கூட்டமான பேருந்தில் செல்கிறோம்..
யாராவது நம் பத்து பைசா பர்சை அடித்து விட்டு தப்ப முயன்றால் என்ன செய்வோம்… ?
தர்ம அடி கொடுக்க முயல்வோமா இல்லையா?
திருடியவனின் கஷ்டம், சமூக அவலம், அவனை இப்படி ஆக்கிய சூழ் நிலை எல்லாவற்றையும் ஆராய வேண்டும் என கோருவோமா?
அப்படியே அவன் தப்பி விட்டாலும், அந்த நாயை பிடித்து கொல்ல வேண்டும் என துடிப்போமோ இல்லையா..
ஒரு பத்து பைசா பர்சுக்கு இந்த ஆர்ப்பாட்டம்..
இதுவே , இன்னொருவருக்கு இழப்பு என்றால் நம் பார்வை எப்படி இருக்கும்..
ஏன் அவனை போட்டு அடிக்கிறீங்க? அடிப்பதுதான் இதற்கு தீர்வா? பிடிபட்டதால் இவனை அடிக்கிறோம்.. பிடிபடாத திருடர்களை என்ன செய்ய போகிறோம்…
சமூகத்தை சீர்திருத்துவதுதான் இதற்கு தீர்வு..
இப்படி எல்லாம் டீ கடை பானியில் வெட்டி நியாயம் பேசுவோம், பர்ஸை பறி கொடுத்தவன் அடுத்தவன் என்றால்..
இதே பாணி கருத்து வெள்ளம்தான் இப்போது பதிவுலகில் பாய்ந்து வருகிறது..
கோவை மக்கள் அன்பாக பழக கூடியவர்கள்.. சண்டை போட்டால் கூட கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த கூடியவர்கள்..
ஒரு சிறுவனும், சிறுமியும் கொடும் செயலுக்கு உள்ளான போது , தம் குடும்பத்திலேயே இழப்பு ஏற்பட்டது போல துடித்து விட்டனர்…
சென்னை போன்ற பெரு நகரங்களில் இது ஜஸ்ட் ஒரு பரபரப்பு செய்தி மட்டுமே…ஆனால் கோவையில் அப்படி இல்லை..
இந்த நிலையில் , கொலையாளிகள் கைது செய்யப்பட்டனர்.,,,,
அவர்களை கொலையாளிகள் என சொல்ல கூடாது.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என் பதிவுலக அறிவு ஜீவிகள் சட்ட நுணுக்கத்தை ஆராய்ந்த நிலையில், படிக்காதோர், சாதாரண மக்கள் , போன்றோர் , இந்த குழந்தைகளை எப்படி கொல்ல மனம் வந்தது என கதறினர்.. கொலையாளிகள் முகத்தில் காறி துப்பினர்..
புழல் சிறையில் அங்கு இருந்த கைதிகளே இவர்களை தாக்க முயன்றனர்..
அவர்களுக்கெல்லாம் பதிவுலகமோ, அறிவு பூர்வ தர்க்கங்களோ தெரி்யாது…
இந்த நிலையில் கொலையாளி ஒருவர் இறந்தது, இவர்களுக்கு ஓர் ஆறுதலாக இருந்தது…
இதற்கு காரணம் இருக்கிறது..
நம் ஊரில் ஒரு குற்றத்திற்கு தண்டனை வாங்கி தருவது அவ்வளவு எளிதல்ல…
டில்லியில் , பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஒரு பெண்னின் வழக்கு நடந்து ஓர் அற்பமான தண்டனை வழங்கப்பட்டது..
இன்னொரு பெண் பாதிக்கப்பட்டு, சுய நினைவு இன்றி வாழ்கிறார்.. வழக்கு முடியவில்லை..
தமிழ்னாட்டில், நாவரசு என்ற மாணவர் கண்ட துண்டமாக வெட்டி கொல்லப்பட்டார்.. யாருக்கும் தண்டனை இல்லை ….
ஆலடி அருணா கொலை உள்ளிட்ட பல கொலை வழக்குகளும் இப்படித்தான்..
இந்த பின்னனியில், ஏதோ ஒரு வகையில் குற்றவாளி இறந்தது, இந்த கையலாகாத சமூகத்தில் வாழும் மக்களுக்கு ஒரு சிறிய ஆறுதலை அளித்தது,,
அவ்வலவுதான்.. பொங்கி எழுந்தனர் பதிவுலக மஹாத்மாக்கள்…
கொலையை கொண்டாடும் மக்கள், உணர்ச்சி வசப்பட்ட பரிதாப ஜீவன்கள் , கொலையாளியின் பரிதாபம் என கொட்டி தீர்த்து விட்டனர்..
அட ஆண்டவா,,, பாவம்,, குழந்தையை இழந்தவர்களுக்கு ஒரு அப்பாவித்தனமான ஓர் ஆறுதல்…. மீண்ட உயிர் வர போவதில்லை.. ஆனால் சிறிது காலம் கழித்து கொலையாளி சுதந்திரமாக வருவதை பார்க்கும் அவலம் இல்லாமல் , உடனே இறப்பதை பார்த்ததும், சிறிய ஆறுதல்..
இதை கொண்டாட்டம் என கொச்சைப்படுதுவது, நம் இதயம் எவ்வளவு தூரம் இறுகி இருக்கிறது என்பதை காட்டுகிறது…
இது ஒரு தீர்வு என யாரும் சொல்லவில்லை.. என்கவுண்டர் இல்லாமல் வேறு வகையில் முடிவு வந்து இருந்தாலும், இய்றகையின் நீதி என்றுதான் எடுத்து கொண்டு இருப்பார்கள்..
அதை புரிந்து கொள்ளாமல், எல்லா குற்றங்கலுக்கும் என்கவுண்டர்தான் தீர்வா என குதர்க்கம் பேசுகின்றனர்.
அய்யா, அறிவு ஜீ்விகளே… சாதாரன மனிதன் நிரந்தர தீர்வை பற்றி யோசிக்கவில்லை…
நம் குடும்பதில் ஒரு இழப்பு.. அந்த பாதிப்பை ஏற்படுதியவன் இறந்தது ஒரு வித ஆறுதலை தருகிறது ..அவ்வளவுதான்..
யாரோ ஒரு குடும்பத்தில் நிகழ்ந்த துக்கத்தை , தம் குடும்ப துக்கமாக நினைத்த அந்த அன்பு உள்ளங்களின், கோவை மக்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் ..
வெட்டி நியாயம் பேசும் பதிவுலகை நினைத்து பரிதாப படுகிறேன்…