Sunday, November 21, 2010

படித்தவற்றில் பிடித்தவை..

 

 

சென்ற வாரம் படித்தவற்றில் பிடித்தவை..

 

1. பொய்த்தேவு- க  நா சுப்ரமணியம்

                  ஒரு கஷ்டமான சூழலில் பிறக்கும் சோமுப்பயல்  , சோமு பண்டாரமாக பரிணாம வளர்ச்சி அடைந்து இறப்பது வரையிலான வாழ்க்கையைப்பற்றிய தேடல்தான் நாவல்..

                      படிக்கலாமா வேண்டாமா என்ற ஆழ்ந்த யோசனைக்குப்பின் தான் படிக்க ஆரம்பித்தேன்.. ஆனால் படிக்க ஆரம்பித்ததும்தான் இதை இத்தனை நாள் தவற விட்டது தவறு என உணர்ந்தேன்..

               புரியும்படியான ச்ரளமான எழுத்து…  சீரான கதைப்போக்கு..

                கடவுள்  இருக்கிறார் , இல்லை என்ற விளையாட்டு ஒரு்புறம்,,, அதை விட்டு விடுவோம்..

கடவுள் இருக்கிறார் என சொலபவர்களுக்கும், இல்லை என சொல்ப்[அவர்களுக்கும், இந்த பிரச்சினையில் அக்கரையே இல்லாத ஒருவர்களுக்கும் ஒரு பொதுத்தனமை இருக்கிறது..

                           இந்த மூன்று பிரிவில் ஒன்றில்தான் நாம் இருப்போம்.. நம்மை வழினடத்துவது என்ன என பார்த்தால், நம் சிந்தனைகள், லட்சியங்கள், ஆசைகள் , கனவுகள் போன்றவைதான்… ஆகவே இவைதாம் நம் தெய்வங்களாக இருக்கின்றன…

ஒரு கட்டத்தில்  நாம் ஆராதிக்கும் பாலுணர்வு, எதிர்பால் கவர்ச்சி போன்றவை , இன்னொரு கால கட்டத்தில் அலுப்பால மாறக்கூடும்.. பணம் , புகழ் போன்றவையும் ஒரு கட்டத்தில் தெய்வமாக இருக்கலாம்.. ஒரு கட்டத்தில் பொய் தெய்வமாக மாறலாம்… 

                 ஒவ்வொரு நொடியிலும் கூட நம் தெய்வங்கள் மாறிக்கொண்டே இருக்கலாம் ..

இந்த கணம் தெய்வமாக இருப்பவை அடுத்த கணம் பொய்த்தேவாக மாறலாம்…

ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் நாவல்… சிறிய நாவல்தான் ..தைரியமாக படிக்கலாம்….

கண்டிப்பாக படிக்கவேண்டிய நாவல்..

 

2. இயேசுவின் தோழர்கள்..- இந்திரா பார்த்தசாரதி..

கம்யூனிஸ்ட் நாடுகளில் சொர்க்கம் குடி இருக்கிறது என ஒரு காலத்தில் நம்பப்பட்டது…

அதன் பின் , சோவியத் யூனியன் வீழ்ந்த நிலையில் , கம்யூனிசம் என்றால் கொடூரம் என்ற கருத்து வலுப்பட்டது..

உண்மையில் அங்கு வாழ்க்கை என்ன, அங்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் சரியாக சொல்லும் நாவல்கள் இல்லை..

      இந்த நாவல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்த போலந்து நாட்டில் நிகழ்கிறது…

பிரச்சார நெடி எதுவும் இல்லாமல் , யதார்த்தமாக இருப்பது நாவலின் சிறப்பு…

போலந்தை பற்றி தெரிந்து கொள்வதை விட நம்மை பற்றி அதிகம் தெரிந்து கொள்கிறோம்- சிந்திக்க ஆரம்பிக்கிறோம்..

விறு விறுப்பான நாவல்…

 

     ஒரு கவிதை

ஏடன் தோட்டத்தில்

கிளையொன்றில் அமர்ந்த

குருவிக்கு

நினைப்பில் தட்டியது

அடடே நேற்று இங்கொரு

ஆப்பிள் இருந்ததே

அப்புறம் அதற்கு

மறந்து போச்சு

- தேவதச்சன்

3 comments:

 1. பொய்த்தேவு நல்ல நாவல். கே எம் ஜார்ஜ் தொகுத்த 'Masterpieces of Indian Literature' (தொகுதி 2, நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு) புத்தகத்தில் வரும் 16 நாவல்களுள் ஒன்று.

  க நா சு கதைகள் மொத்தம் இரண்டு தொகுதிகள், கட்டுரைகள், விமர்சனங்கள் இரண்டு தொகுதிகள், மொழி பெயர்த்த உலக இலக்கியம் ஒரு தொகுதி (எல்லாம் காவ்யா பதிப்பகம் வெளியீடு) , க நா சு பற்றிய சுந்தர ராமசாமியின் நினைவோடை (காலச்சுவடு வெளியீடு)ஆகியவற்றையும் படித்துப் பாருங்கள். நன்றாக இருக்கும். படித்து முடிக்க நிறைய நாட்கள் ஆகும்!

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி கோபி.

  படிக்க வேண்டியது, தெரிந்து கொள்ள வேண்டியது னிறைய இருக்கிறது என்பதை அறியும்போது மலைப்பாக இருக்கிறது

  ReplyDelete
 3. தேவதச்சனின் கவிதை அருமை. நிறைய படியுங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா