Showing posts with label books. Show all posts
Showing posts with label books. Show all posts

Saturday, October 30, 2010

வரலாற்று வினோதம் : கார்ப்பரேட் உலகை, மேனேஜ்மெண்ட் அறிஞர்களை முட்டாளாக்கிய புத்தகம்

தான் நம்பாத ஒரு விஷயத்தை பிரச்சாரம் செய்வதும், செய்லபடுத்த முடியாது என தெளிவாக தெரிந்தும் ஒரு விஷயத்தை தான் நம்புவதாக பில்ம் காட்டுவதுவதும் உலகம் முழுக்க நடக்கும் விஷ்யம்தான்..

சும்மா டைம் பாசுக்கு பேசுகிறார்கள் என அவர்களுக்கும் தெரியும் , மற்றவர்களுக்கும் தெரியும் என்பதால் இதை எல்லாம் யாரும் சீரியசாக எடுது கொள்வதில்லை..

இதில் ஒரு விசித்திரம் இருக்கிறது..

ஆன்மீகம் பேசும் தலைவர்கள், ஆன்மீக நெறிக்கு விரோதமாக நடந்தாலோ அல்லது நாத்திகம் பேசும் தலைவர்கள் ஆன்மீக சம்பிராதயங்களை பின் பற்றினாலோ அது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.. எளிமையை வலியிறுத்தும் தலைவரின் விழாக்கள் ஆடம்பரமாக நடந்தாலும் கவலையில்லை

எனக்கு நம்பிக்கை இல்லை.. மற்றவர் உணர்வுகளை மதிக்க  இப்படி செய்ய வேண்டி இருக்கிறது என்று விளக்கமளித்தால் போதும்..எல்லோரும் சமாதானம் ஆகி விடுவார்கள்..

ஆனால் எழுத்தாளர்கள் நிலை வேறு..இது போன்ற hypocrisy யை எழுத்தாளர்கள் செய்தால் அவர்களை ஒதுக்கி விடுவார்கள்.. அதற்கு பின் அந்த எழுத்தாளரின் புத்தகம் விலை போகாது..

(எழுத்தாளனையும் எழுத்தையும் பிரித்து பார்க்கும் கலாச்சாரம் இங்கு இல்லை என்பதும் ஒரு காரணம் )

நீ எழுவதை உன்னாலேயே பின்பற்ற முடியவில்லை..ஊர்க்கு என்ன உபதேசம் என்று கேட்டு ஒதுக்கி விடுவார்கள்..

 

தமிழ் நாட்டிலேயே இப்படி என்றால், உலக அளவில் கேட்கவே வேண்டாம்.. அவ்வளவு சீக்கிரம் யாரையும் ஏமாற்ற முடியாது..

ஆனால், சாதாரண பொது மக்களை அல்ல, வாசகர்களை கூட அல்ல, .. கார்பரேட் உலகத்தையும், மேலாண்மை அறிஞர்களையுமே ஒரு புத்தகம் முட்டாளாக்கி விட்டது ..

நம்ப முடியாமல் இருக்கலாம்.. ஆனால் இது உண்மை..

புத்தகத்தை பற்றி பார்க்கும் முன் அதை எழுதியவர் பற்றி பார்க்கலாம்..

டாம் பீட்டர்ஸ்---

1942ல் பிறந்த இவர் , பெண்டகனில் சில ஆண்டுகள் பணி ஆற்றினார். அதன் பின் ஸ்டான்போர்டில் எம் பி ஏ படித்து முடித்து வாஷிங்டன் திரும்பினார்..

அனுப்வமும் படிப்பும் கலந்த திறமை இவருக்கு மேலாண்மை துறையில் வரவேற்பை கொடுத்தது..

ஒரு மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சியில் பணியாற்றினார்.. அங்கு வாட்டர்மேன் என்பவரும் பணியாற்றினார்.

சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் , மற்ற நிறுவனங்களில் இருந்து எப்படி தனித்து விளங்கிகிறது என்பதை ஆராய அவர் வேலை செய்த நிறுவனம் உத்தரவிட்டது..

உலகை கலக்கிய புத்தகம்…இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ் - 1982

வாட்டர்மேன் சில தனித்த பண்புகளை கண்டு பிடித்தார்.. இவைதான் ஒரு நிறுவனத்தை எக்சலண்ட் நிறுவனமாக்குகின்றன என்றார் அவர்..

இது ஆர்வமூட்டவே, இருவரும் சேர்ந்து அமெரிக்காவின் 43 பெரிய நிறுவனங்களை ஆராய்ந்து ( அல்லது ஆராய்ந்ததாக சொல்லி ) , அவற்றுக்கு பொதுவான எட்டு பண்புகள் இருப்பதாக சொன்னார்கள்..

என்ன பெரிய மேனேஜ்மெண்ட் படிப்பு? இந்த எட்டு பண்புகள் என்ன என்று பாருங்கள்..அதை அப்படியே உங்கள் நிறுவனத்தில் அமல் செய்யுங்கள் .. நீங்களும் எக்சலண்ட் நிறுவனம் ஆகி விடலாம்..

அவ்வளவுதான்..  மிக எளிது…

இப்படி இவர்கள் சொன்னதும், மேலாண்மை துறையின் நிபுணர்களான பீட்டர் டிரக்கர் போன்றோர் திகைத்து விட்டனர்.. ஒரு நிறுவனதை நடத்துவது எவ்வளவு கஷ்டம்.. அதன்  வெற்றிக்கு எவ்வளவோ விஷ்யங்கள் தேவை ஆயிற்றே.. இவர்கள் எட்டு விஷய்ம் இருந்தால், எக்சலண்டை எட்டி விடலாம் என்கிறார்களே என குழம்பினர்..

ஆனால் புத்தகம் எழுதிய இரட்டையர் அசரவில்லை.. நாங்கள் சும்மாவா சொல்கிறோம்.. எக்சலண்ட் நிறுவனங்களை ( ஐ பி எம், பி அண்ட்  ஜி , காட்டர் பில்லர், ஜெனெரல் எலெக்ட்ரிக் டிஜிடல் எக்யூப்மெண்ட் போன்றவற்றை ) ஆராய்ந்துதானே சொல்கிறோம்… என சொல்லவே, விற்பனை வரலாறு காணாத அளவில் ஆனது..

நாமும் எக்சலண்ட் நிறுவனம் ஆக வேண்டும் என நினைத்த நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி , த்ம் ஊழியர்களுக்கு வழங்கின..

பொதுவான வாசகர்கள் கூட தம் “மேனேஜ்மெண்ட் “ அறிவை வளர்த்து கொள்ள இதை வாங்கினர்.. வாங்கி பரிசளித்தனர்..இது போல எந்த மேனேஜ்மெண்ட் புத்தகமும் விற்பனை ஆகவில்லை என ஒப்பிட கூட முடியாது.. ஒப்பீட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டு விற்பனை ஆனது புத்தகம்..

கல்லூரி மாணவர்களுக்கு இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்பட்டது ( ஒட்டு மொத்த இந்திய நிலவரம் தெரியவில்லை… தமிழ் நாட்டில் இன்றும் இந்த புத்தகம் ரெகமண்ட் செய்யப்படுகிறது.. அந்த ரெகமண்டேஷனில் புத்தகம் வாங்கிய ஏமாளிகளில் நானும் ஒருவன்.. ஹி ஹி )

அவர்கள் தேர்ந்தெடுத்த எக்சலண்ட் நிறுவனங்களின் பொது தன்மை என்ன ?

  • விரைவாக முடிவெடு- விரைவாக செயல்படு
  • குறைந்த பட்ச ஆட்களை வைத்து அதிக பட்ச வேலைகளை முடி
  • வாடிக்கையாளருடன் தொடர்பில் இரு
  • ஊழியரின் செய்லதிறனை அதிகரி
  • ஊழியரை சுதந்திரமாக வேலை செய்ய விடு
  • கொள்கை அடிப்படையில், ஒரு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்
  • என்ன தெரியுமோ அதை உருப்படியாக செய்
  • அடிப்படைபன்புகளை உறுதியாக கடை பிடி.. அன்ராட வேலையை சுதந்திரமாக விடு

அட.. இது இருந்தால் போதுமா..இதுதான் மேனேஜ்மெண்டா ..இதுதான் எக்சலண்ட் நிறுவனதின் அடிப்படை பண்பா என ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகமும் வியந்து போற்றியது..

ஒரே ஆண்டுதான்..

அனைவருக்கும் மாபெரும் அதிர்ச்சி காத்து இருந்தது..

எக்சலண்ட் நிறுவனங்கள் என இவர்கள் தேர்ந்து எடுத்து இருந்தார்கள் அல்லவா..

அதில் கிட்டத்தட்ட அனைத்தும், எங்களால் தொழில் செய்ய முடியவில்லை.. நஷ்டத்தை சமாளிக்க முடியவில்லை… போய் வருகிறோம் என மஞ்சள் கடுதாசி கொடுத்தன..

அட, ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை.. அனைத்தும் நஷ்டமா..இவற்றை  எப்படி எக்சலண்ட் நிறுவனம் என இவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்… அடிப்படை பண்புகளை எந்த அடிப்படையில் வரையரை செய்தனர்,,,  அந்த பண்புகளை இந்த நிறுவனங்கள் கடைபிடிக்கின்றன என்பதை எப்படி முடிவு செய்தார்கள் என கேள்விகள் எழுந்தன..தான் நம்பாத ஒரு விஷ்யத்தை, அவர் நிறுவனத்தில்கூட செயல்படுத்தாத விஷ்யத்தை, நஷ்டமாகும் நிறுவனங்கள் பின்பற்றும் விஷ்யத்தை நமக்கு போதித்தார்களா என பொருமினர். என்னதான் ஆராய்ந்தார்கள்

அப்படி ஒழுங்காக ஆராய்ந்து இருந்தால் , இவை எக்சலண்ட் நிறுவனங்கள் அல்ல… நஷ்ட நிறுவனங்கள் என தெரிந்து இருக்குமே என கோப பட்டனர்..

என்ன கோபித்து என்ன ? அதற்குள் புத்தகம் நன்றாக சம்பாதிது விட்டது…

அதிலும் , டாம் பீட்டர்ஸ் மிக நன்ராக சம்பாதித்தார்,,..

அவர் பணியாற்ற நிறுவனதில் இருந்து விலகி விட்டுத்தான் புத்தகம் ரிலீஸ் செய்தார்.. எனவே ராயல்டி பணம் இவருக்கு வந்த்து.. அந்த நிறுவனத்தில் இருந்து இருந்தால், அந்த நிறுவனத்துக்குத்தான் பணம் போய் இருக்கும்..

சரி..எங்கு தவறு நடந்தது..இதற்கு டாம் என்ன பதில் அளித்து சமாளித்தார்..  அதன் பின் அவர் புத்தம் எழுதினாரா? என்ன எழுதினார்? என்பதை விரிவாக பிறகு பார்க்கலாம்..

எது எப்படி இருந்தாலும், ஒட்டு மொத்த கார்ப்பரேட் உலகை முட்டாள் ஆக்கிய பெருமை , இந்த புத்தகத்துக்கு என்றும் உண்டு..

வரலாறு மறக்க முடியாத புத்தகங்களில் ஒன்று – இன் சர்ச் ஆஃப் எக்சலன்ஸ்

Tuesday, October 26, 2010

எம்பிஏ பாடத்தை இலக்கியம் , வரலாற்றில் கலந்து தரும் பாலகுமாரனின் உடையார்

சில நாவல்கள் படிக்கும்போது விறுவிறுப்பாக இருக்கும்.. ஆனால் படிது முடித்த பின் எதுவும் நினைவு இருக்காது..

இதை குறை என சொல்ல முடியாது.. படிக்கும் சுகம் கிடைக்கும் என்ற பலன் கண்டிப்பாக கிடைக்கும்..

படிப்பதை ஒரு அனுபவமாக மாற்றும் சீரோ டிகிரி போன்ற நாவல்கள் ஒருவகை.. படித்து முடித்தாலும் , படித்த்தன் தாக்கம் நீடிக்கும்..

படிக்கும்போது இனிமையாக இருக்கும் சில நாவல்கள், மனதை தாண்டிய ஒரு நிலைக்கு நம்மை எடுத்து செல்லும் சக்தி கொண்டு விளங்கும்..

விஷ்ணுபுரம் போன்றவை இந்த வகையை சேர்ந்தவை.

பாலகுமாரன் இந்த எல்லா வகை எழுத்திலும் கில்லாடி..

ஆனால் அவரது உடையார் என்ற நாவல் சற்றே வித்தியாசமானது..

தனது அனுபவங்களை நாவலாக்குவது ஒரு விதம்.. ஆனால் ஒரு நாவலுக்காக பல இடங்களை சென்று பார்த்து, பலருடன் பேசி , பல் நூல்களை படித்து , கடும் உழைப்புடன் ஒரு சினிமாவை உருவாக்குவது போல ஒரு நாவலை உருவாக்குவது என்பது பாலகுமாரன் அவர்களால் மட்டுமே முடியும்..

அந்த அளவுக்கு ராஜராஜ சோழன் மீது அவருக்கு ஆர்வம்..

பொன்னியின் செல்வன் படித்து விட்டொமே .. அதே கதைதானே இது என சிலர் நினைக்கலாம்..

வரலாறு மாறாது என்றாலும் பார்வை வெவ்வேறு என்பதை படித்தால்தான் உணர முடியும்..

சோழ வரலாறு என்ன ?

விஜயாலய சோழனுக்கு பின் பராந்தக சோழன் .. அவருக்கு மூன்று மகன்கள் ..

ராஜாதித்தர் கண்ட்ராதித்தர் அரிஞ்சயன்

இதில் முதல் மகன் போரில் இறந்து விட , கண்டராதிதரும் அவருக்கு பின் அரிஞசயனும் ஆட்சி செய்தனர்..

அதன் பின் தான் குழப்பம்.. அரிஞயனுக்கு பின் கண்டராதிதரின் மகன் உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும்.. ஆனால் அப்போது அவர் சின்ன வயதாக இருந்த்தால் அரிஞ்சயனின் மகன் சுந்தர சோழர் ஆட்சிக்கு வந்தார்..

சுந்தர சோழருக்கு பிறகாவது உத்தம சோழன் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சிலர் நினைக்க , இன்னும் சிலர் சுந்தர சோழரின் மகன் ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்க , உள் நாட்டு குழப்பம்..

சமகால அரசியல் நிலை போன்ற நிலை...

கட்சியனர் ஆதரவு ஒருவருக்கு, மக்கள் ஆதரவு ஒருவருக்கு என்ற நிலை..

கடைசியில் சுந்தர சோழர் மகனான ஆதித்த கரிகாலன் ஆட்சிக்கு வர, உத்தம சோழன் ஆதரவாளர்கள் என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை..

இன்னிலையில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுகிறான்.. இதை செய்த்து உத்தம சோழன் என்வும் சொல்ல்லாம் ..இல்லை எனவும் சொல்ல்லாம்..

வரலாற்று ஆதாரம் இல்லை..

இந்த நிலையில், உத்தம சோழனுக்கே பதவியை விட்டு கொடுத்து , தியாகி ஆனார் ராஜராஜ சோழன் ( ஆதித்த கரிகாலனின் தம்பி ) என்பதுதான் பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸ்..

அத்துடன் கதை முடிகிரது..

கதை முடிந்தாலும் வரலாறு முடியவில்லை..

ராஜராஜ சோழனுக்கு மக்கள் ஆதரவு அதிகரித்து, அவர் அரசரனார் என்பது வரலாறு..

உத்தம சோழனை டிஸ்மிஸ் செய்து விட்டு பதவி ஏற்றாரா, அல்லது உத்தம சோழன் தானே பதவி விலகினாரா.. அல்லது கொல்லப்பட்டாரா.. அல்லது மற்றவர்கள் பதவி விலக செய்தார்களா என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை...

ஆனால் கோடிட்ட இடங்களை இட்டு நிரப்பி, ராஜராஜசோழன் ஆட்சியை கண் முன் நிறுத்துவதுதான் உடையார்.. ஒரு வகையில் , பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி.. இன்னொரு வகையில் முற்றிலும் வேறுபட்ட நாவல் ( காரணத்தை பிறகு சொல்கிறேன் )

உத்தம சோழனின் மகனும் , பதவி போட்டியில் இருந்து விலகி விட, ராஜராஜன், அவனுக்கு பிறகு ராஜேந்திரன் என ஆட்சி தொடர்ந்த்து..

பலதுறைகளில் ஆட்சி பொற்கால ஆட்சியாக இருந்த்து என்பதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

அப்படி பொற்கால ஆட்சி அமைந்து இருக்க வேண்டுமானால், ராஜராஜ சோழன் எப்படிப்பட்ட ஆட்சி நட்த்தி இருக்க கூடும் என்ற மேனேஜ்மெண்ட் , நிர்வாக கலை சார்ந்த பார்வை பார்த்துள்ளார் பாலகுமாரன்..

பொன்னியின் செல்வனை பொறுத்தவரை, அதில் தனி மனித உணர்சிகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார் கல்கி.. அதுவும் சுவையாகத்தான் இருக்கும்...

ராஜராஜன் ஆட்சியின் உச்சமாக பிரமாண்ட ஆலயம் எழுப்ப்பட்ட்தை திறம்பட சொல்லி இருப்பது உடையார் நாவலின் ஹைலைட்..

இதை செய்ய வேண்டுமானால் எந்த அளவுக்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருக்க வெண்டும், மேனேஜ்மெண்ட் ஸ்கில்ஸ் இருந்திருக்க வேண்டும், என்பதை , ஒரு ஃபிக்‌ஷன் போல எழுதி சென்று இருக்கலாம்..

ஆனால் அப்படி எழுதாமால், ஒரு நிர்வாக இயல் புத்தகம் போலவும், சுய முன்னேற்ற நூல் போலவும் , பிரமாதப்படுத்தி இருக்கிறார் பாலகுமாரன்..

அதே நேரம் வரலாற்று ஆய்வு நூல் போலவும், ஆன்மீக நூல் போலவும், மென் ஆர் ஃபிரம் மார்ஸ் , விமன் ஃபிரம் வீனஸ் போன்ற மனவியல் நூல் போலவும் , அதற்குண்டான உழைப்பை செலுத்தி படைக்கப்பட்டுள்ளது இந்த நாவல்..

பொறியியல் துறையில் இருப்பவர்கள், இதை அணுஅணுவாக ரசிக்க முடியும்.. ஹீட் ட்ரீட்மண்ட், ஆயில் க்வெஞ்சிங் , என்பதெல்லாம் தெரிந்து இருந்தால் இன்னும் ரசிக்க முடியும்...

பாலகுமாரன் இத்தனை நாள் எழுதியதெல்லாம் , இந்த மெகா நாவலை படைப்பதற்கான ஒத்திகைதானோ என தோன்றுகிறது..

ஆன்மீகம், வரலாற்று பார்வைகளை பிறகு சொல்கிறேன்..

நிர்வாகவியலை அவர் கையாண்டு இருப்பதை மட்டும் இப்போதைக்கு சொல்கிறேன்.. ( ஆறு பாகம் கொண்ட நாவலைப்பற்றி ஒரே பதிவில் சொல்ல முடியாது )

தொழிலில் , வாழ்க்கையில் வெற்றி பெற தொடர்பு கொள்ளும் கலை என்பது மிக அவசியம்.. என்ன சொல்கிறோம் என்பதை விட எப்படி சொல்கிறோம் என்பதே முக்கியம்..

கண்டேன் சீதையை என அனுமான் சொன்னது ஞாபகம் இருக்கலாம்..

சரி, நாவலின் இந்த பகுதியை பாருங்கள்..

ஓடி வந்தவன் சாம்பானுக்கு அருகே வந்து மண்டி இட்டான்

“ ஆட்கள் வருகிறார்கள்.. பதினாறு பதினேழு பேர் மலையேறி வருகிறார்கள் “

சாம்பான் திகைத்தான்

“ அத்தனை பேரும் பெண்கள் “

வந்தவன் தொடர்ந்து சொன்னான்..

சாம்பான் கைபிரம்பு எடுது பளீரென அவனை அடித்தான்.

“ ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென புரிந்து கொள். பெண்கள் வருகிரார்கள் என சொல்லி இருந்தால் அது எவ்வளவு அழகாக இருந்து இருக்கும்,, ஆட்கள் வருகிறார்கள்..பெண்கள் என்கிறாயே..பரபரப்பாக ஏதோ சொல்ல வேண்டும் என ஆசை படுகிறாய்... இனி இப்படி செய்தால் உன்னை வெளியேற்றி விடுவேன்..விஷயத்தை சுருக்கமாகவும், நேரடியாகவும் சொல்ல கற்றுக்கொள் “ என கர்ஜித்தான்ன்.

நான் மிகவும் ரசித்த இடம் இது..



ஒழுக்கம் குறைந்தவர்களை பைசாசம் எளிதாக தாக்கும்.. அதோ, அருண்மொழியை பாருங்கள்.. நகராதே என்று சொன்னேன்.. இந்த கணம் வரை அவன் நகரவே இல்லை.. அவன் உங்களை விட நல்ல நிலைக்கு வருவான்...

கீழ்படிதல், ஒழுக்கம் போன்றவை இருந்தால்தான் தலைவன் ஆக முடியும் என சொல்லும் இந்த இட்த்தை, அத்ன் பின்புலத்தோடு படித்தால் மிகவும் ரசிக்க முடியும்...

கடைசி வரை வெல்ல முடியாத நிலையில் இருந்த எம் ஜி ஆர், ஆயிரம் அரசியல் தவறுகள் செய்தாலும் , ஒழுக்கத்தில் தீ போல இருந்தார் என்பதை மறுக்க முடியாது..

அதே போல , இவ்வள்வு பெரிய நிலையில் இருக்கும் ரஜினி, இன்னும் இயக்குனருக்கு இந்த அளவு கீழ்படிந்து நடிப்பதையும் கவனதில் கொண்டால், வெற்றிக்கு என சில ஃபார்முலாக்கள் இருப்பது தெரியும்..

ஒரு போர் படை தள்பதி , தன் படையினருடன் ஆற்றை கடக்க வேண்டி இருந்த்து...

ஆனால் அதை கடக்க எல்லோரும் பயந்தனர்..

“ ஆழம் அதிகமாக இருக்குமோ ? :”

தளபதி எதுவும் பேசவில்லை/..

தானே இறங்கினார்..

பிறகு மீண்டும் கரை ஏறினார்..

தன் காலில் இருந்த நீர் அடையாளத்தை காட்டினார்..

“ ஆழம் அதிகம் இல்லை..முழங்கால் அளவு தண்ணீர்தான் “

அதன் பின் அனைவரும் ஊக்கதுடன் ஆற்றை கடந்தனர்...

தலைவன் என்பவன் பேசுபவன் அல்லன்.. செயல் மூலம் மற்றவரை ஊக்கப்படுதுபவன்..

இந்த நாவலில் வரும் காட்சியை பாருங்கள்..

மன்னர் சரசரவென ஆற்றில் இறங்கினார்..வண்டி எவ்வலவு தொலைவில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார்..

“ ஏற்றம் கட்டுங்கள் “ என உத்தரவிட்டார்..

ஒரு மாபெரும் அரசர், ஆற்றில் இறங்கி , மற்றவர்களுக்கு வழிகாட்டும் இந்த இடம் அருமை..

அதே போல ஒரு செயலை, அனைவரின் பங்கேற்புடன் செய்தால்தான் வெற்றி கிடைக்கும்.. ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம் அவசியம்.. அப்போதுதான் அனைவரும் ஆதரவு தருவார்கள்..உற்சாகத்துடன் உழைப்பார்கள் என்பதையும் அருமையாக அனுபவித்து எழுதி இருக்கிறார் பாலகுமாரன்..

வரலாற்றிலோ. நாவல் படிப்பதிலோ ஆர்வம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை..

கண்டிப்பாக படியுங்கள்... பயனுள்ள்தாக இருக்கும்..

வரலாற்றில் , இலக்கியத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்

Monday, October 25, 2010

கிருஷ்ணர் கடவுள் அல்ல... அல்லாவால் அனுப்பப்பட்ட இறை தூதர் - புத்தக அறிமுகம்

ஒரு குறப்பிட்ட கடவுளை நம்புபவர்களுக்கு எது நடந்தாலும் அது கடவுள் செய்வதாக தோன்றும்..
கடவுள் இல்லை என நம்புபவர்களுக்கு , அற்புதங்கள் என சொல்லப்படுவதெல்லாம் ஏமாற்று வேலை என தோன்றும்..
எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒரு பார்வையாலானாக உலகை கவனிப்பவருக்கு, உலகம் புது புது தகவ்ள்ககளை வாரி வழங்க காத்து இருக்கிறது...
என்னை பொறுத்தவரை, பைபிள் , குரான் , கீதை, மூலதனம் , பெண் ஏன் அடிமை ஆனாள் , தம்மபதம், என எல்ல்லாவற்றையும் ஆழ்ந்து படித்து அதன் சாரத்தை உறிய முயல்வது வழக்கம்..

அந்த வகையில், ஒரு வித்த்தியாசமான புத்தகம் படிக்க நேர்ந்தது...

அல்லா என்பவர் அனைவருக்கும் இறைவன்... அந்தந்த நாடுகளுக்கு ஏற்றபடி பல நபிமார்களை அனுப்பி மக்காளை நல்வழி படுத்துகிறார் அல்லா..

அப்படி அவர் அனுப்பிய நபிமார்களில் ஒருவர்தான் கிருஷ்ணர் என சொல்லி , ஆச்சர்யபடுதியது புத்தகம். (இயேசுவும் கூட நபிமார்களில் ஒருவரே என்பது ஒரு நம்பிக்கை )

அட, என்னாதான் சொல்ல வருகிறார்கள்,,, வித்தியாசமான பார்வையாக இருக்கிறதே என படிக்க ஆரம்பித்தால், அடுத்தடுத்து பல ஆசாரியங்கள்..

குர்ஆனில் சில நபிம்மார்கள் பெயர்கள் குறிப்பிடபட்டுள்ளன.. இதில் குறிப்பிட படாத நபிமார்களை ஏற்க கூடாது என கருத இடமில்லை..
" நிச்சயமாக நாம் உமக்கு ( நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் அவர்களுக்கு ) முன்னர் பல தூதர்களை அனுப்பி உள்ளோம்..சிலரை பற்றி கூறி உள்ளோம்.. உமக்கு கூறாதவர்கள் சிலரும் உள்ளனர் ( 40 : 79 )
என குர்ஆனில் சொல்லப்பட்டு இருக்கிறது...

ஹஸ்ரத் தலைமி அவர்களின் நபி மொழி ஒன்றில் இப்படி இருக்கிறது...

கான பில் ஹிந்தி நபிய்யுன் அச்வதுள் லாவணி இச்முஹூ காஹினா
" இந்தியாவில் ஒரு நபி தோன்றினார்.. அவர் கருமை நிறத்தவர் .. அவர் பெயர் காஹினா "

இது போல பல கருத்துக்களை இஸ்லாமிய சான்றோர்கள் நூல்களில் இருந்து எடுத்து காட்டுகிறது புத்தகம்...

இந்துக்கள் கிருஷ்ணரை கடவுளாக வணங்கினாலும், அவர் கடவுள் அல்ல... இறை தூதரே என சுவையாக வாதாடுகிறது இந்த நூல்..

இந்துக்கள் கிருஷ்ணரை பார்க்கும் விதம், அவரை பற்றிய வரலாறுகள், சம்பவங்கள் போன்றவற்றை வேறு ஒரு கோணத்தில் ஆய்கிறது நூல்..

இன்னும் ஒருபடி மேலே போய், நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹூ அலைஹி வசல்லம் ) வருகையை பற்றி மகரிஷி வியாச பகவானின் பவிஷ்ய புராணத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது என்கிறார் நூல் ஆசிரியர்..

இன்னும் நிறைய சுவையான தகவல்கல் இருகின்றன...

கண்டிப்பாக படித்து பாருங்கள்.... புத்தகம் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்க வேண்டாம்.. எனாதன் சொல்கிறார்களே என பாருங்கள்..

நமது கிருஷ்ணர் எழுதியவர் : கலீல் அகமது

Thursday, September 30, 2010

அதிகாரம், அடுத்தவன் காதலியை கைப்பற்றுதல்- அதிர வைக்கும் மத்தகம் (ஜெயமோகன் குறுநாவல் )


சிறுகதையை விட நாவல்தான் எனக்கு பிடிக்கும்.. அதனால்தான் ஜெயமோகனின் ஊமைசெந்நாய் என்ற சிறுகதை தொகுப்பை ரொம்ப நாளாக படிக்கவில்லை..
ஆனால் இன்று இரவு புத்தகத்தை எடுத்தேன். சும்மா புரட்டி பார்க்கலாம் என பார்த்து மத்தகம் என்ற குறு நாவல் படிக்க ஆரம்பித்தேன்.. கொஞ்ச நேர பொழுது போக்கு என்பதே என் நோக்கம்.
ஆனால், நான் படித்த்தில் முக்கியமான ஆக்கம் இது என படிக்கும் போதே புரிந்த்த்து.. படித்து முடித்த்தும் அது ஏற்படுத்திய தாக்கம்தான், நடு நிசி 12 க்கு இதை எழுத வைத்த்து..
ஒரு நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை இது உண்டாக்கியது..
ஆசான் என்பவர் யானைப்ப்பாகன்.. அவருக்கு கீழ் இருப்பவர்கள் அருணாசலம் , பரமன் , சுப்புக்கண் ஆகியோர்..
கேசவன் என்பது யானையின் பெயர்.. ஒரு ராஜ்ஜியத்தின் ஆதரவே அதர்கு இருக்கிரது , தம்புரானின் நட்பு இருப்பதால் அது மிகப்பெரிய செல்வாக்குடன் இருக்கிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானலும் செய்யலாம், அதை கேட்பார் யாரும் இல்லை.. தம்புரானைதவிர யாரும் அந்த யானை மேல் ஏற முடியாது.
தம்புரானும் யானையும் கொண்டுள்ள நட்பு சாதாரணமானது அல்ல.. ஒரு கட்ட்த்தில் தன்னை கட்டியிருந்த இரும்பு சங்கிலிகளையே அறுத்து கொண்டு , தம்புரானை பார்க்க செல்கிறது..அதை தேட , யானை பாகன் அப்டும் பாடு தனிக்கதை..
தன் உயிரையே பனயம் வைத்து ஆசானை காத்தவன் பரமன்.. அவன் தந்தையும் பாகந்தான்.,..யானையால் கொல்லப்பட்டான். கொல்லப்பட்ட்தும் அவன் அம்ம இன்னொருவனுடன் சேர்ந்து கொள்ள , பரமன் அனாதை ஆகி கஷ்டப்பட்டு , இந்த நிலைக்கு வந்து இருக்கிறான்.
அருணாச்சலத்தை மிரட்டி, அவன் காதலியை அடைகிறான். பதிலுக்கு அருனாசலம் மிரட்டும்போது அவனை கொன்று , யானை மேல் பழியை போட , அதை நம்பும் ஆசான் யானையை விட்டு விலகுகிறார்..
ஒரு அழகியை அடைய, பொது பணத்தை திருடிய பரமன், அதை காட்டி மிரட்டபடும் பொது கொலை செய்கிறான்
இதற்கிடையில் தம்புரான் உடல் நலிவுற , அடுத்து வந்தவர் யானையை விரும்பவில்லை..

அருணாச்சலம் இறந்த்தும் , அவனது மனைவியை தன் ஆதிக்கதுக்குள் கொண்டு வருகிறான் பரமன்..

இது வரை படிக்கும்போது, பரம்னுக்கு பெரிய தண்டனை கிடைக்க போகிறது – கேசவன் யானை அவனை கொல்ல போகிறது என நினைப்போம்..
ஆனால் கிளைமேக்ஸ் வாழ்க்கையை பற்றிய ஒரு பாடம் எடுக்கிரது.. காதல், அதிகாரம், காம்ம் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க வைக்கிறது..
அதிகாரம் எனப்து காம்ம் போன்ற போதை.. ஆனால் அது எப்போது எப்படி கைமாறும் என யாருக்கும் தெரியாது..
கெட்ட்து செய்பவனுக்கு , கெட்ட்து நடக்கும் என்ர கணக்கெல்லாம் இல்லை..
யார் எப்படி மாறுவார்கள் என்பதும் புதிர்தான்.. உயிரை பணயம் வைத்த பரமன், ஒரு கட்ட்ட்த்தில் துரோகியாக மாறுவது, அதிகார உச்சியில் இருந்த கேசவன் யானை பொறாமை தீயால் பீடிக்கப்படுவது, இன்னொரு யானையை தாக்குவது, வலுவான அந்த யானை பெருந்தன்மையாக கேசவனை மன்னிப்பது, இனி தனக்கு வேறு நாதியில்லை என்ற நிலையில், கேசவன் யானை பரமன ஆதிக்கத்துக்கு உட்படுவது, பரமனை கொல்ல முயன்ற அருனாசலத்தின் மனைவி, வேரு வழியின்றி பரமனை சரணடைவது என வாழ்வின் அபத்தங்களை , யதார்த்த்தை சொல்கிறது நாவல்..
ஒட்டுமொத்த உலக வரலாறை படித்து முடித்த உணர்வு ஏற்பட்ட்து..
சாதாரனமாக படிப்பவர்களுக்கு , காதல் கற்பு , விசுவாசம் எல்லாம் கிண்டல் செய்யப்பட்து போல தோன்றலாம்.
வரலாறு படித்தவர்கள், அரசியலை கவனிப்பவர்கள், வாழ்வை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த குறு நாவல் நல்ல அனுபவ்மாக இருக்கும்...

இந்த தொகுப்பில் இருக்கும் மற்ற கதைகள் பற்றிய என் பார்வை , இரண்டொரு நாட்களில் ...
ஊமைச்செந்நாய்
ஜெயமோகன்
உயிர்மை பதிப்பகம்

Tuesday, September 28, 2010

சாராயகடையில் ஜெயமோகன் – சுவையான தகவல் நிறைந்த புத்தகம்



நாவல், சிறுகதை என்றெல்லாம் புனைவு எழுத்தைத்தான் பெரும்பாலும் படிக்கிறார்கள். சுயசரிதை பாணியிலான எழுத்துக்கள் அலுப்பூட்டகூடியவை என ஜெயமோகன் கூட ஒரு முறை கூறி இருக்கிறார்.

ஆனால் நிகழ்தல்- அனுபவ குறிப்புகள் என்ற ஜெயமோகனது நூலை படித்து முடிக்கையில், புனைவை விட இது போன்ற கட்டுரைகள்தான் சுவையாக இருப்பதாக தோன்றுகிரது.

உண்மையில் இந்த புத்தகத்தை அனுபவ குறிப்புகள் என்று சொல்லிவிட முடியாது.. அதாவ்து இது வெறும் தகவல் தொகுப்பு அல்ல. அவரது அனுபவங்களை அப்படியே தராமால் , சிறுகதை நடையில் தந்துள்ளார். சிறுகதையும், தன் வரலாறும் கலந்த ஒரு வித்தியாசமான – விறு விறு நடையில் புத்தகம் இருக்கிறது..

அவரது குழந்தை பருவமத்தில் தொடங்கி, கடைசியில் அழிவு என்பதை பற்றி பேசி முடிக்கும்போது ஒரு நாவல் போன்ற அழுத்தையும் தருகிறது..

நான் அங்கு போனேன் ,,அதை பார்த்தேன் என்ற சம்பவங்களின் தொகுப்பாக இல்லாமல், ஒவ்வொன்றையும் எப்படி கவனித்தார், ஒரு விஷயம் நடக்கும் போது நம மனனிலை என்ன என்றெல்லாம் விவரிக்கும்போது அது நம் அனுபவமாக மாறி விடுகிறது.

ஆறு மாத குழைந்தையாக இருக்கும்போது , தன் முதல் நினைவு தொடங்குவதாக , ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது.

அதன் பின் அவரது அம்மாவின் தற்கொலை பற்றி அறியும்போது அதிர்ச்சி..

முரட்டுத்தனமான தந்தை , அவரது பாசம் , நேசம் ,தன் மகன் பத்திய சாப்பாடு சாப்பிடும்போது தான் மட்டும் மீன் குழம்பு சாப்பிடாத தன்மை என்றெல்லம் படிக்கும் போது மனிதம் என்பதின் மீதே ஒரு பிரமிப்பு உண்டாகிறது..

தங்கை பற்ரி, அண்னனை பற்ரியெல்லாம் எழுதுகிறார், ஒவ்வொரு சின்ன விஷ்யம் பற்றியும்..

நாம் இந்த அளவு உன்னிப்பாக வாழ்க்கையை வாழ்கிறோமோ என்ற கேள்வி எழுகிரது..

அண்ணனின் படிப்பறிவை ஜாலியாக கிண்டல் செய்துள்லது நல்ல நகைசுவை.

எதற்கெடுத்தாலும் பாய்ந்து அடிப்பது அண்னனுக்கு பழக்க்மாக இருந்தது. அண்ணனுக்கு பிடித்த நடிகர் விஜய்காந்த் தான். அவரைபோலவே சண்டையில் சீறுவார்.. துறை அதிகாரியை தாக்கி, வேலை நீக்கம் செய்யப்பட்டு , அல்லாடியபோதுதான் அது அவ்வலவு சிறந்த வழி இல்லையோ என்ற ஐயம் அண்ணனுக்கு ஏற்பட்டது..



திடீரென அண்ணன் கூப்பிட்டார். “ டேய், உனக்கு ரெண்டு லட்சம் பணம் கிடைத்து இருக்கிறது என பேப்பரில் போட்டு இருக்கிறதாமே ? “ இவர் எங்கே பேப்பர் படித்தார் என எண்ணி “ யார் சொன்னது என்றேன் ..




பள்ளிகாலத்தில் அவரது மகன் சந்தித்த கஷ்டங்களை மறைக்காமல் எழுதி இருப்பது பெரிய விஷயம்.. மக்கு மாணவன் என ஆசிரியர்களால் முத்திரை குத்தப்பட்டு, பெற்றொரின் ஆதரவால் தலை நிமிர்வது ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய விச்யம..

ஆனால் துறவிகளால் நடத்தபடும் பள்ளிகளில் தான் அடக்கு முறை அதிகம் என்ற அவர் பார்வை சரியல்ல.

நானும் கிறிஸ்தவ துறவிகளால் நடத்தப்படும் பள்ளியில் படித்தவன் தான்., அங்கே அன்பு மட்டுமே இருக்கும். கண்டுப்பும் இருக்கும் , நேசமும் இருக்கும்..

பணக்கார பள்ளிகளில் வேண்டுமனால் அவர் சொல்லும் நிலை இருக்கலாம்..

சுந்தரராமசாமி, அசோகமிதிரன் , காந்தீயம் , கோமல் சு

வாமினாதன்ஜாதா தற்கொலை ,காதல் என்று ஆழமான விஷ்யங்களும் உண்டு.

ஏ டி எம் கதவை திறக்க தெரியாமல், கதவு கண்ணாடியை உடைத்த காமெடி மேட்டரும் உண்டு. கிளுகிளுப்பு மேட்டர்கலும் உண்டு.

திருக்குறள் பற்றிய பார்வை திருக்குறள் மேல் புதிய காதலையே உண்டாக்கியது.

வாழ்வின் ஒரு மோசமான நேரத்தில், சாராயகடையை நாடி செல்வதும் அங்கு தயக்கி நிற்பதும் சினிமா போன்ற அருமையான காட்சியமைப்பு.

இதை படித்து முடித்த பின், நமக்கு தோன்றுவது, வாழ்க்கை என்பது சிறு சிறு விஷயங்களால் ஆனது. எனவே ஒவ்வொன்ரையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்பதுதான்.

உயிரமை பதிப்பகம் – ஜெயமோகன் காம்பினேஷனில் இது போல பல புத்தகங்களை எதிர்பார்க்கிறேன் .



நிகழ்தல் – அனுபவகுறிப்புகள்

ஜெயமோகன்

உயிர்மை பதிப்பகம்

Thursday, September 2, 2010

வேலூர் புத்தக கண்காட்சி


Image0020
Originally uploaded by pichaikaaran




Image0009
Originally uploaded by pichaikaaran



Image0008


Image0007


புத்தகம் வாங்க வேண்டுமானால் சென்னைக்குத்தான் வர வேண்டும் என்று இல்லாமல் எல்லா இடங்களிலும் புத்தகங்கள் கிடைக்க செய்வது வரவேற்கத்தக்கது...
சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருப்பவர்கள்கூட , வேலூருக்கு சென்று, நெரிசல் இல்லாமல் புத்தகங்கள் பார்வையிட்டு தேவையானதை வாங்க , இந்த கண்காட்சி உதவுகிறது.

தினமும் முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வுகள், இலக்கிய அமர்வுகள் நடக்கின்றன..
வரலாற்று சிறப்பு மிக்க வேலூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே புத்தகங்களையும் பார்வையிட்டு , தேவையானதை வாங்கி கொண்டு வரலாம்.
நான் ரொம்ப நாளாக தேடிய புத்தகங்கள் கண்ணில் பட்ட்ன.. தள்ளுபடி விலையில் வாங்கிக் கொண்டேன்..
தேடிய புத்தகங்கள் சில கிடைக்கவில்லை.. அதாவது என் கண்ணில் படும்படி வைக்கப்பட வில்லை... ( ஜெயமோகனின் கொற்றவை , கேபிள் சங்கரின் சினிமா வியாபாரம், தாஸ்தயெவ்ஸ்கியின் ஒரு புத்தகம் அங்கு இருந்திருக்க கூடும்.. ஆனால் என் கண்ணில் பட வில்லை )
நான் அவசரமாக இன்னொரு இடம் செல்ல வேண்டி இருந்த்தால் , விசாரித்து வாங்க முடியவில்லை..
அவ்வப்போது மின்சார தடை ஏற்பட்ட்து வருத்தம் என்றாலும், நல்ல முயற்சியை வரவேற்க வேண்டும்...

.

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா