Friday, July 30, 2010

நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை


சினிமாவில், எப்போதும் பணக்கார பெண் திமிர் பிடித்தவலாகவும் , அவளை ஏழை கதாநாயகன் அடக்குவதாகவும் காட்டுவது ஏன்?இதை மக்கள் ரசிப்பதன் உளவியல் பார்வை என்ன ?

இரு ஆண்க ளுக்கிடையே சண்டை நடந்தாலும், பெண்களை இழிவு படுத்தும் வசவுகளை பயன்படுத்துவது ஏன் ?

காதலிக்கும்போது இனியவளாக தோன்றும் பெண் , திருமணத்துக்கு பின் சுவை இழந்தவளாக தெரிவது ஏன் ?

காதலித்த பெண்ணையே கொலை செய்தல், போட்டோ எடுத்து மிரட்டுதல் என தினமும் பேப்பரில் படிக்கிறோம்.. காதல் எப்படி கொடுமை செய்ய முடியும் ?

அலெக்சா வெப் சைட்டில் சென்று பார்த்தால் தெரியும்... பாலுணர்வு வெப்சைட்டுகள் உலகத்திலேயே அதிகம் பார்க்கப்படுவது இந்தியாவில்தான்... ஆனால் இதைப்பற்றி இலக்கியவாதிகள் எழுதினால் , இந்தியா புனிதமாக இருப்பது போலவும், அவர்கள் ஆபாச இலக்கியம் படைத்து சமூகத்தை கெடுப்பது போலவும் சிலர் போலியாக விமர்சிப்பது ஏன் ? ( கன்னியாகுமரி நாவலை ஆபாச களஞ்சியம் என ஒருவர் திண்ணையில் எழுதி இருந்தார் )

************************************************************************************************************

ஒழுக்கம் என்பது சமூகத்துடன் ஒத்து போதல் .. பெரும்பாலானோர் என்ன செய்கிறார்களோ அதை செயவதுதான் ஒழுக்கமான வாழ்க்கை...

ஒருவனுக்கு ஒருத்தி என எல்லோரும் இருந்தால் நாமும் அப்படி இருப்பது நல்லது... காலம் மாறும்போது, இது மாறலாம்... துணையை மாற்றுவது என்பது இயல்பாகலாம்... ஆனால் அதில் ஏமாற்றுதல் என்பது ஒழுக்கமின்மை என்றாகி விடும்... நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ..உலகம் இதை நோக்கித்தான் நகர்கிறது...

கற்பு , காதல் என்பதெல்லாம் கூட கர்பிதம்தானோ என தோன்றுகிறது...

ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவல் படிக்கும் வாய்ப்பு அமைந்தது..சிறிய நாவல் எளிதான கதை அமைப்பு என்பதால் படிக்க தூண்டியது.... அவரது மற்ற நாவல்களுடன் ஒப்பிடும் பொது இது மசாலா நாவல் என சொல்லலாம்...

மேலேட்டாமாக வாசிப்பவர்கள், இதில் பாலுணர்வு அதிகம் இருப்பதாக கருதலாம்...

ஒரு காலத்தில் கற்பு என கருதப்பட்ட விஷயத்திருக்கு இன்று அர்த்தம் மாறிவிட்டது..ஒழுக்கம் சார்ந்த மதிப்பிடுகள் மாறிவிட்டன... ஒழுக்கம் என்பது இன்றும் இருக்கிறது அனால், முன்பு நாம் ஒழுக்கம் என்று சொன்னதற்கு இப்போது அர்த்தம் இல்லை..இன்று ஒருவரை துன்புறுத்தாமல், நமக்கு பிடித்தபடி வாழ்வதுதான் ஒழுக்கம் என நாவல் சொல்கிறது என சிலர் நினைக்கலாம்..
அதுவும் சொல்லப்பட்டாலும், அதை தவிர நுணுக்கமாக பிரச்சினையை தொட்டுள்ளது கன்னியாகுமரி..

ஓர் ஆண் பெண்ணை பார்த்து பயப்படுதல், ஒரு வித தாழ்வுணர்ச்சி, அவளை வெல்ல முயலுதல், காமம் குறித்த தவறான புரிதல்கள் - இவைதான் பல பிரச்சினைகளுக்கு காரணம்..பெண்ணின் துன்பங்களுக்கு, வலிகளுக்கு , அவலங்களுக்கு இதுவே காரணம்..

இந்த முக்கியமான விஷயத்தை தொட்டு இருக்கிறார் ஜெயமோகன்..

ஓர் ஆணின் பார்வையில் பெண் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறாள்.. ஆனால் அது எவ்வளவு தவறான புரிதல்... என்பதை கேஸ் ஸ்டடி போல , ஒரு கதபாத்திரத்த்கை வைத்து அருமையாக அலசி இருக்கிறார்...

" உங்களுக்கும் அந்த கிரிமினளக்கும் எந்த வித்தியாசமும் இல்லை... குற்றம் செய்ய உங்களுக்கு தைரியம் இல்லை ..அவ்வளவுதான்" என ஒரு பெண் சீறும்போது, ஒட்டு மொத்த சமுதாயத்தை நோக்கியே அவள் சீறுகிறாள் என தோன்றுகிறது..

நாம் யாரையும் வான் பு ணர்ச்சி செய்யாமல் இருக்கலாம்.. அதற்கு காரணம் நாம் நல்லவர்கள் என்பதா..அதற்கான தைரியமோ , வாய்ப்போ இல்லாததாலா... நல்லவர்கள் என்றால், ஏன் கற்பழிப்பு காட்சிகள் விரும்பப்படுகின்றன.. ? பார்வையால், வார்த்தையால் எத்ததனை பேரை வன்புணர்ச்சி செய்து இருப்போம்...

ஒரு திரைப்பட இயக்குநர்தான் கதை நாயகன்... ஒரு பெண்ணை காதலிக்றான்.. கோழைத்தனமாக கைவிடுகிறான்... ( அந்த காதல் என்பதே கூட , பெண்ணை வீழ்த்தும் ஆயுதாமாகத்தன் அவன் நினைத்தான் என தோன்றுகிறது ) ..

பெரிய இயக்குமார் ஆகிறான்.. மாபெரும் வெற்றி படம் எடுக்கிறான்... அதந பின் பல படங்கள் தோல்வி அடைகின்றன.. வெற்றி படம் எடுக்க முயல்கிறான் என்ற பின்னணியில் கதை நகர்கிறது...

வேறு ஒரு நடிகையுடன் சுற்றுகிறான்.. அவளை பார்த்தும் பொறாமை... கொடுரமாக வெளிப்படிதியவாறு இருக்கிறான்.. தாழ்வு மனப்பான்மை தான், பெண்ணை வெல்ல வேண்டும் என்ற வெறியை ஏற்படுத்துக்கிறது. , பெண் அறிவாளியாக இருந்தாலும் , அவளை உடல் என்பதற்குள் அடக்கிவிட ஆண் முயல்கிறான் என்பதை அருமையாக சொல்லி இருக்கிறார்...

இந்தய நிலையில், முன்னாள் காதலியை எதிர்பாராமல் பார்க்கிறான்...

அவனை பார்த்த்கும் அவள் கதறுவாள்... உருகுவாள்... என்னை ஏன் கை விட்டீர்கள் என இறைஞ்சுவாள்.. திருமணம் ஆகி இருந்தால், கணவனுக்கு தெரியாமல் ரகசிய பார்வை பார்ப்பாள் என்றெல்லாம் நினைக்கும் அவனுக்கு அதிர்ச்சி...

அவள் அவனை விட பெரிய நிலையில் இருக்கிறாள்.. இவன் திரைப்பட இயக்குனர் என்பதெல்லாம் அவளுக்கு பொருட்டே அல்ல.. தன் ஆண் நண்பனை, ஒரு வெளிநாட்டவனை அறிமுகம் செய்து வைத்து, அவனை தொரகடித்தவாறே இருக்கிறாள் ..அவள் இயல்பாக இருந்தாலும் இது எல்லாம் அவனுக்கு தோல்வி என அவனே நினைத்து கொள்கிறான்... பழைய பாணியிலான ஆண் பார்வை இப்போது வேலைக்காகது என்பதை புரிந்து கொள்ளவில்லை..

கடைசி ஆயுயதமாக கீழ்த்தரமான ஓர் ஆயுதத்தை பயன் படுத்தி பார்த்து , அதிலும் தோற்கடிக்கப்படுகிறான்.....

அந்த நடிகையும் அவனை கைவிடுகிறாள்... கலையும் அவனை கைவிடுகிறது...

ஆணாதிக்க பார்வைக்கு எதிரான நல்ல நாவல்.. நமக்குள் இருக்கும் ஆணாதிக்கத்தை அடையாளம் காட்டுகிறது...

இது பலருக்கு பிடிக்காமல் போகலாம்... சங்கடபடுத்தலாம்.. ஆனால் உண்மையை சந்தித்துதான் ஆக வேண்டும்..

மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது... வலிகள் தவிர்க்க முடியாததது..

இதை தவிர ஜெயமோகனின் தத்துவ விளக்க்கங்க்ள, வாழ்வில் அடைய வேண்டிய யுன்னத நிலை பற்றய விளக்கம், கன்னியாகுமரியின் ஐதீகம் சார்ந்த பார்வை, கதைக்குள் வரும் சினிமா கதை, கதாநயகன் பயன்படுத்தும் கீழ்த்தரமான ஆயுதம் என்ன போன்றவைகளை புத்தகம் படித்து தெரிந்து கொள்ளுங்கள...

ஆண்கள் தங்களை சுய பரிசோதனை செய்யவும், பெண்கள் ஆணின் சிந்தனையை அறிந்து கொள்ளவும் படிக்க வேண்டிய புத்தகம் இது... மென் ஆர் பிரம் மார்ஸ் , விமன் பிரம் வீனஸ் போன்ற புத்தகம் இது...

சிறுவர்களுக்கும்.,சிறுவர்களின் மனநிலை கொண்ட பெரியவர்களுக்கும் ஏற்றதில்லை... தவிர்த்து விடுவது நலம்...

குறை என்று சொன்னால், ஜெயமோ கனுக்கு உரிய நகைச்சுவை , இதில் சற்றும் இல்லை..

பல கோணங்களில் கதை சொல்லும் இவர், இந்த நாவல் முழுதும் ஒரே ஆள் பார்வையில் கதையை நகர்த்தி செல்வது வியப்பான ஒன்று...

பெண்களை மிகவும் அறிவாளியாக காட்டி இருப்பது சற்று செயற்கையாக இருக்கிறது...

கன்னியாகுமரி- கருத்தை கவரும் குமரி...

6 comments:

 1. ஆணிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மைதான் ஆணாதிக்கத்திற்கான வேரா நண்பரே
  -mani

  ReplyDelete
 2. ஆமாம் . பெண்களை விட உயர்ந்த இடம் நமக்கு இருப்பது, தற்காலிகமானதுதான் . அந்த பயத்தினால்தான் அவர்களை அடக்கி வைக்க முயல்கிறோம் . அவள் வெறும் உடல்தான் என நிருபிக்க பார்க்கிறோம் . இது வெகுநாள் நீடிக்காது

  ReplyDelete
 3. பெண்ணுக்கு சாதகமாக எழும் ஆணின் குரல்,
  மிக அழகானது.
  பெண்ணை புத்திசாலியாக கட்டுவது செயற்கையாக இருக்கிறதா?
  ம்ம்ம்

  ReplyDelete
 4. இந்த நாவலில் எல்லா பெண்களையுமே அறிவாளிகளாக சித்தரித்து இருப்பதை சொன்னேன் .
  அறிவாளிகளை பார்த்தால் எனக்கு ஒரு வித பயம் தோன்றும்

  ReplyDelete
 5. -------
  புச்தகம் படித்து தெரிந்து கொல்லுங்கள...
  ---------
  எழுத்து பிழைகளை சரி செய்யவும்!!

  ReplyDelete
 6. இனி எழுத்து பிழை இல்லாமல் கவனமாக இருப்பேன் . நன்றி நண்பரே

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா