Showing posts with label உயிரியல். Show all posts
Showing posts with label உயிரியல். Show all posts

Thursday, September 26, 2019

கால் வடிவில் "அது"" . காட்டைக்காக்கும் பூச்சி

கறுப்பு வண்ணஉடலுடன் மஞ்சள் புள்ளிகளுடன் ஊரந்து செல்லும் இப்பூச்சி சிறுவர்களுக்கு ஆர்வமூட்டும் உயிரியாகும். தொட்டால் சுருண்டு கொள்வது சிறுவர்களுக்கு வேடிக்கையாக  இருக்கும். ஆபத்தற்ற பூச்சி என்பதால் பெரும்பாலானோர் இதை கொல்வதில்லை.. ம
கீழே கிடக்கும் இலைதழைகளை தின்று அவற்றை இயற்கை உரமாக்குவதால் இவை நன்மை செய்யும் உயிரியாக கருதப்படுகிறது.. காட்டின் 50% தாவர குப்பைகளை காலி செய்பவை இவைதான். அவற்றை தின்று உரமாக்கி, மண்ணுக்களிக்கின்றன
காடுகளின் அழிவின்மைக்கு  இந்த பூச்சிகளும் காரணமாகும். இவை அழியின் வனங்கள் பாதிப்படையும். ஆனால் அவற்றுக்கு எதிரிகள் அதிகம் இல்லை என்பதால் இவை அழியும் வாய்ப்புகள் குறைவு..  ஏதேனும் சிறுபூச்சிகள் இவற்றை தாக்க முயன்றால் ஹைட்ரஜன் சயனைட் விஷத்தை வெளியேற்றி அவற்றை கொன்றுவிடும்.  பெரிய விலங்குகளுக்கோ மனிதனுக்கோ இந்த விஷத்தால் எந்த அபாயமும் இல்லை
பெண் பூச்சிக்கு 32 கால்கள்.. ஆண் பூச்சிக்கு 32கால்கள் போல தோன்றினாலும் 31 மட்டுமே கால்கள். ஒன்று கால் இல்லை. இனப்பெருக்க உறுப்பு
இந்த பூச்சி குறித்து நம் பழைய இலக்கியங்களில் எந்த குறிப்புகளும் இல்லை. காரணம் இவை நம் நாட்டு பூச்சி இல்லை

அதனால் நல்ல தமிழ்ப்பெயர் இதற்கு இல்லை. ரயில் பூச்சி. அட்டைப்பூச்சி என பேச்சுவழக்கில் அழைக்கிறார்கள்


Wednesday, February 13, 2019

கண் அடித்து காதலியை கரெக்ட் செய்யும் அரிய தவளை இனம்

Mysticellus franki showing its marbled underside and, left, its false eye spots.வெறும் ஐந்து ஆண்டுகள் முன்புவரைகூட , போரூரின் பல பகுதிகள் கீரிகளும் பாம்புகளும் இன்னும் பெயர் தெரியாத பல உயிரிகள் வாழும் காடாக இருந்தது

இன்று அந்த பகுதி மக்கள் வாழும் - அதுவும் பணக்காரர்கள் வசிக்கும் - வசதிமிகு பகுதியாகி விட்டது..அந்த உயிரிகள் இன்று இல்லை

எத்தனையோ அரிய உயிரிகள் அழிந்தனவோ யாருக்குத் தெரியும்?

நம்மிடம் இது குறித்த ஓர் அறியாமை இருப்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஏதாவது புது வகை பாம்பைப் பார்த்தால் என்ன செய்வோம்.. பாம்பு கூட வேண்டாம்.. பழுப்பும் , ஊதாவும் கலந்த ஒரு வினோதமான வண்ணத்தில் ஒரு புழு  நெளிகிறது... என்ன செய்வோம் ?

உடனே காலில் மிதித்து கொன்று விடுவோம்.. ஒருவேளை அதுதான் அந்த இனத்தின் கடைசி பிரஜையாக இருக்கக்கூடும்..

இப்படிப்பட்ட அரிய இனங்கள் இன்னும் சில தப்பி பிழைத்து வாழ்ந்து வருகின்றன

அப்படி ஒரு அரிய தவளை இனம் கேரளா அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டெல்லி பலகலைக்கழகத்தை ஆய்வாளர்கள் சோனாலி கார்க்  மற்றும் அவரது சீனியர் எஸ் டி பிஜு ஆகியோர் இதை கண்டுபிடித்தவர்கள் ஆவர்

இந்த தவளை வெறும் நான்கு நாட்கள் மட்டுமே கண்ணில் படுகிறது..அதன் பின் எங்கோ மறைந்து ரகசிய வாழ்க்கை நடத்துகிறது..எனவே இப்படி ஒரு தவளை இருப்பதே தெரியாமல் இருந்தது

இதன் டி என் ஏ யை சோதித்துப்பார்த்ததில் இதன் மரபணு இந்திய தவளைகள் எதனுடனும் ஒத்துப்போகவில்லை... முற்றிலும் புதிய இனம்..இது போன்ற இனம் , ம்லேசியா , வியட் நாம் போன்ற   நாடுகளில்தான் இருக்கின்றன.. அந்த காலத்தில் ஆசிய பகுதிகள் அனைத்தும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருக்கலாம் என்பதை இது காட்டுவதாக கருதுகின்றனர்

இதன் முதுகுப்புறத்தில் கண்கள் போன்ற வட்டமான இரு மச்சங்கள் இருக்கின்றன

போரிட வரும் எதிரியை குழப்ப இந்த கண் பயன்படுகிறது

தன் காதலியை கண் அடித்து கரெக்ட் செய்யவும் இந்த அமைப்பு பயன்படுகிறது...

அறிய வேண்டிய அரிய விஷயம்தான் இது

Blink and miss: Kerala’s mystery frog


Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா