Friday, July 30, 2010

தேடினேன் வந்தது

”சார்.. இந்த தங்க காசை வச்சுக்கிட்டு , நூறு ரூபா குடுங்க “

கேட்ட அவன் புத்தனா அல்லது புத்திசாலியா அல்லது சித்தனா என யோசிக்க முடியவில்லை...அவன் பெயர் குப்பன்... ஆனால் அவன் கேரக்டர் எப்படி- தெரியவில்லை...

அது உண்மையான தங்கம்தான் என தெரிந்தது...இதை நூறு ரூபாய்க்கு ஏன் விற்கிறான்?

அவனிடமே கேட்டு விட்டேன்..

“ சார்.. இந்த புதையலுக்கு சொந்தக்காரன் ஒரு பைத்தியக்காரன்.. தன் சொத்து நல்ல ஆளுங்க கைக்கு போய் சேரணும்ங்றது அவன் ஆசை.. பேராசைப்பட்டு வித்தா , நான் ரத்தம் கக்கி செத்துடுவேன் ..அந்த மாதிரி மந்திர வசியம் செஞ்சு வச்சுட்டான் “ சோகமாக சொன்னான்,

“ பேசாம நல்லவங்க கைய்ல புதையல ஒப்படைச்சுட்டு, பங்கு வாங்கிக்க ..” ஐடியா கொடுத்தேன்...

“ நல்லவஙனு எப்படி கண்டு பிடிக்றது ? அதுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்காரு.. ஆனால் அந்த கண்டிஷனை இது வரை யாரும் நிறைவேத்தல... நிறைவெத்த முடியலைனா அவன் கண்னு பறி போய்டும்..இனீகு ஒருத்தன் வரான்.. என்ன ஆக போகுதா “ புலம்பினான் அவன்


என்ன கண்டிஷன் ? - கேட்டேன்..

“ அவனை நல்லவன் நு நூறு சதவிகிதம் யாராச்சும் நம்பனும்... அப்படி ஒரு ஆளை கூட்டி வரனும்... அந்த ஆள் அதை சாமி முன்னாடி சொல்லணும்... அவன் மனசாட்சிப்படி உண்மையலேயே அவன் நல்லவன் நு சொன்னா புதையல்..இல்லைனா, கண் போய்டும்”

எனக்கு ஆச்சர்ய்மாக இருந்தது...

சரி.. நானும் உன் கூட வர்ரேன்.. நடப்பதை பார்க்கலாம்... கிளம்பினேன்... அந்த புதையல் மேல் எனக்கும் ஆசை வந்து விட்டது ..

**************************************************************************************************************************

சாமி சிலை முன் வந்தவனை உட்கார வைத்து இருந்தார்கள் ...

“ பாருப்பா..தைரியமா சொல்லு..உண்மையா சொல்லு..இவரை நல்லவர்னு முழுசா நம்புறியா ? “

“ ஆமா .. இவரை ரொம்ப நாளா தெரியும்.. நன்பர்.. நல்லவர்... “

“ சாமியை நல்லா பார்த்து சொல்லு..பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது “

“ சத்தியமா ந்ல்லவர்.. குறை சொல்லவே முடியாது “

அழைத்து வந்தவன் பரவசத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்..

குப்பன் உடுக்கையை அடிக்க ஆரம்பித்தான்...
ஒரு வித அமானுஷ்ய த்னமை நிலவியது...

திடீரென , அழைத்து வந்தவன் முகத்தை பொத்தி கொண்டு கதற ஆரம்பித்தான்....

குப்பன் பதறினான்..

“ தப்பா எதாச்சும் நினைச்சியா ? “

உட்கார்ந்து இருந்தவன் பயந்து விட்டான்.. முகத்தில் வியர்வை பொங்கி வழிந்தது.
” இப்ப நல்லவ்னா இருக்கான்..புதையல் கிடைத்ததும் என்னை ஏமாத்திடுவான் நு சந்தேக்கப்பட்டுட்டேன் “

குப்பன் தலையில் கை வைத்து கொண்டான்..

“ உன் சந்தேகம் இவன் கண்ணை பறிச்சுடுச்சே “

பச்சலை வைது கட்டினான...

“ நாந்தான் சொன்னேன்ல... முழுசும் நம்புற ஆளை கூட்டிட்டு வான்னு .இப்ப பாரு “

***********************************************************************************************************************

அனால் என்னை கொஞ்சம் கூட வெறுக்காத ஆயிரம் பேர் உண்டு.. புதையல் எனக்குத்தான்..வீட்டில் உட்கார்ந்து யோசித்தேன்..

யாரை அழைத்து போகலாம்..

ரெண்டு வருஷமா காதலிக்கும் காஞ்சனா ?

வேண்டாம்... அவள் சாதரணமாக பிறருடன் பேசினாலும் சண்டை போட்டு அவளை காயப்படுதி இருக்கிறேன்..அந்த கோபம் அவளுக்கு இருக்கும்

நிறுவன மேலாளர்? என் அருமை அவருக்கு நன்றாக தெரியுமே?

வேண்டாம்..ஊதிய உயர்வு பிரச்சினையில் பழைய மனஸ்தாபம் உண்டு. நேரங்கெட்ட வேளையில் நினைவு வந்து தொலைக்க போகிறது..


அவரை மறந்து விட்டேனே.. பதிவர் நண்பர்.. என் மேல் எந்த வருத்தமும் இருக்க வாய்ப்பில்லை.. அவருக்கு போன் செய்ய எத்தனித்தேன்..

ஒஹ் . நோ.. சில நாட்களுக்கு முன் நகைச்சுவை என நினைத்து ஒரு பின்னூட்டம் இட்டு இருந்தேன்.. அது அவரை காயப்படுத்தி விட்டது... அந்த கோபம் இருக்க கூடும்


என் அம்மா ?

அம்மா என்றால் அன்புதான். ஆனால் என் காதல் அவளுக்கு பிடிக்கவில்லையே..

அப்பா?

பணத்தகறாறு...

அட ஆண்டவா.. உயிர் நண்பன் மாடசாமி...

அவன் தங்கைகல்யாணத்துக்கு உதவவில்லை என கோபம்..

யோசித்து பார்த்தால், இவ்வளவு பெரிய உலகில் என்னை நேசிப்பவர் யாரும் இல்லை...எல்லோரையும் ஒரு விதத்தில் காயப்படுத்தி இருக்கிரேன்..

மயக்கம் வரும் போல இருந்தது... புதையலை விட, இந்த உண்மை மனதை பாத்திதி விட்டது...


“ மாமா..இந்த கணக்கை எப்படி போடணும்... “ ஹோம் வொர்க் சந்தேகத்துடன் பக்கத்து வீட்டு சிறுமி சீதா வந்தாள்..

அவளுக்கு பாடம் சொல்லி கொடுத்து முதல் ரேங்க் வாங்க வைத்தவன் நான்.. என் மேல் அலாதி பிரியம்..

“ வா ..உட்கார் . என்றேன் “

“ எனக்கு பிறந்த நாள்..ஆசிர்வாதம் பண்ணுங்க” காலில் விழுந்தாள்..

கூச்சமாக இருந்தது நான் என்ன பெரிய மனுஷனா?

“ சாரி,,,விஷ் பண்ண மறந்துட்டேன் “

“ பரவாயில்லை மாமா.. லேட்டா விஷ் பண்ணாலும் உங்க வாழ்துதான் என் பேரண்ட்ஸ் ஆசியை விட பெருசு “

நெகிழ்ந்தேன்...

இவளை அழைத்து செல்லலாமா.. யோசித்தபோது போன் வந்தது..

“ குப்பன் பேசுறேன்.. புதையல் விஷயமா... “

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..அன்பை பெறுவது , அதை காப்பாற்ருவது கஷ்டம்..

“ வேண்டாம் ..குப்பா..எனக்கு வேற புதையல் கிடைச்சுடுச்சு”

சீதாவை பார்த்தபடி உறுதியான குரலில் சொன்னேன்

நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை


சினிமாவில், எப்போதும் பணக்கார பெண் திமிர் பிடித்தவலாகவும் , அவளை ஏழை கதாநாயகன் அடக்குவதாகவும் காட்டுவது ஏன்?இதை மக்கள் ரசிப்பதன் உளவியல் பார்வை என்ன ?

இரு ஆண்க ளுக்கிடையே சண்டை நடந்தாலும், பெண்களை இழிவு படுத்தும் வசவுகளை பயன்படுத்துவது ஏன் ?

காதலிக்கும்போது இனியவளாக தோன்றும் பெண் , திருமணத்துக்கு பின் சுவை இழந்தவளாக தெரிவது ஏன் ?

காதலித்த பெண்ணையே கொலை செய்தல், போட்டோ எடுத்து மிரட்டுதல் என தினமும் பேப்பரில் படிக்கிறோம்.. காதல் எப்படி கொடுமை செய்ய முடியும் ?

அலெக்சா வெப் சைட்டில் சென்று பார்த்தால் தெரியும்... பாலுணர்வு வெப்சைட்டுகள் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படுவது இந்தியாவில்தான்... ஆனால் இதைப்பற்றி இலக்கியவாதிகள் எழுதினால் , இந்தியா புனிதமாக இருப்பது போலவும், அவர்கள் ஆபாச இலக்கியம் படைத்து சமூகத்தை கெடுப்பது போலவும் சிலர் போலியாக விமர்சிப்பது ஏன் ? ( கன்னியாகுமரி நாவலை ஆபாச களஞ்சியம் என ஒருவர் திண்ணையில் எழுதி இருந்தார் )

************************************************************************************************************

ஒழுக்கம் என்பது சமூகத்துடன் ஒத்து போதல் .. பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை செயவதுதான் ஒழுக்கமான வாழ்க்கை...

ஒருவனுக்கு ஒருத்தி என எல்லோரும் இருந்தால் நாமும் அப்படி இருப்பது நல்லது... காலம் மாறும்போது, இது மாறலாம்... துணையை மாற்றுவது என்பது இயல்பாகலாம்... ஆனால் அதில் ஏமாற்றுதல் என்பது ஒழுக்கமின்மை என்றாகி விடும்... நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ..உலகம் இதை நோக்கித்தான் நகர்கிறது...

கற்பு , காதல் என்பதெல்லாம் கூட கர்பிதம்தானோ என தோன்றுகிறது...

ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் படிக்கும் வாய்ப்பு அமைந்தது..சிறிய நாவல் எளிதான கதை அமைப்பு என்பதால் படிக்க தூண்டியது.... அவரது மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் பொது இது மசாலா நாவல் என சொல்லலாம்...

மேலேட்டாமாக வாசிப்பவர்கள், இதில் பாலுணர்வு அதிகம் இருப்பதாக கருதலாம்...

ஒரு காலத்தில் கற்பு என கருதப்பட்ட விஷயத்திருக்கு இன்று அர்த்தம் மாறிவிட்டது..ஒழுக்கம் சார்ந்த மதிப்பிடுகள் மாறிவிட்டன... ஒழுக்கம் என்பது இன்றும் இருக்கிறது அனால், முன்பு நாம் ஒழுக்கம் என்று சொன்னதற்கு இப்போது அர்த்தம் இல்லை..இன்று ஒருவரை துன்புறுத்தாமல், நமக்கு பிடித்தபடி வாழ்வதுதான் ஒழுக்கம் என நாவல் சொல்கிறது என சிலர் நினைக்கலாம்..
அதுவும் சொல்லப்பட்டாலும், அதை தவிர நுணுக்கமாக பிரச்சினையை தொட்டுள்ளது கன்னியாகுமரி..

ஓர் ஆண் பெண்ணை பார்த்து பயப்படுதல், ஒரு வித தாழ்வுணர்ச்சி, அவளை வெல்ல முயலுதல், காமம் குறித்த தவறான புரிதல்கள் - இவைதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்..பெண்ணின் துன்பங்களுக்கு, வலிகளுக்கு , அவலங்களுக்கு இதுவே காரணம்..

இந்த முக்கியமான விஷயத்தை தொட்டு இருக்கிறார் ஜெயமோகன்..

ஓர் ஆணின் பார்வையில் பெண் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறாள்.. ஆனால் அது எவ்வளவு தவறான புரிதல்... என்பதை கேஸ் ஸ்டடி போல , ஒரு கதபாத்திரத்த்கை வைத்து அருமையாக அலசி இருக்கிறார்...

" உங்களுக்கும் அந்த கிரிமினளக்கும் எந்த வித்தியாசமும் இல்லை... குற்றம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை ..அவ்வளவுதான்" என ஒரு பெண் சீறும்போது, ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கியே அவள் சீறுகிறாள் என தோன்றுகிறது..

நாம் யாரையும் வான் பு ணர்ச்சி செய்யாமல் இருக்கலாம்.. அதற்கு காரணம் நாம் நல்லவர்கள் என்பதா..அதற்கான தைரியமோ , வாய்ப்போ இல்லாததாலா... நல்லவர்கள் என்றால், ஏன் கற்பழிப்பு காட்சிகள் விரும்பப்படுகின்றன.. ? பார்வையால், வார்த்தையால் எத்ததனை பேரை வன்புணர்ச்சி செய்து இருப்போம்...

ஒரு திரைப்பட இயக்குநர்தான் கதை நாயகன்... ஒரு பெண்ணை காதலிக்றான்.. கோழைத்தனமாக கைவிடுகிறான்... ( அந்த காதல் என்பதே கூட , பெண்ணை வீழ்த்தும் ஆயுதாமாகத்தன் அவன் நினைத்தான் என தோன்றுகிறது ) ..

பெரிய இயக்குமார் ஆகிறான்.. மாபெரும் வெற்றி படம் எடுக்கிறான்... அதந பின் பல படங்கள் தோல்வி அடைகின்றன.. வெற்றி படம் எடுக்க முயல்கிறான் என்ற பின்னணியில் கதை நகர்கிறது...

வேறு ஒரு நடிகையுடன் சுற்றுகிறான்.. அவளை பார்த்தும் பொறாமை... கொடுரமாக வெளிப்படிதியவாறு இருக்கிறான்.. தாழ்வு மனப்பான்மை தான், பெண்ணை வெல்ல வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துக்கிறது. , பெண் அறிவாளியாக இருந்தாலும் , அவளை உடல் என்பதற்குள் அடக்கிவிட ஆண் முயல்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்...

இந்தய நிலையில், முன்னாள் காதலியை எதிர்பாராமல் பார்க்கிறான்...

அவனை பார்த்த்கும் அவள் கதறுவாள்... உருகுவாள்... என்னை ஏன் கை விட்டீர்கள் என இறைஞ்சுவாள்.. திருமணம் ஆகி இருந்தால், கணவனுக்கு தெரியாமல் ரகசிய பார்வை பார்ப்பாள் என்றெல்லாம் நினைக்கும் அவனுக்கு அதிர்ச்சி...

அவள் அவனை விட பெரிய நிலையில் இருக்கிறாள்.. இவன் திரைப்பட இயக்குனர் என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல.. தன் ஆண் நண்பனை, ஒரு வெளிநாட்டவனை அறிமுகம் செய்து வைத்து, அவனை தொரகடித்தவாறே இருக்கிறாள் ..அவள் இயல்பாக இருந்தாலும் இது எல்லாம் அவனுக்கு தோல்வி என அவனே நினைத்து கொள்கிறான்... பழைய பாணியிலான ஆண் பார்வை இப்போது வேலைக்காகது என்பதை புரிந்து கொள்ளவில்லை..

கடைசி ஆயுயதமாக கீழ்த்தரமான ஓர் ஆயுதத்தை பயன் படுத்தி பார்த்து , அதிலும் தோற்கடிக்கப்படுகிறான்.....

அந்த நடிகையும் அவனை கைவிடுகிறாள்... கலையும் அவனை கைவிடுகிறது...

ஆணாதிக்க பார்வைக்கு எதிரான நல்ல நாவல்.. நமக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை அடையாளம் காட்டுகிறது...

இது பலருக்கு பிடிக்காமல் போகலாம்... சங்கடபடுத்தலாம்.. ஆனால் உண்மையை சந்தித்துதான் ஆக வேண்டும்..

மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது... வலிகள் தவிர்க்க முடியாததது..

இதை தவிர ஜெயமோகனின் தத்துவ விளக்க்கங்க்ள, வாழ்வில் அடைய வேண்டிய யுன்னத நிலை பற்றய விளக்கம், கன்னியாகுமரியின் ஐதீகம் சார்ந்த பார்வை, கதைக்குள் வரும் சினிமா கதை, கதாநயகன் பயன்படுத்தும் கீழ்த்தரமான ஆயுதம் என்ன போன்றவைகளை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள...

ஆண்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவும், பெண்கள் ஆணின் சிந்தனையை அறிந்து கொள்ளவும் படிக்க வேண்டிய புத்தகம் இது... மென் ஆர் பிரம் மார்ஸ் , விமன் பிரம் வீனஸ் போன்ற புத்தகம் இது...

சிறுவர்களுக்கும்.,சிறுவர்களின் மனநிலை கொண்ட பெரியவர்களுக்கும் ஏற்றதில்லை... தவிர்த்து விடுவது நலம்...

குறை என்று சொன்னால், ஜெயமோ கனுக்கு உரிய நகைச்சுவை , இதில் சற்றும் இல்லை..

பல கோணங்களில் கதை சொல்லும் இவர், இந்த நாவல் முழுதும் ஒரே ஆள் பார்வையில் கதையை நகர்த்தி செல்வது வியப்பான ஒன்று...

பெண்களை மிகவும் அறிவாளியாக காட்டி இருப்பது சற்று செயற்கையாக இருக்கிறது...

கன்னியாகுமரி- கருத்தை கவரும் குமரி...

Thursday, July 29, 2010

ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??

பாரதியார் பற்றி பேசும் பொது அவர் வர்ணாசிரம கொள்கையை தூக்கி பிடிக்கிறார் என குற்றம் சாட்டுவது சிலரது வழக்கம்..

வர்ணம் என்றால் என்ன என அறிந்து கொள்ளும் ஆவலை இது ஏற்படுத்தியது...

ஆதரிப்பது எதிர்ப்பது என்பது வேறு..ஆனால் அது என்ன தெரிந்து கொள்வதும் அவசியம்...

நான்கு வர்ணக்களை படைத்தது நான்தான் என்கிறார் கிருஷ்ணர்.. கீதையில்...

படித்தும் நமக்கு என்ன தோன்றுகிறது... ? ஜாதிகளை கடவுள்தான் படைத்தார்.... ஜாதி அமைப்பை கடவுள் ஏற்கயார் என நினைக்கிறோம்.. அவர் உயர்ந்த ஜாதி, இவர் ஜாதி என்பதை கீதை வலியுறுத்துகிறது என் தோன்றும்..

ஆனால், சற்று கவனித்து பார்த்தல் அதில் சொல்லப்படுவது ஜாதி அல்ல... நான்கு வித தொழில்கள் அடிப்படையில் உலகம் பிரிக்கப்பட்டு இருக்கிறது... நான்குமே உலக இயக்கத்துக்கு அவசியம்..

நடை முறையில் பார்த்தால், நான்கில் ஒரு இயல்பு மட்டுமே இருந்தால் வேலைக்கு ஆகாது... நான்கும் கலந்துதான் இருக்கும்.. அனால் சில வேளைகளில், சில இயல்புகள் மேலோங்கி இருக்கும்...

மென்பொருள் பணி, எழுத்து, வடிவமைப்பு போன்றவற்றில் மூளை வேலை அதிகளவு இருக்கும்..

ராணுவம், காவல் துறை போன்றவை துணிச்சல், சண்டை என்ற வகையில் இருக்கும்..

சந்தை படுத்தும் வேலை, சேல்ஸ் மார்கெட்டிங் போன்றவை வியாபார அடிப்படையில் உள்ளவை...

பிளம்பிங், இயந்திரவியல், கட்டுமானம் , வாகன இயக்கம், போன்றவை உடல் உழைப்பு சார்ந்தது...


நான்கில் இது உயன்ர்ந்தது தாழ்ந்து என்பது இல்லை...

ஆனால், பிறப்பின் அடிப்படையில் இந்த தொழில்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதுதான் தவறு....
பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு என கீதை சொன்னதாக தெரியவில்லை..
அதே போல, திருநெல்வேலி பிள்ளை, நாகர்கோயில் பிள்ளை என ஜாதிகளை படித்தேன் என சொன்னதாகவும் தெரியவில்லை..
நான்கு வித இயல்புகள்தான் சொல்லபடுகின்றன
வர்ணாசிரம தர்மா என்பது நாம் எந்த தொழிலில் ஈடுபட்டு இருக்கிறோமோ அதை உருப்படியாகவும், பெருமித உணர்வோடு செய்வதுதான்...

இந்த அடிப்படையில்தான் பாரதியார் , நான்கு வகுப்பும் இங்கு ஒன்றே என பாடி இருப்பார் என தோன்றுகிறது..

என்றாலும், இதை பற்றி விரிவாக படித்து விட்டு , பகிர்ந்து கொள்வேன்...

அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்

" என்னை இந்த பூனை குட்டியா மாத்திடுங்க "

சாமியார் சற்றே ஆச்சர்யத்துடன் என்னை பார்த்தார்... என்ன வேண்டுமோ கேள் என்று சொன்னவர் , இப்படி நான் கேட்பேன் என எதிர்பார்க்கவில்லை...

நான் அப்படி கேட்டதில் ஒரு காரணம் இருக்கிறது..

நான் உண்டு ,,என் படிப்பு உண்டு என இருக்கும் பையன் நான்... நல்லவன்..நாணயமானவன்.. நன்றாக படிக்க கூடியவன்.. என் வகுப்பில் எல்லா தேர்வுகளிலும் முதல் ரேங் நான்தான்...

பக்கத்து வீட்டுக்கு , ஷைலஜா குடி வந்ததில் இருந்துதான் எனக்குள் பல ரசாயான மாற்றங்கள்... அவள் பேச்சும், ஸ்டைலும், அவள் நடையும், இடையும்.ஹ்ம்ம்.... என்னால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை... என்னை விட பெரியவள்... கல்லூரி மாணவி..

காதலித்து திருமணம் செய்யும் சாத்தியம் இல்லாமல் போனது வருத்தம்தான்..

ஒரு நாள் அவள் வீட்டுக்கு போய் இருந்தேன்... வீட்டில் யாரும் இல்லை...

" வெய்ட் பண்ணு ரவி..இதோ வந்துடறேன் " ருமில் இருந்து குரல் கேட்டது..

சற்று நேரத்தில் வெளியே வந்தாள்.. அப்போதுதான் குளித்து விட்டு , புதிய ஆடை அணிந்து இருந்தாள்.
இந்த டிரச்லையே இப்படி இருக்காளே.. இது இல்லாட்டி... எனக்குள் சிந்தனை தறி கேட்டு ஓடியது..

அப்போதுதான் என் கண்கள் அவளது வளர்ப்பு பிராணியான பூனை மேல் படிந்தது..

பொதுவாக பூனையை யாரும் வளர்க்க மாட்டார்கள்... அது சொன்ன பேச்சு கேட்காது... சுதந்திரமான போக்கு கொண்டது..

இவள் வித்தியாசமக இருக்கிறாள்... பூனை மேல் எனக்கு பொறாமை ஏற்பட்டது..

இவ்வளவு நேரம் பூனையும் உள்ளேதான் இருந்தது... அதாவது அவள் டிரஸ் மாற்றும் போது அந்த பூனை பார்த்து இருக்கும்..
ஹ்ம்ம்...
அந்த பூனையாக நான் இருந்திருக்க கூடாதா...

" அப்பாவை பார்க்க வந்தேன் " நான்..

" கொஞ்சம் வெய்ட் பண்ணு ,. வந்துடுவார்... " சொல்லிவிட்டு டிவி பார்த்ததில் எனக்கு வருத்தம் இல்லை... ஆனால் அப்போது அவள் மடியில் இருந்த பூனை மேல்தான் எனக்கு வருத்தம்..அதுவும் அவள் அதை அன்போடு கட்டி பிடித்தபோது, அதன் முகம் உராய்ந்த இடங்கள்... எனக்கு வயிறு எரிந்தது...


****************************
எப்போதும் பைக்கில் செல்லும் நான் அன்று நடந்து சென்றேன்... சாலை ஓரத்தில் ஒரு பெரியவர் மயங்கி கிடந்தார்... ஏதோ தானி பார்ட்டி என யாரும் கண்டு கொள்ள வில்லை..
எனக்கு பாவமாக இருந்தது...தண்ணிர் கொடுத்து எழ செய்தேன்...

மெதுவாக கண் திறந்தார்... கையில் இருந்த பிஸ்கட்டை கொடுத்தேன்.. நல்ல பசி போல...

சாப்பிட்டார்...

"உண்டி கொடுத்தவர்கள், உயிர் கொடுத்தவர்கள் போல... தம்பி உனக்கு நன்றி... நான் இமயமலைல இருந்து வர்றேன்... உனக்கு என்ன வேணுமோ கேளு தர்றேன் "என்றார்..

" சாபாட்டுகீ வழி இல்ல்லதவர் என்ன தர முடியும் " நினைத்து கொண்டேன்..

என் நினைப்பை புரிந்து கொண்டது போல பேசினார் " என் சக்தி எனக்கு பயன்படாது.. என்ன வேணுமோ கேள் ..என்னால் தர முடியும்..மந்திர சக்திகள் என்னுள் நிரம்பி உள்ளன " என்றார்...

எனக்குள் நம்பிக்கை வந்தது..சரி கேட்டு பார்ப்போம்... கிடைத்தல் நல்லது..இல்லைனா நஷ்டம் ஒன்னும் இல்லை...

" சாமி .என்னை பக்கத்து வீட்டு பூனையா ஒரு நாள் மட்டும் மாத்துங்க " என்றேன்..

அப்படியே ஆகட்டும்... ஒரு நாள் நீ பூனை ஆவாய்.. அந்த பூனை உன் உருவில் ஒரு நாள் இருக்கும் " என்றார்..

***************************************************************
திடீரென சிறிய உருவம் ஆனது சற்று சங்கடமாக இருந்தது..ஆனால் பழகி விட்டது... தாவி குதித்து ஓடுவது உற்சாகமாக இருந்தது... பழக்க தோஷத்தில் என் வீட்டுக்குள் நுழைய இருந்தேன்... பூனை வடிவில் இருக்கும் வரை எனக்கு வீடு எதுவும் இல்லை... ஷைலஜா வீட்டில்தான் ஓரளவுக்கு உரிமை உண்டு என புரிந்தது.. அவள் வீட்டுக்குள் பாய்ந்தேன்......

என்னை வாரி தூக்கியவள், என் மூக்கை திருகி கொஞ்சினாள்.. எனக்கு கஷ்டமாக இருந்தது... சீலம்..இந்த பிள்ட்ல பால் இருக்கு ,,.,"குடிசுகிட்டு இரு... நான் குளிச்சுட்டு வர்றேன்... "

அறைகதவை சாத்தி விட்டு , அட்டாச்ட் பாத் ரூமுக்குள் நுழைந்தாள்.. பாத்ரும் கதவை சாத்தவில்லை... அனாலும் உள்ளே பார்க்க முடியவில்லை

ஒவ்வொரு ஆடையாக கழட்டி ஹன்கரில் மாட்டுவதை பார்க்க முடிந்தது..... ஆனாலும் அவளை பார்க்க முடியவில்லை.. குளிக்க ஆரம்பித்தாள்..

திடீரென உள்ளே புகுந்தேன்...

"இங்கே ஏன் வந்தாய் " இவள பேச்சை கேட்க எனக்கு நேரம் இல்லை... அங்கிருந்த எலியை கவ்வி கொண்டு வெளியே வந்தேன்...

சிறிது நேரத்தில் வெளியே வந்த அவள், எலியை எடுத்து வெளியே தூக்கி எறிந்தாள்... எனக்கு பயங்கர கோபம்...

அவள் ஆடை மாற்ற ஆரம்பித்தாள்.. என் கவலை முழுதும், எலி மேலேதான் இருந்தது...

சற்று நேரத்தில் என்னை தூக்கி கொண்டு வெளியே வந்தாள்...

எதிர் வீட்டு பையன் ரவி காத்து இருந்தான்.. அப்பாவை பார்க்கணும் என்றான்...

கொஞ்சம் வெய்ட் பண்ணு என்றாவாறு டி வீ யை ஆன் செய்தாள்..

ரவியை பார்த்த நான் அதிர்ச்சி அடைந்தேன்... அவன் கையில் அழகான பெண் பூனை.. எனக்கு ஜிவ் என ஏறியது... என் உணர்ச்சியை புரிந்து கொள்ளாத ஷைலஜா , என்னை தன மடியில் வைத்து கட்டி பிடித்து கொண்டாள்..
எனக்கு பயங்கர எரிச்சல்.. சரியான வில்லி என தோன்றியது...இவளிடம் இருந்து தப்பி ஓடி அந்த பூனையுடன் ஓடி பிடித்து விளையாட என் ஆன்மா துடித்தது..

ரவிப்பயல் என்னை ஏன் பொறாமையோடு முறைக்கிறான் என எனக்கு சற்றும் புரியவில்லை....

Tuesday, July 27, 2010

அவன் அவள் அது U/A

அவன்

பச்சை ஆடை அணிந்த அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து வெண்புகை கிளம்புவதையும், அவன் குழப்பமாக அங்கிருந்து நகர்வதையும் பேருந்து நிலையத்தில் பார்த்த வினோத்துக்கு வினோதமாக இருந்த்து. சில நாட்களாகவே இது போன்ற சம்பவங்களை பார்க்கிறான். திடீரென சிலர் மேல் இருந்து மெல்லிய வெண் புகை கிளம்புவதும், அவர்கள் குழப்பத்துடன் செல்வதயும் பார்க்கிறான். ஏதேனும் விளையாட்டாக இருக்குமோ என நினைத்து கொண்டான். ஊருக்கு புதுசு என்பதால் யாரிடமும் கேட்கமுடியவில்லை.
தற்செயலாக நிமிர்ந்து பார்த்தவன், அவளை கவனித்து விட்டான். அட.. எதிர்பாராத சந்திப்பு...
சாவித்திரி !!!!!
ஃபோட்டோவில் பார்த்த்தை விட அழகாக இருந்தாள். இண்டர்னெட் மூலம் தான் பழக்கம் என்றாலும் ஆழமான நட்பு. தற்செயலாக ஆரம்பித்த நட்பு, சிறிதுசிறிதாக நட்ப்புக்கு மேல் சென்றது.இத்தனைக்கும் ஒருவரை ஒருவர் பார்த்த்தில்லை. கடைசியில் போன வாரம்தான் அவள் ஃபோட்டோ அனுப்பி இருந்தாள். இவனை இன்னும் அவள் பார்த்த்தில்லை.
தான் யார் என்பதை உடனடியாக காட்டிக்கொள்ள வேண்டாம். கொஞ்ச நேரம் விளையாடலாம் என முடிவு செய்தான். அவள் வேறு திசையில் நகர தொடங்கினாள். அவள் கைப்பையில் இருந்து செல் ஃபோன் விழுந்த்தை அவள் கவனிக்கவில்லை.

அவள் ..

சாவித்திரி கிளம்பும்போதே அறைதோழி கமலா பிடித்து கொண்டாள். ”என்னடி செல் ஃபோன்களை எடுத்துகிட்டு கிளம்பிட்டியா? இதை எப்படி நிறுத்தபோறோம் ”
“ இல்லடி.. இதை நிறுத்தகூடாது.. நாம செய்றது பொது சேவை.. தப்பு செய்றவங்களுக்கு உடனடியா தண்டனை வழங்குறோம். காலபோக்குல யாரும் தப்பு செய்ய மாட்டாங்க..ஒரு பயம் வரும் “
சாவித்திரி கெமிக்கல் துறையில் கில்லாடி. கமலா எலக்டானிக்ஸ் மேதை. ஒரு முறை கமலாவின் செல் ஃபோனை யாரோ திருடிவிட்டார்கள். ஃபோன் போனது கூட பரவாயில்லை. முக்கியமான எண்கள் , தொடர்புகள் விட்டுபோனதை தாங்க முடியவில்லை. செல்போன் திருட்டு பஸ்ஸில் அடிக்கடி நடப்பதை புரிந்து கொண்ட அவர்கள், திட்டம் தீட்டினர்.

மலிவான ஃபோன் வாங்கி அதில் சில கெமிக்கலை அடைத்தனர். அதை வேண்டுமென்றே பொது இடங்களில் தவறவிடுவார்கள்.அல்லது அல்ட்சியமாக வைது இருப்பார்கள். எடுத்தவர்கள் உடனடியாக திருப்பிகொடுத்தால் தப்பிப்பார்கள். இல்லை என்றால், பொது இட்த்தில் இருப்பவர் தன் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் கொடுப்பார். கண்ட்ரோல் ரூமில் இருந்து ஒரு பட்டனை அழுத்தினால் போதும்.
செல்ஃபொன் சத்தம் இன்றி வெடிக்கும். வலிக்காது. கெமிக்கல் மட்டும் டெபாசிட் ஆகிவிடும். ஒரு வாரத்தில், அது எந்த இட்த்தில் டெபாசிட் ஆனதோ அந்த பகுதியை அரித்து அழித்து விடும்.
எந்த சிகிச்சையும் பயனளிக்காது.
ஆரம்பத்தில் உற்சாகமாக இருந்த கமலா , போக போக பயப்பட ஆரம்பித்தாள். “ பலர் பாதிக்கப்பட்ராங்க. ஆனால் யாரும் கம்ப்ளைண்ட் கொடுப்பதில்லை... போலீசுக்கும் சந்தேகம் வர ஆரம்பிசிடுச்சு.. இதை நிறுத்திக்கலாம் டீ “
“ பயப்படாதே... பொண்ணுங்க இதை செய்வாங்கனு யாரும் சந்தேகப்பட மாட்டாங்க.. “
“ சரிடீ... நாம செய்ரது நல்லவர்கள் யாரையும் பாதிச்சிட்டா, அந்த பாவம் சும்மா விடாது டீ”
“ நல்லவன் ஏண்டி , மத்தவங்க சொத்துக்கு ஆசை பட போறாங்க... சரி , இதை விடுடீ.. நான் ரொமாண்டிக் மூட்ல இருக்கேன்.. என் மனதுக்கு பிடித்தவர் இன்னிக்கு வர்ரார்..காதலை அவர் சொல்ல போறாரா, நான் சொல்லணுமா..ஒரே டென்ஷன் ..” வெட்கதுடன் சாவித்திரி..
பூகம்ப பெண்ணிடமும் ஒரு பூ இருப்பதை கமலா ஆச்சர்யத்துடன் பார்த்தாள்

அது


கீழே கிடந்த செல்ஃபோனை எடுத்தான் வினோத். இதை அவள் நினைவாக வைத்து கொள்வோம்.. கல்யானத்துக்கு அப்புறம் அவளிடம் காட்டி ஆச்சர்யபடுத்தலாம்” சட்டை , பேண்டில் பாக்கெட் இல்லை... பனியனுக்குள் அதை போட்டுகொன்டான்... அது மெல்ல கீழே இறங்கியது, அவளெ வருடி கொடுப்பது போல இருந்த்து..ஷ்ஷ்.
நெஞ்சு,,வயிறு..சீ..அதையெல்லாம் தொட்டு பார்க்கிறாளே..ம்ம்ம்..சரி,,அவள் சொத்து..தொட்டு கொள்ளட்டும்..
அவன் செல்ஃபோனை பதுக்குவதை பார்த்த அவள், கன்ட்ரொல் ரூமுக்கு தகவல் கொடுக்க, கமலா தயங்கினாள். “ யோசிச்சு சொல்லுடீ... இதை எல்ம் ஸ்டாப் செஞ்சுடலாம். “
சாவிதிரி ஒத்துகொள்ளவில்லை...

அவனையே வெறியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். திடீரென அவள் பார்வை மாறியது. அவன் கையில் அணிந்திருக்கும் மோதிரம், அவள் பரிசாக வினோத்துக்கு அனுப்பியது போல் இருக்கிறதெ...

அவனை அழைத்தாள்..:எக்ஸ்கியூஸ் மீ சார் ..உங்க பேர் வினோத்தா? “ பதட்டமாக கேட்டாள்..
“ஆமா..ஏன் ..” அவன் அழகாக புன்னகைத்தான்...

அவள் எதுவும் செய்வதற்குள், வெண்புகை பரவியது...

இருவர் பேசி கொண்டு சென்றனர்..”கார் ஆக்சிடண்ட் மச்சான். காருக்கு சேதம் எதுவும் இல்லை...பல்பு ரெண்டும் உடைஞ்சு போச்சு”

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா