Thursday, January 14, 2016

அண்ணா கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டது- அன்புமணி பரபரப்பு பேச்சு - துக்ளக் விழா

துக்ளக் விழா - இரண்டாம் பகுதி


சோ

என்னை அதிகம் பேச வேண்டாம் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்..டாக்டர்கள் பேச்சை கேட்பதே நல்லது.. டாக்டர் கலைஞர் , டாக்டர் ஜெயலலிதா , டாக்டர் விஜயகாந்த் (பலத்த சிரிப்பு , கைதட்டல் )... வாசகர் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்காது...வாசகர்களின் கேள்விக்கு துக்ளக்கில் பதில் வெளியாகும்

( சரத்குமார் , எஸ் ஆர் பி பேச்சுக்கு பிறகு அன்புமணி பேசினார் )

அன்புமணி

தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்றால் சில தகுதிகள் தேவை..படித்திருக்ககூடாது..பட்டம் பெற்றிருக்க கூடாது. இளைஞராக இருக்க கூடாது... சினிமாவில் நடித்திருக்க வேண்டும். வசனம் எழுதி இருக்க வேண்டும்.. வீர வ்சனம் அடுக்குமொழி வசனம் பேச தெரிந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தில்தான் 50 ஆண்டுகளாக தமிழகம் இருக்கிறது..

எப்படி இருந்த தமிழகம் இது.. சித்த வைத்தியம் , இயற்கை வளம் , இலக்கியம் என சிறப்பாக இருந்த தமிழகம் கடந்த 50 ஆண்டுகளாக சீரழிந்து விட்டது.

எந்த ஒரு மானிலத்திலும் 50 ஆண்டுகள் திரைத்துறையினர் ஆண்டது இல்லை.. அழுதுகொண்டே பதவியேற்றதில்லை.  மந்திரிகள் காவடி எடுத்ததில்லை.. 3ல் ஒரு பங்கு வருவாயை மது மூலம் பெறுவதில்லை.

கண்டிப்பாக ஒரு மாற்றம் தேவை. புதிய சிந்தனை புதிய அரசியல் தேவை. எங்களால் இந்த மாற்றம் கொண்டு வர முடியும்

என் மகள் சொல்கிறாள்..அப்பா , நீங்கள் படித்திருக்கிறீர்கள்... மந்திரியாகி சேவை செய்திருக்கிறீர்கள்..இதெல்லாம் போதாது.சினிமாவில் நடியுங்கள்..அப்போதுதான் முதல்வராகலாம் என்கிறாள் ( பலத்த கைதட்டல்)

சினிமா , மது , இலவசங்கள் என சீரழிந்துள்ள இந்த நிலையை எங்களால் மாற்ற முடியும். தரமான கல்வி , எல்லோருக்கும் நல்ல ,மருத்துவ வசதி என கொண்டு வருவோம். வை ஃபை , டாப்லட் என் கல்வி இருக்கும்... புத்தக மூட்டைகள் இருக்காது

இப்போது யாரும் கலைஞர் ஆட்சி வேண்டும் , ஜெயலலிதா ஆட்சி வேண்டும் , ஓ பி எஸ் ஆட்சி வேண்டும் என கேட்பதில்லை.. காமராஜர் ஆட்சி வேண்டும் என்கிறார்கள்..காரணம் அன்று 2000 பள்ளிகள் திறக்கப்பட்டன, இன்று 6000 டாஸ்மாக் திறக்கப்படுகிறது

சுய வேலை வாய்ப்புகளை உருவாக்கினால் வேலை இன்மை குறையும். வேலை இல்லாமல் சரக்கு அடிக்க செல்லும் நிலை மாறும். பிஜேபி தன்னை நம்பாமல் விஜயகாந்தை தேடி அலைகிறது... அவரோ பிஜேபியுடனும் பேசுகிறார்.. அவர்கள் எதிரியான திமுகவுடனும் பேசுகிறார்.. திமுக எதிரியான கம்யூனிஸ்ட்டுகளுடன் பேசுகிறார். அவரை ஏன் நம்புகிறார்கள்... நாங்கள் எங்களை நம்பி களத்தில் இறங்கவில்லையா

1967ல் திமுக ஆட்சியை பிடித்தபோது இன்னும் 50 ஆண்டுகள் எங்கள் ஆட்சிதான் என்றார் அண்ணா.. அந்த 50 ஆண்டுகள் இந்த ஆண்டுடன் முடிகிறது... ( கைதட்டல் )

சோ சொன்னதுபோன்ற டாக்டர் நான் அல்ல... ஜெயலலிதா , கலைஞர் போன்ற டாக்டர் அல்ல... படித்த டாக்டர்,,, எங்களால் ஒரு மாற்றம் கொண்டு வர முடியும்


சோ

சினிமா மட்டுமே வெற்றிக்கு உதவாது. எம் ஜி ஆர் , ஜெ வென்றாலும் எத்தனைபேர் தோற்றிருக்கிறார்கள்..டி ராஜேந்தர் , பாக்கியராஜ் என எத்தனை தோல்விகள்..அவ்வளவு ஏன் , சிவாஜியால் கூட ஜெயிக்க முடியவில்லையே
எனவே அன்புமணி சினிமாவில் நடித்தால் போதும் என நினைக்ககூடாது ( பலத்த சிரிப்பு , கைதட்டல் ) மதுவிலக்கு சாத்தியம் என நான் நினைக்கவில்லை

ஆனால் மதுவிலக்கில் உண்மையான ஆர்வம் கொண்ட தலைவர் ராமதாஸ் மட்டுமே என நினைக்கிறேன்






No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா