Wednesday, August 14, 2013

பெண்களை ஊருக்கு நேர்ந்து விடும் தமிழக கிராமம்- வெட்கம் கெட்டு சுதந்திரம் கொண்டாடும் ”படித்தவர்கள்”


 அந்த காலத்தில் சுதந்திர தினம் என்றால் மிட்டாய் வாங்குவதற்காக பள்ளி சென்ற அனுபவம் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது
வீட்டுப்பாடமோ, படிப்போ இல்லாமல் சும்மா பள்ளிக்கு செல்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்

அதன் பின் கொஞ்ச  நாள் உண்மையிலேயே நாட்டுப் பற்று எல்லாம் இருந்தது. தேச விடுதலை வரலாறு , தேசத்தலைவர்கள் பற்றியெல்லாம் தேடி தேடி படித்தேன்.

ஆனால் யதார்த்த வாழ்வை சந்தித்த பின் , சுதந்திர நாள் மீது வெறுப்போ விருப்போ இல்லாமல் போய்விட்டது
என்னை பொறுத்தவரை அது ஒரு விடுமுறை தினம்  மட்டுமே.

இன்றும் ஒரு விடுமுறை தினமாக சாதாரணமாக போய் இருக்கும். ஆனால் காலையில் பார்த்த சுகி சிவம் பேச்சு என்னை எரிச்சல் அடைய வைத்து விட்டது.  ஒரு மிடில் கிளாஸ் மன நிலையை அவர் பிரதிபலித்தார். நம் நாட்டில் நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தை வேறு பல நாடுகளில் மக்கள் அனுபவிப்பதில்லை என பேசினார்.
இவர் சொல்லும் “ நாம் “ யார் என புரிந்து கொள்வது இன்றைய தேவை.

இவரைப் போலத்தான் நானும் நினைத்து வந்தேன்.

ஆனால் சமீப காலமாக நான் சந்தித்த மனிதர்கள், பார்த்த படங்கள் , சென்ற ஊர்கள் , விவாதங்கள் எல்லாம் என் மனதை மாற்றி விட்டன.

அந்த காலத்தில் நம் அறிவு ஜீவிகள் சில நாடுகளுக்கு போய் விட்டு வந்து அந்த நாடு பூலோக சொர்க்கம் என எழுதுவார்கள். அப்படி சொல்பவர்கள் யாரும் பொய் சொல்வதில்லை. அங்கு சந்தித்த சிலருடன் பேசி அப்படி எழுதுவார்கள்.

ஆனால் சில ஆண்டுகளில் அந்த நாடுகளில் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள்
தூக்கி எறியப்பட்டதை பார்த்தோம். அந்த நாடுகளில் நிலவிய அவலம் பிறகுதான் தெரிய வந்தது

 நம் ஆட்களும் பொய் சொல்லவில்லை. அவர்கள் சந்தித்தவர்களும் பொய் சொல்லவில்லை. பின் ஏன் உண்மை நிலையை அவர்களால் எழுத முடியாமல் போயிற்று ?

அந்த நாடுகளில் உயர் பதவியில் இருந்தவர்களை இவர்களால் சந்திக்க முடியவில்லை. ஏழைகளுடன் உரையாடும் மொழியோ தெரியவில்லை.

எனவே குமாஸ்தாவாக இருந்த மிடில் கிளாஸ் மக்களையே சந்தித்து பேசினார்கள். அந்த நாட்டு கொடுங்கோல் ஆட்சியின் கொடுமைகளை அவர்கள் அனுபவிக்காததால் அல்லது தெரியாததால், அந்த நாட்டு ஆட்சியாளர்களை பாராட்டி பேட்டி கொடுத்தனர். நம் ஆட்கள் அதை நம்பி இங்கே எழுதி விட்டார்கள்.

அதன் பின் மக்கள் புரட்சி ஏற்பட்ட பின் தான், அந்த நாட்டின் கொடுமைகள் அந்த குமாஸ்தாக்களுக்கே தெரிய வந்தது.

சுகி சிவம் சொல்லும் நாம் என்பது இந்த குமாஸ்தாக்க்ளைத்தான்,

என்ன வேண்டுமானாலும் ஃபேஸ் புக்கில் எழுத முடிகிறது. எங்கு வேண்டிமானாலும் ஊர் சுற்ற முடிகிறது..எந்த இடத்துக்கும் வேலை தேடி செல்ல முடிகிறது என்பதையே நம் குமாஸ்தாக்கள் சுதந்திரம் என நினைத்து கொள்கிறார்கள்.

இந்த வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பது இவர்களுக்கு தெரியாது. இன்னும் பல ஊர்களில் சிலர் கோயில்களுக்கு போக முடியவில்லை/ டீக்கடைகளில் எல்லொரும் போல டீ சாப்பிட முடியவில்லை.
அவர்கள் எப்படி போனால் என்ன ,, நான் சுதந்திரமாக இருக்கிறேனே என சொலவ்து அற ரீதியாக மட்டும் தவறல்ல.. சுய நல ரீதியாக பார்த்தாலும் , தவறுதான்.

பொறுமை இழந்து அவர்கள் போராட தொடங்கினால் நமக்கும் சேர்த்துதான் அடி விழும்.

சமீபத்தில் லீனா மணிமேகலையின் மாத்தம்மா என்ற ஆவணப்படம் ஒன்று பார்த்தேன்.

தமிழ கிராமம் ஒன்றில் ஒரு கொடூரமான பழக்கம். ஏதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வீட்டு பெண் குழந்தையை மாத்தம்மா எனும் கடவுளுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள் , ஒரு வேண்டுதலாக.

அதன் பின் அந்த பெண் குழந்தை ஊருக்கு பொது சொத்தாகி விடும். நடனம் ஆடி மக்களை மகிழ்வித்து தன் காலத்தை ஓட்ட வேண்டும்.

பருவம் அடைந்ததும் திருமணம் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அவள் ஊருக்கு பொது சொத்து .திருமணம் இன்றி யாருடனாவது சேர்ந்து குடும்பம் நடத்தலாம். ஆனால் எந்த சட்ட பாதுகாப்பும் இல்லை.  கூட வாழ்பவன் எப்போது வேண்டுமானாலும் போய் விடுவான்.

அவளுக்கு என்ன சுதந்திரம் கிடைத்து விட்டது..இப்படி ஓர் ஊர் இருப்பது நம் அதிகாரிகளுக்கு தெரியாதா?

இப்படி நம்மை சுற்றி ஆயிரம் பேர் இருக்கையில் நாம் ஆனந்த சுதந்திரம் கொண்டாடினால் நம்மை வருங்கால சமுதாயம் காறித்துப்பி விடும்.

படிக்காத மக்கள் யாரும் ஆனந்த சுதந்திரம் கொண்டாடுவதில்லை. பெரும் பணக்காரர்களும் கொண்டாடுவது இல்லை
மற்றவர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்து போய் சேர்க்க வேண்டிய படித்தவர்கள்தான் இந்த குழந்தைத்தனமான செயலை செய்து வருகிறார்கள்.

அனைவருக்கும் வெட்கம் கெட்ட சுரணை கெட்ட அற்பத்தனமான சுதந்திர தின வாழ்த்துகள்
ஜெய் ஹிந்த்



3 comments:

  1. ஆந்திராவில் இன்னும் இருக்கிறது: பீமாபுரம் தாலுகாவில் என்று நினைக்கிறேன். விஜயநகர (ஹம்ப்பி)இடிபாடுகளுக்கிடையே ஒரு கோவிலும் மாத்தம்மாக்களுக்கு என்றே வீடுகளும் வீதியும் உள்ளன.

    ஆனால் இது மூடப் பழக்கவழக்கமும் பெண் அடிமைத்தனமும் கலந்த ஒன்று. பெரியாரின் கொள்கைத் தேவையை வற்புறுத்துவது.

    (தமிழ்நாட்டில் எந்தக் கிராமம் என்று எழுதப்பட வேண்டும். இப்படி, கிசுகிசு அவ் வழக்கத்தைக் கட்டிக் காக்கவே உதவும்.)

    ReplyDelete
  2. சரியான புரிதலுடன் உள்ள பதிவு....இது போல பிற பதிவுகளும் இருக்க வேண்டுகின்றேன்...

    ReplyDelete
  3. //தமிழ்நாட்டில் எந்தக் கிராமம் என்று எழுதப்பட வேண்டும். இப்படி, கிசுகிசு அவ் வழக்கத்தைக் கட்டிக் காக்கவே உதவும்//

    நானும் இந்த ஆவணப்படத்தை பார்த்தேன், அதைப் பதிவு செய்யாலாமென்றிருந்தேன். இந்த மாத்தம்மா ஆவணப்படத்தை திருவாலங்காடு, திருவள்ளூருக்கு பக்கத்தில் எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தமிழர்களல்ல. தெலுங்கர்கள், அவர்களின் இந்தப்பழக்கத்தால் தமிழ்நாட்டுக்குத் தான் கெட்ட பெயர். இந்தப்பழக்கம், தமிழ்நாட்டை விட கன்னடர்களிடமும், தெலுங்கர்களிடமும் தான் அதிகம் போல் தெரிகிறது.

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா