Monday, December 3, 2012

விலை போகாத விஸ்வரூபம் - கமலின் விபரீத முடிவால் , வினியோகஸ்தர்கள் கலக்கம்


ஆள வந்தான் , என்னை அழிக்க வந்தான்  என சில ஆண்டுகளுக்கு முன் கலைப்புலி தாணு பேட்டி அளித்ததை மறந்து இருக்க மாட்டீர்கள். கமல் ஹாசனின் சிக்கி கொண்டு , த்ன் சொத்துகளை இழந்ததை கண்ணீருடன் சொல்லி இருப்பார் .

அதில் பல விஷ்யங்கள் சொல்லி இருப்பார். ஒன்றை மட்டும் இப்போது நினைவு படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.

எப்படியோ கஷ்டப்பட்டு, இழப்புகளை சந்தித்து படம் எடுத்து விட்டார்கள். படம்  ப்ரீ வியூ பார்த்த கலைப்புலிக்கு அழுகை வந்து விட்டதா,ம். கோடிக்கணக்கில் பணம் செலவழித்து , இப்படி ஒரு படத்தை எடுத்து கொடுத்து இருக்கிறீர்களே என கதறி விட்டாராம்.

ஆனால் என்ன செய்வது. ரிலீஸ் செய்துதானே ஆக வேண்டும். தாணு ஒரு யோசனை சொன்னாராம். ஒரே நேரத்தில் , பல தியேட்டர்களில் , பிரமாண்டமான விளம்பரங்களுடன் வெளியிடுவோம். படத்தின் முதல் நாள் மட்டும் ஹவுஸ் ஃபுல் ஆனால் கூட போதும்.  ஓரளவு சமாளித்து கொள்வேன் . அதன் பின் நெகட்டிவ் பப்ளிசிட்டி ஆனால்கூட பரவாயில்லை.. ஆனால் ரிலீசுக்கு முன் தயவு செய்து யாரையும் படம் பார்க்க அனுமதித்து விடாதீர்கள் என்றாராம்.

ஆனால் கமல் , ரிலீசுக்கு முன்பே பத்திரிக்கையாளர்களுக்கு ப்ரி வியூ போட்டு காட்டினார். அதை பார்த்தவர்கள் , படம் குப்பை என்று சொன்னது வெளியில் லீக் ஆகி, ஆரம்பத்திலேயே படம் பெட்டியில் சுருண்டு கொண்டது.

இந்த அடியில் இருந்து வெளியில் வர கலைப்புலிக்கு வெகு நாட்கள் தேவைப்பட்டது.

இப்போது வரலாறு திரும்புகிறது . விஸ்வரூபம் படம் எதிர்பார்த்த அளவு வியாபாரம் ஆகவில்லை. ஆனாலும் வந்தது வரட்டும் என ரிலீஸ் செய்தால் , படம் நன்றாக இருக்கும் பட்சத்தில் பிக் அப் செய்து விடலாம்.

ஆனால் கமல் விபரீத் முடிவு ஒன்றை எடுத்துள்ளார். படம் வெளியாகும் தினத்தன்றே தொலைக்காட்சியில் , சிறப்பு காட்சியாக படம் திரையிடப்படுமாம்.

இந்த செய்தி வினியோகஸ்தர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. படம் நன்றாக இல்லை என்ற செய்தி பரவினால் , வசூலில் மிகப்பெரிய அடி விழும் என அஞ்சுகிறார்கள் அவர்கள்.

கமல் ஆதரவாளர்களோ , இது கமலின் வியாபார யுக்தி என்றும் , இது போன்ற பல யுக்திகளுக்கு கமல் முன்னோடி என்றும் சொல்கின்றனர்.

இதற்கு உதாரணமாக , நாயகன் படம் வெளி வந்த சில நாட்களிலேயே , அதன் வீடியோ கேசட் வெளியிட்ட துணிச்சலை சுட்டி காட்டுகின்றனர்.

அது துணிச்சலான முடிவுதான்.. ஆனால் அதனால் யாருக்காவது பலன் கிடைத்ததா ?


 •   நாயகன் பட தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் , லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்ததாக இன்னும் புலம்பி வருகிறார்.
 • அந்த படத்தை வாங்கி, தயாரிப்பாளர் என்ற அந்தஸ்து பெற்ற , ஜீ வீ சில ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டார்.
 • இயக்குனர் மணி ரத்னம் , இந்த படம் எடுக்கும்ப்போதுதான் , மன உளைச்சலால், உடல் நல பாதிப்புக்கு உள்ளானார்.
எனவே கமலின் யுக்தி யாருக்குமே பலன் அளிக்கவில்லை 


படம் நன்றாக இருந்தாலும் , இல்லாவிட்டாலும் பெரிய நடிகர்களின் படங்கள் முதல் சில நாட்கள் ஹவுஸ் ஃபுல் ஆகும் .  ஆனால் கமலின் இந்த விபரீத முடிவால் , முதல் சில நாட்கள் வசூல் என்ற மினிமம் கியாரண்டிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதே அவர்கள் கவலை..

கமல் தன் முடிவை கை விட வேண்டும் என்பதே நடு நிலையாளர்கள் எதிர்பார்ப்பு.


10 comments:

 1. இதெல்லாம் சொந்தமா எழுதறதா, இல்லை மண்டபத்துல யாராவது எழுதி தராங்களா?

  ReplyDelete
 2. Yaru Sir nadunilaiargal... Neenga mattumaa!!!! Cableji pinnootahulla mokka vangunathukku thaanee intha padivu??? Ungalidamum Charuvin samalification nalla theriyudhu!!! Thoppi... Thoppi...

  ReplyDelete
 3. கேபிள் அவர்களின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

  ஜீவி தற்கொலை செய்ததட்க்கும் நாயகனுக்கும் எந்த சம்பந்தம்? நாயகனுக்கு பிறகு தான் தளபதி படத்தை ஜீவி தயாரித்தார். இந்திரா, மே மாதம், தமிழன், சொக்க தங்கம் போன்ற படங்களையும் அவர்தான் தயாரித்தார்.
  ஜீவி இறந்தது 2003ல் நாயகன் எடுத்தது 1987ல்.
  சம்மந்தமே இல்லாமல் இந்த இரண்டையும் இணைத்ததன் மூலம் இவர்களுக்கு கமல் மீது இருக்கும் வக்கிர வெறி வெளிப்படையாக தெரிகின்றது.
  அடுத்த டார்கெட் இளையராஜா.
  "முக்தா சீனிவாசன் நஷ்டம்" முக்தா எங்கே நஷ்டம் அடைந்தார். அவர்தான் படத்தை முழுமையாக ஜீவிக்கு விற்றுவிட்டு பொய் விட்டார்.

  ReplyDelete
 4. லைப் ஒப் பை படத்தில் வருவது ஒட்டக சிவிங்கியா, வரி குதிரையா?

  ReplyDelete
 5. ஒட்டகசிவின்கிக்கும் வரி குதிரைக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள் தான் உன் ஞான (சாணி) குரு சாரு.

  ReplyDelete

 6. நாயகன் வெளியான கால கட்டமும் இந்த கால கட்டமும் ஒன்றா //////

  கமல் தமிழ் திரை உலகுக்கு சங்கு ஊத முடிவு பண்ணிட்டாரு.

  ReplyDelete
 7. @சொர்ணாக்கா ... படத்தின் சாராம்சத்தை புரிந்து கொண்டு விமர்சித்த ஒரே தமிழர் சாரு மட்டுமே.. மற்றவர்கள் எல்லாம் ஏதோ சாகச படம் போல புரிந்து கொண்டு விமர்சித்து இருந்தனர்... ஒட்டகச்சிவிங்கியா , வரி குதிரைரையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை.. அது எதை சுட்டுகிறது என்பதே முக்கியம். முடிந்தால் அந்த நாவலை ஒரு முறை படியுங்கள்..இல்லையேல் சாருவின் விமர்சனத்தை இன்னொரு முறை பாருங்கள்

  ReplyDelete
 8. @சொர்ணாகா.

  ஜீவியின் தற்கொலை ஒரே நாளில் தீர்மானிக்கப்பட்டதல்ல.. பல ஆண்டுகளாக வாங்கிய கடன்கள்தான் அதற்கு காரணம் ..

  முக்தா சீனிவாசன் நஷ்டம் அடைந்தாரா இல்லையா என்பதை அவர் பேட்டியை தேடிப்படித்து பார்த்தால் அறியலாம்

  ReplyDelete
 9. பதிவர் பிச்சைக்காரனுக்கு.
  முக்தா இதுவரை தான் நாயகன் படம் மூலம் நட்டம் அடைந்ததாக சொல்லவில்லை. கமலின் முக்தா விமர்சன நேர்காணலின் பின்னரே இவ்வாறாக கதையை விட்டு வருகின்றார்.
  நாயகன் படத்தை முழுமையாக விற்ற பின் (மொத்த செலவுகளும் ஜீவி யின் தலையில் கட்டப்பட்டது) முக்தாவுக்கு எப்படி நட்டம் வரும்.

  ஜீவி யின் "G .V. Films" ஒரு லிஸ்டட் கம்பெனி. அந்த கம்பனிக்கு வரும் நட்டத்துக்கு ஜீவி பொறுப்பாக மாட்டார். (நீங்கள் படித்தவராக இருந்தால் இது புரியும்)

  "G .V. Films" லிஸ்டட் கம்பெனி ஆக காரணம் அது ஆரம்ப காலங்களில் உழைத்த லாபம் தான். நஷ்டம் எடுக்கும் கம்பனியை லிஸ்டட் கம்பனியாக பதிவு செய்ய முடியாது.

  நாயகனுக்கு பின் ஜீவி அக்னி நட்சத்திரம், தளபதி, மே மாதம், இந்திரா, சொக்கத்தங்கம், தமிழன் போன்ற படங்களை தயாரித்து இருந்தார்.

  அந்த கம்பனிக்கு நட்டம் மே மாதம், இந்திரா, சொக்கத்தங்கம், தமிழன் போன்ற படங்களால் வந்திருக்கும். தமிழன் ஒரு மெகா பட்ஜெட் படம். ஆனால் வசூல் இல்லை.

  நீங்கள் ஒரு ஆன்மீக நாட்டம் உடையவர். ஒருத்தரை ஞான குருவாக கொண்டவர் (அவருக்கும் ஞானத்துக்கும் என்ன சம்மந்தமோ தெரியவில்லை) என்று அடிக்கடி புலம்புகிறீர்கள்.
  ஆன்மீக நாட்டம் உடையவரால் இப்படி காழ்ப்புணர்வுடன் இன்னொருவரை வன்மத்துடன் தாக்க முடியாது.
  நீங்கள் உங்களுக்கு காழுப்புணர்வு இல்லை. உண்மையை வெளிப்படுத்தினேன் என்று சல்லாப்பு சொல்லலாம். இதையெலாம் நம்புவதற்க்கு நாங்கள் உங்கள் சாரு வட்ட வாசகர்கள் போல் பலியாடுகள் அல்ல.

  எந்த சராசரி மனிதனும் உங்கள் பதிவை படித்தால் கமல் மீது காழ்ப்புணர்வும் குரோதமும் கொண்ட ஒருவரால் பதியப்பட்ட பதிவு என்பதனை அறிந்து கொள்வர்.

  நீங்கள் எப்படி என்றாலும் எழுதி கொள்ளுங்கள். ஆனால் தயவு செய்து நீங்கள் ஆன்மீக வாதி, ஆன்மீக நாட்டம் உடையவர் என்று வேடம் போட்டு கொள்ள வேண்டாம். அது ஆன்மீக வாதிகளுக்கு இழுக்கு.


  ReplyDelete
 10. போயா பிச்சகார

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா