Monday, November 17, 2014

மருதகாசியின் பாடல் வரிகளை மாற்றிய எம் ஜி ஆர் - கலவை பதிவு

முன் குறிப்பு - மிக்சர் போஸ்ட் என்ற ஆங்கில வார்த்தை தேவை இல்லையே என சுட்டிக்காட்டிய நண்பர் கரிகாலனுக்கு நன்றி
--------------------------------------------------------------
மலை வாசஸ்தலம் ஒன்றில் எம் ஜி ஆர் பட ஷூட்டிங் நடக்க இருந்தது... வெதர் நன்றாக இருக்கிறதா என கேட்டு வை,...என இயக்குனர் துணை இயக்குனரை பணித்து இருந்தார்... து . இ கலக்டர் அலுவகத்தை தொடர்பு கொண்டு அங்கு வெதர் நன்றாக இருக்கிறதா சார் என கேட்க , சூப்பர் வெதர் என சொல்லி விட்டனர்.
படக்குழு அங்கே சென்றது.. ஆனால் ஷூட்டிங் நடத்த தோதான வெதர் இல்லாமல் , படப்படிப்பை நடத்த முடியவில்லை.. பெரிய நஷ்டம்..
என்ன தவறு நடந்தது..
வெதர் நன்றாக இருக்கிறதா என இவர் கேட்டதன் அர்த்தம் , ஷூட்டிங் நடத்த போதுமான வெயில் , மழையற்ற தன்மை போன்ற சினிமா விவாகாரம்... அவர்கள் நன்றாக இருக்கிறது என சொன்னது , ஒரு சராசரி மனிதனின் பார்வையில்..மேக மூட்ட்டம் , மெல்லிய மழை போன்றவற்றை அவர் சிறப்பான வெதர் என சாதாரண விசிட்டர் பார்வையில் சொல்லி விட்டார்.
இவர் சொல்லிம்போதே தெளிவாக சினிமாவுக்கு ஏற்ற வெதர் இருக்கிறதா என கேட்டு இருக்க வேண்டும்...
இப்படி தகவல் தொடர்பு குளறுபடியால் பல பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு..
------------------------------------------------------------------
பிராமணர்களை திட்டுவது உபத்தரவமில்லாமல் அறச்சீற்றத்தை காட்டும் வழி என்ற கேவலமான மனப்போக்கு தமிழகத்தில் உள்ளது . அதை நம்மால் மாற்ற முடியாது . ஆனால் இந்த சராசரிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு , பிராமணர்கள் என்பதற்காக சில பொக்கிஷயங்களை ஒதுக்கி விடக்கூடாது . அந்த வகையில் வ வே சு ஐயர் பற்றிய புத்தகம் ஒன்றை படித்தேன் . சிறிய அறிமுகம் ஒன்றை விரைவில் தருவேன்
-----------------------------------------------------------
நேற்று நண்பர் தமிழ்வாசி பிரகாஷூடன் செல்பேசினேன் . ஓர் அற்புதமான கருத்தை எடுத்து வைத்தேன் . மூணு நிமஷம் மூச்சுவிடமால் பேசி முடித்ததும் , இரக்கமே இல்லாமல் ஒண்ணுமே புரியல என்றார் . பிறகு வேறு மாடுலேஷனில் குரல் மாற்றி மெதுவாக பேசினேன் . புரியவில்லை என்றால் தைரியமாக சுட்டிகாட்டுதல் நல்ல பண்பாகும்
-------------------------------------------------------------------------
வெள்ளைக்காரன் : வாட் ஈஸ் தொடுவானம்.
கிராமத்தான் : வானமும் , பூமியும் தொடும் இடம்
வெ: வானமும் பூமியும் தொடுது..உங்க ஊர்ல மனுஷன , மனுஷன் தொடுவதில்லை ‪#‎ஒருத்தி‬
--------------------------------------------------------------------
அடுத்த தேர்தலை நினைப்பவன் அரசியல்வாதி அடுத்த தலைமுறையை நினைப்பவன் தலைவன்... 
நான் எதையும் நினைக்காதவன்.. அதனால் நான் பிரதமர்‪#‎முகமதுபின்துக்ளக்‬
------------------------------------------
ஃபேஸ் புக்கில் இருக்கும் தன் நண்பர்கள் லிஸ்ட்டை தீவிரமாக அலசிக்கொண்டு இருந்தார் “ ஒரு நண்பர் “ . என்ன பண்றீங்க என்றேன்.. “ இல்லை, ஃபேஸ் புக் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் பண்ணனும் ..அதுதான் வொர்க் “ என்றார்.
இதுக்கு என்ன பெரிய வொர்க்.. ரெண்டு நிமிஷத்துல செஞ்சுடலாமே என்றேன்.
ரெண்டு நிமிஷத்துல பண்ணிடலாம்.. ஆனால் ஃபேஸ்புக்கை விட்டு போகாதீங்க .. இலக்கியத்தை கை விட்டுடாதாதீங்கனு வேண்டுகோள் விடுக்க யாரையாவது நம்பகமான ஆள செட் பண்ணனுமே ..அதுதான் தேடுறேன் என்றார்.
” நீங்க ரிசைன் பண்ணுங்க ( ஞ்ங்கொய்யால ..பெரிய கவர்னர் போஸ்ட்டு) .. நான் கெஞ்சுற மாதிரி கெஞ்சுறேன்.. திரும்பி வந்து சேர்ந்துக்கங்க” என்றேன்.
” உங்களை எல்லாம் நம்ப முடியாது... ரிசைன் செய்த ஒரு நண்பருக்கு நன்றினு போஸ்ட் போடுவீங்க..வேற ஆள் பார்க்குறேன் “ என்றார்.
அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் கிளம்பினேன்‪#‎ஒருநண்பர்பாறைகள்‬
_______________________________________________________
இந்த வஞ்சி மகள் ஒரு ஊதாப்பூ...
இசை வண்டுகள் வந்து ஊதாப் பூ.... 
இந்த கோலமகள் ஒரு கொய்யாப்பூ.. 
தென்றல் கைகளினாலே கொய்யா பூ

இந்த வண்ண மகள் விழிகள் எனும் வேலை.. ( வேல் )
கண்டு வர்ணனைகள் செய்வது என் வேலை...( Job/work)
தென்றல் மெல்ல மெல்ல நீந்துகின்ற மாலை..( evening)
இவள் மார்பினில் நான் ஏந்துகின்ற மாலை...( பூ மாலை )
அந்த காமன் விடும் மலர் கணைகள் அஞ்சும் (ஐந்தும்)
இவள் கிட்ட நின்றால் பாய்வதற்கு அஞ்சும் ( பயப்படும் )
இந்த தோகை மயில் உறவுகளை நாடி ( நாடி செல்லுதல் )
கொஞ்ச துடித்து இருக்கும் காதலனின் நாடி ( நாடி துடிப்பு )
_________________________________________________________
நான் வெஜ் உணவுகளை சமைக்கையில் அதன் ரத்த வாசம், அறுபட்ட காயம் போன்றவற்றை மறைக்க வாசனை பொருட்கள் , மசாலாக்கள் சேர்ப்போம் அல்லவா? ஆனால் காய்கறிகள் , கீரைகள் போன்றவற்றுக்கு என இயற்கை மணம் உண்டு..அதை வாசனை பொருட்களால் மறைக்க கூடாது.. போரும் அமைதியும் போன்ற நூல்களில் தேனீர் கொதிக்கும்போது உருவாகும் நறுமணத்தை டால்ஸ்டாய் அழகாக வர்ணித்து இருப்பார்... அது போன்ற நறுமணத்தை அனுபவிக்க இந்த குளிர் காலம் மிகவும் ஏற்றது
-----------------------------------------------------------------------
கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும் என்ற எம் ஜி ஆர் பாடல் கேட்டு இருப்பீர்கள்.. அதை இயற்றியது வாலி அல்லது கண்ணதாசன் என நினைத்திருப்பீர்கள்/ நினைத்திருந்தேன்.. இல்லை...இது மருதகாசி... இதில் ஒரு சுவையான செய்தியை சொல்கிறார்..
பொன் பொருளை கண்டவுடன் ,
வந்தவழி மறந்து விட்டு
தன் வழியே போகிறவர் போகட்டுமே.. 
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
இப்படி எழுதினாராம் மருத காசி.. பாடலை படித்து பார்த்த எம் ஜி ஆர் ஒரு கேள்வி கேட்டாராம் .. ‘ ஒருவனுக்கு பொன் பொருள் வந்தவுடன் , பழைய தவறான பாதையை விட்டுவிட்டு, புதிதாக ஒரு வழியை தேர்ந்தெடுத்து , தன் வழியே போனால் நல்லதுதானே.. இதை ஏன் ஒரு குறை போல எழுதி இருக்கிறீர்கள் என்றாராம்.. எம் ஜி ஆரின் நுட்பமான பார்வையை கண்டு திகைத்த மருத காசி அதை மாற்றினாராம்..
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
”கண் மூடி” போகிறவர் போகட்டுமே...
இப்போதைய நாயகர்கள் இப்படி எல்லாம் பாடலை படித்து பார்க்கிறார்களா?
-------------------------------------------------------------------------------
பழைய பாடல் என்றால் கண்ணதாசன் , வாலி என நம் ஆட்கள் நினைப்பதுண்டு..அந்த காலத்தில் மருதகாசி தன் பாணியில் கலக்கினார்..
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா.
----------------------------------------------------------------------
ஒரு நண்பர் யுக்தியை பலர் திறம்பட பயன்படுத்தினாலும் சிலர் சொதப்புகிறார்கள் . ஒரு நண்பரை காலையில் சந்தித்தபோது என சிலர் ஆரம்பிக்கிறார்கள் . அதில் தவறில்லை . ஆனால் அதை 6.30க்கே போஸ்ட் செய்து தொலைக்காதீர்கள்
--------------------------------------------------------------------
நீங்கள் 15வ்யது ஆணாகவோ பெண்ணாகவோ இருந்தாலும், அடல்ட்ஸ் படங்களில் நடிக்க தடை இல்லை... ஆனால் என்ன நடித்து இருக்கிறீர்கள் என பார்ப்பது சட்டப்படி தவறு - சட்டம் ஒரு கழுதை
-------------------------------------------------------------------------
திருச்சியில் இருந்து எக்மோருக்கு ஒரு அன் ரிசர்வ்டு டிக்கட் எடுக்கிறீர்கள்... தாம்பரத்தில் இறங்கி அதே டிக்கட்டை வைத்து , ஒரு எலக்ட்ரிக் டிரையினை பிடித்து , மாம்பலம் நுங்கம்பாக்கம் என அந்த வழியில் ( தாம்பரம் - எக்மோர் ) எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம்... ஆனால் அந்த டிக்கட்டை விட அதிக காசு கொடுத்து வாங்கிய ரிசர்வ்டு டிக்கட்டை வைத்து ( செகண்ட் கிளாஸ் பெர்த் , ஏசி ) இப்படி பயணிக்க முடியாது # சட்டம்ஒருகழுதை

------------------------------------------
அந்த காலத்தில் 24 மணி நேரம் இயங்கும் இண்டர்நெட் செண்டர்கள் இருந்தன . நள்ளிரவு கூட பிரவுசிங் செய்யலாம் . நெட் பரவலாகி விட்டதால் அவை மறைந்து விட்டன .திடீரென உருவாகி திடீரென மறைந்த ஒரு தொழில் அது . பேஜர் என இன்னொன்றும் இப்படியே

---------------------------------------------
பேருந்து பயணம் . சோலை புஷ்பங்களே என்ற பாடல் . அந்த பாடல் வெளிவந்தபோது பிறந்தே இராத ஓர் இளம்பெண் அதை அழகாக ரசித்தது பாடலை விட அழகாக இருந்தது . ஸ்டாண்டிங்கில் இருந்தார் . பாடலுக்கு ஏற்ப அழகாக தலையை மட்டும் அசைத்து ரசித்தது செம க்யூட் . நானும் அப்படி செய்ய முயன்றேன் . சரியாக வரவில்லை . ஒரு கட்டத்தில் அந்த விபரீத முயற்சியை அவர் பார்த்துவிட்டு கொடுத்த நளினமான ரெஸ்பான்ஸ் குறித்து பஸ்சிலேயே எழுத நினைத்தேன் . ஆனால் பஸ் குறித்த எழுத எனக்கே போர் அடித்து விட்டது . படிப்பவர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்காது . நாமே இவ்வளவு யோசிக்கிறோம் . இ. வே . மா படத்தில் ஒரே மாதிரி பஸ் காட்சி மீண்டும் மீண்டும் ஒரே கான்சப்டில் வரும் . முடியல . பஸ் பயணம் செய்தால் எத்தனையோ விஷயங்கள் கிடைக்கும்
-------------------------------------------------------------------------
incentive இல்லாமல் உங்களால் ஏன் காதலிக்க முடியவில்லை ? பாதுகாப்பு , அரவணைப்பு , பாலுறவு , கிளர்ச்சி , இன்பம் என எதையும் எதிர்பாராமல் நிகழ்வதே காதல் .- ஜே கிருஷ்ணமூர்த்தி
-----------------------------------------------------------------------------
முன்னாள் காதலி அல்லது முன்னாள் காதலன் என்ற சொற்பிரயோகம் எனக்கு எப்போதுமே குழப்பம்தான் . நாம் காதலிக்கும் ஒருவரை காதலிப்பதை என்றாவது ஒரு நாள் நிறுத்துதல் சாத்தியமா ? காதல் என தவறாக நினைத்த உறவில் இருந்து வெளி வந்த பின் சம்பந்தப்பட்டவரை முன்னாள் காதலன் என்றோ காதலி என்றோ எப்படி சொல்வது ? It was never a love at all 
------------------------------------------------------------------------------------
ஜானி படத்தை ரீமேக் செய்யுங்களேன் என என்னிடம் சிலர் கேட்பார்கள்..கண்டிப்பாக செய்யலாம்... ரஜினி போன்ற ஓர் ஆக்டரை கூட்டி வாருங்கள் என்பேன்...அதன் பின் அவர்கள் வருவதில்லை - இயக்குனர் மகேந்திரன்
----------------------------------------------------------------------------
இயக்குனர்கள் அனைவருக்குமே ரஜினியின் நடிப்பு மீது அளவற்ற நம்பிக்கை உண்டு... ஒன்பது ரூபாய் நாவலை படமாக்க , தங்கர் பச்சான் முதலில் அணுகியது ரஜினியைத்தான்... ரஜினிக்கும் ஓக்கேதான்...ஆனால் க்ளைமேக்சை தன் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என தயங்கி விட்டார்... ரஜினியிடம் ஏன் சென்றீர்கள் என தங்கரிடம் கேட்டார்கள்... அவரைப்போன்ற யதார்த்தமான நடிகர் வேறு யாரும் இங்கு இல்லை என்றார் அவர்
------------------------------------------------------------------------------
செக்ஸ் ஏன் இந்த அளவுக்கு மனதை ஆக்ரமிக்கிறது ? சுயம் அழிந்து , முழுமையாக ஈடுபட செக்சில் மட்டுமே உங்களால் முடிகிறது . எனவே மீண்டும் மீண்டும் அந்த அனுபவத்தை மனதுக்குள் நிகழ்த்துகிறீர்கள் . இது அவசியமற்றது . சாப்பிடுவதை , நீர் அருந்துவதை , உரையாடுவதை , முழுமையாக ஈடுபட்டு செய்து பழகுங்கள் . சுயம் அழிய , செக்ஸ் தேவையில்லை என புரியும்#ஜேகிருஷ்ணமூர்த்தி
--------------------------------------------------------------------------
ஜப்பானில் சில பத்திரிக்கைகள் கடைசிப்பக்கத்தில் இருந்து ஆரம்பித்து அப்படியே சென்று முதல் பக்கத்தில் முடியுமாம்.. இதை சுஜாதா நகைசுவையுடன் போலியான தற்புகழ்ச்சியுடன் கணையாழியின் கடைசிப்பக்கத்தில் இப்படி எழுதுகிறார்.
ஜப்பானில் எல்லா பத்திரிக்கைகளும் கணையாழி போலத்தான்.. கடைசிப் பக்கத்தில் இருந்துதான் படிக்க ஆரம்பிக்கிறார்கள்..
-------------------------------------------------------------------------------
அரசியல்வாதியின் கல்லறை வாசகம்..
தயவு செய்து கை தட்டி விடாதீர்கள்.
எழுந்தாலும் எழுந்து விடுவார்
-----------------------------------------------------------------------------------
பற்களின் குழிகளை அடைக்கும் பல் வைத்தியர் இறந்து விட்டார்...அவருக்கான கல்லறை வாசகம்..
மெதுவாக நடந்து செல்லுங்கள்
பல் வைத்தியர்
தன் கடைசி குழியை
அடைத்துக் கொண்டு இருக்கிறார்
--------------------------------------------------------------------------
ந்யூட்டன் சமாதியில் காணப்படும் வாசகம்..
இயற்கையும் அதன் விதிகளும்
இருட்டில் மறைந்து இருந்தன..
ந்யூட்டன் உண்டாகக்கடவது
என்றார் தேவன்
எல்லாம் வெளிச்சமாயிற்று
----------------------------------------------------------------------------------------
மெட்டி படத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி ? “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது
Like----------------------------------------------------------------------------------------------------------------
ஓர் ஐந்து வயது சிறுவன் சாலையில் நடந்துகொண்டிருந்தபோது கீழே கிடந்த பத்து ரூபாய் மகிழ்ச்சி அளித்தது . அன்று முதல் தரையை பார்த்தே நடக்க ஆரம்பித்தான்
அறுபது ஆண்டுகள் கழித்து , நண்பனிடம் சொன்னான் . தரையை பார்த்து நடந்தேன் . மொத்தம் ஐந்தாயிரம் ரூபாய் . இரண்டு வளையல்கள் . சில ஜோடி புதிய செருப்புகள் . சோழர்கால நாணயம் ஒன்று , காதல் கடிதங்கள் ரெண்டு , தற்கொலை கடிதங்கள் சில கிடைத்தன என்றார் . நண்பன் சொன்னான் . அட முட்டாளே . நீ என்னவெல்லாம் இழந்திருக்கிறாய் தெரியுமா ? பல சூரிய உதயங்கள் , மேக ஓவியங்கள் , வான வில் , சாலை ஓர மலர்கள் , குழந்தைகளின் புன்னகை , அழகிய பெண்கள் என பட்டியலிட்டான் . இவர் சொன்னார் . இவற்றையெல்லாம் நான் இழந்துவிட்டதாக நினைக்கிறாய் . நீயும் இவற்றை கவனித்திருக்க மாட்டாய் . சும்மா யோசித்து சொல்கிறாய் . அதற்கு நானே மேல் . தரையை பார்த்தே , மக்களைப்பற்றி நாகரிகங்கள் பற்றி சொல்லும்நிலைக்கு வளர்ந்திருக்கிறேன் . நீ வெறும் loser . # பிச்சை எடுத்தாலும் அதை முழு கவனத்துடன் பிரக்ஞையுடன் செய்யுங்கள்
---------------------------------------------------------------------------------------------------
மெட்டி படத்தில் ஒரு காட்சி . தங்கள் தாயாரின் சடலம்கூட அவர்களை அந்த அளவுக்கு கதற வைக்காது . சடலம் எடுத்துச்சென்றவுடன் , பூக்களும் மாலைகளும் மட்டும் கிடக்கும் . நடுவே வெற்றிடம் . அந்த வெறுமை ! ! கதறி விடுவார்கள் . நாமும்தான் . சினிமா மொழியை புரிந்துகொண்ட ஒப்பற்ற கலைஞன் மகேந்திரன்



Sunday, November 16, 2014

வாழைப்பழமும் விகாரப் புணர்ச்சியும் - மிக்சர் போஸ்ட்

தமிழ் இலக்கணத்தில் ஒற்று மிகும் இடங்களை ஒழுங்காக கற்க வேண்டும் .புள்ளி வைத்த எழுத்தில் தவறு செய்தால் அர்த்தம் மாறிவிடும் . புலி கொன்ற யானை , புலிக் கொன்ற யானை இரண்டும் வெவ்வேறு அர்த்தங்கள் . குடிசை தொழில் வேறு குடிசைத் தொழில் வேறு
------------------------------------------------------------------------
சின்ன வீடு என்பது விகாரப் புணர்ச்சியா என சிலர் கேட்கிறார்கள் . இல்லை , சின்ன வீடு என்பது இயல்புதான் . சின்ன பிளஸ் வீடு சின்னவீடு . இதில் எந்த எழுத்தும் மாறவில்லை அல்லவா . எனவே இது இயல்பு புணர்ச்சி .
--------------------------------------------------------------------------------
சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்து நான் வாழ வைப்பேன் என்ற படம் வெளிவந்தது . அதில் அப்போது புதிய நடிகராக இருந்த ரஜினி சிறிய ஆனால் பவர்ஃபுல் கேரக்டர் செய்திருப்பார் . படம் பார்த்த சிவாஜி தனக்கு அந்த கேரக்டர் கொடுத்திருக்கலாமே என ஆதங்கப்பட்டாராம் . கடைசியில் , ரஜினி வளரும் நடிகன் . நல்லா வந்தா சரிதான் என பெருந்தன்மையாக சொல்லி விட்டாராம் . பிற்காலத்தில் அதை சிவாஜிக்கு உரிய மரியாதை கொடுத்து படையப்பாவில் நடிக்க வைத்திருப்பார் ரஜினி .
-----------------------------------------------------------------------------------------
அந்த கால தலைவன்என் தலைவன் போருக்கு முன் விருந்து கொடுப்பான் . சுவை குறைவான கள்ளின் மேற்பகுதியை தான் பருகிவிட்டு சுவைமிக்க கீழ்பகுதியை எங்களுக்கு தருவான் . ம் .புறப்படுங்கள் என ஆணையிடமாட்டான் . அவன் முதல் ஆளாக கிளம்புவான் . நாங்கள் பின் தொடர்வோம் 
புறநானூற்று பாடல்
---------------------------------------------------------------------------------
ஒரு சொல் பல பொருள் என்ற தன்மை தமிழின் சிறப்பு .இதை பயன்படுத்தி சிலர் டபுள் மீனிங்க்கில் பேசுவது வேறு விஷயம் . ஒரு சொல் ஒரு பொருளை மட்டுமே தர வேண்டும் என பாடுபட்டவர்கள் பிரெஞ்சுக்காரர்கள்தான் . இதன் காரணமாக சட்ட விஷயங்களுக்கு பொருத்தமான மொழி பிரெஞ்சுதான் என்ற புகழ் முன்பு இருந்தது . கஷ்டப்பட்டுதான் இதன் செல்வாக்கை ஒடுக்கினார்கள்
---------------------------------------------------------------------------

டிரெய்னில் ஏறுவதற்கு முன் சார்ட்டை ஆர்வமாக கவனிப்பது என் இயல்பு . கோகிலாம்பாள் ,54 என பக்கத்து சீட்டை பார்த்து சற்று வருத்தமாகவே இருந்தது . ஆனாலும் மழை இன்மை , வெயில் என பேசியபடி வந்தேன் . சாப்பாடு நேரம் வந்ததும் அவர் எனக்கு ஒரு லெமன் ரைஸ் பாக்கெட் கொடுத்தார் . சைட் டிஷ் சூப்பர் . கத்திரிக்காய் முருங்கைக்காய் காம்பினேஷன் சூப்பர் . உன் துக்கம் சந்தோஷமாக மாறும் என கர்த்தர் சொன்னதை நினைத்துக் கொண்டேன்
-----------------------------------------------------------------------------------------
தேங்காய் புணர்ச்சி என்றால் என்ன ? இது சற்று வித்தியாசமான புணர்ச்சி என்பதால் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது . நீளுதல் , உயிரும் உடலும் அழிந்து ஒன்றாதல் என இரு அம்சங்கள் உள்ளன . காய் இருந்தால்தான் இந்த விதி செல்லும் என்கிறது நன்னூல் . தெங்கு நீண்டு உயிர்மெய் கெடும் ,காய்வரின் . அதாவது தெங்கு பிளஸ் காய் . காய் வருவதால் தெங்கு என்பது தேங்கு என நீள்கிறது . கு என்ற உயிர்மெய் கெடுகிறது அதாவது அழிகிறது . தேங் பிளஸ் காய் . தேங்காய் .
----------------------------------------------------------------------------
வாழைப்பழம் என்றால் விகாரப் புணர்ச்சியா இயல்பு புணர்ச்சியா என சிலர் கேட்கிறார்கள்... கேள்வியிலேயே பதில் உள்ளது... இயல்பு என்ற வார்த்தையும் புணர்ச்சி என்ற வார்த்தையும் எந்த மாறுபாடும் இல்லாமல் சேர்வது இயல்பு புணர்ச்சி.. விகாரம் என்பதும் புணர்ச்சி என்பதும் இப்படி சேரும்போது விகாரம் என்பது விகாரப் என மாறிய பின்புதான் சேர்ந்து , விகாரப்புணர்ச்சி என மாறுகிறது... இயல்பு புணர்ச்சி , விகாரப்புணர்ச்சி என்ற வார்த்தைகளிலேயே அதற்கான இலக்கணம் இருக்கிறது.. வாழை மரம் என்பது இயல்பு புணர்ச்சி.. வாழைப்பழம் என்பது விகாரப் புணர்ச்சி
------------------------------------------------------------------------
பெரிய ஆலயங்களில் ஓர் மூலையில் ஒரு மரம் இருக்கும் . ஸ்தல விருட்சம் என்று பெயர் . சிறு தெய்வங்கள் பெரிய பெரிய மரங்களுக்கிடையில் ஓர் ஓரமாக இருக்கும் . தமிழனின் வழிபாடு இப்படி இயற்கை சார்ந்து இருந்தது . நான் பெரியாரின் பேரன் என்றாலும் தமிழ் கடவுள் முருகனை வழிபடுபவன் -அறிவுமதி
------------------------------------------------------------------------------------
தினசரி வழக்கமாகிவிட்டது
தபால்பெட்டியைத் திறந்துபார்த்துவிட்டு
வீட்டுக்குள் நுழைவது.
இரண்டு நாட்களாகவேஎந்தக் கடிதமும் இல்லாதஏமாற்றம்.
இன்று எப்படியோஎன்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறுஇறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
-கல்யாண்ஜி
----------------------------------------------------------------------------------------
ஓர் உலோகத்துக்கும் இன்னொர் உலோகத்துக்கும் புரோட்டான்கள் எண்ணிக்கை மட்டுமே வித்தியாசம் . இதை மாற்றுவது அந்த காலத்தில் எளிதான தொழிலநுட்பமாக உள்ளது . சர்வசாதாரணமாக இதை குறிப்பிடுகிறார்கள் . உலோகத்தை மாற்ற க்ரியாஊக்கி தேவைப்படுவதுபோல , மனிதனை மாற்ற குருவருள் தேவை என்கிறார் ஆதிசங்கரர்
------------------------------------------------------------------------
வழவழப்பான தாளில் இருந்த ஆங்கில கில்மா புத்தகத்தை கைமாத்தாக காசு வாங்கி , அந்த காசில் வாங்கினேன் . ஆனால் டிக்ஸ்னரியை பார்த்து படிப்பதற்குள் சுருண்டு சுருங்கி போய் விட்டது மனது . காசு வேஸ்ட் . ஆனால் பூனை , சேவல் போன்றவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை அப்படித்தான் கற்றேன்

---------------------------------------------------------------------
ஆடி மாதத்தில் இருந்து நிழல் மாதங்கள் தொடங்குகிறது . நாம் சூரியனைவிட்டு விலகி இருப்போம் . தை மாதத்தில் இருந்து ஒளி மாதங்கள் தொடங்குகிறது . அந்த காலத்தில் இந்த இணைப்பு மாதங்களை கொண்டாடினாலும் ஆடியை விட தையை கூடுதலாக கொண்டாடினார்கள் . வெயிலை வரவேற்றார்கள் . குளிர்பான , ஏசி நிறுவனங்கள் புண்ணியத்தில் வெயிலை எதிரியாக நினைக்க ஆரம்பித்து விட்டோம்
---------------------------------------------------------------------------------------
டிரெய்னில் யாரென்றே தெரியாதவர்களிடம் உடமைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வெளியே போவோம் . பெரும்பாலும் ஏமாற்ற மாட்டார்கள் . நம்பிக்கைவைப்பது என்பது இயல்பான தன்மை என இப்படி விளக்குகிறார் ஓஷோ . ஆனால் அறிவு ஜீவிகள் நம்பிக்கை வைப்பதை பலவீனமாக நினைக்கிறார்கள் . ஆன்மிக பாதையில் உலகியல் அறிவுக்கு வேலையில்லை என்கிறார் ஓஷோ
----------------------------------------------------------------------
வயிற்று பசிதீர்க்க
வராதா என்று ஏங்கி
மழைக்கு அண்ணாந்து
பார்த்த கண்கள் கண்டுகொண்டன
வானம் எல்லை இல்லாதது
-பிரமிள்

-------------------------------------------------------------------------
மகாபாரதத்தில் ஒரு சுவையான காட்சி  . துரியொதனன் மேல் போர் தொடுப்பதா வேண்டாமா என பாண்டவர்களிடையே விவாதம் . கிருஷ்ணர் நடுவர் . போரை மூவர் ஆதரிக்கின்றனர் . சமாதான தூதை இருவர் ஆதரிக்கின்றனர் . பெரும்பானமை ஆதரவு போருக்கு . சபாநாயர் பெரும்பாலும் வாக்களிக்க மாட்டார் . ஆனால் சிக்கலான நேரங்களில் வாக்களிப்பார் அல்லவா . அது போல கிருஷ்ணரும் சமாதானத்துக்கு ஆதரவாக வாக்களித்து போர் என்ற தீர்மானம் வெற்றி பெறாமல் தடுக்கிறார் . லிங்கன் படத்தில் இப்படி ஒரு காட்சி வருமே ? நினைவிருக்கா
______________________________________________________________
கீழ்கண்டவர்களில் நீங்கள் யார் ?
1 கடவுள் இருக்கிறார் என நம்புகிறேன்
2கடவுள் இல்லை என நம்புகிறேன்
3கடவுள் இருக்கிறார் , ஆனால் வழிபாடுமுறைக்ள் தவறு என நம்புகிறேன்
4கடவுள் இருக்கிறாரா இல்லையா என தெரியாது . தெரிந்து கொள்ள விழைகிறேன்
5 கடவுள் கவலை எனக்கில்லை . இருந்தாலும் ஓகே. இல்லாவிட்டாலும் ஓகே
__________________________________________________________
சோம்பல் என்பது இனிமையானது என்பார் ஓஷோ . உலகில் எல்லோரும் சோம்பேறியாக இருந்துவிட்டால் உலகப்போருக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார் அவர் . நானும் சோம்பேறிதான் . தர்ப்பூசணி வாங்க போனேன் . விலை தெரியவில்லை . சும்மா நோட்டமிட்டுக்கொண்டிருந்தேன் . ஓர் அம்மா வந்தார் . கஷ்டப்பட்டு பேரம் பேசி ஒரு விலையை நிர்ணயித்து பழம் வாங்கினார் . அதே விலைக்கு எனக்கும் கொடுங்கள் என கேட்டு வாங்கினேன் . எனர்ஜி சேவ் ஆகி விட்டது

________________________________________
சாருவுடன் பேசும்போது அவ்வபோது சில ரெஃபெரன்சுகள் கொடுப்பார்.. கண்கொத்தி பாம்பு போல காத்திருந்து அதை கவ்விக்கொள்பவர்களும் உண்டு.. அவர் இளையராஜாவை திட்டுகிறார், எனவே நான் அவரை திட்டுகிறேன் என டைம் பாஸ் செய்பவர்களும் உண்டு... ஓகே..அவரவர் வாழ்க்கை.. அவரவர் நேரம்.. நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை
who killed palomino molero என்ற நாவல் குறித்து சாரு அவ்வப்போது சொல்வார்.. அந்த நாவல் குறித்து நிர்மலுடன் ஓர் உரையாடல்
-------------------------------------------------------------------------------------
நேத்து வீட்ல பெரிய சண்டைப்பா . நான் பீச் போலாம்னேன் . சினிமாவுக்கு போலாம்ங்கறா மனைவி . ஒரு மணி நேரம் சண்டை என்றார் நண்பர் முல்லாவிடம் . முல்லா அமைதியாக கேட்டார் " சரி , என்ன படத்துக்கு போனீங்க ? "
---------------------------------------------------------------------------
முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர் அலறினார்
“ முல்லா.. உடனே பாடுவதை நிறுத்துங்கள்... கொடூரமாக என் காதுகளில் ஒலிக்கிறது...இன்னும் பத்து நிமிடங்கள் பாடினால் , எனக்கு பைத்தியம் பிடித்து விடும்”
முல்லா சொன்னார்
“ அடடா...ஏற்கனவே உங்களுக்கு பைத்தியம் பிடித்து விட்டது.. நான் பாடலை நிறுத்தி ஒரு மணி நேரம் ஆகிறது “
----------------------------------------------------------------------------
முல்லாவுக்கு பிறந்த நாள்.. ஒரு நண்பன் மலிவான மது பாட்டில் ஒன்றை அவருக்கு பரிசளித்தான்.. அடுத்த நாள் கேட்டான் “ முல்லா.. மது எப்படி இருந்தது “
“ மிக சரியான பதத்தில் இருந்தது “ என்றார் முல்லா..
“ மிக சரியான பதமா? அப்படி என்றால்? “
முல்லா சொன்னார் ... “ இதை விட நன்றாக இருந்து இருந்தால் , நீ எனக்கு அதை கொடுத்து இருக்க மாட்டாய்.. இதை விட மோசமாக இருந்து இருந்தால் , என்னால் குடித்து இருந்திருக்க முடியாது ..சரியான பதம் “
------------------------------------------------------------------------------
சோவியத் யூனியன் அதிபராக இருந்தவர் ஸ்டாலின்.. உலகபோர் கால கட்டத்தில் ஜெர்மன் படையினர் அவர் மகனை கைது செய்யவிட்டனர்... சோவியத் படையினர் பிடித்து வைத்துள்ள தமது தளபதிகளை விடுவித்தால் , அவரது பையனை விடுவிப்பதாக சொன்னார்கள்.. எப்படியாவது பையனை காப்பாற்றுங்கள்..ஒரு தந்தையாக கடமையை செய்யுங்கள் என குடும்பத்தினர் வற்புறுத்தினர்.. அவர் மறுத்து விட்டார்.. அவர் மகன் கொல்லப்ப்படார்... தான் செண்டிமெண்டாக நடந்து கொண்டால் , எல்லோரும் பலவீனம் ஆகி விடுவார்கள் என்பது அவர் கருத்து...
அது போல ராமர் சில நேரங்களில் ஓர் அரசராக கடுமையாக நடந்து கொண்டார்.. ஊழி காலத்திலும் காவலானாக இருக்க கூடியவர் அவர்...
ராவணனுக்கு எதிராக அதர்மத்துக்கு எதிராக போரிட்டவர்,,
ஏழு பிறவிகளையும் இல்லாமல் செய்யக்கூடியவர்..
அப்பேற்பட்ட ராமர் இன்றும் வாழ்கிறார் என்கிறார் சிவ வாக்கியர்.. எங்கு வாழ்கிறாராம்?
ராம ராம ராம ராம எனும் மந்திரத்தில் வாழ்கிறாராம்...
காரகார காரகார காவலூழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்களேழும் எய்தஸ்ரீ
ராமராம ராமராம ராமவென்னும் நாமமே.
----------------------------------------------------------------------------------
முல்லாவின் தந்தையார் மரணிக்கும் நிலையில் இருந்தார்... முல்லாவை அழைத்து அறிவுரை சொன்னார்’ முல்லா.. நான் என் வாழ் நாளெல்லாம் பெண்கள் பின் அழைந்து வீணாக்கி விட்டேன். அழகை பார்த்து மயங்காதே... அழகு என்பது வெறும் மேல்தோல் சார்ந்த விஷ்யம்... வெறும் தோலை வைத்து தவறான முடிவை எடுத்து விடாதே “ என்றார்.
முல்லா சொன்னார் “ அது போதுமே டேடி.. மேல் தோல் அழகாக இருந்தால் போதுமே... நான் என்னை அந்த பெண்ணை வெட்டி குழம்பு செய்தோ , ஃபிரை செய்தோ சாப்பிடவா போகிறேன்.. உள்ளே இருப்பது பற்றி எனக்கு என்ன கவலை. தோல் அழகாக இருந்தாலே எனக்கு போதும் “
இதைக்கேட்ட தந்தை , தன்னைபோலவே தன் மகனும் உருப்பட மாட்டான் என நினைத்தவாறு போய் சேர்ந்தார்
-------------------------------------------------------------------------------------------------------------------
புதுப்பணக்காரன் ஆகி விட்ட ஒரு நண்பன் முல்லாவிடம் சீன்போட விரும்பினான் " முல்லா . நான் இப்ப பணக்காரன் . நீச்சல் குளம் , ஜிம் , பார் ,கால்பந்து மைதானம் என எல்லாம் வச்சு இருக்கேன் " என்றான் . இதுதான் பலரிடமும் இருக்கே என்றார் முல்லா . எல்லாம் என் வீட்டிலேயே இருக்கு . அதுதான் மேட்டர் என்றான் நண்பன் . முல்லா சொன்னார் . நானும் பெரிய ஆளுதான் . வீட்டு வேலை , சமையலுக்கு என பத்து வேலைக்காரிகள் என்னிடம் பணிபுரிகிறார்கள் என்றார் . வீட்டுவேலைக்கு வேலைக்காரிகள் இருப்பது சாதாரணம்தானே என்றான் நண்பன் . பத்து வேலைக்காரிகளையும் வீட்டிலேயே வைத்து இருக்கிறேன் . அதுதான் மேட்டர் என்றார் முல்லா வெட்க சிரிப்புடன்
---------------------------------------------------------------------------------------------------------
அந்த பலான விடுதியில் இருந்து முல்லா வெளியே வருவதை பார்த்த அவரது குரு அதிர்ச்சி அடைந்தார் ." முல்லா , நீ நல்லவனாயிற்றே . இப்படி செய்யலாமா . மனதுக்குள் இருக்கும் தீய சக்திகள் நம்மை தூண்டினால் அதை கட்டுப்படுத்த வேண்டும் " என்றார் குரு . முல்லா சொன்னார் " கட்டுப்படுத்தலாம் என்றுதான் நினைத்தேன் . ஆனால் தீய சக்தி கோபித்துக்கொண்டு இன்னொரு முறை தூண்டாமல் போய்விட்டால் என்ன செய்வது ?
----------------------------------------------------------------------------
பைக் ஒன்று பஞ்சர் ஆகி விட்டது.. சில மெக்கானிக்குகள் ஸ்பாட்டுக்கு வந்து பார்க்க மறுத்து விட்டனர்.. ஒரு மெக்கானிக் வந்து சரி செய்து கொடுத்தார்.. தன் கதையை சொன்னார்.. அவர் மெக்கானிக்கல் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்தவர்.. பெரிய நிறுவனம் ஒன்றில் செய்து கொண்டு இருந்த பணியில் , மன நிறைவு இல்லாமல் ரிசைன் செய்தாராம்.. சொந்தமாக ஆட்டோமொபைல் வொர்க் ஷாப் வைத்து சூப்பராக நடந்து வருகிறதாம்.. வீடு கட்டி விட்டாராம்.. 
கடைசியாக சொன்னார்.. கூடவேலைபார்த்தவர்கள் , மேலதிகாரிகளை சமீபத்தில் போய் பார்த்தேன் சார்..இன்னும் அப்படியேத்தான் இருக்கிறார்கள்..
-------------------------------------------
சொத்தைப் பல் - ஜிப்ரான்என் பல் சொத்தையாகி இரவும் பகலும் சித்தரவதை செய்தது . மருத்துவரிடம் சென்று அதை பிடுங்க சொன்னேன் . அதை பிடுங்கி பயனில்லை . உணவில் கவனமாக இருத்தலே சொத்தையை தடுக்கும் . இதற்கு மருந்து மட்டும் போதும் என்றார் . வீட்டுக்கு வந்தேன் . மீண்டும் வலி . இன்னொரு மருத்துவரிடம் சென்றேன் . என் வலி எனக்குதான் தெரியும் . கேள்வி கேட்காமல் பல்லை பிடுங்குங்கள் என்றேன் . சமுதாயத்திலும் சொத்த பற்கள் ஏராளம் , ஆனால் நாம் எதுவும் செய்யாமல் கதை பேசிக்கொண்டு இருக்கிறோம்
----------------------------------------------

அந்த விளக்கு ஒரு மேஜிக் விளக்கு .ஆனால் தூய்மையானது . அது நம் உள்ளேயே இருக்கிறது . அதைத்தான் தேடுகிறேன் என்கிறார் திருமூலர் . என்ன பாடல் ?any guess ?
--------------------------------------------------
என் அப்பா இறந்ததுக்கூட ஊருக்கு போகல ,பரீட்சை எழுதினேன் / க்ரிக்கெட் ஆடினேன் . இன்று சாதனையாளராக இருக்கிறேன் என சிலர் சொல்வதை கேட்டு பிரமிக்கிறோம் . ஆனால் இதைவிட டெடிகேஷன் இருப்பவர்கள் சோபிக்காதது நம் கவனத்துக்கு வருவதில்லே . வெற்றி என்பது மைண்ட் பவர் , தன்னம்பிக்கை , உழைப்பு மட்டும் சார்ந்ததல்ல . இவை வேண்டும்தான் . ஆனால் வேறு சிலகாரணிகளும் உண்டு என அற்புதமான விளக்கும் புத்தகம் outliers

-------------------



எலி கதை ( மொண்ணை  சென்னை மற்றும் கத்தார் வெர்ஷன் )

முதலில் கத்தார் வெர்ஷன் - நிர்மல் பார்வையில்




என் வீட்டில் ஒரு எலி குடும்பம் சில நாட்களாக எங்களோடு கோ எக்ஸிஸ்ட் செய்கிறார்கள். நம்ம ஊர் வீடு என்றால் சந்து பொந்து என ஏதாச்சும் இருக்கு, இங்கு இருக்கிறதே மூனு அறைதான் இந்த குறுகிய இடத்தில் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி எலி குடும்பத்தினரை சந்திக்க வேண்டிதாகிவிடுவது வாடிக்கை ஆகிவிட்டது.


சொல்ல வந்த கதை இதல்ல, இந்த எலி குடும்பத்தின் கடை குட்டி வாரிசு ஒன்று ஒரு அட்டை பெட்டிக்குள் விழுந்துவிட்டது, ஆனால் அதனால் வெளியே செல்ல முடியவில்லை. மெதுவாக பெட்டியோடு எடுத்து வீட்டுக்கு வெளியில் விட்டுவிடுவதென திட்டம். திட்ட மேற்பார்வையாளர் என் மனைவி.

குட்டி எலி என்றாலும் மனசுக்குள்ள பயம் வந்துடிச்சி, லபக்கென நம்ம கையில் ஏறிவிட்டால், அப்படியே நம் மீது குதித்து விட்டால் என பல சிந்தனைகளில் இடையே பெட்டியை தூக்க சென்ற நான்.--- சரக்கென நிறுத்தி, போனை எடுத்து ஒரு பேட்டோ எடுக்க முனைந்தேன் எலி குட்டியை. ஃபேஸ்புக்கில் போடலாம்ல என்றேன்...

வித் கோல்டன் ரேஷியோ இன் மைண்ட், எலி குட்டியை ஃப்ரெம் செய்து போகஸ் செய்து கொண்டிருந்தேன். பல கோணங்களை முயற்சி செய்து ஒரு கட்டத்தில் போதும் இந்த எலிக் குட்டிக்கு என க்ளிக் செய்ய விரலை எடுத்து பட்டனை அமுக்கும் பொழுது.

எனது போன் அதிர ஆரம்பித்துவிட, ஏற்கனவே அதிர்வால் நிறைந்த என மனசு இந்த அதிர்வால் பீதியூற்று படபடத்து போன் கை நழுவி அட்டை பெட்டியின் விளிம்பில் மோதி பெட்டி ஒரு பக்கமா சாய, எலிக் குட்டி என் போனை தாண்டி துள்ளி அருகில் இருந்த மறைவில் சென்று மறைந்தது.

போன் அதிர்ந்த காரணம், மெசேஜ் வந்தால் அதிர்வு சமிக்சை தர வேண்டும் என நான் என் போனின் செயல்பாட்டை அமைத்திருந்தால்.

மெசேஜ் அனுப்பியது பிச்சை.

அனுப்பிய மெசேஜ் - ஹாய் ஆர் யூ ஃபிரி?

எப்படி, உன்னை போலவே உன் ஃப்ரெண்ட்சும் மொண்ணைகளாகவே இருக்கிறார்கள் என செம பழைய டையலாக்கை சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் மனைவி.

நன்றி பிச்சை, உங்க சேவை தொடரட்டும்.......


**********************************************

சென்னை வெர்ஷன் - பிச்சை

எனக்கு பரிசாக வந்த மோதிரம் ஒன்று தொலைந்து போனதில் எனக்கு ரொம்ப வருத்தம். காசு மட்டும் சம்பந்தப்பட்ட்து அல்ல.. பல நினைவுகளும் சார்ந்த்து என்பதால் ஒரு ஃபீல் . அந்த பரிசை தந்தவரை ஃபீல் செய்யாமல் இழந்து விட்டு , பரிசுக்கு ஃபீல் செய்வது ஒரு பாரடக்ஸ் என நீங்கள் நினைப்பீர்கள். அது உண்மைதான். நல்ல மழை. வெளியே போக முடியாது. மின்சாரம் இல்லை. இந்த சூழலில் மோதிரம் இல்லாவிட்டால் , ஃபீல் ஆகி அமர்வதுதானே லாஜிக்கலாக கரக்டாக இருக்க்கூடிய செயல் ( மாரல்லி , பொலிடிக்கல்லி கரக்ட்டா என்பது இங்கு தேவை இல்லை ) . யாரிடமாவது மொக்கை போட்டால் ஆறுதலாக இருக்குமே என நிர்மலுக்கு மெசேஜ் அனுப்பினேன். ஆர் யூ ஃப்ரீ ? இப்படி அனுப்புவதே ஒரு பாரடக்ஸ். அவர் பிசியாக இருந்தால் , ரிப்ளை மாட்டார். எனவே அந்த மெசேஜுக்கு அர்த்தம் இல்லை. ஆனாலும் அனுப்பினேன். நாம் விதைப்பதைத்தான் அறுக்கிறோம் என்ற மசால்வடைக்கு ஏற்ப- மன்னிக்கவும் – சொலவடைக்கு இணங்க சரவணனிடம் இருந்து ஒரு மெசேஜ். ஆர் யூ ஃப்ரீ ?


இந்த நேரத்தில் இவன் என ஜெயகாந்தன் டைட்டில் போல ஜெர்க் ஆனேன். சாதாரணமாக பேசினால்கூட , ஸ்டீவன் ஹாக்கின்ஸ் , ஐன்ஸ்டீன் என குழப்பக்கூடியவர் அவர். ஆனாலும் பெரிய சோதனை வந்தால் , சின்ன சோதனை மறந்து விடும் என்ற லாஜிக் படி ஐ ஆம் ஆல்வேஸ் ஃப்ரீ என மெசேஜ் அனுப்பினேன். அவர் என்னைவிட ஃப்ரீ போல. உடனே போன் போட்டார். மோதிரம் தொலைந்த்தை சொன்னேன். உடனே ஆரம்பித்துவிட்டார்.

 ஃப்யூச்சர்ல இப்படி தேட வேண்டியதே இருக்காது. உண்மையில் எதுவும் நம்மை விட்டு போறது இல்லை. வேற பரிமாணத்துக்கு நகருது . அவ்வளவுதான். உங்க பக்கத்துலயேதான் அமெரிக்கா , ரஷ்யா , ஐஸ்லாந்து , அஜர்பைஜான் என எல்லாம் இருக்கு. உங்களால உணர முடியல அவ்வளவுதான். முன்று பரிமாணத்தை வச்சு ஒண்ணும் பண்ண முடியாது. என்றார். அப்ப நிர்மல் என் பக்கத்துலதான் இருக்காரா. என்றேன். ஆமா , என்ன ஒண்ணு உங்களால பார்க்க முடியல.. மோதிரமும் பக்கத்திலதான் இருக்கு… என்றார். அப்ப்போது ஒரு எலி துள்ளிக்குதிக்க , பீரோவில் ( பீரோ உள்ளே அல்ல.. பீரோ மேல் ) வைத்திருந்த மோதிரம் விழுந்த்து,.. வாவ் என மகிழ்ந்தேன். பிறகு நிர்மல் லைனுக்கு வந்தார். எலியால் அவர் சந்திந்த இன்சல்ட்டை சொன்னார். அவர் வீட்டில் எலி குதித்த அதே நேரத்தில் என் வீட்டிலும் எலி குதித்த்தே.. இதுதான் வொர்ம் ஹோலா.. அல்லது வெவ்வெறு எலிகளா? அல்லது சரவணன் சொல்வது போல வேறு பரிமாணத்தில் அதே எலி இங்கும் இருக்கா . அந்த எலியை தேடினேன்.கிடைக்கவில்லை.

நயன் தாரா குறித்து திருக்குறள் - வள்ளுவரின் தீர்க்க தரிசனம் - மிக்சர் போஸ்ட்

எந்த விஷ்யத்தையும் நகைச்சுவையாக சொல்லக்கூடிய எழுத்தாளர் தேவன்.. ஆனந்த விகடன் ஆசிரியராக இருந்தவர்.. 43 வயதிலேயே இறந்து விட்டார்.
இவர் எழுத்துகள் எல்லோமே எனக்கு பிடிக்கும் என்றாலும் , வைராக்கியத்துடன் கூடிய சபதம் / வாக்குறுதி என்பது குறித்த கட்டுரையில் அவர் சொன்ன ஒரு தகவல் என்னை கவர்ந்தது...
புத்தாண்டில் பெயரளவுக்கு எடுக்கும் சபதம் போலன்றி உண்மையில்யே சபதம் மேற்கொள்ள வேண்டும் என சொல்லும் அவர் கீழ்கண்ட மகாபாரத நிகழ்ச்சியை சொல்கிறார்.
மகாபாரத போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சபதம் செய்து இருக்கிறார் கிருஷ்ணர்.. அவரை ஆயுதம் ஏந்த வைப்பேன் என் பீஷ்மர் சபதம் செய்து இருக்கிறார் ( பீஷ்மர் வேறு சில சபதங்கள் செய்து அதில் வெற்றி பெற்றது தனிக்கதை )
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கிருஷ்ணர் ஆயுதம் ஏந்தவில்லை.. ஒரு கட்டத்தில் அர்ச்சுனர் மேல் கடுமையான ஆயுதங்களை ஏவ செய்கிறார் பீஷ்மர்.. வேறு வழியின்றி , அர்ச்சுனனை காக்க அந்த இடத்தில் மட்டும் ஆயுதம் ஏந்த முடிவு செய்கிறான் கிருஷ்ணன்..
ஒரு மனிதன் ஒரு விஷ்யத்தில் தீவிரமாக இருந்தால் , கடவுளும் சற்று பணிந்து போய் , அந்த மனிதனின் லட்சியம் நிறைவேற உதவுவார் என முடிக்கிறார் தேவன்
______________________________________________
பழைய தோழிக்கு ரொம்ப நாள் கழித்து ஒரு போன் போட்டேன்...சும்மா ஒரு பல்ஸ் பார்க்க ...
- ஹலோ.. என்ன திடீர்னு?
- இல்ல,, இன்னிக்கு கவிதை தினம்னு சொன்னாய்ங்க... உன் நினைவு வந்தது.. ஹி ஹி
-ம்ம்ம்... நீ மாறவே இல்லை . சரி,,,அப்புறம் பேசலாம்...
மாறவில்லை என்பது பாராட்டா , திட்டா ?
_________________________________________________
தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி
தாதி தூதோ தீது... தத்தை தூதோதாது..
தூதிதூ தொத்தித்த தூததே- தூதி தூது ஒத்தித்த தூததே- தோழியின் தீது , நாள் ஒத்திப்போட்டுகொண்டே செல்லும்..
தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது- தாதொத்த
துத்தி தத்தாதே துதித்துத்தே தொத்து தீது
மலர் தாது போன்ற தேமல் என் மேல் படராவண்ணம் , தெய்வத்தை திதித்தலும் தீதாகும்..
தித்தித்த தோதித் திதி- தித்தித்தது ஓதித்திதி.. எனவே யாரும் ஆணி பிடுங்க வேண்டாம்.. எனக்கு தித்திப்பான காதலன் பெயரை சொல்லிக்கொண்டு இருப்பதே எனக்கு போதுமானது
- காளமேக புலவர்
______________________________________________
நூலகப்பணியார்கள் வழக்கமாக இயந்திரத்தனமாக இருப்பார்கள் .அல்லது கோபமாக இருப்பார்கள் . எங்கள் அலுவலக பக்கத்தில் ஒரு சின்ன நூலகம் இருக்கிறது. தாமதமாக ரிட்டரன் செய்தால் ,என்ன லேட் ஆயிருச்சா என நூலக பெண் சிரித்தவாறே கேட்பார் .அவார்ட் கிடைச்சிருக்காமே என கேட்பது போன்ற தொனி . இதை ரசிப்பதற்காகவே நான் லேட்டாக ரிட்டர்ன் செய்து ஃபைன் கட்டுவேன் . அய்யோ , அய்யோ
________________________________________
இறந்ததற்கு ஏன் அழுகிறீர் ? உயிர் போனதற்கா , உடல் போனதற்கா . உயிரை நீங்கள் பார்த்ததே இல்லை . பார்க்காத ஒன்று இருந்தால் என்ன போனால் என்ன ? உடல் போகவில்லை . மாட்டிக்கொண்ட திருடன் போல கை கால் கட்டி , நீங்கள்தானே தீயிட்டு கொளுத்துகிறீர்கள் . பிறகு ஏன் அழுகிறீர்கள் -கபிலர்
____________________________________________________
மின்விசிறி ஓடுவதால் அறையின் வெப்பநிலை கூடுகிறதே தவிர குறைவதில்லை . ஆவியாதல் பண்பை ஊக்குவிப்பதால் சற்று வசதியா உணர்கிறோம் . ஆனால் இதற்காக உடல் ஆரோக்கிய ரீதியாக நாம் கொடுக்கும் விலை அதிகம் . குளிர்சாதன இயந்திரக்காக இயற்கைவள ரீதியாக அதிக விலை தருகிறோம் . இவை இல்லாமல் இன்று வாழ முடியாதுதான் . ஆனால் நம் தனிவாழ்வில் இவற்றின் பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் .
____________________________________________________
பீதியை கிளப்பிய தமிழ் பாடல்..
கிரிவலத்தின் போது பார்த்த ஒரு பாடல் பீதியை கிளப்பியது..
அந்த காலத்தில் என் தமிழாசிரியர், நீ எல்லாம் ஏண்டா படிக்க வர்ற...இப்படி சேட்டை பண்ணா , உன் கொ**லேயே ஏறி மிதிச்சு கொன்னுடுவேன் என சற்று அன்பார்லிமெண்ட்ரியாக திட்டுவார்.. ஆனால் நல்ல மனிதர்...
கீழ்கண்ட பாடல் எனக்கு அதை நினவூட்டியது.. அந்த கால டீச்சர்கள் ரொம்ப கடுமையா தண்டிச்சு இருக்காங்க போலயே என நினைத்தேன்...
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூ ரிற்கோ டீச்சரா போற்றி....
ஆனால் குழப்பம்.. டீச்சர் என்பது தமிழ் வார்த்தையா ஆங்கில வார்த்தையா.ம்ம்ம்.... அந்த காலத்தில் எப்படி ஆங்கில வார்த்தை...இரவு முழ்தும் குழப்பம்.
காலையில் வீட்டுக்கு வந்து முதல் வேலையாக பாடலை பார்த்தேன்
அந்த பாடல் இதோ
வியலூர் இருந்தருள் விமலா போற்றி
கொட்டையூரில் கோடீச்சரா போற்றி..
ங்கொய்யால... இதைப்போய் டீச்சரானு மாத்தி பீதியை கிளப்பிட்டீங்களேடா
__________________________________________________________
மதிய வெயிலில் இளநீர் சாப்பிடுவது காதலியின் மடியில் படுத்திருப்பது போல் என்றால் , இரவில் இளநீர் சாப்பிடுவது காதலியை நம் மடியில் வைத்து அழகு பார்ப்பது போன்றது . இறை தேடலுடன் இளநீர் சூப்பர்
______________________________________________________
  நிர்மல் பிறந்த நாளுக்கு ,  நான் எழுதிய கவிதை ( ? !! )

தூத்துக்குடி கொடுத்த சாத்துக்குடியே...
ஏரல் கொடுத்த மாரல் சப்போர்ட்டே....
பின் நவீனத்துவத்தின் பின் கோடே....
தென்னகத்தில் பிறந்து
விண்ணகம் தொடும் அளவுக்கு சாதனை புரிந்து
வியப்புக்கே வியப்பு அளிக்கும் வித்தகனே
நீ ஒரு சிவப்பு ஒபாமா
வேறு யாரும் உனக்கு ஒப்பாகுமா....
ஒன்று கேள் நண்பா...
உனக்கு தில் இருந்தால்
உன் மேல் பாடிடுவேன் ஒரு வெண்பா...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
- கவி இளவரசு பிச்சை
___________________________________________________________________
சிலரை முதல் சந்திப்பிலேயே பிடித்துப்போய் விடும்.. வெகு நாள் பழகிவரைப்போல பேச ஆரம்பித்து விடுவோம்.. சிலருடன் ரொம்ப நாள் பழகினாலும் , ஒத்துப்போக முடியாது.
இதை படம் பிடித்து காட்டுகிறார் கம்பர்
தொல் அருங் காலம் எல்லாம் பழகினும், தூயர்
அல்லார்
புல்லலர்; உள்ளம் தூயார் பொருந்துவர், எதிர்ந்த
ஞான்றே;
ஒல்லை வந்து உணர்வும் ஒன்ற, இருவரும், ஒரு
நாள் உற்ற
எல்லியும் பகலும் போல, தழுவினர், எழுவின்
தோளார்.
வெகு காலம் பழகினும் மன தூய்மை இல்லாதோர் ஒன்று பட மாட்டார்கள்.. மேலோர்கள் உடனே ஒன்று பட்டு விடுவார்கள்.. ஒத்த உணர்வுடன் சந்தித்த சுக்ரீவனும் விபீடணனும் , ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர்
___________________________________________________________
என் பள்ளி காலங்களை நினைத்துப் பார்ர்க்கிறேன். எனக்கு அமைந்த ஆசிரியர்கள் லேசாக மனப்பிறழ்ச்சி கொண்டவர்கள் என்பதை விரைவிலேயே கண்டு பிடித்தேன்.. நல்ல ஆசிரியர்களும் உண்டு .. ஆனால் அபூர்வம்..சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இது போன்ற முட்டாள்களிடம் இருந்தது என்பதை யோசித்து பார்த்தால் வருத்தமாக இருக்கிறது - அடால்ஃப் ஹிட்லர்
_____________________________________________________
அசோகமித்ரனின் ஒற்றன் நாவலில் ஓர் அருமையான இடம்..
அமெரிக்காவின் சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு போய் இருப்பார்,, பிரபலமான கடை... டைப் ரைட்டர்  வாங்குவார்.. வீட்டுக்கு வந்து செக் செய்து பார்த்தால் அது வேலை செய்யவில்லை... கடைக்கு அவசரமாக போவார்.. பணிப்பெண் இனிமையாக பேசி மாற்றி கொடுத்து விடுவாள்... என்னே வாடிக்கையாளர் சேவை.. அமெரிக்கா என்றால் அமெரிக்காதான் என நினைத்து கொள்வார்.. ஆனால் அவள் அடுத்து செய்த காரியம் அவரை ஏமாற்றம் அடைய செய்யும்,
அவரிடம் வாங்கிய அந்த உருப்படாத டைப்ரைட்டர், விற்பனை செய்யும் டிஸ்பிளேயில் வைத்து விட்டு, அதே இனிய புன்னகையுடன் போய் விடுவாள்... வேறு யாராவது அப்பாவி அதை வாங்க வேண்டியதுதான்
_______________________________________________
ஹன்சிகாவினால் கிடைக்கும் பயனை மதிக்காமல் அதை தூக்கி எறிந்தார் சிம்பு..அப்படிப்பட்ட சிம்புவையும் அவரது உதவியையும் , நயன்தாரா தூக்கி எறிந்தால் , அவருக்கு கிடைக்கும் நன்மை கடலைவிட பெரிது என்கிறார் வ்ள்ளுவர்.. என்னே அவரது தீர்க்கதரிசனம் !!!!
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
_____________________________________________________________
தொலைக்காட்சியில் சிவாஜி கணேசன் நடித்த வாழ்க்கை படம் பார்த்தேன்...
சிவாஜி ஏழை மெக்கானிக்காக இருக்கிறார்.. பிறகு பணக்காரன் ஆகிறார்.. இந்த இரண்டையும் அழகாக பாடி லேங்குவேஜில் வேறுபடுத்திக்காட்டுகிறார்... வசனமோ மேக் அப்போகூட தேவைப்படவில்லை. அற்புதமான நடிப்பு..
அவரை தமிழ் சினிமா வீணடித்து விட்டது என்றே தோன்றுகிறது... இன்றைய இயக்குனர்கள் காலத்தில் அவர் இல்லையே என வருத்தமாக இருந்தது.

___________________________________________________________
ஒரு தோழி... ஆரோக்கியமான நட்பு இருந்தாலும் வாசிப்பில் எங்களுக்குள் ஒரு வித போட்டி உண்டு.. சில அபூர்வமான புத்தகங்கள் பற்றி எழுதுகிறீர்களே... அவற்றை எங்கு வாங்குகிறீர்கள் என அவ்வப்போது கேட்பார்..
“ இங்கு அபூர்வமான புத்தகங்கள் கிடைக்கும் “ என யாரும் விற்பதில்லை.. நான் ப்ல ஊர்களுக்கு செல்வதால், ஊருக்குள் அலைந்து திரிவதால் ஆங்காங்கு அதிர்ஷ்டவசமாக கிடைப்பதை வாங்கிக்கொள்வேன் ... இதெல்லாம் ஆணுக்கு மட்டுமே இருக்கும் அனுகூலம் என சொல்லி அவரை வெறுப்பேற்றுவேன்... ஒரு நாள் வேறு ஒரு விஷயத்துக்காக கோபித்துக்கொண்டு விட்டார்..
அவர் வீட்டுக்கு வருமாறு அடிக்கடி கூப்பிட்டு வந்தார்.. நான் போனதில்லை... ... இப்போது சர்ப்ரைசாக வீட்டுக்கு போய் புத்தகம் பரிசளித்து கூல் செய்யலாம் என் திட்டமிட்டு சென்றேன்..
எதையும் டிரமாட்டிக்காக செய்வது என் இயல்பு... அவர் வீட்டின் அருகே இருந்தவாறே போன் செய்து , வேறு ஊரில் இருப்பது போல பேசினேன்... கொஞ்ச நேரத்தில் திடீரென காலிங் பெல் அடித்து அவர் ரெஸ்பான்சை ரசிப்பது என் திட்டம்...
இப்படி பேசிக்கொண்டு இருந்தபோது தான் ஒரு புத்தக கடை கண்ணில் பட்டது... போய் பார்த்து அசந்து போனேன்... ப்ரிண்டில் இல்லாத அபூர்வங்கள், கிடைப்பதற்கரிய முதல் எடிஷன்கள் என தங்க சுரங்கம்...
வீட்டு பக்கத்தில் இருக்கும் பொக்கிஷத்தை கவனிக்காமல் என்னிடம் ரெஃப்ரன்ஸ் கேட்டு , கோபித்துக்கொள்ளவேறு செய்தாரே என சிரித்துக்கொண்டேன்...
ஒரு சிறிய மூட்டை அளவுக்கு புத்தகம் தேறியது.. இந்த அழுக்கு மூட்டையுடன் , பழைய புத்தகங்களுடன் அவர் வீட்டுக்கு போவது ஒரு மாதிரி இருந்தது... போன் அடித்தது... அந்த தோழிதான்.. “ வெளியூரில்தான் இருக்கிறேன்.. வர லேட் ஆகும்.. வந்ததும் ஒரு நாள் சந்திக்கணும்... எப்ப நேரம் கூடி வருதோ “ என உணர்வு பூர்வமாக சொல்லி விட்டு , வீட்டுக்கு ( என் வீட்டுக்கு ) கிளம்பினேன்...
______________________________________________________
கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர் . காந்தியும் எழுதியிருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது . ஆச்சர்யத்துடன் படித்தேன் . இணைய தலைமுறைக்கு ஏற்றவாறு சுருக்கமாக எழுதியிருக்கிறார் . பதினைந்து நிமிடங்களில் படித்துவிடலாம் . ஹேட்ஸ் ஆஃப் காந்திஜி
_________________________________________________________
எதிரிகள் தரப்பில் இருந்து ராமனிடம் சேர வருகிறான் விபீடணன் . அவன் உளவாளி , சேர்க்கவேண்டாம் என்கிறார்கள் சிலர் . எதிரி ரகசியத்தை அறியலாம் . சேர்த்து கொள்ளலாம் என்கிறார் சிலர் . ராமன் என்ன முடிவெடுக்கிறான் என்ன சொல்கிறான் என்பது அட்டகாசம் . தம்பி , இந்த அரசியல் எல்லாம் ரெண்டாம்பட்சம் . என்னை நம்பி வந்துவிட்டான் . இவனுக்கு தஞ்சம் அளிக்கமுடியாவிட்டால் , தக்காளி நான் இருந்தால் என்ன செத்தால் என்ன
_____________________________________________________________
மாநகர பேருந்தில் அமர்ந்திருந்தேன் . ஓர் அழகான இளம்பெண் லேடீஸ் சீட்டை தேடினார் . ஃபுல் . வேறு வழியின்றி என் அருகில் அமர்ந்தார் . சற்று நேரத்தில் கூட்டம் குறைந்தது . ஆனாலும் அவர் லேடீஸ் சீட் மாறாமல் என் அருகிலேயே அமர்ந்திருந்தார் . ஏன் ? ? ஒருவேளை நான்தான் என் வால்யூ தெரியாமல் இத்தனைநாள் இருந்து விட்டேனா
____________________________________________________________
டால்ஸ்டாய் கதை ஒன்றின் சுருக்கப்பட்ட / இணையத்துக்கேற்ப சிதைக்கப்பட்ட வடிவம்..
அந்த அரசனுக்கு வாழ்க்கையில் இன்னும் சிறந்த வெற்றிகள் பெற ஆசை... என்ன செய்வது ? யோசித்தான்.. மூன்று கேள்விகளுக்கு விடை தெரிந்தால் எல்லா வெற்றிகளும் வந்து சேர்ந்து விடும் என தோன்றியது.. வாழ்க்கையில் நமக்கு முக்கியமான நபராக யாரை நினைக்க வேண்டும்? ஒரு செயலை செய்ய உகந்த நேரம் எது...? நாம் செய்ய வேண்டிய முக்கியமான பணி என்ன..
அமைச்சர்களிடம் பதில் கேட்டான்... தண்டோரா போட்டு மக்களிடம் கேட்டான்.. சிறந்த பதிலுக்கு பரிசு அறிவித்தான்... முக்கியமான நபர் மன்னர் , அமைச்சர் , மருத்துவர் , குரு ..உகந்த நேரம் அதிகாலை பொழுது , வெள்ளிக்கிழமை , புதன் , ஃபிப்ரவரி மாதம் ,,முக்கியமான பணி கோயில் கட்டுதல் , குளம் வெட்டுதல் , பள்ளிகள் அமைத்தல் என பல்வேறு பதில்கள் குவிந்தன.. அரசனுக்கு திருப்தி இல்லை.. அமைச்சர் அரசனை நெருங்கினார்
-காட்டில் சாமியார் ஒருவர் இருக்கிறார்.. அபார ஞானம்.. அவரை போய் பாருங்கள்..
அரசன் கிளம்பினான்.. சாமியாரின் குடிலுக்கு போனான் ..சாமியார் கண்டு கொள்ளவே இல்லை.. தன் கேள்விகளை கேட்டான்.. சாமியார் ஒன்றுமே சொல்லவில்லை..
அரசன் இரண்டு நாட்கள் காத்திருந்தான்,. பதில் இல்லை... கோபத்துடன் கிளம்பினான்.. -இரவுக்குள் போய் விட வேண்டும்..குதிரையை விரட்டினான்..
போகும் வழியில் ஒரு குதிரை வண்டி கவிழ்ந்து கிடந்தது.. ஒரு மனிதன் மயங்கி கிடந்தான்... நேரம் இல்லாவிட்டாலும் அரசன் குதிரையை நிறுத்தி அந்த மனிதனுக்கு முதல் உதவி செய்தான்.. அவன் கண் விழித்தான்...
- மன்னா.. உங்களை கொல்வதற்காகத்தான் நானும் என் ஆட்களும் காத்திருந்தோம்... மன்னியுங்கள்.. நானே உங்களை பாதுகாப்பாக ஊருக்குள் அழைத்து சென்று விடுகிறேன்..
இருவரும் ஊருக்கு போனார்கள்.. அங்கு சாமியார் இருந்தார்.
அவர் சொன்னார்
- அரசனே..இவனை காப்பாற்றாவிடில் , அவன் ஆட்கள் உன்னை கொன்று இருப்பார்கள்.. அவசர வேலை என்றாலும் அவனுக்காக நேரம் செலவிட்டாய்... உன் அருகில் யார் இருக்கிறார்களோ , நீ யாருடன் தொடர்பு கொண்டு இருக்கிறாயோ அவர்களை மிக முக்கியமானவராக கருதி உன் முழு கவனத்தையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.. நீ என்ன செயல் செய்கிறாயோ அதுதான் உலகிலேயே மிக முக்கியமான செயல் என கருதி முழுமையாக செய்ய வேண்டும்... அப்படி செய்த்தால்தான் நீ தப்பினாய். அதுவும் உரிய காலத்தில் உதவினாய்..உலகிலேயே சிறந்த நேரம் என்பது இந்த கணம்தான்... இவைதான் உனக்கான விடைகள் என சொல்லி கிளம்பினார்..
‪#‎கதை‬ டால்ஸ்டாய்.... சிதைத்து ஷேப் அவுட் ஆக்கியது பிச்சை..
__________________________________________________

உலகெங்கும் ஆன்மீகத்தை பரப்ப வேண்டும் என்பது அந்த சத்குருவின் ஆசை... எல்லா நாடுகளுக்கும் சென்று விட்டார்.. ஒரே ஒரு சின்ன தீவுக்கு மட்டும் போனதில்லை என்பது தெரிய வந்ததும் படகில் அங்கு போனார்.
அங்கு மூவர் மட்டுமே வசித்து வந்தனர்.. கோயில் எதுவும் இல்லை.. தியானம் , வழிபாடுகள் என எதுவும் தெரியவில்லை...
- ஸ்லோகம் கூட எதுவும் தெரியாதா என்றார் சத்குரு வியப்புடன்..
- ஒண்ணும் தெரியாது சாமி... ஒர் செயலை தொடங்கும் முன் ‘ நீங்களும் மூணு பேரு. நாங்களும் மூணு பேரு.. பார்த்து செய்யினு வேண்டிக்கிட்டு நாங்க பாட்டுக்கு செயலில் இறங்கிடுவோம் என்றார்கள் அவர்கள்..
- அட முட்டாள்களா..எப்படி அமர்வது, எப்படி சாமி கும்பிடுவது... என்ன மந்திரம் என்பதை எல்லாம் சத்குரு சொல்லி கொடுத்துவிட்டு படகில் கிளம்பினார்..
நடுக்கடலில் போய்க்கொண்டு இருக்கும்போது , சாமி சாமி என குரல் கேட்டது..திடுக்கிட்டு பார்த்தார்
மூவரும் கடல் மேல் ஓடி வந்து கொண்டு இருந்தனர்..
- சாமி... உங்க மந்திரத்தில் ஒரு டவுட்,,அதுதுதான் ஓடி வந்தோம் என்றார்கள்..
- அது இருக்கட்டும்,, கடல் மேல் எப்படி ஓடி வந்தீங்க...ஏதாச்சும் மந்திரமா..
- மந்திரம் எல்லாம் நாங்க என்ன கண்டோம்... வழக்கம்போல , நீயும் மூவர்.. நாமும் மூவர்..பார்த்து பண்ணு என சொல்லிட்டு கிளம்பி விட்டோம்.. சரி.. தியான மந்திரம் சொல்லுங்க.. வேலை கெடக்கு என்றார்கள்.
- நீங்க கற்க வேண்டியது எதுவும் இல்ல..கிளம்புங்க,, நான் தான் கற்றதை மறக்கணும்
அவர்கள் ஒன்றும் புரியாமல் கடல் மேல் நடந்து வீட்டுக்கு திரும்பலானார்கள்
‪#‎டால்ஸ்டாய்‬ கதை ...ஷேப் அவுட் ஆக்கியது பிச்சை

________________________________________________
நாம் காணும் பொருட்கள் எல்லாம் பல்வேறு தனிமங்களால் உருவானவை... இரும்பு , அலுமினியம் , தங்கம் , ஆக்சிஜன் , ஹைட்ர்ஜன் போன்ற தனிமங்கள் நமக்கு நன்கு தெரியும்..சில பின் நவீனத்துவ தனிமங்கள் இருக்கின்றன...
இவற்றுக்கு என சில பண்புகள் உள்ளன... இவற்றுக்கு என சில பயன்பாடுகள் உள்ளன... ஆனால் உலகில் இவை இருப்பதில்லை !! இவற்றின் இன்மை மட்டுமே இருக்கின்றன,


உதாரணமாக டெக்னீட்டியம் -99 எம் என்ற தனிமம் மருத்துவத்தில் மிகவும் உதவுகிறது... மனித உடலுக்குள் செலுத்தி , இதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் உள்பகுதிகளை ஆராயலாம்..

ஆனால் கதிர்வீச்சு கொண்ட இது உடலுக்குள் இருப்பதால் பயம் தேவை இல்லை... இதன் (அரை )ஆயுள் காலம் 6 மணி நேரம் மட்டுமே.. அதன் பின் அமைதியாகி விடும்...

இவ்வளவு பயன் மிக்க இந்த தனிமம் உலகில் எங்குமே கிடைப்பதில்லை.. சில நட்சத்திரங்களில் கிடைக்கின்றன... ஆனால் நட்சத்திரம் போய் எடுத்து வர வேண்டியதில்லை... ஆய்வு சாலையில் இதை உருவாக்குகிறார்கள்...
டெக்னீட்டியம் - இதன் அணு எண் 43.. பின் நவீனத்துவ தனிமத்தில் முக்கியமானது இது.. வேறு சிலவும் உள்ளன
______________________________________
யிட்ரியம் எனும் உலோகம் வெகு குறைவாகவே கிடைக்கிறது . இதை சின்ன சின்ன துண்டுகளாக்கினால் எரிந்துவிடும் விநோத தன்மை கொண்டது . நிலவில் ஏராளம் கிடைக்கிறது . ஆனால் இதன் பயன் தற்போதுதான் தெரிய வந்துள்ளது . மின்இழப்பு கொஞ்சமும் இன்றி மின்கடத்த இதன் உலோககலவையால் முடியும் . இது புழக்கத்துக்கு வந்தால் மின்கட்டணம் குறையக்கூடும் 
__________________________
பின் நவீனத்துவ உலோகம் ஒன்றை பார்த்தோம் அல்லவா... அதே போல , மேஜிக்கல் ரியலிச உலோகம் ஒன்று உள்ளது.. இதை நம்மால் பார்க்கவே முடியாது... வெகு சில நிமிடங்கள்தான் இதன் ஆயுட்காலம்...உலகம் முழுதும் தேடிப்பார்த்தாலும் 50 கிராமுக்கு மேல் கிடைக்காது... வேண்டுமானால் செயற்கையாக ஆய்வு சாலையில் உருவாக்கலாம்...
இதன் பெயர் ஃபிரான்சியம் .. அணு எண் 87..
கதிர்வீச்சு தன்மை கொண்ட இதன் பயன்பாடு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை... சீக்கிரம் அழிந்து விடும் இந்த தன்மையை பாசிட்டிவாக பயன்படுத்தி , ஏதேனும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினால் உங்களுக்கு பெரும்புகழ் கிடைக்கும்...வாழ்த்துகள் !!!
___________________________________________________
நான் பார்த்த படங்களில் மறக்க முடியாத படங்களில் ஒன்று லிங்கன்.. பல சுவையான காட்சிகள்..
ஒரு மசோதாமீது வாக்கெடுப்பு... கடும்போட்டி என்பதால் , தானும் வாக்களிக்க முடிவு செய்வார் சபா நாயகர்.. சபா நாயகர் வாக்களிக்க கூடாது.. நம் வரலாற்றில் இப்படி யாரும் செய்ததில்லை என பலர் ஆட்சேபிப்பார்கள்... அவர் சொல்வார்.. வரலாற்றில் இது வரை செய்யாவிட்டால் என்ன.. இப்போது ஒரு வரலாறு உருவாகட்டும்..
****************************************
ஒரு எஞ்சினியருக்கு புரியும்படி , பிரச்சனையை விளக்குகிறார் லிங்கன்.. தம்பி . உனக்கு தெர்மொடைனமிக்ஸ் விதி தெரியும்...அ என்பதும் ஆ என்பதும் ஈ என்பதற்கு சம் நிலையில் இருக்கும் பட்சத்தில் , அ என்பதும் ஆ என்பதும் ஒன்றுக்கொன்று சம நிலையில் இருக்கும் என்பது வெப்ப சலனவியல் விதி... அது போல கருப்பர்களும் , வெள்ளையர்களும் அமெரிக்க சட்டதுக்கு சமமானவர்கள் என்றால் அவர்கள் ஒருவருக்கொருவர் சமம்தானே
_________________________________________________
இந்த சிரசாசனம் இருக்கிறதே . இதை எல்லோரும் செய்யலாமா என்றால் செய்யக்கூடாது . மூளையின் நுண்குழல்கள் பாதிக்கப்டலாம் .வழிகாட்டலுடன் செய்யலாம் . காலையில் நான் அந்த பொசிஷனில் இருந்தபோது ஓசி சாப்பாடு கொண்டு வரும் கொலுசொலியில் பதறி நார்மல் பொசிஷனுக்கு வந்தேன் . பதட்டத்தில் கால் கட்டை விரல் தரையில் மோதி செம அடி .நான் நொண்டுவதை பார்த்து , அடி பலம்போல ,காலிலேயே போட்டாய்ங்க போலயே என மற்றவர்கள் பார்த்ததில் துக்கம் தொண்டையை அடைத்தது

_______________________________________________________________
ஆணும் பெண்ணும் சமம் என்பதை ஏற்கவே மாட்டேன் . ஆணை ஜட்ஜ் செய்வது எளிது . லாஜிக்கலாக மெக்கானிக்கலாக இருப்பான் . பெண்ணை கணிக்கவே முடியாது . நம் தகுதிக்கு மீறிய அன்பை பொழிவாள் . அளவுக்கு அதிகமாக நம்புவாள் . தேவையே இல்லாமல் கோபிக்கவும் செய்வாள் . அவள் அன்பை அட்வாண்டேஜாக எடுத்துக்கொள்ளாமலும் , கோபத்தை இன்சல்ட்டாக எடுத்துக்கொள்ளாமலும் இருக்க பயில வேண்டும் .பெண்மை இல்லாவிடில் உலகம் வெறும் லாஜிக்கல் மெஷினாக இருக்கும் . என்றுமே பெண் ஆணுக்கு சமம் அல்லள் . ஒரு படி மேலானாவள் .
___________________________________________________________________
கடைசி பஸ்சில் சோர்வடைந்த மக்களிடையே பயணித்த எனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி.. காலையில் பார்த்த பெண்ணை விட செம அழகு... சேலை கட்டி , எளிய மேக் அப்பில் செம ப்யூட்டியாக இருந்தார்.. மூக்கு என்றால் இப்படி இருக்க வேண்டும் , கண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என பொதுவாக இருக்கும் விதிகள் எல்லாவற்றையும் மீறி இருந்தார் என்பதே கூடுதல் கவர்ச்சி தந்தது... அழகான சின்னஞ்சிறிய மூக்குத்தி அழகுக்கு அழகு சேர்த்த்து..
கடைசி பஸ் போய் , வீட்டுக்கு நடந்து போனாலும் பரவாயில்லை.. இவர் இறங்கும் இடத்தில் இறங்கி ஒரு சாதாரண நட்பையாவது உருவாக்கிக்கொள்ள வேண்டும் என நினைத்துக்கொண்டேன்.. காலையில் நிர்மல் என்னை சீண்டி இருந்ததை மறக்க வில்லை..
அவர் எப்போது இறங்குவார் என கண்கானித்தபடி இருந்தேன்.. நான் அவரை கவனிப்பதை அவரும் கவனித்து விட்டார்.. ரெஸ்பான்ஸ் இல்லை.. அவர் இறங்கவே இல்லை... கடைசி ஸ்டாப் வரை வந்து நான் இறங்கும் ஸ்டாப்பிலேயே இறங்கினார்.. ஒரு வேளை வேறு பஸ் எதுவும் பிடிக்கப்போகிறாரோ.. அதே பஸ்சில் நாமும் ஏறி ஃபாலோ ஆன் செய்யும் அளவுக்கு நிதி நிலை இல்லையே..
ஆனால் அவர் பஸ் ஏறாமால் , நடக்க ஆரம்பித்தார்.. போதிய இடைவெளியில் தொடர்ந்தேன்.. என்ன அதிர்ச்சி,... நான் இருக்கும் தெரு பக்கமே செல்லலானார்.. என்ன எழவுடா என யோசித்த படி சென்றேன்..
என் வீடு லெஃப்ட்டில் கட் ஆகும்..அப்படி கட் ஆகாமல் நேரில் சென்று ஒரு வீட்டுக்குள் சென்று மறைந்தார்.. கெஸ்ட்டாக வந்து இருக்கிறாரோ... கிளம்பி விடுவாரா அல்லது காலை வரை இருப்பாரா...
கடையில் பால் வாங்கியபடி டைம் பாஸ் செய்து கொண்டு இருந்தேன்.. நைட்டியில் ஒரு பெண் அந்த வீட்டில் இருந்து வெளி வந்தார்.. அந்த வீட்டு பெண் தான்.. அவ்வளவு பழக்க்கம் இல்லை.. கவனித்ததும் இல்லை. அவ்வபோது கெட்ட வார்த்தைகளில் ட்சண்டை போடும் சத்தம் கேட்கும்.. ஒரு முறை மார்கழி கோலத்தில் பைக்கில் ஏறி அழித்ததற்காக என்னை கெட்ட வார்த்தையில் அசிங்கமாக திட்டினார்,.திரும்பி பார்க்காமல் ஓடி விட்டேன்..
அவரும் கடைக்கு வந்தார்... கூர்ந்து பார்த்தபோது அந்த மூக்கு அதிர்ச்சி அளித்தது...ஆம்,.. பஸ்சில் பார்த்த தேவதைதான் இவர் !!! ஆனால் இப்போது தேவதை மாதிரி தெரியவில்லை... அவருக்கோ என்னை மனிதனாகவே தெரியவில்லை போல... அலட்சியமாக என்னை கடந்து போய் கடையில் ஏதோ வாங்க ஆரம்பித்தார்
____________________________________________________________________
நண்பருடன் போனில் பேசியவாறே பஸ்சில் ஏறினேன் . பேசியவாறே கண்டக்டரிடம் அய்ம்பது ரூபாய் நீட்டி ஜாடையில் டெயலி பாஸ் கேட்டேன் . அவர் ஏதோ நினைவாக பாலன்ஸ் காசு கொடுக்க முனைந்தார் . தலை அசைத்து மறுத்து ஐம்பது ரூபாய் பாஸ் வாங்கினேன் . பேச்சு தொடர்ந்தது . பஸ்சில் ஏதோ பிரச்னை . டிக்கட் வாங்கி காசு தரவில்லை என்றும் டிக்கட் வரவில்லை என்றும் சண்டை . பயங்கர எரிச்சல் . ஏன் நம் மக்கள் இப்படி பொறுப்பின்றி இருக்கிறார்கள் . பஸ் விட்டு இறங்கி போனை பைக்குள் வைக்க போனவன் திடுக்கிட்டேன் . பஸ் அக்கப்போருக்கு காரணமான டிக்கெட் என்னிடம் இருந்தது .- அளவுக்கு அதிகமா பேசுவது தீங்கானது
____________________________________________________________
வன்முறை என்பது ஏரியில் விழும் கல் போன்றது.. விழுந்த இடத்தில் இருந்து அலைகள் பரவிக்கொண்டே இருக்கும் , “ என்னுடைய “ என்பதை மையமாகக் கொண்டு. 
எனது நாடு , என் மதம் , என் சொத்து , என் காதல் , என் குழந்தை , என் குடும்பம் என இந்த “ எனது” என்ற வடிவம் ஏதேனும் ஒரு வடிவில் இருக்கும்வரை வன்முறை இருந்து கொண்டுதான் இருக்கும்
‪#‎ஜேகிருஷ்ணமூர்த்திபாறைகள்‬
___________________________________________________________________
தோல்வி அடைவது தலைமைப் பண்புக்கு இழுக்கன்று . ஆனால் எதிர்பாராத தோல்வியை அடைவது இழுக்கு - நெப்போலியன் போனபர்ட்
_________________________________________________________________
மாநகர பேருந்தில் பயணிக்கையில் தண்ணீர் பாட்டில் எடுத்து சென்று விடுவேன் . சில நாட்களாக , சற்று தயக்கத்துடன் தண்ணீர் கேட்கிறார்கள் வயசாளிகள் . கோடை வருகிறதே . எனவே இப்போதெல்லாம் என் பையில் ரெண்டு பாட்டில்கள் எடுத்து செல்கிறேன் . எனக்கு பெரிய கஷ்டம் இல்லை . அவர்களுக்கு சிறிய எளிய இளைப்பாறுதல் .
_________________________________________________________________-
லாரி பொன் மொழி பாறைகள்
நண்பா . குத்துவதாக இருந்தால் உன்னை நேசித்த என் இதயத்தில் குத்து . எந்த பாவமும் செய்யாத முதுகில் குத்தாதே
___________________________________________________________
உங்களை எனக்கு பிடிக்கல,,,, உங்களை நண்பனா ஏத்துக்கவும் முடியல... ஆனா உங்க போஸ்ட் சிலவற்றை படிக்க விரும்புறேன்.. உங்களை நண்பன் என சொல்லிக்க விரும்பாத ஆனா உங்க போஸ்ட்டை படிக்க விரும்பும் பலர் இருக்கிறார்கள்..அதுனால ஃபாலோ ஆப்ஷனை உங்க செட்டிங்க்ல கொண்டு வாங்க.. உங்க நண்பர் ஆகாம ஃபாலோ மட்டும் பண்ண வசதியா இருக்கும்..
இப்படி ஒருவர் சொன்னார்..
அவர் சொல்லித்தான் ஃபாலோ ஆப்ஷனை சேர்த்தேன்..அதுவரை எனக்கு அது தெரியாது..
இன்னொருவர் வந்தார்... ஃபாலோயர்சும் கமெண்ட் போடும் ஆப்ஷனை கொண்டு வாங்க.. என்னால கம்ண்ட் போட முடியல என்றார்...
அந்த ஆப்ஷனை கொண்டு வந்தா , என்னால எல்லா கமெண்டையும் பார்த்து மாடரேட் பண்ண முடியாது .யாராச்சும் கேவலமா கமெண்ட் போட்டுட்டா எல்லோரும் என்னை தப்பா நெனப்பாங்களே என்றேன்..
உங்க போஸ்ட்டே கேவலமாத்தானே இருக்கு..அதை விட கேவலமா யாரும் கமெண்ட் போட முடியாது.. சும்மா அந்த ஆப்ஷனை கொண்டு வாங்க என்றார்.
கமெண்ட் போட இவ்வளவு ஆசைப்படுறீங்களே. பேசாம என் நண்பரா சேர்ந்துடுங்களேன் என்றேன்..
உங்களை நண்பனா என்னால இந்த ஜென்மத்துல ஏத்துக்க முடியாது என்றார்...
________________________________________________________
அந்த தம்மாத்தூண்டு பெயர் பலகை என் கவனத்தை கவர்ந்தது.. பேருந்து ஊரை விட்டு சற்று ஒதுக்குப்புறமாக சென்று கொண்டு இருந்தபோது , பஞ்சர் கடை ஒன்றை பார்த்தேன்..மரத்தடி..சிறிய தடுப்பு..அதன் முன் பெயர் பலகை... ரேடியோவில் பாட்டுக்கேட்டபடி மெக்கானிக் ஹாயாக அந்த கணத்தை வாழ்ந்து கொண்டு இருந்தார்...
முருகன் மெக்கானிக் கடை என் பெயர் பலகை அதற்கு கீழே சப் டைட்டில் போல இன்னொரு சதுர வடிவ பலகை...
அதில் சாக்பீசால் இப்படி எழுதி இருந்தது.
உழைப்பே உயர்வு தரும்
இங்கு பஞ்சர் போடப்படும்... டீவீலருக்கும் காருக்கும் வேலை செய்யப்படும்..
வெளி இடங்களுக்கு கூப்பிடாதீர்கள்..தயவு செய்து கடன் சொல்லாதீர்கள்... விவாதம் வினையில் முடியும்... சரியான கருத்து என்றால் நீங்கள் அதை நிரூபிக்க தேவை இல்லை..தவ்றான கருத்து என்றால் விவாதத்தில் நுழைய வேண்டியதே இல்லை.ஞாயிறும் பஞ்சர் போடப்படும்.... ஒன்றே குலம் ஒருவனே தேவன்... மரங்களை பாதுகாப்போம்...
இப்படி நுணுக்கி நுணுக்கி எழுதி இருந்தார்.. யாரும் படிக்க வாய்ப்பில்லை என்ற போதும் இப்படி எழுதி இருப்பது ஆச்சர்யம் அளித்தது...சுவராஸ்யமான ஆளாக இருப்பார் போலயே, ஒரு மொக்கையை போடலாமா என நினைத்தேன்.. பஸ் கிளம்பி விட்டது...
________________________________________
காலையில் ஆலயம் செல்கையில் அந்த பாட்டியை பார்ப்பேன் . எளிய சேலை என்றாலும் அழகாக அணிந்திருப்பார் . மலர் சூடி பொட்டு வைத்து வருவார் . திருவாசகம் வாய் விட்டு பாடிவிட்டு போவார் . தன்னை ஓர் ஒழுங்குடன் வைத்துக்கொள்வது பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருள்களின் இயல்பாகும் . எல்லாமே பாலியல் சம்பந்தப்பட்டது என சிக்மண்ட் பிராய்ட் சொல்வது நம் புரிதல்களையே கெடுத்துவிட்டது . அந்த பாட்டி யாரையும் கவர அழகாக ஆடை அணியவில்லை . அவரது திருப்தி . அவ்வளவுதான் . பெண் அழகாக ஆடை அணிவதே ஆண்களுக்காகத்தான் என்ற பார்வை தவறானது . பாலியல் சீண்டல்களுக்கு இதை காரணமாக சொல்வது கண்டிக்கத்தக்கது
________________________________________
காதல் என்பது ஆன்மாவை வளப்படுத்தகூடியது...உடலுக்கு உணவு எப்படியோ அப்படித்தான் ஆன்மாவுக்கு காதல் ... காதல் வயப்பட்ட ஒருவனுக்கு வேறு எதுவும் முக்கியமாக தோன்றாது...எனவே அவனை சமுதாயம் தவ்றான வழிகளில் பயன்படுத்த முடியாமல் போய் விடும்....இதனால்தான் எப்போதுமே சமுதாயம் காதலுக்கு எதிராகவே உள்ளது.... ஆனால் உண்மையான காதலை உணர்ந்தவன் எந்த நிலையிலும் காதலை விட்டுக்கொடுக்க மாட்டான்.. ஒரு வேளை பிரிவு ஏற்பட்டாலும் அது அவனுக்கு நல்லதே செய்யும்.. காதல் உணர்வைபோல , பிரிதலின் வேதனையும் மனமற்ற நிலைக்கு அவனை அழைத்து செல்லத்தக்கது - ஓஷோ

________________________________


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா