Monday, June 5, 2017

ஜோதிடர் சொன்ன பொய்-நடிகர் ராஜேஷ் சிலிர்ப்பு அனுபவம்

நடிகர் ராஜேஷ் கம்யூனிச சித்தாத்தங்களில் ஈடுபாடு கொண்டவர்.... ஜோதிடத்தை கண்மூடித்தனமாக நம்பவும வேண்டாம்...  மறுக்கவும் வேண்டாம் சன நினைத்து சோதிட நூல்கள் படித்தார்... பல ஜோதிடர்களை சந்தித்தார்

ஒரு சோதிடர் சொன்னார்..அடுத்த மாதம் இரண்டாம் தேதி இரண்டு மணிக்கு ஒரு கண்டம் இருக்கு. எச்சரிக்கை தேவை... அதன்பின் கவலையிலலை

ராஜேஷுக்கு டென்ஷன்.... குறி்த்த நாளில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தார்.... நேரம் ஓடியது.... ஒருவழியாக இரண்டு ஆனது... அப்பாடா.. தப்பினோம் என நினைக்கையில் ஏதோ சத்தம்...  ஓடிப்போய் பார்த்தால் தீ விபதது...நல்லவேளை... பெரிய சேதம் இல்லை

அதன்பின் சோதிடர் இல்லம் சென்று இதை சொன்னார்.... இனி கவலை இல்லை எனறவர் வேறு சில கணிப்புகள் சொன்னார்

அப்போது சோதிடர் மனைவி சொன்னார்... எல்லோருக்கும் கணிக்கிறார்.... எங்க மகளுக்கு கணிச்சா தப்பா வருது

சோதிடர் சொன்னார்....ஆமா.... சரியா கணிக்க முடியல...நீங்க டிரை பண்ணுங்க

நானா.... திகைத்த ராஜேஷ்  ஜாதகம் பார்த்தார்... கல்யாண யோகம் வந்துருச்சு... விரைவில் கல்யாணம் ஆகும்...

அது போலவேஆனது... கொஞ்ச நாட்களில் சோதிடர் இறந்து விட்டார்....  இரண்டு வருடங்கள் வாழ்வேன் என அவர் கணித்தது பொய்யானது பலருக்கும் அதிர்ச்சி

சில ஆண்டுகள் கழித்து அவர் நினைவாக ஏதாவது புத்தகம் வாங்கலாம் என வீட்டுக்குப்போனார்....அதிர்ச்சி.... சோதிடரின் மகள் கணவன் சில மாதங்கள் முன் இறந்தது தெரியவந்தது... ஆறுதல் சொன்னார்... புத்தகம் எடுத்துக் கொள்ளசொன்னார்கள்..
புத்தக அறை சென்றார்
சோதிடரின் டைரி இரு்ந்தது....படித்தார்

சோதிடர் தன் மரணத்தை துல்லியமாக கணித்து எழுதி இருநதார்...  பயப்படுவார்களேஎன அதை சொல்லவில்லை

மகளின் கணவர் இறப்பார்என்பதையும் கணித்திருந்தார்....   ஆனால் அதை சொல்ல விரும்பாமல் ராஜேஷை பார்க்க சொல்லி விட்டார்


Sunday, June 4, 2017

இளையராஜா...கண்ணதாசன்..சண்டையும் சமாதானமும்

தற்போதைய இசை அமைப்பாளர்கள் குறித்து எனன நினைககிறீர்கள் என கண்ணதாசனிடம கேடடார்கள்

கலையில் கனம் இல்லாவிட்டாலும் தலையில் கனம் அதிகம் என பதில் சொனனார்..

இதனால் டென்ஷன் ஆன ராஜா அடுத்த பட்ங்களில் கண்ணதாசனை தவிர்க்கலானார்

சில மாதங்கள் கழித்து ஒரு விழாவில் கண்ணதாசனை தற்செயலாகப் பார்த்தார்...என்னணே...நலமா என நலம் விசாரித்தார்

கண்ணதாச்ன் சிரித்தபடி - ராஜாக்கள் ஆதரவு இருந்தால்தானே கவிஞர்கள் நன்றாக  இருக்க முடியும் என்றார்..

அடுத்த நாள் தன் உதவியாளரை அழைத்த ராஜா இந்தப்பாடலை கவிஞர் எழுத வேண்டும். அழையுங்கள் என உத்தரவிட்டார்

உதவி குழம்பினார்..  -கவிஞர்னா நிறைய இரூக்காங்களே.. யாரு

ராஜா சொன்னார் - யோவ்... நான் கவிஞர்னு ஒருத்தரை சொன்னா அது கண்ணதாசன்தான்

இளையராஜா டிஎம்எஸ் தகராறு- நடந்தது என்ன

அன்னக்கிளி உன்னைத் தேடுதே இசையை கேட்ட டி எம் எஸ் என்னப்பா...கரடுமுரடா இருக்கே என்றார்.... கிராமிய பாடல்ணே....அப்படித்தான் பாடணும் என்றார் ராஜா.... இல்லப்பா.. மெருகேத்தி பாடணும் என சொல்லி தன் பாணியில்பாடினார்...  ராஜாவுக்கு  வருத்தம் என்றாலும் அவர் திறமையை மதித்தார்....தீபம் கவரிமான் உள்ளிட்ட சிவாஜி படங்களுக்கு டிஎம்எஸ்ஸை பாட வைத்தார்... பல பாடல்கள் ஹிட்... சிவாஜி நடிக்காத படங்களிலும் டிஎம்எஸ்சை பாட வைத்தார்... ரஜினிக்காகவும் சில பாடல்களை பாட வைத்தார்...
அந்த நேரத்தில் ஓரம் போ ஓரம் போ என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆனது.... ஆனால் அது வல்கராக இருப்பதாக சொல்லி சென்னை வானொலி நிலையம் அதை ஒலி பரப்ப தடை செய்திருந்தது... வானொலி பிரபலமாகஇருந்த காலம் என்பதால் இது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது... ஒரு நிருபர் டிஎம்எஸசிடம் கருத்து கேட்டார்...கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார் டிஎம்எஸ்....தனிப்பட்ட முறையில் சொல்லுங்கள்... பிரசுரிக்க மாட்டோம் என்றார் அவர்... டிஎம்எஸ் சில கடுமையாக கருத்தகளை சொன்னார் ( அதை இங்கு சொல்வது அறமாகாது என்பதால் தவிர்க்கிறேன் -பிச்சை) அந்த நிருபர் வாக்குறுதியை மீறி பத்திரிக்கையில் வெளியிட்டு விட்டார்.... இளையராஜா கடும் கோபத்துடன்இன்னொரு பத்திரிக்கையில் பதிலடி கொடுத்தார்...இவரும் திரும்ப பேசவே உறவு முழுக்க சேதமுற்றது...
அதன்பின் சிவாஜி படங்களில்கூட டிஎம்எஸ்சை பயன்படுத்தவில்லை

Saturday, June 3, 2017

இதய நாதம்..... புத்தகபார்வை

இதயநாதம் -சிதம்பர சுப்ரமணியன் எழுதிய நாவல்... இசையை அடிப்படையாக கொண்ட நாவல்... ஆனால் மோகமுள் போன்ற நாவல்களின் வரிசையில் இது வராது....ஆனால் ஃபேக் நாவலும் இல்லை... ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவுக்குள் செயல்படும் பாணி....அந்த வடிவத்துக்குள் மனதை தொடுகிறதா என்பதே கேள்வி..
ஆங்காங்கு  சிறுகதைகள் போல அற்பத தெறிப்புகள்..ஆனால் கதாபாத்திரங்கள்  முழுமையாக வார்கப்படவில்லை..

கலையை் காசுக்கு விற்கலாகாது என்ற கணவனுக்கும் குடும்ப தேவைகளுக்கு காசு கேட்கும் ம்னைவிக்கும் ஓயாத பிரச்சனை... இதுதான் கதையின் மைய இழைபோல என்நினைத்தால் இல்லை... சிறகதைபோல ஒரு தரிசனத்துடன் அந்த எபிசோட் முடிந்து விடுகிறது....
அதன்பின் அடுத்த எபிசோட் ..அடுத்த கதை....அடுத்தசிக்கல் என்ற பாணி சிறப்பு.....
முழமையான நாவலாக இல்லாமல் சிறு சிறு பகுதிகளாக படிக்க ஏற்ற பத்தகம்

Tuesday, January 10, 2017

மறக்க முடியாத குமரகுருபரன் கவிதை


குமரகுருபரனின் ஞானம் நுரைக்கும் போத்தல் நூல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்காக நான் திட்டமிட்டிருந்த உரை , நேரமின்மை காரணமாக அங்கு பேச முடியவில்லை..இங்கே பதிவேற்றுகிறேன்

-----

அனைவர்க்கும் இனிய மாலை வணக்கம்..

குமரகுருபரன் கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம்.. நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதையை வாசித்து ஏன் பிடித்திருக்கிறது என சொல்லுங்கள் என ஆணையிட்டு விட்டு என் சம்மதத்துக்குக்கூட காத்திராமல் லைனை கட் செய்து விட்டார் கவிதா..

அங்கு வருபவர்கள் எல்லாம் இலக்கிய ஜாம்பவான்கள்... அப்படிப்பட்ட இரும்புக்கடையில் இந்த ஈக்கு என்ன வேலை என ஒரு கணம் நினைத்தேன்.. இன்னொன்று ..குமார் கவிதைகள் அனைத்துமே பிடிக்கும்.. இதில் எதை பேசுவது என்றும் குழப்பம்.. சரி. கவிதை எல்லாம் வாசிக்கவில்லை.. வறேன்.. பஃபே டின்னர் சாப்பிட்டு விட்டு கவிதைகளை கேட்டு விட்டு நண்பர்களைப் பார்த்து பேசி விட்டு கிளம்புகிறேன் என சொல்ல நினைத்தேன்.. ஆனால் அவர் போன் செய்தாலும் போனை எடுக்கவில்லை...அவள் அப்படித்தான் என நினைத்துக்கொண்டேன்.

 நண்பர்களே... அவர் கவிதைகள் எல்லாம் பிடித்தாலும் ஒரு குறிப்பிட்ட கவிதையை சொல்ல விரும்புகிறேன். அவரது சில கவிதைகளை அவ்வபோது ரிலாக்ஸ் செய்ய படிக்கலாம்..சில கவிதைகளை சற்று மன தளர்ச்சியின்போது படித்து சார்ஜ் செய்து கொள்ளலாம்.. சிலவற்றை மகிழ்ச்சியான தருணங்களில் அந்த சந்தோஷத்தை கவிதையுடன் கொண்டாடலாம். சில கவிதைகளை ப்ரிண்ட் எடுத்து கண்ணில் படும்படி ஒட்டி தினமும் படிக்கலாம்.. அப்படிப்பட்ட கவிதை இது.
----------------------------------------------------------
சிதைந்து போன கனவுகளில் ஒன்று 
எழுந்து போகாமல் அருகிலேயே 
அமர்ந்திருந்தது.

வெகு நேரமாய் அது பேசாமல் இருக்கவும் 
அந்த கனவு உருவான தருணம் குறித்த
ஓவியமொன்றை வரைந்து அளித்தேன்.

தன் முழுமை
தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு.

இருக்கலாம்
அதற்குள் நானும் நீயும் நம்பிக்கையுடன்
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும்
அல்லவா என்றேன்.

கனவற்று போன நொடியும்
அதற்குள்ளாகத் தானே இருக்கிறது
என்றது சிதைந்த கனவு.

உன் கனவுக்குள்
உன் கனவு உட்கார்ந்திருந்த சமயமும்
அதற்குள் தான் என்றேன்.

புதிதாக ஒன்றைக் கனவு காண் என்றது

சிதைந்த கனவொன்றை
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன் என்றேன்.

மயில் ஆட மறப்பினும்
மயில் இறகு ஆடும்.

சிதைந்த கனவு எழுந்து
எனக்குள் மறுபடியும் வந்தது.

இந்த முறை
நான் அமைதியாக அதனை
அணைத்துக் கொண்டேன்.

கனவின் சிதைவும் கனவே
காணீர்


----------------------’’

இது ஆயிரம் வாசல் இதயம்..அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம். நம் கனவுகள் எத்தனை எத்தனை..

நண்பர்களே.. நானும் சில நண்பர்களும் முழுக்க முழுக்க இயற்கை வழியில் நடக்கும் விவசாயம் ஒன்றை கனவு கண்டோம்.. விவாதித்தோம்..உழைத்தோம்...எத்தனை இனிமையான நினைவுகள்.. ஆனால் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை.. கெமிக்கல் உரங்களுக்கு மாறினோம்..இன்று நன்றாக நடக்கிறது.. ஆனால் அந்த கனவு சிதைந்து விட்டது...

இதனால் நான் வருந்திய இரவுகள் ஏராளம்..
ஆனால் இக்கவிதை என்னை மீட்டெடுத்தது

சிதைந்த கனவொன்றை 
ஞாபக மடிப்புகளுக்குள் மயிலிறகாக்கி
வைத்துக் கொள்வேன்
நானும் நீயும் நம்பிக்கையுடன் 
இருந்தோம் என்பதை அது ஞாபகப் படுத்தும் 
அல்லவா

இவ்வரிகள் என்னை ஏதோ செய்தன....   அந்த கனவு சிதைந்து இருக்கலாம்.. ஆனால் அந்த கனவின் ஆரம்பன கணங்களில் அது கொடுத்த நம்பிக்கை...அதன் இனிய நினைவுகள் அப்படியேதான் இருக்கின்றன...அந்த கணத்தை ஒரு பொக்கிஷம் போல , மயிலிறகாக்கி காப்பாற்ற வேண்டாமா என இக்கவிதை என்னிடம் வினவியது

அந்த கனவு உருவான தருணத்தை ஓவியமாக்கி என் முன் உலவ விட்டது கவிதை

இபப்டி உலவ விட்டால் நான் என்ன கேட்பேன் என்பதையும் எனக்காக குமார் யோசித்து என் சார்பில் எழுதுவார்

தான் சிதைந்து பார்க்கும் கொடூரமொன்றை 
அளிக்கிறாயே என்று முனகியது அக் கனவு

அந்த இனிய நினைவுகளை நினைக்கையில் அதன் அழிவும் நினைவுக்கு வருமே

-வரட்டுமே..அந்த நம்பிக்கையும் இனிய நினைவுகளும் அதற்குள்தானே இருக்கின்றன

-இதற்கு மேல் பேச முடியாமல் அந்த இனிய நினைவுகள் என்னுள் படர்தன

மயில் ஆட மறப்பினும் மயில் இறகு மறக்குமோ

என்னவொரு ஆழமான படிமம்

நம் மனம் இயங்க மறப்பினும் ஆழ் மனம் , ஆழ மனத்தை கடந்த நான்.. ஆன்மா... துரிய நிலை என எங்கேயோ அழைத்துச் செல்கிறது இந்த வரிகள்

கனவு சிதைவுமேகூட கனவுதான்..

பிக் பாங்க் மூலம் உலகம் உருவான அந்த முதல் கணத்திலேயே , அது எப்படி வளர வேண்டும் ..எப்படி சிதைய வேண்டும் போன்ற்வை தீர்மானிக்கப்பட்டு விட்டன

சிதைவு என்பது அஞ்ச வேண்டிய ஒன்றல்ல...அதுதான் வளர்ச்சி... நிலை மறுத்தல் , நிலை மறுத்தலை நிலை மறுத்தல் என க்ம்யூனிச நூல்களில் சொல்கிறார்களே.. எண்ட்ரோபி என அறிவியலில் சொல்கிறார்களே... விதையின் சிதைவுதான் கோதுமை.. கோதுமையின் சிதைவுதான் மீண்டும் விதை

விதை சிதைந்து மீண்டும் கோதுமை சிதைந்து விதை ஆகும்போது , முன்பு இருந்ததைவுட பல மடங்கு விதை உற்பத்தி ஆகி இருக்கும்..

கனவின் சிதைவும் கனவே கண்டீர்


அமைதியாக நம் கனவுகளை அணைக்கக் கற்றுக்கொண்டால் வாழ்வில் ஏது துயரம்.. ஏது வன்முறை.. ஏது ஆசிட் வீச்சுகள்.. வன்முறைகள் ..தற்கொலைகள்

லைஃப் இஸ் அ செலப்ரேஷன்.. செலப்ரேட் இட்..லைஃப் இஸ் அ கேம்..ப்லே இட்.. என கற்றுத்தரும் இக்கவிதை ப்ரிண்ட் செய்யபட்டு ஒவ்வொருவரின் பாக்கெட்டிலும் லாமினேட் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்பதே இப்போதைய என் கனவு என சொல்லி விடைபெறுகிறேன்.    நன்றி... வணக்கம்



Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா