Thursday, February 3, 2011

கேள்வி கேளுங்கள் - ஆஷிக் அஹ்மத் .. யாரை ? எதற்கு ? எப்படி ? 
சாமி கும்பிடுவன் என்றால் அவன் ஆட்டு மந்தை கூட்டத்தை சேர்ந்தவன்,  அந்த மதத்தை சேர்ந்தவன் என்றால் வன்முறையாளன் , இந்த மதத்தை சேர்ந்தவன் என்றால் பேராசைக்காரன், இந்த இனத்தை சேர்ந்தவன் சூழ்ச்சிக்காரன், நாத்திகன் என்றால் அறிவாளி என்றெல்லாம் பொதுப்புத்தியுடன் சிந்திப்பது தமிழர்களின் தனி குணம்..இது போன்ற சிந்தனைகள்தான் பல நடைமுறை சிக்கல்களுக்கு காரணம்..


இதில் இனம் சார்ந்த , மொழி சார்ந்த பொது புத்தி சிந்தனையையும் அதனால் ஏற்படும் சிக்கல்களையும் பிறகு பார்க்கலாம்..


இப்போது மதம் சார்ந்த , ஆன்மிகம் சார்ந்த பொது புத்தியை பார்க்கலாம்..


ஆன்மிக வாதி என்றால் இப்படி இருப்பான் என்றோ , நாத்திகவாதி என்றால் இப்படி, இந்த மதம் சார்ந்தவன் என்றால் இப்படி என்றோ நினைப்பது அறியாமை..


முழு ஆன்மீக வாதி என்று யாரும் இல்லை... எத்தனை பேருக்கு அவரவர் மத நூல்கள் பற்றி முழுதும் தெரியும்.. ?


அதே போல நாத்திகவாதி என்றும் யாரும் இல்லை... 


வெகு வெகு சிலர் மட்டுமே பல்வேறு  ஆன்மீக பயிற்சிகள் , அனுபவங்களுக்கு பிறகு , தம்மை பொருத்தவரை கடவுள் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.. சிலருக்கு ஆன்மீக நோக்கங்கள் இருக்காது.. சமுதாய பார்வை இருக்கும்...சமுதாய முன்னேற்றத்துக்கு மதம் தடையாக இருக்கிறது என ( சரியாகவோ, தவறாகவோ ) நினைத்து கடவுள் இல்லை என்பார்கள்..


இவர்களை தவிர்த்து பெரும்பாலோனோர் , குழு சிந்தனையில் சிக்கியோ, ஓர் அடையாளத்துக்காகவோ தம்மை நாத்திகவாதிகள் என அழைத்து கொள்வதே நடைமுறையில் நடக்கிறது..


இதைதவிர, சில லாபங்களுக்காக ஆத்திக, நாத்திக வேடம் போடுபவர்கள் தனி வகை ... இதை அரசியலவாதிகள், சாமியார்கள், இயக்க தலைவர்கள், கார்ப்பரேட் குருக்கள் போன்றோர் செய்வார்கள்...


இது எல்லாமே செக்கு மாட்டு சிந்தனைதான்.,..


நமக்கு கிடைத்த குறுகிய வாழ்வை இப்படி வீணாக்க கூடாது....


ஒரு விஷயம் என்ன என தெரியாமலேயே பொது புத்தி அடிப்படையில் கருத்தை வளர்த்து கொள்வது அறியாமை..


பெரியாரை மட்டும் வைத்து கொண்டு , நாத்திகவாதிகள் அனைவரும் சீர்திருத்தவாதிகள் என நினைப்பதும் தவறு..
ரமணரை வைத்து அனைத்து ஆன்மீக வாதிகளும் நல்லவர்கள் என நினைப்பதும் தவறு..


எனவே இந்த பொது புத்தியை மறந்து விட்டு , கண்ணை திறந்து பார்த்தால் நம்மை சுற்றி ஆயிரம் நல்ல விஷ்யங்கள் இருக்கின்றன...


சுவைத்து பார்த்து விட்டு, நமக்கு ஏற்றதா இல்லையா பார்ப்பதுதான் அறிவுடமை, பகுத்தறிவு...


குர் ஆன் போன்ற நூல்கள் அனைவருக்கும் பொதுவாக உள்ளவை...(அகில உலக மக்களுக்கும் இது ஒரு நல்லுரையே அன்றி வேறில்லை 68:52 ) இஸ்லாமியர்களுக்கு சற்று அதிகமாக இதில் பரிச்சயம் இருக்க கூடும்...
ஆனால் மற்றவர்கள் படிக்க கூடாது என்பதல்ல...


தற்செயலாக படித்து பார்த்து விட்டு, நமக்கு ஏற்ற வழி இதுதான் என முடிவு செய்தவர்களும் இருக்கிறார்கள்...அதே சமயம் , இஸ்லாம் இனத்தில் பிறந்த பலர், இந்த புனித நூலை படிக்காமலேயே தம் வாழ் நாளை கழித்ததும் உண்டு..


 அதே போல ஆன்மீகம் பேசும் பலர் , ஒரு வேளை கடவுள் இல்லையோ என சந்தேகத்தில் இருப்பார்கள்..


நாத்திகவாதிகள் பலர், ஒரு வேளை கடவுள் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தில் இருப்பார்கள்..


இந்த குழு மனப்பான்மையில் இருந்து விடுபட்டு , திறந்த மனத்துடன் உலகை பார்க்க வேண்டும்..


இஸ்லாமியனாக பிறக்கவில்லை என்பதற்காக குர் ஆனை படிக்காமல் இருந்தது தவறு என அதை படிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயெ உணர்ந்தேன்..


இது குறித்து சரியான தகவலை , அந்த மார்க்கத்தில் இருப்பவர்கள்தான் சொல்ல முடியும் என்பதற்காக அதில் ஈடுபாடு இருக்கும் நண்பர்களை நாடினேன்,. இஸ்லாமிய இனத்தில் பிறந்தவர்கள் அனைவருக்குமே அதில் ஈடுபாடு இருக்கும் என சொல்ல முடியாது... என் பல இஸ்லாமிய நண்பர்களுக்கு குர் ஆன் பற்றிய சரியான ஞானம் இல்லை ...


எனவேதான் அதில் ஈடுபாடு இருக்கும் நண்பர்கள் என குறிப்பிட்டேன்..


அதில்  நண்பர் ஆசிக் அகமது எனக்கு அனுப்பிய மெயில் அருமையாக இருந்தது...


குரானை எப்படி அணுக வேண்டும் என அவர் எழுதி இருந்தார்..உங்கள் கேள்விகளை குரானிடம் கேளுங்கள் என அவர் சொன்ன விதம் அருமை..


அவர் அனுமதி பெற்று அவர் மெயிலை இங்கே பிரசுரிக்கிறேன்...


படித்து பாருங்கள்..
**************************************************************

கேள்வி கேளுங்கள் -  ஆஷிக் அஹ்மத்
அஸ்ஸலாமு அலைக்கும்,குரானை அணுக மிகச் சிறந்த வழி ஒன்றுள்ளது. 


அதாவது, உங்கள் மனதில் தோன்றும் கேள்விகளை ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள். 
உதாரணத்துக்கு,


 •  கடவுள் யார்?, 
 • அவன் ஏன் ஒருவன்?,
 •  ஏன் தூதர்களை அனுப்ப வேண்டும், 
 • உலக பிரச்சனைகளுக்கு இதில் என்ன தீர்வு?  
 •  ஏன் மக்கள் துன்பப்படும் போது அவன் வருவதில்லை?....

இப்படியாக ஏதாவது உங்கள் மனதுக்கு தோன்றிய கேள்விகளை எழுதிக்கொள்ளுங்கள். பிறகு குரானை படிக்கத் தொடங்குங்கள்.

உங்கள் மனதில் என்ன கேள்வி எழுகிறதோ, அதை குரானைப் பார்த்து கேளுங்கள். மிக முக்கியமாக, நீங்கள் குரானை திறந்த மனதோடு படிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் முழுமையாக படிக்க வேண்டும்.

ஆக, நீங்கள் இந்த மொழி பெயர்ப்பிலிருந்து தொடங்குங்கள். எவ்வளவு காலம்
வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.  இறைவன் நாடினால், இதில் உண்மையை காணுவீர்கள்.

இறைவன் உங்களுக்கு மன பலத்தை தந்தருள்வானாக...ஆமின்.உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத்

3 comments:

 1. இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!

  //இஸ்லாமியனாக பிறக்கவில்லை என்பதற்காக குர் ஆனை படிக்காமல் இருந்தது தவறு என அதை படிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயெ உணர்ந்தேன்..//

  சந்தோஷம் சகோ, எல்லாப் புகழும் இறைவனுக்கே!தொடர்ந்து படிங்க சகோ. அதன்மூலம் இறைவன் மென்மேலும் உங்களுக்கு தெளிவான சிந்தனையைக் கொடுக்க பிரார்த்திக்கிறேன். சகோ ஆஷிக் அவர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக!

  //இஸ்லாமிய இனத்தில் பிறந்தவர்கள் அனைவருக்குமே அதில் ஈடுபாடு இருக்கும் என சொல்ல முடியாது...//

  ரொம்ப சரியா சொன்னீங்க சகோ. ஆனால் ஒரு சின்ன மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். இஸ்லாமிய 'இனம்' அல்ல சகோ, 'மார்க்கம்'.

  ReplyDelete
 2. நாத்திகம் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் நாத்திகர்களிடமே இல்லை என்பதே உண்மை. நாத்திகர் என்பதில் தங்கள் அறிவாளித்தனத்தை காட்டநினைத்தை காட்டுவதாக எண்ணிக்கொண்டால் மறுகோணத்தில் அதற்கு எதிரான கணிப்புக்களும; அவர்கள்மேல் உண்டு.
  மத நூல்கள் தூதர்களும் அருளவில்லை, இருடிகளும் அருளவில்லை அது மனிதனால் உருவாக்கப்பட்டதே.
  அதேபோல கடவுள் என்று ஒன்று இருக்குமானால் அது மனித சிந்தனைக்கு உட்பட்டதாகவா இருக்கப்போகின்றது? "சிற்றறிவால் உணர்ந்துகொள்ளமுடியாத பேரறிவு" என்று சான்றோர்கள் கூறியவையே உண்மையாக இருக்கும்!
  கடவுள் விளக்கத்துக்கு இந்த நூலை படியுங்கள், இந்த மதத்தை பின்பற்றுங்கள் என்பதுபோன்ற பிரச்சாரங்கள் சிற்றிவே.

  ReplyDelete
 3. Be it the Quran, the Bible, or various dharmas of Hinduism, or of the Jehovahs, all paths lead to the same goal, ultimate good இதை உணர்ந்தால் மனிதர்களிடையே வேறுபாடு குறையும். நான் இந்து மதத்தில் பிறந்ததால் இந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றுகிறேன். வேறு மதத்தில் பிறந்திருந்தால், அதைப் பின்பற்றியிருப்பேன்.

  எல்லா மத நூல்களையும் கட்டாயம் படித்துணர வேண்டும். உங்கள் ஆர்வமும் ஆக்கமும் உணர்வும் வாழ்க!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா