Showing posts with label எந்திரன் ரஜினி. Show all posts
Showing posts with label எந்திரன் ரஜினி. Show all posts

Monday, October 18, 2010

எந்திரன் - "மாறிய" கதையும் , மாறாத மனோபாவமும்

நம் மக்களின் தாழ்வு மனப்பான்மையை பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன்..
வெள்ளைக்காரன் நம்மை விட சிறந்தவன், "அவாள்" மட்டும் அறிவாளிகள், மற்றவர்கள் முட்டாள்கள் என ஒன்றா , இரண்டா..ஆயிரம் சிந்தனை சிறைகளில் சிக்கி தவிக்கின்றனர் நம்மவர்கள்..
இந்திரன் படத்தை சிலருக்கு பிடிக்கவில்லை..விமர்சிக்கிறார்கள் என்றால் அது வேறு விஷயம்..
ஆனால் ஜாதி வெறியுடன் சிலர் நடந்து கொள்வது நகைப்புக்கு உரியது.. பாரம்பரியம் மிக்க ஒரு தின் பத்திரிகை கூட அப்பட்டமான ஜாதி வெறியை காட்டி இருந்தது..

அவாள் இனத்தை சேர்ந்த அனைவரும் இப்படி இல்லை... சிலர் செய்யும் தவறால் ஒட்டு மொத்தமாக அவர்கள் பெயர் பாதிக்க படுகிறது..

இன்னொன்று , பிராமணர் அல்லாதவர்களின் தாழ்வு மனப்பான்மை.. ஒரு விஷயத்தை அவாள் மட்டும்தான் சிறப்ப்பாக செய்ய முடியும் என கற்பனையாக ஒரு சிந்தனையை பரப்பி வருகிறார்கள்..

என்ன சொல்கிறார்கள் இவர்கள்..

1 கமல்- சுஜாதா கூட்டணிதான் "இயல்பான " கூட்டணி.. அவர்கள் இந்த படத்தில் இணைந்திருந்தால் , படம் இன்னும் பெரிய ஹிட் ஆகி இருக்கும்

2 சுஜாதா உயிடன் இருந்து இருந்தால், படம் வேறொரு உயர்ந்த தரத்தை அடைந்து இருக்கும்

3 சுஜாதாவின் திரைகதையை ஷங்கர் மாற்றி விட்டார் .. அதே திரைக்கதையாக இருந்தால், படைத்து இருக்கும்.ஆஸ்கார் கிடைத்து இருக்கும்.
4 திரைகதையில் சுஜாதா கில்லாடி.. புத்தகம் எல்லாம் எழுதி இருக்கிறார்..

இதை எல்லாம் பாதித்தால் , எந்த அளவு நம் மக்கள் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறார்கள் என புரியும்

புத்திசாலித்தனம் எல்லா இடங்களிலும் இருக்கிறது.. அவாள் மாட்டும் புத்தி சாலை என சொல்வது தவறு என்பதை மறந்து அவர்கள் சொல்லும் வாதத்தை கவனிப்போம்..

1 இயல்பான , புத்திசாலி கூட்டணி என இவர்கள் சிலாகிக்கும் கமல்- சுஜாதா என்ற அவாள் கூட்டணியில்தான் , விக்ரம் என்ற குப்பை படம் வந்தது... அது ஹிட் ஆகவும் இல்லை , நல்ல பெயரும் கிடைக்கவில்லை...
2 சுஜாதா உயிருடன் இருந்து இருந்தால், படத்தின் வசனங்களுக்கு இப்போது கிடைக்கும் வரவேற்பு கிடைத்து இருக்காது... சிவாஜி படத்தின் வசனம் வரவேற்பு பெற்றதா என்ன ? ஜாதி வெறியுடன் , தமிழர்களை சில வசங்கள் சீன்டியதுதான் அவர் செய்த சாதனை . எந்திரனுக்கு சுஜாதாவே முழு வசனமும் எழுதி இருந்தால், வசனம் இயல்பாக இருந்து இருக்காது..
கண்டிப்பாக படம் பிளாப் ஆகி இருக்கும்... super படம் ,,மக்களளுக்கு புரியவில்லை என சுஜாதா பேட்டிகொடுப்பார்..
3 சுஜாதாவின் கதைகள் அவர் உயிடன் இருந்த போதே படம் ஆக்கப்பட்டன.. அவர் வசமும் எழுதினர் அப்போது அந்த படங்கள் என்ன சாதித்தன.. ? பெரும்பாலும் பிளாப் தான் ஆகின .. அவர் ஹிட் ரேட் மிக குறைவு..
எந்திரன் படம் முழுக்க முழுக்க ஷங்கரின் கதை.. அதில் வசனம் மட்டுமே சுஜாதா..எனவே அவர் கதையை ஷங்கர் மாற்றி விட்டார் என சொல்வது அபத்தம்..

4 சினிமாவில் சுஜாதவை சும்மா ஊறு காய் ஆகத்தான் பயன் படுத்தி வந்தனர்.. அவர் உண்மையிலே கில்லாடிய இருந்தால், அவருக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வரவில்லை? அவர் ஏன் முத்திரை பதிக்கவில்லை?
மணிரத்னம் போன்றவர்கள் இனப்பற்றுடன் வாய்ப்பு வழங்கினர் என்பதுதான் வரலாறு ..


பின் குறிப்பு.. 1 நானும் சுஜாதாவை விரும்பி படிப்பவன்.. அதற்காக ஜாதி வெறியை மறைக்க கூடாது..

2 நான் பிராமண துவேஷம் கொண்டவன் அல்ல .. ஏன் நண்பர்களில் பலர் பிராமனர்கள் தாம்.. பிராமணியம் என்பதை பற்றித்தான் பேசுகிறேன்..

Thursday, October 14, 2010

எந்திரன் சண்டை காட்சிகள் காப்பி அடிப்பா?? சர்ச்சையில் ஷாருக்கான்

எந்திரன் பட வாய்ப்பை இழந்த ஷாருக்கான் , அந்த படத்தின் சில காட்சிகளை காப்பி அடித்து தன படத்தில் பயன்படுத்துவதாக சர்ர்ச்சை எழுந்துள்ளது..

எந்திரன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் கமல்.. விறுவிறுப்பாக ஆரம்ப வேலைகள் நடந்தன.. ஆனால் தயாரிப்பளர்கள் , கமலை நம்பி முதலீடு செய்ய விரும்பாததால் , அந்த முயற்சி நிறைவேறவில்லை..
அதன் பின் ஷாருக்கான் அந்த படத்தில் நடிக்க முன் வந்தார்.. அவரே தயாரிக்கவும் தீர்மானித்தார்.. ஆனாலும் வில்லனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், கதையில் மாற்றம் போன்ற சில பிரச்சினைகளால் படத்தை விட்டு விலகினார்...
வில்லனுக்கு முக்கியத்துவம அளித்தால் படம் ஓடாது என்பது அவர் கருத்து..
இந்த நிலையில் ரஜினி நடித்த எந்திரன் வட இந்தியா உட்பட இந்தியா முழுதும் மாபெரும் வெற்றி பெற்று இருப்பது ஷா ருக்கானுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது..
நல்ல கதையை விட்டுவிட்டோமே என வருந்திய அவர் , இந்திரனை மிஞ்சி காட்டா வேண்டும் என்ற வெறியுடன் ரா. ஒன் என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார்..

எந்திரன் கதையை ஷங்கர் இவரிடம் சொளியபோது, டிரயின் சண்டை காட்சி அவர் மனதை கவர்ந்து விட்டதாம்.. அந்த சண்டை காட்சியை அப்படியே தன படத்தில் பயன்படுத்தி வருவதாக தகவல் கசிந்ததும் பரபரப்பு ஏற்பட்டது...

அவர் தரப்பில் பேசுபவர்கள் " அவருக்கு டிரெயின் சண்டை காட்சிகள் எப்போதுமே பிடிக்கும்.. எனவே தன படத்தில் சிரத்தை எடுத்து இந்த காட்சியில் நடித்து வருகிறார்.. காப்பி என சொல்வது தவறு " என்றார்கள்

எந்திரன் படத்தில் பணிபுரிந்த ரசூல் பூக்குட்டி இந்த படத்திலும் பணிபுரிகிறார்..
அவர் ஒரே காட்சி அமைப்பு இரு படங்களிலும் வருவதை ஒப்புகொண்டார்..
காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயல்வோம் என சொல்கிறார் அவர்..

ஷாருக்கானை பொறுத்தவரை, அவர் காபி அடிக்க வேண்டும் என நினைத்து அடிக்வில்லை.. ஷங்கர் சொன்ன விதம் மனதை கவர்ந்து , தற்செயலாக தன படத்தில் பயன்படுத்தி விட்டார்..
ஆனால் இந்த சர்ச்சை பெரிதாவதை அவர் விரும்பவில்லை.. எப்படியாவது வேறுபாட்டை காட்ட வேண்டும்.. காப்பி என யாரும் சொல்லி விட கூடாது என கடுமையாக உழைத்து வருகிறார்..

இப்படி கஷ்டப்படுவற்கு பதில்,. இந்த காட்சியைஎ எடுத்து விடலாமே என நீங்கள் கேட்கலாம்.. அது முடியாது..இந்த காட்சிக்கு மட்டும் அவர்கள் செய்துள்ள செலவு 3 கோடி ரூபாய்

Monday, October 11, 2010

எந்திரனின் இமாலய வெற்றியும், அறிவுஜீவிகளின் பார்ப்பனியமும்

அறிஞர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது..
" பார்ப்பனீயம், பார்ப்பனீயம் என பதறுகிறீர்களே.. பிராமணர்கள் ஜனத்தொகை மிக மிக குறைவு..தேவையில்லாமல் அவர்களை என் எதிர்கிறீர்கள் ? "

அண்ணா பதில் அளித்தார்..

நான் பிராமணர்களுக்கு எதிரானவன் அல்ல.. பார்ப்பனியம் என்பதை பிராமணர்கள் மட்டும் வளர்க்கவில்லை... சில "சூத்திரகளும்" கூட , தம்மை விட பிராமணர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மயக்கத்தில் இருக்கிறார்கள்.. இதைதான் பார்ப்பனியம் என்கிறோம்... பார்ப்பனியத்தை ஏற்காத பிராமணர்களும் உண்டு ... பார்ப்பனியத்தில் மூழ்கி போன "சூத்திரர்களும்" உண்டு.. இது அபாய கரமானது . காலம் காலமாக , பிராமணன் உயர்ந்தவன் என மனதில் பதிந்து விட்டத்தால் இதை மாற்றுவது எளிதல்ல " என்றார்..

யோசித்து பார்த்தால் இதில் இருக்கும் உண்மை தெரியும்.. பிராமணர்களில் பலர் கூட இயல்பாகவும், தான்தான் பெரியவன் என்ற உணர்வு இல்லாமல் இருப்பதையும் , அனால் பிராமணர்கள் அல்லாதவர்கள்தான், தேவையில்லாமல் அடிமை விசுவாசத்தை காட்டுவதையும் பார்க்க்கலாம்..

தற்போதைய எடுத்துக்காட்டு எந்திரனும் , அறிவு ஜீவிகளின் பார்ப்பனிய பார்வையும்..

சில ஆண்டுகளுக்கு முன் மருத நாயகம் படத்தை , இங்கிலாந்து ராணியை வைத்து ஆரம்பித்தார் கமல்..
ஆஹா.. அவர் உடலில் ஓடுவது கலை ரத்தம் என புல்லரித்தனர் அறிவு ஜீவிகள்..

தசவாதாரம் பட விழாவிற்கு ஜாக்கி சானை அழைத்தார் கமல்...
அவாள் திறமை யாருக்கும் வராது என சிலிர்ப்படைன்தனர் அறிவு ஜீவிகள்..

டப்பா படமான மும்பை எக்ஸ்பிரசை , சந்திர முகிக்கு எதிராக களமிறக்கி, அரசியல் பிரச்சாரம் போல ரேடியோ, தொலைகாட்சி என கமல் விளமபரம் செய்ததை பார்த்து, இந்த தொழில் நுட்பமெல்லாம் , பிறப் பிலேயே வரணும் என மனு நீதியை தூக்கி பிடித்தனர் அறிவு ஜீவிகள்..

இதே எந்திரன் படத்தில் கமல் நடித்து இருந்த்தா ல், படம் பிளாப் ஆகி இருக்கும்... ஆனால் அறிவு ஜீவிகள் பாராட்டி இருப்பார்கள்..
தமிழனுக்கு ரசிப்பு திறன் பத்தாது என பார்ப்பானிய வெறியை காட்டி இருப்பார்கள்..

இப்போது அறிவு ஜீவிகள் திட்டினாலும் மக்களுக்கு படம் பிடித்து இருக்கிறது..

பார்ப்பானியத்தை யார் ஆதரித்தாலும் தவறு.. ஆனால் அதை பிராமணர்கள் செய்தால் கூட அதை புரிந்து கொள்ள முடியும் ( ஏற்க முடியாது என்பது வேறு விஷயம் )

ஆனால் பிராமணர்கள் அல்லாதவர்கள் கூட தாம் என்ன செய்கிறோம் என்பதை அறியாமல் , அடிமை விசுவாசத்தை காட்டுவது வருந்த தக்கது .. அனுதாபத்துக்கு உரியது...

வெற்றி , கலை, புத்தி என்பது எல்லாம் பிராமர்களுக்கு மட்டும் உரியது அல்ல.. பிராமணர்கள் உட்பட அனைவருக்கும் இவை சொந்தம், தேவையில்லாத தாழ்வு மனப்பான்மை வேண்டாம் என்று சொல்ல , இன்று அண்ணா இல்லையே என்ற ஏக்கம் ஏற்படுகிறது...

Thursday, October 7, 2010

எந்திரன் யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?

எந்திரன் வரலாறு காணாத வெற்றி பெற்று, அனைவரையும் கவர்ந்துள்ளது.. ஆனாலும சிலருக்கு ,சுமார் இரண்டு சதவிகிதம் மக்களுக்கு படம் பிடிக்கவில்லை என்பதை மறுக்க முடியாது..

யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை...?

1 சன் டீவி, தினகரன் போன்றவற்றின் போட்டியாளர்களுக்கு ( ஒரு செய்தி தாள் இரண்டு நாட்கள் கேலி படம் வெளியிட்டது )
2 வெற்றியாளர்களை கண்டால் பொறாமை படும் மனம் கொண்டவர்களுக்கு..
3 சினிமா என்றால் அதில் ஒரு மெசேஜ் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு
4 நீதி போதனையை எதிர்பார்த்து படம் பார்க்க செல்பவர்களுக்கு
5 தமிழ் படத்துக்கு இதெல்லாம் தேவையில்லை என்ற தாழ்வு மனப்பன்மை கொண்டவர்களுக்கு..
6 காதல் என்பதுதான் உயிர் அல்லது மனதின் ஆதார குணம். மனம் செயல்பட ஆரம்பித்தால் காதல் அங்கு தோன்றும் என்ற யதார்த்தம் புரியாதவர்களுக்கு
7 காதல் என்றால் காமம் எனும் தப்பர்த்தம் கொண்டவர்களுக்கு
8 ஆபாசம் இல்லாத சினிமாவை ஏற்க மனம் இல்லாதவர்களுக்கு
9 வெளிநாட்டு படக்கள் போல இல்லையே என , வெளி நாட்டு படத்தை அளவு கோளாக கொளபவ்ர்களுக்கு
10 கிராபிக்ஸ் திகட்டுகிறது, திரை கதை சரி இல்லை என உண்மையிலேயே நினைப்பவர்களுக்கு..

இப்படி இருந்தாலும், படத்தை வெற்றி பெற செய்தது, படத்தை திட்டுபவர்கள்..அவர்கள் அனைவரும் தலா இரண்டு முறை, திட்டுவதற்கென்றே படம் பார்த்தனர்.. ரசிகர்களிலேயே சிலர் இன்னும் பார்க்கவில்லை..
அனால் பிடிக்காதவர்கள் அனைவரும் பார்த்து விட்டனர்.,.. இன்னும் பார்க்கின்றனர்..

Wednesday, October 6, 2010

எந்திரன் , இன்னொரு ராவணனா- பரபரப்பான அலசல்

எந்திரன் படம் பார்க்கும்போது , சக்தி வாய்ந்த எந்திரன் தமிழ் பண்பாட்டை கட்டி காப்பது ஆச்சர்யம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை உணர முடிகிறது .. ராவணனுக்கும் எந்திரனுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு ..அதே போல இந்த படத்துக்கும் ராமாயணத்துக்கும் சில ஒறுமைகள் உண்டு..

1 கதா நாயகன் ராமன், சினிமாவின் சைண்டிஸ்ட் - இருவரும் அறிவாளிகள் .. ஆனால் சண்டைக்கு தயங்குபவர்கள்.. வேறு வழி இல்லாவிட்டால்தான் சண்டை..

2 கதா நாயகன் ஏக பத்தினி விரதன்.. செகண்ட் ஹிரோயின் கிடையாது...

3 உரிய ராஜ்ஜியத்தை, உரிய அங்கீகாரத்தை அடைய முடியாமல் சிலர் செய்யும் சூழ்ச்சியால் பாதிக்கபடுகிறார்கள்..

4 கதாநாயகி , இன்னொருவனால் கடத்தபடுவதை நாயகனால் தடுக்க முடியவில்லை...

5 நாயகனைவிட, கடத்துபவனை நாயகிக்கு பிடிக்கிறது..அனால் அவனை முழுதும் ஏற்க சில விஷயங்கள் தடையாக உள்ளன...

6 அதுவரை நல்லவனாக இருந்த எதிரி, நாயகியால் மனம் மாறி கெட்டவன் ஆகிறான்..

7 சர்வ வல்லமை படைத்த அவன், நாயகியை எந்த கஷ்டமும் இல்லாமல் காக்கிறான்.. அவள் சம்மதம்தான் முக்கியம் என நினைத்து தமிழ் பண்பாட்டை காக்கிறான்..

8 அதில் பத்து தலை..இதில் பல நூறு தலை...
9 அதி மோதிரம் அடையாள சின்னம்... இதில் ரத்தம் அடையாள சின்னம்...
10 இந்த கதையை ராவணன் என்ற பெயரில் எடுத்த போது பிளாப்... எந்திரன் என்ற பெயரில் சூப்பர் ஹிட்

Sunday, October 3, 2010

எந்திரன் கன்னட சூப்பர் ஸ்டார் பட்த்தின் காப்பியா? – உபேந்திரா பதில்


ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உண்டு என்பது விதி ( தலை விதி அல்ல , இயற்பியல் விதி) . எந்திரன் படம் பரவலான வரவேற்பு பெற்று வருவது ஒரு புறம் என்றால் அதே அளவுக்கு அவதூறு பிரச்சாரத்தையும் சந்தித்து வருகிறது..
இந்தியா வல்லரசு ஆவதை படம் தடுக்கிறது, ரசிகர்கள் ரஜினியை விரும்பவில்லை, ரசிகர்கள் அளவுக்க அதிகமாக ரஜினியை நேசிப்பது தவறு என்றெல்லாம் கன்னா பின்னா என வாய்க்கு வந்த்தை பேசுகின்றனர்.
அதில் ஒரு பகுதியாக , எந்திரன் படம் கன்னட படம் ஒன்றின் காப்பி என ஒரு பிரச்சாரத்தை தொடங்கினர்.
கன்னட சூப்பர் ஸ்டார் உபேந்திராவின் படம் ஹாலிவுட்.. பரபரப்பை ஏற்படுத்திய படம் இது.. இதைதான் எந்திரன் என எடுத்து விட்டார்கள் என ஒரு அவதூறு கிளம்பியது..
இது குறித்து உபேந்திராவிடம் கேட்கப்பட்ட்து..
அவர் கூறுகையில் “ இப்படி சொல்வது முற்றிலும் தவறானது. கேலிக்குரியது..
என் பட்த்தை நான் எடுக்க ஆரம்பிக்கு முன்பே ஷங்கர் இந்த கதையை உருவாக்கி விட்டர். பத்து ஆண்டுகளாக இதை பற்றி பேசி வருகிறார்.
அதன் பின் தான் , ஹாலிவுட் பட கதையை நான் உருவாக்கினேன். இதுவும் ரோபோவை அடிப்படையான கதை என்பதால் ஷங்கரிடம் இது குறித்து பேசினேன்.. இரண்டும் ஒரே கதையாக் இருந்து விட்டால் பிரச்சினையாகி விடுமே என்ற கவலை எனக்கு..
என் கவலையை புரிந்து கொண்ட ஷங்கர், இரண்டும் வேறு வேறு கதை. கவலைப்படாமல் உங்கள் பட்த்தை ஆரம்பியுங்கள் என உற்சாகபடுதினார். பிறகுதான் என் படம் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆனது.
எந்திரன் படம் பார்த்தேன் சூப்பராக இருக்கிறது. ரஜினி ரஜினி தான்
"என்றார்.
.
பின்குறிப்பு : எந்திரன் பட்த்துக்கும் என் பட்த்துக்கும் சம்பந்தம் இல்லை.. ஆனால் ஒரு ஆங்கில பட்த்துக்கும் , என் பட்துக்கும் சம்பந்தம் இருக்கிறது என பேட்டி முடிவில் நகைசுவையாக குறிப்பிட்டார் உப்பி...

Saturday, October 2, 2010

எந்திரன் காட்சிகளும் ரசிகர்களின் உற்சாகமும்- ஸ்பெஷல் ரிப்போர்ட் ( வீடியோவுடன் )

ரஜினி பட்த்திற்கு செல்வது பட்த்தை ரசிப்பதற்கு மட்டும் அல்ல.. திரையரங்கின் விழாக்கால கோலாகலத்தில் பங்கேற்க வேண்டும் எனப்தற்காகவும்தான்..

ரஜ்னி பட்த்தை சி டி யில் பார்த்தால் வேலைக்கு ஆகாது.. திரைஅரங்கில் பார்த்தால்தான் திருப்தி....

ஆசிரியர்கள், டாக்டர்கள், எஞ்சினிய்ரகள், மென்பொருள் துறையினர், ஏழைகள், பணக்கார்ர்கள், தொழிலாளிகள் என அனைவரும் , பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்களும் கூட குழந்தைகள் போல மாறி கொண்டாட்டம் நட்த்துவது ரஜினி பட்த்தில் மட்டுமே பார்க்க முடியும்..

பள்ளிக்காலத்தில் ஒரு முறை ரஜினி படம் சென்றிருந்தேன்.. படம் ஆரம்பிக்கும் முன் விசில் அடித்து, படம் சீக்கிரம் போட சொல்லி ரகளை செய்து கொண்டு இருந்தோம்..

திடீரென அதிர்ச்சி... கண்டிப்புக்கு பேர் போன தமிழ் ஆசிரியர் உள்ளே நுழைந்தார்.. அட ஆண்டவா.. இவர் அருகில் இருந்தால் ஜாலியாக இருக்க முடியாதே என நினைத்த படி நைசாக அவருக்கு பின் வரிசைக்கு மாறினோம் . அங்கு இருந்தவர்களை முன் சீட்டுக்கு மாற்றினோம் ( அந்த திரை அரங்கில் சீட் எண் இல்லை.. ஃபர்ஸ்ட் கம், ஃபர்ஸ்ட் சர்வ் பேசிஸ் தான் )

படம் ஆரம்பித்த்தும் ரகளையை தொடங்கினோம்.. ஓரிரு முறை அவர் திரும்பி பார்ப்பது போல தோன்றியது..ஆனாலும் எங்கள் சேட்டை நிற்கவில்லை.

திடீரென பார்த்தால், எங்களை விட அவர் அருமையாக விசில் , கைதட்டல் என அமர்க்களப்படுதிக்கொண்டு இருந்தார்...

அவருக்கு விசில் அடிக்க தெரியும் என்பதே ஆச்சர்யம்.. அதுவும் படம் எல்லாம் பார்ப்பர் என்பது மகா ஆச்சர்யம்..

அன்று இருந்த அதே உற்சாகம் இன்றும் ரஜினி படம் பார்க்கும் போது தொடர்கிரது..

எந்திரன் பட்த்தில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது..

தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்தை ளை படம் பிடித்தேன்..

ஆனால் யோசித்து பார்த்தால், சிலர் அந்த படம் வெளிவருவதை விரும்ப மாட்டார்கள் என தோன்றியது..

எனவே ரசிகர்களின் உற்சாகத்தின் சில காட்சிகள் மட்டும் இதோ உங்கள் பார்வைக்கு...பட்த்தை திரையரங்கில் பார்த்தால்தான் இது போல முழுமையாக எஞ்சாய் செய்ய முடியும்.. சி டி யில் பார்க்க வேண்டாம் என கேட்டு கொள்கிறென்


 

 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா