எல்லோரும் உண்டு என்பதை , நீ மட்டும் இல்லை என சொன்னால் , நீ பேய் என கருதப்படுவாய் என்றார் வள்ளுவர்.. ஆனால் தமிழ் நாட்டை பொறுத்தவரை வித்தியாசமான கருத்து சொன்னால்தான் அறிவு ஜீவி..
உதாரணமாக உலகம் போற்றும் எந்திரனை திட்டி பேசி அறிவு ஜீவி பட்ட்த்தை வாங்கி சென்று விடுகின்றனர் சிலர்.. இதை பார்த்து தாமும் அறிவு ஜீவி ஆக வேண்டும் என பலர் ஆசைப்படுவதாகவும் ஆனால் எப்படி ஆவது என தெரியாமல் இருப்பதாகவும் ஒரு தகவல் நம் கவனத்துக்கு வந்த்த்து...
அறிவு ஜீவி ஆக சில வழிமுறைகள் உண்டு.. ( அதை பிறகு பார்க்கலாம் ) ஆனால் அதற்கென்று உரிய திறமைகள் உங்களிடம் உண்டா என முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்...
கீழ்கண்ட கேள்விகளுக்கு ஆம் அல்லது இல்லை என பதில் அளிக்கவும்.. முடிவை கடைசியில் பார்க்கவும்...
1. சினிமா என்றால் மொபைல் போன் மாதிரி.. மெஸேஜ் இருக்க வேண்டும் . ஆம்/இல்லை
2. முப்பது வயது நடிகர் , அறுபது வயது கேரக்டரிலோ ஐம்பது வயது நடிகர் முப்பது வயது கேரக்டரிலோ நடிக்க கூடாது.. என்ன கேரகடரோ அதே வயது நடிகர்தான் நடிக்க வேண்டும்.. உரிய வயது சான்றிதழை பட்த்துடன் இணைக்க வேண்டும் ஆம்/இல்லை
3. கால்பந்தாட்டம் நடக்கும்போது வெளி நாடுகளில் கொண்டாடுவார்கள்.. சில நாடுகளில் சினிமாவைஅல்லது இசையை கொண்டாடுவார்கள். ஆனால் தமிழ் நாடு மட்டும் கொண்ட்டாட்டங்கள் இல்லாத பிரதேசமாக அறிவிக்கப்பட வேண்டும் ஆம்/இல்லை
4. அனைத்து அறிவு ஜீவிகளுக்கும் இலவச டிக்கட்டை தயாரிப்பாலர் வழங்கி அதற்கு திட்டு வாங்க வேண்டும்
5. அனைவரையும் முன்னேறினால் நாடு முன்னேறும் என்பது தவறு.. முன்னேறி செல்பவர்களை பிடித்து கீழே தள்ளினால்தான் நாடு முன்னேறும் ஆம்/இல்லை
6. நாட்டின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கவலை இல்லை.. சினிமாவின் விலை ஏற்றம்தான் மிக முக்கியம் ஆம்/இல்லை
7. ஊர் காசில் உல்லாசமாக இருப்பது தவறல்ல. சொந்த காசில் கட் அவுட் வைப்பது, மொட்டை போடுவது தவறு ஆம்/இல்லை
8. நாமும் தமிழை உலகத் தரத்துக்கு எடுத்து செல்ல எதுவும் செய்ய கூடாது.. மற்றவர்களும் செய்ய கூடாது ஆம்/இல்லை
9. லத்தின் அமெரிக்க பட்த்தையே நாமும் எடுப்பதுதான் நல்ல சினிமா. மற்றதெல்லாம் குப்பை ஆம்/இல்லை
10. பிடிக்க்காத நடிகன் பெயரை சும்மா விளம்பரத்துக்காக பயன் படுத்தி கொண்டு பயன் பெறுவது தார்மீக தவறல்ல ஆம் / இல்லை
முடிவுகள்
பத்து ஆம் : வாழ்த்துக்கள்.. நீங்கள் ஒரு அறிவு ஜீவி .. சமூக போராளி..பத்திரிக்கைகளில் வேலை செய்தால் நல்ல எதிர்காலம் காத்து இருக்கிறது. எழுத்தாளர் பணியும் உங்களுக்கு நல்லது..
ஐந்து ஆம் : இன்னும் கடுமையாக உழைத்தால்தான் அறிவு ஜீவிஆக முடியும். பொது அறிவு, ரசனை , மனசாட்சி போன்ற தேவை இல்லாத சமாச்சாரங்கள் உங்களிடம் உள்ளன..அதை உதறுங்கள்
பத்து இல்லை : அட ஆண்டவா.. உங்களிடன் மன சாட்சி. சக மனிதர் மேல் அக்கறை, உலக அறிவு , ரசனை , வாழ்வை கொண்டாடுதல் போன்றவை உள்ளன , கண்டிப்பாக உங்களால் அறிவு ஜீவி ஆக முடியாது... எந்திரன் பட்த்தை ஒரு முறை ஜாலியாக பார்த்து ,உங்கள் பணிகளை எப்போதும் போல சிறப்பாக செய்யுங்கள்.. அறிவு ஜீவி உலகம் உங்களுக்கு ஒத்து வராது . சாதிக்க பிறந்தவர் நீங்கள்.. வெட்டி உதார் உங்களுக்கு வராது
Showing posts with label ரஜினி எந்திரன் இலக்கியம். Show all posts
Showing posts with label ரஜினி எந்திரன் இலக்கியம். Show all posts
Tuesday, October 5, 2010
Subscribe to:
Posts (Atom)
