Saturday, February 5, 2011

புளு பிலிம் இயக்குனர் இதை புரிந்து கொண்டு படித்தாரா? தேகம் நாவலின் நுட்பமான ஒரு பகுதி, நிர்மல் பார்வையில்

அல்டிமேட் ரைட்டர் சாரு நிவேதிதாவின் தேகம் நாவல் அவர் மற்ற நாவல்களை விட சிறிது..
ஆனால் இந்த சின்ன நாவல் ஏற்படுத்தும் தாக்கமோ மிக அதிகம்..

நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக படிக்க கூடாது...

ஒவ்வொரு வரியிலும் விஷயங்கள் பொதிந்துள்ளன..

ப்ளூ பிலிம் இயக்குனர் போல இந்த நாவலை படிப்பது ஒரு வகை..

புரிந்து படித்து நாவலை கொண்டாடுவது ஒரு வகை..

தேகம் நாவலில் வரும் ஒரு நுட்பமான விஷயத்தை பலர் கவனித்திருக்க வாய்ப்பில்லை..

அதை நண்பர் நிர்மல் அழகாக விளக்குகிறார் ,,,, படித்து பாருங்கள்...தேகம் வாசிப்பு அனுபவம்:  4- Mrinzo Nirmal                               தேகம் நாவலில் Fire Famine Opera by Richard Strauss  இசையை கேட்டுக்கொண்டுதான் தர்மா கொட்டடியில் சித்திரவதை செய்வான். இந்த காட்சியை ஒரு திரைபடம்போல கற்பனை செய்துபார்த்தால் இந்த ஒபேரா இசைதான் இந்த நாவலுக்கான  பின்னணி இசை அல்லது Theme மியூசிக் என்று வைத்துகொள்ளலாம் . இந்த  Opera எனபது மேற்கு நாடுகளில் மிகவும் ப்ரிசிதிபெற்ற ஒரு கலை வடிவம் அது நமது ஊர் நாட்டிய நாடகத்தை போல இருக்கும் என்று சொல்லலாம், அதில் பாடல், நடனம், வசனம் என்று அனைத்தையும் கொண்டு ஒரு கதை சொல்லுவார்கள். 
                                    எதுக்கு இந்த Fire Famine Opera இசையை தர்மாவுக்கு பிடிக்கிறது? அதற்கு அந்த Fire Famine Opera கதையை பற்றி நமக்கு தெரியவேண்டும். இந்த கதையைத்தான் நாய் பாஸ்கரிடம் தர்மா 24 ஆம்  அதிகாரத்தில் சொல்லுகிறான். ஒரு கலைஞனை அவன் காதலிக்கும் பெண் பழிவாங்குகிறாள் .
பின்பு  எப்படி அவன் அந்த  நகரத்தில் உள்ள மக்களுக்கு தேவையான தீயை தனது மந்திரசக்தியினால் கட்டிபோட்டு அந்த பெண்ணையும் அவனை பழித்த அந்த நகர மக்களையும்   பழிவாங்குகிறான் என்பதுதான் கதை. முழுமையான கதையை இந்த லிங்கில் சென்று படிக்கலாம் http://www.musicwithease.com/strauss-fire-famine.html .

******************************************************************************************************தேகம் வாசிப்பு அனுபவம்:  5  - Mrinzo Nirmal ( இந்த விவாதத்தின்  இரண்டாம் , மூன்றாம் பாகங்கள் , வேறொரு கோணத்தில் இந்த நாவலை அலச இருப்பதால் அவை , தனி தனியாக வெளியிடப்படும்- pichaikaaran )

            தேகம் நாவலில் வரும் நேஹா, அவளது புலம்பலில் The Man Who Mistook his Wife for a Hat என்ற  ஒரு கதையை   பற்றி சொல்லுவாள். விருப்பம் உள்ளவர்கள் இந்த http://www.mediafire.com/?yamknzjmn0t லிங்கில் சென்று e-book ஐ இறக்கம் செய்து படித்துபார்க்கலாம்.

 இந்த புத்தகம் ஒரு நரம்பியல் மருத்துவரின் case History யின் தொகுப்பு., இந்த தொகுப்பில் உள்ள முதல் கதைதான். The Man Who Mistook his Wife for a Hat ,

 இது  இதில் Agnosia என்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்ட   Mr.P என்கிற ஒரு இசை மற்றும் ஓவிய கலைஞன் பற்றியது. இந்த Agnosia  எனபது "  Agnosia is Inability to recognize objects by use of the senses. loss of ability to recognize familiar objects". அதாவது நமக்கு பரிட்சயமான  பொருளை நமது புலன்களால் கண்டுகொள்ளமுடியாத  ஒரு குறைபாடு. இந்த Agnosia வில் பல வகைகள் உள்ளன. எதற்காக இந்த குறைபாடை பற்றி நேஹா கூறவேண்டும். ஒருவேளை தன்னை ஏன் தர்மாவல் உணரமுடியவில்லை என்பதற்காவா ? 

 இந்த அக்னோசியா பற்றி படிக்கும்போது உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா? நம்மால் எந்தளவுக்கு நமது புலன்களால் நமக்கு தெரிந்த செய்தியை , பொருளை , சக மனிதர்களை , நாம் பின்பற்றும் மதம், ஆன்மிகம் போன்றவைகளை உணர்கின்றோம், அதை முழுமையாய் அறிய உணர உள்ள தடைகள் என்ன?


No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா