Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

Wednesday, January 23, 2019

சென்சிப்லிட்டியுடன் பொண்டாட்டி


புத்தக கண்காட்சியில் ஒரு அரசியல் பிரமுகரின் ஸ்டால் இருந்தது,,  ஆரம்ப காலத்தில் எழுதிய சில கவிதைகள் காரணமாக இன்னும் அவர் தன்னை இலக்கியவாதி என்றே அடையாளப்படுத்திக் கொள்கிறார்,, புத்தக கண்காட்சியின் போது அவ்வப்போது தன் கட்சி மற்றும் தோழமை கட்சி பிரமுகர்களை தன் ஸ்டாலுக்கு அழைப்பார்... அந்த பிரமுகர்களுடன் கட்சியினரும் வருவதால் அந்த இடமே கும்பலால் சூழப்பட்டு விடும்... அருகில் இருக்கும் ஸ்டால்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு பபாசியிடம் புகார் அளித்தனர்... அந்த புகாரை ஒரு எள்ளலுடன் கடந்து சென்றார் அந்த உரிமையாளர்

சென்சிப்லிட்டி  , பிறர் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறன் இனமைதான் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும்

அராத்து எழுதியுள்ள பொண்டாட்டி நாவல் இந்த சென்சிப்லிட்டி  குறித்து ( அது இனமை குறித்து )பேசுகிறது

ஜெயமோகன் என்று ஒரு கேரக்டர்.... காக்டெய்ல் கலக்குவதில் அவன் காட்டும் அக்கறை ஒரு கவிதை....அவன் நல்லவனா இல்லையா என்பது வேறு,,, ஆனால் ஒவ்வொரு விஷ்யத்திலும் அவன் காட்டும் அக்கறை , விருந்தோம்பல் , பிறர் மீதான அக்கறை போன்றவை நாம் நல்லவன் என கருதும் என பலருக்கு இருப்பதில்லை.... நல்லவன் என்பதையே ஒரு தகுதியாக நினைக்கிறோம்,.,, அதில்தான் பல பிரச்சனகள் எழுகின்றன


சென்சிப்லிட்டி குறித்து பேசும் இந்த நாவல் அதே சென்சிப்ல்டியுடன் உருவாக்கப்பட்டுள்ளது ...    எழுத்துப்பிழைகள்  , வாக்கியப்பிழைகள் , ஒற்றுப்பிழைகள் இல்லாமல் இப்படி இரு புத்தகம் படித்து பல யுகங்கள் ஆகின்றன.... நாளிதழ்கள் , வார இதழ்கள் என யாருமே இதில் அக்கறை காட்டாத நிலையில் , பிழைகளே இருக்கலாகாது என்ற கவனத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் பாராட்டலாம்

சில இடங்களில் வேண்டுமென்றே சில பிழைகள் , சில வெற்றிடங்கள் , சில தட்டையான சித்தரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது அழகு... அதற்கான காரணங்கள் கதையின் போக்கிலேயே தெரிந்து விடுகின்றன


பேட்ட பட விமர்சனத்தில் , சிம்ரன்  கேரக்டர் என பாதியிலேயே காணாமல் போகிறது என கேட்டிருந்தார் ....  சின்னி ஜெயந்த்  உட்பட ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் விளக்கமாக படம் எடுக்கவா முடியும் என எண்ணிக்கொண்டேன்

ஆனால் இந்த கதையில் , அனாவசியமாக எந்த கேரக்டரும் இல்லை என்பதைக் காணும்போது  , ஒரு படைப்பாளியாக அந்த விமர்சனத்தை வைக்கும் உரிமை அராத்துவுக்கு உண்டு என நினைத்துக்கொண்டேன்

உதாரணமாக கதையின் நாயகி ஒரு ரயிலில் பயணிக்கிறார்... அந்த ரயிலின் இயக்குனர் பெயர் கேஷுவலாக சொல்லப்படுகிறது...  ஆனால் அது அனாவசிய அறிமுகம் இல்லை என பிறகு தெரிகிறது


தேவையற்ற ஒரு வார்த்தை , ஒரு கேரக்டர்கூட இல்லாத நாவல் ..



அராத்து கோஷ்டியினரின் இமயமலைப்பய்ணம் வெகு இயல்பாக கதையுடன் கலப்பது வெகு அழகு.,,,

 நதி உறைந்து விட்டால் மீன் என்னாகும் , மரணம் என்பது என்ன ,... மீண்டும் உயிர்ப்பிக்க முடியும் என்றால் அந்த இடைப்பட்ட காலம் என்ன என்பது போன்ற வரிகள்


தனிமை என்றால் என்ன..,,   தனிமை நம்மை எப்படி மாற்றும் என்பது போன்ற வரிகளில் ஆழமான பார்வை தெரிந்தாலும் அடுத்த நொடியே அதை எழுத்தாளரே பகடி செய்து காலியாக்குவதேல்லாம் வேறு லெவல்

ஃபேக் நாவல்கள் பல படித்திருக்கிறோம்... ஜேஜே சில குறிப்புகள் , நாளை மற்றுமொரு நாளே போன்ற சிலவற்றை ஃபேக் எழுத்துக்கு உதாரணமாக சொல்லலாம்..,,

ஃபேக் என சொன்னாலும் அவை கண்டிப்பாக படிக்க வேண்டியவை,,,, படிக்கவேகூடாத குப்பைகளும் ஏராளம் உண்டு

ஆனால் தன்னைத்தானே ஃபேக் நாவல் என அதிரடியாக அறிவிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு

பகல் கனவுகள் , எழுத்துப்பிழைகள்  , வாக்கியப் பிழைகள் , அமெச்சூர்த்தனமான சிந்தனைகள் , பெண்களை இழிவு செய்யும் கருத்துகள் நிரம்பிய எழுத்துகள் பல இன்றைய சூழலில் நாவல் என்ற பெயரில் வருகின்றன


அவைகளை நாவல் என அழைத்தால் கண்டிப்பாக பொண்டாட்டி நாவலை ஃபேக் நாவல் என்றுதான் சொல்ல வேண்டும்


57 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு  , நம் ஆட்கள் 2000 ரூபாயை கொடுப்பார்கள்... சில்லறை எண்ணி கொடுக்கும் வரை பின்னால் நிற்பவர்கள் காத்திருக்க வேண்டும்... - சுரணையின்மை


நிகழ்ச்சிக்கு வருவதாக சொல்லிவிட்டு , வர தவறுவது சுரணையின்மை


நாம் செய்வது பிறருக்கு பிடிக்கவில்லை என அவர் முகபாவத்தின் மூலம் அறிந்து கொள்ள தவறுவது சுரணையின்மை



காதல் என்பது மதித்தல் என்று ஜே கிருஷ்ணமூர்த்தி சொன்னதை சற்று வேறு விதத்தில் சொல்கிறது நாவல்

   மொத்தமாக இல்லாமல் தனி தனி சிறுகதையாக படித்தாலும் நன்றாக இருக்கிறது.. தனி தனி வரிகளுமே கூட அவ்வளவு அழகு

இது எல்லோருக்குமான நாவல் என சொல்ல மாட்டேன்... ஓரளவு பக்குவம் தேவை...சிறுவர்களுக்கு ஏற்றதல்ல....

உள்ளடக்கம் , உருவாக்கம் , சந்தைப்படுத்தும் விதம் , சிரத்தை என அனைத்திலும் சென்சிபிலிட்டியை காட்டும் நாவலைப்படிதத்தில் மகிழ்கிறேன்




Thursday, August 16, 2012

காப்பி அடித்தல் கலையா ? என் பெயர் சிவப்பு- வாசிப்பு அனுபவம்


    பொழுது போக்குகாக பல ஆங்கில நாவல்கள் படித்தாலும் , என்னை முதன் முதலாக ஈர்த்த நாவல்கள் அயன் ராண்ட்  நாவல்கள்தான் . அந்த அளவுக்கு வலிமையான எழுத்து அவருடையது. ஆனால் அவர் எழுத்து , வெறும் பிரச்சாரமாக நின்று விட்டதே என்ற ஆதங்கமும் இருந்தது.

நாம் என்பது பொய்யானது , நான் என்பதே நிஜம் என்ற கருத்தை வலியுறுத்தியே அவர் நாவல்கள் இருக்கும். கதா  நாயகன் அவர் கருத்தை வலியுறுத்தும் நல்லவனாக இருப்பான் . எதிர் கருத்து கொண்டவர்கள் கெட்டவர்களாக இருப்பார்கள். இந்த டெம்ப்ளேட்டில் அவர் நாவல்கள் இருக்கும்.

 நான் , நாவல் என்ற முரண்பாட்டு பிரச்சினையை , இவர் சார்பு ஏதும் எடுக்காமல் அலசி இருந்தால் , அருமையாக இருந்து இருக்கும் என அவ்வப்போது நினைப்பதுனடு. அப்படி ஒரு நாவல் வந்தால் படிக்க ஆவலாக இருந்தேன் .

    வேறொரு கதை அம்சம் கொண்ட இன்னொரு நாவலில் , இந்த பிரச்சினை பல மடங்கு அருமையாக , ஆழமாக , நடு நிலையாக  அலசப்பட்டு இருப்பதை , சமீபத்தில் படித்து ஆச்சர்யமும் , மகிழ்ச்சியும்  அடைந்தேன். ஆனால் இந்த பிரச்சினை நாவலின் மைய இழை அல்ல.. தத்துவம் மதம், காதல் , கலை , அதிகாரம்  , மதம்  என பலவற்றை தொட்டு செல்கிறது நாவல்.

 அந்த நாவல்தான் என் பெயர் சிவப்பு.

  துருக்கி நாவல். ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு , ஆங்கிலம் வழியாக தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

    முதல் பந்திலேயே சிக்சர் அடித்து பேட்டிங்கை ஆரம்பிப்பது போல அதிரடியாக நாவல் தொடங்குகிறது. ஒரு பிரேதம் தன் கதையை சொல்வது போல கதை தொடங்குகிறது. ஆரம்பமே ஆவலை தூண்டுவது போல இருப்பதால், விறுவிறுப்பாக படிக்க ஆரம்பிக்கிறோம். வசீகரன் எஃபெண்டி என்ற நுண்ணோவியன் ஏதோ சில காரணங்களாக கொல்லப்பட்டு இருக்கிறான என்பது தெரிகிறது. கொன்றவன் வில்லனாக இருப்பான் என நினைத்து படிக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் விரைவிலேயே நம் எண்ணம் தவறு என நம் தோல்வியை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு நம் வாசிப்பு தொடங்குகிறது.

 கொலையுண்டவன் முதல் அத்தியாயத்தில் பேசுகிறான் என்றால் கொலைகாரன் தன் பார்வையில் நிகழ்ச்சியை இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறான். இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொருவர் பார்வையில் நக்ர்வதால் , நிகழ்ச்சிகளைப் பற்றி முழுமையான பார்வை கிடைக்கிறது.



பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் கதை நிகழ்கிறது.

 இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு ,  ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை ஆண்டுவரும்  சுல்தான் ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்காக ,  திருவிழா மலர்களையும் , தன் பெருமையை வெனிசீய மன்னருக்கு எடுத்தியம்பும் வகையில் , தன் உருவப்படத்தையும்  உருவாக்க உத்தரவிடுகிறார்.  இந்த பணி ரகசியமாக நடக்கிறது .

எனிஷ்டே எஃபெண்டி தலைமையில் தலை சிறந்த ஓவியர் குழு இந்த பணியை மேற்கொள்கிறது . நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்கள்  இந்த குழுவில் உள்ளனர்.


 இந்த  “வசீகரன்” தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால்  முதல் அத்தியாயத்தில் கொல்லப்பட்டவன் . அவனை கொன்றது யார் என்பது யாருக்கும் தெரியவில்லை.

இது ஒரு புறம்.

கருப்பு என்ற ஓவியனின் மாமாதான் இந்த எனிஷ்டே எஃபெண்டி. 12 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கருப்பு இஸ்தான்புல் வருகிறான்.  மாமா மகளான ஷெகூரேவை காதலித்து , அந்த காதலில் தோல்வி அடைந்த வரலாறு இவனுக்கு உண்டு. இவன் ஊருக்கு திரும்பி வரும்போது , அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் இருக்கிறாள்.  போருக்கு சென்ற அவள் கணவன் திரும்பி வரவில்லை. இறந்து விட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பது தெரியாததால் அவள் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது. அவள் கணவன் இறந்து விட்டான் என்பது உறுதியானால் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அந்த மரணம் உறுதியாக தெரியவில்லை. கணவனின் தம்பிக்கு அவள் மேல் ஆசை.

இது ஒரு கதை.


இதற்கிடையில் சமூக அமைப்பு எப்படி இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது. பாரம்பரிய இஸ்லாம் மதத்துக்கு எதிரான போக்கை நுஸ்ரத் ஹோஜா போன்றோர் கண்டிக்கிறார்கள். இதை மத விரோதம் என்கிறார்கள். சிலரோ அவர்களையே கிண்டல் செய்கிறார்கள். இந்த போக்கு ஓவியத்திலும் பிரதிபலிக்கிறது. பாரம்பரிய பாணிக்கும் , வெளி கலாச்சார பாணியிலான நவீன ஓவியத்துக்கும் இடையே மோதல் நிலவுகிறது.

   இந்த நிலையில் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்படுகிறார். அவர் இறந்த நிலையில், கணவனின் தம்பியுடன் தான் அவர் மகள் சென்றாக வேண்டும் . இதை தவிர்க்க கருப்பு , மாமா மகளை மணந்து கொள்கிறான். அவன் தான் , மாமா மகளை மணக்கும் பொருட்டு ,  எனிஷ்டே எஃபெண்டியை கொன்று விட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

      உண்மையான கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டிய நெருக்கடி கருப்பு ஏற்படுகிறது.

   தன் உத்தரவை செயல்படுத்தி வந்த ஓவியர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது சுல்தானுக்கு கோபம் ஏற்படுத்துகிறது. மூன்று நாட்களுக்குள் கொலைகாரனை கண்டு பிடிக்க வேண்டும் என சுல்தான் உத்தரவிடுகிறார் .

    தலைமை குரு உதவியுடன்  கொலைகாரனை கண்டு பிடிக்க முயல்கிறான் கருப்பு.

    கொலைகாரன் யார் என்பதை விட கொலைக்கான காரணமே முக்கியம் என நமக்கு தோன்றி விடுகிறது. அதுதான் நாவலின் வெற்றி. இல்லையேல் துப்பறியும் நாவலாக இது நின்று போய் இருக்கும். கொலைக்கான காரணம் நியாயமா இல்லையா என்பதும் , கொலைகாரன் வில்லனா எனபதும் வேறு விஷயம்.

  இரு தரப்பு கருத்து மோதல்கள்தான் கவனத்துக்கு உரியது.

   திருக்குறளை அனைவரும் படிக்கிறோம். ஆனால் அதை எழுதியவர் பெயர் யாருக்கேனும் தெரியுமா ? திருவள்ளுவர் என்பதெல்லாம் பிற்காலத்தில் நாமாக வைத்த பெயர்தான். காக்கை பாடினியார்  , செம்புலப் பெயல் நீரார் என்பதெல்லாம் அவர்கள் பாடிய பாடலை வைத்து நாம் வைத்த பெயர்கள்தான். தம் படைப்புகளே முக்கியம் , பெயர்கள் அல்ல எனப்தே அவர்கள் எண்ணமாக இருந்து இருக்கிறது.

     இந்த நாவல் இதைப்பற்றி பேசுகிறது

  எங்கே உண்மையான கலையும் களங்கமின்மையும் இருக்கிறதோ அங்கே ஒரு கலைஞன் தனது அடையாளத்தின் சிறிய சுவடைக்கூட விட்டுச்செல்லாமல் ஓர் ஒப்பிடவியலா மகத்தான படைப்பைத் தீட்டமுடியும்  


       நுண்ணோவியம் என்ற கலையில் தனி மனித சாதனை முக்கியம் இல்லை. ஒட்டு மொத்தமான கலைப் படைப்பே முக்கியம். நான் என்ற சிந்தனையே , சாத்தானின் தூண்டுதல்தான் .  அதே போல , உலகில் நாம் காணும் விஷ்யங்கள் எந்த முக்கியத்துவமும் அற்றவை. சாஸ்வதம் அற்றவை. அதை அப்படியே தத்ரூபமாக வரைவதில் எந்த பெருமையும் இல்லை என்பது அவர்கள் சிந்தனை போக்கு.

  இதற்கு எதிரான வெளி தேசத்து சிந்தனைகளுடன் ஏற்படும் முரண்களை நாவல் அட்டகாசமாக சொல்கிறது.

    எல்லா தரப்பு கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


  “ ஓர் ஓவியம் அதன் அழகின் மூலமாக நம்மை வாழ்க்கையின்  முழுமையை நோக்கி பரிவுணர்வை நோக்கி, இறைவன் உருவாக்கிய ஆட்சியிலுள்ள பல்வேறு நிறங்கள்மீது மதிப்பை நோக்கி, பிரதிபலிப்பையும் நம்பிக்கையையும் நோக்கி நம்மை செலுத்துவதுதான் முக்கியம். வரைந்த நுண்ணோவியத்தின் அடையாளம் முக்கியமல்ல.”

மனம் எதைக் காண்கிறதோ, ஓவியம் அதற்கு உயிர்கொடுத்து கண்களுக்கு  விருந்தாக்குகிறதெனலாம்: கண்கள் உலகத்தில் எதைக்காண்கிறதோ அது மனதில் பதிகின்ற அளவுக்கு ஓவியத்தில் பதிவாகிறது. ஆகையால் மனது ஏற்கனவே அறிந்திருப்பதை கண்கள் நமது உலகத்தில் கண்டுபிடிப்பதே அழகு எனப்படுகிறது

இறைதூதரின் பிறப்புக்காவியம் வாசிக்கப்பட்டதா? இறந்தவர்களை கௌரவிக்கும் முகமாக ஹல்வா, பொரி, மாவுருண்டை போன்ற இனிப்புகள் அப்போது நாற்பதாவது நாள் சடங்கின்போது வழங்கப்பட்டதா? முகம்மது வாழ்ந்தபோது புனித குர் ஆன் ஒரு பாடலைப்போல இசைக்கப்பட்டதா?



‘தீர்ப்பு தினத்தன்று ஓவியர்களை அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பார் என்று நமது இறைத் தூதர் எச்சரித்திருப்பதை அவர்கள் அறிவர்.” 

“ஓவியர்களை அல்ல; பிரதிமைகளைச் செய்பவர்களை. மேலும் இது குர் ஆனில் இருப்பதல்ல; புக்காரியில் இருப்பது” 


”ஓவியம் என்பது கதையின் நீட்சி அல்ல. தன்னளவில் அது தனிப் பொருள்”

”காதல் நம்மை முட்டாள் ஆக்குகிறதா அல்லது முட்டாள்கள் மட்டுமே காதலில் விழுகிறார்களா ?”

”நான் மரமாக இருக்க விரும்பவில்லை. அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்”

”நிறம் என்பது கண்ணின் தொடுகை”



என்பது போன்ற பல வரிகளை ரசித்து படிக்கலாம்.

ஓவியம் பற்றி எதுவும் தெரியாதவர்கள்கூட புரிந்து கொள்ளும் வண்ணம் விவரித்து எழுதி இருக்கிறார் கதாசிரியர் .

கூர்ந்து படித்தால் , இது ஓவியத்துக்கு மட்டும் அன்றி எல்லா கலைகளுக்கும் பொருந்தும் என்பது புரியும்.


 யதார்த்தமாக படம் எடுக்கிறேன் என சிலர் டாக்குமெண்ட்ரி போல படம் எடுக்கிறார்கள். இதில் கலை எங்கே இருக்கிறது என தேட வேண்டி இருக்கிறது இல்லையா ?

   கமல் ஹாசன் போன்றவர்கள் , வெளி நாட்டு படங்களை போலி செய்வதையே தம் சாதனையாக நினைக்கிறார்கள்.. இதில் கலை எங்கே இருக்கிறது ? கலையை தம் மகிழ்ச்சிக்கு செய்யாமல் , பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் நோக்கத்தில் , மேக் அப் போடுவது , கிராபிக்ஸ் என்பதையே நடிப்பு என வைத்து ஏமாற்றுகிறார்கள்

  அதே நேரத்தில் பாதுகாப்பான வேலைகளை உதறி விட்டு, உண்மையான நல்ல படங்கள் , குறும்படங்கள் எடுத்து உரிய அங்கீகாரம் இல்லாமல் வாழும் நல்ல கலைஞர்களும் வாழ்கிறார்கள்.இங்கே முரண் வந்து விடுகிறது இல்லையா.


     ஏதோ ஒரு நூற்றாண்டியில், ஒரு குறிப்பிட்ட கலையை மட்டும் வைது எழுதப்பட்ட இந்த நாவல் , உலகளாவிய வரவேற்பு பெறுகிறது என்றால் , அதற்கு காரணம் , மேலே நான் உதாரணத்தை போல , அது எல்லா இடங்களுக்கும் ,எல்லா கலைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால்தான்..

   மொழி பெயர்ப்பாளர் குப்புசாமி சிறப்பான பணியை செய்து இருக்கிறார்.  மொழி பெயர்ப்பு என்பது சிக்கலான பணி. ஒரேயடியாக தமிழ் படுத்திவிட்டால் , மூல நூலின் சுவை போய் விடும். லேசான மொழி பெயர்ப்பு செய்தால் , கரடு முரடாக இருக்கும் .

         குப்புசாமி மிக மிக சிறப்பாக மொழி பெயர்த்துள்ளார்.   அதேபோல ஆங்கில பெயர்ப்பும் அருமை.  நோபல் பரிசு பெற ஆங்கில மொழி பெயர்ப்பும் ஒரு காரணம்.

 குறைகள் என எதையும் சொல்ல முடியாது.. ஆனால் என் எதிர்பார்ப்புகள் சில நிறைவேற்றப்படவில்லை என்பது ஒரு வாசகனாக என் கருத்து



  • தர்க்கா வழிபாடு, இறை நேசர்களை போற்றுவது பற்றி உண்மையிலேயே இஸ்லாம் நிலை என்ன என்பது பற்றிய ஆழமான விவாதங்கள் இல்லை
  • சீரோ டிகிரி போன்ற பின் நவீனத்துவ நாவல்களில் , நான் லீனியர் முறையை பயன்படுத்தி , சிதறுண்ட வடிவ முறையில் , நிறைய விஷ்யங்களை சொல்லி இருப்பார்கள்..  ஆனால் இந்த நாவல் லீனியர் முறையிலேயே செல்வதால் , வாசகனின் யோசிப்புக்கு அந்த அளவுக்கு பெரிய சவால் இல்லை. குறிப்பிட்ட இடப்பரப்பையும் , கால் அளவையுமே நாவலால் சொல்ல முடிகிறது.
  • கருப்பின் காதல் புரிகிறது. ஆனால் காதல் சம்பவங்களில் ரொமாண்டிக் அம்சம் குறைவே . 



 வெர்டிகெட் 

என் பெயர் சிவப்பு - சிறப்பு 
       எழுதியவர் - ஒரான் பாமுக்

Thursday, March 18, 2010

வங்காள விரிகுடாவை , கிளீன் செய்த கிளீன் சோப்பு தூள் - தூள் கிளப்பும் புத்தகம்

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - புத்தக விமர்சனம்

யுத்தம் என்றாலே, அதை கவனிப்பதில் ஓர் ஆர்வம் ஏற்படும்..


யானை போரை கவனிப்பதை பற்றி வள்ளுவர் அழகாக சொல்லி இருப்பார்...

மார்கெட்டிங் யுத்தங்கள் என்ற புத்தகத்தில், இந்த துறையில் நிபுணரான எஸ்.எல்.வீ மூர்த்தி , மார்க்கெட்டிங் துறையில் நிலவும் யுத்தங்கள் பற்றி விளக்குகிறார்...

சந்தை படுத்துதல் பற்றி , பல ஆங்கில புத்தகங்கள் வந்த போதிலும், தமிழில் குறைவு தான் .... சில புத்தகங்கள் , அப்படியே ஆங்கில புத்தங்களை தழுவி எழுத பட்டு இருப்பதால், நம்மால் அதனுடன் இணைய முடிவதில்லை... சிலர், பொதுவான சில அம்சங்களை கூறுவார்கள்.... ஒரே புத்தகத்தை , மீண்டும் மீண்டும் படிப்பது போல் தோன்றும்....

இந்த புத்தகம் எப்படி இருக்கும், என்ற ஒரு எதிர்பார்ப்புடன் படிக்க ஆரம்பித்தால், ( சிறிய புத்தகம்... எனவே தைரியமாக படிக்க ஆரம்பிக்கலாம் ) , ஆரம்பமே , நம்ம கோயம்பேடு மார்க்கெட்டில் இருப்பதால், களை கட்டுகிறது....
சிறிது ரிலாக்ஸ் ஆன உடன் , மார்க்கெட்டிங் யுத்தத்தில் பயன் படுத்தப்படும் ஆயுதங்கள் என்ன என்று விவரித்து விட்டு ( என்ன என்பதை புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்க) , அழகாக கியர் மாற்றி, கோயம்பேட்டில் இருந்து அமெரிக்கா செல்கிறது புத்தகம் ...

பெப்சி - கோக கோலா யுத்தம் பற்றி படிக்கும் போது, குளிர் பானத்தில், இப்படி ஒரு சூடான போரா என தோன்றுகிறது. ...

ஆனால் இதை விட , மனதை கவருவது, நம்ம ஊரில் நடந்த யுத்தங்கள் தான்... சில குளிர் பானங்கள் பிரபலம் ஆவதும், சில மறைந்து போவதும், நாம் பார்த்து இருக்கிறோம், அதற்குள் பல விஷயங்கள் இருக்கின்றன என தெரியும் போது , ஆச்சர்யமாக இருக்கிறது..
அனைத்து விஷயங்களும் புதிதாக இருப்பதால் , ஆர்வத்துடன் படிக்க முடிகிறது...
விளைவுகளை , நாமே நேரடியாக பார்த்து இருக்கிறோம் என்பதால், அதற்கான காரணம் பற்றி தெரியும் போது, நன்றாக உணர்ந்து படிக்க முடிகிறது...

அதிலும் " கிருஸ்ன " குளிர் பான தூள் , விவகாரம் படித்து ரசிக்க வேண்டிய ஒன்று...

இது போன்ற பலவேறு யுக்திகள் , யுத்தங்கள் சுவை ஆக , கூறப்பட்டு இருக்கின்றன....

ஊகிக்க முடியாத, யுக்தியை கையாண்டு யுத்த முடிவில் திருப்பு முனை ஏற்படுத்திய, " கிளீன் " சோப்பு பவுடர் யுத்தம் , நான் மிக ரசித்த ஒன்று.....

மார்க்கெட்டிங் என்றால் என்ன , என்று பாடம் நடத்துவது போல் இல்லாமல், குறுக்கு வழியில், கொடூர வழியில் , தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் தந்திரங்களையும் நூலாசிரியர் புட்டு புட்டு வைக்கிறார்....

மார்க்கெட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்று நீதி போதனை செய்யாமல், எப்படி இருக்கிறது என்று சொல்வது நூலுக்கு ஒரு நடு நிலை பார்வையை தருகிறது....

" காளான், ஆல மரம் ஆனது " " பாரதியாரின் பாஷையில் சொன்னால் , அவரது ஐடியா ஒரு அக்னி குஞ்சு ...விற்பனை காடு தீயாக பரவியது " போன்ற பல இடங்களில் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது....

இவ்வளவு நல்ல புத்தகத்தில், proof reader தன பணியை சரியாக
செய்யாமல் தூங்கி விட்டது ஒரு சிறிய குறை... பல பிழைகள் .... எழுத்தின் சுவையில் , பலர் இந்த குறையை கவனிக்க மாட்டார்கள்... பார்த்தாலும், இதை ஒரு குறையாக சொல்ல மாட்டார்கள்.... ஆனால் , ஒரு எக்ஸ் prrod reader என்ற முறையில், அடுத்த பதிப்புகளில் , இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்... அனைத்திலும் கவனமாக தயாரிக்கப்பட்ட இந்த புத்தகத்தில், எழுத்து பிழை விஷயத்தில் , ஒரு அலட்சியம் தெரிவது , வருத்தமாக இருக்கிறது....

பல புத்தகங்களை படித்து விட்டு எழுதுவது என்பது ஒரு வகை.. ஆனால் படிப்புடன், தன் அனுபவத்தையும் சேர்த்து , திரு . மூர்த்தி எழுதியுள்ள இந்த புத்தகம் , தனி தன்மை வாய்ந்தது....
மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு பயன் பட போகும் நூல் என்று , இதை அறிமுக படுத்தி இருக்கிறார்கள்... அது தவறு ...
அமெரிக்க - இராக் யுத்தம் பற்றி, ராணுவ வீரர்கள் மட்டும் படிப்பதில்லை... இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் யுத்தம் பற்றி, டெண்டுல்கரும், கவாஸ்கரும் மட்டும் படிப்பதில்லை... எல்லோரும் தான் படிக்கிறார்கள் ( சுவை யாக எழுதப்பட்டு இருந்தால் )
இந்த புத்தகம் , மார்க்கெட்டிங் துறையினருக்கு எழுதப்பட்ட பாட புத்தகம் அல்ல.... அனைவரும் படிக்க வேண்டிய , நல்ல புத்தகம் இது... அதே சமயம், மார்க்கெட்டிங் துறையினர் நிறய பாடங்களை கற்று கொள்ளலாம் ....
ஒரு விஷயத்தை பற்றி நேரடியான அனுபவம் இல்லாமல் , தனது சொந்த கருத்துக்களை அள்ளி வீசும் , தமிழ் புத்தக நடையில் இருந்து மாறுபட்டு , பல சுவையான , பரவலாக வெளியே தெரியாத, புதிய சம்பவங்களை (இந்திய மற்றும் சர்வதேச தகவல்களை ) , தந்து அனுபவம் மற்றும் ஆழ்ந்த படிப்புடன் ,தொகுத்து அளித்து இருக்கும் , நூல் ஆசிரியர் பாராட்டுக்கு உரியவர்....
இரண்டாயிரம் பக்கத்தில் புத்தகம் அடித்து, ஆயிரம் ரூபாய் விலை வைத்து விட்டு, யாரையும் விலை கொடுத்து வாங்கி படிக்க முடியாமல் செய்து விட்டு, பிறகு, தமிழ் நாட்டில் , எழுத்துக்கு மதிப்பு இல்லை என பழி போடாமல், அனைவரும் படிக்க கூடிய விலையில் , படிக்க கட்டிய அளவில் புத்தகம் வெளி இட்டு இருக்கும் கிழக்கு பதிப்பகமும் பாராட்டுக்கு உரியது....

மார்க்கெட்டிங் யுத்தங்கள் ***************** சத்து மாத்திரை ( இனிப்பான )

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா