Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Tuesday, December 15, 2015

ராமராஜனும் ஜெய்சங்கரும் - வெள்ளம் - இருட்டு அனுபவம்



இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டதாக பலர் நினைக்கிறார்கள்... மின்சாரம் , நெட் , டிவி என சிலருக்கு கிடைப்பதால் அதை மட்டும் வைத்துக்கொண்டு எல்லோரும் சுகம் என நினைக்கிறார்கள்.. ஆனால் இதை பதிவிடும் 15.12.2015  நிலவரப்படி இன்னமும்கூட நீரில் மூழ்கி இருக்கும் இல்லங்கள் ஏராளம் , தண்ணீர் தொடர்ந்து இறைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது...சாலைகள் சீரடையாத சூழலும் பல இடங்களில் உள்ளது

-----------------------------------------------------

என்னதான் கடைகளில் காய்கறி வாங்கி சாப்பிட்டாலும் நாமே நம் வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு உண்டால் அதன் சுவையே தனிதான்.. அதேபோல நம் வாகனங்களை சர்வீஸ் செய்ய விடுவதை விட , நாமே அதை கழுவி , பாகங்களை பிரித்து , உயவுப்பொருட்கள் தேவைப்படும் இடங்களில் அதை சேர்த்து மீண்டும் சரியாக பொருத்தி சரியாக வேலை செய்ய வைத்தால் அப்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனிதான்.. வாகனம் என்பது சைக்கிளாக இருக்கலாம். அல்லது காராக இருக்கலாம்.  எதுவாக இருப்பினும் அனுபவம் ஒன்றுதான்

----------------------------

மின்சாரம் இல்லாத சென்னை ஒரு வித்தியாசமான அனுபவம் தந்தது. எங்கும் வெளிச்சமே இல்லை. கும்மிருட்டு , மையிருட்டு என்றெல்லாம் சொல்வார்களே...அதை அனுபவிக்க முடிந்தது, கண் மூடினால் எப்படி இருக்குமோ அதேபோலவே கண்ணை மூடினாலும் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.  நெட் , டிவி , மின்விளக்கு வெளிச்சம் இல்லாத சுகத்தை அனுபவித்தபின் மீண்டும் இவற்றை பயன்படுத்த மனம் வரவில்லை... தேவைப்படும் குறைந்த பட்ச மின்சாரம் , குறைந்தபட்ச நெட் , குறைந்தபட்ச டிவி என்பது எனக்கு பழக்கமாகி விட்டது

---------------------------------------------


அதுவரை அக்கம்பக்கத்தினர் யாரென்றே தெரியாமல் இருந்தவர்கள் , மின்சாரம் இல்லாமல் டிவி பார்க்க முடியாமல் , மொட்டை மாடி மீட்டிங் நடத்தி டொனால்ட் டிரம்ப் முதல் செம்பரம்பாக்கம் ஏரி வரை சகல விஷ்யங்களையும் அலசினர். என்னவோ ரொம்ப நாள் பழகிய மாதிரி கொஞ்சி குலவினர். மீண்டும் மின்சாரம் வந்ததும் மீண்டும் வீட்டிலேயே பம்ம ஆரம்பித்து விட்டனர்..

------------------------------------------------------


சில படங்களை ரசித்து பார்த்திருப்போம். நாயகர்களை போற்றி இருப்போம். அதே நாயகர்கள் மார்க்கெட் போன பின்பு சாதாரண படங்களில் நடிக்கையில் சற்று வருத்தமாக இருக்கும். உதாரணமாக ஜேம்ஸ் பாண்ட் பாணி படங்களில் நடித்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் வில்லனாக நடித்து சின்ன சின்ன நடிகர்களிடம் அடி வாங்கியதுபோல நடித்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாகவே இருந்தது...

ஒரு காலத்தில் ரஜினி , கமலுக்கே டஃப் ஃபைட் கொடுத்த  ராமராஜன் , இப்படி சாதாரண வேடங்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளித்தது . ராமராஜன் என்றால் கரகாட்டக்காரன் நினைவு வந்தால்போதும்.


----------------------------------------------

Saturday, December 1, 2012

சட்டசபை வரலாறு - டாப் ஃபைவ் நிகழ்வுகள்



தமிழக சட்டப்பேரவை வைர விழாவை  திமுகவும் , அதிமுகவும் வெவ்வேறு ஆண்டுகளில் கொண்டாடி மகிழ்ந்தன.  இந்த சட்டப்பேரவை வரலாற்றில் , முக்கியமான நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .

அவற்றை எல்லாம் கண்டிப்பாக ஒவ்வொருவரும்  தெரிந்து கொள்ள வேண்டும்.  இதைத்தவிர , அரசியலில் திருப்புமுனை நிகழ்ந்த சம்பவங்கள் ஏராளம் . அந்த வகையில்  டாப் ஃபைவ் நிகழ்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


5  தி மு கவை விட்டு விலகிய எம் ஜி ஆர் , அப்போதைய தி முக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். அப்போதைய சபா நாயகர் மதியழகன்  , திடீரென எம் ஜி ஆர் ஆதரவாளராக மாறினார். சட்டசபை கூடியபோது , திமுக அரசு மக்கள் ஆதரவை இழந்து விட்டதாகவும் , சட்டசபையை கலைக்க வேண்டும் என்றும் கூறி , சட்டசபையை ஒத்தி வைத்தார்.

இதனால் கடுப்பான கருணா நிதி , ஒத்தி வைக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே சட்டசபையை கூட்டி , சபா நாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தார். அந்த கூட்டத்தில் , சபானாயகர்  நாற்காலியில்  , மதியழகன் இருந்தார். அவருக்கு பக்கத்தில் இன்னொரு  நாற்காலியை போட்டு , சீனிவாசனை சபானாயகராக அமர வைத்தார்கள். ஒரே நேரத்தில் இரு சபானாயகர்கள் !!! இது போல அதற்கு முன்னுன்ம் நிகழ்ந்ததில்லை.. அதன் பின்னும் நடக்கவில்லை.


4 அந்த கூட்டத்தில் பயங்கர கூச்சல் , குழப்பம் நிலவியது. எம் ஜி ஆர் பேசும்போது அவர் மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது , அவர் மீது செருப்பு வீசப்பட்டது. சட்டசபை செத்து விட்டது என்று சொன்ன எம் ஜி ஆர் , இனி சட்டசபைக்கு வரவே மாட்டேன் என்று சூளுரைத்தார். அதன் படி , முதல்வர் ஆன பின்புதான் சட்டசபைக்குள் நுழைந்தார் .


3 வழக்கமாக சட்டசபையை கலைத்து விட்டு தேர்தலை சந்திப்பதாக இருந்தால் , முதல்வர்தான் அந்த முடிவை எடுப்பார். அல்லது மெஜாரிட்டி இல்லாத நிலையில் , சட்டசபை கலைக்கப்படும். அல்லது ஏதாவது குற்றச்சாட்டின் படி மத்திய அரசால் கலைக்கப்படும், இது எதுவும் இல்லாமல் ,. ஒரு முறை கலைக்கப்பட்ட முன்னுதாரணம் நமக்கு உண்டு,

எம் ஜி ஆர் உடல் நலமின்றி , அமெரிக்க மருத்துவமனையில் இருந்தார். பிரதமராக பதவியேற்று இருந்த ராஜீவ் காந்தி , பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்து இருந்தார். அப்போதைய இந்திரா காந்தி அனுதாப அலையில் , பலன் காண அதிமுக விரும்பியது.  அதிகபட்ச எம் பி சீட்டுகளை தமிழ் நாட்டில் இருந்த பெற காங்கிரஸ் விரும்பியது. எனவே  இவர்களாகவே முடிவு செய்து  ( முதல்வருக்கு தெரியாமல் ) சட்டசபையை கலைத்து , தேர்தலை சந்தித்தார்கள் .

இதை கருணா நிதி கண்டித்தார் ...

"எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற்று வரும் வரையில் ஜனநாயக ரீதியில் ஒருவரை தற்காலிக முதல் அமைச்சராக தேர்ந்தெடுத்து இருக்கலாம். சட்டசபையை கலைக்க வேண்டியதில்லை. முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். வந்தபிறகு ஜுன் மாதம் தேர்தலை நடத்தி இருக்கலாம். 

சட்ட சபையை கலைக்கவேண்டும் என்ற முடிவு எடுக்கிற உரிமை முதல் அமைச்சருக்கே உண்டு. ஆனால் முதல் அமைச்சரின் அறிவுரை இல்லாமல் கவர்னர் இப்படி முடிவு எடுத்து அறிவித்தது, மிகத்தவறான முன்மாதிரியை உருவாக்கிவிட்டது என்பதை வருத்தத்துடன் குறிப்பிடுகிறேன்." 


2 எம் ஜி ஆர் மறைவுக்கு பிறகு , அதிமுக உடைந்து பலவீனமாக இருந்தது.  தி மு க ஆட்சியை பிடித்து இருந்தது. ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தார். ஆனால், ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையெல்லாம் , அவருக்கு இல்லை.  அவர் கட்சியை டம்மியாக்கி , ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டு இருந்தது. 

இந்த நிலையில், சட்டசபை கூட்ட்டம் ஒன்றில் , அவர் சேலையை பிடித்து இழுத்து , திமுகவினர் அசிங்கப்படுத்தினர் என்ற செய்தி பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. தேசிய அளவில் ஜெ. ரீச் ஆனது அப்போதுதான் , அதேபோல கிராமங்களிலும் இந்த நிகழ்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் முதல்வராகத்தான் ஜெ. சட்டசபையில் நுழைந்தார் .

1. காங்கிரஸ் கண்ணில் விரலை விட்டு ஆட்ட அண்ணா பயன்படுத்திய முக்கிய ஆயுதம் சட்ட எரிப்பு போராட்டம். இதற்காக அண்ணா சிறை செல்ல வேண்டி இருந்தது. எம் ஜி ஆர் காலத்தில்  இந்த சட்ட எரிப்பு போராட்டம் , கருணாநிதி தலைமையில் காமெடியாக முடிந்தது. 

சட்ட எரிப்பு போராட்டம் என கருணாநிதி அறிவித்தார். எம் ஜி ஆர் அரசு கண்டு கொள்ளவே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்வார்கள் என எதிர்பார்த்தார். ஆனால் அரசு ஒன்றுமே செய்யவில்லை. திட்டமிட்டப்படி, சட்ட எரிப்புக்கு ஆயத்தமானார்கள். போலீசார் கூடி நின்றனரே தவிர , தடுக்கவில்லை.  எரித்தும் விட்டார்கள், அப்போதும் ஒன்றும் நிகழவில்லை. 

யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. 

பிறகுதான் புரிந்தது. அப்போதைய சபானாயாகர் பி எச் பாண்டியன் , சட்ட எரிப்பில் ஈடுபட்ட அனைத்து தி மு க எம் எல் ஏக்களும் , பதவி இழக்கிறார்கள் என அதிரடியாக அறிவித்தார். சட்டத்தை மதிப்பதாக பதவி ஏற்கும் எம் எல் ஏக்கள் , சட்டத்தை எரித்ததன் மூலம் , பதவி இழப்பதாகவும், தனது இந்த முடிவை யாரும் மாற்ற முடியாது என்றும் , தனக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார் . தேசிய அளவில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பதவி பறிப்பை , தி மு க கொஞ்சம் எதிர்பார்க்கவில்லை.  அவர்கள் அத்தோடு விட்டு இருக்கலாம். ஆனால் நீதி மன்றம் சென்று , தாங்கள் சட்டத்தை எரிக்கவில்லை என்றும் , வெறும் காகித்தைத்தான் எரித்தோம் என்றும் கூறி, சட்ட எரிப்பையே கேலி கூத்தாக்கினார்கள். ஆனாலும் பதவி போனது போனதுதான்.





Wednesday, November 28, 2012

மிருகங்களுடன் “ உறவு” கொளவது தண்டனைக்குரியதா ? அயல் நாட்டு அக்கப்போர்


மிருகங்களுடன் பாலுறவு வைத்து கொள்வதை சட்ட விரோதம் என அறிவிக்க  ஜெர்மன் அரசு முடிவு செய்துள்ளது . இதற்கு அந்த நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. மிருகங்களுக்கும் , மனிதர்களுக்கும்  நிலவும் பந்தத்தை உடைக்க அரசுக்கு உரிமை இல்லை எனவும் , இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஜெர்மனியில் , மிருகங்களுடன் உறவு கொள்வது சட்டப்பூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று. 1969ல் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.  தாராளாமாக செய்து கொள்ளுங்கள். ஆனால் , வாயில்லா ஜீவன்கள்.. அதிகம் வலிக்காமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சட்டம் கூறியது.  அத்து மீறி ரண களம் ஆகிவிட்டால் , ஃபைன் போட்டு விடுவார்கள்.


ஆனால்  மிருகங்களை கொடுமைப்படுத்துகிறார்களா , மிருகங்கள் இந்த உறவை ஏற்கின்றனவா என்பதில் எல்லாம் குழப்பம் நிலவியது. இந்த பிரச்சினையே வேண்டாம் என நினைத்த அரசு , இந்த உறவுக்கு முழுமையாக தடை விதிக்க இருக்கிறது. டிசம்பர் 14ந்தேதி , இதற்கான தீர்மானத்தில்ல் வோட்டெடுப்பு நடக்க இருக்கிறது.
சட்டம் கொண்டுவர மும்முரமாக இருக்கும் ஜெர்மன் மந்திரி 

மிருகங்கள் தமது துணையோடு இருப்பது இயல்பு. யாரேனும் அந்த துணையை விரட்டி விட்டு , தான் துணை சேர ஆசைப்பட்டு , கையும் களவுமாக பிடிபட்டால் 25,000 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

இதற்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசை எதிர்த்து , வழக்கு தொடர இருக்கிறார்கள் .

போராட்ட குழுவின் தலைவரான micheal kiok கூறுகையில்,  ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்வது கஷ்டம். அவள் உறவை விரும்பாத நிலையிலும் கூட , அவள் அதை விரும்புவதாக நினைத்து கொண்டு , நாம் உறவில் ஈடுபடும் வாய்ப்பு உண்டு. ஆனால் விலங்குகள் அப்படி அன்று. அவற்றுக்கு விருப்பம் இல்லாவிட்டால் , வெளிப்படையாக தெரிந்து விடும். எனவே அவற்றின் விருப்பம் இல்லாமல் உறவு என்ற பேச்சுக்கு இடம் இல்லை “ என லாஜிக்கலாக பேசுகிறார்.  மேஜராகி விட்ட ஆணும் , பெண்ணும் காதல் திருமணம் முடிப்பதை ஏற்பது போல , “ மனம் “ ஒத்து , ஒரு மிருகமும் மனிதனும் உறவு கொள்வது எப்படி தவறாகும் என்பது அவர் கேள்வி.

 மிருகம் அந்த உறவை விரும்பவில்லை என்பதை எப்படி நிரூபிக்க முடியும் , நிரூபிக்க முடியாத ஒன்றுக்கு எப்படி அபராதம் விதிக்க முடியும் என்ற கேள்வி , கோர்ட்டில் எடுபடும் என்றே தோன்றுகிறது.

அரசின் இந்த முடிவுக்கு மிருக நல சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திள்ளனர். ஆனால் , மிருக வதை தடுப்பு இந்த சட்டத்தினால் நின்று விடப்போவதில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.  காரணம் பல்வேறு வடிவங்களில் மிருக வதை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு வகைதான் , உறவு சமாச்சாரம்.

ஆனால் இந்த உறவு சமாச்சாரம் மிருக வதை அல்ல என அழிச்சாட்டியம் செய்கிறார்கள்  சிலர். இது , மிருகங்களுக்கும் அவற்றின் காதலர்களுக்குமான தனிப்பட்ட விவகாரமாம். அதில் யாரும் தலையிடக் கூடாதாம்..

ம்ம்... என்ன சொல்ல ?


Thursday, November 22, 2012

பாரதிராஜா, வைகோ - யார் சொல்வது சரி? நீங்கள் திராவிடனா , தமிழனா ?


  ஆரியர், திராவிடர் என்பது எனக்கு கொஞ்சம் குழ்ப்பமான சமாச்சாரமே இருந்து வருகிறது. திராவிடம் என சொல்லிக்கொள்வதில் ஒரு பெருமிதம் கிடைக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், திராவிடன் என நாம்தான் சொல்லிக்கொண்டு அலைகிறோம். மலையாளிகளோ , கன்னடர்களோ , தெலுங்கர்களோ அப்படி சொல்லிகொள்வதும் இல்லை.. நினைத்து கொள்வதும் இல்லை. எனவே நம்மை திராவிடர்கள் என சொல்லிக்கொண்டு இழப்புகளை சந்தித்து வருகிறோம். நாம் எல்லாம் தமிழர்கள் என்ற பேச்சுகளும் நன்றாகத்தான் இருக்கிறது..

கொருக்குப்பேட்டை வாசி , சென்னை வாசி, தமிழன் ,  திராவிடன் , ஆசியன் என்பதை எல்லாம் தாண்டிய நிலையில் வாழ வேண்டும் என்ற ஆசை இருந்தாலும்கூட , நடைமுறை வாழ்வில் ஓர் அடையாளத்துடன் வாழ வேண்டி இருக்கிறது. அந்த அடையாளத்துக்கு உண்மையாகவும் இருக்க வேண்டி இருக்கிறது.  நம் அனடை மாநிலங்களில், நம்மை திராவிடர்கள் என ஒப்புக்கொள்ளாவிட்டாலும் , வட இந்தியா சென்றால் , தென்னிந்தியர்களை ஒன்றாகத்தான் வகைப்படுத்துகிறார்கள் . 

தமிழ் நாட்டுக்குள் இருக்கும்போது , திராவிடன் என்ற அடையாளம் நல்லது செய்து இருக்கிறதா இல்லையா என்பதை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியாது என தோன்றுகிறது.  திராவிடம் என சொன்னாலும் , அண்ணா போன்ற உண்மையான திராவிட தலைவர்கள் , தமிழுக்குத்தான் பெருமை சேர்த்தார்கள் என்பதை மறுக்க முடியாது.  சமஸ்கிருதத்தை கலந்து எழுதுவது , வட மொழி சொற்கள் ஆதிக்கம் போன்றவை ஒழிய திராவிட இயக்கம்தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஆனால் , படிப்படியாக அன்று இருந்த வட மொழி ஆதிக்கத்தின் இடத்தை ஆங்கிலம் பிடித்து இருப்பதை எங்கும் பார்க்கிறோம். இதற்கு காரணம் , திராவிடம் என்ற மாயையில் நாம் மூழ்கியதுதான் என சிலர் சொல்ல ஆரம்பித்துள்ளனர். 

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது , “ திராவிடர்கள் “ யாரும் உதவிக் குரல் எழுப்பவில்லையே... 

இது குறித்த விரிவான விவாதம் தேவை என நினைக்கிறேன். 


   இது குறித்து , இயக்குனர் பாரதிராஜாவுக்கும் , வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.


தா பா பிறந்த நாள் விழாவில் பாரதிராஜா பேசினார்.. 


பாரதிராஜா 

ஈழப்பிரச்சினையில் நாம் தோற்று விட்டோம். திராவிடம் பேசி நம்மை அழித்து விட்டனர். தமிழினம் அழிவதை தமிழக அரசியல்வாதிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திராவிடத்தை பேசிக்கொண்டே ஈழத்தை காப்பாற்றாமல் விட்டு விட்டார்கள். பேசியே தமிழர்களை மழுங்கடித்து விட்டனர். 

இதற்கு பின் பேசிய வைகோ ஆவேசமாக காணப்பட்டார். பேசி விட்டு கோபத்துடன் கிளம்பி விட்டார்.. 


வைகோ 

பாரதிராஜாவே , வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என பேசிவிட்டு போய் இருக்கிறீர்கள் . திராவிடத்தைப் பற்றி பேசுவது சிலருக்கு பொழுது போக்கு. திராவிடம் இல்லை என்றால் இங்கே எதுவுமே  இல்லை. அண்ணா , பெரியார் இல்லாமல் இங்கே எதுவும் நடந்து இருக்காது.  இனி திராவிடம் பற்றி ஒரு வார்த்தை பேசினால் , நாங்கள்  பத்து வார்த்தை பேச வேண்டி வரும்,


அதன் பின் ஒரு பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பாரதிராஜா தன் கருத்தை மீண்டும் வலியுறுத்தினார். 



பாரதிராஜா 
வைகோ ஒரு அற்புதமான பேச்சாளி, இலக்கியவாதி, அறிவாளி. அவர்கிட்ட நான் கேக்கறது ஒண்ணே ஒண்ணுதான். திராவிடம்... திராவிடம்னு பேசி தமிழ்நாட்டை அழிச்சது போதும். ஒரு தமிழனா மாறுங்க... திராவிடம்னா அதைத் திருவனந்தபுரத்துலயோ, பெங்களூ ருலயோ, ஹைதராபாத்லயோ நின்னு பேச வேண்டியது தானே? எதுக்கு தமிழ் நாட்டுல மட்டும் பேசறீங்க? எவனாவது ஒரு தமிழன் மற்ற மாநிலங்கள் எதை யாவது ஆள முடியுமா? தமிழ்நாட்டை தமிழன்தான்யா ஆளணும்... நான் பிறந்து வளர்ந்த இந்த மண்ணுக்காகத்தான் நான் பேசறேன். வைகோ தமிழன்தானே... அப்புறம் ஏன் தன் கட்சி பேர்ல திராவிடத்தை வெச்சுக்கணும்? அதை மாத்தச் சொல்லுங்க.. திராவிடன் பிராமண எதிர்ப்புனு சொல்லி ஊரை ஏமாத்துனது போதும். பிராமணனும் தமிழன்தானே? அவன் தமிழ் தானே பேசறான்? பார்ப் பனீய எதிர்ப்புனு சொல்லி இன்னமும் ஏமாத்தாதீங்க. இதனால, கலைஞர் கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை. அவருக்கு இதுல உள்ள நியாயம் புரியும். அவர் என்னை விமர்சித்தால் விமர்சிக் கட்டும். ஆனால், நான் பின்வாங்க மாட்டேன். நான் திராவிடத்துக்கு எதிரி தான், எனக்குத் தமிழன்தான் முக்கியம்



***********************************************************************************


ம்ம்... நான் திராவிடனா அல்லது தமிழனா எனக்கு குழப்பமாக இருக்கிறது . நீங்கள் திராவிடனா , தமிழனா ? 


Tuesday, November 13, 2012

ஹீரோ ஹோண்டா விளம்பர எதிர்ப்பு என்ன சாதித்தது? கேபிள் சங்கர் , தமிழ் ஸ்டுடியோ அருண் கருத்து


சென்ற வாரம் பரபரப்பாக பேசப்பட்ட விஷ்யம் , ஹீரோ ஹோண்டா விளம்பரம். 

ஜாதி பெயரை பயன்படுத்தியது தவறு என்பது சிலர் கருத்து. ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்வானதாக இந்த் விளம்பரம் சித்திரிக்கிறது என்கின்றார்கள் அவர்கள்.

ஜாதி பெயர் பல வணிக நிறுவனங்களில் , உணவகங்களில் பயன்படுத்தப்படுகின்றன. அதை எல்லாம் தடுக்காமல் , ஹீரோ ஹோண்டா விளம்பரத்தை மட்டும் எதிர்ப்பது விளம்பட ஸ்டண்ட் அல்லது அறியாமை.  இதன் மூலம் , ஹீரோ ஹோண்டாவுக்கு இலவச விளம்பரம் கொடுத்ததை தவிர வேறு எதையும் இந்த எதிர்ப்பு சாதிக்கவில்லை என்பது இன்னொரு தரப்பு.


இது குறித்து , திரு கேபிள் சங்கர்  மற்றும் தமிழ் ஸ்டுடியோ திரு . அருண் ஆகியோர் கருத்துகள் உங்கள் பார்வைக்கு....




                     
                    நான்கு மடங்கு ரீச் - கேபிள் சங்கர் 


ஹீரோ கம்பெனிக்காரர்கள் சென்ற வாரம் தினசரிகளில் கொடுத்த விளம்பரத்தினால் அவர்களுக்கு கிடைத்த ரீச்சை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அந்த விளம்பரத்தில் ஒரு ஆணும், குழந்தையும், ஹீரோ பைக்கும் இருக்க, ஆணுக்கு சேகர் ஐயர் என்றும், பெண்ணுக்கு ஸ்வேதா ஐயர் என்றும், வண்டிக்கு ஹீரோ ஐயர் என்று பெயர் போட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். வடநாடுகளில் தங்கள் பெயர்களுடன் ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. அது போல ஹீரோ வண்டியும் அவர்களுடன் சேர்ந்ததால் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டது என்பதை சொல்லத்தான் விழைந்திருந்தார்கள். ஆனால் நம்மூர் வழக்கப்படி ஜாதிப் பெயரைப் போட்டதினால் அந்த விளம்பரம் பல பேரால் அனைத்து சமூக தளஙக்ளிலும் ஷேர் செய்யப்பட்டு, சாதாரணமாய் கிடைத்திருக்க வேண்டிய விளம்பரத்தை விட, நான்கு மடங்கு கிடைத்துவிட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்த நாள் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஜாதிப் பெயரை எடுத்து மீண்டும் அதே விளம்பரத்தை கொடுக்க, இன்னும் பெரிய ஹிட். எது எப்படியோ ஐயர் என்று போட்டதால் கிடைக்க வேண்டியதுக்கு  மேலேயே கிடைத்துவிட்டது  விளம்பரம்.





                               
Hero Motors இன் வெற்றி -  தமிழ் ஸ்டுடியோ அருண் 

எதையும் எழுத வேண்டாம் என்றே நினைக்கிறேன். ஆனாலும் நான் சொல்ல வேண்டியதை வேறு யாரு சொல்வார்கள். எனவே எழுதுகிறேன். கடந்த வாரம் முழுவதும், முகநூலின் விவாதத்தில் இடம்பெற்ற Hero Motors இன் விளம்பரம்.. ஐயர் என்று போட்டு இருந்ததால் அதுப் பற்றி மிக பரவலான தெறிக்கும் விவாதம் நடைபெற்று, இறுதியில் Hero Motors அந்த விளம்பரத்தை மாற்றியதை தங்கள் புரட்சியின் மூலம் கிடைத்த வெற்றியாக முகநூல் நண்பர்கள் 
அறிவித்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டார்கள். ஆனால் அது வெற்றியல்ல, உணர்ச்சிவசப்படும் தமிழர்களின் தோல்வியாகவே அதை நான் பார்க்கிறேன். எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்பட்டு அதன் எதிர்கால எதிர்வினைகள் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாத இது மாதிரியான வெற்றிகள் கொடுக்கும் எதிர்வினையை உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த விளம்பரத்தை மிக சிறப்பாக ஒரு Sensational விசயமாக கொண்டுவந்து பைசா செலவில்லாமல் Hero Motors இன் தமிழகப் பிரிவு வெற்றி பெற்றிருக்கிறது.

உணர்ச்சி இல்லாதவன் மனிதன் அல்ல.. ஆனால் எல்லா விடயங்களிலும் உணர்ச்சி வசப்படுபவன் அதற்கான எதிர்வினைகளையும் அனுபவித்துதான் ஆக வேண்டும். மாறாக இது மாதிரியான போராட்டங்களை வழி நடத்தி செல்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை தன் சுயக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். வைகோவின் கட்சியும், வைகோவின் தோல்வியும் பறைசாற்றும் உண்மை இதுதான்.

ஐயர் என்று விளம்பரப் படுத்தியதால் உங்களில் எத்தனை பேர் அந்த வண்டியை இனியும் வாங்காமல் இருப்பீர்கள்? அதான் பெயர் மாற்றியாகிவிட்டதே.. இனி வாங்கினால் என்ன என்றுதான் எதிர்வாதம் செய்வீர்கள்? அதுதான் Hero Motors இன் வெற்றி.. போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே

Thursday, November 8, 2012

பைக் விளம்பரமும் , நம் மக்களின் இலவச விளம்பரமும்- அபத்தங்களின் ஆவேச நடனம்




அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் கேட்டார்.

“ தமிழ் நாட்டில் பிரமாணர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்த நிலையில் அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது சரியா? இதனால் என்ன பயன் ? “

அண்ணா பதில் அளித்தார்.

“ நாங்கள் பிரமாணர்களை எதிர்க்கவில்லை. பிராமணீயம் என்பதைத்தான் எதிர்க்கிறோம். பிராமணீயம் என்பது பிராமணர்களால் உருவாக்கப்பட்டாலும் , அதை போற்றி வளர்ப்பது மற்றவர்கள்தான். எனவேதான் பிராமணீயம் என்பது அச்சுறுத்தும் ஒன்றாகவும் . எதிர்க்கப்பட ஒன்றாகவும் இருக்கிறது “ என்றார்.

     பிராமணியத்தை வெறுக்க கூடிய பிராமணர்களும் இருக்கலாம். பிராமணீயத்தை ஆதரிக்கும் அபிராமணர்களும் இருக்கலாம். இது ஜாதி சார்ந்தது அல்ல. இது ஒரு மன நிலை.

சமீபத்தில்  நடிகர் கமல் , தன் படத்தை பார்த்துதான் ஹாலிவுட் இயக்குனர் டொரண்டொனோ காப்பி அடித்ததாக பிருடா விட்டு கிண்டலுக்கு உள்ளானார். கமல் சொன்னதை வழி மொழிந்து பேச பாலசந்தரோ மற்ற பார்ப்பனர்களோ தயாராக இல்லாத நிலையில், பகுத்தறிவு பாசறையை சேர்ந்த சத்யராஜ் ஒரு கூட்டத்தில் , கமல் சொன்னதை வழி மொழிந்து பேசினார். கமலை பார்த்து தான் இன்ஸ்பைர் ஆனதாக அந்த ஹாலிவுட் இயக்குனர் சொன்னதாக பேசினார்.

இதுதான் பார்ப்பணீயம் .

இன்று அந்த பார்ப்பணீயம் எனக்கு பெரிய தலை வலி ஏற்படுத்தியது. மெயில் இன் பாக்ஸ் முழுதும், ஒரு இரு சக்கர வாகனத்தின் விளம்பரம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு தீவிரமாக அவர்கள் விளம்பரம் செய்ய மாட்டார்களே என்று குழம்பி போய்   அனுப்பியது யார் என பார்த்தேன். அனுப்பியது அவர்கள் இல்லை.

நண்பர்களும் , நலம் விரும்பிகளும்தான் அனுப்பி இருந்தார்கள். இவர்கள் ஏன் அந்த நிறுவனத்துக்கு இலவச விளம்பரம் செய்கிறார்கள் என பார்த்தபோதுதான் , விஷ்யம் தெரிந்தது.

அந்த வாகன விளம்பரத்தில் , ஒரு ஜாதி பெயரை பயன்படுத்தி இருந்தார்கள். பாராட்டியோ, திட்டியோ இல்லை. ஒரு ஃபீல் கொண்டுவருவதற்காக.

ராஜ்குமார் , ராம்குமார் மற்றும் ஸ்ப்லெண்டர் குமார் என்று சொல்லி, பைக்கும் குடும்பத்தில் ஒருவன் என்ற ஃபீல் கொண்டு வரும் முயற்சி.

தம் அனுமதி இல்லாமல் எப்படி தம் ஜாதி பெயரை பயன்படுத்தலாம் என கேட்டு , ஐயர்கள் சண்டைக்கு போய் இருந்தால் லாஜிக்காக இருந்து இருக்கும். ஆனால் அய்யர் அல்லாத நண்பர்கள் , இதற்காக உணர்ச்சி வசப்பட்டு , கவனத்துக்கு வராமல் போய் இருக்க கூடிய அந்த விளம்பரத்தை, எனக்கு அனுப்பி இருந்தார்கள்.

எனக்கு மட்டும் அல்ல.. ஒவ்வொருவரும் தலா ஆயிரம் பேருக்காவது அனுப்பி இருப்பார்கள் என யூகிக்கிறேன். இது போல தமிழ் நாட்டில் எத்தனை பேர் செய்தார்கள் என தெரியவில்லை. ஐய்யர் என்ற பேருக்கு இவ்வளவு மவுசா என அந்த இரு சக்கர வாகன நிறுவனம் மகிழ்ந்து போய் இருக்கும். சம்பந்தப்பட்ட மார்க்கெட்டிங் ஏஜன்சி ஊக்கத்தொகை பெற்று இருக்கும்.

             பெரியார் , அண்ணா போன்றோர் வழி காட்டிய மண்ணில் ,  இப்படி ஒரு அபத்தமான நிலையை பார்த்து அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை.
             






Sunday, November 4, 2012

சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் , பாலியல் கமெண்ட் எழுதலாமா- ஞானி ஆதங்கம்


சின்மயி விவகாரத்தில் சிலர் தேவையில்லாமல் தலையிட்டு , அவரை பெரிய ஆளாக்கி வருகின்றனர். கண்டிக்கத்தக்க கருத்துகளை சொல்லி , மற்றவர்களை புண்படுத்தியவர் சின்மயி. ஆனால் அவர் புண்பட்டுவிட்டது போல ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் விஷ்யம் தெரிந்தவரும் , நடு நிலையாளரும் , விமர்சகருமான ஞானி இருதரப்பில் இருக்கும் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருந்தார்.

ஞானியின் அந்த கட்டுரை இதில்..



அதில் சில வரிகள் , பெரியாரை பெரிதும் மதிப்பவன் , ஆராதிப்பவன் என்ற முறையில் என்னை வருத்தம் அடைய செய்தது.

உதாரணமாக

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியாரை படித்த யாரும் பெண்மையை இழிவு செய்யும் வாய்ப்பே இல்லை என்பது என் கருத்து. பெரியார் அளவுக்கு பெண்களுக்காக குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை. ஒரு சினிமா பாடல் கேட்டு மனம் மாறும் அளவுக்கு ஒரு பெரியார் கொள்கைகள் வலுவற்றவை அல்லவே என  நினைத்தேன்.

ஆனால் ஞாநி அவர்கள் சொல்ல வந்ததது , பெரியாரை படித்து இருந்தாலும் , அவர் கருத்துகளை முழுமையாக உள்வாங்காத சிலர் பாலியல் வக்கிர கமெண்டுகள் எழுதுகிறார்கள் . இது பெரியாரின் கருத்துகளில் இருக்கும் போதாமை அல்ல.. நம் கிரகிப்பு தன்மையில் இருக்கும் போதாமை. இதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார்.

உண்மையிலேயே பெரியாரை ஆழ்ந்து படித்தால் , கண்டிப்பாக நம்மை பக்குவப்படுத்துவார் என்பதற்கு உதாரணமாக ஞானி அவர்களே இருக்கிறார்.

இதோ ஞானியின் விளக்கம்

அன்புள்ள பிச்சைக்காரன்,
என்னை பக்குவப்படுத்தியவர்களில் பெரியாரும் முக்கியமானவர்.  இது தொடர்பாக உங்கள் கருத்துதான் என் கருத்தும். பெரியார் , மார்க்ஸ் , அம்பேத்கார் போன்றோரை படித்தவர்கள் , அவர்கள் பெயர்களை தம் வாதங்களில் முன் வைப்பார்கள். அவர்கள் வலியுறுத்திய சமூக நீதியை முன்னிலைப்படுத்துபவர்கள் என அறியப்பட்டவர்கள் பாலியல் வக்கிர கமெண்டுகளை எழுதும் முரண்பாட்டை சுட்டிக்காட்டுவதே என் நோக்கம் . அப்படிப்பட்டவர்கள் மூளையில் பதிந்த அளவு , மனதில் பதியவில்லை என நான் சுட்டிக்காட்டும் இடம் அதுதான். டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைட் போல சிலர் இருப்பது நம் கவலைக்குரியது என்பதையே நம் கட்டுரை சொல்கிறதே தவிர பெரியாரையோ , இதர முன்னோடிகளையோ குறை சொல்லவே இல்லை.
அன்புடன் ,
ஞாநி

Saturday, November 3, 2012

சின்மயி விவகாரமும் , ஞானியின் அஞ்ஞான கருத்தும்

சின்மயி விவகாரத்தில் சிலர் உணர்ச்சி வசப்பட்டு ஏதேதோ பேசி வருகிறார்கள்.. சிலர்  நியாயமாகவும் பேசி வருகிறார்கள்.

நடு நிலையுடனும் , நிதானத்துடனும் யோசிக்கும் ஞானி என்ன சொல்லப் போகிறார் என்பது ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் , அவர் கட்டுரை அதிர்ச்சியளித்தது.

சம்பந்தமே இல்லாமல் பெரியாரை இதை இழுத்து இருக்கிறார் அவர்.

கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.

பெரியார் நூல்களை ஆழ்ந்து படித்தவர்கள் ஒருபோதும் பாலியல் வக்கிரங்களில் ஈடுபடமாட்டார்கள் . சாமி கும்பிடாவிட்டால் , அவர் பெரியாரிஸ்ட் என தமிழர்கள் பொது புத்தியில் பதிந்துள்ளது. அவர் கடவுள் மறுப்பு என்ற விஷ்யத்தை தவிர பல தளங்களிலும் இய்ங்கியவர். குறிப்பாக பெண் விடுதலைக்காக அவரைபோல குரல் கொடுத்தவர்கள் யாரும் இல்லை.

    பெண்ணை அடக்கி வைக்க ஆண்கள் செய்யும் தந்திரங்களையும் , அதில் இருந்து பெண்கள் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதையும் தீர்க்கமாக சொல்லி இருப்பார், பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகம் ஒன்றே போதும்.

இதை எல்லாம் படித்தவர்கள் , கண்டிப்பாக ஒரு போதும் பெண்மையை இழிவு செய்ய மாட்டார்கள்.

ஒரு சிலர் பெரியார் பெயரை கேடயமாக பயன்படுத்துகிறார்கள் , அவர்கள் பெரியாரை படித்து இருந்தால் , பெரியாரின் குரல் அவர்களது தலைக்குள் இருந்து எதிர் தட்டு தட்ட வேண்டிய அவசியமே இருந்து இருக்காது.. காரணம் உண்மையான பெரியாரிஸ்ட்டிடம் இருந்து வக்கிர சிந்தனைகள் ஒருபோதும் வெளிப்படாது.


உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம்.
   

பெரியார் சிந்தனைகளை விடவா , சினிமா பாடல் சக்தி வாய்ந்தது ? பெரியார் சிந்தனைகளில் புடம் போட்ட ஒருவரை சினிமா பாடலோ , மீடியாவோ எந்த விதத்திலும் கெடுத்து விடாது.

தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன்


பெரியார் கோடிக்கணக்கான மக்கள் மனதில் பதிந்து நல் வாழ்வு காட்டி வருகிறார்.  இந்த உண்மையை மறந்து இருக்கிறார்  ஞானி அவர்கள்.

என்னை பொருத்தவரை இரு தரப்புமே தவறு செய்து இருக்கிறார்கள் . ஆனால் இதற்காக பெரியாரை இந்த விவகாரத்தில் இழுப்பது வருந்தத்தக்கது. தனி மனித பலவீனம் அனைவரிடமும் உள்ளதுதான் ,  தனிப்பட்ட முறையில் தவறு செய்து விட்டு , பிரச்சினை வந்தால் கட்சி , ம்தம் , இனம் , மொழி சார்ந்து தப்பிக்க நினைப்பது , தான் சார்ந்த கட்சி , மதம் , இனம் , மொழிக்கு இழுக்கு ஏற்படுத்தும் என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை.









Wednesday, October 24, 2012

பிரமணாள் கஃபே , ஜனனி அய்யருக்கு எதிர்ப்பு சரியா ?

பிரமணாள் கஃபே என்ற உணவு விடுதியை எதிர்த்து பேர் மாற்ற சொல்லி போராட்டம் நடந்ததாக செய்தி வந்தது . அதே போல ஜனனி அய்யர் என்ற பெயரில் இருக்கும் ஜாதி அடையாளத்தை நீக்க சொல்லி ஓர் இயக்குனர் அட்வைஸ் கொடுத்ததாகவும் இன்னொரு செய்தி.


ஜாதி வெறி ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் மேற்கண்ட இரு விஷ்யங்கள் ஜாதி வெறிக்கு எதிரானதா ?

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமாக நடந்த கால கட்டம். அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கு இருக்கும் தமிழர்களுக்கு உதவ வேண்டிய நிலையில், சிலர் கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்துக்கு அதுவா உரிய நேரம்?

இலங்கையில் மொழி ரீதியாக , இன ரீதியாக தாக்குதல் நடந்தது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு மத ரீதியாகவும் தாக்குதல் நடந்தது , நடந்து வருகிறது. இந்த விஷ்யத்தை சரியானபடி ஃபோக்கஸ் செய்து இருந்தால் , வட இந்தியர்களும் இந்த பிரச்சினையில் ஈடுபாடு காட்டி இருப்பார்கள். இலங்கை வரலாறே மாறி இருக்க கூடும்.,

சமீபத்தில் இந்த விஷ்யத்தை புரிந்து கொண்ட வைக்கோ , பிஜேபி கோட்டையான மத்திய பிரதேசத்தில் , இலங்கையில் நடக்கும் மத ரீதியான அத்துமீறல்களை பேசி அங்குள்ளவர்களின் ஆதரவை அள்ளியதை மறந்து விட முடியாது.

தமிழ் உணர்வு , ஜாதி எதிர்ப்பு போன்றவை உன்னதமானவை என்றாலும் , அதை வெளிப்படுத்துவதில் நிதானம் தேவை.

ஜனனி அய்யர் என்ற நடிகை மட்டுமா ஜாதி அடையாளத்தை வைத்து இருக்கிறார். சினிமா துறையில் பலர் இந்த பாணியில் பெயர் வைத்து இருக்கிறார்கள் , இவருக்கு மட்டும் அட்வைஸ் கொடுத்தால் , ஒட்டு மொத்தமாகவே ஜாதி ஒழிப்பின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுமே?

சைவ உணவு விடுதி என்பதை சொல்ல பிரமணாள் விடுதி என்கிறார்கள் . மற்றபடி அங்கு சாப்பிட வேண்டுமானால் , ஜாதி சான்றிதழ் காட்ட வேண்டும் என்ற கட்டாயம் எல்லாம் இல்லை. வியாபாரம் ஆனால் போதும் என்றுதான் அவர்கள் நினைப்பார்களே தவிர , ஜாதியைக்காட்டி வாடிக்கையாளர்களை தடுத்து , வியாபாரத்தை பாழாக்க மாட்டார்கள். ஒவ்வொருவரின் ஜாதியை கண்டுபிடித்து அனுமதிப்பது சாத்தியம் அற்றது.


பல்வேறு ஜாதிப்பெயர்களிலும் உணவகங்கள் உள்ளன. அந்தந்த ஜாதியினர்தான் அங்கு சாப்பிட முடியும் என்ற நிலை கிடையாது. இதெல்லாம் பிராண்ட் மட்டும்தான். ஓர் அடையாளம்தான். இதையெல்லாம் எதிர்ப்பது ஜாதி ஆதிக்க எதிர்ப்பு என்ற நோக்கத்தை திசை திருப்பவே செய்யும்.

இது போன்ற தேவையற்ற விஷ்யங்களில் கவனம் செலுத்துவதால் , உண்மையாக ஜாதி வெறி ஆதிக்கம் செலுத்தும் இடங்களை காணாமல் போகிறோம்.

பணியிடங்கள் , சினிமா , பத்திரிக்கைகள் போன்றவற்றில் எல்லாம் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. இது எத்தனை பேருக்கு தெரியும்?

புயலிலே ஒரு தோணி என்று ஓர் உலகத்தரமான நாவல் .  இது அந்த காலத்தில் ஆனந்த விகடனுக்கு அனுப்பப்பட்டது , நாவல் போட்டிக்காக. உன்னதமான நாவலாக இருந்தாலும் ,  நடுவர் குழுவினர் இந்த நாவலை விரும்பினாலும் , அந்த நாவலுக்கு பரிசு கிடைக்கவில்லை. காரணம் அதை எழுதிய ப சிங்காரம் , பிரமணர் இல்லை.


எம் ஜி ஆர் , ரஜினி , கமல் என பலருடன் இணைந்து வெற்றி படங்கள் கொடுத்த இயக்குனர் ஏ ஜெகனானாதன் , அவ்ரே வாய்ப்பு கேட்டும் கூட விகடனில் அவருக்கு அனுபவ கட்டுரை எழுத வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. காரணம் அவர் பிராமணர் இல்லை.


சந்திரமுகியும் , மும்பை எக்ஸ்பிரசும் ஒரே நேரத்தில் வெளியாகின. இதில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது , ப்லரின் பாராட்டுகளை பெற்றது சந்திர முகி.  கமலே விரும்பாத படம் மும்பை எக்ஸ்பிரஸ் பெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் விகடனில் , மும்பை எக்ஸ்பிரசுக்குத்தான் அதிக மதிப்பெண் கொடுத்தார்கள். காரணம் கமல் பிராமணர்.

இது ஓர் உதாரணம்தான் . சக்தி வாய்ந்த ஊடகங்கள் ,  நிறுவனங்கள் ஜாதி வெறியுடன் நடந்து கொள்வதை கவனிக்க தவறி விட்டு,  அபாயம் இல்லாத உண்வகங்களையும் , நடிகைகளையும் எதிர்ப்பது கேலிக்கூத்து.


Thursday, October 4, 2012

அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல்- ஒபாமாவுக்கு சிறிய சறுக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து வருகிறது . பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

அங்கு தொலைக் காட்சி விவாதங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புஷ்ஷுடன் மோதிய பில் க்ளிண்டன் வெற்றி பெறுவதற்கு இந்த விவாதமும் ஒரு முக்கிய காரணமாகும். விவாதத்தின் போது செய்யும் சிறிய வார்த்தை பிறழல்கள் , உடல் மொழி போன்றவை கூட போட்டியின் போக்கை மாற்றி விடும்.

 இந்த நிலையில் ஒபாமாவுக்கும் எதிர்த்து போட்டியிடும் ரோம்னிக்கும் இடையேயான விவாதம் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது.  இந்த விவாதத்தில் ரோம்னிதான் ஆதிக்கம் செலுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
ஆனாலும் ஒபாமாதான் கருத்து கணிப்புகளில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். ஆனால் இந்த தொலைக்காட்சி விவாதம் இருவருக்கும் இடையேயான இடைவெளியை குறைத்துள்ளது.

 வரி விதிப்பைத்தான் தன் முக்கிய ஆயுதமாக ரோம்னி பயன்படுத்தினார். பற்றாக்குறைகளை மூன்று விதங்களில் சமாளிக்கலாம். 1. வரி விதித்தல் 2. செலவுகளை குறைத்தல் 3. பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.  இதில் ஒபாமா நிர்வாகம் வரி விதிப்பை மட்டுமே நம்பி செயல்படுகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

பதில் அளித்த ஒபாமா , வரிகளை குறைத்தால் எனக்கும் , ரோம்னிக்கும் நல்லது. நாங்களும் , மற்ற பணக்காரர்களும் மகிழ்வார்கள் . ஆனால் நடுத்தர அமெரிக்கர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

தன் சாதனைகளை தொடர மீண்டும் வாய்ப்பளிக்குமாறு கேட்டு கொண்டார் ஒபாமா. ஒபாமாவுக்கு வாய்ப்பளித்து , மீண்டும் கஷ்டப்படாதீர்கள் என்றார் ரோம்னி.

விவாத முடிவுக்கு பின் எடுக்கப்பட கருத்து கணிப்பில் , 42 சதவிகித்தனர் ரோம்னி சிறப்பாக விவாதம் செய்ததாக சொன்னார்கள். 22 சதவிகிதம்பேர் ஒபாமவை புகழ்ந்தனர். ஏனைய 36 விழுக்காட்டினர் , இருவரும் சமம்தாம் என்றனர்.

அக்டோபர் 16ல் அடுத்த கட்ட விவாதம் நடக்க உள்ளது. அதில் பார்வையாளர்களும் கேள்விகள் கேட்கலாம். இந்த விவாதம் ஒரு திருப்பு முனையாக இருக்க கூடும் .



Wednesday, July 4, 2012

லட்சமா , ஆயிரமா? கவனித்ததில் கவர்ந்தவை - எக்ஸ்க்ளூசிவ் படங்கள்

பிச்சை எடுப்பது உவப்பான ஒன்றல்ல..ஆனால் இதன் பொருட்டு அலைவது ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்கள் தரக்கூடியது. 

இப்படி அன்றாடம் காணும் காட்சிகளில் ரசித்த சிலவற்றை அவ்வப்போது பகிரலாம் என நினைத்து இருக்கிறேன்.

இதோ நான் ரசித்தவற்றில் சில....

1. நூலகத்துக்கு எப்படி எல்லாம் பிரச்சினை பாருங்கள் 



இந்த அறிவிப்பு பலகையிலேயே நம் ஆட்கள் கை வரிசை காட்டி இருப்பதால், அதை சென்சார் செய்து இருக்கிறேன்..



                       2 தமிழுக்கு ”பெறுமை ” சேர்க்கும் தமிழ் காதலர்கள் 






                                   3 கோடையை முடித்து வைத்த ஒரு மழை பொழுது 




                              4 கோடை முடிந்தவுடன் தான் சூரியனை பயமின்றி ரசிக்க முடிகிறது 






5 ஒரே நிகழ்வு - செய்திகள் வெவ்வேறு - லட்சங்களா , ஆயிரங்களா 





Monday, May 28, 2012

பெட்ரோலுக்கு வரலாறு காணாத கடும் நெருக்கடி- விலை உயர்வை ஏற்க வைக்க விபரீத ஐடியா ??

சென்னைக்கு வந்த திடீர் சோதனையாக பெட்ரொல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில பெட்ரோல் பங்குகள் , எரிபொருள் கை இருப்பு இல்லை என மூடப்பட்டு உள்ளன.
எனவே திறந்து இருக்கும் பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது. பெட்ரோல் பங்க்குகிற்கு நிற்கும் வரிசை , சாலை வரை நீண்டு , சாலையிலும் நெரிசல் ஏற்படுத்துகிறது.

மணலியில் இருந்து வர வேண்டிய பெட்ரோல் வராததால் இந்த பிரச்சினை என்கிறார்கள். சமீபத்தில் வரலாறு காணாத விலை உயர்வு செய்யப்பட்டது. எவ்வளவு காசு ஆனாலும் , பெட்ரொல் கிடைத்தால் சரி என்ற மன நிலையை ஏற்படுத்த செய்யப்படும் , செயற்கை நெருக்கடியா என மக்கள் பேசிக்கொண்டனர்.

பெட்ரொலுக்கு காத்து இருக்கும் வாகனங்கள், நெரிசல் - பிரத்தியேக படங்கள்















Sunday, November 13, 2011

மெக்காவில் பிறந்த மகானை மறப்பதில் இந்து- முஸ்லிம் மதங்கள் காட்டும் ஒற்றுமை

என்னவோ கல்வி... நூல்கம் என்றெல்லாம் நம் அறிவு ஜீவிகள் ஆவேசப்பட்டதை பார்த்து நொந்து இருப்பீர்கள். ஆனால் நவீன கல்வியை வடிவமைத்த ஒரு மகானுக்கு ஒரு சிறிய மரியாதை செய்யாமல் இந்த அறிவுலகம் விட்டு விட்டது என்றால் இந்திய அரசு அவமரியாதை செய்து மனதை நோகடித்தது.

பள்ளிகளுக்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. முதல் கல்வி அமைச்சரான அப்துல் கலாம் ஆசாத்தின் பிறந்த தினமான நவம்பர் 11ந்தேதியை கல்வி தினமான அனுசரிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையைப்பார்த்து ஆசிரியர்கள் திகைத்தனர். அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்தவர் . அவர் எப்போது கல்வி அமைச்சரானார்??

பிறகுதான் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தைத்தான் இப்படி எழுதி இருக்கிறார்கள் என புரிந்தது.

 பல சேவைகளை புரிந்த அவர் உண்மையான இஸ்லாமியராக திகழ்ந்தவர். ஆனால் பாகிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவளிக்கவில்லை என ( அன்றைய ) தீவிர இஸ்லாமியர்களுக்கு அவர் மேல் வெறுப்பு. அதே போல அவர் இஸ்லாமியர் என்பதால் தீவிர இந்துக்களுக்கும் அவர் மேல் அக்கறை இல்லை. இப்படியாக அவர் பெயர் நம் நாட்டில் திட்டமிட்டு மறக்கடிக்கப்பட்டது.

அவர் இந்தியாவில் பிறந்தவர் அல்லர். மெக்காவில் பிறந்த அவர் இயற்பெயரும் இதுவன்று.


மவுலானா என்றால் படித்த மேதை என்று பொருள். அபுல் கலாம் என்றால் பேச்சாற்றல் மிக்க தலைவன். ஆசாத் என்பது அவர் வைத்து கொண்ட புனை பெயர்.

 நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேச கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேச கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்த கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட, பால் பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.
அனைத்து கல்வித் திட்டங்களும், மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும், அரசியல் அமைப்பு சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார். 10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார். இலவச கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்ப பள்ளிகளில் உள்ளது என்று சொன்னவர் அவர்.
1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும், அலியாவுக்கு மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானை கற்றுத் தேர்ந்தார். 17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப்பட்டார். கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.
1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தர வர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (இண்டியா வின்ஸ் Fபிரிடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார்.
சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார். இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார். முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தை புறக்கணித்த போது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார். தமது 35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே. 1942இல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கிய பங்காற்றினார். காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த போது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார். 14 வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 
பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித் துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார். தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951இல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.
மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள் என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார். 1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் பேசும் போது, எந்த காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும், இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.
அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குரானை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார். 1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது.
மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார். 


இவர் போன்ற நல்ல மனிதர்களை மறப்பதால் , இழப்பு அவர்களுக்கு அன்று.


Monday, November 7, 2011

கோட்டூர்புரம் நூலகத்தை அன்றே எதிர்த்தேன் - திரு ஞானி விளக்கம்



சென்ற இடுகையில் திரு ஞானியைப்பற்றி சில கருத்துக்கள் கூறி இருந்தேன். அது தவறு என அல்ட்டிமேட் ரைட்டர் சாரு என்னை கடிந்து கொண்டார். ஞானி அவர்களும் அது தவறு என விளக்கியுள்ளார். 

தவறுக்கு வருந்துகிறேன். 


 நூலக விவகாரம் குறித்தும் ,சாரு குறித்து ஞானி சொன்னாதாக நம்பப்படும் கருத்து குறித்துன் ஞானி அளித்த விளக்கமும் , நூலகம் குறித்த என் கேள்வியும் , அவர் பதிலும்  உங்கள் பார்வைக்கு.

*************************************************************
திரு ஞானி விளக்கம் 

அன்புள்ள பிச்சைக்காரனுக்கு 

வணக்கம். 

சாரு நிவேதிதாவுக்கு இண்ட்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பெயரை நான் சூட்ட்டவில்லை. சில வலைப்பூக்களில் அவர் அவ்வாறு வர்ணிக்கப்பட்டதையே நான் குறிப்பிட்டிருந்தேன். இதற்காக என் மீது ஏற்பட்ட கோபத்தில் அவர் நான் ஜெயல்லிதாவிடமிருந்து சூட்கேஸ்கள் வாங்குவதாக எழுதினார். பின்னர் ஒரு பொது நிகழ்ச்சியில் சந்தித்தபோது , தன் கருத்து தவறானது என்றும் அதற்காக வருத்தப்படுவதாகவும் என்னிடம் தெரிவித்தார். சாருவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் உண்டென்றாலும், இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரோத பாவத்தில் இருந்ததில்லை. சிநேகமாகவே இருந்துவருகிறோம்.

 அண்ணா நூலகம் பற்றி நான் எழுதியதை நீங்கள் படிக்கவில்லை என்று தோன்றுகிறது. 
நவம்பர் 3 அன்று பேஸ் புக்கில் நான் எழுதியது இதுதான் : கோட்டூர்புரத்திலிருந்து அண்ணா நூலகத்தை எழும்பூருக்கு மாற்றும் ஜெயலலிதாவின் முடிவு தேவையற்றது. தவறானது. அராஜகமானது. தமிழகம் தொடர்ந்து கருணாநிதி-ஜெயலலிதா தனிச் சண்டையால் சீரழிக்கப்படுகிறது. ராணி மேரி கல்லூரியை இடித்து புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா திட்டமிட்டபோது கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது அவர் கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கு இடம் ஒதுக்கி புரோகிதர்களுடன் பூமி பூஜை நடத்தினார். ஆட்சி மாறியதும் கருணாநிதி அதே இடத்தில் அண்ணா நூலகத்தைக் கட்டினார். ஜெயலலிதாவின் திட்டத்தை முறியடிப்பதுதான் கருணாநிதியின் அசல் நோக்கம்.

200 கோடி செலவில் சென்னையிலேயே ஒரு நூலகம் கட்டுவதற்கு பதில் 30 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட நூலகங்களுக்கு தலா 7 கோடி கொடுத்தால் அவை சிறப்பான நூலகங்களாகியிருக்கும். தமிழகம் முழுவதும் பயன் கிட்டியிருக்கும். ஆனால் கருணாநிதியின் நோக்கம் போட்டி அரசியல்தான். ஜெயலலிதாவுடையதும் அதுவே. இருவரின் வழிமுறைகள் மட்டுமே வேறு. கருணாநிதி சாமர்த்தியமாக செய்வார். ஜெயலலிதா ஆணவமாக செய்வார். அண்ணா நூலகத்தைப் பொறுத்த மட்டில் அது சிறப்பாக இருப்பதாலும் அப்பகுதிக் கல்வி வளாகங்கள் இருப்பதாலும் அதை கோட்டூர்புரத்திலிருந்து மாற்றத் தேவையில்லை என்பதே என் கருத்து. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையை ஓமந்த்தூரார் தோட்டத்தில் கருணாநிதி கட்டிய சட்டசபை கட்டடத்தில் ஜெயலலிதா அமைக்கப் போகும் பொது மருத்துவமனையுடன் சேர்த்து வைத்துவிடலாம். எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எல்லாரும் கோட்டூர்புரம் நூலகம் வாசலில் கூடி ஆக்குப்பை வால்ஸ்டீர்ட்போல நூலகத்தை வசப்படுத்துவோம்போராட்டம் நடத்த வேண்டும்.” 

தவிர, கருணாநிதி அண்ணா நூலகத்தைக் கட்டும்போதே நான் அதை எதிர்த்தேன். அந்தப் பணம் மாவட்ட நூலகங்களுக்கு செலவிடப்படவேண்டுமென்று அப்போதே ஓ பக்கங்களில் எழுதியிருக்கிறேன். நான் எழுதுவதை முழுமையாக படித்துவிட்டு முரண்படுங்கள். திட்டுங்கள். எனக்கு அதில் அவமானம் எதுவும் இல்லை. நான் என் கருத்துகளில் உறுதியாக இருப்பவன். என்னைப் படிக்காமலே திட்டுவது, திட்டுபவர்களுக்குத்தான் அவமானமானது. 

அன்புடன் ஞாநி

***********************************************
 என் கேள்வி 


அன்புள்ள ஞாநி சார் அவர்களுக்கு ,

வணக்கம் 

நூலக பிரச்னை மற்ற அரசியல் பிரச்னைகள் போல் அன்று . இது நேரடியாக இளைஞர்களை , குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களை பாதிக்க கூடியது . போட்டி தேர்வுக்கு தயார் ஆவதற்கு நூலகங்களைதான் நம்பி இருக்கிறார்கள் . சென்னையில் மட்டுமே அனைத்து நூலகங்களையும் அமைத்தால் கிராமத்து இளைஞர்கள் என்ன செய்வார்கள் . இன்னொரு கேள்வி , வெளியூர் இளைஞர்கள் வந்து செல்ல வசதியான இடம் கன்னிமரா அமைந்துள்ள எக்மோர் பகுதிதான் . எனவே அதன் அருகில் அண்ணா நூலகம் மாற்றப்பட்டால் நல்லதுதானே ? சென்னை வாழ் இளைஞர்களுக்கே கூட அருகருகில் நூலகங்கள் இருப்பதுதானே வசதி

எனவே இட மாற்றத்தை துரிதமாக நடத்த சொல்லி போராடுவதுதானே அறிவுடமை ? அல்லது இதே நூலகத்தை கிராமம் ஒன்றுக்கோ , திருமழிசை , வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர்  போன்ற பகுதிகளுக்கு மாற்றுவதுதானே பலனளிப்பதாக இருக்கும் . ரிச் கெட் ரிச்செர் . புவர் கெட் புவரர் என்ற முதலாளித்துவ போக்கிற்கு இடதுசாரி அறிஞரான நீங்கள் ஆதரவளிப்பது வினோதம் . 


மற்றபடி உங்களை மிகவும் மதிக்க கூடியவர்கள் நாங்கள் . தவறாக எழுதியதற்கு வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க இருக்கிறேன் . 

அன்புடன்
பிச்சைக்காரன்

*******************************************************************
திரு ஞானி அவர்கள் விளக்கம் 

 1.சென்னையில் புதிய நூலகம் அமைப்பதை நான் ஆதரிக்கவே இல்லை

.2, மாவட்ட நூலகங்களை மேம்படுத்தவே சொல்லுகிறேன்.

3.கருணாநிதி அரசியல் காரணத்துக்காக அமைத்தாலும், அந்த நூலகம் நன்றாகவே உள்ளது. எல்லா நூலகங்களும் நகரின் ஒரே பகுதியில் இருக்கத் தேவையில்லை.தவிர சென்னை பெரிதாக் வளர்ந்துவிட்டது. கோட்டூர்புர நூலகம் தரமணி கல்வி வளாகப் பகுதிக்கு, தென் சென்னைக்கும் பயன் தருகிறது. அங்கே படிப்பவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் அல்ல. பாலிடெக்னிக், கேட்டரிங் முதலியவற்றிலெல்லாம் அடித்தள மாணவர்கள் உண்டு. எல்லா நிலையங்களிலும் இட ஒதுக்கீட்டில் வரும் பின்தங்கிய வகுப்பினர் உண்டு.

4.கன்னிமாராவை மேம்படுத்தினாலே போதும். புதிதாக கட்டடம் தேவையில்லை.

5.நூலகத்தை இடம் மாற்றுவதாக ஜெயலலிதா சொல்வதை நம்பமுடியாது. செம்மொழி நூலகத்தை சட்டமன்றத்திலிருந்து அகற்றினார். ஆனால் அதற்கு இன்னும் புது இடமும் தரப்படவில்லை. நூலக புத்தகங்கள் எல்லாம் கோடவுனில் உள்ளன. இயங்கிக் கொண்டிருந்த நூலகம் ஜெயலலிதாவால் முடக்கப்பட்டுவிட்டது. 

அன்புடன்
 ஞாநி

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா