Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Monday, April 4, 2022

திருவள்ளூர்புத்தக கண்காட்சி. சீறிய ஆட்சியர் நேரடி ரிப்போர்ட்

  கன்னியாகுமரி மாவட்டம் ஒரு சிறிய மாவட்டம்.  ஆனாலும்  சுரா , ஜெமோ என ஏராளமான இலக்கியவாதிகள் , அரசியல்வாதிகள் என அங்கிருந்து வந்து ஊர்ப்பெருமையைப் பேசுவதால் , கிஅனைவருக்குமே அம்மாவட்டம் குறித்த ஓர் அறிமுகம் உண்டு.
இப்படி எல்லா மாவட்டங்களையுமே சொல்லலாம் . பாரதிராஜா , இளையராஜா , வைரமுத்து , கவுண்டமணி , சத்யராஜ் , சாரு நிவேதிதா , எஸ் ரா , கோணங்கி என அனைவருமே அவரவர் மாவட்டங்களுக்கு புகழ் சேர்க்கின்றனர்

ஆனால் திருவள்ளூர் மாவட்டம் போன்ற புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்கள் தமது அடையாளத்தை இப்போதுதான் உருவாக்கி வருகின்றன

அந்த வகையில் முதல் புத்தக கண்காட்சி அங்கு இவ்வாண்டு முதல் நடக்கவிருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்று

    நான் சென்றிருந்தபோது நல்ல கூட்டம்
பொதுமக்கள் மட்டுமன்றி ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்

இத்தனை நூல்களை ஒருசேர பார்ப்பது அவர்கள் மனதில் நல்விளைவுகளை உருவாக்கி இருக்கும்

       ஆட்சியர் அலுவலகம் , RTO , தலைமை காவல் அலுவலகம் என முக்கியமான இடங்கள் அமைந்திருக்கும் பிசி ஏரியா என்றாலும் சென்னை நெரிசலைப் பார்த்த நமக்கு இந்த இடம் அமைதியான சூழலில் இருப்பதுபோல தோன்றுகிறது 
வரும் ஆண்டுகளில் சென்னைவாசிகளும் இதை தேடி வருவர், சென்னை புத்தக கண்காட்சியின் இரண்டாவது பாகம்போல அமையக்கூடும்

திருவள்ளூர் சுற்றுப்புறவாசிகளுக்கும் இது அரிய நிகழ்வு.

புத்தகக்கண்காட்சிக்கேற்ற சிறந்த இடம் திருவள்ளூர்

நான் சென்றிருந்தபோது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அல்பி ஜான் வர்கீஸ் அங்கு வந்திருந்தார்

ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடத்தப்படும் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிவிப்புக்குப்பின் முதல் மாவட்டமாக திருவள்ளூர் மாவட்டம் புத்தக கண்காட்சி நடத்துவதன் பரவசம் அவர் முகத்தில் தெரிந்தது.
பொறுமையாக ஒவ்வொரு ஸ்டாலையும் நின்று நிதானமாக பார்வையிட்டார்

என்ன நூல்கள் உங்களது தனிச்சிறப்பு ?
எதை வாசகர்கள் விரும்பி வாங்குகிறார்கள்  ..   எந்த எழுத்தாளர் விரும்பப்படுகிறார்   உங்களது அதிக பட்ச விலை புத்தகம் எது ?   எங்கே அதை எடுங்க பார்ப்போம் ? என வெகு தீவிரமாக ஒரு ( அந்தக்கால)   பத்திரிக்கையாளரின் முனைப்போடு பேட்டி எடுத்தார்

வண்ண புகைப்படங்கள்  கெட்டி அட்டை  ஆழ்ந்த கட்டுரைகள் என்பதால் இவ்விலையா? என்றார்

சார்  இதன் அசல் விலை 4000 .  நமது கண்காட்சிக்காக சிறப்பு விலையாக 1000 என விளக்கியதும் திருப்தியுடன் தலை அசைத்தார்

இலக்கியம் சார்ந்து இயங்குவதால் காலச்சுவடு ஸ்டாலில் சற்று அதிக நேரம் உரையாடினார்.  

இலக்கிய நூல்களை எல்லாம் மக்கள் வாங்குகிறார்களா என நம்பாமல் கேட்டார்  .  சார் , இப்போதெல்லாம் இலக்கிய நூல்கள்தான் அதிகம் விற்கின்றன என பதில் கிடைத்ததும் அவருக்கு மகிழ்ச்சி.

இது போன்ற தரமான ஸ்டால்களை அடுத்தமுறை அதிகரிக்க வேண்டும் என உதவியாளர்களிடம் பேசினார்
 
ஒரு காமெடி.   ஒரு  முக்கியமான பதிப்பகம் எந்த பரபரப்பையும் காட்டாமல் , அறிவிப்பு பதாகைகள்கூட இல்லாமல் சொற்ப புத்தகங்களுடன் தூங்கி வழிந்து கொண்டிருந்தது
என்ன இது என சற்று கோபமாக கேட்டார்.  புக்ஸ் , போஸ்டர்லாம் ரெடி சார். அரேஞ்ச் செய்ய நேரம் கூடி வரல என்பதுபோல சமாளித்தார் ஸ்டால்காரர்

இடம் கிடைக்காமல் பலர் முறையிடுகிறார்கள்   நீங்கள் கிடைத்த இடத்தை வீணடிக்கிறீர்களே என டோஸ் விட்டார்

ஆனால் மற்ற ஸ்டால்காரர்கள் தமது புத்தகங்களைக்காட்டி ,  அவற்றை விளக்கி அவரை கூல் செய்தனர்

பலருடன் போட்டோ எடுத்துக்கொள்ள முகம் சுளிக்காமல் சம்மதித்தார்

பாதுகாவலர்கள் இருந்தாலும் பொதுமக்கள்  வாசகர்கள் அவரை அணுக எவ்வித
கெடுபிடிகளும் இல்லை

பள்ளி மாணவர்களுடன் கலகலப்பாகளக உரையாடினார்.    பல மாணவர்கள் அவரிடம் ஆசையாக ஆட்டோகிராப் வாங்கினர்

ஆட்சியாளர்களும் நிர்வாகமும் நினைத்தால்  நல்ல மாற்றங்களை கொணர முடியும் என்பதற்கு திருவள்ளூர் புத்தக கண்காட்சி உதாரணம்

அதன்பின்  மாவட்ட தலைமை நூலகம் சென்று விட்டு பிறகு நூல்களுடன் கிளம்பினேன்


    














 

Wednesday, January 22, 2014

புத்தக கண்காட்சியும் டாப் டென் புத்தகங்களும் ...


புத்தக கண்காட்சி முடிந்து விட்டது... எல்லா ஸ்டால்களிலும் சுற்றி பார்த்ததில் இருந்து ஒன்று தெரிந்தது... இணையத்தில் நாம் விவாதிப்பதற்கும் , நடைமுறைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது... 

நல்ல வாசகர்கள் பலர் இணையத்தில் இயங்குவது இல்லை.. எனவே இணைய கணிப்புகள் பெரும்பாலும் சரியாக இருப்பதில்லை...

சமையல் புத்தகம் , குழந்தைகளுக்கான புத்தகம் , கல்வி சம்பந்தமான புத்தகங்களை விட்டு விட்டு பார்த்தால் , இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் வாங்குவது குறைவாகவே உள்ளது..

ஆனாலும் சாரு , ஜெயமோகன் , எஸ் ரா போன்றோர் புத்தகங்களை கேட்டு வாங்குபவர்கள் , தேடி வாங்குபவர்கள் ஏராளம்.. அந்த வகையில் அராத்துவின் புத்தகங்களையும் தேடி வாங்கினார்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரியது...

காரணம் இளைய தலைமுறையில் ஒருவர் புத்தகம் வாங்கும்போது மற்றவர்கள் புத்தகங்களையும் பார்க்கிறார்கள் அல்லவா..

சுஜாதா புத்தகங்களை , இன்ன நாவல் என இல்லாமல் , குறைந்த விலையில் எது கிடைக்கிறதோ எதை வாங்கி செல்லும் போக்கு இருந்தது...ஆக அவர் மினிமம் கியாரண்டி... அதே போல கல்கி .கண்ணதாசன் போன்றோர்..

இடது சாரி புத்தகங்களுக்கு வரவேற்பு இருந்தது..
ஆனால் தமிழ் சார்ந்த நூல்கள் சரிவர சந்தைப்படவில்லை...

ஆன்மீக நூல்கள் என்றால் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் நிலை...தேர்ந்தெடுத்தே வாங்கினார்கள்...

விளம்பரத்தால் மட்டுமே எந்த புத்தகமும் கூடுதலாக விற்பனை ஆகவில்லை... ஆனால் விளம்பரம் இன்றி சில நல்ல புத்தகங்கள் விற்பனை ஆகாமல் தடுமாறின...



டாப் டென் என ஒவ்வொரு பதிப்பகமும் சில லிஸ்ட் வெளியிடும்...  ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லா ஸ்டால்களையும் சுற்றியதில் நான் அவதானித்தன் அடிப்படையில் டாப் டென்..

1. பகவத் கீதை - கீதா பிரஸ் ( குறைவான விலை என்பதால் பலரும் வாங்கினர் ) 

2. சுஜாதா கதைகள் ( தலைப்பை பற்றி கவலையின்றி , காசு குறைவாக இருப்பதை அள்ளி சென்றார்கள்... குறிப்பாக ஸ்ரீரங்கத்து தேவதைகள்,)

3. தற்கொலை குறுங்கதைகள்- அராத்து

4 உடையார் - பாலகுமாரன்

5 . கிமு கிபி - மதன்

6 ராசலீலா-  சாரு நிவேதிதா

7. ப்ளீஸ் , இந்த புத்தகத்தை வாங்காதீங்க- கோபி நாத்

8. கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்

9 . அராஜகம் 1000 - அராத்து

10 வெள்ளை யானை - ஜெயமோகன்

( அடுத்த பத்து இடங்களில் இருக்கும் புத்தக  பட்டியல் அடுத்து வெளியிடப்படும் ) 

Friday, January 10, 2014

சென்னை புத்தக கண்காட்சி - குதூகல ஆரம்பம் .. செவிக்கு உணவு படைக்கும் சிறப்புரைகள் பட்டியல்

  

சென்னை புத்தக கண்காட்சி துவங்கி விட்டது..

நந்தனம் ஒய் எம் சி ஏ கல்லூரியில் ஜனவரி 10 முதல் 22 வரை நடக்கிறது..

முதல் நாளே சென்றேன்... வேடிக்கை பார்க்கும் கூட்டம் இல்லாமல் நல்ல சூழல் ... ஆனால் சில ஸ்டால்கள் செயல்பட ஆரம்பிக்கவில்லை...ஏ டி எம்மும் இல்லை என்பதால் சிலர் புக் வாங்க முடியாமல் திரும்பினர்...

வழக்கம்போல லிச்சி ஜூஸ் சாப்பிட்டுவிட்டு , உள்ளே சுற்றிக்கொண்டு இருந்தேன்...சில ஆளுமைகளை பார்க்க முடிந்தது...  

மொத்தம் 700 அரங்கங்கள்..  காட்சி நேரம் பிற்பகல் 2 முதல் இரவு 9 வரை
லீவு நாட்களில் காலை 11 முதல் இரவு 9 வரை

புத்தங்கள் தவிர ஸ்பெஷல் அட்ராக்‌ஷனாக சிறப்பு உரைகளும் தினசரி உண்டு..

விரிவான விபரங்கள் பபாசி வெப்சைட்டில் உள்ளன..சிறப்புரையை மட்டும் சுருக்கமாக இங்கு தருகிறேன்.. குறித்து வைத்து கொள்ளுங்கள்..( தினமும் மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கும் ) 

தேதி                                                       சிறப்புரை வழங்குபவர்
11.1                                                            இயக்குனர் வசந்த்

12.1                                                         ஆவணப்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார்

13.1                                                         தமிழருவி மணியன்

14.1                                                       மருத்துவர் கு சிவராமம் , பூகோ சரவணன்

15.1                                                     எஸ். ரா , கோ. சுந்தர் ராஜன்

16.1                                                     சு. வெங்கடேசன், ஜோ. மல்லூரி , ஸ்ரீதர்

17.1                                           நீயா நானா கோபினாத் ,  கலைமகள் ( சீன வானொலி )

18.1                                         உதயசந்திரன் ஐ ஏ எஸ் , பிரபஞ்சன் , இளசை சுந்தரம்

19.1                                           சாலமன் பாப்பையா பட்டி மன்றம்

20.1                                       சகாயம் ஐ ஏ எஸ் , ம்தன் கார்க்கி , ஹரிஷ் ராகவேந்திரா

21.1                                         இறையன்பு ஐ ஏ எஸ்  , பரசுராமன்

22.2                                           நிறைவு விழா








லிச்சி ஜூஸ்


இயக்குனர் அம்ஷன்குமார்







Monday, January 21, 2013

புத்தக கண்காட்சியின் முழு பயனைப்பெற டாப் ஃபைவ் டிப்ஸ்


ரஜினி படங்களுக்கு  முதல் நாள் முதல் ஷோ போவது  தொன்றுதொட்டு வந்த பழக்கம் , அதே போல புத்தக கண்காட்சிக்கும் முதல் நாளே போய் அட்டண்டன்ஸ் போடுவதும் நெடு நாளைய வழக்கம்.

பிச்சைக்கார வாழ்க்கை வாழ்வதால் , வெவ்வேறு ஊர்களில் இப்படி அடெண்டன்ஸ் போட்ட அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த முறை விதி செய்த சதியால் புத்தக கண்காட்ச்சிக்கு செல்ல இயலவில்லை.  ஏன் போகவில்லை என ஃப்ளாஷ் பேக் செல்ல விரும்பவில்லை. எனவே கவலை வேண்டாம். சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும். அது போதும்,.

கண்காட்சி செல்லவில்லையே தவிர நண்பர்கள் மூலம் அப்டேட்ஸ் கிடைத்து வந்தது , மேலும் வலைப்பூக்கள் மூலமும் செய்திகள் அறிந்து வந்தேன்.

தாமதமாக செல்வதும் நன்மையில் முடிந்தது.
 என்ன புத்தகம் புதிதாக வந்துள்ளது ,  எதைப்படிக்க வேண்டும், எதை வாங்க வேண்டும் , எதை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்பதை நண்பர்கள் மூலம் முன் கூட்டியே அறிந்து கொண்டு ப்ரீ பிளானாக செல்ல முடிந்தது.


 இது வரை சென்ற கண்காட்சிகளில் எனக்கு சிறப்பாக அமைந்தது இந்த கண்காட்சிதான் . காரணம் நண்பர்கள் மூலம் கிடைத்த டிப்ஸ்.. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



  • டிப்ஸ் 1 புத்தகம் வாங்க கண் காட்சிக்கு செல்கிறோம்.  அறிவுப்பசி தீர்ந்த பின் வயிற்று பசியை தீர்க்க முனைவது நல்லதுதான். ஆனால் , வயிற்று பசியை தீர்க்க முனையும்போது , சில சமயங்களில் ஒட்டு மொத்த கண் காட்சி அனுபவத்தையும் அது கெடுத்து விடக்கூடும். விலை, நாம் எதிர்பார்க்கும் சுவை இன்மை, நாம் எதிர்பார்க்கும் உணவு வகை இன்மை என பல காரணங்கள். நாம் வாக்குவது புத்தகம் வாங்குவதற்கு..சாப்பாட்டு பிரச்சினை , இந்த மெயின் மேட்டரை மறக்கடிக்க அனுமதிக்கலாகாது 



கண்காட்சி வளாகத்துக்கு செலவதற்கு முன்பே. புத்தகம் என்பதையெல்லாம் மறந்து விட்டு , வஞ்சிரம் மீன் வறுவல் , மீன் குழம்பு ஆர்டர் செய்து என் விருப்பம் போல ஒரு வெட்டு வெட்டினேன். வயிற்று பசி அடங்கிய பின் , புத்தக வேட்டைக்குள் புகுந்தேன் .  ஜூஸ் வகைகளோ , உணவோ எனக்கு தேவைப்படவும் இல்லை. என் கவனத்தை திசை திருப்பவும் இல்லை. முழுக்க முழுக்க புத்தக வேட்டைதான்.



  • டிப்ஸ்2 நண்பர்களுடன் கெட் டுகதர் நல்லதுதான். அதற்காக புத்தக கண்காட்சியை பயன்படுத்திக்கொள்வதும் நல்லதுதான் . ஆனால் புத்தகத்தை செலக்ட் செய்யும் நேரத்தை வீணடித்து விடக்கூடாது. புத்தக கண்காட்சிக்கு வருவதே நண்பர்களை சந்திப்பதற்குத்தான் என்றால் அது வேறு விஷ்யம் . புத்தக வேட்டைதான் நோக்கம் என்றால் அதிகபட்சம் ஒருவர் போதும். one in company. two is crowd.

இந்த டிப்ஸ் கொஞ்சம் கடுமையானதுதான் . சிலரை புத்தக கண்காட்சிகளில் மட்டுமே சந்திக்க முடியும். எனவே யாரையும் சந்திக்காமல் இருப்பதும் , ஓர் அனுபவத்தை தவற விட்டதாகி விடும் . சந்திப்பு ஒரு விசிட் , புத்தகத்துக்கு ஒரு விசிட் என பிரித்து கொள்ள வேண்டியதுதான், முதல் விசிட் என்பதால் , நான் யாரையும் சந்திக்கவில்லை. எல்லா ஸ்டால்களையும் சுற்றி பார்க்க நன்றாக நேரம் கிடைத்தது.

  • டிப்ஸ் 3 கூட்டத்தை பார்த்து மிரள தேவையில்லை. புத்தகம் வாங்குவதை தடுக்கும் அம்சமாக நெரிசல் இருக்காது.
 நான் சென்ற போது,  நுழைவு சீட்டு வாங்கும் இடத்தில் சினிமா தியேட்டரில் இருப்பது போன்ற கியூ நின்று கொண்டு இருந்தது. அசந்து போய் விட்டேன்.

ஆனால் உள்ளே போனால் அந்த கூட்டத்தில் பெரும்பகுதி ஜூஸ் கடைகளிலும் , சமையல் , ஆன்மீக புத்தக கடைகளிலும்தான் நின்று கொண்டு இருந்தது . அரசியல் ,ஆன்மீகம் , சினிமா - இவைதான் ஈர்த்து கொண்டு இருந்தன. பல அற்புதமாக புத்தகங்கள் இருக்கும் கடைகளில் அந்த அளவுக்கு நெரிசல் இல்லை. ரிலாக்சாக தேவையானவற்றை வாங்க முடிந்தது.

  • டிப்ஸ் 4 புத்தகங்கள் அனியாய விலைக்கு விற்கப்பட்டுகின்றன என்பதில் உண்மை இல்லை. எனவே தைரியமாக வாங்கலாம்.
என் மதிய உணவுக்கு 400 ரூபாய் செல்வானது. இந்த காசுக்கு ஒரு புத்தகம் வாங்கி இருந்தால் , அது ஒரு முதலீடாக இருந்து இருக்கும். ஒரு தலையணை சைஸ் புத்தகத்தை 10 ரூபாய்க்கு தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது. உண்மையில் வெகு குறைவான விலையில் பல புத்தகங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் யாரும் வாங்கி குவித்து விடவில்லை. காஸ்ட்லி என்றெல்லாம் இல்லை... தகுந்த விலைதான் நிர்ணயித்துள்ளார்கள்.. ஆனால் கொஞ்சம் தேட வேண்டும். ஒரே நாவல் வெவ்வேறு பதிப்பகத்தில், வெவ்வேறு விலையில் கிடைக்கும் நிலையும் இருக்கிறது. எனவே கொஞ்சம் தேட வேண்டும். 

  • டிப்ஸ் 5 எல்லோரும்  வாங்குவ்தை நாமும் வாங்க வேண்டும் என்பதில்லை..
புத்தக கண்காட்சிக்கென பிரத்தியேக அனுகூலங்கள் உண்டு. நம் ரசனைக்கு அப்பாற்பட்ட சில புத்தகங்களும் நம் கண்களில் பட்டு ஆர்வம் ஏற்படுத்தக்கூடும். மற்றவர்கள் பரிந்துரைக்கும் பிரபலமான புத்தகங்களை எப்போது வேண்டுமானாலும் ஆன்லைனில் கூட வாங்க முடியும் . ஆனால் நாமே பல தரப்பட்ட புத்தகங்களை பார்வையிடும் வாய்ப்பு புத்தக கண்காட்சியில் மட்டுமே கிடைக்கும் .


 நான் வாங்கிய புத்தகங்களில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்கள் நூல்கள் வெகு குறைவு. படிக்க வேண்டிய சில புதிய நூல்களை வாங்கி இருக்கிறேன். சில மேலோட்டமான வாசிப்பிலேயே அருமையாக இருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்..



என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு... புத்தக கண்காட்சி முடியப்போகும் நிலையில், இந்த டிப்ஸ் யாருக்கும் பயன்படாது என நன்கு அறிவேன் :) 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா