Saturday, June 22, 2013

பக்கத்து சீட்டு இளம்பெண்ணுடன் பரவச நிமிடங்கள்- பேருந்து மகிழுந்தான அனுபவம்திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தேன்.  அதைப் பற்றி பிறகு எழுதுவேன்.
 யாரும்  ”ஹைக்கூ”  ( ?!!@!! )  எழுதினால் , சென்னைக்கு திரும்பி வர மாட்டேன் என போகும்போதே கண்ணீர் மல்க சொல்லி இருந்தேன்..

                         யாருக்கு யார் காவல் !!!!!!!
“ உலகை காக்கும் கடவுளுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!
பாதுகாப்பாக போலீசார் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
                          கேட்டது கிடைக்கவில்லை!!!!
“ கேளுங்கள் தரப்பட்டும் என்ற இயேசுவுக்கு
தேவாலாயம் கட்ட முடியவில்லை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
கேட்ட நன்கொடை கிடைக்காததால் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

                         என்ன பார்வை , உந்தன் பார்வை !!! 
        மாலைக்கண் நோய்க்கு டாக்டரை பார்க்க போனேன்.
        அவர் அறிவிப்பு பலகை எரிச்சலூட்டுயதால்
        பார்க்கமலேயே திரும்பினேன்
        அறிவுப்பு பலகை : பார்வை நேரம் : காலை நேரம் 10 டூ மாலை 6

                          நம்பிக் கை வைக்காதே !!!!                 என் நண்பன் உயிரைக் காப்பாற்றுவார்
                 என்றெண்ணி டாக்டரிடம் ஓடினேன்.!!!!!!!!!!!!!!!!!!!!
                 பார்க்க முடியவில்லை.
                 மாரடைப்பால் இறந்து விட்டாராம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இந்த டைப் ஹைக்கூ கவிதைகள் எதுவும் , என் வேண்டுகோளை மதித்தோ , தற்செயலாகவோ யாரும் எழுதாததால் சென்னை திரும்பினேன்.

ஓர் இடத்தில் டீ சாப்பிட இறங்கி விட்டு பேருந்தில் ஏறினால் , பக்கத்து சீட்டு இளம்பெண் என் சீட்டில் கால் நீட்டியவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார்.

அந்த அழகான பெண்ணின் மோன நிலையை கலைக்க விரும்பாதபோதும் , மனதை கல்லாக்கி கொண்டு காலை எடுக்க சொன்னேன்.

அவர் காலை எடுத்து என் சீட்டின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சப்போர்ட்டிவ் கம்பி மீது காலை வைத்து கொண்டார்..

      ஒரு கவியுலக சூறாவளி என்ற மரியாதை இல்லாமல் என்னை நோக்கி காலை நீட்டி இருந்தது மானப்பிரச்சினையாக இருந்தாலும், ஓர் அனுகூலமும் இருந்தது.

காலை எடுத்து விட்டு அவர் சீட்டில் அவர் சாய்ந்து உட்கார்ந்தால் , நான் என் தலையை திருப்பி பார்த்தால்தான் அவரை பார்க்க முடியும். ஆனால் இப்படி அவர் பக்கவாட்டில் திரும்பி காலை நீட்டி இருப்பதால் , அவர் முகம் என்னை நோக்கி இருந்தது. எனவே கலைக்கண்ணோட்டத்துடன் அவரை ரசிப்பது எளிதாக இருந்தது.

இருக்கைகளின் இரு பக்க வரிசைகளும் வெகு அருகில் இருந்ததால் , அவர் முகம் எனக்கு வெகு அருகில் இருந்தது. தள்ளி உட்காரவோ , காலை எடுக்கவோ முயலாமல் அவர் அப்படியே இருந்தது குழப்பமான இருந்தது. கள்ளம்கபடமில்லாமல் இப்படி செய்கிறாரா அல்லது சீண்டுகிறாரா என தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு கணத்தில் புன்னகைத்து கொண்டோம்.  யார் முதலில் புன்னகைத்தது என்பது கூட தெரியவில்லை. அதன்பின் மெல்ல பேச ஆரம்பித்து கிரிவலம், ஆன்மீகம், நாத்திகம் , இயற்கையுடன் இயைந்த வாழ்வு என பேச்சு சென்றது.

 நான் கோயம்பேடு வரை செல்லாமல் முதலிலேயே இறங்க வேண்டி இருந்தது. ஆனால் வேலை இல்லாவிட்டாலும் , கோயம்பேடுவரை சென்று விடலாமா என யோசித்து கொண்டு இருந்தேன்.

என் மொபைல் நம்பர் கேட்டார்.

” இது ஆஃபீஸ் எண்.. என் நம்பர் தொலைந்து விட்டது. மெயில் ஐடி சொல்லுங்க்ள்.. நம்பர் வந்ததும் அனுப்புகிறேன் “ என சொன்னேன். அவர் சொன்ன மெயில் ஐடியை காதில் போட்டு கொள்ளாமல் பேருந்தை விட்டு இறங்கி சென்றேன்.

போன் பேச்சு , எஸ் எம் எஸ், மெயில் , சந்திப்பு , விவாதங்கள் , கருத்து மோதல் , கருத்து  வேறுபாடு என கசப்புடன் என்றாவது பிரிவதை விட , ஓர் இனிய பயணத்தில் சந்தித்த இனிய பெண்ணாகவே அவரை என்றென்றும் நினைவில் கொள்ள இப்படி ஒரு முடிவெடுக்கதாகி விட்டது.

அப்படி ஒரு அழகிய முகம்.

9 comments:

 1. வாழ்வில் பலரை பார்க்கின்றோம், சில மணித்துளிகளில் பிரிந்தும் விடுகின்றோம், சமயத்தில் அவர்களை இனி பார்க்காமலயே போயும் விடுகின்றோம், அத்தகையோரில் சிலரின் முகங்கள் நீக்கமற உள்ளத்தில் பதிந்தும் விடுகின்றன இனிய நினைவுகளாய்.

  ReplyDelete
 2. கடைசி பேரா செம டச்!

  ReplyDelete
 3. @ நிரஞ்சன் அருமையாக சொன்னீர்கள்

  ReplyDelete
 4. @tamil news கடைசி பாராவுக்கு முன் இருப்பவை எல்லாம் செம மொக்கையா? :(

  ReplyDelete
 5. கடைசி பாராவை சரியாக வரிசைப் படுத்தி உள்ளீர்கள் எடுத்தது சிறந்த முடிவு

  ReplyDelete
 6. நீங்க ரொம்ம்ம்ம்ம்ப்ப நல்லவருங்க... :) :) :)

  ReplyDelete
 7. நியத்துகும் கதைக்கும் இது தான் வித்தியாசம்

  ReplyDelete
 8. Are u also going with charu for the himalaya package.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா