Thursday, July 28, 2011

பெண்கள், அவதூறு , துரோகி , மது- சாரு FAQ ( அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் )

சாரு குறித்தும், வாசகர் சந்திப்பு கொண்டாட்டங்கள் குறித்தும் , சில அவதூறுகள் , அவர் எழுத்துக்கள் குறித்தும் பலர் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்..

ஒரு விஷயம் புரிகிறது.. சாரு எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்த வாசகர்களை விட இன்றைய இளம் தலைமுறையினர்தாம் சாரு மேல் ஆர்வமாக இருக்கின்றனர்.. அவர்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என் கடமை....
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை பார்க்கலாம்

***********************************************************

1 எழுத்தை ரசிப்பதோடு மட்டும் அல்லாமல் எழுத்தாளனை பற்றி ஏன் எழுதுகிறீர்கள்?

               வேறு எந்த எழுத்தாளனும் சந்திக்காத அவதூறுகளை அவர் சந்திக்கிறார். இந்த நிலையில் அவை உள் நோக்கம் கொண்டவை என்று நிரூபிக்கும் கட்டாயத்துக்கு நாங்கள் தள்ளப்படுகிறோம். மற்றபடி, அவர் எழுதிய நாவல்கள் பற்றி பேசத்தான் என்னை போன்றவர்களுக்கு விருப்பம்..

இன்னொன்று.. சிறப்பான எழுத்தாளன் , சிறந்த மனிதனாகவும் இருப்பது அபூர்வம்.. ஒரு கவிஞனின் கவிதையை வாசித்து , நேசித்து வந்தவன் நான்... இன்னும் நேசிக்கிறேன்.. ஆனால் அந்த கவிஞன் செய்த திரை மறைவு வேலைகளை அறிந்த போது அதிர்ச்சியில் நிலை குலைந்தேன்..

இந்த நிலையில், சிறந்த எழுத்தாளரான சாரு, சிறந்த மனிதனாகவும் இருப்பதை பார்க்கும்போது, இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியவில்லை.. அவரைப்பற்றி எழுதியது போது என்று நினைத்தாலும், நிறுத்த முடியவில்லை

2 ஒரு நிகழ்ச்சியில், ஒரு பெண் சாருவிடம் பேப்பர் இல்லாமல் கை எழுத்து கேட்டதை பற்றி எழுதி இருந்தீர்கள். அவர் அப்படி பட்ட பெண்களை மட்டும்தான் விரும்புகிறாரா?

   சில பெண்கள் அவரை எந்த அளவுக்கு நேசிக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டவே அதை சொன்னேன்.. அவருக்கு பல தரப்பட்ட வாசகர்கள் இருக்கின்றனர்.. அவரை தன் தந்தை போல நேசிக்கும் பெண்களும் உண்டு... ஒரு சகோதரனாக நேசிக்கும் பெண்களும் உண்டு..   இலக்கியவாதியாக , ஆசிரியராக , தோழனாக நினைக்கும் பெண்களும் உண்டு..

அவருடன் எப்படி பேசுகிறார்களோ அதற்கேற்ப அவர் ரியாக்ட் செய்வார்..

அவரது ஒரு புத்தகம் தன்னை தற்கொலையில் இருந்து காத்ததாக சொல்லி, ஒரு பெண் அவர் புகைப்படத்தை , புனித சின்னமாக போற்றி , பாதுகாத்து வைத்து இருப்பதை நான் ஒரு முறை பார்த்தேன்... ஆனால் இதை எழுதினால் , அதீதமாக இருப்பதாக தோன்றும்.. எனவேதான் , இது போன்றவற்றை எழுதுவதில்லை... ஒவ்வொருவரும் ஒரு விதம்..

3 சமீப காலமாக அவர் மீது எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் குறித்து ?

    குறித்து வைத்து கொள்ளுங்கள்.. இன்னும் ஓர் ஆண்டுக்குள் ஒரு பதிப்பகம் சார்பில், ஓர் ஆன்மீக வாதியின் வாழ்க்கை வரலாறு வெளி வர இருக்கிறது... அந்த நிலையில், உங்களுக்கே இந்த குற்றச்சாட்டுகளின் நோக்கம் புரிந்து விடும்...4 தன் கருத்துக்களை ஏன் அடிக்கடி மாற்றிக்கொள்கிறார்?

     போன வருடம் இளமையாக காட்டினாய்..

இப்போது ஏன் என்னை முதுமையாக காட்டுகிறாய் என ஒரு கண்ணாடியிடம் கோபித்து கொள்ள இயலுமா.? என்ன இருக்கிறதோ 
அதை அது காட்டுகிறது...  நேற்று காட்டியதையே இன்றும் காட்டு என்று சொன்னால் எப்படி?
ஓர் அரசியல்வாதி ஒரு கொள்கையை முன் வைத்து விட்டால் , சாகும் வரை அதை மட்டும்தான் பேசுவான்..
மாற்றி பேசினால் அவன் தோல்வியாக கருதப்படும்,. காலப்போக்கில் அந்த கொள்கைகளை அவன் நம்பாமல் கூட போகலாம்.. ஆனால் விடாப்பிடியாக அதை  சொல்லித்தான் ஆக வேண்டும்..
அனால் ஓர் எழுத்தாளன, அன்றன்றைய நிலையி நேர்மையாக பிரதி பலிக்க வேண்டுமே தவிர, நேற்று சொன்னதையையே இன்றும் சி டி பிளேயர் போல ஒலி பரப்ப கூடாது...
நாளைக்கே, அந்தபதிப்பக துரோகி மனம் திருந்தினால், அவரை பாராட்டும் முதல் நபர் சாருவாகத்தான் இருப்பார்..
இன்று திட்டியதற்காக, நாளையும் திட்ட மாட்டார்...

குடிப்பதைத்தானே அவர் சமூகத்துக்கு சொல்லி தருகிறார்?
    அவர் குடிப்பதை மட்டும்தான் வெளியே சொல்கிறார்... அதைத்தவிர ஆயிரம் விஷயங்களை அவர் செய்கிறார்,,, கடுமையாக உழைக்கிறார்... ஏராளமாக  படிக்கிறார்...  ...  குடிப்பது என்பதெல்லாம் சும்மா ஜாலிக்காக , ஒரு கொண்டாட்ட மன நிலையில் செய்வது...  நெடுங்காலம் குடிப்பதை நிறுத்தி இருந்த அவர், நண்பர்களின் அன்புக்காக இந்த சந்திப்பில்தான் மது அருந்தினார்...  தானும் ஜாலியாக இருந்து மற்றவர்களையும் ஜாலியாக வைத்து இருந்தார்..  அதே நேரத்தில், மாணவர்களும் , இதுவரை குடிக்கதவர்களும் தம்முடன் சேர்ந்து குடிக்க வேண்டாம்  என அறிவுறுத்தினார்...

அவரிடம் கற்று கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன... நம் மனம் எதற்கு ஆசைப்படுகிறதோ அது மட்டுமே நம் கண்ணுக்கு படும்
அந்த வாசகர் சந்திப்பை ஒரு பார்வையளானாக கவனித்தால், எப்படி ஒரு சிறந்த, கிரியேட்டிவான, ஆற்றல் மிகுந்த ஒரு வாசகர் கூட்டத்தை  அவர் உருவாக்கி வைத்து இருக்கிறார் என்பது புரியும்.


அவர் ஏன் வாசகர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார்?
ஒவ்வொரு மனிதனிடமும், ஒரு தந்தை- ஒரு இளைஞன்- ஒரு குழந்தை உண்டு.. பொதுவாக ஒரு எழுத்தாளன் தன வாசக்ரகளுடன் உரையாடும்போது, அந்த எழுத்தாளனுக்கு உள்ளே இருக்கும் தந்தை, வாசகனிடம் இருக்கும் குழ்னதையுடம் உரையாடும்..  அதாவது அந்த எழுத்தாளன், அந்த வாசகனை ஒரு குழந்தை போல நினைத்து பேசுவான்...
ஆனால் சாருவுடன் உரையாடும்போது, கேள்வி கேட்கும் போது, அவருள் இருக்கும் இளைஞன் , வாசகனிடம் இருக்கும் இளைஞனிடம் உரையாடுவது போல இருக்கும்.. அதாவது தனக்கு இணையாவனாக நினைத்து வாசகனிடம் பேசுவார்... எனவேதான் கடுமையாக இருப்பதை போல தோன்றுகிறது...
மற்றபடி அவரைப்போல அன்பு மிகுந்தவர் , யாரும் இல்லை..
ஒரு சின்ன உதாரணம் இந்த வாசகர் சந்திப்பில், ஒரு தீர்மானம் முன் வைக்கப்பட்டது..அது நல்ல தீர்மானம்தான்... ஆனால் சாரு திடீரென எழுந்து அதை கடுமையாக எதிர்த்தார்...அதற்கு அவர் சொன்ன காரணம், அந்த தீர்மானம், அங்கு  வந்து இருந்த ஒரு கல்லூரி மாணவனுக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதுதான்... அவர் எதிர்ப்பை பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது...   தன் குழைந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில், தாய் பறவை அவற்றை பாது காக்க வீரம் காட்டுமே... அது என் நினைவுக்கு வந்தது...
கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் பழகியது, மிமிக்ரி செய்து, நடித்து காட்டி , அந்த நிகழ்வு முழுதும் கொண்டாட்ட மன நிலையில் வைத்து இருந்தது, என எத்தனையோ இருந்தாலும், முதல் முறை பார்த்த அந்த சகோதரன் மேல் அவர் காட்டிய அன்பு, நெருக்கம், என்றும் மறக்க முடியாதது..

14 comments:

 1. சந்திரசேகர்July 28, 2011 at 1:42 AM

  இன்னும் ஓர் ஆண்டுக்குள் ஒரு பதிப்பகம் சார்பில், ஓர் ஆன்மீக வாதியின் வாழ்க்கை வரலாறு வெளி வர இருக்கிறது../////////
  .
  .
  இது சாருவின் எழுத்தை விட பகீர் தகவலாக இருக்கே?!!!அப்படி வந்தா அந்த அவதூறு பரப்புனவங்க நோக்கம் மற்றும் உண்மை சாயம் வெளியே வாந்தி விடும்!!அதுவும் நல்லதுதான்!!சிலர் பெரியார் பெயரை சொல்லி கொண்டு சாருவை தூற்றினர்.அவர்களின் மூஞ்சியில் கரியா?

  ReplyDelete
 2. மேலும் சில கேள்விகள் இருப்பதாக கருதுகிறேன். அடுத்த பதிவில் தொடரவும்.

  ReplyDelete
 3. deei, avanaa nee?

  ReplyDelete
 4. சரி அந்த பொண்ணுக்கு "அந்த" இடத்தில் கைஎழுதிட்டாரா இல்லையா அதை சொல்லும்!!

  ReplyDelete
 5. விக்கிJuly 31, 2011 at 2:25 AM

  மனுஷ்யபுத்திரன் என்ற சந்தர்ப்பவாத பச்சொண்டிக்கு முகநூளில் இத்தனை நாளாய் நண்பனாய் இருந்து அவரின் உண்மை சொரூபத்தை கண்டுகொண்டேன்.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சாருதான் பாவம்!!அவர் நல்லா இருக்க வேண்டும்!!

  ReplyDelete
 6. பிரகாஷ்August 1, 2011 at 2:41 AM

  உயிர்மையில் சாரு சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்பது வருத்தமளிக்கிறது.நீங்கள் அவரிடம் சொல்லி அவரது தளத்திலேயே சினிமா விமர்சனம் எழுத சொல்லுங்கள் ப்ளீஸ்!!

  ReplyDelete
 7. http://charuonline.com/blog/?p=1603
  *****************************************

  @பிச்சைக்காரன்
  அந்த லிங்க் எங்க போகுதுன்னு வெளங்கல!ப்ளீஸ் எந்த தேதியில் எந்த பக்கத்தில் எகனாமிக் டைம்ஸில் அந்த பத்தி வந்துள்ளது என நீங்கள் லிங்க் குடுக்க முடியுமா?ப்ளீஸ்

  ReplyDelete
 8. I have to say thanks to this person who has done many changes in mind
  -Shan

  ReplyDelete
 9. விடலை பையன்August 4, 2011 at 5:03 AM

  சாருவை அவதூறாக வெளியில பேசிட்டு இப்போ ரகசியமா அவரோட நண்பர் தளத்துக்கு வராங்க!!நல்ல பொழப்புடா!!

  ReplyDelete
 10. @விடலை பையன்
  சாருவின் விழியில் வாழ்க வசவாளர்கள் என நாமும் இருப்போம் .சூரியனின் மேல் ஏதோ அடித்தால் சூரியன் அனைதிடுமா?

  ReplyDelete
 11. பிரகாஷ்August 9, 2011 at 2:39 AM

  @பார்வையாளன்
  இந்த மாத காலச்சுவடில் மனுஷ்ய புத்திரனை வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார் கண்ணன்.சாரு மனுஷ பத்தி சொன்னப்ப கூட நான் அவ்வளவா நம்பலை.ஆனா இப்போ புரியுது அவுரு எம்புட்டு கிரிமினல் மைண்டுன்னு!!

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா