Sunday, September 16, 2012

தமிழர்கள் முட்டாள்களா ? ஜெயமோகனும் மலையாள பகவதி அம்மனும்

நகைசுவையும் தமிழ் சினிமாவும் என ஒரு கட்டுரை . அதில் மலையாளிகள்தான் ரசனையில் சிறந்தவர்கள் என்றும் , தமிழர்கள் முட்டாள்கள் என்றும் ஜெயமோகன் எழுதி இருக்கிறார். அவர் ”சாரு நிவேதிதவிண்ட பேரு இனி எண்ட ஜீவிதத்தில் பறயுக இல்யா” என்று மலையாள பகவதி அம்மன் கோவிலில் வைத்து சத்தியம் செய்திருக்கிறாரே தவிர , தமிழர்களை கிண்டல் செய்ய மாட்டேன் என சத்தியம் செய்யவில்லை. எனவே அவரை பகவதி அம்மன் தண்டிக்க மாட்டாள்.
என்னதான் தமிழ் நாவல்கள் எழுதினாலும் , தமிழ் படங்ககளுக்கு வசனம் எழுதினாலும், தாய் மொழி மலையாளத்துக்கு அவர் விசுவாசமாக இருப்பது பாராட்டுக்கு உரியது. அவர் சொன்ன கருத்தையும் நான் ஏற்கிறேன்.

தமிழர்கலாகிய நாங்கள் காட்டுமிராண்டிஹதேன் .ரெண்டாயிரம் வருஷமா வேல்கம்பையும் அறுவாலையும் தூக்கிக்கிட்டுவெற்றிவேல் வீரவேல்னு சுத்திகிட்டு இருந்த பயக. எங்க ரசனை இப்படித்தான் இருக்கும்.,ஆனால் நைசாக அவாள் மீது பாசம் சொரிந்து இருப்பதுதான் நகைப்புக்கு உரியது. இட்லி , சாம்பாரை பொய் ரசித்து சாப்பிடுகிறாயே.. உனக்கு ஒன்னும் தெரியல என கிண்டல் செய்யும் ஒருவன் , கழனி தண்ணிதான் சுவையானது என சொன்னால் எப்படி இருக்கும்.அதே போல , நம் ரசனையை கிண்டல் செய்யும் இவர் தான் ரசிப்பதாக சொல்லி இருப்பது என்ன தெரியுமா. கமல் நடித்த படங்களிலேயே மோசமான படங்ககள் இரண்டை.வியாபார ரீதியாக தோல்வி அடைந்த மைகேல் மதன காம ராஜனையும் , கலை ரீதியாக தோல்வி அடைந்த தசாவதாரத்தையும் பாராட்டி இருக்கிறார். இந்த இரண்டு படங்களையும் கமலே கூட பெருமையாக நினைப்பதில்லை.ஆனால் இவர் பாராட்டுகிறார் என்றால் , அவாள் மனதில் இடம் பிடிப்பதுதான் நோக்கம என்பது தெளிவு.ஆனால் அவாள் , தமிழர்களை போல இளித்த வாயர்கள் இல்லை. இவர் என்னதான் பாராட்டினால் , அவாள் அவாலோடுதான் சேர்வார்கள்.கிரேசி மோகன், பால குமாரன் , சுஜாதா என்றுதான் கமல் இருப்பாரே தவிர , ஜெயமோகனை பொருட்படுத்த போவதில்லை.  
எனவே ஜெயமோகனின் மொழிப்பற்றை மலையாள பகவதி நேசித்தாலும் , அவாள் விஷ்யத்தில் ஜெயமோகனின் கருத்தை பகவதி ரசிக்க மாட்டாள்

6 comments:

 1. ஜெயமோ தமிழில் எழுதினாலும், அவரது நாயர் சாதிப் பாசம் எங்குமே தெளிக்கப்பட்டே இருக்கும் அவரது எழுத்த்துக்களில், முக்கியமாக ஜெயமோ, அநீ போன்றோரும் கிழக்குப் பதிப்பகத்தில் எழுதும் பலரும் ஆதிக்க சாதி குணத்தை நிலைநிறுத்தக் கூடியவர்கள் .. அதற்காக உழைத்தாலும் ஆதிக்கச் சாதியினரிடம் மட்டுமே அவர்கள் பருப்பு வேகின்றது. ஏனையோரிடம் வேகுவதில்லை .. ஹிஹி

  ReplyDelete
 2. //இந்த இரண்டு படங்களையும் கமலே கூட பெருமையாக நினைப்பதில்லை.//

  இத உங்ககிட்டே கமலே சொன்னாரா?போற போக்குலே நீங்களே எதாவது சொல்லாதீங்க பாஸ்.

  ReplyDelete
 3. சாரு கூட தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்தான்.ஒருமுறை தமிழுக்கு சேவை செய்தவர்களில் பெரும்பாலோனோர் தெலுங்கர்களே என்று சிலாகித்து எழுதியிருந்தார்

  ReplyDelete
 4. போ.. போ... போய் புள்ள குட்டிகளையாவது படிக்க வை..முட்டாபய..

  ReplyDelete
 5. thamizhukku vandha sodhanai

  ReplyDelete
 6. சுஜாதா மற்றும் ஷங்கரின் ஜாதி வெறி அவர்களின் படங்களில் தெரியும்.
  மெத்த படித்தவர்கள் அனைவரும் ஐயர் ஜாதியாக இருப்பார்கள்.
  குப்பத்தில் இருப்பவர்கள் கருப்பாக குண்டாக இருப்பார்கள்.
  தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கர்நாடிக் சங்கீதம் தெரிந்திருக்கும்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா