வெவ்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த நிலையில், தமிழுக்கும் கம்ப்யூட்டருக்கும் சம்பந்தம் உண்டு என நான் நினைத்ததே இல்லை..
அதன் பின் தமிழ் நாட்டுக்கு வந்த பின் , சில சமயம் தமிழ் பிரிண்ட் அவுட் தேவைப்படும்போது , தமிழ் வசதி இருக்கும் கடைகளை தேடி அலைந்த காலம் எல்லாம் உண்டு..
தற்செயலாகத்தான் தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள் பற்றி எனக்கு தெரியவந்தது…
அட,,, இத்தனை விஷயங்கள் தமிழில் எழுதுகிறார்களே என்ற பிரமிப்பு ஏற்பட்டது…
அதன் பின் ரசித்து படிக்க ஆரம்பித்தேன்… பத்திரிக்கைளை விட பதிவகள் என் இதயம் கவர்ந்தன…
குறிப்பாக நர்சிம் போன்ற பதிவர்களின் எழுத்துக்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்…
என் தமிழ் ஆர்வம் மீண்டும் உயிர் பெற்றது இது போன்ற எழுத்துக்களால்தான் .
அந்த கால கட்டத்தில் என்னிடம் கணிணி இல்லாததால் , அலுவலகத்தில் மட்டுமே வலைப்புக்களை படிக்க முடியும்… எனவே சில பதிவுகளை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது வழக்கம்..
அப்படி பிரிண்ட் எடுக்கும் எழுத்துக்களில் பதிவர் நர்சிமின் எழுத்துகளும் ஒன்று..
நான் ஏன் அப்படி சொல்கிறேன் என்று அவர் கவிதைகள், கதை போன்றவற்றை படித்தால் , உங்களால் புரிந்து கொள்ள முடியும்..
குறிப்பாக அவரது, குறுந்தொகை, சங்க இலக்கிய விளக்கங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் . இதை க்ளிக் செய்து படித்து பாருங்கள்…
அவர் கவிதை போல ஒரு கவிதையை என் வலைத்தளத்திலும் பிரசுரித்தால் நன்றாக இருக்குமே என நினைத்து பல நாட்கள் முயன்று பார்த்தேன்..
முடியல..
அவர் கவிதை போல அவர் மட்டுமே எழுத முடியும் என உணர்ந்து அவரிடமே கேட்டேன்..
அவர் தந்த கவிதை , இதோ உங்கள் பார்வைக்கு ..
அவர் எனக்கு தந்தது கவிதை மட்டுமல்ல… கவுரவுமும் கூட ….
