Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Friday, June 14, 2019

பாரதியாரின் தம்பியிடம் துணிகர கொள்ளை - குற்றவாளிகள் யார் ?

Nellaiappar.jpg (275×389)

பாரதியார் தம்பி என அழைக்கப்பட்டவர் பரலி நெல்லைப்பர்..இவர் மட்டுமல்ல.. இவர்தம் அண்ணன் தம்பியரும்கூட அந்த காலத்தில் தேச விடுதலைக்கு உழைத்தனர்..

வ உ சி , பாரதியார் ஆகியோருடன் நெருக்கமாக இருந்தனர்

பரலி நெல்லையபர் வ உ சி யின் கப்பல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.. அவரே ஒரு பணியாளர்தான் என்றாலும் பாரதியார் உரிமையுடன் பொருளதவி கேட்கும் அளவுக்கு பாரதிக்கு நெருக்கமாக இருந்தார்

பாரதியார் காலமான போது அவர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட வெகு சிலரில் இவரும் ஒருவர்.. பாரதி உடலை சுமந்தவர்களில் ஒருவர்

சுதந்திர போராட்டத்தில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்

பத்திரிக்கை நடத்தியுள்ளார்.. நூல்கள் எழுதியுள்ளார்

சேவை நோக்கத்தில் செய்த தொழில்களால் பொருள் கரைந்தது

வறுமையில் வாடிய இவர் நிலையை காமராஜர் கவனத்துக்கு கொண்டு சென்றார் பாரதியின் புதல்வியார் சகுந்தலா

பதறிப்போன காமராஜர் சென்னை குரோம்பேட்டையில் 5 ஏக்கர் நிலம் வழங்கினார்.

அதில் ஒரு பகுதியை  விற்று தன் கடன்களை அடைத்தார்.. கொஞ்சத்தை தலித் மக்களுக்கு எழுதிக்கொடுத்தார்.   மிச்சம் இருந்த 5000 ஆயிரம் சதுர அடி இடத்தை பள்ளி அமைக்க உயில் எழுதி வைத்தார்

ஏழை குழந்தைகள் படிக்க இந்த பள்ளி வெகுவாக உதவியது
தற்போதைய நிலை ( 14.06.2019)

1998ல் இந்த பள்ளியை நகராட்சி மூடி விட்டது

மரங்கள் சூழ்ந்த அந்த அழகிய இடம் இப்போது சமூக விரோதிகள் தங்கிச்செல்லும் கூடாரமாகி விட்டது

மீண்டும் பள்ளி நடத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை எழுப்பவே ,  நகராட்சி ஒரு முடிவுக்கு வந்தது

அந்த இடத்தை தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்தது

மக்கள் கடுமையாக எதிர்க்கவே அந்த திட்டம் கை விடப்பட்டது

கை விடப்பட்ட அந்த இடத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் சிலர் முயற்சி செய்கின்றனர்
பரலியார் திருமணம் செய்து கொள்ளவில்லை.. ஆனால் பூங்கோதை என்ற பெண்ணை தத்தெடுத்தார்

அவரது மகன் தான்  (பரலியாரின் மகள் வழி பேரன் ) ஒரே வாரிசு என்பதால் , அவர் சாவதற்காக காத்திருக்கின்றனர் . அவர் மறைந்ததும் ,  அந்த இடம் அபகரிக்கப்பட்டு விடும்

ஒரு தியாகிக்கு இப்படி ஒரு துரோகம் செய்ய நம் அரசியல்வாதிகள் முயற்சித்தாலும் , குமரி அனந்தன் மட்டும் தன்னால் இயன்ற அளவு இந்த இடத்தை மீட்க முயன்று வருகிறார்

மீண்டும் பள்ளி நடத்த அல்லது பரலி நெல்லையப்பர் நினைவு மண்டபம் அமைக்க முயற்சிகள் செய்து வருகிறார்

திருடர்கள் ஜெயிப்பார்களா.. தியாகி ஜெயிப்பாரா என பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்

சில ஆண்டுகள் கழித்து , குரோம்பேட்டை , பாரதிபுரம் , நெல்லையப்பர் தெரு சென்று பாருங்கள்..

பள்ளி இதே நிலையில் இருக்கிறதா... புதிய பள்ளி / நினைவு மண்டபம் இருக்கிறதா அல்லது பல அடுக்கு குடியிருப்பு வளாகம் இருக்கிறதா என பாருங்கள்


 நம் கண் முன்னே ஒரு கிழவனின் சொத்தை சிலர் அடித்து பிடுங்கினார்கள் என்பதற்கு சாட்சியாக , எதற்கும் அந்த தற்போதையை நிலையை ஒரு முறை  நேரில் சென்று பார்த்து விடுங்கள்


பிகு..
குமரி அனந்தனை இலக்கிய நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பார்க்கலாம்

ஒரு நாள் , கசங்கிய ஆடை , சவரம் செய்யப்படாத முகம் , பலவீனமான உடலுடன் , ஒருஇலக்கிய நிகழ்ச்சிக்கு வந்து விட்டு , ஆட்டோக்காரர் ஒருவருடன் பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.. எம் ஜி ஆர் , கலைஞர் , இந்திரா காந்தி , ரஜினி , நரசிம்ம ராவ் என பலருடன் நெருக்கமாக இருந்தவரா இவர் என திகைப்புடன் நான் அவரை பார்ப்பதை கவனித்த ஒருவர் , என்னருகே வந்து என்னை மெல்ல தட்டிக்கொடுத்தார்
என் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டதை அறிந்து கொண்டேன்

Friday, May 31, 2019

மேதையின் அற்பத்தனமும் மற்க்கப்பட்ட விஞ்ஞானியும்

வரலாறு என்பது ஒரு குப்பை என்பார் ஹென்றி ஃபோர்டு

உண்மைதான்,, வரலாறு என நாம் படிப்பவை எல்லாம் , யாராவது  ஒரு சாரார் அவர் பார்வையில் இருந்து சொல்லும் கற்பனையைத்தான்

உதாரணமாக , சீனா இந்தியா மீது படையெடுத்து நட்பு துரோகம் செய்தது.. என படித்துள்ளோம்

அப்படி எல்லாம் இல்லை..  வல்லரசுகளுக்கு ஆதரவாக நாம் செயல்பட்டதால் தனது பாதுகாப்புக்காக சீனா படையெடுத்தது.. வெற்றி பெற்றாலும்கூட , அப்பாவியை துன்புறுத்தவேண்டாம் என அதுவாகவே பின் வாங்கி விட்டது என்கிறார்கள் சில கம்யூனிஸ்ட்கள்...

எனவே வரலாறு என்பதை நம்ப முடியாது

சர் ஐசக் நியூட்டன் மிகப்பெரிய அறிவியல் மேதை என படித்திருப்போம்

ஹூக் விதி என  லேசாக படித்திருப்போம்

உண்மையில் ராபர்ட் ஹூக்தான் மிகப்பெரிய  மேதை

பெண்டுலம் கடிகாரம் , நுண்ணோக்கி , ஹெலிகாப்டர் , வானியல் , பூமியின் சுழற்சி , ஒளியியல் போன்ற பலவற்றில் கில்லாடி

ஆனால் பொறாமை காரணமாக இவரது பல ஆய்வு பேப்பர்களை நியூட்டன் இருட்டடிப்பு செய்து விட்டார்.. இவரது பல கண்டு பிடிப்புகளை தன் பெயரில் வெளியிட்டுக்கொண்ட்டார் நியூட்டன்

 நாம் மேதை என நினைப்பவர் இப்ப்படி அற்பத்தனமாக நடந்துள்ளார்

அதுகூட பரவாயில்லை... எத்தனையோ அரிய கண்டுபிடிப்புகள் வெளிசத்த்துக்கு வராமல் மறைந்தே போய் விட்டன

Thursday, May 2, 2019

திட்ட சொல்லி ரசித்த பெரியார்


பெரியாரை மேடை தோறும் கடுமையாக தாக்கி பேசி வந்தவர் காங்கிரஸ் இயக்கத்தை சேர்ந்த சின்ன அண்ணாமலை

ஒரு நாள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கும் சூழல் வந்தது

சின்ன அண்ணாமலைக்கு தர்ம சங்கடம்

ஆனால் பெரியார் சகஜமாக ஜாலியாக பேசினார்

- கதைகள் சொல்லி கலகலப்பாக பேசுவீர்களாமே... அப்படித்தான் பேச வேண்டும் என்றார் பெரியார்

- ஆமாம் அய்யா.. ஆனால் பெரும்பாலும் உங்களை தாக்கித்தான் பேசுவேன் என்றார் சின்ன அண்னாமலை

- அதனால் என்ன... எதுவுமே யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றுதானே நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்... கடவுளையே விமர்சிக்கலாம் என்பதுதானே என் கருத்து... எனவே என்னை விமர்சிப்பதை நான் ஏற்கிறேன்.. இன்னும் சொல்லப்போனால் , என் முன்னிலையே என்னை நீங்கள் விமர்சிக்க வேண்டும்.. அதை நான் ரசிக்க வேண்டும்... விழா ஒன்று ஏற்பாடு செய்துள்ளோம்.. வந்து பேசுங்கள் என்றார் பெரியார்

அந்த பெருந்தன்மையில் திகைத்த சின்ன அண்ணாமலை வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டார்

கருஞ்சட்டை தொண்டர்கள் முன் , பெரியார் முன்னிலையில் பெரியாரை தாக்கி பேசினார்

பெரியார் புன்னகையுடன் ரசித்தார்

திக தோழர்கள் அமைதியாக எந்த பிரச்சனையும் செய்யாமல் கேட்டனர்

பேச்சு முடிந்து விடை பெறும் போது , அன்பு பரிசாக பத்து ரூபாய் அளித்து விடை கொடுத்தார் பெரியார்


இந்த பெருந்தன்மையை அப்படியே பதிவு செய்து தன் மேன்மையை காட்டியுள்ளார் சின்ன அண்ணாமலை

மேதைகள் , பெரியோர்கள்  வாழ்ந்த மண் இது

Thursday, February 7, 2019

நாகேஷ் அடைந்த டென்ஷன் - மேதைகளின் மோதல்


சாலையில் செம நெரிசல்.. வாகனங்கள் இரண்டு ஒன்றை ஒன்று லேசாக உராய்ந்து கொண்டன.. இரு வாகன சாரதிகளும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டதை காதால் கேட்க இயலவில்லை

சராசரி மனிதர்களின் மோதல் இபப்டி இருக்கும்

ஆனால் மேதைகளின் மோதல் , அப்படி இருக்காது... ரசிக்கும்படி இருக்கும்
-----

அதற்கு இரு உதாரணங்கள்


புல்லாங்குழல் மேதை மாலியின் இசைக்கச்சேரி...  நடிப்பு மேதை நாகேஷ் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.. மாலி வர தாமதமானது.. ஒரு வழியாக வந்து சேர்ந்தார்.. ஆனால் புல்லாங்குழலை மறந்து விட்டார்.. தன் உதவியாளரை வீட்டுக்கு அனுப்பி கொணரச் சொன்னார்

இன்னும் தாமதமா என ரசிகர்கள் அலுப்படைந்தனர்..
மாலி சொன்னார்..  என் இசை விருந்தை ரசிக்க விரும்பினால் சின்ன சின்ன தடங்கல்களை பொறுத்துதான் ஆக வேண்டும்... பொறுமை இல்லை என்றால் கிளம்பி விடுங்கள்...பாதியில் கிளம்பாதீர்கள்

இப்படி அவர் கோபமாக சொன்னதும் ரசிகர்கள் அமைதியாக அமர்ந்தனர்... ஆனால் நாகேஷ் கோபமாக கிளம்பி விட்டார்

மாலி இசை நிகழ்ச்சி நடந்து முடிந்தது

முடித்து விட்டு வெளியே வந்த மாலி திகைத்தார்..காரணம் நாகேஷ் வீட்டுக்குப் போகாமல் வெளியே காத்திருந்தார்

அதாவது அவர் வெளி நடப்பு ஒரு கோபத்தால்தான். மற்றபடி மாலி மீது மரியாதை உண்டு

இதை உணர்ந்த மாலி , நாகேஷ் காரில் ஏறி அவருடன் அவர் வீட்டுக்கு சென்று  அவருக்கென பிரத்யேகமாக இசை விருந்து படைத்தார்


------

காந்தி ஒரு முறை சென்னை வந்திருந்தார்... தன் அருமையான ஆங்கிலத்தில்சொற்பொழிவு ஆற்றினார்

அவருக்கு பாரதியார் கடிதம் எழுதினார்

அன்புள்ள திரு .காந்தி அவர்களுக்கு

தங்கள் உரை நன்றாக இருந்தது.. ஆனால் ஒரு குறை..  நீங்கள் தாய் மொழிப்பற்றை வலியுறுத்துபவர்.. எனவே நீங்கள் உங்கள் தாய் மொழியான குஜாராத்தியில் பேசியிருக்க வேண்டும். அல்லது எங்கள் தாய் மொழியாம் தமிழில் பேசியிருக்கலாம்.. சம்பந்தம் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசியது நெருடல்

அன்புடன்

சுப்ரமணிய பாரதி

இதற்கு காந்தி பதில் எழுதினார்

அன்புள்ள பாரதி,,

என் தவறை ஒப்புக்கொள்கிறேன், மன்னிப்பு கோருகிறேன்.. ஆனால் உங்கள் கடிதத்தை தமிழிலோ குஜராத்தியிலோ எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதி இருப்பது என்னை ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது

அன்புடன்

எம் கே காந்தி

----------------

Wednesday, May 23, 2012

நான், கிருஷ்ணதேவராயன் - வாசிப்பு அனுபவம்

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு. என் வாசிப்பு ஆரம்பித்ததே வரலாற்று நாவலில் தான் - சிவகாமியின் சபதம்.
சிலருக்கு வரலாற்று நாவல்கள் போரடிக்கும். ஏற்கனவே நடந்த சம்பவங்கள். அவற்றில் பெரும்பாலானவை நமக்கே தெரியும். அதன் பின் படிப்பதில் என்ன சுவாரஸ்யம் ?

ஏற்கனவே நடந்த சம்பவங்களை புள்ளிகளாக்கி தம் கற்பனை திறனை பயன்படுத்தி கோலமிட தெரிந்தவர்கள்தான் வாசிப்பை சுவை ஆக்குகிறார்கள். சிலரோ வரலாற்றை சிதைத்தோ , திரித்தோ அலங்கோலம் ஆக்கி விடுவார்கள்.


சாண்டில்யன் வர்னணைகளுக்கு , (குறிப்பாக பெண்களை வர்ணிப்பத்தில் ) அதிக இடம் கொடுப்பார். கல்கி சாகசங்களுக்கு அதிக இடம் அளிப்பார். வர்ணனைகள் கட்டுக்க்குள் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் ஒரு பாணி வைத்து இருப்பார்கள்.

ரா கி ரங்கராஜன் எழுத்துகளை அந்த காலத்தில் இருந்தே படித்து வந்தாலும் , அவர் எழுதிய சரித்திர நாவலை படித்தது இல்லை. நண்பர் கோபி சொல்லித்தான் “ நான் , கிருஷ்ணதேவரயான் “ எனும் நாவலை படிக்கும் ஆர்வம் வந்தது.

சமீபத்தில்தான் படிக்கும் வாய்ப்பு கிட்டியது.

இது தொடர்கதையாக வந்தபோது, நான் தீவிர பாலகுமாரன் ரசிகன் . அவர் நாவல் தவிர எதையும் படிக்க மாட்டேன்.

இன்று நான் லீனியர், பின் நவீனத்துவம் என வாசித்து கொண்டு இருக்கும் ந்லையில், மரபான வடிவில் ஒரு நாவல் படிப்பது நல்ல மாற்றமாக இருந்தது.

மரபான வடிவம் என்றாலும் , இந்த நாவலில் ஒரு புதுமை இருக்கிறது.  ஒரு கதாபாத்திரமே கதை சொல்லும் வகையில் சிறுகதை எழுதலாம். ஆனால் நாவல் எழுத முடியாது. அதிலும் வரலாற்று நாவல் எழுத முடியாது.அப்படி யாரும் எழுதியதாக தெரியவில்லை.

கதா நாயகனே கதை சொல்வது போன்ற சவாலான பாணியில் இந்த நாவலை படைத்து இருக்கிறார் ரா கி ர.

பட்டாம்பூச்சி நாவல் படித்தவர்கள் இவர் எழுத்தின் கவர்ச்சியை மறக்க முடியாது. அது போன்ற எளிமையான , சகஜமான தமிழில் , நாவல் முழுதும் நம்மை கட்டி போட்டு விடிகிறார். தொடர்கதைகளுக்கென்றே சில வார்த்தை பிரயோகங்கள் உண்டு. இப்போதெல்லாம் தொடர் கதைகள் வருவதில்லை. எனவே ரொம்ப நாள் கழித்து , பழைய வார்த்தைகளை படிக்கையில் சந்தோஷமாக இருந்தது..


மொழி நடை எளிமையாக இருந்தாலும், இந்த நாவலை எழுத , கடுமையாக உழைத்து இருக்கிறார். விபரங்கள் திரட்டி இருக்கிறார்.


கதையின் ஓர் இடத்தில் நட்சத்திரத்திங்களின் நிலையை வைத்து , அரசர் எதிரியை வீழ்த்துவது போல சித்திரக்கப்பட்டு இருக்கும். இதை படித்த விஞ்ஞானி ஒருவர் தான் எழுதும் அறிவியல் புத்தகத்துக்கு , ரா கி ரவிடம் தகவல் உதவி கேட்டாராம். அந்த அளவுக்கு சிறு சிறு விஷ்யங்களை கவனித்து எழுதி இருக்கிறார்.

கசையடி, எக்காளம் , விளக்கை தூண்டுவதற்கு பணியாள், அரசரவை கூட்டம் என ஏராளமான சுவையான விஷயங்கள்.

வெளி நாட்டு படையெடுப்புகளால் திணறி வந்த இந்திய பண்பாட்டை காக்க , துறவி ஒருவர் கொடுத்த தூண்டுதலால் உருவாக்கப்பட்டதுதான் விஜய நகர பேரரசு. இதில் முக்கியமான மன்னர் கிருஷ்ண தேவராயர். இவரைப் பற்றிய நாவலை எங்கிருந்தும் தொடங்கலாம். எப்படியும் கொண்டு செல்லலாம்.

ஆனால் காதலை அடிப்படையாக கொண்டு நாவலை தொடங்கி , காதலை மையமாக வைத்தே நாவலை கொண்டு செலவ்தில்தான் , ரா கி ரவின் அனுபவம் முத்திரையை பதிக்கிறது.

காயத்ரி, சின்னா தேவி, திருமலா தேவி என்ற மூன்று பெண்கள்தான் இந்த நாவலை ஆக்ரமித்துள்ளனர்.

இதே நாவலை பால குமாரன் எழுதி இருந்தால் , கிருஷ்ணதேவராயரை குறைகளற்ற அரசராக வர்ணித்து , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருப்பார்.
ஆனால் இந்த நாவலில் அரசரின் குறைகளும் சொல்லப்படுவது இயல்பாக உள்ளது.

சாண்டில்யன் எழுதி இருந்தால் , ஆன்மீக எழுச்சியை உருவாக்கி இருக்க மாட்டார். சின்னா தேவியை வர்ணித்து எழுதி வேறு வகை எழுச்சியை உருவாக்கி இருப்பார்.

ஆனால் இந்த நாவலில் , காதல் சம்பவங்கள் குறைவே. காதல் உணர்வே அதிகம்.

தொடர்கதையாக எழுதப்பட்டதால், ஒவ்வொரு அத்தியாயமும் சஸ்பென்சுடம் முடிய வேண்டிய கட்டாயம்.  அத்தியாய தொடக்கம், முந்தைய அத்தியாயத்தை நினைவு படுத்த வேண்டிய அவசியம் போன்றவை தவிர்க்க முடியாது. எனவே ஒரே நாவலாக படிக்கும் போது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இது மட்டுமே நாவலின் குறை.

கடைசி பக்கங்களில் அவசரமாக வந்து செல்லும் மூன்றாவது மனைவி பாத்திரம் மனதில் பதியவில்லை. அதே போல கிருஷ்ண தேவராயரின் முந்தைய தலை முறை பற்றியும் தெளிவான சித்திரம் கிடைக்கவில்லை.

மற்றபடி வரலாற்ரு தகவல் கச்சிதமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. சிற்றரசர்கள் நிலை, மதுரை வரலாறு, நாயக்க வம்சம் , அப்பாஜி, தெனாலி ராமன் , கொக்கோகம்  , காம சாஸ்திரம் மூன்று நாள் மன்னர் ,    என பல தகவவல்கள்  கொடுத்துள்ளார்.

வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படியுங்கள்.


வெர்டிக்ட்

நான், கிருஷ்ணதேவராயன் - நான் ஸ்டாப் எண்டெர்டெய்ணர்

 நாவல் : நான் , கிருஷ்ணதேவராயன்
எழுதியவர் : ரா கி ரங்கராஜன் 

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா