Thursday, January 13, 2011

முயல் ஆமை கதை- வித்தியாசமான நடையில் நிர்மல்

 

எல்லோருக்கும் தெரிந்த முயல் ஆமை கதையை சில எழுத்தாளர்கள் பாணியில் வெளியிட்டு இருந்தேன்..

நண்பர் நிர்மல் தன் பாணியில் அந்த கதையை எழுதி இருக்கிறார்… சில திருத்தங்களுடன் அதை இங்கு வெளியிடுகிறேன்..

படித்து பாருங்கள்…

*********************************************************************

 

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் – நிர்மல்

 

இளம்பெண்கள் நால்வர் காய்கறி கடை சென்றனர். சமையலுக்கு தேவையான காய்கறிகள் ஒவ்வொன்றாக வாங்கினர்...

”நாலு கேரட் கொடுங்க”

கடைக்காரர் தராசில் கேரட்டை வைத்து பார்த்தார்..

“ ஐந்து நிக்குதுமா. பேக் செய்யவா?”

“ நாலு போதும்,.. அஞ்சு எதுக்கு? வேஸ்ட் ஆயிடும் “

இன்னொரு பெண் குறுக்கிட்டாள்.

” பரவாயில்லைப்பா.. அந்த எக்ஸ்ட்ரா கேரட்டை சமையலுக்கு யூஸ் பண்ணிக்கலாம் “

கடைக்காரர் குழம்பினார்.. ”ஒன்றுதான் சமையலுக்கு என்றால் மற்ற நாலு எதுக்கு ?

- ஆல்வின் சொன்ன கதைகளில் ஒன்று

 

ச்சை பசேல் என்ற வயல்

அது ஒரு காரட் தோட்டம்,
வெளிகள் இல்லாமல் காவலில்லாமல் ஆடுகளுக்கு மாடுகளுக்கு எங்களுக்கு என்று தனி தனி காரட் தோட்டம் .

இந்த தோட்டம் யாருக்கு சொந்தம்.

ஆனால் எங்களுக்கு என்று ஒரு தோட்டம் .எங்கள் பசிக்கு இது உணவு, உணவு அங்கு அவரவர் உழைப்பிற்கு ஏற்றவாறு
கிடைக்கிறது.

இந்த தோட்டம் ஒன்றும் உடனடியாக வரவில்லை, பல போரட்டங்கள், சோதனைகள், பலரின் இரத்தம் சிந்தப்பட்டு உருவான தோட்டம். இதற்கு முன்பு இந்த தோட்டங்கள் மிக சிலர் கையில் இருந்தன, அவர்களது சொத்தாய் இருந்தன .

அங்கு வேலை செய்பவர்களுக்கு ஒப்பந்தத்திற்கு ஏற்ப காரட் வழங்கினார்கள் . இப்பமெல்லாம் அப்படீல்லை.

இப்போது உழைக்கமுடியாதவர்களுக்கும் உணவு கிடைகிறது.

இங்கு உழைப்பது எங்களது விருப்பமான செயலாக மாறிவிட்டது.

எங்களது தோட்டம் எங்களை நம்பியுள்ள முதியவர்கள் என முடியாதவர்களுக்காகவும் நாங்கள் உழைக்கிறோம்.

சில நூற்றாண்டுக்கு முன்பு எங்கள் முதாதையர் தங்களுக்காகவும் தங்கள்
குடும்பதினருக்காகவும் மட்டும் உழைத்தார்களாம்.அதுவும் இன்னொருவரின் தோட்டத்தில்.
நினைத்து பார்க்க கேவலமாகவும் அதிசயமாகவும் இருக்கு. சில மணி நேர உழைப்பு..
அனைவருக்கும் வேலை, நாளைக்கு தேவை என்று எதுவும் இல்லை, இந்த தோட்டத்தில் விளையும் காரட்களை சுவைத்து கொண்டிருக்கிறேன்.

அதன் சுவை, அதன் நிறம், மணம் என்று நறுகென்று கடித்தேன் அந்த காரட்டை. சுவையாய் இருந்தது வயிறும் நிறைந்தது.
காரட்டுகள் என்றாலே எனக்கு எனது கல்லூரி நண்பன் ஆல்வின், அவன்
எங்களுக்காக எழுதி கொடுக்கும் செக்ஸ் கதைகள் நினைவுக்கு வரும்.

ஆமாம் .முதன்முதலில் அவன்தான் செக்ஸ் புக்குகளை எங்களுக்கு வாங்கி வந்து கொடுத்தவன்.பின்பு என்ன நினைத்தானோ தெரியல்லை , எல மக்கா சும்மா காச கரைக்க வேண்டாம்ப்ளே, நானே எழுதிதன்றம்ப்ளே என்று அவனே எழுதி தர ஆரம்பித்தான் அந்த அசைவ கதையில் வரும் சில
சைவ காய்கறிகளில் இந்த காரட்டும் ஒன்று. அது என்னவோ தெரியலா எங்க கல்லூரி
விடுதியில் வெள்ளிகிழமையில் போடும் காரட் பொரியலை ஆல்வின் சாப்பிடுவதே இல்லை.
இந்த காரட்டை வேஸ்ட் பண்ணிட்டாங்கனு நினைப்போனோ என்னவோ.
ரகோஷம் சப்தம் அளவுக்கு மீறியதாக இருந்தது.சட்டென்று நினைவுக்கு
வந்தான்.

நினைவுக்கு வந்தது . தனது முன்பிருந்த அந்த தங்க கோப்பையை, அவன் இந்த பந்தயத்தில் வெற்றிபெற்ற ஆமைக்கு வழங்கினான்.

பகல் கனவில் மிதந்து தனது வெற்றியை பறிகொடுத்த முயல் ஏதாவது போராட்டம் அல்லது வேலைநிறுத்தம் செய்வேன் என்று தனது தோழர்களோடு ஆலோசனை செய்து கண்டன அறிக்கை விட்டுகொண்டிருந்தது.

13 comments:

 1. ஆஹா என்ன பாஸ் இது... சின்னப் பசங்க ஸ்கூல் புக்குல வர்ற முயல், ஆமை, முயலாமை கதையில கேரட் சமாச்சாரமெல்லாம் வச்சி ஒரு வழி பண்ணிட்டீங்க...

  ReplyDelete
 2. முயல் இனி போட்டிக்கே வரமாட்டுதாம்..

  இனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  நான் ஏன் பதிவெழுத வந்தேன் (தொடர் பதிவு)..

  ReplyDelete
 3. [im]http://2.bp.blogspot.com/_ILAwGTLUPnM/TF7hPSjLGII/AAAAAAAAAG0/kc--XmUjkKw/s1600/my%252B%252Bprofile.jpg[/im]

  ReplyDelete
 4. ஐயையோ கேரட் ஸ்டோரி நான் படிக்கவே இல்லை

  ReplyDelete
 5. சூப்பர் பாஸ்! காரட் பற்றிய தகவல்கள் அருமை! :-)

  ReplyDelete
 6. வித்தியாசம் என்பது மட்டும் உண்மை.மற்றது என்ன?

  ReplyDelete
 7. ஆஹா... விரைவில் சென்னைவருவேன் நண்பரே. அதில் முக்கிய அலுவல் உங்களையும் நிர்மலையும் சந்தித்துவிடுவதுதான்.

  ReplyDelete
 8. If we remove this carrot story, I think we can see communism stuff here..

  ReplyDelete
 9. கரகோஷம் சப்தம் கேட்டு நினைவுக்கு வந்து, பரிசு வழங்கியவன் அறியவில்லை முயலின் தோல்வி தற்காலிகமானது, மாறும் மாற்றம் தவிர்க்க இயலாதது
  தவிர்க்க கூடாதது என்று....
  நினைவுக்கு வந்தவன், ஏனோ முயலின் போராட்டம் வேலை நிறுத்தம் கண்டனம் என வரும்போது மறுபடியும் நினைவு இழந்துவிடுகிறான்
  முயல் ஓடுவது முயலுக்காக மட்டும் அல்ல என அறிந்தும், முயலின் செயல்களை தோல்வியின் விளைவுகளாக வர்ணிப்பதும், முயலின் போராட்டங்களை புரிந்தோ புரியகூடாது என்றோ இருப்பதை என்ன அர்த்தப்படுத்த? என்ன கட்டவிழ்க்க?
  நிர்மல், தங்கள் வாசிப்பின் தாக்கத்தை, தங்கள் பதிவில் உணரமுடிகிறது. தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற முடிச்சை என்னால் கட்டவிழ்க்க முடியவில்லை

  தொடர வாழ்த்துக்களுடன்

  நா.நாராயணன்

  ReplyDelete
 10. "தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்ற முடிச்சை என்னால் கட்டவிழ்க்க முடியவில்லை "

  தலைப்பு அவரிட்டது அல்ல..

  ReplyDelete
 11. ஆஹா... விரைவில் சென்னைவருவேன் நண்பரே. அதில் முக்கிய அலுவல் உங்களையும் நிர்மலையும் சந்தித்துவிடுவதுதான்.


  ஈகர் டு மீட் யூ

  ReplyDelete
 12. If we remove this carrot story, I think we can see communism stuff here..

  யெஸ்

  ReplyDelete
 13. ஐயையோ கேரட் ஸ்டோரி நான் படிக்கவே இல்லை

  நானும்தான்

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா