Monday, December 30, 2013

சில முஸ்லீம்களின் கண்டிக்கத்தக்க செயல் - ஒரு விவாதம்குட் மார்னிங் , குட் ஈவ்னிங் என்பதை GM , GE என எழுதுகிறார்கள்..ஓகே.. ஆனால் இஸ்லாமியர்கள் சிலர் இந்த பாணியில் , தம் முகமன்களை சுருக்கி எழுகிறார்களே... இஸ்லாம் அறிஞர்கள் இதை ஏற்கிறார்களா... சுருக்கி எழுதினாலும் படிப்பவர் , அதை முழுதாகப்படிப்பார்.. எனவே ஏற்கலாம் என்கிறார்களா.. அல்லது சுருக்க கூடாது என்கிறார்களா

sallallahu alayhi wasallam என்பதை SAW , Peace be upon him என்பதை PBUH என்றெல்லாம் எழுதுவது நியாயமா.
( மற்ற மதங்களுக்கான பிரத்தியேக முகமன்கள் இல்லை..அவர்களுக்கு இது பொருந்தாது என்பதால்தான் இஸ்லாமிய அறிஞர்களுக்கு மட்டும் இந்த கேள்வி )

**********************************************
ரஃபீக் அகமது 


ஒருவரை ஒருவர் சந்திக்கையில் முகமன் கூறுவது பற்றி இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ" என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு "தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம்.

ஸலாம்' எனும் வார்த்தை 'ஸலெம' எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக, நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, "உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;" என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது.
இதைவிட வருந்ததக்க விஷயம் என்னவென்றால்... முஸ்லிம்களில் சிலர் ஸலாத்தினை முறையாக சொல்ல, உச்சரிக்கவும் அறியாதவர்களாக உள்ளதுதான்.
சிலர் இதற்கான பதிலை 'ஸ்லாமலைகும்' /'ஸ்லாமகும்' / ஸ்லாம் என்று அவசரமாக ஏதெனும், ஒரே மூச்சில் முனகி முடித்துவிடுகின்றனர் .இன்னும் சிலர் சந்திக்கும் போது பதில் கூறுவதைப் பற்றி பெரிதாக கருதாமல் இருந்து விடுகின்றனர்... இன்னும் சிலர் அதற்கு கையால் சைகை காட்டி முடித்து விடுகின்றனர்.

மேலும் ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லிக் கொள்பவர்களிலும் கூட தயக்கத்தையும், கஞ்சத்தனத்தை கடைபிடிப்பதையும் காணமுடிகிறது.அப்படி முகமனை சுருக்கி கூறுவது முற்றிலும் கண்டிக்கப்படவேண்டிய தவறான செயல்


5 comments:

 1. பிச்சைகாரா நீ அப்படியே டைரக்டர் அமீர் மாதிரியே ,இருக்கிறீயடா...... ஆமாம் அப்பன்னா நீ.....அவனா நியீ........

  ReplyDelete
 2. இதென்ன ரெண்டுங்கெட்டான் தலைப்பு ?
  கண்டிக்கத்தக்க செயல் / கண்டிக்கவேண்டிய செயல்

  ReplyDelete
  Replies
  1. திருத்தி விட்டேன்.. நன்றி

   Delete
 3. முழுமையாக கூறுவதே சிறப்பு. இது போலவே, ஒரு சிலர் (ஒரு செயலை ஆரம்பிக்குமுன் கூறவேண்டிய) பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் -ஐ எழுதும்போது சுருக்கி 786 என்று எழுதுகின்றனர். இதுவும் தவறான செயலே.

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா