Friday, November 14, 2014

சச்சின் - ஒரு கற்பனை கதை

கீழ்கண்ட மூன்று கதைகளை அல்லது பிரதிகளை தனித்தனியாகவும் படிக்கலாம்.  ஒரே கதையாகவும் படிக்கலாம். எந்த வரிசையிலும் படிக்கலாம். அல்லது ஏதேனும் இரண்டை மட்டும் ஒரு கதையாக கருதி படிக்கலாம்

லெட்ஸ் ஸ்டார்ட்

______________________________________________________

1 பெருமிதம்

முதியோருக்கான இலவச இருப்பிடம் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டு இருந்தது. சகல வசதிகளுடன் கூடியது.  உணவு , தங்கும் இடம் என எல்லாமே இலவ்சம். ஆங்காங்கு கிடைக்கும் நன் கொடைகள் , கட்டட வடிவமைப்பை இலவசமாக செய்து கொடுத்த எஞ்சினியர்கள் , குறைந்த சம்பளத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்ட சிவில் எஞ்சினியர்கள் என அந்த பணி நடந்து வந்தது . கொளுத்தும் வெயிலில் கட்டட தொழிலார்கள் பணி ஆற்றி வந்தனர். வியர்வை வெள்ளமாக ஓடுகிறது.

இது பற்றி எதுவும் அறியாதஒருவர் , இந்த பணியை பார்த்து ஆர்வம் கொண்டு ஒரு பணியாளரை அணுகினார். “ அய்யா,  நீங்கள் என்ன செய்றீங்க” .

பணியாளருக்கு களைப்பு,, வேலை எரிச்சல் “ பார்த்தால் தெரியல , கட்டடம் கட்டுறாங்க.. சிமெண்ட் கொண்டு போய்க்கிட்டு இருக்கேன். தினமும் கூலி கொடுப்பாங்க.. இதுதான் என் வேலை “ என்றார்.

அவர் மெல்ல நகர்ந்தார். ஒரு குழு சற்றும் களைப்பில்லாமல் உற்சாகமாக வேலை செய்து கொண்டு இருந்தது. அவர்களிடம் சென்று அதே கேள்வியை கேட்டார் .

“ அய்யா..  என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க ?”

ஒரு பெண் பணியாளர் பெருமையாக சொன்னார்.

“ முதியோருக்கான இலவச இருப்பிடம் கட்டிக்கிட்டு இருக்கோம். எல்லோரும் சேர்ந்து செய்றோம். என்னோட பங்கா , சிமிண்ட் கொண்டு போறது, செங்கல் எடுத்துட்டு போறதுனு செய்றேன் “

________________________________________________________________

2 வாத்து வெளியே வந்து விட்டது

வள்ர்ப்பு பிராணிகள் வாங்க ஒருவர் கடைக்கு சென்றார். ஒரு கிளியின் விலை மிக அதிகமாக இருந்தது. இதுக்கு ஏன் இந்த விலை என விசாரித்தார்.

“ அதுவாங்க .,,, இது ஆன்மீகம் , ஒழுக்கம் என உயர்ந்த விழுமியங்களுடன் வாழும் கிளி.. பாருங்க.. திருக்கிறள் சொல்லிக்கிட்டே இருக்கு “  விளக்கினார் கடைக்காரர் .

அட. ஆமா.. குறள் சொல்லிக்கொண்டு இருந்தது.

“ அது மட்டும் இல்லைங்க.. அதோட இடது இறகை தூக்கினா , நாலடியார் சொல்லும்.. வலது இறகை தூக்கினா நன்னூல் சொல்லும்.. இரண்டு இறகையும் சேர்த்து தூக்கினா  இனியவை நாற்பது சொல்லும் “

தொடர்ந்தார் கடைக்கார பெண்.. வியந்து போனார் ..


“ இதுக்கே அசந்தா எப்படி? வலது காலை தூக்கினா பைபிள் சொல்லும்.. இடது காலை தூக்கினா கீதை சொல்லும் “

வாடிக்கையாளர் பிரம்பித்து போனார் “ சரி, ரெண்டு காலையும் சேர்த்து தூக்கினா? “

கிளி குறளை நிறுத்தி விட்டு சொன்னது. “ தக்காளியை தாழி... அட கேப் வெண்டை , ரெண்டு காலையும் சேர்த்து தூக்கினா நான் விழுந்துருவேன், இந்த அறிவு வெண்டைகூட இல்லாம கிளி வாங்க வந்துட்டான்.. தக்காளி , ஓடிப்போய்ரு.. “

_____________________________________________________________

3  நெஞ்சுக்கு நீதி

சச்சின் போன்ற வீரர் இந்தியாவில் தோன்றியது இல்லை. உலகளவிலும் அவரைப்போல ஒருவர் இல்லை. ஆனாலும் அவர் தன்னைப்பற்றி அடக்கமாகவே சொல்லிகொள்வார்.  “ நானெல்லாம் ஒண்னும் இல்லைங்க.. என்னைவிட பெரிய ஆட்கள் எல்லாம் இருக்காங்க...  இன்னும் பல திறமைசாலிகள் வாய்ப்பில்லாமல் இருக்காங்க “ என்பார்

ஒரு முறை ஒரு வழ்க்கு விஷ்யமாக கோர்ட்டில் ஆஜராக வேண்டி இருந்தது.

“ உங்களைப்பற்றி சொல்லுங்க “ என்றார் நீதிபதி

“ நான் ஒரு கிரிக்கெட் வீரன். எனக்கு நிகராக எந்த நாயையும் சொல்ல முடியாது. என் போல யாரும் பிறந்ததும் இல்லை.. இனி பிறக்கப்போவதும் இல்லை.  “ என்றார் சச்சின்.

அவர் அண்ணனுக்கு அதிர்ச்சி . சச்சின் இப்படி தற்பெருமை அடித்து பார்த்ததே இல்லையே.

தனியாக சந்தித்து கேட்டார் “ உனக்கு என்ன ஆச்சு... இப்படி நீ பேசி பார்த்ததே இல்லையே “

சச்சின் புன்னகையுடன் சொன்னார் “ பேட்டியில் கேஷுவலாக சொல்வது வேறு.. ஆனால் கோர்ட்டில் சத்தியபிரமாணம் எடுத்துள்ளதால் , உண்மை மட்டும்தானே பேச முடியும் “

___________________________________________


1 comment:

  1. நீங்க நினைக்குமளவுக்கு சச்சின் யோக்யன் இல்லை. வரி எய்ப்பு செய்ய தான் தொழில் முறையில் நடிகன் என்று கூசாமல் சொன்னவன். வெளிநாட்டில் பரிசாக பெற்ற கார வரி விளக்கு பெற்று இந்தியாவிற்குள் கொண்டு வந்து கொஞ்ச நாள் கழித்து ஒரிஜினல் விலைக்கே விற்றவன். பெப்சி விளம்பரத்தில் காசுக்காக நடித்தவன், அதை அந்த விளம்பரத்தில் மட்டுமே குடுத்திருப்பான். அயோக்யத்தனம்=டெண்டுல்கர்..

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா