Friday, April 20, 2012

பள்ளிவாசலை இடிக்க சொல்லி இலங்கையில் அட்டூழியம்- விழித்தெழுமா உலக சமுதாயம்.?

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் அநீதி உலக வரலாற்றில் கருப்பு அத்தியாயமாக என்றென்றும் இருக்கும். இந்த அட்டூழியங்கள் நடந்து வரும்போது நாம் கையாலாகாத நிலையில் ஒன்றும் செய்யாமல் இருந்தோம் என்ற இழிவான பெயர் , நம் தலைமுறைக்கு கண்டிப்பாக உண்டு.

அங்கு நடக்கும் கொடூரங்களை நாம் சரியான வகையில் உலக அரங்குக்கு எடுத்து செல்ல வில்லை என்பது வரலாற்று சோகம்.

அங்கு நடப்பது சிறுபான்மை மொழிக்கு எதிரான செயல் மட்டும் அன்று. மத அடிப்படையிலும் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுகின்றனர். இதையெல்லாம் சரியான படி வெளி உலகுக்கு எடுத்து செல்லவில்லை..


சில மாதங்களுக்கு முன்னர் முஸ்லிம் தர்காவொன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவொன்றால் தகர்க்கப்பட்டது..

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை  பெளத்தர்கள் முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில்  , இலங்கையின் மத்திய மாகாணத்தில் தம்புள்ளை நகரத்தில் பௌத்தக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்குள்ள பள்ளிவாசல் ஒன்றை அகற்ற வேண்டும் என கோசமிட்டார்கள்.
முன்னதாக, இன்று வெள்ளிக்கிழமை  3.30 மணிளவில் பெட்ரொல்ல் குண்டைப் போன்ற ஒன்று அந்தப் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அதில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை.

 தொழுகையில் ஈடுபட தயாராகியிருந்த போது, சுமார் 50 பிக்குகள் அடங்கலாக 500க்கும் அதிகமானவர்கள் அங்கு வந்து கலகத்தில் ஈடுபட்டதாகவும், பள்ளிவாசலை இடிக்க வேண்டுமென்று கோசம் போட்டு, கற்களை வீசியெறிந்ததாகவும் பள்ளிவாசல் தரப்பினர் கூறுகின்றனர்.
அந்த இடத்துக்கு அருகில் ஊடகவியலாளர்கள் எவரும் சென்று படம் பிடிக்க அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இது எங்கள் சிங்கள நாடு, எங்கள் நாடு பௌத்த நாடு, அதனை காப்பாற்றுங்கள்' என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமி்ட்டிருக்கிறார்கள்.

'பௌத்த பூமியை பாதுகாப்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.


தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க முடியாது என்ற பட்சத்தில் தம்மை அங்கிருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தியதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகை ரத்து செய்யப்பட்டது. 
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் மற்ற பகுதிகளிலிருந்து பஸ்களில் கொண்டுவந்து இறக்கப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறினர்

4 comments:

  1. சிங்கள வெறியனின் அடுத்த இலக்கு சிறுபான்மை முஸ்லீமாகதான் இருக்கும்- ஆனால் இலங்கை முஸ்லீம்கள் சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள்- இருந்தும் ஏன் இந்த நிலை ராஜபட்க்சே மவுனம் ஏன்?- காரனம் அடுத்த குறி நம்மை நோக்கியே!- உசார்!-உசார்!

    ReplyDelete
  2. புலிகளும் சிங்களவா்களும் ஒன்றுதான் என்பதைக் காட்டி விட்டார்கள்.புலிகள் பள்ளிவாயலில் வைத்து முஸ்லிம்களை சுட்டுக் கொன்றார்கள்.சிங்களவா்கள் பள்ளிவாயலையே உடைக்கச் சொல்லுகிறார்கள்.எதிர்காலம் முஸ்லிம்களுக்கு பாதகமாகவே அமையும்.

    ReplyDelete
  3. http://changesdo.blogspot.com/2012/04/is-it-gift-for-muslims-who-support.html

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா