Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Monday, November 21, 2011

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸும், நூலக விவகாரமும்

ஒரு பிச்சைக்காரன் என்ற முறையில் பல்வேறு வகை சாப்பாடுகளை சாப்பிடுவது என் இயல்பு. இந்த சாப்பாடுதான் பிடிக்கும், இதுதான் ஒத்துக்கொள்ளும் என்பது கிடையாது.

அந்த வகையில் , கார்ல் மார்க்ஸ் குறித்த தகவல்களை புரட்டியபோது ஆச்சர்யமாக இருந்தது..

எப்போதோ வாழ்ந்த அவர் , இப்போதைய பிரச்சினைகளை பற்றி கருத்து சொல்கிறாரே என நினைத்தேன்.

1848ல் வெளியிடப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை பொருள் செறிவு கொண்டது, காலம் கடந்து நிற்பது..

அதில் என்ன சொல்கிறார்..

வரலாற்றில் முந்தைய சகாப்தங்களில் அநேகமாக  எங்குமே பல்வேறு வகுப்புகளாகிய சிக்கலான சமூக பாகுபாடு ,சமூக அந்தஸ்தில் பன்மடிப் படிநிலை அமைப்பு இருக்க காண்கிறோம்

எந்த ஒரு சமூகத்தைப் பார்த்தால் அதில் பாகுபாடுகள் , ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.
நல்லதொரு அரசாங்க அமைப்பு ஏழைகளுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கி அவர்களை உயர்த்த வேண்டும்.

ஆனால் என்ன நடக்கிறது. வசதியானவர்களுக்கு மேலும் மேலும் வாய்ப்புகள், வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகின்றன. ஏழைகள் மேலும் மேலும் நசுக்கப்படுகின்றனர்.

அவர் கூறுகிறார்..

”சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகைமுகன்களாக ,எதிரும் புதிருமான இரு வர்க்கங்களாக- முதலாளித்துவ வர்க்கம் , பாட்டாளி வர்கமுமாக -பிளவுண்டு வருகிறது ”

ஏழை பணக்காரன் இடைவெளி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒரு பெரிய நிறுவனம் நஷ்டம் அடைந்தால் , அரசு அதை காக்க பணம் செலவழிக்க தயாராகிறது, ஏழைகள் அழிவதில் கவலை இல்லை..

200 கோடி செலவழித்து நூலகம் அமைப்பது ஒரு புறம் நடக்கிறது. கடன் சுமையால் , ஏழை விவசாயிகள் துன்புறுவது இன்னொரு புறம் நடக்கிறது..

பேருந்தில் செல்ல முடியாத அளவு கட்டண உயர்வு.  கேட்டால் நிதி சுமையாம்.

நிதி சுமை என்றால் எப்படி 200 கோடியில் நூல்கம் அமைக்கிறார்கள்.. எப்படி 30 கோடி செலவழித்து பராமரிக்கிறார்கள்?

ஏற்கனவே படிக்கும் வாய்ப்புகள் கொண்ட , அய் அய் டி அண்ணா பல்கலை மாணவர்களுக்கு ஆடம்பர நூலகம்...

தாழ்த்தப்பட்ட மாணவர்கள் வாழும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை..

படிப்பு , பணம் எல்லாம் ஒரு சிறிய பகுதி மக்களிடமே சிக்கி கொள்ளும். மற்றவர்கள் அனைவரும் அல்லல்படும் பிரிவாக மாறுவார்கள்...

இப்போது ஓரளவு வசதியாக இருக்கிறோமே என இந்த போக்கை ஆதரித்தால், காலப்போக்கில் நாமும் அல்லல் படும் பிரிவில் தள்ளப்பட்டு விடுவோம் என்பதே லாஜிக்..

இந்த புத்தகத்தை படித்தால், ஒவ்வொரு இடத்திலும் பாரபட்சம் நிலவுவது நம் கண்களுக்கு புலப்பட ஆரம்பிக்கும்

விலை மிக மிக குறைவு.... இருபது ரூபாய் மட்டுமே..

புத்தக கண்காட்சியில் வாங்கும் நூலாக இதுவும் இருக்கட்டும்.






Saturday, November 19, 2011

பேருந்து கட்டண உயர்வும் , கோழி பிரியாணி அறிவு ஜீவிகளும்


ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு அலட்சியமாக டிப்ஸ் வைக்கும் பலருக்கும் ஒரு ஃபிளாஷ் பேக் இருக்கும். அதை காசு வந்ததும் மறந்து விடுவது வாடிக்கை.

இப்போது அலட்சியமாக காசு செலவழிக்கலாம். ஆனால் வேலை தேடும் காலத்தில் ஒரு ரூபாய் கூட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் . வெளியே பார்ப்பதற்கு , சலவை சட்டை பேண்ட், ஷூ , டை என இருந்தாலும் , பாக்கெட்டில் பத்து ரூபாய்தான் இருக்கும் . ஒரு டீ குடிக்க கூட ஆயிரம் முறை யோசிக்க வேண்டும்.

இப்படி கணக்காக காசு எடுத்து வந்தவர்களுக்கு பேருந்தில் திடீர் அதிர்ச்சி. இனி மேல் பழைய கட்டணம் பொருந்தாது. டிக்கெட் விலை ஏறி விட்டது என்றார்கள் நடத்துனர்கள்.

இதை சிலர் முணுமுணுப்புடன் ஏற்றாலும், சிலருக்கு இது தாங்க முடியாத விலை உயர்வு.  பஸ் இல்லாமல் நடந்தே கூட செல்ல வேண்டி வரும்.

பாஸ் கட்டணம் ஆயிரம் ரூபாய். பழைய கட்டண பாஸ் செல்லுபடி ஆகாது. கூடுதல் கட்டணம் கட்டி முத்திரை வாங்க வேண்டும்.

ஆயிரம் ரூபாயெல்லாம் நலிந்த மக்களுக்கு மிகப்பெரிய தொகை.

 இதற்கு காரணம் அரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாக சொல்கிறார்கள்.


ஒரு பிலேட் சிக்கன் பிரியாணிக்காக , ஒரு பிரச்சினையில் முடிவு எடுக்கும் தமிழ் அறிவு ஜீவிகளும் இதற்கு ஒரு காரணம்.

சினிமா தியேட்டருக்கோ , டாஸ்மாக்குக்கோ போனால், ஐம்பது ரூபாய் கொடுத்தால்தான் ஏசி கிடைக்கும், அண்ணா நூலகத்தில் இலவசமாக ஏசி கிடைக்கிறது என மகிழ்ந்து போய் சொன்னார்கள் அல்லவா?

இலவசம் என்றால் எட்டு அடுக்கு மாளிகைக்கு , கழிப்பிடம் உள்ளிட்ட பகுதிகளுகு ஏசி செய்யும் காசை யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்பதை இவர்கள் எண்ணி பார்க்கவில்லை.

இது உண்மையில் இலவசம் அன்று. மக்கள் பணத்தில்தான் இந்த வசதிகள் செய்யப்படுகின்றன என்ற அடிப்படை உண்மை கூட இவர்களுக்கு புரியவில்லை.

நலிந்த மக்களின் அடிப்படை வசதிகளுக்கு ப்யன்பட வேண்டிய பணம் ஆடம்பரத்த்க்கும், சொகுசுக்கும் பயன்படுவதன் விளைவே , நலிந்த மக்கள் மேலும் மேலும் துன்புறுகிறார்கள்..

இந்த சொகுசை அனுபவிக்கும் அறிவு ஜீவிகள் வாக்கு சாவடிக்கு செல்லப்போவதே இல்லை.

ஆனால் நலிந்த மக்கள் வாக்கு சாவடிக்கு செல்வார்கள். ஆட்சி மாற்றம் ஏற்படுதுவார்கள்/
எனவே அரசு  நலிந்த மக்களுக்கே சாதகமாக செயல்பட வேண்டும். பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.

 நூலகம் சின்ன உதாரணம் . இது போன்ர ஆடம்பர செலவுகள் பல உள்ளன. அவையும் இனம் காணப்பய்ட்டு குறைக்கப்பட்டால் மக்களுக்கும் நன்று , ஆட்சிக்கும் நன்று..

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா