Thursday, December 29, 2011

யாரிடம் இருந்து எழுத்தை திருடுகிறேன் ?- சாரு நிவேதிதா மனம் திறக்கிறார்

" கந்தசாமி அவன் நம்பிக்கையால் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டான் “
” என்ன நம்பினான் ? “

” அவன் ஷூ சைஸ் 7 .. ஆனால் 4 போதும் என நம்பினான் “

***********************************

இந்த கதை ஜோக் போல தோன்றினாலும் இது சுட்டி காட்டும் கருத்து ஆழமானது.
எது உண்மை என்பதை விட , நம் நம்பிக்கைகளே நமக்கு முக்கியமாகி விடுகின்றன. இதனால் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் நம் நம்பிக்கைகளை கைவிட நாம் தயாராக இல்லை.

கடவுளை நாம் பார்த்ததில்லை.. ஆனால் அவர் இல்லை என  நம்புகிறோம் ..

கடவுள் அனுபவம் இல்லாமல் அவர் இருக்கிறார் என நம்புவதற்கும், இல்லை என்ப்தற்கு அதிக வித்தியாசம் இல்லை என்ற நிலையில், கடவுள், ஆன்மீகம் , மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகள் போன்ற பல விஷ்யங்களை தனக்கே உரிய சுவாரஸ்யமான நடையில் சாரு நிவேதிதா அலசி இருக்கும் நூல்தான் “ கடவுளும் நானும் “ என்ற கட்டுரை தொகுப்பு. ( ஆரம்பத்தில் வரும் ஜோக் அந்த புத்தகத்தில் வருவதுதான் )..

 கடவுள் இல்லை என ஏற்கனவே முடிவு எடுத்து விட்டவர்கள் , இந்த நூலை படித்து தங்கள் பொன்னான நேரத்தை வீணடித்துவிடலாகாது என்ற நல்ல நோக்கத்தில், நாஸ்திகர்கள் இந்த நூலை படிக்க வேண்டாம் என ஆரம்பத்திலேயே தடுப்பு சுவர் போட்டு விடுகிறார் சாரு.

அந்த தடுப்பு சுவரை தாண்டி உள்ளே நுழைந்தால் , எண்ணற்ற தகவல்கள் , அனுபவங்கள் என விருந்து காத்திருக்கிறது..

இசை, மது , இலக்கியம் என ஒரு வித்தியாசமான பாணியில் ஆன்மீகம் பேசுகிறது இந்த புத்தகம்..

கடவுளின் வருகை என்ற முன்னுரை அபாரம்.

சாருவின் ஆன்மீக தேடல் இன்று நேற்று ஏற்பட்டத்தல்ல என்பதை சீரோ டிகிரியின் சில பகுதிகள் மூலம் சொல்வது அழகு.

ஜோசப் ப்ராட்ஸ்கி நோபல் பரிசு பெற்ற கவிஞர். எந்த பயிற்சியும் இல்லாமல் அவரால் எப்படி கவிதை எழுத முடிந்தது. அதற்கு அவர் சொன்ன பதில் “ என் கவிதைகள் எனக்கு கடவுளால் அனுப்பப்படுகின்றன “

இதை சொல்லும் சாரு, தனக்கும் தன் எழுத்து கடவுள் மூலமே அனுப்பப்படுகின்றன என்கிறார். அவருடன் பழகும் வாய்ப்பு பெற்றவர்கள் இதில் இருக்கும் உண்மையை அறிவார்கள். என் எழுத்தையெல்லாம் கடவுளிடம் இருந்தும், என் கனவுகளிடம் இருந்தும்தான் திருடுகிறேன் என அவர் சொல்வது மிகையான வார்த்தைகள் அல்ல.

க்டவுள்  நம்பிக்கை இல்லாமல் எந்த எழுத்தாளனும் இல்லை என தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய் என பல உதாராணங்களுடன் அவர் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

அதே நேரத்தில் இன்னொரி விஷ்யம். கடவுள் நம்பிக்கையாளனுக்கும், நாத்திகனுக்கும் கடவுளின்  எண்ணிக்கையில்தான் வித்தியாசம். ஒரு குறிப்பிட்ட கடவுளை நம்புபவன் , அந்த கடவுளைத்தவிர வேறு யாரையும் நம்புவதில்லை.  நாத்திகன் எந்த கடவுளையும் நம்புவதில்லை.. ஆக 100 கடவுள்கள் இருந்தால், ஆத்திகவாதி 99 கடவுள்களை நம்புவதில்லை.. நாத்திகவாதி 100 கடவுள்களை நம்புவதில்லை. எனவே இருவருக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை என்பதையும் தன் பாணியில் சொல்கிறார் சாரு.

கடவுள் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது என்ப்தை அழகாக சொல்கிறார்.

தேவாலயங்களை இழுத்து மூடியதால் , ரஷ்யாவில் ஏற்பட்ட சீர்கேடுகளை அவர் சொல்லும்போது அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நூலில், கிறிஸ்தவ, இஸ்லாமிய , ஹிந்து கருத்துக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்ட முறையில் சொல்லப்பட்டு இருப்பது தனி சிறப்பு.
இஸ்லாம் ம்தம் வாள் வலிமையால் பரப்பப்பட்ட மதம் அன்று. மாபெரும் இஸ்லாமிய மகான்கள், கரீப் நவாஸ் போன்ற சுஃபி ஞானிகள் மற்றும் இஸ்லாமிய மதத்திம் சிறப்பால்தான் இஸ்லாம் நம் வாழ்வுடன் கலக்க முடிந்தது என்று அவர் உண்மையை உரக்க சொல்கிறார்.

இஸ்லாம் என்பது வன்முறை மார்க்கம் என்று சிலர் பொறுப்போ, விஷ்ய ஞானமோ இல்லாமல் எழுதுவதுதான் அதிகம் என்ற நிலையில் இவர் எழுத்து உவப்பாக இருக்கிறது.

பட்டினத்தார், பாபா, செகாவ் சிறுகதை, திருப்பாவை, பாலகுமாரன், ஜெயமோகன் என பல விஷ்யங்களை இந்த சிறு புத்தகத்தில் சாரு தொட்டுள்ளார்.

ஆங்காங்கு சில முக்கிய விஷயங்களுக்கு லிங்க் கொடுத்து இருப்பது தனி சிறப்பது.. அவர் அனுபவித்த பாடல்கள், உரைகளை நாமும் கேட்டு உணரலாம்..   அவர் படித்தவற்றை நாமும் படிக்கலாம்.





பூச்செடிகளை வளருங்கள்
உங்களை சுற்றி பூந்தோட்டம் உருவாகும்
முள் புதர்க்ளை வளர்காதீர்கள்
அவை உங்கள் பாதங்களை காயப்படுத்தும்

என்ற ரஹ்மான் பாபாவின் வரிகளே இந்த புத்தகத்தின் செய்தி..

வெர்டிக்ட் - கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா