Friday, November 9, 2012

கற்பழிப்பு கடவுள் செயலாம் - ஒபாமாவுக்கு உதவிய குடியரசு கட்சியின் லூஸ் டாக்


 தேர்தல் முடிவுகள் , பிரச்சாரத்தின் அடிப்படையில் மட்டும் அமைவதில்லை. ஆனால் பிரச்சாரமும் முக்கியம் என்பதில் சந்தேகம் இல்லை.  நம் ஊரில் பிரச்சாரம் , அன்பளிப்புகள் , பண கவர் போன்றவை மட்டுமே தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பது உண்டு.

அமெரிக்க தேர்தலில் பிரச்சாரத்தின் போது நடந்த சம்பவங்கள் ஓரளவு தேர்தல் போக்கை பாதித்தன.

ஆரம்பத்தில் ஒபாமா மிகவும் முன்னணியில் இருந்தார். ஆனால் ரோம்னியின் அதிரடி பிரச்சாரம் அவரை முன்னணிக்கு கொண்டு வந்தது. ஒபாமா மிகவும் சாஃப்டாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். லேசாக  நிறவெறியையும் பிரச்சாரத்தில் கொண்டு வந்தார்.

அமெரிக்காவின் வேலை இல்லாத்திண்டாட்டம் , வெள்ளையர்களை அதிகம் பாதித்த நிலையில், ரோம்னியின் பிரச்சாரத்துக்கு பலன் கிடைத்தது என்றே சொல்ல வேண்டும். விளைவாக ரோம்னிதான் வெல்வார் என்ற நிலை ஏற்பட்டது.

அப்படியே ஒபாமா வென்றாலும் கூட , மொத்த வாக்குகள் ரோம்னிக்குதான் அதிகம் கிடைக்கும் என்ற நிலை ஏற்பட்டது ( இப்போது கூட - ஒபாமா அதிக வாக்குகள் பெற்றாலும் கூட - இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவுதான் . )

முதல் கட்ட விவாதத்தில் அதிரடியாக பேசி தன் நிலையை மேலும் வலுவாக்கி கொண்டார் ரோம்னி.

ஆனால் அதன் பின்புதான் ரோம்னியின் வீழ்ச்சி ஆரம்பித்தது. அதிக வாய் அவருக்கே பாதிப்பு ஏற்படுத்தியது.

குறிப்பாக பெண்களின் வெறுப்பை நன்றாக சம்பாதித்து கொண்டார். அவர் லூஸ் டாக் போதாது என அவர் கட்சியினரும் நன்றாக லூஸ் டாக் விட்டனர்.

அபார்ஷன் பற்றிய விவாதத்தில் அவர் கட்சியினரின் உளறினர். ஒருவர் உதிர்த்த பொன்மொழி “ கற்பழிப்பு கொடூரமானதுதான். ஆனால் அந்த  கொடூரத்துக்கு இடையிலும் குழ்ந்தை உருவாகிறது என்றால் அது கடவுள் செயலாகும். அந்த கருவை கலைப்பது தவறு “ என்பது போல பேச பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு மன்னிப்பு கேட்டாலும், பெயர் கெட்டது கெட்டதுதான் .

அதே போல வெள்ளையர்களை சோப் போடும் முயற்சியில் ,  மற்றவர்கள் வாக்குகளை கணிசமாக இழந்தார் ரோம்னி.

கடைசி கட்ட விவாதத்தில் ஒபாமாவின் பேச்சு அட்டகாசம். குறிப்பால , அமெரிக்காவின் கப்பல் படை ப்லம் ஒபாமா ஆட்சியில் குறைந்து விட்டது என்ற ரோம்னியின் குற்றச்சாட்டுக்கு , ஒபாமாவின் பதில் ஃபர்ஸ்ட் கிளாஸ்


ஆனாலும் போட்டி கடுமையாகவே இருந்தது. கடைசி வில்லனாக வந்ததுதான் , சாண்டி புயல். இது பிரச்சார வேகத்தை தடுத்தது. ஆனால் அதிபர் என்ற முறையில் ஒபாமா நிர்வாகத்தின் துரித நடவடிக்கைகள் ஒபாமாவுக்கு பெரிய ப்ளசாக அமைந்தது.


தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்த்தால் தெரிவது இதுதான்.

பெருவாரியான வெள்ளையர்கள் ரோம்னிக்குத்தான் வாக்களித்து இருக்கின்றனர். இதே டிரண்ட் எல்லா பிரிவினரிடம் இருந்து இருந்தால் , ரோம்னி அபார வெற்றி பெற்று இருப்பார்.

ஆனால்,


  • சிறுபான்மை மக்கள் மத்தியில் ஒபாமா அலை வீசி இருக்கிறது.
  • பெண்கள் மத்தியிலும் ஒபாமாவுக்கே அதிக ஆதரவு.
  •  நடு நிலை வாக்காளர்களும் ஒபாமாவுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ளனர்.
  • இளைஞர்கள் பெருவாரியாக ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்
  • ரோம்னி ஒரு செல்வந்தர். அவருக்கு ஏழைகளின் நிலை புரியாமல் பேசுகிறார் என்ற ஒபாமாவின் பிரச்சாரம் எடுப்பட்டுள்ளது. குறைவான வருமானம் உள்ளவர்கள் , ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு அமெரிக்கா மீதான பயம் போய் விட்டது, மீண்டும் நம் பலத்தை நாம் காட்ட வேண்டும் என வெறியூட்டும் பேச்சுகளை பேசி, வெற்றி பெறும் நிலையில் இருந்தார் ரோம்னி. 

ஆனால் , சில பிரிவு மக்களிடையே வீசிய ஆதரவு அலைதான் ஒபாமாவை வெற்றி பெற வைத்துள்ளது.

   முன்பே சொன்னது போல ஒபாமாவின் வெற்றி உலக அமைதிக்கு நல்லது. 





No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா