Showing posts with label சவால் சிறுகதை. Show all posts
Showing posts with label சவால் சிறுகதை. Show all posts

Thursday, November 17, 2011

கதைக்கு பின் இருக்கும் கதை- சிறுகதை போட்டி அனுபவங்கள்

ஒரு மிகப்பெரிய வேலையை , சற்றும் பொறுப்பன்றி செய்யலாம். ஒரு சாதாரண் வேலையை  மிக கவனத்துடனும் , கலை நயத்துடனும் செய்யலாம்.  ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய எதிர் வினை உண்டு. கடந்த வாரங்களில் எனக்கு கிடைத்த நல்ல அனுபவங்கள் , மகிழ்ச்சியான நிகழ்வுகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

எனக்கெல்லாம் தமிழ் எழுதவே வாய்ப்பில்லாமல் இருந்தது.  தமிழ் மறந்து விடுமோ என்று கூட பயமாக இருந்தது. என் தமிழ் ஆர்வத்துக்கு உயிர் கொடுத்தது வலைப்பூவும் அதனால் கிடைத்த நண்பர்களும்தான்.எழுத்தில் தவறு ஏற்பட்டால் உரிமையுடன் போன் செய்து அதை தட்டி கேட்கும் நண்பர்களை எல்லாம் நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும். இத்தனை நல்லவர்களை எல்லாம் வலைப்பூ இல்லாமல் இருந்தால், தெரியாமலேயே போய் இருக்கும்.

எனவேதான் வலைப்பூ சம்பந்தப்பட்ட செயல்களில் ஆர்வமாக கலந்து கொள்வதை என் கடமையாக நினைத்து வருகிறேன்.

ஆதி மற்றும் பரிசல் ஆகியோர் சிறுகதைப்போட்டி அறிவித்தபோது, மகிழ்ச்சியாக இருந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க தொண்டு என்றே சொல்ல வேண்டும், ஒரு பத்திரிக்கை போட்டி போல நேர்த்தியாக  நடத்தக்கூடியவர்கள் அவர்கள்.

 இம்முறை வழக்கமான துப்ப்றியும் கதை, கற்பனை கதை எல்லாம் எழுதாமல் யதார்த்தவாத பாணியில் ஒரு முயற்சி செய்ய நினைத்தேன்.

ஆனாலும் ஜஸ்ட் ஒரு  ஜாலிக்காக  பாப்பா போட்ட தாப்பா !!!! ( சவால் சிறுகதை-2011)  கதை எழுதினேன்.
கத்தியின்றி ரத்தமின்றி ( சவால் சிறுகதை 2011 ) க்தையில் ஆரம்ப வரிகள் இப்படி ஜாலியான மூடில் எழுதியவைதான்.

ஆனால் அடுத்த கதையை இப்படி கற்பனையாக எழுத விரும்பவில்லை. அன்றாட வாழ்வில்  நாம் காணும்  விஷ்யங்களை கூர்ந்து கவனித்தால் ,  நம்மைப்பற்றியே எத்தனை விஷ்யங்கள் தெரிகின்றன !!


போலீஸ்  லஞ்சம் வாங்குகிறார்கள் என்போம்.  ஆனால் நாம் சாலை விதிகளை மதிப்பதில்லை. சாலை விதியை  மீறுவதை பெருமையாக நினைபோம். அதிகாரிகள் பொறுப்பின்மையால் சில உயிர்கள் பலியாவதை உருக்கமாக மற்றவர்களிடம் சொல்வோம். ஆனால் நாம் பொறுப்பில்லாமல் , பீச்சில் பீர் அருந்தி விட்டு, பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு , பெருமையாக இண்டர்னெட்டில் போட்டோக்களை போட்டு கொள்வோம்..


இது போன்ற எண்ணற்ற விஷ்யங்களை கூர்ந்து கவனித்த போது அதிர்ச்சியாக இருந்தது. சில அதிர்ச்சியூட்டும் படங்களை நானே நேரடியாக எடுத்தேன்.

சில அதிர்ச்சியூட்டும் விளையாட்டுத்தனமான சம்பவங்களை நானே உருவாக்க்கினேன் . அதை எல்லாம் வெளியிட்டு இருந்தால் செம ரகளை ஆக இருந்து இருக்கும். படிப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைத்து இருக்கும்.


அப்போதுதான் ஒரு திருப்பு முனை. அலுவலக் சக ஊழியர் ஒருவருடன் காரில் சில இடங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அவருடன் எனக்கு பெரிய பழ்க்கம் இல்லை. அலுவல் ரீதியான பயணம்.

பயணத்தின் போது ஆங்காங்கு கண்ட வித்தியாசமான சம்பவங்களை ப்டம் எடுத்து வந்தேன்.

அவர் என்னை ஆச்சர்யமாக கவனித்தார். நான் ஒரு முன்னாள் பத்திரிக்கையாளன் என்பதால் , ஏதோ பத்திரிக்கைக்காக எடுக்கிறேன் என நினைத்தார்.

 நம் மக்களின் ஒழுங்கின்மை குறித்து அவரிடம் பேசினேன். சிறு நீர் கழிக்காதே என்ற போர்டில் சிறு நீர் கழிப்பது , குப்பை கொட்டாதே என்ற இடத்தில் குப்பை கொட்டுவது போன்றவற்றை சுட்டி காட்டினேன்.

அவர் அமைதியாக , மக்களையே குற்றம் சாட்டுவது தவறு என்றார். சிறு நீர் கழிக்க வசதியான இடம் மக்களுக்கு அமைத்து கொடுக்காமல், பொது இடத்தில் சிறுனீர் கழிக்கிறார்கள் என சொல்வது தவறு என்றார்.  நிறைய பேசினார்.

இந்த ஆண்டு எனக்கு அளித்த பரிசு அவர் நட்பு என நினைக்கிறேன்.

பெரியவர்களின் தவறுகளை விட்டுவிட்டு, எளியவர்களின் தவறை சுட்டிக்காட்டி வெற்றி பெற்ற சில திரைப்படங்களை சுட்டி காட்டினார்.

இத்தனையும் அவர் , என்னை ஒரு பத்திரிக்கையாளனாக நினைத்தே பேசினார்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் ஏற்கவில்லை. ஆனாலும், எளிய மனிதர்களின் தவறுகளை சுட்டி காட்ட விரும்பவில்லை.

எனவே நான் கஷ்டப்பட்டு எடுத்து சில முக்கிய படங்களை எல்லாம் அழித்தேன். ( கதையில் இருக்கும் படங்கள் நான் எடுத்தவை அல்ல. நெட்டில் இருந்து எடுக்கப்பட்டவை )

புத்தர் சிரிக்கிறார் ( சவால் சிறுகதை 2011 ) என்ற கதை வேறு மாதிரி வந்திருக்க வேண்டியது,

ஆனாலும் சும்மா பிரசுரித்து வைத்தேன்.

அணுசக்திக்கு எதிரான பிரச்சார கதை என நடுவர்கள் கருதி விட்டார்கள். உண்மையில் அணு சக்தி விவகாரம்  அதில் கொஞ்சம்தான். ஆனால் அந்த க்தை வடிவம் அவர்களை அப்படி நினைக்க வைத்து விட்டது.

க்தையில் நல்ல கதை, கெட்ட கதை என்று இல்லை. இதே சூழ்னிலைக்கு முழு நீள போர்னோ கதை கூட எழுதி வைத்து இருந்தேன்.

ஆனாலும், புத்தர் சிரிக்கிறார் கதை தோல்வி அடைந்து பாப்பா போட்ட தாப்பா  கதை வென்று இருந்தால் எனக்கு க்‌ஷ்டமாக இருந்து இருக்கும். இரண்டுமே வெற்றி பெறாதது மகிழ்ச்சி.

ஒரு விளையாட்டைகூட சின்சியராக செய்தால், கண்டிப்பாக அதற்கு பலன் உண்டு எனபது எனக்கு கிடைத்த புது நட்பின் மூலம் உணர முடிந்தது.

அதே நேரத்தில் , நான் கூர்ந்து கவனித்த பல விஷ்யங்கள் என் எண்ணப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.

   நேர்மையான தோல்வியில் கிடைக்கும் மகிழ்ச்சியை உணர்வது இதுவே முதல் முறை என்ற வகையில், இந்த விளையாட்டு என்னை பொறுத்த வரை பெஸ்ட் கேம்.





Friday, October 15, 2010

சிரிக்கும் பெண்ணை நம்பாதே ( சவால் சிறுகதை )

 

சட்டசபையில் இருந்த அனைவரும் நம்ப முடியாமல் திகைத்தனர்.. நடக்கவே முடியாத ஒன்று நடந்து விட்ட்து..

ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்து அரசு தப்பிக்கும் என்று ஒரு குழந்தை கூட நம்பி இருக்காது..

220 பேர் கொண்ட சட்ட சபையில் , 150 எம் எல் ஏக்களுடன் மெஜாரிட்டியாக இருந்த அரசு , 60 பேர் பிரிந்து சென்றதால் சிக்கலுக்கு உள்ளானது..

அவர்களை கட்சி தாவல் தடை சட்டம் எதுவும் செய்ய முடியாது.. கட்சி உறுப்பினரில் மூன்றில் ஒரு பங்கினர் பிரிந்து சென்றால் அது கட்சி பிளவாக கருதப்ப்படும்.. கட்சி தாவல் அல்ல...

பேரம் பேச வழியில்லாமல் அனைவரும் வெளி நாடு சென்று விட்டு வாக்களிக்கும் தினம் நேரடியாக சட்டசபைக்கு வந்தனர்,,,

எனவே அரசு கண்டிப்பாக கவிழும் என டி வி சானலகள் முடிவு செய்து மாற்று அரசு குறித்து ஊகங்கள் வெளியிட ஆரம்பித்தன..

விவாதம் தொடங்கியபோது, எதிர்கட்சியை விட காட்டமாக பேசினார்கள் கட்சி மாறிகள்.

முதல்வர் தவறிழைக்கிறார்.. பதவி விலகுதல் அவர் செய்யும் ஒரே நல்ல காரியமாக இருக்கும் என்றனர்..

கடைசியில் முதல்வர் பேசினார்..

எப்போதும் அமைதியாக இருக்கும் அவர் , கைகளை ஆட்டியும்., மேஜையை குத்தியும் ஆவேசமாக பேசினார்..

மக்கள் என்றும் என் பக்கம் என் சூளுரைத்தார்..

கடைசியில் வாக்கெடுப்பு...

குரல் வாகெடுப்பு அல்ல.. அனைவருக்கும் எலெக்ட்ரானிக் மெஷினில் வாக்களிக்கலாம். முடிவு உடனே தெரியும்..

எதிர்கட்சியினர் பட்டாசு வெடிக்க ஆயத்தமானார்கள்..

ஆளுங்கட்சியினருக்கு சுரத்தே இல்லை... துரோகிகளை திட்டி அறிக்கை விட ஆயத்தமானார்கள்..

முடிவு திரையில் வந்த்து..

சபா நாயகரே திகைத்து விட்டார்...

அரசுக்கு ஆதரவு – 150

எதிர்ப்பு - 70

நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி..

அரசு பிழைத்தது...

யாராலும் நம்ப முடியவில்லை... முதல்வர் மட்டும் அமைதியாக இருந்தார்..

********************************************************************************8

“ உன் புன்னகை, பொன் நகையாக ஒளி வீசுதே.. ப்ளீஸ்.. ஒண்ணே ஒண்ணு இச்சு கொடேன் “ வழக்கமான காதலன் போல கெஞ்சினான் சிவா..

” எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் “ பழைய கால காதலிகள் போல பிகு செய்தாள் காமினி...

” இந்த சட்டசபை மேட்டரை முடிச்சுட்டு , உடனே உங்க வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்க போறேன் “

“ ஆமாம்பா.. இந்த மேட்டர்ல என்ன மாயாஜாலம் நடந்த்து,, ஒன்னும் புரியல.. இதை மட்டும் கண்டு பிடிச்சா, தேசிய அளவுல பரபரப்பு ஏற்படும் . ஆனா நீ வேலை வேலைனு அலைய்றது எனக்கு சுத்தமா பிடிக்கல“

சிவா ஒன்றும் பேசாமல் சட்டசபை விவாதங்களை டிவிடி யில் பார்த்துகொண்டிருந்தான்..

வழக்கத்துக்கு மாறாக முதல்வர் ஆவேசமாக பேசுவது கவனத்தை கவர்ந்த்து,,,

கையை ஆட்டி பேசுவது அதீதமான நாடக பாணியில் இருந்த்து..

அவர் பேச பேச , அதிருப்தி கோஷ்டி தலைவரின் முகம் மாறுவது இன்னும் ஆச்சர்யம் அளித்த்து.. முதல்வரின் பேச்ச்சை கேட்டு மனம் திருந்துகிறார் என நினக்க அவன் அப்பாவி அல்ல..

மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தான்.

திடீரென மின்னல் வெட்டியது,..

“ காட்..இப்படியும் நடக்குமா ? “ அதிர்ந்தான்..

“ காமினி.. ஆள் சிக்கிட்டார்” கூச்சலிட்டான்..

“ என்ன ஆச்சு ? “

“ முதல்வரின் கை , அதிருப்தி தலைவரை நோக்கி சைகை செய்வதை பார்த்தாயா ? “

காமினியும் கவனித்து விட்டாள்..” அவர் கையில் அணிந்திருக்கும் உலகிலேயே காஸ்ட்லியான வைர மோதிரத்தையும் கவனித்தேன் “

******************************************************************************

அதன் பின் அடுத்த நடவடிக்கைகளை திட்டமிட்வது மளமள வென நடந்த்து..

” உலகிலேயே புகழ் பெற்ற வைரம் மயிலாசனத்தில் இருந்து துண்டாடப்பட்டவைதான்.. அது முகலாயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்து விடைபெற்றது.. அதன் பின் பல கை மாறி அது எங்கிருக்கிறது என்பது தெரியாமல் இருந்த்து... சிறிய துண்டு கிடைத்தால் கூட கோடிக்கணக்கில், நம்பவே முடியாத தொகைக்கு விலை போகும்..

இந்த நிலையில்தான் வெளினாட்டு அதிபர் ஒருவர் பரிசாக முதல்வருக்கு அதை அளித்தார்,,, ஆனால் அது அரசுக்குதான் சொந்தம்.. முதல்வர் என்ற முறையில் மட்டும் அதை அவர் பயன்படித்தி கொள்ளலாம்.. பதவி முடிந்த்தும் அரசிடம் ஒப்படைதுவிட்டு செல்ல வேண்டியதுதான்..

ஆனால் இதை ஆட்டையை போடுவதில்தான் முதல்வருக்கும் , உள்துறை அமைச்சருக்கும் பிரச்சினை ஏற்பட்டு ஆட்சி கவிழ்ப்பில் முடிய இருந்த்து..

ஆனால் கடைசி நேரத்தில் முதல்வர் சுதாரித்துகொண்டார்..

சட்டசபை உரையில் பேசும்போது ‘ என்னை நம்பிய மக்களை கைவிட மாட்டேன்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் “ என சாடையாக பேசி, ஆக்‌ஷனையும் காட்டி காரியத்தை நிறைவேற்றி கொண்டார்..

இப்போது நாம் செய்ய வேண்டியது, அந்த வைரம் அரசு கருவூலத்தில் இல்லை என நிரூபிப்பதுதான், அந்த வைரம் உள்துறை அமைச்சர் வசம் இருந்தால் அதை திருடினாலும் தவறில்லை...

ஆளுனர் பரந்தாமன் நேர்மையானவர்.. அவரிடம் இந்த ஆதாரத்தை காட்டினால் போதும் .. அவருக்கு இந்த சந்தேகம் உண்டு .. ஆனால் ஆதாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார் ”

மூச்சு விடாமல் பேசி முடித்தான் சிவா..

ஒரு நிருபரை காதலித்த்து தவறோ என நினைக்க தொடங்கினாள் காமினி..

*************************************************************************************

” ஆமா காமினி... நான் உனக்காக எதுவும் செய்ய தயாரா இருக்கேன்.. ஆனால் நீ ஒரு நிருபனை காதலிச்ச,, அவன் உன்னை விட வேலையைத்தான் முக்கியமா நினைக்கிறான்.. இப்பவும் ஒன்னும் கெட்டு போகல.. என் இதய வாசல் உனக்காக திறந்துதான் இருக்கு “

கல்லூரி நண்பன் விமல் உருகி பேசுவதை உணர்ச்சி எதையும் காட்டாமல் கவனித்தாள் காமினி...

“!புதிய மனிதா ..பூமிக்கு வா “ செல்போன் கொஞ்சியது.. சிவாதான்,,,

“ காமினி... முக்கிய்மான விஷ்யம்.. இப்பத்தான் தெரிய வந்த்து.. உள்துறை அமைச்சரிடம் இருந்து வைரம் திருடு போயிருச்சு.. சிலரை சந்தேகப்பட்றாங்க.. ஆனால் திருடனுக்கு தேள் கொட்டுன கேஸ்..

விஷ்யத்தை வெளியே சொல்லாம போலிஸ் தேடுது.. அவங்களுக்கு முன்னாடி நாம முந்திக்கணும்.. ஏதாவது துப்பு கிடைத்தா சொல்லு..

அரசு சொத்தான வைரம் தொலைந்த்தை , ரிக்கார்டில் காட்டாத்து பெரிய குற்றம்.. இதை கிண்டினா பல மேட்டர் வெளியே வரும் “

பதிலை எதிர்பாராமல் இணைப்பை துண்டித்தான் சிவா..

” என்ன டியர்,,,எனி பிராப்ளம் “ என விமல் கேட்ட்தும்தான் , அவனும் உரையாடலை கேட்டு இருப்பான் என்பது அவளுக்கு புரிந்த்து..பரவாயில்லை.. பாதகம் இல்லை... அவன் உதவ கூடும்..

சுருக்க்மாக சொன்னாள்..

அவனுக்கு பல தொடர்புகள் உண்டு.. எனவே அவனுக்கு இது ஆச்சர்யமாக இல்லை..

மாறாக அவன் சொன்ன தகவல், காமினிக்கு ஆச்சர்யம் அளித்த்து.. யோசிக்க தொடங்கினாள்..

****************************************************************

” ஹலோ ..இன்ஸ்பெக்டர்... நான் காமினி பேசறேன்.. அமைச்சரோட பி ஏ தான் வைரம் திருடி இருக்கான்.. இதை வைத்து பிளாக் மெயில் அரசியல் செய்வது அவன் திட்டம்... சீக்கிரம் ஆக்‌ஷன் எடுங்க.. உண்மை தெரிஞ்ச எனக்கும் ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்க “

அவசரமாக பேசி முடிக்கவும், சிவா அவள் அறைக்கு வரவும் சரியாக இருந்த்து..

“ சபாஷ்... சீறும் பாம்பை நம்பு..சிரிக்கும் பெண்னை நம்பாதேனு சொன்னது சரிதான்... உனக்கு தெரிஞ்ச விஷய்த்தை எனக்கு சொல்லாம போலிசுக்கு சொல்றியா..துரோகி,,”

அவள் விளக்கம் அளிப்பாள் என நம்பியதற்கு மாறாக, அவள் புயல் போல வெளியே ஓடினாள்...சுதாரிப்பதற்குள் , ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து விட்டாள்.

“ ஏய் .. நில்லு “ ஓடினான் சிவா

**************************************************************************

சென்னையின் முக்கியமான இட்த்தில் இருக்கும் மருத்துவமனை...

” அய்யோ..அவள் இப்ப்டி பேய் போல வண்டியை கிளப்பும்போதே நினைத்தேன்..ஏதாவது ஆகும் என்று... விபத்தில் சிக்கி விட்டாளாமே... என் வண்டி பஞ்சர் ஆனதால் தொடர முடியவில்லை “ புலம்பினான் சிவா..

“ விமல்னு ஒருத்தர் தான் வந்து அவங்களை அட்மிட் செஞ்சாரு,,, இப்ப பரவாயில்லை சார் “ நர்ஸ் சொல்ல “ விமல்..ம்ம்ம்.. அவன் தான் அவளின் மன மாற்றத்துக்கு காரணமா ..? “ பல்லை கடித்தான் சிவா..

“ மிஸ் காமினி.. உங்க பல் டேமேஜ் ஆயிடுச்சு .. வேற ஒண்ணும் பெரிய பிராப்ளம் இல்ல,,, “

டாக்டர் சொன்னார்.

“அமைச்சரோட கார் டிரைவர் எப்படி இருக்கார் ? “ சைகையில் காமினி கேட்டாள்..

” சாரி,,காப்பாத்த முடியல.. ஒகே காமினி... நான் கிளம்புறேன் “ டாக்டர் கிளம்பினார்..

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

*********************************************************************

“ என்ன ..காமினியை காணோமா... “ அதிர்ந்தான் சிவா..

” காதலனை பார்க்க போய் இருப்பா” விமல் வீட்டை நோக்கி சிவாவின் கார் சீறியது..

வீட்டில் விமல் இல்லை.. ஆனால்....

... காமினி இருந்தாள்... வாயில் பெரிய கட்டு போடப்பட்டு இருந்த்து..

பல்லை கடித்தான் சிவா..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.”

”ப்ளீஸ்.. நான் சொல்றதை கேளுங்க” அவள் கண்கள் கெஞ்சின..

“ சாவுடீ நாயே” அவன் விசையை அழுத்தும் முன், போலிஸ் நுழைந்தது..

சட் என துப்பாக்கியை மறைத்தான் சிவா..

“ மேடம்.. உங்க உயிரை பணயம் வைத்து துப்பு கொடுத்தீங்க... நன்றி... ஆனால் அந்த பி ஏ வைரம் திருடல.. சும்மா நகை, பணம்னு திருடி இருக்கான்.. எனிவே அவனை கைது செஞ்சுட்டோம்..

வைரம் பத்தி துப்பு கிடைத்தாலும் சொல்லுங்க.. யாருக்கும் பயப்படாதீங்க.. உங்க பாதுகாப்புக்கு போலிஸ் இருக்கும் “

” அரசுக்கு எதிராக சதி செய்வதை தடுக்குமாறு கவர்னரிடம் மனு கொடுக்கனும் .. அவர் அப்பாயின்மெண்ட் கூட இருக்கு “ காமினி எழுது காட்டினாள்..

“ இவங்களை போலிஸ் பாதுகாப்போடு அழைத்து போங்க “: உத்தரவு வர, போலீஸ் ஜீப் கவர்னர் மாளிகை நோக்கி விரைந்த்து.. காமினியுடன் சிவாவும்...

ஆளுனர் பரந்தாமன் அன்புடன் வரவேற்றார்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

“ அவங்க பாதுகாப்போட்த்தான் வர்றேன்” காமினி வாய்திறந்து பேச ஆச்சரியமாக பார்த்தான் சிவா,,

“ என்ன அப்படி பார்க்கறீங்க,,, என் நண்பன் விமலும் வைரத்தை கைப்பற்ற முயன்று இருக்கான்,, உங்களை விட பெரிய ஆள் ஆகணும்ங்ற வெறி..

அமைச்சரோட கார் டிரைவர் மூலம் திருடி இருக்காங்க.. ஒரு ஆக்சிடண்ட்ல அவன் மாட்டி உயிருக்கு போராடிக்கிட்டு இருந்தான்..அதே ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி , டாக்டர் உதவியோட டிரைவரிடம் இருந்த வைரம் என் கைக்கு வந்துடுச்சு..

போலிஸ் கவனத்தை திசை திருப்ப, துப்பு கொடுக்குற மாதிரி பி ஏ வை போட்டு கொடுத்தேன்,,

விமலோ , நீங்களோ இன்வால்வ் ஆக முடியாது,, ஏன்னா , போலிஸ் பார்வை உங்க மேலையும் இருக்கு. சோ, நானே இதை செஞ்சு முடிச்சேன் “

அவள் புன்னகைக்க, அவள் புன்னகை பொன் நகையாக இல்லாமல், வைர நகையாக , ஜொலித்தது.. வைர பல்லை கழட்டி ஆளுனரிடம் கொடுத்தாள் காமினி...

என் உயிர் நீ அல்லவா !!? ( சவால் சிறுகதை )

 

"ஸ்டவ் வெடிச்சு கொல்றதேல்லாம் அந்த காலம்.. கார் வெடிச்சு கொல்றதுதான் இந்த காலம.. இன்னும் சில நொடிகள்ள கார் வெடிச்சு சாக போற "

அதிர்ந்தாள் ஷாலினி..

" அவசரப்படாதீங்க.. நீங்க கேட்ட வரதட்சணை பணமும், குடும்ப சொத்தான வைரத்தையும், எடுத்துட்டுதான் நானும் என் அக்கா காமினியும் வந்துகிட்டு இருக்கோம் "

" அடி போடி,... ஒவ்வொரு முறையும் உன்னை மிரட்டி காசு வாங்க போரடிச்சு போச்சு... உன்னை கொன்னுட்டு விபத்தா காட்டிட்டு, இன்சூரன்ஸ் பணத்தோட செட்டில் ஆக போறேன் "

போன் கட் ஆனது..

படுபாவி... என்னுடன் சேர்த்து காமினியும் இறந்து விட கூடாது..

தூங்கி கொண்டு இருந்த காமினியை இழுத்து கொண்டு வெளியே பாயவும் , கார் வெடிக்கவும் சரியாக இருந்தது

***************************************************************************

" ஆ, நான் எங்கு இருக்கேன் " முனகினாள் காமினி..

" கார் விபத்து மேடம்.. உங்களை காப்பாத்தி சிகிச்சை தந்து வர்றோம்.. மருத்துவ மனை ல   இருகீங்க " நர்ஸ் சொன்னாள்..

" ஷாலினி ? "

" சாரி மேடம்.. அவுங்களை காப்பாத்த முடியல..சரி மேடம்.. பேசாம இருங்க.. டாகடர் வர்றாரு "

சொல்லி விட்டு நர்ஸ் கிளம்பினாள்..

டாகடர் அருகே வந்தார்.. ரிப்போர்ட்டுகளை சரி பார்த்து விட்டு, பரிசோதனைகளை செய்தார்..

ரிப்போர்ட் எழுதி விட்டு கிளம்பினார்...

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

**************************************************************************

'' பெரியப்பா...... அந்த பாவிதான் என் அக்காவை கொன்றவன்..   அவனை சட்டம் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுங்க " மூச்சிரைக்க பேசிய காமினியை அன்புடன் பார்த்தார் அவளின் பெரியப்பா பரந்தாமன்..

" அது கஷ்டம்மா.. அவன் அதை எதிரிகளின் சதி மாதிரி காமிச்சுட்டான்.. அவன் சமுதாயத்துல பெரிய ஆள்.. அவனுக்கு பல எதிரிகள் இருப்பாங்க...  அதுல ஒருத்தன்தான் இதை செஞ்சு இருப்பன்னு கதையை முடிச்சுடுவாங்க "

" பெரியப்பா,, ஊர்ல இருக்குற பெரிய லாயர்ல ஒருவர் நீங்க.. எப்படியாச்சும் அவனை மடக்குங்க "

" ஒரே வழி இருக்குமா...  அவ எடுத்துட்டு போன வைரத்தை கோர்ட்ல காமிச்சு, வைரத்துக்காக அவன் சித்திரவதை செய்ததை நிருபிக்கலாம்..  இந்நேரம் அவன் விபத்தான காரை முற்றுகை இட்டு இருப்பான்..  போலீசை மீறி அவன் எடுக்க முடியாது...  அந்த கார் போலிஸ் கட்டுப்பாட்டில் இருக்கு .. தவிர, வைரத்தின் அதீத சக்தியும் அதுக்கு காவல இருக்கும்.."

" அதீத சக்தியா ..என்ன சொல்றீங்க? "

" ஆமா.. அந்த வைரத்தை ஒருவர் எடுக்கணும்னா ஒரு நிபந்தனை இருக்கு.. அந்த நிபந்தனையை மீறி எடுத்தா , உரிய இடம் கொண்டு போய் சேர்க்க முடியாது...  இதை ஷாலினி மீறியதால்தான் அந்த வைரம் உரிய இடம் போகாம பாதில இப்படி ஆகிடுச்சுனு நினைக்றேன் '

" என்ன நிபந்தனை ? ஒன்னும் புரியல ? "

" வைரம் என்பது சாதாரணம் அல்ல.. அமானுஷ்ய தன்மை கொண்டது..  அதனால்தான் பலர் அதை வைத்து இருப்பது இல்லை.. இந்த வைரத்தின் பாதுகாப்பு கருதி, சில மந்திரம்   மூலம் நிபந்தனை ஒரு சக்தி வளையமா அதை சுற்றி போடப்பட்டு இருக்கு,,, "

அந்த நிபந்தனையை அவர் சொல்ல , அதிர்ந்தாள் காமினி... 

" இல்லை.. ஷாலினி இந்த நிபந்தனைக்கு உட்பட்டவ தான்...  அவளை தப்பா சொல்லாதீங்க...  நான் உடணே போயி , என்னை கல்யாணம் செஞ்சுக்க போற சிவாவை பார்த்து , அடுத்த நடவடிக்கை பத்தி பேசணும் "

*********************************

யாருமற்ற தனி இடம்...   பறவைகள்  சத்தம் மட்டும் லேசாக கேட்டு கொண்டு இருந்தது..

" இந்த காட்டுக்கு எதுக்கு கூட்டி வந்த ? ..என்ன உடம்பெல்லாம் காயம்...எதாவது விபத்தா  " கேட்டான் சிவா..

" ஆமா.. கார் விபத்து... அதுக்கு காரணமானவனை பழி வாங்கனும்...அதை பத்தி பேசத்தான் கூப்பிட்டேன் "

" என்ன பெரிய விபத்து..  லேசான காயத்துக்கு பழியா ? "

" காயம் மட்டும் இல்லை..  என் சிஸ்டர் ஷாலினி இறந்துட்டா .." கண்ணிருடன் சொன்னால் அவள்.

" ஷாலினி இறந்துடாளா.. ஐயோ..ஷாலினி......"

அவன் அலறுவதை குழப்பமாக பார்த்தாள் காமினி..ஷாலினிக்காக இப்படி ஏன் உருகுகிறான்?

" அடி பாவி,,, நானும் ஷாலினியும் , தாலி கட்டாத கணவன் மனைவியா வாழ்ந்தோம்... அவ மேல இருக்குற ஆசைலதான் , உன்னை கட்டிக்கவே சம்மதித்தேன் ..இப்படி ஆயிடுச்சே " அழுதான்..

பரந்தாமன் பெரியப்பா சொன்ன நிபந்தனை நினைவுக்கு வந்தது...

" சிவா,,,நீ இப்படி ஒரு அயோக்கியனா..,துரோகி,,இப்பவே இதை சொல்லி கல்யாணத்தை நிறுத்துறேன்.. உன் பேரை அசிங்க படுத்த போறேன்..ஷாலினி பேர் கெட்டாலும் பரவயில்லை..."

அவனை உதறி கிளம்பினால் காமினி..

'நில்லுடி ' உறுமினான் அவன்..

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

************************************************************

" ஷாலினிய இப்படி செஞ்சவனை சும்மா விட கூடாது..என்ன செலவாலும் பரவாயில்லை " கதறிய ஷாலினியின் அப்பாவை ஆதரவுடன் அணைத்து கொண்டார் பரந்தாமன்..

பார்த்து பார்த்து வளர்த்த பெண்....  அம்மா இல்லாத பெண்கள் என ஷாலினியையும் , காமினியையும் பார்த்து பார்த்து வளர்த்தானே என் தம்பி ..பரந்தாமனுக்கு கண்ணீர் பொங்கியது..

அந்த வைரம் வேண்டாம் என நான் சொல்லிப்பார்த்தேன்..

" பெரியப்பா.. பெரியப்பா...  " காமினி வேகமாக வந்தாள்..கையில் வைரம்...

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
"இதை வச்சு அந்த பாவியை ஜெயில்ல தள்ளிடறேன்... ஆமா, இதை சரியான இடத்துக்கு கொண்டு வரணும்னா நிபந்தனை இருக்கே.. யார் உனக்கு ஹெல்ப் செஞ்சா ? "

" நானேதான் எடுத்துட்டு வரேன் " அமைதியாக சொன்னால் காமினி..

" உளறாதே.. இதை பத்திரமா எடுத்து கொண்டு வர ரெண்டு பேரால்தான் முடியும்...  கொலை செய்யப்பட கன்னி பெண்ணின் ஆவி அல்லது கணவனுக்கு உண்மையா இருக்கிற பெண்...  உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல..சோ அந்த  நிபந்தனை உனக்கு பொருந்தாது... .. நீ ஆவியும் இல்லை... சோ இரண்டாம் நிபந்தனையும்  பொருந்தாது... உனக்கு யாரோ உதவி இருக்கணும் ..'

காமினி யோசித்தாள்.. 'சிவாவை காட்டி கொடுத்து ஷாலினியின் பெயரை கெடுக்க கூடாது ...தவிர, வேண்டும் என்றே சிவாவை கோப படுத்தியது , அவனை தூண்டியது நான்தானே '

" பெரியப்பா... எனக்கு கல்யாணம் ஆகல என்பது உண்மைதான்.. ஆனா நான் ஆவி இல்லைனு எப்படி முடிவு செஞ்சீங்க ? "

தன கண் முன் சிறிது சிறிதாக காற்றில் கரையும் காமினி யை திகிலுடன் பார்த்தார் பரந்தாமன்....

எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ? ( சவால் சிறுகதை )

 
               சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.
                     சரியாக அதே நேரம் , பேய் வேகத்தில் வந்த குடி தண்ணிர் லாரி, இவள் குதித்த்தை எதிர்பார்க்கவில்லை.. பிரேக் போட அவகாசம் இல்லாமல் , அவள் மேல் ஏறி இறங்க, அழகும் , திறமையும், ஆயிரம் கனவுகளும் கொண்ட காமினி சம்பவ இட்த்திலேயே உயிர் இழந்தாள்...
*******************************************************************************
             என்னடி டென்ஷனா இருக்க? மாலதி அக்கரையோடு விசாரித்தாள்..
காமினி கோபத்தோடு நிமிர்ந்தாள்...
“ எனக்குனு கல்யாணம், காதல் , என் வேலையில் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை என எல்லாம் இருக்கு... யாரோ ஒரு பதிவர் கதை போட்டியில் கலந்துக்க என்னை கொல்வதை நான் எப்படி ஏத்துக்க முடியும்..
இனி அவனோட கதையில் நான் ஒரு கதாபாத்திரமா இருக்க விரும்பல.. என் கதையை நானே எழுதிக்க போறேன்.. அந்த பதிவருக்கு என்ன கேரகடர்னு தீர்மானிப்பது இனி நான்.. நான் யாருனு அவனுக்கு காட்டுறேன் “

            இந்த கதையின் ஆசிரியனான நான் , என் நண்பன் கோபாலுடன் கவலையுடன் பேசி கொண்டு இருந்தேன்..
“கடந்த சில நாளா சம்பந்தமே இல்லாம பல பிரச்சினைகள்டா... என் பார்ட்னருக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருந்துச்சு,, வியாபாரம் நல்லபடியா போச்சு.. ஆனால் என்னவோ ஒரு கர்மா,அல்லது விதி குறுக்கிட்ட மாதிரி எனக்கும் அவனுக்கும் சண்டை... சண்டைக்கு நானோ அவனோ காரணமே இல்லை.. சண்டை வரனும்னு யாரோ தீர்மானிச்ச மாதிரி இருக்கு “ புலம்பினேன்..
அவன் பேச்சை மாற்ற விரும்பினான்,,
”கதை ஒண்ணு எழுதிகிட்டு இருந்தியே.. என்ன ஆச்சு?”
“ அது இன்னொரு சோகம்டா... எப்பவும் எழுத ஆரம்பிச்சா சீரா போகும்.. இப்ப காமினி எனும் அந்த கதாபாத்திரம் என் கட்டுப்பாடுக்குள் வரவே மறுக்குது.. அந்த பாத்திரம் உயிர் பெற்று அது இஷ்ட்த்துக்கு நடக்குற மாதிரி ஃபீலிங் . பேசாம அவள் காதலன் சிவாவை வைத்து அவள் கதைய முடிக்கலாம்னு பார்க்குறேன் “
*******************************************************
                 காமினி செல்போனில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்.. சிவா அவள் அறைக்குள் வந்த்தை அவள் கவனிக்கவில்லை...
” மே ஐ கம் இன் “ இறுகிய முகத்துடன் சிவா உள்ளே வந்தான்..
” வாங்க ..வாங்க,, கவனிக்கவே இல்லை”
“ எப்படி கவனிப்ப? எவனுடனோ கொஞ்சிக்கிட்டு இருந்தா எப்படி கவனம் இருக்கும்”
“ சிவா.. மைண்ட் யுவர் வோர்ட்ஸ் “
“ உனக்கு என்னடி மரியாதை.. தே*** நாயே “
“ சிவா...”
“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா..
எதிர்பாராத நேரத்தில் பின்னால் இருந்து ஒரு அடி விழ நிலை குலைந்தான் சிவா...
“ ராஸ்கல் ,, நீ இப்படி நடந்துக்கவேனு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதனால்தான் பாடி கார்ட் ரெடியா வச்சு இருந்தேன்... இனி என் மூஞ்சிலயே விழிக்காதே “
***********************************************************************************************
                    ” காமினி ,,, நீ ஓவரா போற... நீ நான் படைத்த ஒரு கேரகடர், அவ்வளவுதான்.. நீயா முடிவு எடுக்க்றது கூட பரவாயில்ல.. ஆனால் என் கதையை நீ எழுத முயற்சிப்பது சரி இல்லை... “
என்னை பாவமாக பார்த்தாள் காமினி..
“ உண்மையில் நாம் எல்லோருமே யாரோ ஒருவர் எழுதும் கதையில் கதாபாத்திரங்கள்தான்..இதில் நாம் சண்டை போடுவதில் அர்த்தம் இல்லை..
என்னை ஒரு அப்பாவி பொண்ணா உருவாக்கனும்னு நீ நினச்ச.. ஆனால், நமக்கு மேல ஒரு சக்தி , என்னை தைரியமிக்க ஒரு பெண்ணா உருவாக்கிடுச்சு..
இப்ப பேசாம என் கூட வந்து என்னோட அடுத்த அதிரடிய பாரு “
உறுதியாக சொன்னாள் ..
“ என்ன செய்ய போற? “
“ சாதாரண கரி பல ஆண்டுகள் கழித்து சில இயற்பியல் விதிகளுக்கு உட்பட்டு வைரமா மாறுது.. நம்ம விஞ்ஞானி பரந்தாமன் சார், அதே தரத்தோட செயற்கை முறைல வைரம் கண்டுபிடித்து அங்கீகாரத்துக்கு அலைஞ்சார்.. ஆனால் அரசு எந்திரம் அவரை நொறுக்கிடுச்சு.. அவருக்கு உரிய மரியாதை தரல... அந்த வைரமும் , அதை செய்யும் முறையும் அரசின் வசம்தான் இருக்கு.,.. அங்கு இருந்து பயன் இல்லை..
அதை எடுத்து வந்து உங்க கிட்ட கொடுக்குறேன்.. இதை வெளி நாட்டுக்கு வித்து அந்த காசுல நம்ம மக்களுக்கு சேவை செய்ங்கனு சொல்லி இருக்கேன் “
நான் உருவாக்கிய காமினி என்னை விட அதிகமாக சிந்திப்பதை ஆச்சர்யமாக பார்த்தேன்..
அவளை நான் உருவாக்கவில்லை... இருவரையும் உருவாக்கியது வேறு யாரோ என்ற உண்மை புரிய ஆரம்பித்த்து...
நான் என்பதும் பொய். வாழ்க்கை என்பதும் பொய்.. எல்லாம் அர்த்தம் மிக்கது.. ஆனால் அபத்தமானது என்பது புரிய தொடங்கியது..
நான் உயிருக்கு உயிராக பழகிய கீதா , ஏதோ ஒரு மொக்கை காரணம் சொல்லி பிரிந்தபோது , எல்லோரையும் வெறுத்தேன்.,.. பிரிவுக்கு உலகம்தான் காரணம்... காமினிதான் காரணம் என்றெல்லாம் புலம்பியது எவ்வளது முட்டாள்தனம் என்பது புரிந்த்து.. நடக்கும் நாடகத்தை சும்மா பார்ப்பதுதான் நம் வேலை..
எல்லை அற்ற நாடகத்தில் நாம் ஜஸ்ட் கேரகடர்கள்தான்..
**************************************************************************
                     பலத்த காவலில் இருந்த வைரத்தையும் , தயாரிப்பு ரகசியத்தையும் காமினி எடுத்து வந்த போது, அவளை கை எடுத்து கும்பிட தோன்றியது..
“யாதுமாகி நின்றாய்..காளி எங்கும் நீ நிறைந்தாய் “ பாடல் தோன்றியது..
பரந்தாமன் அலுவலகத்துக்கு , வைரத்தை ஒப்படைக்க நானும் சென்றேன்..
“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
” என் கடமையைத்தான் செய்தேன் .. தேசம் என்பது மக்கள்தான்.. எனவே நாட்டுக்குத்தான் என் ஆராய்ச்சி பயன்படனும்னு நினைக்காம வெளி நாட்டுல வித்து சம்பாதிங்க.. அதை வச்சு ஏழைகளுக்கு உதவுங்க “
பேசிகொண்டு இருந்து விட்டு திரும்பினோம்...
” காமினி.. உன் கிட்ட ஒண்ணு சொல்லனும் “ மெதுவாக ஆரம்பித்தேன்.
“ எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு .. போய்ட்டு வந்துறேன்” ஸ்கூட்டியை கிளப்பினாள்.
“ அதில் போகாதே “ தடுத்தேன்..
அதில் போனால் விபத்து ஏற்படும்.. அதில் சாவாள் என்பது என் கதை.. அப்படி நடக்க கூடாது.. காமினி சாக கூடாது..
“ சரி.. உங்க டிரைவரை அனுப்புங்க.. காரில் போறேன் ..போய்ட்டு வந்து நானும் ஒரு விஷ்யம் உங்க கிட்ட பேசணும் “ புன்னகையுடன் கிளம்பினாள்..
*******************************************************************8
                     சற்று நேரத்தில் போன்..
“ சார்.. உங்க கார் விபத்தில சிக்கிருச்சு.. ”
பதறினேன்.. கதையின் முடிவை நான் தான் மாற்றி விட்டேனே..அவள் சாக கூடாது..
” காமினிக்கு என்ன ஆச்சு “
“ ஒன்னும் பிராப்ளம் இல்ல சார்.. சிகிச்சை நடந்துகிட்டு இருக்கு.. எக்மோர்ல ஒரு ஆஸ்பத்திரியில சேர்த்து இருக்கோம்..
அவசரமாக எக்மோர் கிளம்பினேன்..
***************************
                      சென்னை . எக்மோரில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனை..
காமினிக்கு ஒரே இட்த்தில் கட்டுப்பட்டு இருப்பது பிடிக்கவில்லை.. சிறகடித்து பறக்க துடித்தாள்..
டாக்டர் செக் அப் முடித்து செல்லும் நேரம்தான் சரியான நேரம்.. வேறு யரும் இருக்க மாட்டார்கள்..
டாக்டர் வழக்கம்போல சரியான நேரத்துக்கு வந்தார்,, காமினியை சோதித்த பின் திருப்தியாக கிளம்பினார்...
டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு,வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா