Tuesday, February 26, 2013

நாஞ்சில் நாடனின் மறக்க முடியாத படைப்பு - “ மாமிசப் படைப்பு “


சில கதைகளை படிக்கும்போது , இதை சினிமாவாக எடுத்தால் சூப்பராக இருக்குமே என நினைப்போம்.  சமீபத்தில் ஒரு கதையை படிக்கையில் சினிமாவாக எடுக்க தேவையே இல்லாமல், ஒரு சினிமா பார்த்த எஃபக்ட் கிடைத்தது.

 நாஞ்சில் நாடனின் மாமிசப் படைப்பு  என்ற படைப்பைத்தான் சொல்கிறேன்.

மிக சிறிய நாவல் . குறு நாவல் என சொல்லலாம் என நினைக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு பாத்திரப்படைப்பு சிறப்பாக அமைந்த நாவல்கள் வெகு குறைவு. அதே போல நாஞ்சில் மண்ணை , வயல் சார்ந்த வாழ்க்கையை கண் முன் நிறுத்தும் நாவல்களும் வெகு குறைவுதான்.

படிக்க வெகு சுவையாக நாவல் செல்கிறது. கடைசியில்  ஓர் அதிர்ச்சியுடன் முடிகிறது. அந்த முடிவு ஏற்படுத்தும் சிந்தனை நாவலுக்கு அப்பால் விரிகிறது.

கந்தையா என்ற கேரக்டரை அறிமுகப்படுத்துவது , நம் தமிழ்  சினிமா கதா நாயகர்களை அறிமுகப்படுத்தும் காட்சிகளை விட பல மடங்கு அபாரமாக இருக்கிறது . இலக்கியவாதிகள் சினிமாவுக்கு வந்தால் , சினிமாவில் நிலவும் கற்பனைப்பஞ்சம் கண்டிப்பாக தீரும் என்றே நினைக்கிறேன்.

கந்தையா, கங்காதரம்பிள்ளை , சோணாச்சலம், காமாட்சி, விக்கிரம்சிங்கம் பிள்ளை, சடைய்யப்ப பிள்ளை பூசாரி , குற்றாலம்பிள்ளை , சாந்தப்ப்ன் , மாலையப்ப பிள்ளை , மாணிக்கம் , ”தீவட்டி ” ரங்கையா , ”லாயர் ” சின்னம்பிள்ளை  என ஒவ்வொரு கேரக்டரும் மனதை விட்டு அகலுவதில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார் நாஞ்சில் நாடன்.

கடைசி பக்கங்களில் அறிமுகம் ஆகும் பொன்னுவைக்கூட மறக்க முடியாது.

வளர்ச்சி பெற்ற எந்த ஒரு சமுதாயத்தை ஆராய்ந்து பார்த்தாலும் , அதன் வளர்சுக்கு உரமாக சிலர் களப்பலி ஆகி இருப்பார்கள். சிலரது தியாகத்தால்தான் வளர்ச்சி நிகழ்ந்து இருக்கும். செழிப்பான தோட்டத்துக்கு அடி உரமாக சிலர் தம்மை பலி கொடுத்து இருப்பார்கள்.

இதைத்தான் குறியீடாக மாற்றி , பலி கொடுத்தல் போன்ற சடங்குகளை உருவாக்கினார்கள். எல்லா கலாச்சாரங்களிலும் இது உண்டு .

மாமிசப்படைப்பு என்ற குறியீடு , உண்மையாக மாறும் உக்கிரமான தருணம் மிக சிறப்பாக இதில் வந்து இருக்கிறது.

சிலர் தம் உழைப்பால் உருவாக்கும் தோட்டத்தை சிலர் பொறாமையால் அழிப்பதும் , அழிவில் இருந்து அவர்கள் மீண்டு வருவதும் , ஒரு தலைவன் அவர்களை வழி நடத்துவதும் - உலகம் எங்கும் இதுதானே நடக்கிறது.

      அடக்குமுறைகள் , சுரண்டல்கள்களும் , அதற்கு எதிரான போராட்டங்களும்  உலகெங்கும் நடப்பதுதான். இதைப்பற்றிய எழுத்துகளும் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் பிரச்சார நெடி சிறிதும் இன்றி எழுதப்பட்ட அழுத்தமான நாவல் என்ற்வகையில் இது முக்கியமான நாவல் என நினைக்கிறேன்.

நாஞ்சில் நாட்டி வாழ்க்கை முறை , உணவு வகைகள், தானிய , பழ வகைகள் என இன்ஃபார்மட்டிவாக நாவல் செல்வதால் சுற்றுலா செல்லும் எண்ணத்தில்தான் படிக்கிறோம். மெல்லிய நகைச்சுவை வாசிப்பை இனிமையாக்குறது.

கடைசியில்தான் ஒரு  ட்விஸ்ட், சிறுகதை போல. ஒட்டு மொத்த நாவலுமே வேறோர் அர்த்தம் பெறுகிறது.

கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.

தலைப்பு : மாமிசப்படைப்பு

ஆசிரியர்  : நாஞ்சில் நாடன்

வெர்டிக்ட் : மாமிசப் படைப்பு -   மறக்கமுடியாத படைப்பு 

No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா