Friday, October 7, 2011

சில ” உண்மைகள் “ - வைரமுத்து, கலைஞர், மார்க்கோனி


பதிவுக்குள் நுழையும் முன்பு வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்த்து விடலாம். வரலாறு மிகவும் முக்கியமாயிற்றே..

1. ரேடியோவை கண்டு பிடித்தவர் மார்க்கோனி.

2 தி மு க கொடியான  கருப்பு சிவப்பை , கட்சி தொடங்கியபோது  அண்ணா அறிமுகப்படுத்த நினைத்தார். சிவப்பு வரைய வண்ணம் இல்லை... அப்போது இளைஞனாக இருந்த கலைஞர் தன் விரலில் ஊசியால் குத்தி , அந்த ரத்தத்தை கொடி வரைய கொடுத்தார்..

3 கவிபேரரசு வைரமுத்து பாடல் எழுதி முதலில் வெளிவந்த படம் நிழல்கள்

4 கலைஞர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் , அண்ணாவால் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.

5  தமிழ் அறிஞர் வ வே சு ஐயர் எதிரிகளின் பிரச்சாரத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்



இதெல்லாம் தெரிந்த விஷ்யம்தானே என்கிறீர்களா?

இது அனைத்துமே தவறு என்பதுதான் இதில் இருக்கும் மேட்டர்...

1 அந்த காலத்தில் தகவல் அனுப்பும் கருவியை கண்டு பிடிக்க பலர் முயன்றனர்... அடிப்படை உண்மைகளை எந்த தனி மனிதனும் கண்டு பிடிக்கவில்லை.. பல்ரின் கூட்டு முயற்சியே இது.. ஆனாலும்  ரேடியோவை முறைப்படி கண்டுபிடித்தவர் யார் என விசாரித்து பார்த்தால், அந்த பெருமைக்கு சொந்தக்காரர்  நிக்கோல டெஸ்லா என்பவர்தான்.. ஆனால் அந்த காலத்தில் காப்புரிமை சட்டங்கள் தெளிவாக இல்லாத்தால் , இவர் காப்புரிமை பெறவில்லை.. இதை சற்று மாற்றி பெயரை தட்டி சென்றார் மார்க்கோனி... ஆனால் அறிவியல் உலகில் மார்க்கொனியை விட டெஸ்லாவையே பெருமையாக பேசுகிறார்கள்

2 திமுக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்சியில் கலைஞர் கலந்து கொள்ளவே இல்லை என்பதே உண்மை... தி முக உதயமாகி பிரபலமடந்த போதும் கூட , அவர் அதில் பெரிய இடத்தில் இல்லை.. பிற்காலத்தில்தான் அவர் நிலை கட்சியில் உயர்ந்தது

3 வைரமுத்து பாடல் எழுதி வெளிவந்த முதல் படம் காளி.. அதில் நடித்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

4    தேர்தல் முடிந்ததும் , அண்ணா கருணா நிதிக்கு மோதிரம் அணிவித்தார்.. எனக்கு பயங்கர கோபம்.. தேர்தல் வேலை செய்த என்னை விட்டுவிட்டு அவருக்கு பாராட்டா என கொந்தளித்தேன்... அண்ணாவிடம் சண்டையிட்டேன்..

“ நீயும் ஒரு மோதிரம் வாங்கி கொடு.. அடுத்த கூட்டத்தில் போட்டு விடிகிறேன்..இதுவெல்லாம் பெரிய விஷ்யமா ! “ என்றார் அண்ணா

- கவியரசு கண்ணாதாசன்

5 வ வே சு ஐயர் குடும்பத்தினர் , நண்பர்களுடன் சுற்றுலா சென்று இருந்தார்.. அருவியில்  எதிர்பாராத விதமாக  அவர் மகள் தவறி விழுந்தார்.. அவரை காப்பாற்ற முயன்ற இவரும் இழுத்து செல்லப்பட்டார்...



( தொடரும் )

4 comments:

  1. அறிந்து கொண்டேன் ..
    இவ்வளவு நடந்து இருக்கா ..
    நன்றிங்க

    ReplyDelete
  2. ஐந்தாவது விஷயம் தவிர எனக்கு பாக்கி அனைத்தும் புதிது!

    பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. நானும் சொல்வதுண்டு, யாரோ கண்டுபிடிக்க
    எவனோ பெயர் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
    இந்த அஞ்சான உலகில். நிச்சயமாக கூட்டு
    முயற்சிதான். உண்மைகளை அறியத்தரும்
    தங்களுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா