Saturday, February 4, 2012

மிலாடி நபி வாழ்த்தை விபரம் புரியாமல் எதிர்த்த இஸ்லாமிய நண்பர்


 நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை மிலாடி நபி என இஸ்லாமியர்கள் கொண்டாடுவது  வழக்கம்.   நபியின் வாழ்க்கை வரலாற்றை அறிந்த மற்ற மதத்தினரும் இந்த நாளை கொண்டாடுவது வழக்கம்.

இந்த அடிப்படையில் ஓர் இஸ்லாமிய நண்பருக்கு மிலாடி நபி வாழ்த்துகள் சொன்னேன். அவர் டென்ஷனாகி என்னை முறைத்தார்.. நீங்கள் இப்படி சொல்வது எங்கள் மதத்துக்கு எதிரானது.. நாங்கள் அல்லாவை மட்டும்தான் வணங்குவோம். நபியே ஆனாலும் , அவரை கொண்டாட ஒரு பண்டிகை தேவை இல்லை.. அவர் பிறந்த நாளை கொண்டாடுவது இஸ்லாமிற்கு எதிரானது.. இனி யாருக்கும் வாழ்த்து சொல்லாதீர்கள் என சொல்லி சென்றார்.


எனக்கு அதிர்ச்சி... எனக்கு தெரிந்து இதை பல இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகிரார்கள்.. வாழ்த்து சொல்கிறார்கள்.. இவர் என்ன புதிதாக சொல்கிறாரே என நினைத்தேன்,, இணைய நண்பர்கள் சிலரும் அவர் கருத்தை பிரதிபலித்தனர்.. இவர்கள் அனைவரும் நல்லவர்கள்தான்.. உண்மையான இஸ்லாமியர்கள்தான் பிறகு ஏன் இப்படி சொல்கிறார்கள் என சிலருடன் பேசிய போதுதான் , உண்மை தெரிந்தது...

இணை வைப்பு என்பதில் ஏற்படும் குழப்பமே இது..

இஸ்லாமிய விதிகளின்படி , அல்லாவுக்கு   நிகராக யாரும் இல்லை..பகுத்தறிவின்படியும் இது ஏற்கத்தக்கதே..

மத நம்பிக்கைகளுக்கு அப்பாற்சென்று பார்த்தாலும், இதில் இருக்கும் லாஜிக் புரியும்..

ஒருவர் என்னதான் சிறந்தவராக இருந்தாலும் , உலகைப்படைத்த ஏதோ ஒரு பிரமாண்டமான சக்திக்கு இணையாக அவர் ஆகி விட முடியாது..

ஆனால் சிறந்த ஒருவரை காணும்போது நம் மனதில் ஒரு மரியாதை ஏற்படும், அதை ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு பாணியில் வெளிப்படுத்துவார்கள்..

இப்படி மரியாதை செய்வதை இஸ்லாம் தடுத்தது கிடையாது,,,

இதோ ஆதாரங்கள்...

1 “உர்வா அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களுக்கும், சஹாபா (ரலி)  பெரு மக்களுக்கும் இருந்த தொடர்பை ஆராய்ந்த பிறகு, தங்களுடைய மக்களிடம் திரும்பி வந்த பிறகு, மக்களே ரோமின் மன்னர் சீசர்க்கும், மற்றும் மன்னர்  நெகுஸ் (NEGUS) க்கும், ரோமன் மக்கள் மிகுந்த மரியாதையை, முஹம்மது (ஸல்) நபிக்கு அவர்களுடைய தோழர்கள் மரியாதை கொடுத்ததை போன்று, கொடுக்க வில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் தண்ணீரை கொண்டு கழுவும் பொழுது, அந்த தண்ணீரை சஹாபா (ரலி) பெரு மக்கள் கையில் ஏந்தி நிலத்தில் சிந்த விடாமல் தங்கள் கைஹளில் ஏந்தி கொண்டார்கள், பிறகு தங்கள் முகத்திலும், உடலிலும், தலையிலும் தடவி கொண்டார்கள். மேலும் முஹம்மது (ஸல்) நபி அவர்கள் உத்தரவு ப்ரபித்தால் அதை தலையாய கடமையாக ஏற்று செய்கிறார்கள். முஹம்மது (ஸல்) நபி அவர்கள் பேசும் போது, வாய் மூடி மெளனமாக கேட்கிறார்கள். மரியாதைக்காக,சஹாபா (ரலி) பெரு மக்கள் ரசூல் (ஸல்) அவர்களை நேருக்கு நேராக பாக்காமல் மரியாதை செய்தார்கள்.  (ஆதாரம் – AR RAHEEQUL MAKHTOOM PAGE 40 -MAKTABA SALAFIA, LAHORE

ரசூல் (ஸல்) அவர்கள் சிலவற்றின் மீது கோபமாக இருந்தார்கள். அப்பொழுது உமர் (ரலி) அவர்கள் எழும்பி நின்று குனிந்து ரசூல் (ஸல்) அவர்களின் ஆசிர்வதிக்கப்பட்ட பாதங்களை முத்தம் இடுகிறார்கள். பிறகு உமர் (ரலி) கூறுகிறார்கள், யா ரசூலுல்லாஹ் (ஸல்), நாங்கள் அல்லாஹ்வை எங்களுடைய இறைவனாகவும், உங்களை அல்லாஹ் உடைய ரசூலாகவும் (ஸல்), இஸ்லாம் ஐ எங்களுடைய தீனாகவும், அல் குரானை எங்களுடைய வழிகாட்டியாகவும், தலைவராகவும் சந்தோஷத்துடன் பொருந்தி கொண்டோம். அல்லாஹ் மேலும் உங்களுடன் (ஸல்) நன்மை பாராட்டுவானாக என்று உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்கள் சந்தோசம் அடையும் வரை சொல்லி கொண்டே சென்றார்கள். 


(தப்சீர் இப்ன் கதீர்) மற்ற விளக்க உரையாளர்களும் மேலே சொன்ன நிகழ்வை சொல்லி காட்டு கிறார்கள்.
இதில் முக்கியம் கவனிக்க வேண்டியது என்ன வென்றால் உமர் (ரலி) அவர்கள் ரசூல் (ஸல்) அவர்களின் பாதத்தை முத்தமிட்டதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு விஷ்யத்தை சொல்ல வேண்டும். தொழுகையில் கை கட்டி தொழுவது வேறு. பெரியவர்கள் முன் மரியாதை நிமித்தம் கை கட்டுவது வேறு,.
இரண்டையும் குழப்புவது கூடாது.. 

நல்லவர்களை மதிப்பது , நினைவு கூர்வதால் அந்த நல்ல பண்புகள் நம்மிடமும் தோன்றும்.
அந்த அடிப்படையில், மத வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு, நபிகள் பிறந்த நாளை கொண்டாடுவது நம் கடமை..
அனைவருக்கும் மிலாடி நபி வாழ்த்துகள்... 7 comments:

 1. இணைவைத்தலின் ஆரம்பமே ஒரு தனி நபரை புகழ்வதுதான். புகழ்ச்சியில் ஆரம்பித்து இந்த புகழ்ச்சி போதாது இன்னும் புகழவேண்டும் இன்னும் புகழவேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் புகழ்ச்சியை கூட்டி கடைசியில் இறைவனுக்கு இணையாகவே ஒரு மனிதனை புகழ ஆரம்பித்துவிடுவார்கள். அது இணைவைத்தலில் போய்தான் முடியும்.இதற்காகத்தான் நபிகள் நாயகம் அவர்களே தங்களின் பிறந்தநாளை கொண்டாட கூடாது என்று கட்டளை பிறப்பித்துள்ளார்கள். அவரின் கட்டளையை மீறுவது இஸ்லாத்திற்கு மாற்றமானது. இதனை அறியாத இஸ்லாமிய மக்களின் அறியாமையினால் கொண்டாடப்படும் ஒரு விழா தான் மிலாது நபி. எனவே தான் இதனை நன்கு அறிந்த இஸ்லாமிய மக்கள் அதனை எதிர்கிறார்கள்.

  ReplyDelete
 2. ஸலாம் சகோ.பார்வையாளன்,
  இஸ்லாத்தை தப்பும் தவறுமாக மட்டுமே புரிவதற்கு பதிவுலகில் கடும் போட்டி நிலவுவதுதான் வேதனை..!

  'விவரம் புரிந்த' தாங்களுமா இதில்..?!?

  மிலாடி நபி வாழ்த்துக்கு/விழாவுக்கு எதிர்ப்பு என்பதற்கான காரணத்தை நீங்களாக யோசித்து விளங்கிக்கொண்ட விவரம் என்னவென்றால் 'இணைவைத்தல்'..!

  ஹா..ஹா..ஹா... இது முற்றிலும் தவறான புரிதல்..!

  அடுத்து, காலில் முத்தம் இடுதல் பற்றி.... (அது சஹி ஹதீஸா என்ற விபரம் தனிக்கதை..! இதனை ஒழிக்க வந்தவர்களே நபி அவர்கள்..!)
  ....ஒரு 'தகவலை(?)' கூறி விட்டு... உடனே விழா கொண்டாடலாம் / வாழ்த்து சொல்லலாம் என்றால்...?

  அறிவுக்கு ஏதேனும் பொருந்தி வருகிறதா..? இதுவா மிலாடி நபிக்கு ஆதாரம்..?

  "இதோ நபி கொண்டாடி இருக்கிறார்கள்... இதோ அவர்களுக்கு அன்று சஹாபிகள் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள்"... என்றல்லவா ஆதாரம் காட்ட வேண்டும் நீங்கள்..?

  நபி அவர்களின் இறுதி ஹஜ் சமயம் இந்த இஸ்லாம் மார்க்கம் இறைவனால முழுமைப்படுத்தப்பட்டு விட்டது..! அதன் பிறகு இதில் நீங்களோ நானோ அல்லது வேறு எவரோ ஏதும் சேர்க்க முடியாது. அப்படி சேர்த்தால் அது இஸ்லாம் ஆகாது. அதற்கு பெயர் பித்அத் ஆகும். இது இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. இது வழிகேடு. இதை 'இஸ்லாம்' என்று நம்பி பின்பற்றுவோரை நரகில் கொண்டு போய் சேர்க்கும் என்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் உள்ளது.

  நபி அவர்களும் தம் பிறந்தநாளை கொண்டாடவில்லை. பின்னர் அவரோடு வாழந்தவர்களும் கொண்டாடவில்லை. இதெல்லாம் காலத்தால் வெகு பிந்தி ஏற்படுத்தப்பட்டது..! முஸ்லிம்களுக்கு நபி மட்டுமே வாழ்வில் பின்பற்றத்தக்க முன்மாதிரி..!

  தலைப்பிலிருந்து கடைசி வரி வரை தவறுகள் மட்டுமே உள்ள இந்த பதிவுக்கும் இஸ்லாமிய மார்க்கத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை..!

  ReplyDelete
 3. தோழர் முஹமத் ஆஷிக் கருத்து சரியானதா என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்

  ReplyDelete
 4. சகோ arafath & சகோ முஹம்மத் ஆஷிக் சொன்னது 100% correct சகோதரரே.தான் வரும்போது தனக்காக பிறர் எழுந்து நிற்ப்ப‌தைகூட விரும்பாதவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.தனக்காக விழா எடுப்பதை விரும்புவாரா?நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினால் மட்டுமே அவர்களை மதித்தவர்களாக ஆகமுடியாது அவருடைய நற்போதனைகளை யார் கடைபிடிக்கின்றார்களோ அவர்தான் உண்மையாகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை மதித்தவர்களாக இருக்கமுடியும்.

  ReplyDelete
 5. பார்வையாளன் ! உங்கள பதிவு நிச்சயமாக சிறப்பானது . ஏனென்றால் அடுத்த மதத்தை கண்ணியமாக அனுகியுள்ளீர்கள். அவர்களையே விளக்குமாறும் கேட்டுள்ளீர்கள். மிகச்சிலரே இப்படி இணையத்தில் உள்ளார்கள். நபிகள் நாயகம் இறந்த பின்னர் அவர்களின் தோழர் எவரும் இதை கொண்டாட வில்லையே! இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு கூட யாரும் கொண்டாடவில்லை. இந்திய உப கண்டத்தில் மற்றும் இந்த அவலம் அரங்கேறுகிறது. தன்னை புகழ்வதை பற்றி கடுமையாக எதிர்த்தவர்கள் நபியவர்கள்.
  காலை முத்தமிட்ட கதையை நீங்களே நீக்கிவிடுங்கள். அணைத்து நபிமார்களும் இதை ஒழிக்கத்தான் அனுப்பப்பட்டார்கள். இல்லை என்றால் நீங்கள் ஆதாரத்தை போட்டு இருக்கலாமே! தனக்காக எழுந்து நிற்பதையே வன்மையாக கண்டித்தவர்கள் நபியவர்கள். இஸ்லாத்தில் பிறருக்காக எழுந்து நிற்பது மாபெரும் குற்றம்.கை கட்டுவது இதில் அடங்கும் தானே. (தன் வீட்டுக்கு வரும் விருந்தளிக்காக எழுந்து நிற்கலாம். நபியவர்கள் இதை செய்துள்ளார்கள்.) இஸ்லாம் எப்போதும் புதிதாக மார்க்கத்தில் நுழைப்பதை வன்மையாக கண்டிக்கிறது. இதனை கண்டிக்காமல் விட்டதால்தான் ஏனைய மதங்கள் தங்கள் வேதன்களுக்கே மாற்றமாக இருக்கின்றன.

  உங்களின் நடுநிலையான சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. பார்வையாளன் ! உங்கள பதிவு நிச்சயமாக சிறப்பானது . ஏனென்றால் அடுத்த மதத்தை கண்ணியமாக அனுகியுள்ளீர்கள். அவர்களையே விளக்குமாறும் கேட்டுள்ளீர்கள். மிகச்சிலரே இப்படி இணையத்தில் உள்ளார்கள். நபிகள் நாயகம் இறந்த பின்னர் அவர்களின் தோழர் எவரும் இதை கொண்டாட வில்லையே! இன்னும் பல நூற்றாண்டுகள் கழிந்த பிறகு கூட யாரும் கொண்டாடவில்லை. இந்திய உப கண்டத்தில் மற்றும் இந்த அவலம் அரங்கேறுகிறது. தன்னை புகழ்வதை பற்றி கடுமையாக எதிர்த்தவர்கள் நபியவர்கள்.
  காலை முத்தமிட்ட கதையை நீங்களே நீக்கிவிடுங்கள். அணைத்து நபிமார்களும் இதை ஒழிக்கத்தான் அனுப்பப்பட்டார்கள். இல்லை என்றால் நீங்கள் ஆதாரத்தை போட்டு இருக்கலாமே! தனக்காக எழுந்து நிற்பதையே வன்மையாக கண்டித்தவர்கள் நபியவர்கள். இஸ்லாத்தில் பிறருக்காக எழுந்து நிற்பது மாபெரும் குற்றம்.கை கட்டுவது இதில் அடங்கும் தானே. (தன் வீட்டுக்கு வரும் விருந்தளிக்காக எழுந்து நிற்கலாம். நபியவர்கள் இதை செய்துள்ளார்கள்.) இஸ்லாம் எப்போதும் புதிதாக மார்க்கத்தில் நுழைப்பதை வன்மையாக கண்டிக்கிறது. இதனை கண்டிக்காமல் விட்டதால்தான் ஏனைய மதங்கள் தங்கள் வேதன்களுக்கே மாற்றமாக இருக்கின்றன.

  உங்களின் நடுநிலையான சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்
  முஹம்மது
  இலங்கை

  ReplyDelete
 7. அஸ்ஸலாமு அலைக்கும் எனது வட்டத்தில் அனைவரிடமும் பணம் வசூல் செய்து அனைவர் வீட்டுக்கும் சாப்பாடு வழங்க படுகிறது இது சரியா தவறா

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா