கு அல்ல,,, பூ நக்கி- அதாவது தேனி
  me  oh super
  Nirmal:  தேனிக்கு ஆறு கால். கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு சரியா வருதா? 
புள் இனம் - பறவைகள்

 me:  9 கால் என்கிறார்..எப்படி?
பறவைகளுக்கு 9கால்... எப்படி ?
 Nirmal:  ஆமாம். 9 x 1/4

 =2 1/4
இரண்டே கால்


me ஒக்கமக்கா
  நிர்மல்  ஹா ஹா
he has written poems for current age not for ancient age

me  யானை , 1/4*17= 41/4 நாலே கால்.   wow

 நிர்மல் : அடுத்த வரிகளை பாருங்க . 


me : முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு;
        கண்டதுண்டுகேட்டதில்லை காண்

 முண்டகம் : கண்டங்கத்திரி செடி. அது நீல கலரில் பூக்கும். இது சாதாரணமான விஷ்யம் . இதை ஏன் பாடி இருக்கிறார். 


  நிர்மல்  சிவனின் தாமரை போன்ற முகத்தில், நீலம் போல சக்தி கல்ந்து , நீலமாக முகம் காட்சி அளிக்கிறது.இந்த காட்சியை அனுபவத்துதான் உணர முடியும். என சிலர் அர்ததம் சொல்கிறார்கள்.
ஆனால் வேறு அர்ததமும் இருக்க கூடும்
யோசியுங்க. 


me:  பூமியில் பூக்கும் தாமரை- வானின் நீலம்
இரண்டையும் இணைத்து ஏதோ சொல்கிறார்
இதை அனுபவிக்கத்தான் முடியும் , யார் சொல்லியும் தெரிந்து கொள்ள முடியாது என்கிறார்

 Nirmal:  mmmmmm

 me:  முண்டகம் நீல கலரில் பூப்பதை பார்த்து இருக்கிறேன். கேட்டதில்லை- இப்படியா பாடி இருப்பார்?
 Nirmal:  நோ


 me: முண்டகம்.  இதை முகம் என கொள்ளலாம் ..அல்லது 

தாமரை பூக்க்கூடிய நீர் என கருதலாம்... பூமியில் இருக்கும் நீரில் , வானின் நீலம் தெரிவது போல, எனக்குள் இறை காட்சியை காண்டேன். இந்த அனுபவத்தை சொல்லி புரிய வைக்க முடியாது என்பது ஓர் அர்த்தம்
 Nirmal:  இறை?

 me:  என் இருப்பை சார்ந்துதானே , பிரபஞ்சம் , இறை எல்லாம்... என் இருப்பு இல்லாத நிலையில் பிரபஞ்சம் என்னை பொருத்தவரை இல்லைதானே

எனவே இது எல்லாவற்றையும் என்னில்தானே உணர முடியும்
வானம் பெரிதுதான்.ஆனால் அதை ஒரு சிறு தேக்கத்தில் பார்க்க முட்யுமே.

அதே போல பிரபஞ்சம் , இறை என்பதெல்லாம் பெரிதுதான்... ஆனால் இதை எல்லாம் எனது existence வைத்தே புரிந்து கொள்ள முடியும்

 Nirmal:  or I dont need to read or hear from some one abt this, It is experience which I like

 me:  ஹ்ம்ம்ம்
ஆமா Nirmal:  பூநக்கி ஆறுகால்; புள்இனத்துக்கு ஒன்பதுகால்;
ஆனைக்கு கால் பதினேழ் ஆனதே;  - இவைகளை பற்றி கேட்டதுண்டு


மானே! கேள்!
 
தாமரை நீரில் விழும் வானத்தின் பிம்பத்தை  நான் பார்த்து ரசிக்கிறேன்  யாரோ சொல்ல்க் கேட்டு அல்ல.
 me:  hmmm
how it relate to first lines

 Nirmal:  yes how ?

பாஸ்
I got it
the second line ends with கேள்
last line ends with கான்
கேள் = படி
காண் - அனுபவி
 me:  wow

 Nirmal:  சூத்திரம் படி இயற்க்கையை வாழ்வை அனுபவி

me:  superb

 Nirmal:  கலக்கல் பாஸ் எனக்கு புல்லரிக்குது
ஓஓஓஓஓஓஓ ந்னு கத்தனுப்போல் இருல்க்கு
அய்யோ சுப்பர்
 me:  exclent deconstruction boss
 S
 Nirmal:  சூரியன் கிழேக்கே உதிக்கும் என பாடமாக்கலாம். ஆனால் அதை கண்டிப்பா 

ரசிக்கவும் செய்யனும்


**************************************************************
  

Thursday, August 23, 2012

பதிவர் சந்திப்பும் மதுபான சர்ச்சையும் - என் நிலைப்பாடு

 நன்மைக்கும் , தீமைக்கும் இடையே தகராறு ஏற்பட்டால் , அதில் சிக்கலே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு நன்மையை ஆதரித்து விடலாம். ஆனால் நன்மைக்கும் , நன்மைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால்தான் சிக்கல்.

சென்னையில் பதிவர் சந்திப்பு என்பது நல்ல விஷயம். ஆரோக்கியமானதும் கூட. இப்படி ஒரு கூட்டம் நடக்க வேண்டும்,. ஓர் அமைப்பு உருவாக வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேற இருக்கிறது. இளைஞர்களும், சீனியர்களும் இணைந்து செயல்படுவதை பார்க்கையில் சந்தோஷமான இருக்கிறது.

ஒரு நல்ல நோக்கத்தோடு மதுவை எதிர்ப்பது என்பது நல்ல விஷ்யம். எத்தனையோ குடும்பங்கள் சீரழிகின்றன. ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள். இத்தகைய மதுவை சிலர் எதிர்ப்பதும் ஆரோக்கியமானதுதான்.

ஆனால் இந்த நல்ல விஷ்யங்களுக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

உண்மையில் இரு தரப்புமே , ஒருவரை ஒருவர் ஏற்க கூடியவர்கள்தான். ஆனால் சொன்ன விதத்தில் , புரிந்து கொண்ட விதத்தில் சில தவறுகள் இருக்க கூடும்.

பதிவர் சந்திப்பினால் ஆதாயம் அடைய போவது டாஸ்மாக் மட்டுமே என்பது  போல ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார் . இதனால் சிலருக்கு மன கசப்பு ஏற்பட்டு சர்ச்சை ஏற்பட்டது.

அவர் சொன்ன அந்த கருத்து சற்று அதீதமானது . குடிக்க வேண்டும் என ஒருவர் விரும்பினால் , பதிவர் சந்திப்புக்கு வந்துதான் குடிக்க வேண்டும் என்பதில்லையே. அதற்கென ஆயிரம் இடங்கள் இருக்கின்றனவே. நேரம் செலவழித்து பதிவர் சந்திப்புக்கு வந்துதான் குடிக்க வேண்டும் என்பது இல்லையே.

அவர் சொல்ல வந்த கருத்து வேறு. சற்று மாற்றி சொல்லி விட்டார்.
மற்றவர்களுக்கு கஷ்டம் தராத பட்சத்தில் , குடிப்பது என்பது ஒருவரது தனிப்பட்ட விஷ்யம்.
இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் இதில் பெருமை படுவதற்கும் எதுவும் இல்லை. தண்ணி அடிப்பதை கிளுகிளுப்பு கலந்த பெருமிதத்துடன் அந்த காலத்தில் பேசிக்கொள்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அலுவல் ரீதியாகவே சில சமயம் குடிக்க வேண்டி இருக்கிறது. எல்லா இடங்களிலும் மது சுலபமாக கிடைக்கிறது. எனவே மது அருந்துவதை வீர செயலாக பேசுவதில் அர்த்தம் இல்லை என அவர் சொல்ல விரும்பி இருக்கலாம்.

ஆனால் கொஞ்சம் அதீதமாக பதிவர் சந்திப்பு நடத்துவதே தண்ணி அடிப்பதற்குதான் என சொல்லி இருக்க வேண்டாம் .  பதிவர் சந்திப்பில் முக்கிய பங்காற்றும் பலர் குடி பழக்கத்துக்கு கடும் எதிர்ப்பாளர்கள்.

உதாரணம் காட்டுவதற்காக சிலரை மட்டும் சுட்டி காட்டி இருக்கவும் வேண்டாம். அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் புரிந்து கொள்ள கூடியதே.

பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டவர்களுக்கு தெரியும். குடி காரணமாக பிரச்சினைகள் வந்தது இல்லை.

டீ , காபி சாப்பிடுவது போல மது அருந்துவது ஒரு சாதாரணமான செயல். இதற்கு அதீத முக்கியத்தும் கொடுப்பதால் தான் , அந்த நண்பர் ஒரு தவறான நிலைப்பாடு எடுப்பதற்கு காரணம் என்பதும் புரிந்து கொள்ள கூடியதே..

என்னை பொருத்தவரை பதிவர் சந்திப்பையும் ஆதரிக்கிறேன் . மது அருந்துவதற்கு எதிரான அந்த நண்பரையும் நல் எண்ணத்தையும் ஆதரிக்கிறேன்.Saturday, August 18, 2012

ரா கி ரங்கராஜன் - என் நிறைவேறாத கனவு

சில நாட்களுக்கு முன் “ நான் கிருஷ்ணதேவராயன் “ நாவல் படித்தேன்.. மிகவும் பிடித்து இருந்தது. மேலும் பலருக்கும் பரிந்துரை செய்தேன். அவரை சந்த்தித்து பாராட்ட நினைத்தேன்.


அவர் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறார் என கேள்விப்பட்டதும், சரி, அவர் குணம் அடைந்ததும் சந்திக்கலாம் என விட்டு விட்டேன்.இந்த நிலையில் அவர் காலமான செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

” நான் கிருஷ்ணதேவரயான் “ நாவலை நான் பரிந்துரை செய்து , அவரை படித்த என் நண்பர்கள் எல்லோருமே அவர் எழுத்தின் மேல் காதலில் விழுந்து விட்டார்கள் . அவரது வேறு புத்தகங்கள் என்ன படிக்கலாம் என கேட்க ஆரம்பித்தனர்.

என்னை பொறுத்தவரை, அவர் எழுத்தை படித்துதான் வளர்ந்தேன் என்றே சொல்ல வேண்டும். சின்ன வயதில் இருந்தே படிது வருகிறேன். புரிந்தும் , புரியாமலும் சின்ன வயதில் அவரது பட்டாம்பூச்சியை படித்தது இன்னும் நினைவு இருக்கிறது. அந்த விபரம் புரியாத வயதில் அந்த எழுத்து ஏற்படுத்திய மனச்சித்திரங்கள் , அதை பற்றி பெரியவர்கள் பேசும்போது ஆவலாக கேட்டு ரசித்தது , எனக்கும் அந்த நாவல் புரிந்து விட்டதாக எண்ணிக்கொண்டது எல்லாம் இனிய நினைவுகளாக இருக்கின்றன,.

அதன் பிறகு விபரம் தெரிந்த வயதில் படிக்கும்போதுதான் அவரது மேதமையை புரிந்து கொள்ள முடிந்தது. பல பெயர்களில் , பல விதங்களில் எழுதியவர் அவர். மொழி பெயர்ப்பில் புதிய டிரெண்டையே உருவாக்கியவர் அவர். பிற்காலத்தில் நான் ஆங்கில புத்தகங்களை தேடிப்படிக்க
எப்படி கதை எழுதுவது என்று அந்த காலத்தில் ஒரு தொடர் எழுதினார். அதன் பின் பயிற்சியும் நடத்தினார். அதில் முதல் மாணவராக குமுதம் ஆசிரியர் எஸ் ஏ பி சேர்ந்தாராம்.

லைட்ஸ் ஆன் என்ற பெயரில் சினிமா செய்திகள் எழுதினார். செய்திக்கு பின் அவர் அளிக்கும் ஆங்கில ப்ஞ்ச் நச் என இருக்கும்.

உதாரணம்
தளபதி என்றதும் நினைவு வருகிறது.
குட்லக் தியேட்டரில் இரண்டு பிரிவியூ தியேட்டர்கள் இருக்கின்றன. இரண்டிலும் ஒரே சமயத்தில் தளபதி படம் போட்டார்கள். அப்படியும் கூட்டம் தாங்காமல் நடுநடுவே நாற்காலிகளைப் போட்டு சமாளிக்க நேரிட்டது. ஜி.வி.தான் வரவேற்றுப் பேசினார். மணிரத்தினம்? எங்கேயும் காணோம். Two is company, three is crowd.

கட்டுரைகள் , சிறுகதை , நாவல் என அவர் தொடாத விஷயமே இல்லை.  நான் அண்ணா நகரில் இருந்தபோது , அண்ணா நகர் டைம்சில் அவர் கட்டுரை இருப்பதை தற்செயலாக ஒரு நாள் கவனித்தேன், அதன் பின் , அண்ணா நகர் டைம்ஸ் தேடி படிக்க ஆரம்பித்தேன் , அவர் கட்டுரைக்காக. சில சமயங்களில்  நான் இல்லாத நேரத்தில் , அண்ணா நகர் டைம்சை போட்டு விட்டு சென்று விடுவார்கள்.  அது எங்கே என தேடி படிப்பேன் . அதன் பின் அந்த கட்டுரைகள் புத்தகமாகவும் வந்தது.

அவன் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை முக்கியமான ஒரு நூல் என கருதுகிறேன். பல விஷ்யங்களைப் பற்றி அதில் சொல்லி இருப்பார்.

குமுதத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் துக்ளக், விகடன் போன்ற பத்திரிக்கைகளிலும் எழுதி இருக்கிறார். குமுதத்தில் பணியாற்றாமல், முழு நேர எழுத்தாளராக இருந்து இருந்தால், எழுத்து துறையில் மேலும் பல முத்திரைகளை பதித்து இருப்பார் என கருதுகிறேன்.அவரை சந்த்தித்து வணங்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேறாமலேயே போய் விட்டது என்பது எனக்கு பெரிய குறையாகவே என்றும் இருக்கும்.

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் 

Friday, August 17, 2012

ஆசையை வெல்ல ஆசைப் படலாமா - ஜெ கிருஷ்ண மூர்த்திஅனுபவம் என்பது ஒன்று. அனுபவித்தல் என்பது வேறொன்று. பழைய அனுபவம் என்பது தற்போதைய அனுபவித்தலுக்கு தடையாக இருக்கும். அனுபவம் மகிழ்ச்சியானதா , துயரமானதா என்பது முக்கியம் அன்று. அது எதுவாக இருந்தாலும் , புதிய அனுபவங்கள் மலர்வதை அது தடுக்கும். அனுபவம் என்பது காலம் சார்ந்தது. இறந்த காலத்தில் இருக்க கூடியது. வெறும்  நினைவுகளாக தேங்கி இருக்க கூடியது.


வாழ்க்கை என்பது நிகழ்காலம். இதற்கு அனுபவத்தின் உதவி தேவை இல்லை. பழைய அனுபவங்களின் சுமை நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும். எனவே அனுபவித்தல் என்ற நிகழ்ச்சி பழைய அனுபவங்களே மீண்டும் பெறுதலாகவே அமைந்து விடக்கூடும்.

மனம் என்பது பழைய அனுபவங்களால் ஆனது. இது ஒருபோதும் புதிய  அனுபவத்தை பெறும் தகுதியை பெறாது. இது அனுபவிக்கும் அனைத்துமே பழைய அனுபவங்களின் தொடர்ச்சி மட்டுமே .

தொடர் நிகழ்வுகளை மட்டுமே மனம் அறியும். இந்த தொடர்ச்சி நீடிக்கும் வரை , இதனால் புதிதாக எதையும் அனுபவிக்க இயலாது. பழைய அனுபவங்களின் தொடர்ச்சி நின்றால் மட்டுமே புதிதாக அனுபவித்தல் சாத்தியம் ஆகும்.


 மனம் தான் ஏற்கனவே தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் தான் உருவாக்கும் பிம்பங்களையே மீண்டும் மீண்டும் காண விழையும். தெரியாத புதிய விஷ்யம் ஒன்றை மனம் உணர இயலாது. அனுபவத்தின் வெளிப்பாடுதான் எண்ணங்கள். மனதில் சேகரமாகி இருக்கும் நினைவுகள்தான் எண்ணங்கள் ஆகின்றன. எண்ணங்கள் இருக்கும் வரை புதிய அனுபவங்கள் நிகழாது. எண்ணங்களை நிறுத்துவதற்கு எந்த வழி முறைகளோ , யுக்திகளோ இல்லை. எண்ணங்களை அடக்க முயலும் முயற்சியே எண்ணங்களை மேலும் வலுவாக்கி விடும்.
ஆசையை வெல்ல வேண்டும் என முயல்வதும் கூட ஒரு வகை ஆசைதான். இதில் இருந்து விடுபட வேண்டும். புதிதாக ஏதேனும் அனுபவிக்க நேர்ந்தால்கூட , அடையும் கூட நினைவில் சேகரித்து , ஓர் அனுபவமாக மாற்றி கொள்ள கூடிய தன்மை மனதுக்கு உண்டு. அனுபவம் அதை அனுபவிப்பவன் என்ற இரட்டை தன்மையை மனம் உருவாக்குகிறது.

உண்மையான அனுபவித்தல் நிகழும்போது , அனுபவமோ அனுபவிப்பவனோ இருப்பதில்லை.  நான் இந்த நட்சத்திரத்தை பார்க்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் வெறுமனே நட்சத்திரத்தை பார்க்கையில், அந்த ந்டசத்திரம் அழகானது என மனதில் பதிய வைக்கும் செயல் நடைபெறாது. அங்கு பார்ப்பவனும் இல்லை. பார்த்த அனுபவமும் இல்லை. பார்க்கும் நிகழ்ச்சி மட்டும் புத்தம் புதிதாக நிகழ்கிறது. எண்ணம் அங்கு இருப்பதில்லை. இருத்தல் மட்டும் நிகழ்கிறது. இந்த நிலைட தியானம் மூலமோ , முயற்சியாலோ அடைய முடியாது.

  நான் தியானம் செய்கிறேன் என்ற எண்ணமே பெரிய இடைஞ்சல். செயலை செய்வோன் மறைந்து போய், செயல் மட்டுமே நடக்கும் நிலையில்தான் எண்ணம் மறையும் , இருத்தல் மட்டுமே நிகழும். இதுதான் காலம் கடந்த நிலை.
Thursday, August 16, 2012

காப்பி அடித்தல் கலையா ? என் பெயர் சிவப்பு- வாசிப்பு அனுபவம்


    பொழுது போக்குகாக பல ஆங்கில நாவல்கள் படித்தாலும் , என்னை முதன் முதலாக ஈர்த்த நாவல்கள் அயன் ராண்ட்  நாவல்கள்தான் . அந்த அளவுக்கு வலிமையான எழுத்து அவருடையது. ஆனால் அவர் எழுத்து , வெறும் பிரச்சாரமாக நின்று விட்டதே என்ற ஆதங்கமும் இருந்தது.

நாம் என்பது பொய்யானது , நான் என்பதே நிஜம் என்ற கருத்தை வலியுறுத்தியே அவர் நாவல்கள் இருக்கும். கதா  நாயகன் அவர் கருத்தை வலியுறுத்தும் நல்லவனாக இருப்பான் . எதிர் கருத்து கொண்டவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். இந்த டெம்ப்ளேட்டில் அவர் நாவல்கள் இருக்கும்.

 நான் , நாவல் என்ற முரண்பாட்டு பிரச்சினையை , இவர் சார்பு ஏதும் எடுக்காமல் அலசி இருந்தால் , அருமையாக இருந்து இருக்கும் என அவ்வப்போது நினைப்பதுனடு. அப்படி ஒரு நாவல் வந்தால் படிக்க ஆவலாக இருந்தேன் .

    வேறொரு கதை அம்சம் கொண்ட இன்னொரு நாவலில் , இந்த பிரச்சினை பல மடங்கு அருமையாக , ஆழமாக , நடு நிலையாக  அலசப்பட்டு இருப்பதை , சமீபத்தில் படித்து ஆச்சர்யமும் , மகிழ்ச்சியும்  அடைந்தேன். ஆனால் இந்த பிரச்சினை நாவலின் மைய இழை அல்ல.. தத்துவம் மதம், காதல் , கலை , அதிகாரம்  , மதம்  என பலவற்றை தொட்டு செல்கிறது நாவல்.

 அந்த நாவல்தான் என் பெயர் சிவப்பு.

  துருக்கி நாவல். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு , ஆங்கிலம் வழியாக தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    முதல் பந்திலேயே சிக்சர் அடித்து பேட்டிங்கை ஆரம்பிப்பது போல அதிரடியாக நாவல் தொடங்குகிறது. ஒரு பிரேதம் தன் கதையை சொல்வது போல கதை தொடங்குகிறது. ஆரம்பமே ஆவலை தூண்டுவது போல இருப்பதால், விறுவிறுப்பாக படிக்க ஆரம்பிக்கிறோம். வசீகரன் எஃபெண்டி என்ற நுண்ணோவியன் ஏதோ சில காரணங்களாக கொல்லப்பட்டு இருக்கிறான என்பது தெரிகிறது. கொன்றவன் வில்லனாக இருப்பான் என நினைத்து படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் விரைவிலேயே நம் எண்ணம் தவறு என நம் தோல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நம் வாசிப்பு தொடங்குகிறது.

 கொலையுண்டவன் முதல் அத்தியாயத்தில் பேசுகிறான் என்றால் கொலைகாரன் தன் பார்வையில் நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறான். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொருவர் பார்வையில் நக்ர்வதால் , நிகழ்ச்சிகளைப் பற்றி முழுமையான பார்வை கிடைக்கிறது.பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதை நிகழ்கிறது.

 இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு ,  ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவரும்  சுல்தான் ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக ,  திருவிழா மலர்களையும் , தன் பெருமையை வெனிசீய மன்னருக்கு எடுத்தியம்பும் வகையில் , தன் உருவப்படத்தையும்  உருவாக்க உத்தரவிடுகிறார்.  இந்த பணி ரகசியமாக நடக்கிறது .

எனிஷ்டே எஃபெண்டி தலைமையில் தலை சிறந்த ஓவியர் குழு இந்த பணியை மேற்கொள்கிறது . நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்கள்  இந்த குழுவில் உள்ளனர்.


 இந்த  “வசீகரன்” தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால்  முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டவன் . அவனை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இது ஒரு புறம்.

கருப்பு என்ற ஓவியனின் மாமாதான் இந்த எனிஷ்டே எஃபெண்டி. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கருப்பு இஸ்தான்புல் வருகிறான்.  மாமா மகளான ஷெகூரேவை காதலித்து , அந்த காதலில் தோல்வி அடைந்த வரலாறு இவனுக்கு உண்டு. இவன் ஊருக்கு திரும்பி வரும்போது , அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள்.  போருக்கு சென்ற அவள் கணவன் திரும்பி வரவில்லை. இறந்து விட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பது தெரியாததால் அவள் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது. அவள் கணவன் இறந்து விட்டான் என்பது உறுதியானால் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அந்த மரணம் உறுதியாக தெரியவில்லை. கணவனின் தம்பிக்கு அவள் மேல் ஆசை.

இது ஒரு கதை.


இதற்கிடையில் சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது. பாரம்பரிய இஸ்லாம் மதத்துக்கு எதிரான போக்கை நுஸ்ரத் ஹோஜா போன்றோர் கண்டிக்கிறார்கள். இதை மத விரோதம் என்கிறார்கள். சிலரோ அவர்களையே கிண்டல் செய்கிறார்கள். இந்த போக்கு ஓவியத்திலும் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய பாணிக்கும் , வெளி கலாச்சார பாணியிலான நவீன ஓவியத்துக்கும் இடையே மோதல் நிலவுகிறது.

   இந்த நிலையில் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த நிலையில், கணவனின் தம்பியுடன் தான் அவர் மகள் சென்றாக வேண்டும் . இதை தவிர்க்க கருப்பு , மாமா மகளை மணந்து கொள்கிறான். அவன் தான் , மாமா மகளை மணக்கும் பொருட்டு ,  எனிஷ்டே எஃபெண்டியை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

      உண்மையான கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டிய நெருக்கடி கருப்பு ஏற்படுகிறது.

   தன் உத்தரவை செயல்படுத்தி வந்த ஓவியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது சுல்தானுக்கு கோபம் ஏற்படுத்துகிறது. மூன்று நாட்களுக்குள் கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டும் என சுல்தான் உத்தரவிடுகிறார் .

    தலைமை குரு உதவியுடன்  கொலைகாரனை கண்டு பிடிக்க முயல்கிறான் கருப்பு.

    கொலைகாரன் யார் என்பதை விட கொலைக்கான காரணமே முக்கியம் என நமக்கு தோன்றி விடுகிறது. அதுதான் நாவலின் வெற்றி. இல்லையேல் துப்பறியும் நாவலாக இது நின்று போய் இருக்கும். கொலைக்கான காரணம் நியாயமா இல்லையா என்பதும் , கொலைகாரன் வில்லனா எனபதும் வேறு விஷயம்.

  இரு தரப்பு கருத்து மோதல்கள்தான் கவனத்துக்கு உரியது.

   திருக்குறளை அனைவரும் படிக்கிறோம். ஆனால் அதை எழுதியவர் பெயர் யாருக்கேனும் தெரியுமா ? திருவள்ளுவர் என்பதெல்லாம் பிற்காலத்தில் நாமாக வைத்த பெயர்தான். காக்கை பாடினியார்  , செம்புலப் பெயல் நீரார் என்பதெல்லாம் அவர்கள் பாடிய பாடலை வைத்து நாம் வைத்த பெயர்கள்தான். தம் படைப்புகளே முக்கியம் , பெயர்கள் அல்ல எனப்தே அவர்கள் எண்ணமாக இருந்து இருக்கிறது.

     இந்த நாவல் இதைப்பற்றி பேசுகிறது

  எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும்  


       நுண்ணோவியம் என்ற கலையில் தனி மனித சாதனை முக்கியம் இல்லை. ஒட்டு மொத்தமான கலைப் படைப்பே முக்கியம். நான் என்ற சிந்தனையே , சாத்தானின் தூண்டுதல்தான் .  அதே போல , உலகில் நாம் காணும் விஷ்யங்கள் எந்த முக்கியத்துவமும் அற்றவை. சாஸ்வதம் அற்றவை. அதை அப்படியே தத்ரூபமாக வரைவதில் எந்த பெருமையும் இல்லை என்பது அவர்கள் சிந்தனை போக்கு.

  இதற்கு எதிரான வெளி தேசத்து சிந்தனைகளுடன் ஏற்படும் முரண்களை நாவல் அட்டகாசமாக சொல்கிறது.

    எல்லா தரப்பு கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


  “ ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின்  முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.”

மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு  விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது

இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா? இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா? முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா?‘தீர்ப்பு தினத்தன்று ஓவியர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பார் என்று நமது இறைத் தூதர் எச்சரித்திருப்பதை அவர்கள் அறிவர்.” 

“ஓவியர்களை அல்ல; பிரதிமைகளைச் செய்பவர்களை. மேலும் இது குர் ஆனில் இருப்பதல்ல; புக்காரியில் இருப்பது” 


”ஓவியம் என்பது கதையின் நீட்சி அல்ல. தன்னளவில் அது தனிப் பொருள்”

”காதல் நம்மை முட்டாள் ஆக்குகிறதா அல்லது முட்டாள்கள் மட்டுமே காதலில் விழுகிறார்களா ?”

”நான் மரமாக இருக்க விரும்பவில்லை. அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்”

”நிறம் என்பது கண்ணின் தொடுகை”என்பது போன்ற பல வரிகளை ரசித்து படிக்கலாம்.

ஓவியம் பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விவரித்து எழுதி இருக்கிறார் கதாசிரியர் .

கூர்ந்து படித்தால் , இது ஓவியத்துக்கு மட்டும் அன்றி எல்லா கலைகளுக்கும் பொருந்தும் என்பது புரியும்.


 யதார்த்தமாக படம் எடுக்கிறேன் என சிலர் டாக்குமெண்ட்ரி போல படம் எடுக்கிறார்கள். இதில் கலை எங்கே இருக்கிறது என தேட வேண்டி இருக்கிறது இல்லையா ?

   கமல் ஹாசன் போன்றவர்கள் , வெளி நாட்டு படங்களை போலி செய்வதையே தம் சாதனையாக நினைக்கிறார்கள்.. இதில் கலை எங்கே இருக்கிறது ? கலையை தம் மகிழ்ச்சிக்கு செய்யாமல் , பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் நோக்கத்தில் , மேக் அப் போடுவது , கிராபிக்ஸ் என்பதையே நடிப்பு என வைத்து ஏமாற்றுகிறார்கள்

  அதே நேரத்தில் பாதுகாப்பான வேலைகளை உதறி விட்டு, உண்மையான நல்ல படங்கள் , குறும்படங்கள் எடுத்து உரிய அங்கீகாரம் இல்லாமல் வாழும் நல்ல கலைஞர்களும் வாழ்கிறார்கள்.இங்கே முரண் வந்து விடுகிறது இல்லையா.


     ஏதோ ஒரு நூற்றாண்டியில், ஒரு குறிப்பிட்ட கலையை மட்டும் வைது எழுதப்பட்ட இந்த நாவல் , உலகளாவிய வரவேற்பு பெறுகிறது என்றால் , அதற்கு காரணம் , மேலே நான் உதாரணத்தை போல , அது எல்லா இடங்களுக்கும் ,எல்லா கலைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால்தான்..

   மொழி பெயர்ப்பாளர் குப்புசாமி சிறப்பான பணியை செய்து இருக்கிறார்.  மொழி பெயர்ப்பு என்பது சிக்கலான பணி. ஒரேயடியாக தமிழ் படுத்திவிட்டால் , மூல நூலின் சுவை போய் விடும். லேசான மொழி பெயர்ப்பு செய்தால் , கரடு முரடாக இருக்கும் .

         குப்புசாமி மிக மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.   அதேபோல ஆங்கில பெயர்ப்பும் அருமை.  நோபல் பரிசு பெற ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரு காரணம்.

 குறைகள் என எதையும் சொல்ல முடியாது.. ஆனால் என் எதிர்பார்ப்புகள் சில நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு வாசகனாக என் கருத்து  • தர்க்கா வழிபாடு, இறை நேசர்களை போற்றுவது பற்றி உண்மையிலேயே இஸ்லாம் நிலை என்ன என்பது பற்றிய ஆழமான விவாதங்கள் இல்லை
  • சீரோ டிகிரி போன்ற பின் நவீனத்துவ நாவல்களில் , நான் லீனியர் முறையை பயன்படுத்தி , சிதறுண்ட வடிவ முறையில் , நிறைய விஷ்யங்களை சொல்லி இருப்பார்கள்..  ஆனால் இந்த நாவல் லீனியர் முறையிலேயே செல்வதால் , வாசகனின் யோசிப்புக்கு அந்த அளவுக்கு பெரிய சவால் இல்லை. குறிப்பிட்ட இடப்பரப்பையும் , கால் அளவையுமே நாவலால் சொல்ல முடிகிறது.
  • கருப்பின் காதல் புரிகிறது. ஆனால் காதல் சம்பவங்களில் ரொமாண்டிக் அம்சம் குறைவே .  வெர்டிகெட் 

என் பெயர் சிவப்பு - சிறப்பு 
       எழுதியவர் - ஒரான் பாமுக்

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா