Tuesday, August 27, 2013

அகப்பாடு-3 அகதரிசனம் எனும் அக்கப்போர்


 என் பெயர் மா****  .  வயது 22. நான் பஜார் குறுக்கு சந்தில் இருக்கும் ஒரு சிற்றறையில் தங்கி இருக்கிறேன். அதற்கு வாடகை 3000 ரூபாய். சிற்றறைக்கு 3000 அதிகம் என நினைப்பீர்கள். ஆனால் அந்த ஓனரின் மனைவியை பார்த்தால் உங்கள் நினைப்பை மாற்று கொள்வீர்கள். ஆம் அந்த அளவுக்கு பேரழ்கி. அமலா பால், காஜல் , நஸ்ரியா உட்பட அனைவர் அழகையின் சேர்த்து ஓர் அழகை உருவாக்கினாலும் அப்படி ஓர் அழகை படைப்பது அரிது. அவள் பெயர் மலையரசி...ஆனால் அந்த பெயர் அவளுக்கு பொருத்தமாக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அவளுக்கு நான் வைத்துள்ள பெயர் மு...

இந்த நேரத்தில் தட தட என கதவு தட்டப்பட்டது.

அடச்சே...முக்கிமான நேரத்தில் யார் இது.. இங்கிதம் இல்லாமல் கதவை தட்டுவது எந்த நாய் என பார்ப்பதற்காக கதவை திறந்தால் , வெளியே அசோக் நின்று கொண்டு இருந்தான்.

அந்த அறைக்கு வாடகை கொடுப்பவனே அவன் தான். வேறு போக்கிடம் இன்றி ப்ளாட்ஃபாரத்தில் தங்கிகொண்டு இருந்த என்னை\ இங்கே தங்க வைத்து இருக்கிறான் என்றால் அதற்கு காரணம் என் அறிவுக்கு அவன் கொடுக்கும் மரியாதை.

அவன் என் அறிவை எப்படி உணர்ந்து கொண்டான் என்பது ஒரு சுவையான வரலாறு.

ப்ளாட்ஃபார்மில் இருந்து துரத்தி அடிக்கப்பட்டு , சுற்றிக்கொண்டு இருந்த காலம். மழைக்கு பாதுகாப்பாக அசோக்கின் அறை முன்பு ஒண்டி கொண்டு இருந்தேன்.

 நேரத்தை வீணாக்காமல் , ஒரு பின் அடிக்கப்பட்ட மஞ்சள் பத்திரிக்கையை (ப்ளாட்ஃபாரத்தில் வாங்கியது ) படிக்க ஆரம்பித்தேன்.

அப்போது தன் அறைக்கு வந்த அசோக்  என்னை வினோதமாக பார்த்தான். அடாத மழையிலும் விடாது படிக்கும் என் ஆர்வம் அவனை கவர்ந்து இருக்க வேண்டும்.

அசோக் ஒரு பீடி பற்றவைத்துக்கொண்டான். புகையை மூக்குவழியாக ஆசுவாசமாக விட்டபடி ”நீ என்னவாக்கும் மக்கா இருந்து படிக்கே?’ என்றான்.
நான் ‘சும்மா…’ என்றேன்.
‘நேரம்போக்குக்காலே?’
‘இல்ல…இது அறிவாக்கும்’
அவன் என்னை ஓரமாகப் பார்த்து ‘அறிவுண்ணாக்க?’ என்றான்
‘அறிவுண்ணா…இந்த இது இருக்குல்லா…’
‘என்னல வச்சு சவிட்டுதே? என்னல அறிவு சொறிவு?’

ங்கொய்யால....  ஊர்ல எல்லோரும் என்னை அறிவு கெட்ட நாயேனு திட்டுவார்கள்... ஆனால் இவனோ அறிவு என்றால் என்னவென்றே தெரியாத நாயாக இருக்கிறானே..
இதைப் பார்தத்ததும் எனக்கு ஆறுதலாக இருந்தது.. நம்மை விட முட்டாள்கள் இருக்கிறார்கள் என்ற அகதரிசனம் மகிழ்ச்சியாக இருந்தது. 

“ அறிவு அப்படீனா , ஒரு விஷ்யத்தை எப்படி சமாளிக்கிறோம்னு அப்படீங்கறதுதான்.. எப்படி பதிலடி கொடுக்குறோம்..எப்படி பிரச்சனையை தீர்க்கிறோம் அப்படினு பல விஷ்யம் இருக்கு. உனக்கு உதாரணம் மூலம் அறிவை விளக்குறேன்.

     ஒரு பெண் ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய போய்க்கொண்டு இருந்தாள். ல்ஃப்ட்டில் ஏறும்போது ஒரு ஆள் மீது மோதி சாரி என்றாள். அவன் : பரவாயில்லை... எங்கே அவசரமா போறீங்கஅவள் : ரத்த வங்கிக்கு போறேன் . ஒரு முறை ரத்தம் கொடுத்தா 100 ரூபாய் கொடுப்பாங்க
அவன் : ஹா ஹா...   அய்யோ அய்யோ.. 100 ரூபாயா.. நான் விந்து வங்கிக்கு போறேன். ஒரு முறை விந்து தானம் பண்ணா 1000 ரூபாய் கொடுப்பாங்க.
இதை கேட்டதும் அவள் கோபமாக வீட்டுக்கு போய் விட்டாள். 
அடுத்த நாள், அதே லிஃப்ட்டில் அவன் மீது மோதினாள்..சாரி என்றாள்
அவன் : அட.. நீங்களா? நேத்துதானே ரத்த தானம் செஞ்சீங்க..இன்னிக்கு கொடுக்க முடியாதே.அவளால் வாய் திறக்க முடியவில்லை.  வாயை மூடியவாறு , ஒரு பேப்பரில் எழுதிக்காட்டினாள்“ நானும் விந்து தானம் செய்யத்தான் வந்து இருக்கிறேன் “






பார்த்தாயா...அந்த பெண் எப்படி பதிலடி கொடுத்தாள்..இதுதான் அறிவு என்றேன்.

அசோக் என்னே அறிவு என வியந்து, தன் அறையிலேயே என்னை தங்க வைத்து விட்டான். 

எனவே அவன் இங்கிதம் இல்லாமல் கதவை திட்டினாலும் கோபம் வரவில்லை. அல்லது கோபத்தை காட்ட முடியவில்லை
” என்னடா இவ்வளவு அவசரம் ?” என்றேன்.

” உனக்கு விபரமே தெரியாதா.. நம் கல்லூரி நடத்திய சிறுகதை போட்டியில உனக்குதாம்ல முதல் பரிசு கெடச்சு இருக்கு “ என்றான்.

எனக்கு நம்பவே முடியவில்லை.

சஸ்பென்ஸ், ஆன்மீகம், செண்டிமெண்ட் ,  பாலுணர்வு என எல்லாம் கலந்த கதை எழுத வேண்டும் என்பது போட்டியின் விதி. பலரும் பக்கம் பக்கமாக எழுதினார்கள்.

எனக்கு எதுவும் தோன்றவில்லை. கடைசியில் ஒரு வரியில் கதை எழுதி அனுப்பினேன்.

“ கடவுளே.. நான் கர்ப்பம் “ அழகிய பெண் கத்தினாள். 

இதுதான் நான் எழுதிய கதை.

 நடுவர்கள் கதை புரியாமல் என்னை கூப்பிட்டு அனுப்பினார்கள்.

“ என்னலே கதை இது..ஒண்ணும் புரியல..விதிகள் ஒண்ணையும் பூர்த்து செய்யல..சவட்டிப்புடுவேன் சவட்டி” என்றார் மூத்த நடுவர்.

 நான் என் அறிவை நம்புபவன் .விளக்கினேன்.

” நடுவர்களே...என் கதையில் பிழையில்லை.

பாருங்க... கடவுளே- இதில் ஆன்மீகம் இருக்கு
                      கர்ப்பம் - செண்டிமெண்ட்
                     அழகிய பெண் - பாலுணர்வு

எப்பூடி...என்றேன்.. எல்லோரும் கைதட்டினார்கள்..ஆனால் மூத்த நடுவர் விடவில்லை.

“ சஸ்பென்ஸ் எங்கேலே “ என்றார்.

”அந்த கர்ப்பத்துக்கு காரணம் யார்.,.அதுதான் சஸ்பென்ஸ் ” என்றேன் .

அந்த நடுவர் மூர்ச்சை அடைந்தார்.

அந்த கதைக்காக பரிசு...எனக்கு மகிழ்ச்சியில் பேச்சு வரவில்லை.

“ உன்னை என் கிராமத்துக்கு கூட்டி போய் என் வீட்ல விருந்து கொடுக்கறேன்ல...வாலே :” என்றான் அசோக்.
யார் சாப்பாட்டுக்கு கூப்பிட்டாலும் நான் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு போய் விடுவது வழக்கம்.

ஆனால் கொஞ்சம் பிகு செய்ய விரும்பினேன்.
“ நானெல்லாம் ரொம்ப ஆச்சரமாக்கும்,, வேண்டாம்ல “ என்றேன்.
”அதெல்லாம் பார்த்துக்கிடலாம் ” என்று சொல்லி அழைத்து சென்றான்.

கிராமங்களுக்கே உரிய அழகிய வீடு. எல்லோரும் என்னை ஏமான் என சொல்லி அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் சாதாரணமாகத்தான் வரவேற்றார்கள்.

வெள்ளித்தட்டில் சாதம் பரிமாற முனைந்தார்கள்.

பதறிப்போய் தடுத்தேன்.

” நானெல்லாம் ரொம்ப ஆச்சரமாக்கும்.. வாழை இலைலதான் சாப்பிடுவேன் “ என்று கறாராக சொன்னேன்.
“ தம்பி..இது புது தட்டுப்பா,...உனக்காக வாங்கினோன் “ அசோக்கின் அப்பா கெஞ்சி பார்த்தார்.

இல்லை..ஒப்புக்கொள்ளாதே..என் அறிவு எச்சரித்தது..
“முடியாது... வாழை இலைதான் “ அடம் பிடித்தேன்.

கடைசியில் எங்கிருந்தோ வாழை இலை கொண்டு வந்து பரிமாறினார்கள்.

கொஞ்சம் பழைய இலை மாதிரி இருந்தது..ம்ம்.. பரவாயில்லை.. பசி ருசி அறியாது என்பார்கள்... ஆனால் சுவை ஒரு மாதிரி இருந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தேன்.

” அம்மா...அசோக் சாப்பிட்டுட்டான்..இலையை கழுவி வீட்ல வைங்க “ என்றான் அசோக்.

திடுக்கிட்டேன்.

“ இலைய கழுவி வைக்க போறியா...என்னடா சொல்றா? “  அழுகை கலந்த குரலில் கேட்டேன். 

” ஆமாம்ல... எங்க கிராமத்துல இலை கிடைக்காது...ரொம்ப நாள் முன்னாடி டவுன்ல இந்த இலை வாங்கிட்டு வந்து வச்சு இருக்கோம்.. நாய்களுக்கு, பன்றிகளுக்கு இதில் சாப்பாடு போடுவோம்.. சாப்ப்பிட்டதும் கழுவி வச்சுறுவோம்..  முதல் முறையா ஒரு மனிதன் சாப்பிட்டு இருக்கான்.,. இபப்டி ஒரு சாப்பாட்டை சாப்பிட்டு இருக்கியால “ என்றான் 

’இல்ல’ என்றேன் கண்ணீருடன்.
சிலகணங்கள் அமைதி. ‘அறிவாக்கும்’ என்றான் அசோக்

4 comments:

  1. vaayai moodi en ezhuthik kaattinaal? velangala thala....

    ReplyDelete
  2. இந்தக் கதையில் கூட அந்த மூணும் இருக்கே
    இதுவும் பரிசுபெற்ப்போகும் கதைதான்
    சந்தேகமில்லை

    ReplyDelete
    Replies
    1. ha haa....அதுக்காக என்னை விருந்துக்கு கூப்பிட்டு வாழை இலைல சாப்பாடு போட்டுடாதீங்க :)

      Delete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா