Wednesday, July 21, 2010
ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
நான் கடவுள் படம் பார்த்த யாரும் அந்த விளிம்பு நிலை மனிதர்களை , பிச்சை எடுக்க வைக்கப்படும் ஜீவன்களை மறந்து இருக்க முடியாது...
அந்த மனிதர்களை பற்றி இன்னும் விரிவாக சொல்லும் நாவல்தான் , ஜெயமோகனின் ஏழாவது உலகம்..
இந்த நாவலை படிக்க எனக்கு ஒரு சோம்பல் இருந்தது..அதுதான் படம் பார்த்து விட்டோமே.. அதே கதைதானே ,எதற்கு படிக்க வேண்டும் என தோன்றியது....
ஆனால் அப்படி அல்ல,,,
இது சொல்லும் விஷயம் வேறு... இதில் சிறு பகுதியயை படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள்..
உணமையில் இதை சினிமாவாக அப்படியே எடுக்க முடியாது... அவ்வளவு உக்கிரம்.... வலி வேதனை..அதில் ஊடுருவி இருக்கும் மனிதம், அன்பு , நகைசுவை...
மனிதர்களை தனக்கு பணம் சம்பாதித்து தரும் மெஷினாக நினைக்கும் "தொழில் " அதிபர் அதை தவறான செயலாக நினைப்பதில்லை... நாம் யாருக்கும் கெடுதல் செய்யவில்லையே . நமக்கு ஏன் கடவுள் இப்படி சோதனை தருகிறார் என அந்த தொழில் அதிபர் குடும்பம் புலம்பும்போது, எல்லோருக்கும் நியாங்கள் உண்டு, கடவுள் உண்டு என்ற உண்மை நன்றாக காட்டபடிகிறது...
எல்லோருமே, நம்மை நல்லவர்கள் என்றுதான் நினைத்து கொள்கிறோம்.... அப்படி என்றால் உலகம் மட்டும் எப்படி கெட்டதாக இருக்க முடியும்... நீதான் உலகம் என ஜே கே சொன்னதை இதை விடதெளிவாக சொல்ல முடியாது....
கடவுள் என்பதையெல்லாம் மறந்து விடுங்கள்... நாம் தவறு மேல் தவறு செய்து விட்டு , நமக்கு மட்டும் நல்லது நடக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு பெரிய அபத்தம்...
உடல் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தையை பார்த்தும் கடவுலுக்கு நன்றி சொல்லும் தொழில் அதிபர், அதை பெற்று தரும் பரிதாபத்துகுரிய பெண் , செலவத்தை வாரி வழங்கும் கற்பக விருடமாக போற்ற படுத்தல், ஆன்ம இல்லாத ஜீவன்கல் என அழைக்கப்படும் ஜீவன்கள், தம் முதலாளி மேல் காட்டும் அக்கறை ,என ஒவ்வொன்றையும் அருமையாக படைத்துள்ளார் ஜெய மோகன்..
கதை சொல்லும் பாணி, சம்பவங்களை நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது...
இன்ஸ்பெக்டரை பார்த்தும் , மரியாதையாக எழுவது போன்ற பாவனை காட்டினார் , தும்மாமல் தும்முவது போன்ற முக பாவம் மட்டும் காட்டினார் போன்று பல வரிகள் , சிறிய விஷயங்களை கூட மனதில் பதிய வைக்கின்றன...
மலை ஏறும் மக்கள் கூட்டத்தை, மேலே ஏறும் ஆறு என வர்ணிப்பது அருமை...
பிள்ளை பெற்று தருவது மட்டுமே ஒரு பெண்ணின் வேலை... அந்த பிள்ளைகள் அவளிடம் இருந்து பிரிக்கப்பட்டு விடிக்ன்றன.. ஆனாலும், தன குழந்தைகளை தன்னால அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்கிறாள் அவள்... கண்டிப்பாக தன குழந்தைகளில் ஒருவனை காண்பேன் என உறுதியாக சொல்கிறாள்..
அதே போல , அவள் தன் மகனை காணும் வாய்ப்பு வருகிறது... ஆனால், மகிழ்வதற்கு பதில் கதறுகிறாள்... நம் இதயத்துடிப்பை நிற்க வைக்கும் இடம் எது....
இந்த தொழிலில் பயன்படுத்தபடுபவர்களை, உருப்படி என்றுதான் அழைக்கிறார்கள்.. ஒரு பொருளை போல பயன்படுத்துகிறார்கள்...
இதே தொழிலில் இருக்கும் இன்னொருவர், தான் யாரையும் உருப்படி என அழைப்பதில்லை என்றும், எல்லோரும் சகாக்கள் எனவும் சொல்கிறார்..
ஒரு சகா , தன் சகாவை விற்கலாம என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் தத்துவ விளக்கம்... சரியான கிண்டல்,,,,,
அதே போல , ஆஸ்பத்திரியில் இருக்கும் உருப்படியை கடத்துவதற்காக , அவளுக்கு சும்மாவசும் தாலி கட்டுகிறான் உருப்படியின் சூப்பர்வைசர்..
அதன் பின், அந்த உருப்படி அவனை கணவானகவே நினைப்பதும், அவனுக்கு உருகுவதும், அவன் ஆத்திரப்படுவதும் அருமையான காட்சி அமைப்பு....
ஒரு கட்டத்தில், தொழில் அதிபருக்கு அவரது உருப்படிகளில் சிலரே தன்னம்பிக்கை அளிப்பது, ஐடியா கொடுப்பதும் - அசத்தல்...
ஆன்மா இல்ல்லாதவர்கல் என அழைக்க படும் அவர்களிடம் மட்டும் தான், மனிதம் இருக்கிறதோ என நினைக்க வைக்கும் அளவுக்கு பல காட்சி அமைப்புகள்...
அகமது என்ற கதாபாத்திரம் அருமை.. அவனும் உருப்படிகளில் ஒருவன்தான்.. ஆனால் ஆங்கிலம் பேச தெரிந்தவன்... பேப்பர் படிப்பவதை வழக்கமாக கொண்டவன்...
வழியில் வரும் போலிஸ் காரரை மடக்கி , ஆங்கிலத்தில் பேசுவதும்,போலிஸ் காரர் திகைப்பதும் மூத்த உருப்படி அதை பெருமிதத்துடனும் பரவசத்துடனும் பார்த்து ரசிப்பதும்... அடடா - இந்த காட்சிக்கு மனதில் கை தட்டினேன்..
ஆனால், என்னை கண் கலங்க வைத்த இடம் வேறு...
குய்யன் என்ற உருப்படி , நல்ல ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என ஆசைப்படுகிராரன்... அதை கிண்டல் செய்யும் நண்பர்கள், பிறகு அஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு அவனை ஹோட்டலுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள்...
காசுடன் அவன் தனியாக போனால், அவனை ஏமாற்றி விடுவார்கள் என அக்கறையாக யோசித்து, தாணு பிள்ளை என்பவரை வீடு அவனை அழைத்து போக செய்கிறார்கள்..
ஆனாலும் பத்து ரூபாய் குறைகிறது... அப்போது தான் ஆர்வாமாக சேர்த்து வைத்து இருக்கும் பேப்பர்களை , எடைக்கு போட்டு அந்த காசை எடுத்து கொள்ளுமாறு கூறுகிறான் அஹமது... சக ஜீவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க அந்த எளியவர்கள் காட்டும் அக்கறை கண்ணீர் வர செய்து விட்டது.. தான் அளவுக்கு மீறி ஆசை படுகிறோமோ என நினைத்து, சாப்பாடு வேண்டாம் என அவன் சொல்வதும், மற்றவர்கள் அவனை உரிமையுடன் திட்டி, சாப்பிட அனுப்புவதும், - படித்து பாருங்கள்
இந்த பகுதி மிக அருமையாக உள்ளது....
நான் படிக்கும் காலத்தில், நாகர்கோயில் நண்பர்கள் அமைந்தனர்... அவர்கள் பேச்சை கேட்பதே இனிமையாக இருக்கும்... அந்த ஓசை நயம், தாள நயம், இசை நயம், வித்தியாசமான வார்த்தைகள் , நேசம் , நட்பு இதை எல்லாம் மறக்க முடியாது...
இந்த நாவலில் வரும் வட்டார பேச்சை மிக மிக ரசித்தேன்.... ஆனால் , இந்த பேச்சு வழக்கு பழக்கம் இல்லாத வாசகர்கள், இதன் முழு அழகையும் உள் வாங்குவது கொஞ்சம் கஷ்டம்.. அர்த்தம் புரியும்.. ஆனால் அந்த அழகு புரிபடுவது கஷ்டம்...
மொத்தத்தில், அனைவரும் படிக்க கூடிய வகையில், ஜெயமோகன் எழுதிய ஒரே புத்தகம் இது என தோன்றுகிறது...
சிறிய புத்தகம்... யார் வேண்டுமானாலும் படிக்கலாம்... படித்து விட்டால், மறக்க முடியாது...
ஏழாம் உலகம் - ஏற்ற உலகம்..
**********************************************************
பின் குறிப்பு - என்னுடன் படித்த , நாகர்கோயில் நண்பர்கள் இதை பார்க்க நேர்ந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்... மக்கா, உங்களைத்தான் தேடிகிட்டு இருக்கேன்...
Subscribe to:
Post Comments (Atom)
Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com
விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....
Blog Archive
-
▼
2010
(277)
-
▼
July
(28)
- தேடினேன் வந்தது
- நாமெல்லாம் கிரிமினல்களா ? கன்னியாகுமரி பார்வை
- ஜாதியும் வர்ணமும் ஒன்றா ??
- அவளுடன் , அவள் குளியறையில் , ஹ்ம்ம்
- அவன் அவள் அது U/A
- அசினின் அதிரடி காமெடி..- சங்கத்துக்கு கட்டுபடுவாராம்
- போபால் கொடுரமும், போராட்டமும்
- துப்பார்க்கு துப்பாக்கி....
- பாரதியும் மாற்று பார்வைகளும்
- ஏழாம் உலகம் - என்ன இருக்கிறது இதில் ?
- பாரதியாரிடம் வீரம் காட்டுவது அழகல்ல
- ஸீரோ டிகிரி- அற்பமா அற்புதமா
- பாரதியை விமர்சியுங்கள்..ஆனால் வறுமையை கிண்டல் செய்...
- பதவி வெறி அரசியல்வாதிகள், பாலகுமாரன் - பரிதாப பட வ...
- அறிவியல் ஆண்டவன் ஆக்டோபஸ் - பி எஸ் எல் வி ராக்கெட்...
- காதல் பிசாசே..காதல் பிசாசே..
- சாமியாரும் , எழுத்தாளரும்- புதிய தகவல்கள்
- ராமன் வெர்சஸ் ராவணன் - நடந்தது என்ன ?
- விஷ்ணுபுரம் பதிவு பிடிக்கவில்லையா? திட்டுங்கள் சார...
- matrix + chaos தியரி = விஷ்ணுபுரம்.( பொருத்தம் இல்...
- யாருக்கெல்லாம் ராவணன் படம் பிடிக்கிறது ?
- பந்த் - யாருக்கு வெற்றி - கிரிடிகல் அனலிசிஸ்
- மணிரத்தினம் ராமனா, ராவணனா ? ஓர் அலசல்..
- மைக்ரோ கதைகள்
- செம்மொழி மாநாடும் , பிச்சைகாரத்தனமும் - பத்ரி அவர்...
- கம்யூனிசம்,முதலாளித்துவம்,பாசிசம்-ஜாலி அலசல்
- தமிழன்னை மன்னிக்க மாட்டாள்.
- தமன்னா , நயன்தாரா - ஒரு தேடலின் சிணுங்கல் முடிவுகள்
-
▼
July
(28)
எல்லா புத்தகமும் படிக்க எப்படி நேரம் கிடைக்குது.
ReplyDeleteநம்ம ஊர் பக்கம் தானா?