Showing posts with label தமிழ் ஸ்டுடியோ. Show all posts
Showing posts with label தமிழ் ஸ்டுடியோ. Show all posts

Monday, May 25, 2015

பாலுமகேந்திரா முன்பு அழுதேன் - சாரு நிவேதிதா உருக்கமான பேச்சு






தமிழ் ஸ்டுடியோ அமைப்பு சார்பாக ’ பாலு மகேந்திரா விருது “ வழக்கும் விழா 24.05.2015ல் , கோடம்பாக்கத்தில் இருக்கும் BOFTA கல்லூரியில் நடந்தது.,.. காலை 10 மணிக்கு ஆரம்பித்த விழா இரவு பத்து மணி வரை நடந்தது... பாலு மகேந்திராவின் தலைமுறைகள் திரைப்படம் , 16 குறும்படங்கள் திரையிடப்பட்டன... நல்ல அருமையான ஏசி மற்றும் ஒலி ஒளி வசதியுடன் கூடிய திரையரங்கில் அரங்கு நிறைந்த பார்வையாளர்களுடன் சினிமா பார்த்தது நல்ல அனுபவம்.. நாசர் உட்பட ஏராளமான ஆளுமைகள் , ரசிகர்கள் கலந்து கொண்டு ஒரு மாநாடு போல விழா நடந்தது




பாலுவின் தலைமுறைகள் படத்தை படம் வந்தபோது பார்த்து நான் எழுதிய குறிப்பு இதில்... தலைமுறைகள் - பிச்சையின் பார்வையில்..




மாலை ஆறு மணிக்கு விருது வழங்கும் நிகழ்ச்சிகள் துவங்கின...
பீ.லெனின் மாலன், சாரு நிவேதிதா , லீனா மணிமேகலை, கார்த்திக் சுப்புராஜ்,கோ.தனஞ்செயன் , அருண் ஆகியோர் பேசினர்...



-_______________________________________




குறும்படம் எனும் தனி வகை  - கார்த்திக் சுப்புராஜ்




அருணை எனக்கு அந்த காலத்திலியே தெரியும்.. குறும்படங்கள் குறித்து அவருடன் நிறைய பேசி இருக்கிறேன். அவருக்கு ஒரு உலக குறும்பட சீடியை அந்த காலத்தில் கொடுத்தேன்.. குறும்படம் என்பது தனியான ஒரு வகை. அது வணிக சினிமாவின் சுருக்கப்பட்ட வடிவம் அல்ல... நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக குறும் படம் எடுத்தபோது கூட அதை ஆர்வத்துடன் செய்தேன். தயாளரிப்பாளரை பிடிக்க வேண்டும் என்பது என் நோக்கமாக இருந்தது இல்லை... குறும்ப்டங்களுக்கு என தனியான ஒரு சந்தையை உருவாக்கி பல குறும்பட இயக்குனர்களை ஊக்குவிக்க ஓர் அமைப்பை உருவாக்கி இருக்கிறேன். அடுத்து பல முக்கியமான ஆளுமைகள் பேச இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.




_______________________________




சிறுபத்திரிக்கை போல குறும்படம் -மாலன்



நிகழ்ச்சிக்கு குறித்த நேரத்துக்கு முன்பே வந்து விட்டேன்.. அமைதியாக தனிமையாக அமர்ந்து வானத்தை கவனித்துக்கொண்டு இருந்தேன். நீலம் , சாம்பல் நிறம் , சிவப்பு , கருப்பு என அதன் நிற மாற்றத்தை ரசித்தேன். இப்படி வானத்தை ரசித்து வெகு நாட்கள் ஆகி விட்டன. சமீபத்தில் தனஞ்செயனின் புத்தகம் படித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அவரிடம் பாராட்டை சொன்னேன். இந்த இரண்டு அனுபவங்களுக்காகவும் தமிழ் ஸ்டுடியோவுக்கு நன்றி. அந்த காலத்தில் எல்லாம் குறும்படங்கள் பார்ப்பது எல்லாம் சாத்தியம் இல்லாமல் இருந்தது. எங்கோ ஒரு சில இடங்களில் கிடைக்கும் வாய்ப்பை தேடிச்சென்று பயன்படுத்துவோம், நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முயன்றோம். அதில் பல சவால்களை சந்தித்தோம் .காரண்ம் அன்று உரிய வசதிகள் இல்லை, இன்று வசதிகள் உள்ளன, அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நிறைய வாசியுங்கள். பாலு மகேந்திராவை ஓர் இயக்குனராக உங்களுக்கு தெரியும். அவரை ஒரு நல்ல வாசகனாக எனக்கு தெரியும். நல்ல வாசிப்பாளர் அவர். நாங்கள் புத்தகங்கள் குறித்தே அதிகம் பேசுவோம். சிறு பத்திரிக்கை இயக்கம் போல குறும்படங்கள் தனி இடம் பிடிக்க வேண்டும்







-__________________________________




பாலுவுக்கு நிகர் பாலு மட்டுமே - லீனா மணிமேகலை



பாலு மகேந்திராவை நான் அப்பா என்றுதான் அழைப்பேன், எனக்கு அவர் அப்பா போன்றவர். நான் முதன் முதலில் என் படத்தை திரையிட்டபோது அவரை உரிமையுடன் அழைத்தேன்.. அவரும் ஆர்வமாக வந்தார், என் எல்லா திரையிடல்களுக்கும் அவர் வந்து இருக்கிறார். அவருக்கு நிகராக இனி ஒருவர் வர முடியாது, அவர் நம்மை விட்டு மறைந்தது பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் இடையேயான இடைவெளி இப்போது குறைந்து வருகிறது. இன்னமும் கூட நாம் எடுக்கும் படங்களை திரையிட உரிய ஸ்பேஸ் கிடைப்பதில்லை. இது மாற வேண்டும். போட்டிக்கு வந்த படங்களை பார்த்தேன்,. பல நன்றாக இருந்தன. படம் எடுப்பவர்கள் ஒலி அன்ற அம்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். என் படத்தை பார்த்த ஒரு பிரபல ஆளுமை எனக்கு ஒரு மெயில் அனுப்பினார்.. அது எனக்கு மிகப்பெரிய வெளிச்சம் அளித்தது.. ஷூட்டிங் செல்லும்போது கேமரா இல்லாமல் செல்வது எவ்வளவு அபத்தமோ அதே போன்ற அபத்தம்தான் சவுண்ட் எஞ்சினியர் இல்லாமல் செல்வதும் என சொல்லி இருந்தார். ஒலி அம்சம் மிகவும் முக்கியம்




-______________________________________________




என்னை வென்ற மணி ரத்னம் - சாரு நிவேதிதா



என்னை எழுதச்சொன்னால் எழுதி விடுவேன். ஆனால் பேச எனக்கு எப்பவுமே தயக்கம் உண்டு. நான் மனதில் பட்டதை பேசி விடுவேன், இதனால் யாராவது புண்பட்டு என்னை ஜென்ம விரோதியாக நினைக்க ஆரம்பித்து விடுவார்கள். எழுத்திலும் என்னிடம் ஒளிவு ம்றைவு இல்லை. மது அருந்தியபோது நான் அதை மறைத்தது இல்லை. எந்த பாரில் அருந்தினேன் என்பது உட்பட விரிவாக எழுதுவேன்,. இதை பலர் திட்டினர். இப்போது குடியை விட்டுவிட்டு மகாத்மா காந்திபோல வாழ்கிறேன். இதைப்பற்றி யாரும் பேசுவதில்லை.




என்னை பெரும்பாலும் யாரும் பேச அழைப்பதில்லை. காரணம் என்னை அழைத்தால் வேறு சிலரின் பகை வந்து சேரும். சாருவை சும்மா ஃபார்மலாக அழைத்தோம். மற்றபடி அவருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி தப்பித்துக்கொள்ளுமாறு அமைப்பாளர்களை கேட்டுக்கொள்கிறேன் ( அரங்கில் பலத்த சிரிப்பு )







எனது சக பயணிகள் என நினைக்கும் இருவரை சமீபத்தில் ஒரு விழாவில் சந்தித்தேன்.. ஆர்வமாக கைகுலுக்க சென்றேன், ஆனால் என் கைகளை அவர் தட்டிவிட்டு வெறுப்பாக முகத்தை திருப்பிக்கொண்டனர். அந்த அளவுக்கு என்னை வெறுக்கிறார்கள்.




இதனால்தான் நான் மனிதர்களை விட மரங்கள் , விலங்குகளுடன் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறேன். பாலு மகேந்திராவும் இப்படிதான், ஒருவகையில் பாலு மகேந்திராதான் நான். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகள் பழக்கம் உண்டு. ஆனால் அவர் படங்கள எதையும் நான் பார்த்தது இல்லை. வீடு , சங்தியாராகம் பார்த்து விட்டீர்களா என அடிக்கடி என்னை கேட்பார் , நான் இல்லை என்பேன். காரணம் இது போன்ற மாற்று படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




துப்பாக்கி , கத்தி போன்ற படங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மாற்றுப்படங்கள் என்ற பெயரில் வரும் படங்கள் மீது எனக்கு பயங்கர ஒவ்வாமை உண்டு.




ஒரு காமன்மேனுக்கு இருக்கும் சென்சிபிள் கூட இவர்களுக்கு இருப்பதில்லை. சென்சிபிள் என எதை சொல்கிறேன். சிலர் திரையரங்கில் அமர்ந்தவாறு சத்தம்போட்டு செல்போனில் பேசுவார்கள். காரணம் இந்த நுண் உணர்வு இன்மை. உலக சினிமாக்கள் பார்க்காமல் , எந்த இலக்கிய வாசிப்பும் இல்லாமல் இவர்கள் எடுக்கும் படத்தில் சென்சிபிலிட்டி இருப்பது இல்லை, எனவே இவர்களைக்கண்டாலே எனக்கு பயம்.

எனவேதான் பாலுவின் படங்களை நான் பார்த்தது இல்லை.




முதல் முறையாக நான் பார்த்தது அவரது தலைமுறைகள் படம்தான்.. பார்த்துக்கொண்டிருந்தபோதே அவர் மேதைமையை அறிந்தேன். என்ன ஒரு கலைஞன் என நினைத்துக்கொண்டேன். இத்தனை நாள் இவரை தெரிந்துகொள்ளாமல் போனேனே என வருத்தப்பட்டேன்




மிக அழகான , மிக விலை உயர்ந்த மலர்க்கொத்துடன் அவரை சந்திக்க போனேன். அதை அவர் கையில் கொடுத்தும் ஏன் இவ்வளவு காஸ்ட்லியான மலர்க்கொத்து என ஆச்சர்யப்பட்டார். என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவர் முன்னால் வெறுமனே அழுது கொண்டே இருந்தேன்.




எப்பேர்ப்பட்ட கலைஞன் அவர். அதன் பின் அவர் படங்களை பார்த்தேன். அவர் படங்களை தாமதாக தெரிந்து கொண்டது எனக்குத்தான் நஷ்டம். அவருக்கு ஒன்றும் இல்லை.




தலைமுறைகள் படத்தை அவர் பாராட்டினாரா இவர் பாராட்டினாரோ என சிலர் பெயர்களை சொல்லி கேட்டேன்.. இல்லை என்றார். பாலச்சந்தர் எழுதிய கடிதம் மட்டும் காட்டினார். மிகச்சிறந்த பாராட்டுக்கடிதம்.




உங்கள் படங்களை பாலுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். தமிழ் அல்லது ஹாலிவுட் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ளாதீர்கள் .  ஐரோப்பிய சினிமா பாருங்கள். உங்கள் மீது எனக்கு இருக்கும் வெறுப்பை மாற்றுங்கள்







எனக்கு மணி ரத்னம் மேல் சின்ன கோபம் இருந்தது,,,ஓ காதல் கண்மணி படத்தை திட்டுவதற்காகவே அந்த படத்தை பார்க்க போனேன்.. ஆனால் அந்த படம் என்னை வென்று விட்டது. எனக்கு மிக மிக பிடித்து இருந்தது. அது போல உங்கள் படங்களால் என்னை வெல்லுங்கள்>




என்னை திருப்திப்படுத்தும் அளவுக்கு படம் எடுக்க முடியாது என சிலர் சொல்லலாம். ஆனால் என்னை திருப்திப்படுத்திய படங்கள் , இயக்குனர்கள் என நூறுக்கு மேல் என்னால் சொல்ல முடியும்...




போட்டிக்கான படங்களை பார்த்துவிட்டு பெஸ்ட் என நான்கு படங்களை பட்டியலிட்டேன். பார்த்தால் அதே படங்களைத்தான் மற்ற நடுவர்களும் தேர்ந்தெடுத்து இருந்தனர்.




நல்ல படம் என ஒன்று இருக்கிறது , அதை ரசிக்கவும் , அதை எடுக்கவும் சென்சிபிலிட்டி தேவை.... அதற்கு வாசிப்பும் , சினிமா பார்த்தலும் உதவும்




-______________




இதன் பின் லெனின் பேசினார். சாரு புத்தகங்களை படித்தாலே போதும் , நிறைய தெரிந்து கொள்ளலாம் என்றார். ஐரோப்பிய சினிமா பார்ப்பதன் அவசியம் , இலக்கிய வாசிப்பு என பலவற்றை தனக்கே உரித்தான முறையில் அழகாக சொன்னார். நேத்து ராத்திரி , அம்மா பாடலில் இருக்கும் ராகத்தை சொன்னது அழகாக இருந்தது.. தன் பாணியில் ஒரு பாட்டு பாடி பேச்சை முடித்தார் அவர்




பிறகு பரிசளிப்பு விழா நடந்தது

Tuesday, November 25, 2014

மிஷ்கின் பேச்சும் , தமிழ் ஹிந்துவின் சின்ன புத்தியும்

தமிழ் ஸ்டுடியோ ஏழாம் ஆண்டு துவக்க விழா நடந்ததல்லவா...

அதில் பேசிய ராம் தான் மனம் விட்டு பேசப்போவதாகவும் தயவு செய்து யாரும் வீடீயோ எடுத்து , யூ ட்யூபில் போட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அதை ஏற்று யாரும் வீடியோ எடுக்கவில்லை.

இந்த ஜெண்ட்டில்மேன் அக்ரீமெண்டை நம்பிய மிஷ்கின் அவரும் கேஷுவலாக பேசினார். ஆனால் அந்த ஜெண்டில்மேன் அக்ரீமெண்ட்டை மதிக்காமல் , தமிழ் ஹிந்து அவர் பேச்சை தன் வலைத்தளத்தில் வெளியிட்டு ஊடக அறத்தை மீறியுள்ளது. வேண்டுமென்றே சர்ச்சைக்குரிய பகுதிகளை மட்டும் வெட்டி ஒட்டி சின்ன புத்தியை காட்டியுள்ளது தமிழ் ஹிந்து. தமிழ் ஸ்டுடியோ விழா என்பதை குறிப்பிடவில்லை..  அவர் பேசும் மேடை , தமிழ் ஸ்டுடியோ மேடை என்பதை காட்டும் மேடை பின்புலம் எடிட் செய்யப்பட்டுள்ளது..

அண்ணா எழுதிய ஆரிய மாயை புத்தகத்தின் இன்றைய தேவை நன்கு புரிகிறது.

மிஷ்கின் மனம் விட்டு பேசினார், சில கருத்துகள் சொன்னார். அவர் அப்படி என்ன பேசிவிட்டார் ?

பாரதியார் படத்தில் வட இந்தியரை நடிக்க வைத்ததை சார்லி குறை சொன்னது தவறு , கலையை மொழிக்குள் அடைக்க முடியாது.  நான் இண்டர்னெட் பக்கம் போவதில்லை. அங்கு போனால் கெட்ட வார்த்தை மட்டும்தான் கற்க முடியும்.
அதிக பட்ச கெட்ட வார்த்தை எனக்கு எதிராகவே பயன்படுத்தப்படுகிறது. காப்பி அடிக்கிறேன் என்கிறார்கள். நல்ல கலைஞன் காப்பி அடிக்க மாட்டான். கலை ஒருவனை தூங்க விடாது.   பாரல்லல் தாட்ஸ் வருவது சகஜம்தான். அந்த கால மாபெரும் காப்பியங்களில்கூட சில ஒத்த விஷ்யங்கள் உண்டு. அதற்காக காப்பி என சொல்ல முடியுமா.

என்னைப்போன்றவர்கள்  நல்ல சினிமாவுக்காக போராடிக்கொண்டு  இருக்கிறோம். அதை திட்டாதீர்கள்.  என் பாக்கெட்டில் நூறு ரூபாய்கூட இல்லை. பணக்கார வறுமை என்பது மிக கொடிது.

இந்த அரங்கில் குடித்து வந்து திட்டினானே.. அவனுக்கும் சேர்த்துதான் நான் படம் எடுக்க வேண்டும். அவனுக்கும் படம் புரிய வேண்டும். வாளை மீனுக்கும் பாடல்வெற்றி பெற காரணமாக  இருந்தது அகிரா குரசோவாவிடம்  நான் கற்ற பாடம்தான். படிமத்தின் ஆற்றலை அவரிடம் கற்றேன். அதனால்தான் அந்த விரல் அசைப்பில் தமிழகத்தை ஆடவைக்க முடிந்தது.

மணிரத்னம் தொடர்ந்து ஃபிலாப் படங்களை கொடுக்கிறார். அவரை யாரேனும் விமர்சிக்கிறார்களா.. கலைஞானி என்கிறீர்களே அவர் என்ன பெரிதாக செய்து விட்டார்.

கமல் மேடையில் அவர் மட்டுமே பேச வேண்டும். நான் ஏதோ பேசி விட்டேன் என்பதற்காக லெனின் சார் எனக்கு எஸ் எம் எஸ் செய்தார். முதலில் உன் படத்தை ஒழுங்காக எடுக்கவும் என முகமூடி படம் வந்தபோது சொன்னார். என் தவறுகளை திருத்திக்கொண்டு ஓனாயும் ஆட்டுக்குட்டியும் எடுத்தேன். அவர் பாராட்டி மெசேஜ் அனுப்புவார் என நினைத்தேன். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. நான் பெரிதும் மதித்த லெனினே இப்படித்தான் இருக்கிறார்.
விமர்சியுங்கள். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் ஆரோக்கியமாக விமர்சியுங்கள். அருண் என்னை விமர்சித்தபோது , உன் தகுதி என்னவென்று கேட்டேன், சொன்னார். எனக்கு மகிழ்ச்சி . அவருக்கு விமர்சிக்கும் தகுதி இருக்கிறது.
பாடல் இல்லாமல் இன்னும் சினிமா எடுக்க முடியவில்லை.அதை விமர்சித்து மாற்ற முடிகிறதா. ஐந்து பாடல்கள் , பாடலை உருவாக்க சில காட்சிகள் என பாதி நேரம் அதற்கே போய் விடுகிறது. மிச்சம் இருக்கும் கொஞ்ச நேரத்தில் என்ன படம் எடுப்பது.

ஓர் ஆணும் பெண்ணும் பார்க்கிறார்கள் , உடனே பாடல்.. பாடல் எதற்கு ,, பார்த்த பின் என்ன செய்கிறார்கள் என கேளுங்கள்.. பாடலின்போது வாக் அவுட் செய்யுங்கள்.. நிலை சரியாகி விடும்.

ஒரு குழ்ந்தை பிறந்தா ரசியுங்கள்.. குழந்தை ஏன் கறுப்பா இருக்கு இன்னும் கொஞ்சம் சிவப்பா இருந்திருக்கலாமே.. ஏன் முடி இல்லை என்றெல்லாம் கூறாதீர்கள்.

மற்றபடி கெட்ட வார்த்தையால் திட்டுவதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். திட்டுங்கள். ஆனால் புதிதாக திட்டுங்கள்.. அப்போதுதான் ரசிக்க முடியும்..

இப்படி உணர்வுபூர்வமாக பேசினார்..

கடைசியில் பேசிய அருண் , சினிமாவுக்கு வசனம் முக்கியம் என்ற ராமின் கருத்தை மறுத்தார். அழகாக சிரித்தாள். அன்பாக சிரித்தாள் என்ற சொற்களைவிட நம் மனதில் நிற்பது மோனலிசாவின் பிம்பம்தான்.  நாம் என்னதான் பேசினாலும் நம மனதில் பிம்பமாகவே பதிகிறது.  கூடங்குளம் பிரச்சினையில் நான் என்ன செய்தேன் என ராம் கேட்டார். நான் கேட்க விரும்புவது ஒன்றுதான். தமிழ் சினிமா என செய்தது ‘

இப்படி பரபரப்பாக விவாதம் நடந்தது 

Monday, November 24, 2014

தமிழ் நாட்டில் தமிழ் படங்களுக்கு இடம் இல்லை- இயக்குனர் ராம் ஆவேச பேச்சு




அம்ஷன் குமார் எப்போதுமே ஆழமாக பேசக்கூடியவர். அடுத்து அவர் பேசினார்.

இங்கு பேசிய அனைவரும் லெனினை எடிட்டர் லெனின் என அழைத்தனர். அவர் சிறந்த இயக்குனர் . விருது பெற்றவர். தமிழ் குறும்படங்களின் தந்தை என்றுகூட சொல்லலாம். 2003ல் ஒரே நாளில் ( மே31 ) என் படமும் அவர் படமும் தணிக்கைக்கு சென்றது. இது ஒரு முக்கிய நிகழ்வாகும்.  மாற்றுப்படம் ஒன்று வந்தால் , இன்னொரு படம் வர வெகு நாட்கள் ஆகும்.  அன்றைய தினம் ஒரே நாளில் இருபடங்கள் தணிக்கைக்கு சென்றன. ஃபில்ம் சொசைட்டிகள் , திரை விழாக்களில் அந்த படங்கள் பெரும் வரவேற்பு பெற்றன. சுனாமி நிதி திரட்ட என் பட திரையிடல்களை பயன்படுத்தினேன். இப்படி நிதி திரட்டிய ஒரே தமிழ் படம் என் சினிமாதான்.  விருதுக்காக எங்கள் படங்களை அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஓடினால்தான் அதை ஃப்யூச்சர் ஃபில்ம் என அங்கீகரிப்போம் என்றார்கள். குறைந்தது 8 முதல் 25 பிரிண்டுகள் போடப்பட வேண்டும் என்றார்கள்.  இவற்றை எல்லாம் போராடி கடைசியில் வென்றோம்.
நமது ரசனை மேம்பட வேண்டும். படம் ஃபர்ஸ்ட் ஆஃப் சூப்பர் , செகண்ட் ஆஃப் சொதப்பல் என விமர்சிக்கிறார்கள். படத்தில் ஃபர்ஸ்ட் ஆஃப் , செகண்ட் ஆஃப் என்றெல்லாம் எதுவும் இல்லை.  நம் ஊரில்தான் இப்படியெல்லாம் பேசுகிறான். ரசிகன் மேல் நம்பிக்கை வைத்துதான் இயக்குனர் படம் எடுக்கிறார். சார்லி சாப்ளின் ஒரே ஷாட்டில் அந்த காட்சியை வைக்கிறார் என்றால் மக்களுக்கு புரியும் என நம்புகிறார்.

சத்யஜித்ரே படம் ஒன்று. ஒருவனுக்கு பொருளாதார ரீதியாக கஷ்டம். மனைவி வேலை செய்யும் நிறுவனத்தின் தலைவரை பார்க்க செல்கிறான். அந்த தலைவர் இவனை அமரச்சொல்லி சிகரட் கொடுக்கிறார். இவன் அதை உடனே புகைக்காமல் சற்று உற்று பார்த்த பின் புகைக்கிறான். இங்கு க்ளோஸ் அப் ஷாட் எதுவும் வராது. அது அவன் அதுவரை புகைக்காத விலை உயர்ந்த சிகரட் என்பதால் சற்று தயங்குகிறான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என இயக்குனர் நம்புகிறார்.

இப்படி நல்ல ரசனையை வளர்க்க தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உழைக்கிறது. வாழ்த்துகள். என்றார்

அடுத்து பேசிய ராம்  , தனக்கே உரிய அழகு தமிழில் பேசினார்.

இன்று சென்னை சிட்டி முதல் , குக்கிராமங்கள் வரை , திருப்பூர் , கோவை , மதுரை என பல்வேறு சூழல்களில் மக்கள் உலக சினிமா பார்த்து வருகிறார்கள். இதற்கு இரண்டு  காரணங்கள். ஒன்று பர்மா பஜார். இன்னொன்று தமிழ் ஸ்டுடியோ . நல்ல படங்களை பார்க்கும் ஆவலை ஏற்படுத்தியதில் தமிழ் ஸ்டுடியோவுக்கு முக்கிய பங்கு உண்டு.


அன்றைய ஃபிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகளில் ஹாலிவுட் படங்கள் வர முடியாது. ஒரு வித தேக்க நிலை நிலவியது. அதன் பின் உலகப்போர் ., அது சார்ந்த பிரச்சனைகள். வறுமை. வேலைகிடைக்காத பிரச்சனை. அன்றாடம் சாவு என ஃபிரான்ஸ் தடுமாறியது. ஹாலிவுட் படங்கள் நுழைந்தன.  ஃபிரான்ஸ் சினிமா முடங்கி போனது. சார்த்தர் போன்றவர்கள் உருவானார்கள். இருத்தலியல் சார்ந்த படைப்புகள் தோன்றின. இப்படிப்பட்ட சமூக சூழலில்தான் நியூ வேவ் சினிமாக்கள் உருவாக ஆரம்பித்தன. மக்களோடு சேர்ந்து அவர்கள் கதைகளை சொல்லும் படங்கள் வெளி வர ஆரம்பித்தன.

இதே சூழலில்தான் இத்தாலியில் நியோரியாலிஸ்ட்டிக் வகை படங்கள் வர ஆரம்பித்தன. பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற படங்கள் வந்தன.

அதாவது ஓர் இயக்கம் நிக்ழ வேண்டும் என்றால் அதற்கான சமூக சூழல் தேவை. தமிழ் ஸ்டுடியோ அமைப்பு 2007ல் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது?
ஐ டி நிறுவனங்கள் வந்தன. ப்லர் வெளி நாடு சென்று அங்குள்ள படங்கள் பார்க்கும் வாய்ப்பு பெற்றனர். இண்டர்னெட் போன்ற டிஜிட்டல் புரட்சியால் , வெளினாட்டு படங்கள் பற்றிய பார்வை நமக்கு கிடைத்தது. டிவிடி நிறைய வர ஆரம்பித்தன. ஆனால் இந்த வசதி ரசனையை வளர்க்க பயன்படவில்லை. இந்த சூழலிதான் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு உருவானது. நல்ல பணிகளை செய்து வருகிறது.

ஆனால் அது பெரிய இயக்கமாக வளர வேண்டும் என்றால் சமூக பிரச்சனைகளை கையாள வேண்டும். தனது அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கூடங்குளம் , ஈழம் போன்ற பிரச்சனைகளில் மவுனம் காப்பது கூடாது. தான் யார் என்பதை சொல்ல வேண்டும்.

சிங்கள இயக்குனரின் படம் வந்தபோது ஒரு கும்பல் ரகளை செய்வதாக சொன்னார்கள். தமிழ் அமைப்புகள் எந்த இடைஞ்சலும் செய்யவில்லை. கருத்து மட்டும்தான் சொன்னார்கள். ஆனாலும் இப்படி பழியை போட்டார்கள்.

அருண் தன் அரசியலை முன் வைக்காவிட்டாலும் , அவர் செயல்மூலம் அவரது இடதுசாரி பார்வை தெரிகிறது. லீனா மணிமேகலை , லெனின் , ஆனந்த் பட்வர்த்தன் போன்றோருக்கு விருது கொடுத்ததன் மூலம் அவர் மனதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் அவர் தன் அரசியலை தெளிவாக முன் வைக்க வேண்டும். கலையை வெறுமனே ரசிக்கும் வலது சாரியாக இருக்கக்கூடாது.

மற்ற நாடுகளில் நிகழ்ந்த மாறுதலைப்போல தமிழில் ஏற்பட்ட மாற்றத்தை கொண்டு வந்த இயக்கம் திராவிட இயக்கம்தான். 1952ல் வந்த பராசக்தி ஒருவகையில் நியூவேவ் சினிமா எனலாம். அதுவரை இருந்த புராண வகை படங்களின் அடித்தளத்தை அசைத்து பார்த்தது அந்த படம். இன்று வரை தமிழ் சினிமா தனித்துவத்துடன் செயல்பட அந்த இயக்கம்தான் காரணம்.

மல்ட்டிப்லெக்ஸ் திரை அரங்குகள் வந்தபோது , இதேபோல இன்னொரு மாற்றம் வரும் என எதிர்பார்த்தோம். குறும்படங்கள் , லோ பட்ஜெட் படங்கள் திரையிட முடியும் என நினைத்தோம். ஆனால் நடந்தது வேறு.

அந்த அரங்குகளில் முதலில் , ஆங்கில படங்கள்..பிறகு ஹிந்தி. மூன்றாவது தெலுங்கு. அதன் பின்புதான் தமிழ் படங்களுக்கு , அதுவும் பெரிய நடிகர்கள் நடித்த படங்களுக்கு இடம் கிடைக்கிறது. அதன் பின்புதான் மற்ற படங்கள். அதுவும் தலைப்பு அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே இடம் கிடைக்கும்.  ,மதுபானக்கடை படத்துக்கு இடம் தர மறுத்தது ஒரு தியேட்டர்.

அருண் நல்ல பணிகளை செய்கிறார். ஆனால் பேசா மொழி என்ற பெயர் எனக்கு பிடிக்கவில்லை. மரண தண்டனையை எதிர்த்து பேசாத கலை எனக்கு தேவை இல்லை. படங்கள் என்றால் பேச வேண்டும்.  ஈரான் படத்தின் மவுனம் வேறு. என் மவுனம் வேறு. அவர்களைப்போலவே நானும் எடுக்க வேண்டும் என்பது இல்லை. அதேபோல தமிழ் ஸ்டுடியோ என்ற பெயரும் பிடிக்கவில்லை.


இவ்வாறு ராம் பேசினார்.


( அடுத்து மிஷ்கின் பேச்சு தனி பதிவாக ) 

Sunday, November 23, 2014

பவா செல்லத்துரை சொன்ன நெகிழ்ச்சியான கதை, சார்லி சிலாகித்த திரைப்பட ஷாட்



தான் இணையத்தை பார்த்து கெட்டுப்போக விரும்பவில்லை என இயக்குனர் மிஷ்கின் பேசினார். அதிக கெட்டவார்த்தைகள் நெட்டில் புழங்குவதாகவும் , தனக்கு எதிராகத்தான் அதிக வசைகள் பாய்வதாகவும் தெரிவித்த அவர் , தன்னை திட்டும் இணைய மொண்ணைகள் , சற்று வித்தியாசமாக யோசித்து திட்டினால் ரசிக்கத்தயார் என்றும் தெரிவித்தார்...




தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் ஏழாவது ஆண்டு துவக்க விழா சென்னையில் நடந்தது. ஊடக மொண்ணைகள் ஆதரவு இல்லாமல் இந்த அளவு தொடரந்து இயங்குவது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய ஒன்று. ஒரு நிகழ்ச்சிக்காக ஆனந்த பட்வர்த்தன் சென்னை வந்தார் , ஒரு அமைப்பின் சார்பாக சிங்கள் இயக்குனர் படம் திரையிடப்பட்டது என செய்தி வெளியிட்டு தமிழ் ஸ்டுடியோவை இருட்டடிப்பு செய்வதில் ஊடகங்களுக்கு ஏனோ அதீத ஆர்வம்.




இதனால் எல்லாம் பாதிப்பின்றி , ஆறு மணி நிகழ்ச்சிக்கு ஐந்தரைக்கே மக்கள் குவிந்து விட்டனர். அரங்கு நிறைந்து பலர் ஸ்டாண்டிங்..

அருண் எழுதிய நாடு கடந்த கலை என்ற அருமையான புத்தகம் வெளியிடப்பட்டது... மேற்கண்ட வி ஐ பிகள் வெளியிட அருணின் ஆசிரியர் திருமதி. புஷ்பராணி பெற்றுகொண்டார்.. சமர்ப்பணம் என்பதில் என்னுடைய ஆசிரியர் திருமதி புஷ்பராணி அவர்களுக்கு என குறிப்பிட்டுள்ளார்.. அவர் குருபக்தி நெகிழ்வூட்டியது.. ஆசிரியை என மரியாதைக்குறைவாக சொல்லாமல் ஆசிரியர் என சொன்ன அவர் மொழி ஆளுமை ரசிக்க வைத்தது ,



பேச்சாளர் பட்டியலில் இல்லாத அறந்தை மணியனை முதலில் பேச செய்தார் அருண். அவரும் மிகச்சிறப்பாக பேசினார். திரைப்பட சங்கங்கள் , பணிகள் குறித்து பேசினார்.


முன்னதாக சாரு உள்ளிட்ட பிரபலங்கள் தமிழ் ஸ்டுடியோ குறித்தும் சினிமா குறித்தும் பேசிய காணொளி திரையிடப்பட்டது. வணிகப்படங்களைவிட மாற்று சினிமா என்ற பெயரில் வரும் படங்கள் குப்பையாக இருப்பதாக சாரு பேசியது பலர் கவனத்தையும் கவர்ந்தது.


அதன் பின் ஜெர்மனியை சேர்ந்த திரைப்பட ஆய்வாளர் ஸ்டீபன் பார்சஸ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். வெளிநாட்டு திரைப்பட ஆய்வாளர்கள் / விமர்சகர்கள் பார்வையில் தமிழ் சினிமா என்கிற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

இவர் ஜெர்மனியில் இருந்து வெளியாகும் திரைப்பட இதழான சினி ஏசியாவின் ஆசிரியர் வெளியீட்டாளர். தவிர சர்வதேச திரைப்பட விழாவில், ஜப்பான் மற்றும் தென் இந்திய திரைப்படங்கள் சார்ந்த ஆலோசகராகவும் இருக்கிறார்.




பிறகு லெனின் பேசினார். தனக்கே உரிய இயல்பான பக்குவமாக அனுபவத்துடன் கூடிய எள்ளல் நடை பேச்சு.




படங்களை எப்படி ரசிப்பது என சொல்லித்தருவது இன்று முக்கியபணியாக இருக்கிறது. இதை எந்த அமைப்பும் செய்யாத நிலையில் தமிழ் ஸ்டுடியோ செய்கிறது. இந்தியன் பனோரமா ரஜினிக்கு விருது கொடுத்து கமர்ஷியல் பாதையில் செல்கிறது. நாம் சரியான பாதையில் செல்கிறோம். பத்திரிக்கையாளர்களுக்கு அறிவு என்பதே இல்லை. ஒளிப்பதிவு பளிச் என இருந்தது , கதை சூப்பர் என எழுதுகிறார்கள் . இதுவா விமர்சனம். ..குற்றம் கண்டுபிடிப்பதை விமர்சனம் என நினக்கிறார்கள். உள்ளேபோகும்போது இருந்த வெள்ளை சட்டை வெளியே வரும்போது பச்சை சட்டையாக எப்படிமாறியது என சின்ன விஷ்யங்களை கண்டுபிடிப்பதை சாதனையாக நினைக்கிறார்கள். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதே முக்கியம் என்பார் இயக்குனர் பீம்சிங். சினிமாவை கற்ற பின் எழுத வேண்டும் என்றார்.




பிறகு பவா செல்லத்துரை பேசினார்.




சமீபத்தில் ஒரு கதை படித்தேன். அது என்னை கலங்க வைத்து விட்டது என சொல்லி பேசினார். உண்மையிலேயே அது அனைவரையும் கலங்க வைத்து விட்டது. அவர் சொன்ன விதம் , காட்சியை நேரில் பார்ப்பது போல இருந்தது.




பத்திரிக்கையில் வேலை செய்யும் ஒருவன். அவன் மனைவி.. சற்று அப் நார்மலான / உடல் நலக்குறைவுடன் ஒரு குழந்தை.. பேச முடியாத குழந்தை. ட்ரீட்மெண்ட் செய்யக்கூட காசு இல்லை.. பத்திரிக்கை அதிபரோ உதவவில்லை.. அவனுக்கு அவசரமாக நூறு ரூபாயவது தேவைப்படுகிறது.. அவர்50 ரூபாய் கொடுக்கிறார். காரணம் ஏற்கனவே நிறைய வாங்கி விட்டான்.

அடுத்த நாள் .. “ குழந்தையிடம் காசு ஏதாச்சும் கொடுத்தீங்க்ளா.. “ என்கிறாள் மனைவி.. என்னிடம் ஏது காசு.. நான் கொடுக்கவில்லையே என்கிறான்.. குழந்தை கையில் நூறு ரூபாய் இருந்ததாக சொல்லி கொடுக்கிறாள்.. எப்படி அந்த காசு வந்தது என புரியவில்லை... ஆனாலும் , எப்படியோ காசு வந்தால் சரி என நினைத்துக்கொண்டு அதை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.


இன்னொரு முறை 500 ரூபாய் தேவைப்படுவதாக புலம்புகிறான்.. அடுத்த நாள் பார்த்தால் , குழந்தை கையில் 500 ரூபாய் இருக்கிறது.

இதெல்லாம் எப்படி வருகிறது என புரியவில்லை.. தேவைப்படும்போதெல்லாம் காசு வருகிறது.. குழந்தை கையில் யாராவது வைக்கிறார்களா என செக் செய்கிறார்கள்.. கண்டு ப்டிக்க முடியவில்லை.. ஒரு நாள் முழுக்க விழிப்பாக கவனிக்கிறார்கள். கண்டு பிடிக்க முடியவில்லை

இதற்கிடையில் , குழந்தைக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க கண்வன் தாமதம் செய்வதை மனைவி கண்டிக்கிறாள்.. குழந்தை சரியாகி , பேச ஆரம்பித்தால் , காசு எப்படி வருகிறது என சொல்லி விடுமோ என பயப்படுவதாக குற்றம் சாட்டுகிறாள்.. க்அதில் இருக்கும் உண்மை கணவனை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இத்துடன் முடித்து இருந்தாலும்கூட சூப்பர் கதைதான்.. ஆனால் இதைவிட மரண அடி கிளைமேக்ஸ் இனிமேல்தான்..

பழைய டீவியை மாற்றி எல் சி டி வாங்கினால் நன்றாக இருக்குமே என புலம்புகிறான். அடுத்த நாள் குழந்தை கையில் அதற்கு தேவையான பணக்கட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிக்கை அதிபர் பத்திரிக்கை நடத்த முடியாமல் , இவனை நடத்த சொல்கிறார். அவனிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட நிபந்தனை விதிக்கிறான். அது ஏற்கப்படுகிறது.




அந்த குழந்தை நோய்க்கு சிகிச்சை செய்ய அந்த ஊரில் டாக்டர்கள் இல்லை.. கல்கத்தா போயாக வேண்டும்.. விமானத்தில் கிளம்ப அவனும் , குழந்தையும் தயார் ஆகிறார்கள்... வேண்டுமென்றே விமானத்தை தவற விடுகிறான்.. மனைவி திட்டுகிறாள்.. கடைசியில் ஒரு வழியாக கல்கத்தா செல்கிறான்..




டாக்டர் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்து விட்டு , வெகு நேரம் கழித்து வெளியே வருகிறார் பேயறைந்த முகபாவத்துடன்.




இத்தனை நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தாய்.. ஏன் முன்பே வரல என கடுமையாக திட்டுகிறார்.




என்ன ஆச்சு பதறுகிறான் அவன்.




குழந்தை இறந்து வெகு நாட்கள் ஆகின்றன என்கிறார் டாக்டர்.




அவ்வளவுதான் கதை..




அந்த குழந்தை இற்ந்து ஒரு பண மெஷினாக மாறிவிட்டது. நாமும் அப்படித்தான் மாறி விடுகிறோம். வெகு சிலர்தான் , சுய நலம் மறந்து பண மெஷினாக மாறாமல் மற்றவர்களுக்காக உழைக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அருண். அவரை பாராட்டுகிறேன். களப்பணிக்கு நடுவில் அவர் புத்தகம் எழுதியது நல்ல விஷய்ம்.




இப்படி அவர் பேசினார்.




விக்ரம் சுகுமாரன் பேசுகையில் லெனின் அவர்களிம் நாக் அவுட் படம் பார்த்தது தனக்கு வெகு உதவியாக இருந்ததாகவும் , பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக சேர அது ஒரு தகுதியாக இருந்ததாகவும் சொன்னார். தன் படத்தை ஜாதி வெறி படம் என அருண் எழுதியது வருத்தம் அளித்ததாகவும் , இன்னொரு முறை பார்த்த பின் , தான் எழுதியது தவறு என ஒப்புக்கொண்ட நேர்மை பிடித்திருப்பதாகவும் பேசினார்.




ஓவியர் டிராட்ஸ்கி மருது பேசுகையில் காட்சி ரூபமாக சினிமாவை ரசிக்கும் ரசனை வளர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். இயக்குனர் என்ன சொல்கிறார் என்பதைவிட எப்படி சொல்கிறார் என்பதே முக்கியம் என்றார். படத்துக்கான சினாப்சிஸ் எழுதுவதல்ல விமர்சனம் .. ஃபில்ம் சொசைட்டி குறித்து சாரு ( சற்று முன் திரையிடலில்) பேசியது  முக்கியமான ஒன்று என்றார்.




தொடந்து பேச வந்தவர் சார்லி. இவரை நகைச்சுவை நடிகராக அறிவோம். இவர் நல்ல படிப்பாளி. பெரிய ஸ்காலர் என்பது பலருக்கு தெரியாது.

அவர் பேசுகையில்,

லெனின் மூலம்தான் எனக்கு அருணை தெரியும் . புள்ளைங்களுக்காக ஒரு படம் ஸ்க்ரீன் பண்றான் . போய் பாரு என வற்புறுத்தினார். என்னவென்றே புரியாமல் போனேன். அங்கு போனபின்புதான் தெரிந்தது. குழந்தைகளுக்கான திரையிடல்.

ஒரே ஷாட்டில் ஒரு கதையை சொல்ல முடியும் என நிரூபித்த கிட் என்ற படம். அதில் வரும் அந்த ஷாட்டை , நம்மை விட அதிகமாக குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்து கைதட்டியது ஆச்சர்யம் அளித்தது.

சார்லி சாப்ளின் ஒரு குறுகலான தெரு வழியே செல்கிறார். மக்கள் மாடி வீடுகளில் இருந்து குப்பைகளை கீழே வீசுகிறார்கள். அதில் சமாளித்து எப்படியோ நடந்து வருகிறார். சாலை ஓரத்தில் ஒரு குப்பைத்தொட்டியில் சத்தம். என்னவென்று பார்த்தால் ஒரு குழந்தை . சட் என ஒரு கணம் மாடி வீடுகளை பார்க்கிறார். ஒரே ஷாட்தான். என்ன ஆழமான காட்சி , குப்பையோடு குப்பையாக குழந்தையையும் எறிந்து விட்டீர்களா என்பது போன்ற ஒரு பார்வை. குழந்தைகள் புரிந்து கொண்டு ரசித்தனர்.




ஆக்ட்டிங் என்பது சவாலான ஒன்று. நான் பல பயிற்சி வகுப்புகளில் இதை விளக்கும்போது பலர் இவ்வளவு கஷ்டமாக என பயந்து விடுவார்கள். இதற்கெல்லாம் பயந்தால் எப்படி.. நான் நடித்த படங்களில் 80 சதவிகித படங்களில் என் காட்சிகளை வெட்டி எறிந்தாலும் படத்துக்கு எந்த பாதிப்பும் வராது. பயப்படாமல் நடி. ஒன்றும் ஆகாது. ஆனால் இப்படி எல்லாம் நடிப்பு இருக்கிறது என தெரிந்து கொண்டால்தான் பயப்படாமல் இருக்க முடியும் என சொன்னபின்புதான் சமாதானம் ஆவார்கள்.




ஓர் இயக்குனர் காட்சியை விவரித்தார். காரின் பின் சீட்டில் பிணம் இருக்கிறது. யாரும் கவனிக்கவில்லை .. இதுதான் காட்சி.




அது எப்படி சார் யாரும் பார்க்காமல் இருப்பார்கள். லாஜிக் இல்லையே என்றார் ஓர் உதவி இயக்குனர்.




ஸ்மெல் வந்து விடுமே சார் என்றார் இன்னொருவர்.

இப்படி காட்சி வைத்தால் நம்ப மாட்டார்கள் என்றார் இன்னொரு உ இ.




இயக்குனர் சொன்னார் “ இப்படி ஒரு காட்சியை எடுக்க முடிவதுதான் நம் திறமை. இதை எப்படி எடுப்பது என்பதை மட்டும் யோசியுங்கள் “ என்றார்.




அப்படி எடுக்கப்பட்டு படம் மாபெரும் புகழ்பெற்றது. அந்த படம் சாது மிரண்டால். அந்த இயக்குனர் பீம் சிங்.

அந்த காலத்தில் எங்கள் ஊரில் ஃபில்ம் சொசைட்டி வந்தபோது ஏன் இந்த சொசைட்டி என எங்களுக்கு புரியவில்லை. பால் சொசைட்டி , கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி ஓகே.. இது என்ன ஃபில்ம் சொசைட்டி. என நினைத்தோம்..




பிறகுதான் அது மாற்று சினிமாவுக்கான அமைப்பு என தெரிய வந்தது. அந்த வகையில் முதலில் திரையிடப்பட்ட மாற்று சினிமா பாலச்சந்தரின் “ புன்னகை “. அப்போது அதுதான் மாற்று சினிமா.




அடுத்த நாள் வேற்று மொழி படம். டேய். செக்ஸ் படம்டா என ஆசை ஆசையாக காலையிலேயே போய் விட்டோம். பயங்கர கூட்டம்.

படம் ஆரம்பித்தது.. பேச்சு பேச்சு பெச்சு...ஞஞாம்ம்ம் ஞஷ்ம்ம்ம் ங்க்ஜன்ஞ்ஞ்ஞ் என புரியாத மொழியில் பேசிக்கொண்டே இருந்தார்கள். படம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது பனியனை கழட்டுவதுபோல ஒரு காட்சி. வந்ததுக்கு இதுவாச்சும் பார்த்தோமே என நினைத்தபடி வந்தோம். இந்த ரசனை எல்லாம் மாற வேண்டும்.

கலைஞனுக்கு தன்னம்பிக்கை வேண்டும் .

ஓர் இளைஞன் நாடக கம்பெனியில் சேர்ந்தான். வழக்கமான புது முகங்களைபோல அவனை அரண்மனை காவல்காரன் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஒரு வாளை பிடித்தபிடி நின்றுகொண்டே இருக்க வேண்டும்.




இப்படி ஒரு நாள் , ரெண்டு நாள் என நூறு நாட்கள் நடித்தான். அதற்குமேல் தாங்க முடியவில்லை. வேறு வேடம் கொடுங்கள் என்றான். கொஞ்ச காலம் போகட்டும் என்றார்கள். முடியாது. இப்பவே வேண்டும் என்றார்கள். என்ன வேடம் என கேட்டார்கள். கதானாயகன் வேடம் என்றான். அதிர்ந்துபோனார்கள். அதெல்லாம் உன்னால் நடிக்க முடியாது என்றார்கள். ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்க்ள் என்றான். கொடுத்தார்கள். ராஜாவாக அவன் நடித்த்து பெரும் வரவேற்பு பெற்று அன்று முதல் ஹீரோ ஆனான். அவர்தான் லட்சிய நடிகர் எஸ் எஸ் ஆர்.

மொழி தெரியாத நடிகரை நடிக்க வைத்தால் அவர் தரும் தொல்லைகளை தாங்க தயாராக இருக்க வேண்டும். தமிழ் கவிஞர் பாரதியாரைப் பற்றிய படம் எடுக்க , தமிழ் தெரியாத ஒருவரை தேர்வு செய்யும் கொடுமை இங்கு மட்டுமே நடக்க முடியும்.


இப்போதைய சினிமாவை பொருத்தவரை சம்பந்தம் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு அர்த்தம் இழந்த வார்த்தைகள் சில உண்டு.

டிராவல் பண்ணுதல்.. இதை எதற்கு வேண்டுமானாலும் பயன்படுத்துகிறார்கள். கதை இப்படி டிராவல் பண்ணுது , கதை அவர் மூலம்தான் டிராவல் பண்ணுது என்கிறார்கள்.




அதுபோல கெமிஸ்ட்ரி , பாடி லாங்குவேஜ் போன்றவையும் அர்த்தம் இல்லாமல் பயன்படுத்தப்படுகின்றன.




ஒரு முறை ஜெயகாந்தன் என்னிடம் பேசினார். அவர் கதைகளை படித்தால் , வேறு எதுவும் தேவையில்லை, அவர் எழுத்துகள்தான் வேதம் என அவரிடம் சொன்னேன்.

அதேபோல தமிழ் ஸ்டுடியோ பணிகள் ஒரு யாகம்..




இப்படி அவர் பேசினார்..




(இணைய மொண்ணைகளை கலாய்த்த மிஷ்கின், தமிழ் ஸ்டுடியோவை விமர்சித்த இயக்குனர் ராம், அம்ஷன் குமாரின் ஆழமான பேச்சு அடுத்த பதிவில்)

( இலக்கிய விவாதத்துடன் இறைவனை தேடி - சிலிர்ப்பூட்டும் திருவண்ணாமலை அனுபவ பகிர்வு அதற்கு அடுத்த பதிவில்)







Wednesday, December 18, 2013

சினிமாவை கலையாக பார்க்க , கடலோரத்தில் ஒரு கலக்கல் துவக்கம்


அலுவலகம் அருகே அலைகடல்





தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா சென்றேன்...சமீப காலத்தில் நான் கலந்து கொண்ட இனிய நிகழ்வுகளில் ஒன்று...




ரசனையாக இடத்தை தேர்ந்து செய்து இருக்கிறார் அருண்... வாகன இரைச்சலுக்கு பதில் அலைகளின் இரைச்சல் , புகை மூட்டத்துக்கு பதில் பறவைகள் இன்னிசை என அற்புதமான இடம்..

அருண் வழக்கமாக வழி சொல்வதில் சொதப்பி எங்காவது சுற்ற வைப்பார்.. ஆனால் இந்த முறை சரியாக சொல்லி விட்டார்.

உள்ளே போனதும் , ஒரு படம் திரையிடப்பட்டது...பர்மா ராணி என்ற யுத்த கால படம்.. யுத்த கால பட பிரதிகள் ஏதும் இப்போது நம்மிடம் இல்லை.. இந்த படம் மட்டும் எப்படியோ யாராலோ எங்கோ காக்கப்பட்டு வந்து இருக்கிறது...இந்த அபூர்வமான படத்தை அரங்கில் பார்த்தது மகிழ்ச்சி..

அதன் பின் செவிக்கு உணவு பரிமாறப்பட்டது...கவிஞர் ரவி சுப்ரமண்யம் அவர்களின் இசை நிகழ்ச்சி.. வித்தியாசமான பாடல்களை தேர்ந்தெடுத்து பாடினார்..பாரதியார் பாரதிதாசன் என பயணித்து சில கவிதைகளுக்கும் இசை அமைத்து பாடியது க்ரியேட்டிவாக இருந்தது...


லீனா மணிமேகலை , அம்ஷன்குமார், ஆர் ஆர் சீனிவாசன் , அறந்தை மணியன் உட்பட பலர் பேசினர்... ஃபார்மலாக பேசாமல் பல்வேறு தளங்களில் அறிவு பூர்வமாக பேசினார்கள்... பிரபல பதிவர்கள் , எழுத்தாளர்கள் , இயக்குனர்கள் கலந்து கொண்டாலும் பேசவில்லை...

சினிமா என்பது பொழுது போக்கு சாதனமோ , பணம் சம்பாதிக்கும் மெஷினோ அன்று..அது ஒரு கலை...  நாம் நம்மை பார்த்துக்கொள்ளும் ஒரு கண்ணாடி ,,வாழ்க்கையின் பிரதிபலிப்பு என்பதை சொல்ல சிலராவது இருப்பது மகிழ்ச்சி அளித்தது

செவிக்கு உணவு முடிந்ததும் வயிற்றுக்கு உணவு ஈயப்பட்டது...எல்லாம் இயற்கை உணவில் விளைவிக்கப்பட்ட பொருட்களால் சமைக்கப்பட்டது...அவ்வளவு சுவையாக இருந்தது.... ஃபினிஷிங் டச்சாக பாயாசம் ( சேமியா பாயாசம் அன்று )..


ஜில்லென்ற சூழல் , இயற்கை கொஞ்சும் சூழல்..அதை விட்டு வர மனமே இல்லை...  தொடர்ந்து பிரமுகர்கள் வந்து கொண்டு இருந்தனர்... நானும் ஓரிருவரும் கடற்கரைக்கு சென்று பேசிக்கொண்டு இருந்தோம்... கூட்டத்தோடு கூட்டமாக மாலை வேளைகளில் செல்வது வேறு... இரவின் அமைதியில் , கடற்கரையில் அமர்வது வேறு..
அவ்வளவு பெரிய கடல்...மேலே அவ்வளவு பெரிய வானம்... அதில் நாம் மட்டும் என்பது உன்னத உணர்வு..

அடுத்த  நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக போக வேண்டும் என நினைத்தவாறு கிளம்பினேன்..







இயற்கை தேனீர்
குளிருக்கேற்ற ஐஸ்க்ரீம்


இரவு நேர கடற்கரை


செவிக்கு உணவு இட்டபின் வயிற்றுக்கு உணவு

Saturday, October 26, 2013

பார்க்க வேண்டிய மலையாளப்படமும் , ஒரு கேவலமான ஃபிளாஷ்பேக்கும்...

வைசாலி என்ற மலையாளப்படம் சமீபத்தில் பார்த்தேன். நேர்த்தியான ஒளிப்பதிவு, வரலாற்றை மிகை உணர்ச்சி இல்லாமல் அணுகும் பாங்கு , பரதனின் திறமையான இயக்கம், மிகை அற்ற நடிப்பு, கனவுலகம் ஒன்றுக்கு எடுத்து செல்லும் இசை, அந்த காலத்திலேயே அவாள் செய்த அக்குறும்புகளை காட்சிப்படுத்திய சமூக பார்வை , ஆன்மீகம் , காதல் என நிறைய சொல்ல வேண்டும். அதற்குமுன் இந்த படம் எனக்கு முதன்முதலாக எப்படி அறிமுகம் ஆயிற்று என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இப்போதெல்லாம் மொபைல் போனிலேயே சினிமா பார்க்க முடிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்புகூட இந்த நிலை இல்லை. எனது கல்லூரி காலத்தில் “உலக” சினிமாக்களை பார்க்க வேண்டுமானால் டிவியை வாடகைக்கு எடுத்து பார்த்தால்தான் உண்டு. ஏனென்றால் நாங்கள் தங்கி இருந்த அறையில் டிவியோ , கணினியோ இல்லை.
இந்த டிவியை வாங்கி தருவதற்கென்றே சில ஸ்பான்சர்கள் அவ்வப்போது கிடைப்பதுண்டு. அண்ணன் கல்யாணம், சித்தப்பா பொண்ணு கல்யாணம் , காது குத்து , கெடா வெட்டு போன்றவற்றை சிலர் வீடியோ எடுத்து வந்து பெருமையாக நமக்கு திரையிட்டு காட்ட விரும்புவார்கள்..அதற்காக டீவியை வாடகைக்கு எடுத்து தருவார்கள்.
அவர்களது பெருமைமிகு திரையிடல் முடிந்ததும் , நாம் நம் டேஸ்ட்டுக்கேற்ற “உலக” சினிமாக்களை வாடகைக்கு எடுத்து பார்த்து கொள்ளலாம்.. இந்த வாடகை செலவு மட்டும் நம்மை சேர்ந்தது..டீவி செலவு அவர்களை சேர்ந்தது… வின்-வின் சிச்சுவேஷன். இந்த டீல் அனைவருக்கும் பிடித்த ஒன்று.

உலக சினிமா என்றால் சிலர் ஈரான் , கொரியா, மெசபடோமியா, நிகாரகுவா, ஆண்டிகுவா , ஏதென்ஸ் , ஆஸ்திரியா , பெலோ ரஷ்யா, பெர்ஷியா , லத்தீன் அமெரிக்கா என கருதுகிறார்கள். கேரளாவும் உலகத்தில்தானே இருக்கிறது..அப்படி பார்த்தால் , மலையாளப்படங்களும் உலக சினிமாதானே என்பது இவர்களுக்கு தெரிவதில்லை.
 நண்பர்கள் கொண்டு வரும் கல்யாண கேசட்டை பார்த்து முடித்த அடுத்த கணம் , பிட்டு படம் ஓட ஆரம்பிப்பதில் இருக்கும் ஒரு ”பொயட்டிக் ஜஸ்டிஸை” நான் ரசிக்க தவறுவதில்லை. கல்யாண காட்சி முடிந்ததும் , இந்த காட்சி ஓட ஆரம்பிக்கும் பரவசமான கணத்தை என்னவென்பது!!

மாமனாரின் காமவெறி , செக்ஸ் காலேஜ் , அவளோட ராவுகள் போன்ற உலகப்படங்களை பலமுறை பார்த்து அலுத்து விட்டதால், புதிதாக ஒன்றை தேடிக்கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பரிந்துரைத்த படம்தான் விசாலி.

சாமியாருக்கு ஒரு பெண் செக்ஸ் பாடம் நடத்துறாளாம்.. படம் முழுக்க ஏகப்பட்ட சீன்களாம்.. காட்டுக்குள்ள ஒரே ஜல்சாவாம் என்றார் விஞ்ஞானி.

சாமியாருக்கே செக்ஸ் பாடம் என்ற மாற்று சிந்தனை எங்களை சுண்டி இழுத்தது. கஷ்டப்பட்டு அந்த கேசட் வாங்கினோம். வழக்கம்போல ஒரு ஸ்பான்சர் புண்ணியத்தில் டீவி வாடகைக்கு எடுத்து படம் பார்க்க ஆரம்பித்தோம்.

இதுபோன்ற படங்களை பார்க்க கலை வெறிபிடித்து அலைவார்கள் அல்லவா.. அவர்களில் பெரும்பாலானோர் அந்த படங்களை முழுக்க பார்ப்பதில்லை என்பது இதில் இருக்கும் வினோதங்களில் ஒன்று. பாதிப்படத்திலேயே ஃப்ளாட் ஆகி விடுவார்கள்.
என்னைபொருத்தவரை நான் இந்த படங்களை காம வெறிகொண்டு பார்ப்பதில்லை. இயற்கை காட்சிகள் , ” நடித்தவர்களின் “ திறமை , ஷாட்டுகள் ( camera shot ) , இசை , இயக்கம் ( Direction ) போன்றவற்றுக்காகத்தான் நான் இந்த கர்(கா)மங்களை பார்த்து தொலைப்பது.
இதில் கொடுமை என்னவென்றால் , காமவெறியர்கள் எல்லாம் பாதியிலேயே தூங்கி விடுவார்கள் .  நான் மட்டும் கர்ம சிரத்தையாக பார்த்துவிட்டு , அணைத்து விட்டு ( டிவியை ) , அதன் பின் தூங்க செல்வேன். சில சமயம் தூங்க முடியாமல் , விடிந்து விடுவதும் உண்டு.

அப்படி ஒரு நாள் பார்த்த படம்தான் விசாலி..ஆனால் படம் நம்மவர்கள் டேஸ்ட்டுக்கு மேட்ச் ஆகவில்லை. வறட்சி , அரசர் என “கலையம்சம் “ இல்லாமல் எதை நோக்கி போகிறது என தெரியாமல் போய்க்கொண்டு இருந்தது. டென்ஷனாகி பலர் தூங்கி விட்டார்கள். ஏதாச்சும் சீன் இருந்தா பார்த்து சொல்லு என எனக்கு அசைன்மெண்ட் கொடுத்து இருந்ததால் , நான் ஃபார்ர்வார்ட் எல்லாம் செய்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. தோல்வியையே அறியாத நான் , தோல்வியை ஒப்புக்கொண்டு ஆஃப் செய்து விட்டேன்.

இப்படி ஒரு நல்ல படத்தை பிட்டு படம் என நினைத்தேன் என்றால் என் மலையாள சினிமா அறிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பது உங்களுக்க்கு புரிந்து இருக்கும். ஆனால் என் சினிமா அறிவு இந்த லட்சணத்தில் இருப்பது எனக்கே தெரிந்தது ஒரு மினி பதிவர் சந்திப்பில்தான்.

இப்போதெல்லாம் ஆர்கனைஸ்டாக சந்திப்பை நடத்துகிறார்கள்..முன்பெல்லாம் இன்ஃபார்மலாக நடக்கும்.
அப்போதெல்லாம் அவ்வப்போது கலந்து கொண்ட என்னை இப்போது நடக்கும் சந்திப்புகளில் பார்க்க முடியாது. இனி சந்திப்புகளில் கலந்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்ததற்கு பின் ஒரு வரலாற்று சம்பவம் இருக்கிறது.

ஒரு சந்திப்பின் போது இரு சினிமா (பதிவர் ) தாதாக்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது..கூடவே இலக்கிய கில்லாடிகளும் இருந்தனர்.

தோழர். நீங்க மலையாளப்படமெல்லாம் பார்த்து இருக்கீங்களா… என்றார் ஒருவர்… ஓ பார்த்து இருக்கிறேனே என்றேன்.. நான் பார்க்காத மலையாளப்படமா.
ஓ. உங்களுக்கு மலையாளம் தெரியுமா என்றார் இன்னொருவர்…
இதுக்கு எதுக்கு மொழி தெரியணும் என்றேன்.. கூட இருந்தவருக்கு மகிழ்ச்சி…ஆமா..கலைக்கு மொழி தேவை இல்லை… காட்சிமொழிகளாலும் , பிம்பங்களாலும் , படிமங்களாலும்தான் திரை மொழி தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது என்றார்.

படிமம் என்ற சொல்லையே அப்போதுதான் முதன்முதலாக கேள்விப்படுகிறேன்.. அது என்ன பிம்பம், காட்சிமொழி…எனக்கு மைல்டாக டவுட் வர ஆரம்பித்தது.

தோழர் நீங்க பார்த்ததிலேயே உங்களுக்கு பிடித்த மலையாளப்படம் எது என்றார்.

நிறையப்படம் இருக்கே .எதை என சொல்வது என யோசிக்கலானேன். அப்போது இன்னொருவர் சிலர் ஆப்ஷன்கள் கொடுத்தார்/…அதைகேட்டதும்தான் , அவர்கள் வேறு ஏதோ ஒரு தளத்தில் பேசுவதை உணர்ந்தேன். கொஞ்சம் இருங்க…பிஸ் அடிச்சுட்டு வந்துறேன் என சொல்லி விட்டு கிளம்பியவன் தான் ..அதன் பின் எந்த சந்திப்புக்கும் போனதில்லை. நான் மட்டும் எனக்கு பிடித்த படம் என என் வாய் வரை வந்து விட்ட படத்தை சொல்லி இருந்தால்? நினைக்கவே பயமாக இருக்கிறது… அருகில் இருந்தவர்களில் பலர் இன்றும் என் நண்பர்கள் என்பதால் , என் பயம் உங்களுக்கு புரியும் என நினைக்கிறேன்.

அந்த வரலாற்று சிறப்பு மிக்க வைசாலி படத்தைத்தான் சமீபத்தில் ரசித்து பார்த்தேன்.

மகாபாரதத்தில் இருந்து ஒரு சிறிய சம்பவத்தை படமாக்கி இருக்கிறார்கள்.


மழை பொய்த்து போய் , வறட்சியில் வாடும் சாம்ராஜ்யம். அரசருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை..பூஜை , ஹோமம் என எதுவும் பலனளிக்கவில்லை. ( ஏன் மழை பொய்த்தது,..சாபம் …என்பதெல்லாம் வேறு கதை )

ராஜகுரு அரசருக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். அவரது மகன் , வைசாலி என்ற பெண்ணை விரும்புகிறான். அவள் அரசருக்கு பிறந்த பெண்..ஆனால் சட்டப்படியான வாரிசு அல்ல…எனவே ராஜகுரு அந்த காதலை விரும்பவில்லை.


இந்த சூழ் நிலையில் , மழை பொழியச்செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது … மனிதர்களையே பார்க்காமல் , காட்டிலேயே வைத்து வளர்க்கப்பட்டு , தவ ஆற்றல் முழுமையாக கைவரப்பெற்ற ரிஷி குமாரனை ( ரிஷ்ய சிருங்கர்) அழைத்து வந்து பூஜை செய்தால் , மழை வரும் என்கிறார் குரு… ( அவர் ஏன் தந்தையால் வளர்க்கப்படுகிறார்… தாய் என்ன ஆனாள்.. ஏன் தனிமையாக வைத்து வளர்க்கிறார் என்பதெல்லாம் பெரிய வரலாறு ) ஆனால் அவர் வர சம்மதிக்க மாட்டார்.. படை பலத்தாலோ , பண பலத்தாலோ கூட்டி வர இயலாது… ஒரு பெண்ணை அனுப்பி , அவரை மயக்கி கூட்டி வருவதுதான் ஒரே வழி என்கிறார் குரு. அந்த பெண் அழகிலும் , கலைகளிலும் சிறந்தவளாக இருக்க வேண்டும். அவளால்தான் இதை செய்ய முடியும். இந்த பண்புகள் கொண்ட ஒரே பெண் வைசாலிதான் என்கிறார்.

செண்டிமெண்ட் , கடமை, தேசத்தின் தேவை என்பதை எல்லாம் பேசி அவளை அனுப்ப , அவள் தாயின் சம்மதம் பெறுகிறார்கள்.. எதேனும் தவறு நிகழ்ந்தால், அந்த ரிஷி கடுமையாக தண்டித்து விடுவார்.. மற்றும் அந்த இடம் அபாயமிக்கது…அப்படி இருந்தாலும் , உயிர் பற்றி கவலை இன்றி காட்டுக்கு செல்கிறார்கள்..இப்படி ஒரு பணிக்கு தன் பெண்ணை அழைத்து செல்வது ஒரு தாய்க்கு கஷ்டம்தான்..ஆனாலும் ஒரு கடமைக்காக செல்கிறார்கள்.
ரிஷிகுமாரனை மெல்ல மெல்ல வைசாலி மயக்குகிறாள்..இதில் அவன்மீது உண்மையிலேயே காதல் கொள்கிறாள்.

பல்வேறு அபாயங்களுக்கு மத்தியில் ,, உயிர் தியாகம் செய்து அழைத்து வருகிறார்கள்/. மழை பெய்கிறது.. ஊரே மகிழ்கிறது.

அரசர் மனம் மகிழ்ந்து , ரிஷிகுமாரனுக்கும் தன் மகளுக்கும் திருமணம் என அறிவிக்கிறார். தனக்கு மகள் என்ற அந்தஸ்து கிடைத்து விட்டதே என வைசாலி மகிழ்கிறாள்..தாயும் மகிழ்கிறாள்..ஆனால் கடைசி நிமிடத்தில் நிகழும் திருப்பம், படத்துக்கு வேறொரு அர்த்தத்தை கொடுக்கிறது..

ஓர் ஆணை மயக்கும் பெண் என்ற கான்சப்ட் கிடைத்தால் , நம் ஆட்கள் பிரித்து மேய்ந்து விடுவார்கள்.. ஆனால் படத்தில் துளியும் ஆபாசம் இல்லை. சில முத்தக்காட்சிகளும்கூட இயல்பாக அமைந்துள்ளன.
ஒளிப்பதிவு மிக சிறப்பாக இருந்தது…ஒளியும் இருளும் கலந்த சந்திப்பொழுதுகளை இவ்வளவு அழகாக எந்த படத்திலும் பார்த்தது இல்லை.
ஒரு பெண்ணின் , ஆணின் ஆயுட்காலம் வெகு குறைவு.. ஆனால் பெண் தன்மையும் , ஆண் தன்மையும் என்றென்றும் இருப்பன. அந்த ஆண் தன்மையும் பெண் தன்மையும் இணையும்போதுதான் ஒரு செயல் உருவாகிறது… இதைத்தான் படம் சொல்கிறது.. காட்டில் பெண் வாசனையே இல்லாமல் இருந்தபோது சாதிக்க முடியாததை , பெண்மை தன்னை ஆகர்ஷிக்க அனுமதிக்கையில் சாதிக்க முடிகிறது .


ஓஷோ ஒரு கதை சொல்லி இருப்பார்.. ஒரு நாட்டில் பயங்கர வறட்சி. மழையே இல்லை.. ஒரு துறவியை வரவழைத்தார்கள்.. அவர் இயற்கையின் ஒழுங்கு , மனிதர்களின்  ஒழுங்கு எல்லாம் முற்றிலும் சீர்கெட்டு இருப்பதைக் கண்டார். ஒன்று ஒழுங்குடன் இருந்தால்தான் , இன்னொன்று ஒழுங்காகும் என அறிந்து , ஒரு குடில் அமைத்தார். அதில் அவரும் அவர் சீடர்களும் முழு ஒழுங்குடன் , உடலாலும் மனதாலும் இருந்து வந்தனர்… வேறு வழியின்றி இயற்கையும் தன் ஒழுங்குக்கு வந்து மழை பொழிந்தது..
ரிஷ்யசிருங்கர் வந்ததும் மழை பெய்வதில் மாய மந்திரம் இல்லை.. அது ஒரு தத்துவம்..
இப்படி தத்துவ ரீதியாக மட்டும் அன்றி சமூக ரீதியாகவும் படம் ஸ்கோர் செய்வது குறிப்படத்தக்கது.
தன் மகன் வைசாலியை காதலிப்பதை ஏற்காமல் ராஜ குரு செய்யும் சதி செயல்கள் அப்போதைய ஜாதி அமைப்பை கண் முன் நிறுத்துகின்றன.

யாரால் அந்த ஊருக்கு மழை கிடைத்ததோ , யாரால் சாபம் நீங்கியதோ அவர்களை மறந்து கொண்டாட்டத்தில் திளைக்கும் மக்களின் மறதித்தன்மை அபாரமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு கதை நினைவுக்கு வந்தது.

ஓர் ஊரில் மழை ரொம்ப நாளாக இல்லை… மிதக்கும் மேகங்கள் மழை பொழியாமல் போய் விடும்.. மக்கள் துடித்தனர்.. ஒரு பெரிய மேகம் மிதப்பதை பார்த்து அதனிடம் கண்ணீர் மல்க பிரார்த்தித்தினர்… மனமிரங்கி மேகம் மழையாக பொய்தது..
அனைவரும் ஆட்டம் பாட்டம் என்ன கொண்டாடினர்… கடைசியில் ஒருவர் சொன்னார்… “ நாம் கொண்டாட்டத்துக்கு காரணமான மேகத்துக்கு நன்றி சொல்ல மறந்து விட்டோமே”

அடடா..அனைவருக்கும் அப்போதுதான் நினைவு வந்தது… நன்றி சொல்ல வானத்தை அண்ணாந்து பார்த்து மேகத்தை தேடினர்.. நன்றியை ஏற்க மேகம் இல்லை… அதுதான் தன்னை மழையாக கொடுத்து விட்டதே..

உலகம் எப்போதும் இப்படித்தான் இருந்து வருகிறது.. நன்றி கெட்டத்தனமாக நடந்து உலகம் , என்றாவது நன்றி சொல்ல நினைக்கும்போது , நன்றியை ஏற்க உரியவர்கள் இருப்பதில்லை..






-+

Friday, October 18, 2013

காலம் கடந்து நிற்கும் ஒரு கலைஞனின் உன்னத திரைப்படம்


 எத்தனையோ படங்கள் பார்க்கிறோம். அவற்றில் சில படங்களை நம்மால் என்றும் மறக்க முடியாது.. அப்படிப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.

ரசிக்க கற்க இந்த படத்தில் ஏராளமான விஷயங்கள் உண்டு.






இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ முக்கியமான நூறு படங்களை திரையிடும் செய்தி எனக்கு மகிழ்ச்சி அளித்தது.. ஆர்வமாக திரையிடப்படும் பட்டியலை பார்த்தேன்.

அந்த பட்டியலில் நான் பார்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை குறித்து வைத்தேன். தவிர்க்க வேண்டிய படங்கள் என சில படங்களை சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இட்டேன். அப்படி சிவப்பு நிறத்தில் அடிக்கோடு இடப்பட்ட படங்களில் ஒன்றுதான் ஏழை படும் பாடு.
இதை தவிர்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள். படத்தலைப்பு சோகப்படம் என்று சொல்கிறது. பழைய கால சோகப்படம் என்றால் நம் மனதில் ஒரு பிம்பம் எழுமே.. சோகமயமான பாடல்கள் , அழுது வடியும் கதாபாத்திரங்கள் , நீள நீளமான வசனங்கள் என்ற டெம்ப்ளேட்டை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்.
இன்னொரு காரணம் படத்தின் நாயகன் நாகையா. இவரைப்பற்றி அந்த காலத்தில் என் சித்தப்பா ஒருவர்தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தினார். இவர் பெயர்தாண்டா நாகையா.. எல்லா படத்திலும் வருவார். ரத்தம் கக்கி இருமி இருமி சாவார்.. என்றார். அவர் சொன்னது போலவே , நான் பார்த்த எல்லா படங்களிலும் கொஞ்ச நேரம் வந்து , இருமி விட்டு இறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டு இருந்தார். முழு படத்திலும் இருமிக்கொண்டு இருக்கப்போகிறாரா என்ற சந்தேகம் இந்த படத்துக்கு அல்ல...இந்த படம் திரையிடப்படும் கோடம்பாக்கம் இருக்கும் திசைக்கே போகக்கூடாது என்று எண்ண வைத்தது.
இந்த எண்ணத்தை மாற்றி அமைத்தது சில நாட்களுக்கு முன் பார்த்த மர்ம யோகி திரைப்படம். இயக்கம் கே ராம்னாத்... ஆங்கிலப்படம் போல எடுத்து இருப்பார். செருக்களத்தூர் சாமாவின் நடிப்பும் அந்த படத்தில் இயல்பாக இருந்தது. எனவே ரிஸ்க் எடுக்க துணிந்தேன்.



Tuesday, October 15, 2013

இயக்குனருக்கு சவால் விட்டு ஜெயகாந்தன் தானே இயக்கிய படம் - இமயங்களின் மோதல்

ஜெயகாந்தனின் எழுத்துகளைப்போல அவர் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. எழுத்தாளாரான அவர் சினிமாவிலும் இறங்கியது அப்படி ஒரு சுவையான நிகழ்வுதான்.

அப்போது அவர் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். சோவியத் யூனியன் ஆதரவாளராகவும் இருந்தார். திமுகவினரை எதிர்த்து பேசுவது அவரது முக்கியப்பணியாக இருந்தது.. திமுகவினர் சினிமாவை முக்கிய பிரச்சார ஆயுதமாக பயன்படுத்துவதை பார்த்த கம்யூனிஸ்ட் தோழர்கள் , அதற்கு மாற்றாக நல்ல சினிமாவை வழங்கி சினிமா எனும் ஊடகத்தை கைப்பற்ற வேண்டும் என நினைத்தார்கள். அவர்கள் முயற்சியால்தான் ஜெயகாந்தன் சினிமாவுக்கு வந்தார்.

அவரது இயக்கத்தில் வந்த முதல் படமான உன்னைப்போல ஒருவன்  அவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்தது. இந்த பின்னணியில் அவரது யாருக்காக அழுதான்  நாவலை படமாக்க பலரும் விரும்பினர். அதில் முக்கியமானவர் சந்திர பாபு. ஆனால் சந்திரபாபு தன்னை டாமினேட் செய்வதாக நினைத்த ஜெகே அவருக்கு படம் தயாரிக்கும் உரிமையை தரவில்லை.

பாலும் பழமும் போன்ற வெற்றிப்படங்களை எடுத்த வேலுமணிக்கு படம் தயாரிக்கும் உரிமையை கொடுத்தார். அந்த படத்துக்கு இயக்குனர் ஸ்ரீதர்.
அப்போதைய ஸ்டார்கள் சிவாஜி , சாவித்ரி , ரங்காராவ் என அட்டகாசமான டீம் அமைந்து இருந்தது.. படம் மளமளவென வளர்ந்து வந்தது..அப்போதுதான் விதி விளையாடியது.

வழியில் போகும் தச்சரைகூப்பிட்டு , தனக்கு ஓர் ஆப்பு அடித்து விட்டு போகசொல்வது போல , ஜெயகாந்தனை அழைத்து , தான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் திரைக்கதையை சொன்னார் ஸ்ரீதர்.

சிவாஜி ஓர் அனாதை ,,, லாட்ஜில் வேலை செய்கிறார்.. தன் முதலாளி பாலையாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். .. பாலையாவும் அன்பாக இருக்கிறார்..அங்கு தங்கி இருக்கும் ரங்காராவ் சிவாஜி மீது அன்பாக இருக்கிறார்.. இனிமையான பாடல் எல்லாம் பாடுகிறார்கள்.. அங்கே சாவித்ரியும் ஓர் ஆணும் தங்க வருகிறார்கள்..டூயட் எல்லாம் பாடுகிறார்கள்.. அவன் சந்தர்ப்ப சூழ் நிலையால் சாவித்ரியை பிரிந்து செல்கிறான்.

சிவாஜிக்கு இதை எல்லாம் ஃப்லாஷ் பேக்காக சொல்கிறார். சிவாஜியும் தன் கதையை சொல்கிறார். ஊரில் அவரை வளர்த்த பாதிரியார். சிவாஜியின் காதல்... ஒரு டூயட்...காதல் தோல்வி.. ஒரு சோகப்பாடல் என சொல்லி முடிக்கிறார்...
சிவாஜியை மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் அவமானப்படுத்த , சாவித்ரி மட்டும் அன்பாக இருக்கிறார்.

இந்த நிலையில் சிவாஜி மீது , அவர் செய்யாத தவறுக்கு பழி சுமத்தப்படுகிறது... அடி உதை என எல்லாவற்றையும் தாங்குகிறார்.. ஆனால் வருந்தவில்லை.. ஆனால் ஒரு கட்டத்தில் சாவித்ரியும் சேர்த்து பழி சுமத்தப்பட்டு அவமானத்துடன் ஊரை விட்டு செல்லவே, சிவாஜி ஒரு சோகப்பாட்டு பாடி , உயிர் துறக்கிறார்.

எப்பூடி என பெருமையாக ஜெகேயை பார்த்தார் ஸ்ரீதர்...
என் கதையையே மாற்றி விட்டீர்களே... டைட்டிலையும் மாற்றி விடுங்கள்.. யாருக்காக செத்தான் என மாற்றுங்கள் என கோபமாக சொல்ல ஸ்ரீதர் திகைத்தார்.. ஜெயகாந்தன் இப்படி வழக்கமான ஃபார்மேட்டில் தன் கதை படமாவதை விரும்பவில்லை.. ஆனால் அப்படி எடுத்தால்தான் ஓடும் என்பது ஸ்ரீதர் கருத்து.. இந்த கருத்து வேறுபாடு முற்றி கடைசியில் படம் கைவிடப்பட்டது... இருவரும் அவரவர் துறையில் இமயங்கள்.. ஆனால் ( அதனால் ) ஒத்துபோக முடியவில்லை.
அந்த படம் வெளியாகி இருந்தால் , பாசமலரை மிஞ்சும் வகையில் ஹிட் ஆகி இருக்கும்.. சிவாஜிக்கு முக்கியமான படமாக இருந்திருக்கும்.

எ ந்த இயக்குனரும் வேண்டாம்,



என் கதையை நானே எடுக்கிறேன் என சவால் விட்டு ஜெகேயே படத்தை பின்பு எடுத்தார்..
 நாகேஷ் , கே ஆர் விஜயா , பாலையா , சகஸ்ர நாமம் நடித்தனர். கண்ணதாசன் பாடல் எழுதினார்.. சவால் படம் என்பதால் அந்த காலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது..

அதே எதிர்பார்ப்புடன் நானும் இன்று அந்த படம் பார்த்தேன்...தமிழ் ஸ்டுடியோ திரையிடலில்.

படம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

******************************************************

ஜெயகாந்தன் தன் படம் காட்சிபூர்வமாக இருக்க வேண்டும்  என நினைத்ததால்தான் ஸ்ரீதருடன் பிணக்கு ஏற்பட்டது என்பது கொஞ்ச நேரத்திலேயே தெரிந்தது.. பாடல்கள் , டூயட்டுகள் இல்லாத யதார்த்தவாத பாணி படமாக எடுப்பது அவர் கனவாக இருந்து இருக்கிறது. இந்த படத்தில் ஒரு பாடல் இருந்தாலும் அது பின்னணி பாடலாக வருகிறதே தவிர யாரும் பாடுவதாக வரவில்லை.

ஃப்ளாஷ் பேக் , பழைய காதல் சம்பவங்கள் என்றெல்லாம் செல்லாமல் சொல்ல வேண்டியதை சுருக்கமாக நேரடியாக ஆங்கிலப்படம் போல சொல்லி இருக்கிறார்.


கே ஆர் விஜயா , நாகேஷ் ஆகியோரின் ப்ழைய கதைகள் சில காட்சிகளில் வலுவாக சொல்லப்பட்டு விடுகின்றன.


அவர்கள் மட்டும் அல்ல... லாட்ஜ் ஓனர், சமையல்காரர் , சூதாடி . சேட்டு , ஜோசியக்காரர் என ஒவ்வொருவர் பற்றியும் நமக்கு நன்கு தெரிந்து விடுகிறது , வலுவான காட்சிகள் மூலம்.

ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி சொல்வதற்கே ஆரம்பத்தில் பெரும்பாலான நேரம் செலவிடப்படுகிறது.. வணிகப்படங்களில் ஆரம்பத்திலேயே கதையை ஆரம்பித்து ரசிகனை ஈர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.. இதில் பொறுமையாக கதை ஆரம்பிக்கிறது. ஆனால் க்தை ஆரம்பித்தவுடம் நம்மால் ஒன்ற முடிகிறது.

கெட்டது செய்யக்கூடாது என்றால் , கெட்டது என்றால் என்ன என்று கேட்பவன் ஜோசப் ... அந்த அளவுக்கு கெட்டது என்றால் என்ன என்றே தெரியாதவன்.


அனைவரிடம் அன்பாக இருப்பவன்.. திட்டினாலும் , அவமானப்படுத்தினாலும் அழ வேண்டும் என்பது கூட தெரியாதவன். லாட்ஜ் ஒன்றில் வேலை செய்து , கஷ்டப்பட்டு பணம் சேர்க்கிறான்.. அங்கு தங்கி இருக்கும் ஒரு பெண் அவன் மீது பரிவுடன் இருக்கிறாள்..



ஒரு நாள் அங்கு தங்க வரும் சேட் குடிபோதையில் பர்சை தவற விடுகிறான்..




அது ஓனர் கைக்கு வருகிறது... அதை அவர் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து கொள்கிறார்.




மறு நாள் பர்சைத்தேடும் சேட்டு , ஜோசப் மீது பழி போடுகிறான்.. எல்லோரும் அவனை சந்தேகிக்கிறார்கள்... பர்ஸ் ஓனரிடம் இருப்பது தெரிந்தும் ஜோசப் அமைதி காக்கிறான்..அவனை அடித்து துன்புறுத்துகிறார்கள்.. அவன் சேர்த்து வைத்து இருக்கும் பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள்... உதவ வரும் அந்த பெண்ணையும் சந்தேகிக்கிறார்கள்...

ஊருக்கு சென்று இருந்த சமையல்கார் திரும்ப வருகிறார்.. அவர் முயற்சியால் பர்ஸ் சேட்டுக்கு கிடைக்கிறது.. அப்போதும் முதலாளி வாய் திறக்கவில்லை.. இத்தனைக்கும் அவர் பெரிய பக்திமான்...

பெரிய மனிதனிடம் இருக்கும் சின்னத்தனம்,. கூட இருப்பவர்களே குழி பறிக்கும் அவலம், உதவ நினைப்பவர்களுக்கு கிடைக்கும் அவமானம் , அப்பாவிகளின் கையாலாகத நிலை என்பதெல்லாம் ஜோசப்புக்கு அப்போதுதான் உறைக்கிறது...

அதுவரை அழுதறியாத அவன் வாய் விட்டு கதறுகிறான் என்பதுடன் படம் முடிகிறது.

எவ்வளவு பெரிய அயோக்கியர்கள் கூட்டத்திலும் ஒரு நல்லவன் இருப்பான் ( ஷிண்டலர் லிஸ்ட் நினைவு இருக்கிறதா ) என்பது போன்ற அழுத்தமான பாத்திரபடைப்பு ( சமையல்காரர் ) , பொம்மை காட்சி , தன்னை நல்லவன் என நினைத்து கொண்டு - ஆனால் கெட்டது செய்யும் லாட்ஜ் ஓனரின் குற்ற உணர்வு , ஆதரவற்ற நிலையில் தான் இருந்த போதும்  ஜோசப் மீது பரிவு காட்டும் பெண் , போட்டு வாங்கும் யுக்தி மூலம் இந்த பிரச்னையை தனக்கு சாதகமாக்க முயலும் ஜோதிடர் என பலவற்றை ரசிக்க முடிகிறது..

படத்தை டிரை ஆக செல்லாமல் பல சுவாரஸ்யமாக காட்சிகள் காப்பாற்றுகின்றன. உதாரணமாக , அந்த பெண் தன் நகைகளை விற்க தன்னுடன் துணைக்கு வருமாறு ஜோசப்பை கூப்பிட்டு இருப்பாள்.. இந்த காட்சி கேஷுவலாக வரும். முக்கியத்துவம் ஏதும் இல்லாத காட்சி போல தோன்றும்...

அதன் பின் ஜோசப்புக்கு திருட்டுப்பட்டம் கிடைத்தவுடன்.அந்த காட்சி அழுத்தம் பெற்று விடும்.. அந்த காட்சியின் தொடர்ச்சியாக , இப்போது நகையை விற்க முயன்றால் , அந்த பெண்ணும் சந்தேக வளையத்தில் சிக்கி விடுவாளோ என்ற பதைபதைப்பை ஏற்படுத்தவே அந்த காட்சி...

இப்படி வசனங்கள் , பாடல்கள் இல்லாமலேயே உணர்வு பூர்வமாக படம் எடுத்த ஜெயகாந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அவ்வளவாக படம் பிடிக்கவில்லை.. வசூல் ரீதியாக தோல்விதான்.

ஆனால் விஷ்யம் தெரிந்தவர்கள் அன்றே பாராட்டி இருக்கிறார்கள்..இன்றும் படத்தை பார்க்கும்படி இருக்கிறது..
பாலையா, நாகேஷின் நடிப்பு , கே ஆர் விஜ்யாவின் அழகு , கண்ணதாசனின் பாடல் போன்றவற்றை என்றும் ரசிக்கலாம்.
ஒரு வேளை வேறு இயக்குனர் இயக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்க கூடும்..

ஆனால் ஸ்ரீதர் இயக்கி வணிகப்படமாகி அடையும் வெற்றியை விட , இப்படி ஒரு முயற்சியில் ஜெகே அடைந்த தோல்வி ஒருவகையில் வெற்றிதான்..

முயலை குறி வைத்து அடித்து வீழ்த்தும் அம்பை விட , யானை மீது எய்து , குறிதப்பிய அம்பை ஏந்துவது இனிமை அல்லவா..

யாருக்காக அழுதான்? - யார் வேண்டுமானாலும் ரசிக்கத்தக்க படம் 
*************************************************
பின் குறிப்பு

படம் முடிந்ததும் அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.. இத்தனை ஆண்டுகள் கழித்தும் கிடைக்கும் கைதட்டலை விட வேறு என்ன விருதை நாகேஷ் எனும் அந்த  மகா கலைஞனுக்கு வழங்கி விட முடியும்..








Sunday, October 13, 2013

நடிகர்கள் என்ன செய்கிறார்கள்? ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் கண்ணீர் !

















ஒரு விஷயத்தைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ அந்த அளவுக்க்கு , அந்த துறை பற்றிய அறியாமை நமக்கு தெரிய ஆரம்பிக்கும். 
நாமெல்லாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள்..கடந்த சில ஆண்டுகளாக சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தான் முதல்வராக இருக்கிறார்கள்.. ஆனால் சினிமாவைப்பற்றிய சில அடிப்படை தகவல்கள்கூட தெரியாத நிலையில்தான் பெரும்பாலும் இருக்கிறோம்.
இந்திய சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் தமிழ் ஸ்டுடியோ அமைப்பு , சிறப்பு புகைப்பட கண்காட்சி நடத்தி வருகிறது. இதன் திடக்க விழா 12.10.2013 அன்று நடந்தது..

அதில் ட்ராட்ஸ்கி மருதி, ஒளிப்பதிவாளர் நல்லுசாமி , ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் ஆகியோர் மிகச்சிறப்பான உரை வழங்கினார்கள்.. ஃபார்மலான உரையாக இல்லாமல் , ப்ரொஃபசனல் உரையாக இருந்தது. அதில் , இந்தியாவில் இது வரை 70 எம் எம் படம் எடுக்கப்பட்டதே இல்லை என்ற செய்தி என்னை ஆச்சர்யப்படுத்தியது.. இது போல பல புதிய செய்திகள் கிடைத்தன. அபூர்வமான புகைப்படங்களை பார்க்க முடிந்தது..

வரவேற்று பேசிய அருண், இந்த கண்காட்சி தேடலுக்கான விடை அல்ல...தேடலுக்கான ஆரம்பம் என்றார். ஒவ்வொரு படத்துக்கு பின் இருக்கும் கதைகளை , வரலாற்றை தேடிப்பாருங்கள் என்றார்.

மருது பேசுகையில், தமிழகமும் தென்னிந்தியாவும் இந்திய சினிமாவில் முக்கியப்பங்காற்றி இருக்கின்றன.. ஆனால் அதை எல்லாம் மறந்து விட்டனர் என்றார்.

நல்லுசாமி பேசுகையில் தொழில் நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியைப்பற்றி விரிவாக சொன்னார்.

கறுப்பு வெள்ளை, டெக்னிக் கலர் , ஈஸ்ட்மென் கலர் என்று ஒவ்வொன்றையும் விரிவாக சொன்னார். 

35 எம் எம் படம் , சினிமாஸ்கோப் , 70 எம் எம் இவை எல்லாம் எப்படி எடுக்கபடுகின்றன என்று சொன்ன அவர் , தமிழில் இதுவரை 70 எம் எம் படங்கள் எடுக்கப்பட்டதே இல்லை என்று சொன்னபோது பார்வையாளர்கள் திகைத்தனர்... எத்தனையோ 70 எம் எம் படங்கள் வந்து இருக்கின்றனவே என நினைத்தபோது அவர் விளக்கினார்.

அஸ்பக்ட் ரேஷியோ குறித்து விளக்கிய அவர் , நம் ஊரில் சினிமாஸ்கோப் முறையில் எடுத்து அதை 70 எம் எம் ஆக மாற்றுகிறார்களே தவிர நேரடியாக 70 எம் எம் எடுத்ததில்லை என்றார்.

காந்தி படத்தை இந்திய படமாக கருதினால் , அது மட்டும்தான் 70 எம் எம்மில் எடுக்கப்பட்ட ஒரே இந்திய படம் என்றார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது..

தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு கலை வளரவில்லை.. அழகியல் வளரவில்லை.. ஆவாரா, கான் வித் விண்ட் போன்ற படங்களுக்கு நிகரான ஒளிப்பதிவு இன்று இல்லை...100 கோடி 200 கோடி செலவழித்து என்ன பயன்?

மொழிக்கு ஓர் இலக்கணம் இருக்கிறது.. நேற்று வந்தான் என சொல்ல வேண்டும். நேற்று வருவேன் என சொல்ல கூடாது. அது போல சினிமாவுக்கும் இலக்கணம் இருக்கிறது.

180 டிகிரி கான்சப்ட் என்று இருக்கிறது..  சில காட்சிகளில் வேண்டுமென்றே அதை மீறலாம்.. ஆனால் அப்படி ஒன்று இருப்பதே தெரியாமல் , அதை மீறி படம் எடுக்கிறார்கள்.. இரண்டு கேரக்டர் பேசினால் ., யாரை ஃபோக்கஸ் செய்ய வேண்டும் என காட்சியின் அடிப்படையில் இயக்குனர் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாவிட்டால் , இருவரையும் ஃபோக்கஸ் செய்து எடுக்க வேண்டும். ஆனால் இயக்குனர்களுக்கு ஒளிப்பதிவு குறித்த அறிவு இல்லாததால் அவர்கள் சும்மா சீனை மட்டும் சொல்லி விடுகிறார்கள்..கேமரா மேன் தன் விருப்பத்துக்கு ஏற்ப எடுக்கிறார்.
இதனால் படத்தின் தரம் குறைகிறது , முதலில் இரு  படங்கள் நடிப்பு , பாடல்கள் என சில காரணங்களுக்காக ஓடலாம்..ஆனால் இந்த வெற்றி நீடிக்காது.

எனவே முதலில் தொழிலை கற்றுக்கொண்டு அதன் பின் இறங்குங்கள்..இது சினிமாவுக்கு மட்டும் அல்ல..அனைத்து துறைக்கும் பொருந்தும்.

பீம்சிங் படங்கள். ஸ்ரீதர்- வின்சண்ட் காம்பினேஷனில் வந்த படங்களை பாருங்கள்.. ஒளிப்பதிவின் நேர்த்தி புரியும்.

என்றோ வந்த அவள் அப்படித்தான் படத்தின் ஒளிப்பதிவை நினைவில் வைத்து இன்றும் என்னை அழைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அதில் இருக்கும் உயிர்.

பீம்சிங் ஒரு தொழில் நுட்ப வல்லுனர்...எனவேதான் அவர் படங்கள் சிறப்பாக உள்ளன..இன்றோ தயாரிப்பளரிடம் நன்றாக  கதை சொல்பவர்தான் இயக்குனர் என்றாகி விட்டது..

யார் வேண்டுமானாலும் இயக்குனர் ஆகலாம்..ஆனால் முதலில் கற்றுக்கொண்டு பிறகு களம் இறங்குங்கள் என்றார்.

ஃபில்ம் ந்யூஸ் ஆனந்தன் மிக உருக்கமாக பேசினார்.
தமிழின் முதல் படம் எடுத்த நடராஜ முதலியாரை  நான் பார்த்து இருக்கிறேன். அந்த காலம் முதல் இன்று வரையிலான அரிய தகவல்கள் , நூல்கள், ப்டங்கள் சேர்த்து வைத்து இருக்கிறேன்.

இதை எல்லாம் வைத்து கண்காட்சி நடத்த பல வருடங்களாக முயன்றேன். யாரும் உதவவில்லை.. முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதி , அத்தனை தகவல்களையும் புத்தக வடிவில் வெளியிட உதவி கேட்டேன். இரண்டே நாட்களில் பதில் போட்டார். அவர் ஆதரவால் புத்தகம் வெளியானது.
 நிரந்தர கண்காட்சியில் வைப்பதாக சொல்லி என் சேகரிப்புகளை ஒரு பஸ்சில் வைத்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்..அப்படி எடுத்து சென்றபோது , என் குழந்தைகளை எடுத்து செல்வது போல வேதனைப்பட்டேன். ஒரு மாதம் அழுது கொண்டே இருந்தேன்.

ஆனால் சொன்னபடி கண்காட்சி நடத்தவில்லை//அந்த நூல்களை எங்கோ போட்டு வைத்து விட்டனர்... முதல்வருக்கு இதை கவனிக்க நேரம் இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நடிகர் சங்கம் என்ன செய்கிறது... நடிகர்கள் என்ன செய்கிறார்கள்?

ஆந்திரா, கேரளா விழாக்களுக்கு என்னை அழைத்து மரியாதை செய்கிறார்கள்...தமிழ் சினிமாத்துறையினர் என்னை மதிப்பதில்லை... நூற்றாண்டு விழாவில் என்னை கண்டு கொள்ளவில்லை..

நான் எனக்காக எதுவும் கேட்கவில்லை... நான் எத்தனை நாட்கள் இருப்பேன் என தெரியவில்லை.. நான் இருக்கும்போதே நம் சினிமா வரலாற்றை ஆவணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் ஆசை என சொல்லி கண்கலங்கினார்..

விடைபெறும்போது, அருணின் கைகளைப்பிடித்து கண்ணீருடன் சொன்னார்...

“ என் குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கப்பா”

அத்தகைய அரிய புகைப்படங்களின் கண்காட்சி இன்றுவரை( திங்கட்கிழமை- 14.10.2013) நடக்கிறது... 

கண்டிப்பாக சென்று பாருங்கள்..அந்த பெரிய மனிதருக்கு நாம் செய்யகூடிய குறைந்த பட்ச மரியாதை அதுதான்...




Sunday, October 6, 2013

அபூர்வமான நூறு திரைப்படங்கள் இலவசமாக -சென்னையில் சினிமா விருந்து


  நான் ஆரம்ப காலத்தில் வேலை செய்த நிறுவனத்தில் , இயந்திரவியல் துறையில்  தரக்கட்டுப்பாடு பிரிவில் இருந்தேன்.. சம்பந்தம் இல்லாத துறைகளில் தலையிடுவது , ஆர்வக்கோளாறு காரணமாக புதிதாக ஏதாவது முயன்று உள்ளதையும் கெடுப்பது என எதையாவது செய்து சீனியரை டென்ஷன் ஆக்குவது என் இயல்பு.

அவர் காச் மூச் என கத்துவார். “ ஏன் இந்த மாதிரி எல்லாம் பண்றீங்க..உங்க படிப்புக்கு மதிப்பு கொடுக்குறேன்.. அதை கெடுத்துக்காதீங்க “ என சத்தம் போடுவார்.

அந்த டென்ஷனான நிலையிலும் என் படிப்பை சிலாகிப்பது ஒரு கெத்தாக இருக்கும். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் எல்லோரும் படித்தவர்கள்தான் என்றாலும், எக்ஸ்ட்ராவாக படிக்கிறோம் அல்லவா.. அதற்கு என ஒரு மதிப்பு உண்டு.   இசை , ஓவியம் போன்ற கலைகள் தெரிந்து இருந்தால் , கண்டிப்பாக அதற்கும் ஒரு மதிப்பு உண்டு.

வாசித்தல் நம் புரிதலை , மொழி ஆளுமையை , வாழ்க்கை குறித்த புரிதலை கண்டிப்பாக உயர்த்துகிறது.

ஆனால் அந்த படிப்பு எதை கற்றுதருகிறதோ , அதை விட அதிகமாகவே நல்ல சினிமாக்கள் நமக்கு கற்றுத்தர முடியும். வாழ்க்கையைப்பற்றி , மனிதர்களைப்பற்றி , மரணத்தைப் பற்றி , நல்ல சிந்தனைகள் பற்றி புத்தகங்களை விட அதிகமாக சினிமா நமக்கு கற்றுத்தர முடியும்.
ஆனால்  நம் ஊரைப் பொருத்தவரை சினிமா என்பது வெறும் கேளிக்கையாகவே கருதப்படுவதால் , வெற்று கேளிக்கை படங்கள் மட்டுமே வருகின்றன.

ஓவியம் , இசை , சிற்பம் போல சினிமாவுக்கு கலை அந்தஸ்து  கிடைக்கவே இல்லை.
சினிமா துறையில் இருப்பவர்கள் அதை பணம் செய்யும் மெஷினாக நினைக்கிறார்களே தவிர , அதில் இருப்பது குறித்து பெருமிதம் ஏதும் இல்லை. சினிமா பார்ப்பவர்களும் ஒரு கலையனுபவம் பெறும் ஆர்வத்தில் இருப்பது இல்லை.

ஆனால் நல்ல வேளையாக எல்லோரும் இப்படி இருப்பதில்லை. சினிமாவை ஒரு கலைப்படைப்பாக எண்ணி தயாரிப்பவர்கள் இருக்கிறார்கள்.. அவற்றை தேடி தேடி ரசிப்பவர்களும் ஏராளம் இருக்கிறார்கள்.

 நல்ல படம் எடுக்கத்தயார் , பார்க்க ஆளில்லை என வருத்தப்படும் கலைஞர்கள் ஒரு புறம். நல்ல படம் பார்க்க நாங்கள் தயார்.. ஆனால் நல்ல படங்கள் வருவதில்லையே என வருத்தப்படும் ரசிகர்கள் ஒரு புறம்.

டிமாண்ட் அண்ட் சப்ளையில் ஓர் இடைவெளி.

இப்படி ஒரு சூழலில் , நல்ல ரசிகர்களுக்கு ஓர் அற்புத விருந்தாக , தமிழ் ஸ்டுடீயோ அமைப்பு சார்பில் , இந்திய சினிமா நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக , தினமும் ஒரு சினிமா வீதம் , நூறு படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.

திரையிடப்பட இருக்கும் ஒவ்வொரு படமும் மிக மிக முக்கியமான படங்களாகும்.
இதற்கான தொடக்க விழா 5.10.2013 சனிக்கிழமை நடந்தது.

திரை உலக அறிஞர்களான  அம்ஷன் குமார் , அறந்தை மணியன் , ஆர் ஆர் சீனிவாசன் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இப்படி ஒரு நிகழ்வில் , சிலர் அமர இடம் இன்றி நின்று கொண்டு கலந்து கொண்டது ஆச்சர்யமாக இருந்தது..

இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திரா திரையிடப்பட்டது. அது குறித்து , சிறப்பு விருந்தினர்கள் பேசினார்கள்.

நாடக உலகம் ஃபேமசாக இருந்த அந்த கால கட்டத்தில் சினிமா என ஒன்று எடுக்கப்பட முடியும் என்பதையே பலர் நம்பவில்லையாம். பால்கே இதற்காக எவ்வளவோ முயன்றும் யாரும் படம் எடுக்க நிதி உதவி செய்ய முன் வரவில்லை.

திரைப்படம் என்றால் என்ன என டெமோ கொடுக்க முடிவு செய்த அவர் , தன் தோட்டத்தில் விதை ஒன்று நட்டு அதை படமாக்கினார். அது வளரத்தொடங்கும் ஒவ்வோரு ஸ்டேஜையும் படம் ஆக்கி. அது செடியாகி கொடியாகி படரும் வரை பொறுமையாக ஒவ்வொரு காட்சியாக எடுத்தார். அதை மொத்தமாக திரையிட்டு காட்டியபோது, அனைவரும் அதிசயித்துபோனார்கள். பிறகு ஒருவர் படம் தயாரிக்க நிதி அளித்தார்.

 நிதி கிடைத்ததே தவிர நடிக்க ஆள் கிடைக்கவில்லை..குறிப்பாக பெண் வேடத்தில் நடிக்க யாரும் வரவில்லை. ரெட் லைட் பெண்களை அணுகினாராம். என்ன வேண்டுமானாலும் செய்வோம் , சினிமா மட்டும் முடியாது என்று சொல்லி விட்டார்களாம்.

அதன் பின் கஷ்டப்பட்டு , நஷ்டப்பட்டு ஆண்கள் சிலர் கைகாலில் விழுந்து பெண் வேடம் போட்டு நடிக்க வைத்தார்.

இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்தாலும், தான் செய்வதன் முக்கியத்துவம் அவருக்கு தெரிந்து இருக்கிறது.. தான் வரலாறு ஒன்றை படைக்கிறோம் என்ற பிரஞ்ஞை அவருக்கு இருந்து இருக்கிறது.

அதனால் தான் படம் எடுப்பதை ஒரு டாக்குமெண்ட்ரியாக அந்த காலத்திலேயே பதிவு செய்து இருக்கிறார், அது இன்று ஒரு வரலாற்று ஆவணமாக திகழ்கிறது.


அந்த படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து த கிரேட் டிரெய்ன் ராபரி படம் திரையிடப்பட்டது.

மவுனப்பட யுகத்தில் நாமெல்லாம் இருந்திருக்க மாட்டோம். ரசிகர்கள் மத்தியில் அமர்ந்து , பெரிய திரையில் மவுனப்படம் பார்த்தது கால இயந்திரத்தில் அந்த காலத்துக்கே சென்றது போல் இருந்தது..
அந்த காலத்தில் மவுனப்படம் ஓடும்போது , விளக்கம் சொல்ல ஒருவர் அமர்த்தப்பட்டு இருப்பாராம்..அந்த பணியை இந்த திரையிடலில் , அறந்தை மணியன் ஏற்றுக்கொண்டு சிறப்பாக செய்தார்..


இரண்டாம் நாளான இன்று 6.08.2013 தோ பிகா ஜாமீன் என்ற படம் திரையிட்டபட்டது .சினிமா என்றால் இதுதான் சினிமா.. விரிவாக பிறகு எழுதுவேன்.

தொடர்ந்து இன்னும் 98 படங்கள் திரையிடப்பட உள்ளன.

இனிமையான சூழல் , நகரின் மையப்பகுதி, போக்குவரத்து வசதியுள்ள பகுதி என கவனித்து இடத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

எங்கே?

இடம்: ட்ரீம்ஸ் இந்தியா , 41 சர்குலர் ரோட், கோடம்பாக்கம் (கோடம்பாக்கம் பூங்கா அருகில்)
நேரம்: மாலை 7மணி. (7 PM)

எப்படி வருவது?

வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வருவதாக இருந்தால் , லிபர்ட்டி/ மீனாட்சி கல்லூரி பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்து பெட்ரோல் பங்க் ஒன்று இருக்கும், அதை ஒட்டி இடது புறம் செல்லும் சாலையில் திரும்புங்கள்... முதல் ரைட் எடுங்கள்.. உங்கள் வலது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

போரூர் , சாலிகிராமம் , வடபழனி கோயில் மார்க்கத்தில் வந்தால் , டிரஸ்ட் புரம் ஸ்டாப்பிற்கு அடுத்தாற்போல் , சந்திர பவன் ஹோட்டலை ஒட்டி வலது புறம் செல்லும் சாலையில் திரும்பி, ஃபர்ஸ்ட் லெஃப்ட் எடுங்கள்.. சிறிது தூரத்தில் உங்கள் இடது பக்கம் ட்ரீம்ஸ் இந்தியா என்ற பெயர் பலகையை பார்க்கலாம்..

மின் தொடர் வண்டியில் வந்தால் கோடம்பாக்கம் நிலையத்தில் இறங்க வேண்டும்.


டிக்கட் கட்டணம்?

கட்டணம் ஏதும் இல்லை...  
















தொடக்க விழாவில் பேசிய சீனிவாசன் கேரளாவில் நடந்த திரையிடல் குறித்து பேசினார். ஒரே நாளில் பல படங்கள் தொடர்ந்து திரையிடப்படுமாம். சாப்பிட்டு வரக்கூட நேரம் இருக்காதாம்.,எனவே தேவையான உணவை கையோடு கொண்டு போய் விடுவாராம்.

ஆனால் இந்த திரையிடலில் ஒரு படம்தான் என்பதால் , உணவெல்லாம் கொண்டு வர வேண்டியதில்லை.. தேவைப்பட்டால் ஸ்னேக்ஸ் , தண்ணீர் , ஜூஸ் மட்டும் கொண்டு வந்து ரிலாக்சாக படம் பார்க்கலாம். 



வரும் வாரம் திரையிடப்பட இருக்கும் படங்கள்..


****************************************************************************


07-10-2013 திங்கள் - அவன் அமரன் (தமிழில் வெளிவந்த முதல் கம்யுநிசத் திரைப்படம்)
----------------------------------------------
08-10-2013 செவ்வாய் - மர்மயோகி (தமிழின் முக்கியமான இயக்குனரான கே. ராம்னாதின் திரைப்படம், இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
----------------------------------------------
09-10-2013 புதன் - திக்கற்ற பார்வதி ( சிங்கீதம் ஸ்ரீநிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் முதல் திரைப்படம் இது. தமிழக முதல்வர் ராஜாஜி அவர்களின் கதையை தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம்)
----------------------------------------------
10-10-2013 வியாழன் - ஒரே ஒரு கிராமத்திலே (தமிழ்நாடு அரசு முதன்முறையாக தடைவிதித்த திரைப்படம், இட ஒதுக்கீடு பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தால் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டு, கிளைமேக்ஸ் மாற்றப்பட்டதும், அனுமதி வழங்கப்பட்டது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதையை வாலி எழுதியிருந்தார்)
----------------------------------------------
11-10-2013 வெள்ளி - சாசனம் (இயக்குனர் மகேந்திரன் இயக்கிய இந்த திரைப்படம் இன்னமும் திரையரங்குகளில் வெளிவரவில்லை. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் நிதியுதவி செய்து எடுக்கப்பட்ட திரைப்படம். கந்தர்வனின் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
12-10-2013 சனிக்கிழமை - யாருக்காக அழுதான் (எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதி இயக்கிய திரைப்படம், நாகேஷின் பிரமாதமான நடிப்பிர்காகவே போற்றப்பட்ட திரைப்படம்)
----------------------------------------------
13-10-2013 ஞாயிறு - ஏழை படும் பாடு - கே. ராம்நாத் இயக்கிய இந்த திரைப்படம் தமிழின் முக்கியமான திரைப்படம். லெஸ் மிசரப்லஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்ட அருமையான திரைப்படம்.

14-10-2013 திங்கள் - ஓர் இரவு - அறிஞர் அண்ணாவின் கதை வசனத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.

Contact: 9840698236

15-10-2013 செவ்வாய் - மதன காமராஜன் (நிகழ்கால பார்வையாளர்களுக்கு அதிகம் அறிமுகம் இல்லாத இந்த திரைப்படம், பழங்கால வாழ்க்கை முறை, தெரிந்துக் கொள்ள உதவும்.

16-10-2013 புதன் - நந்தனார் - நந்தனார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், செருக்களத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.









Thursday, August 15, 2013

கேமராவை பற்றி பேசுவது குழந்தைத்தனமானது- லீனா பரிசளிப்பு விழாவில் இயக்குனர் பாலு மகேந்திரா ருசிகரம்





சினிமாவில் கேமராவைப் பற்றி பேசுவது , எழுத்தைப் பற்றி பேசாமல் பேனாவைப் பற்றியும் பேப்பரைப் பற்றியும் பேசுவது போன்றது என இயக்குனர் பாலு மகேந்திரா பேசினார்.

லீனா மணிமேகலைக்கு தமிழ் ஸ்டுடியோ சார்பில் லெனின் விருது வழங்கும் விழா  சென்னையில் நடந்தது. மழை தூறிய மாலை வேளையிலும் அரங்கு நிரம்பி வழிந்தது. இயக்குனர் ஹரிஹரன் , பாலாஜி சக்தி வேல் , லெனின் , பாலு மகேந்திரா, பத்திரிக்கையாளர் அசோகன் , நடிகர் சார்லி , அழகிய பெரியவன் , சிவகாமி ஐ ஏ எஸ் போன்றோர் ஆழமான , செறிவான உரைகள் வழங்கினர். ஒரு விஷ்யத்தை உண்மையான ஆர்வத்துடன் பேசினால் , எத்தனை கடினமான மேட்டர் என்றாலும் கூட்டம் அமைதியாக கேட்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் கிட்டத்தட்ட இரவு பத்து மணி வரை கூட்டம் கொஞ்சமும் கலையவில்லை. இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என நினைக்கையில் லெனின் சார் அவராகவே போதும் என நிறுத்தி விட்டார்.

போலியான அலங்காரப்பாராட்டாக இல்லாமல் , ஒவ்வொருவரும் மனதில் இருந்து பேசினார்கள். மாற்று கருத்தையும் முன் வைத்தார்கள்.

லீனா மணிமேகலையை திமிர் பிடித்த , சும்மா பரபரப்புக்கு எழுதும் எழுதும் ”பெண்ணீய”  எழுத்தாளர் என்றே ஒரு காலத்தில் நினைத்து வந்தேன். அதன்பின் அவர் எழுத்துகளை படிக்க்க ஆரம்பித்ததும் அவர் மீது ஒரு மரியாதை வந்தது.

அதன் பின் அவ்வ்வபோது அவர் பேச்சுகளை கேட்பதுண்டு. கணீர் என பேசுவார். ஆனால் இன்றுதான் முதன் முதலாக அவர் நெகிழ்ந்து போய் , குரல் தடுமாறி பேசியதை கேட்டேன்.

முதலில் பேசிய இயக்குனர் ஹரிஹரன் டிஜிட்டல் யுகத்தின் சாத்தியங்களை பேசினார். இனிமேல் இண்டர் ஆக்டிவ் சினிமாக்கள் வரும். பார்வையாளனும் படத்தில் பங்கு பெற முடியும், ஒரு காட்சியை நிறுத்தி, அந்த காட்சி நடக்கும் இடத்தை எக்ஸ்பாண்ட் செய்து பார்க்க முடியும், இப்படி பல வசதிகள் கிடைக்கும். அந்த வகையில் இரண்டு மணி நேர படத்தை இரண்டு மாதங்கள்கூட பார்க்கலாம் என்றார்.

சிவகாமி அய் ஏ எஸ் தன் அனுபவங்கள் சிலவற்றை கூறி லீனாவின் ஆவணப்படங்களைப் பற்றி பேசினார். கவிதைகள் குறித்தும் சொன்னார்.


பாலாஜி சக்திவேல் பேசுகையில் லீனாவின் தேவதைகள் படத்தை சிலாகித்து பேசினார். ஒத்திகை பார்த்து நடிப்பதை ஷூட் செய்வதை விட , டிஸ்கவரி சானலில் சிங்க வேட்டையை காத்திருந்து பதிவு செய்வது போல ஷூட் செய்யும் சினிமாக்கள் இனி தமிழில் அதிகம் வரும் என்றார்.

காமடி நடிகராக நாம் அறிந்த சார்லியின் இன்னொரு முகத்தை இன்று பார்த்தேன்,. சிறப்பான ஓர் உரையை வழங்கினார். அவர் திறமையை தமிழ் சினிமா இன்னும் சரியாக பயன்படுத்தவில்லை என தோன்றியது.

எனக்கு மாற்று சினிமா தெரியாது. சோற்று சினிமாதான் தெரியும் என ஆரம்பித்து அவர் பேசிய ஒவ்வொர் வார்த்தைக்கும் கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது. நோவா கதை சொல்லி அட்டகாசமாக பேச்சை முடித்தார்.


அழகிய பெரியவன் அடுத்து பேசினார். ஒவ்வொரு வார்த்தையும் கணீர் என இருந்தது.

மேல்னிலையாக்கல் என்பதைப் பற்றி தீர்க்கமான ஓர் உரை வழங்கினார்.

மதுரை வீரன் கதை ஒடுக்கப்பட்ட ஒருவன் பற்றிய கதை. அதை எப்படி மேல் நிலை ஆக்குக்கிறார்கள். அவன் தேவ லோகத்தில் செய்த தவறு காரணமாக , ஒரு சாபத்தால் ஒடுக்கப்பட்டவனாக பிறந்தான் என கதை கட்டி உள்ளதை உள்ளபடி பார்க்க முடியாமல் செய்கிறார்கள்.

இந்த மேல் நிலையாக்கத்தை லீனாவின் படங்கள் உடைக்கின்றன என்றார்.


பாலு மகேந்திரா பேசுகையில் லீனா தன் கேமிராவை தூரிகையாக பயன்படுத்தி மாடர்ன் ஆர்ட் வரைகிறார் என்றார்.

 நான் இரவு நேர சென்னையை பார்த்து அசந்து போனேன். பகல் நேர சென்னையை விட முற்றிலும் மாறு பட்டு இருந்தது. அதை படமாக்க முடிவு செய்தேன். இரவு சென்னையை சும்மா ஷூட் செய்வதில் பயன் இல்லை. இரவு சென்னையை நான் பார்த்தபோது அடைந்த உணர்வை படமாக்க வேண்டும்., அதாவது கேமிராவை தூரிகை ஆக்கி , நான் விரும்பும் ஓவியம் தீட்டினேன்.

மெஷின்கள் ஒரு போதும் படம் எடுக்காது.படைப்பாளிதான் முக்கியம். எனவே தயவு செய்து கேமிராக்கள் பற்றி என்னிடம் பேசாதீர்கள். ஒரு கவிஞனிடம் போய் பேனாவைப்பற்றியும் , பேப்பர் பற்றியுமா பேசுவீர்கள்.?

ஒவ்வொரு படைப்புக்கும் பணம் , புகழ் என்பது போன்ற ஒரு நோக்கம் இருக்கும், நான் இப்போது எடுத்து வரும் படத்துக்கு ஒரு நோக்கம் உண்டு. நான் இறந்த பின்பும் பல ஆண்டுகள் அந்த படம் பேசப்பட வேண்டும். அதுதான் அதை படைத்ன் நோக்கம் என்றார்.


லீனா சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் ஏற்புரை வழங்கினார்.

கடைசியாக பேசிய லெனின் ஒரு குழந்தையின் உற்சாகத்துடன் பேசினார். அவர் பேசியவற்றை அப்படியே வெளியிட்டால் ,ஒன்று அவருக்கு பிரச்சினை வரும். இல்லை என்றால் எனக்கு பிரச்சினை வரும்.

என் வாழ் நாளில் கேட்ட மிகச்சிறந்த உரைகளில் ஒன்று.

தன் அனுபவத்தை சாறாக்க்கி அவர் புகட்டிய தமிழ் விருந்து இரவு முழுதும் நீடித்து இருந்தாலும் கேட்பதற்கு அனைவரும் தயாராகவே இருந்தனர்.

ஆனால் அவர் ஒரு பாடலுடன் பேச்சை முடித்து ஏமாற்றம் அளித்தார். இன்னும் ஒரு மணி நேரம் பேசி இருக்கலாம்.

சிறப்பான ஒரு நிகழ்ச்சியில் , மேதைகள் பேச்சைக் கேட்ட நிறைவுடன் கிளம்பினேன்,

















Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா