Showing posts with label ரஜினி எந்திரன். Show all posts
Showing posts with label ரஜினி எந்திரன். Show all posts

Sunday, October 24, 2010

இருபத்தைந்து நாட்கள் கழித்து எந்திரன் எப்படி ஓடிகிறது? - நேரடி ரிப்போர்ட்




குடும்பத்துடன் பார்க்க முடிகிற படங்கள் மிகவும் குறைவு... நீண்ட நாள் கழித்து , ஒரு நல்ல படம், அனைவரும் பார்க்க முடிகிற படம் என்றால் அது எந்திரன் தான்..

யாராவது நண்பர்கள், உறவினர்கள் என்னை பார்க்க வந்தால் , எந்திரனுக்கு அழைத்து செல்வது என் வழக்கமாகிவிட்டது..
அந்த வகையில், இன்றும் எந்திரன் பார்க்க வேண்டி இருந்தது.. இருபத்தைந்து நாட்கள் , பல திரையரங்குகளில் ஓடி , அனைவரும் பார்த்து விட்டபின்னும் கூட , இன்னும் பிளாக்கில்தான் டிக்கட் கிடைக்கிறது, பெரிய திரையரங்குகளில்.. ஹவுஸ் புல்..

பல இடங்களில் அலைந்து பார்த்து விட்டு, தேவி கருமாரியம்மனில் பார்தோம்..

நல்ல கூட்டம்.. இன்னும் முதல் நாள் உற்சாகம் ரசிகர்களிடம்..

பாபா படம் பார்க்கும் போது, ஆரம்பதில் இருந்த உற்சாகம் போக போக குறைவதை பார்க்க முடிந்தது..
இதில் ஆரம்பம் முதல் கடைசி வரை உற்சாகம்தான்..

முதலில் பார்க்கும்போது,கருணாஸ், சந்தானம் இருவரும் வீண் போல தோன்றியது..
இப்போது பார்க்கும் போது , அவர்களின் முக்கியத்துவம் தெரிந்தது..
இதற்கு மேல் போய் இருந்தால் அதிகபிரசங்கித்தனமாக இருந்திருக்கும்..

அதே போல வசனம் மிக மிக அருமையாக ரசிக்கப்படுவதை பார்க்க முடிந்தது..

பாடல் காட்சிகளுக்கு வரவேற்பு அமோகம் ( வீடியோ இணைப்பை பார்க்கவும் )


, இதற்கு மேல் அறிவியல் தகவலையோ, செண்டிமெண்டையோ கலந்து இருந்தால், ஓடாத நல்ல படம் என்ற பட்டியலில் எந்திரன் சேர்ந்து இருக்கும்..

ஷங்கருக்கு பாராட்டுக்கள் ...

Tuesday, October 5, 2010

எந்திரனால் இந்தியா வல்லரசு ஆவது பாதிப்பு - அ அ ச பரபரப்பு அறிக்கை

ஆன்மீக புத்தகத்திலிருந்து , அறிவியல் புத்தகம் வரை தவறாமல் இடம் பெரும் செய்தி, எந்திரன் எந்திரன் எந்திரன் தான்..

இலக்கியம் , மருத்துவம், பொறியியல் இதழ்கள் கூட எந்திரனை பாராட்டியோ , திட்டியோ ஒரு கட்டுரை வரைந்து விடுகின்றன..

தீப்வாளிக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளில் கன்னா பின்ன என விலையை ஏற்றி விற்கிறார்கள்.. பயணம் என்பது அத்தியாவசிய தேவை.. எனவே இந்த கொள்ளையால் மக்கள் பாதிக்க படுகிறார்கள்.. இதை கேட்க ஆள் இல்லை.. கேட்டால் விளம்பரம் கிடைக்காது,,
ஆனால் எந்திரனை படத்தின் முலம் சன் டி வி கொள்ளை அடிக்கிறது என மக்கள் மேல் போலி அனுதாபம் காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்// படத்தை பார்த்தே ஆக வேண்டும் என யாரவது சொன்னார்களா/... படம் என்ன அத்தியாவசிய தேவையா..பிடிக்க வில்லை என்றால்பார்க்காமல் இருந்து கொள்ளலாமே ..

இப்படி எல்லோரும் விளமபர மோகம் பிடித்து இருக்கும் பொது அறிவாளிகள்சங்கம் எதுவும் செய்யவில்லை என்பது நம் கவனத்துக்கு வந்தது.. எனவே அச்சப்படாத அறிவாளிகள் சங்கம்( அ அ ச ) சார்பில் நாம் வெளியிட்ட அறிக்கை இதோ உங்கள் பார்வைக்கு..
**************************************************************************

எந்திரனால் இந்தியாவுக்கு ஆபத்து



இந்தியா வெகு வெகு வேகமாக முன்னேறி வல்லரசு ஆக வேண்டிய நிலையில் எந்திரன் திரைப்படம் இந்தியாவை பாதித்து விட்டது..
தனி மனிதர்கள் பொது பணத்தை பயன்படுத்தி ஜாலியாக பார்த்துள்ளோம்.. இந்தியாவில் இதுதான் இயல்பு.. இதை தவறு என சொல்ல முடியாது அனால் ரசிகர்கள் தம் சொந்த காசை செலவழித்து ஜாலியாக இருப்பது எங்களுக்கு எரிச்சலாக இருக்கிறது... வேறு எந்த நாட்டிலும் இப்படி யாரும் சந்தோஷாமாக இருக்க மாட்டர்கள் என நாங்கள் நினிக்கிறோம்..நாங்கள் வெளிநாட்டுக்கு சென்றது இல்லை .. அவர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் மாட்டோம்.. ஆனால் இதுதான் நிலை என நாங்கள் நினைக்கிறோம்..
பாரதியார் வறுமையில் வாடியதை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. இன்றும் பல அறிஞர்கள் கஷ்டபடுகிறார்கள் ..அதற்கும் நாங்கள் உதவவில்லை.. கஷ்டப்படும் நடிகனுக்கோ, தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பலர்களுகோ நாங்கள் எதுவு செய்யவில்லை.. அனால் இந்த நிலையற்ற தன்மை உணர்ந்து அவர்கள் சம்பாதிப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை..
நாங்களும் உதவ மாட்டோம் ,, அவர்களும் சம்பாதிக்க கூடாது.. ஒட்டு மொத்த பிச்சைகார சமுதாயமாக இருந்தால்தான் எங்களுக்கு நிம்மதி..

மார்க்கெட் உள்ள நடிகர் படம் எடுத்தால் மற்றவர்கள்ளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது... பல திரையரங்கில் திரையிடுவதால் லாபமும் ஏற்படலாம், நஷ்டமும் ஏற்படலாம் என்ற ரிஸ்கில்தான் திரை இடுகிறார்கள் .. ஆனலும் இது எங்களுக்கு பிடிக்க வில்லை.. அந்த காலம் மாதிரி ஒரு திரை அரங்கில் திரையிட்டு நீண்ட நாளில் சம்பாதியுங்கள்..அதற்குள் திருட்டு சி டி வந்து வசூலை பாதுயக்கும் என்பது எங்களுக்கு தெரியும்.. அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை..

சினிமா என்பது அத்தியாவசிய தேவை... எனவேதான் இதில் நாங்க்கள் தலையிடுகிறோம்.. உணவு , மருத்துவம் , போக்கு வரத்து போன்றவற்றில் நடக்கும் தவறுகள் பற்றி எங்களக்கு கவலை இல்லை ..

கீழ் கண்ட கோரிக்கைகளையும் சேர்த்து கொள்ள வேண்டும் என அரசை கோருகிறோம்..

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெற்று கொண்டே இருந்தால், அடுத்த தேர்வுகளை எடுக்க அவரை அனுமதிக்க கூடாது.. படிக்காத மாணவர்கள் பாதிப்படைவத்தை தடுக்க வேண்டும்..

அதிக ஹிட் ஸ் பெரும் பதிவர்கள், மாதம் ஒரு முறை மட்டுமே பதிவிட வேண்டும்... அப்போதுதான் மற்ற பதிவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் ..

ஒரு படம் வெற்றி பெற்றால் அந்த ஜுரத்தில் மற்ற படங்கள் தோல்வி அடையும்.. எனவே பிளாப் ஆகும் படங்கள்தான் திரை துறைக்கு நல்லது.. அரசே தன செலவில் பிளாப் படங்கள் எடுக்க வேண்டும்..

அன்புடன்,
பிச்சைக்காரன், pichaikaaran.blogspot.com
தலைவர்,
அச்சப்படாத அறிவு ஜீவிகள் சங்கம்.

Monday, October 4, 2010

எந்திரனின் வானளவிய புகழ், கமல் அதிர்ச்சி – செம ஃபார்மில் சாரு நிவேதிதா

எந்திரன் அலை தமிழ் நாடு முழுதும் வீசி வரும் நிலையில், மீடியா முழுதும் எந்திரன் எந்திரன் எந்திரன் தான்,
பாராட்டி எழுதினாலும் லாபம்,திட்டி எழுதினாலும் லாபம் என்ற வசதியான நிலை பத்திரிகைகளுக்கு கிடைத்துள்ளது,,
பாபா படம் வருவதற்கு முன் அனைவரும் பாபா பற்றியும் ரஜினி பற்றியும் எழுதி குவித்தனர்..
படம் வந்த பின் அனைவரும் ஆஃப் ஆகினர்..
எந்திரனை பொருத்தவரை படம் வந்த பின் தான் அனைவரும் எழுத ஆரம்பித்துள்ளனர்,..
இலக்கியவாதிகளும் இந்த அறுவடசியை இழக்க விரும்பவில்லை..
எழுத்தாளர் சாரு நிவேதிதா பட்த்தை குப்பை என்றார். எதிர்ப்பை கவனித்தார்..
அதன் பின் அதே கருத்தை சற்று வேறு விதமாக சொல்லி இருக்கிறார்..
எப்படி ? கவனியுங்கள்

இப்போது தமிழ்நாட்டிலேயே அதிக கோபத்துடன் இருக்கும் இரண்டு நபர்களை நீங்கள் சுலபமாகக் கண்டு பிடித்து விடலாம். ஒருவர், கமல்ஹாசன். காரணம், தன் போட்டியாளரான ரஜினியின் ஆக மோசமான ஒரு படத்திற்குக் கிடைத்திருக்கும் வானளாவிய புகழ்


புத்திசாலித்தனமாக பட்த்தையும் திட்டி விட்டார்.. பட்த்திற்கு வானளாவிய புகழ் கிடைத்து இருப்பதையுன் ஒப்புக்கொண்டு விட்டார்..
படம் மோசம் , சூப்பர் என்பது தனிமனித ரசனையை பொறுத்த்து.. இதை விமர்சனம் செய்யவோ விவாதிக்கவோ முடியாது.. ஆனால் பட்த்திற்கு கிடைக்கும் வரவேற்பு என்பது வரலாறு ..இதில் யாரும் மாறுபட்ட கருத்தை சொல்ல முடியாது..
எனவே சாரு புத்திசாலி என காட்டி விட்டார்..
இதில் கமல்ஹாசனை இழுத்து விட்ட்தன் மூலம் தான் நல்ல ஃபார்மில் இருப்பதையும் காட்டி விட்டார்..
எந்திரன் அலை இன்னும் எத்தனை காமெடிகளை உருவாக்கப்போகிறதோ ?

Saturday, October 2, 2010

சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக.. முதல்வர் கலைஞர் பதில்

தமிழக முதல்வர் டாகடர் கலைஞர் அவர்கள் நல்ல எழுத்தாளர் , சினிமா ரசிகர் , பத்திரிக்கையாளர் என்பதை அறிவோம்..
அவர் எந்திரனையும், சிவாஜியையும் ஒப்பிட்டு பதிலளித்த்து எந்த அளவுக்கு ரசித்து பார்க்கிறார், தன் பணிகளுக்கிடையில் என்ற பிரமிப்பை ஏற்படுத்தியது..
நேற்று எந்திரன் ரிலீஸ் .. முதல் நாளெ சத்யம் திரை அரங்கில் படம் பார்த்த அவர் , படம் முடிந்த்த்தும் பேட்டி அளித்தார்..


படம் எப்படி.?..

வித்தியாசமாக, மிகவும் விதியாசமாக இருக்கிறது.. இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் மிகவும் திறம்பட தம் பணியை செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் மாறுப்பட்ட நடிப்பை, சிறப்பாக தந்துள்ளார்.

உலகத்தரமான இந்த பட்த்துக்கு , தமிழ் பெயர் சூட்டியுள்ளது குறித்து ?


தமிழ் பெயர் வைத்த்தால்தான் வரி விலக்கு கொடுத்து இருக்கிறோம்


சிவாஜி- எந்திரன் ஒப்பிடுக..

சிவாஜியை விட எந்திரன் நன்றாக இருக்கிறது

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா