Monday, December 31, 2012

இஸ்லாமை அரைகுறையாக ஏற்கும் இந்தியர்கள்., வெட்கம் வேண்டாம் , முழுமையாக ஏற்கலாமே!!


    எந்த நெறிமுறைகளோ , எந்த நியாய உணர்வுகளோ இல்லாமல் வாழும் சமூகம் நம் இந்திய சமூகம் என்பதை ஒரு நாள் சும்மா ஊர் சுற்றி பார்த்தாலேயே  உணர முடியும்.

        ஓர் உதாரணத்துக்கு இப்படி பார்ப்போம். பத்து பேர் மட்டுமே கொண்ட ஒரு ஊர்  ஒன்று இருப்பதாக வைத்து கொள்ளுங்கள்.

அதில் ஒருவன் மட்டும் பைக்கில் வெளியே செல்கிறான். ரெட் சிக்னலில் நில்லாமல் பறக்கும் வாகனங்கள், ஈவ் டீசிங் , பாலியல் வன்முறைகள், மிருகங்கள் போல நடு ரோட்டிலியே சிறு நீர் கழிக்கும் மனிதர்கள் போன்றவற்றை பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புகிறான் . நம் ஊர் எப்பத்தான் மாறுமோ என அலுத்து கொள்கிறான்..

அடுத்த நாள் ,,,,  இன்னொருவன் வெளியே செல்கிறான் என வைத்து கொள்ளுங்கள், அவனும் முதலாமவன் பார்த்த காட்சிகளையே பார்த்து மனம் வெறுத்து வீடு திரும்புவான்..

அந்த ஊரில் இருக்கும் பத்து பேருக்கும் இதே அனுபவங்கள்தான் கிடைக்கும்,. இந்த ஊர் எப்போதுதான் மாறுமோ என ஒவ்வொருவரும் அலுத்து கொள்வார்கள்.

அந்த பத்து பேரால் ஆனதுதான் அந்த ஊர் . அந்த பேரும் மாறினால்தான் அந்த ஊர் மாறும். ஆனால் அவர்கள் அப்படியே இருந்து கொண்டு ஊர் மாற வேண்டும் என எதிர்பார்த்தால் முட்டாள்தனம் இல்லையா ?


இந்த முட்டாள்தனம்தான் இந்தியாவில் நடந்து வருகிறது. அதே போல சாக்கடை எலியாகவேதான் வாழ்வோம். ஆனால் இந்தியா அதுவாகவே மாறிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்..

    சாக்கடையில் வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்தாலும் கூட ,  துர் நாற்றம் அளவுக்கு அதிகமாக போகும்போதுதான் , வேறு ஆப்ஷன் ஏதேனும் இருக்கிறதா என தேட ஆரம்பிக்கிறார்கள்...

  இந்திய பண்பு எனும் இந்த mediocre  கலாச்சாரத்துக்கு மாற்று இஸ்லாம் கலாச்சாரம்தான் என நான் சொன்னபோது , பிரசுரிக்க முடியாத ஆபாச அர்ச்சனைகளால் என் இன்பாக்சை நிரப்பினார்கள் பலர்.

   சிலரோ வலுவற்ற ஆதாரங்களை வைத்தனர்.. நாத்திகம் என்பதை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் , உண்மையாக நாத்திகர்கள் பற்றி எழுதாமல் , திராவிட கட்சிகளை நாத்திகத்தின் பிரதினிதியாக கருதி நான் பேசுவதாகவும் சொன்னார்கள்..

      உண்மையான நாத்திக வாதம் என்ன சொல்கிறது என்பதை தேடி தேடி படிப்பவன் நான். நாத்திக வாதத்தை திராவிட இயக்கம் ரெப்ரசண்ட் செய்யவில்லை என்றுதான் நானும் சொல்கிறேன்.

 ஆனால் நம் ஊரில் நாத்திகவாதம் என்பது திராவிட இயக்கம் பேசும் போலி நாத்திகவாதமாக நீர்த்து விட்டது என்பதே நான் சொல்வது.. அதையே அவர்களும் சொல்கிறார்கள்..

 இஸ்லாம் மட்டுமே மாற்று ஆப்சனாக இருக்க முடியும் என நான் சொன்னபோது , சீறியவர்கள் இந்திய பண்பாட்டை காப்பாற்றுவதாக சொல்லும் மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தை சொன்னவுடன் வாயடைத்து போய் விட்டார்கள்..

   இஸ்லாமிய பெண்கள் போல கண்ணியமாக அனைவரும் உடை அணிந்தால் பிரச்சினை வராது என அவரே சொல்லியிருப்பது , இந்தியா எனும் இருண்ட வானில் நம்பிக்கை நட்சத்திரமாக இஸ்லாம் காட்சி அளிக்க தொடங்கி இருப்பதை  உறுதி செய்கிறது.

ஆனால் அவர் கூறி இருப்பது அரை குறை கருத்து.. பிரச்சினைக்கு அது மட்டுமே  தீர்வல்ல..
ஆடை மட்டும் பிரச்சினையை தீர்க்காது.. ஆனால் இவர் மட்டுமல்ல , வேறு பலரும் தம் தேவைக்கேற்ப இஸ்லாமை துணைக்கு அழிக்கின்றனர்.

சிலர் இஸ்லாம் என்றாலே ,  கடும் தண்டனை , ஆடை கட்டுப்பாடு என்று மட்டும் நினைக்கிறார்கள்..  ஆடைக்கடுப்பாடு , கடும் தண்டனை என்பது ஒரு பகுதிதான் ..அது மட்டுமே இஸ்லாம் அல்ல..


பெண்களின் உடலை காட்டி சம்பாதிக்கும் விகடன் டைம் பாஸ் போன்ற ஆபாச பத்திரிக்கைகள் , பெண்களை போக பொருட்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், cheer leaders போல பெண்களை காட்சி பொருட்களாக்கும் போக்கு, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள் போன்ற போக்குகளை அனுமதித்து விட்டு , ஆடைக்கட்டுப்பாட்டை பெண்களுக்கு மட்டும் போதிப்பது தீர்வாகாது.

       ஆடைக்கட்டுப்பாடு இல்லாத பெண்கள் மட்டும்தான் பாதிக்கப்படுகிறார்கள் என சொல்ல முடியாது.. பெண்களை போக பொருட்களாக மனதில் பதிய வைக்கும் நிலை இருக்கையில் , ஒரு பெண் அந்த ஆடை அணிந்து இருந்தாலும் பாதுகாப்பு இருக்காது,

அதே போல எந்த கடுமையான தண்டனையும் பலன் தராது. ஒட்டு மொத்தமாக சமுதாயம் மாற வேண்டும் . அந்த மாற்றத்துக்கு பின்பும் தவறு நடந்தால் அப்போதுதான் தண்டனைகள் பற்றி பேச முடியும் ,

இந்தியாவில் தோன்றிய எந்த சிந்தனை முறையாலும் இந்த மாற்றத்தை கொண்டு வர முடியாது. ஒரு பாத்திரம் அழுக்காக இருக்கிறது என வைத்து கொள்ளுங்கள்.. அதை தூய்மை செய்ய வேண்டும் என்றால் , அந்த பாத்திரத்துக்கு அப்பாற்பட்ட-சோப்பு தூள் போல  - ஒன்று தேவை . அழுக்கை வைத்தே அழுக்கை நீக்க இயலாது.

  இந்திய கலாச்சாரம் அழுகிவிட்டது என்றால் , அதைத்தாண்டிய வேறொரு சிந்தனையை முறையால்தான் அதை சரி செய்ய முடியும் என்பதுதான் லாஜிக்.

வேறொரு சிந்தனை முறை என்றால் , ஜப்பானிய சிந்தனை முறையை இங்கு கொண்டு வர முடியாது. காரணம் அது ஜப்பானுக்கு மட்டுமே உரித்தானது. இந்திய சிந்தனை .முறையும் கூடாது . மாற்று மருந்தாக வரும் சிந்தனை முறை குறிப்பிட்ட நாட்டுக்குரியதாக இல்லாமல் , ஒட்டு மொத்த மானுடத்துக்கானதாகவும் இருக்க வேண்டும்.

இந்த இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்வது இஸ்லாம் மார்க்கம் மட்டுமே என்பது பலருக்கு தெரிந்து விட்டது.. ஆனால் அதை சொல்ல வெட்கப்பட்டுக்கொண்டு , இஸ்லாமின் சில பகுதிகளை மட்டும் தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார்கள்.

உலகளாவிய சிந்தனை முறை என எப்படி சொல்கிறேன்..


கீழ் காணும் நிகழ்ச்சியை பாருங்கள்...

**********************************************


இறைத்தூதர்(ஸல்அவர்கள் ஒருநாள் மக்கள் முன்வந்திருந்தார்கள்.அப்போது ஒருவர் (வாகனமேதுமின்றிநடந்துவந்து, ‘இறைத்தூதர் அவர்களே!‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்றால் என்ன?’ என்று கேட்டார்.
அவர்கள், ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை என்பதுஅல்லாஹ்வையும்,அவனுடைய வானவர்களையும்அவனுடைய தூதர்களையும்அவனுடையசந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப் பின்இறுதியாக(அனைவரும்உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்’ என்றுபதிலளித்தார்கள்.
இறைத்தூதர் அவர்களே!’ ‘இஸ்லாம்’ (அடிபணிதல்என்றால் என்ன?’ என்றுஅவர் கேட்டார்நபி(ஸல்அவர்கள், ‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வைநீங்கள் வணங்குவதும்அவனுக்கு நீங்கள் எதையும்இணைவைக்காமலிருப்பதும்தொழுகையை நிலைநிறுத்துவதும்கடமையானஸக்காத்’ தை வழங்கிவருவதும்ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும்ஆகும்’ என்றார்கள்.

அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களே! ‘இஹ்ஸான்’ (நன்மை புரிதல் என்றால்என்ன?’ என்று கேட்டார்நபி(ஸல்அவர்கள், ‘இஹ்ஸான் என்பதுஅல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற உணர்வுடன்வணங்குவதாகும்நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும்அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)’என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘இறைத்தூதர் அவர்களேமறுமை (நாள்எப்போது வரும்?’ என்றுகேட்கஇ நபி(ஸல்அவர்கள், ‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்,)கேட்பவரைவிட (அதாவது உங்களைவிடஅதிகம் அறிந்தவர் அல்லர்.ஆயினும்நான் உங்களுக்க மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றைஎடுத்துக் கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அதுமறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.காலில் செருப்பணியாத,நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன்அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறதுஎனும் அறிவானதுஅல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்துவிஷயங்களில் அடங்கும். ‘நிச்சயமாகமறுமை (நாள் எப்போது சம்பவிக்கும்என்பதுபற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளதுஅவனே மழையைஇறக்கிவைக்கிறான்இன்னும்அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும்(தீர்க்கமாகஅறிகிறான்தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை(அவனைத் தவிர வேறுயாரும் (உறுதியாகஅறிவதில்லைஎந்த இடத்தில்தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை.அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்நன்கறிந்தவன்நுணுக்கமானவன்’(எனும் 31:34 வது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.) பிறகு அந்த மனிதர்திரும்பிச் சென்றார்.
நபி(ஸல்அவர்கள் அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்துவாருங்கள்!’ என்று கூறினார்கள்மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள்எங்கேயும் காணவில்லைபின்னர்நபி(ஸல்அவர்கள்(ப்போது வந்து போன)வர், (வானவர்ஜிப்ரீல் (அலைஅவர்கள் தாம்.மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர்வந்திருந்தார்’ என்று கூறினார்கள்

*****************************************


நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும்அவன்உங்களைப் பார்க்கிறான் (எனும் உணர்வுடன் அவனை வணங்குவதாகும்.)

 இந்த ஒரு வரி போதுமே.. இந்த உணர்வு இருந்தால் உலகில் தவறுகள் ஏதேனும் நிகழுமா ? இந்த வரி ஏதோ குறிப்பிட்ட நாட்டுக்கோ , மதத்துக்கோ , இனத்துக்கோ சொந்தமான வரியாகவா தோன்றுகிறது ?

மேற்கண்ட நிகழ்ச்சியை பாருங்கள்.. ஜீப்ரீல் தனக்கு தெரியாமல் கேள்வி கேட்க வரவில்லை. மக்கள் பொருட்டு அவர் வந்தார்.. எவ்வளவு அழகான ஒரு நிகழ்ச்சி..

    ஆக நான் சொல்ல விரும்புவது இதுதான்....


 •    இயந்திரவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது.. அது எங்கு தோன்றியது என்பது முக்கியமல்ல.. அதே போல இஸ்லாமிய மார்க்கம் அனைவருக்கும் பொதுவானது.
 • இந்திய பிரச்சினைக்கு இஸ்லாம்தான் தீர்வு என்பது யதார்த்தம் ..இதில் வெட்கப்பட ஏதும் இல்லை. 
 • இஸ்லாமின் சிறிய பகுதிகளை மட்டும் எடுத்து கொண்டு அமல் படுத்த முடியாது... அப்படி செய்தால் பயனும் இருக்காது.. முழுமையாக செய்ய வேண்டும். 


17 comments:

 1. வணக்கம் பிச்சை,

  சிறந்த நகைச்சுவைப் பதிவு.


  இஸ்லாமை நீங்கள் பரிந்திரைத்தல் நன்று. பிச்சைக் காரன்,மதுரை ஆதினம் போன்றோரின் ஆதரவு இஸ்லாமுக்குத் தேவை!!.

  இஸ்லாமில் பல்வகை அதில் எதையோ ஒன்றை சொல்கிறீர்கள். அந்த வகைகளில் ஒன்றுக் கொன்று ஆகாது!!.

  இஸ்லாமில் கேள்விகளுக்கு பதில் வரவே வராது என்பதெ நாம் கண்ட உண்மை.

  இப்ப பாருங்க நீங்க சுட்டிய ஹதிதில்
  1.//ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அதுமறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.//

  இறுதி நாள் வரை அடிமை முறை நீடிக்கும் என முக்மது(சல்) கூறுகிறார்.


  2.//வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தாம்.மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர்வந்திருந்தார்’ என்று கூறினார்கள்//
  ஜிப்ரீல்(அலை) என்பவரை மனித உருவில் நபி(சல்) கூட இருந்தோரும் பார்த்தார்கள் சரியா? ஜிப்ரீல் என்பவர் குரானின் படி யார்?
  [கேள்விகள் தொடரும்]

  3.உத்மான்(ரலி) அவர்களின் குரான் மூலப் பிரதி உள்ளதா?

  நன்றி!!

  ReplyDelete
 2. அருமையான பதிவு. இந்த பதிவில் உள்ள கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளாமல் மேலோட்டமாக நுனிப்புல் மேய்ந்து அதை கூட அசை போடாமல், செரிமானக் குறைவில் வாந்தி எடுக்க வருவார்கள். போலி நாத்திக மதத்தினர். இஸ்லாத்தை எதிர்க்க வேண்டும் எனும் போது தான் அது சிந்தாந்த ரீதியாக தர்க்க ரீதியாக பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி இன்றும் நீர்த்துப்போகாமலும் களங்கமடையா கொள்கையுடனும் வானளாவ வளர்ந்து வருகிறது.

  முஸ்லிம்களும் அதனை தொடர்ந்து ஆங்கிலேயனும் இங்கு வந்திருக்காவிட்டால் "இந்தியா" என்றொரு தேசமே இப்படி முழுமையாக கிடைத்திருக்காது. இத்தனை மொழி பேசும் பிரதேசங்களும் ஒவ்வொரு தேசமாக இருந்திருக்கும். அப்புறம்.. எப்படி இந்தியாவிற்கு என்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது, பண்பாடு இருக்கிறது என்று ஜல்லியடிக்கிறார்களோ தெரியவில்லை.

  ReplyDelete
 3. சாறு ,இந்த கேள்விகளுக்கு உங்களுக்கு ஏற்கனவே பதில் அளித்துள்ளேன்

  ReplyDelete
 4. உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
  இனிய சகோதரரே! உங்களது பதிவுகளை சமீபமாக படித்தவண்ணமே இருக்கிறேன்...மாஷா அல்லாஹ்..

  தெள்ளிய எழுத்துடன்,உன்னத துணிவுடன் தொடர்ந்து இஸ்லாமை முன்னிருத்தி வருகிறீர்கள்.

  வாழ்த்துக்கள்.

  இஸ்லாத்திற்கு (முஸ்லிம்களுக்கு)எதிராக கருத்துக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் வீரியம் அடைந்திருக்கும் இந்தக்காலகட்டத்தில் இது போன்ற எழுத்துக்கள் விசமுறிவாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை...

  தொடர்ந்து எழுத பிரார்த்தனைகளுடன்

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 5. சலாம் சகோ.ஆனந்த். அசத்தலான பதிவு சகோ. பதிவில் படிப்பினை எக்கச்சக்கம். முஸ்லிம்களிலேயே முழுமையாக இஸ்லாத்தை பின்பற்றாதவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதனால்தான்... சாலையில் சோறு கொட்டிக்கிடக்கும் பணக்கார நாடும்... பசியோடு ஒட்டிய வயிறாய் வீதியில் கிடக்கும் மனிதர்கள் நிறைந்த நாடும் பக்கத்து பக்கத்தில் உள்ளது..! குற்றம் செய்தவர்களில் முஸ்லிம்களும் இருப்பது அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றாததால்தான்..! தொடர்ந்து பதிவிடும் தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 6. சகோ சார்வாகன்....

  ஹா..ஹா..ஹா
  உங்கள் கமெண்ட் சிறந்த நகைச்சுவை கமெண்ட்...
  வருடத்தின் முதல் ஜோக்கை உங்களிடம் இருந்து கேட்டது சந்தோஷமே...

  ReplyDelete
 7. எனக்கு கேள்வி கேட்க மட்டுமே தெரியும் என்பது சரியான வாதமாக இருக்காது. இது என்னுடைய சித்தாந்தம் குறையற்றது. நீ என்னுடையதில் விளக்கங்களைக் கேள்வி கேள். நான் பதில் சொல்கிறேன். உன்னுடையவற்றில் நான் கேள்வி கேட்கிறேன் என வரட்டும். அப்போது இவர்களுக்கு விளக்கலாம்.
  அது வரை இவர்களை புறம் தள்ளுங்கள்.

  ReplyDelete
 8. சார்வாகன் 1. அடிமை பெண் எஜமானியை பெற்றெடுப்பாள் என்பதன் அர்த்தம் - தன் தாய் பெண்ணால் அடிமையை போல் கேவலமாக நடத்தப்படுவாள் என்றோ அல்லது இன்றைய நவீன உலகில் பெண் காசுக்காக இன்னொரு பெண்ணை கருவில் சுமப்பதன் மூலம் எஜமானியை பெற்றெடுக்கிறாள் என்பது அர்த்தம்

  2. ஜிப்ரில் என்பவர் வானவர்.

  3. உதுமான் ரலி அவர்களின் குரான் மூல பிரதி உள்ளது அதில் என்ன சந்தேகம் வேறு என்ன கேள்விகள்

  கேள்விகளை உண்மையிலியே ஐயம் தெளிவதற்காக கேட்கவும் அடுத்தவன் வாயை அடைக்க அல்ல

  ReplyDelete
 9. சார்வாகன், இக்பால் செல்வன், தருமி போன்றவர்களின் எழுத்துக்கள் முஸ்லிம்களை இன்னும் அதிகம் கற்கவும் கற்றபடி வாழ்ந்துகாட்டவும்..... கற்றதை அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கவும் வழி கோலுகின்றன. இவர்களுக்கு முஸ்லிம் பதிவர்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்..! :-)

  ReplyDelete


 10. //பெண்களின் உடலை காட்டி சம்பாதிக்கும் விகடன் டைம் பாஸ் போன்ற ஆபாச பத்திரிக்கைகள் , பெண்களை போக பொருட்களாக சித்தரிக்கும் ஊடகங்கள், cheer leaders போல பெண்களை காட்சி பொருட்களாக்கும் போக்கு, சிவப்பழகு க்ரீம் விளம்பரங்கள் போன்ற போக்குகளை அனுமதித்து விட்டு , ஆடைக்கட்டுப்பாட்டை பெண்களுக்கு மட்டும் போதிப்பது தீர்வாகாது.//


  'Straight down the ground, wonderful shot, all the way for a Six, Whatta playa'!

  ReplyDelete
 11. வீடு திறந்து கிடந்தால் கண்ட நாயும் வந்து அடுக்களை வரைக்கும் போய் மேயத்தான் செய்யும், அது போல தான் இந்தியாவின் நிலையம் ஆகி விட்டது. இங்கே இருந்தவர்களின் ஒற்றுமை இன்மையால் கண்டவனெல்லாம் வந்து இங்கே ஆட்சி செய்தான். இப்போது உள்ள நிலையை பயன்படுத்தி அரபு நாட்டுக்கு இந்தியாவை அடிமையாக்கி விடலாம் என்று சில ஜென்மங்கள் துடியாய் துடித்து கொண்டிருகிறது. இதே போல அரபு நாட்டில் போய் எனது மதத்தை நீ பின்பற்று, எனது மத சட்டத்தை பின்பற்று என்று கூறினால் கூறியவன் உயிரோடு இருக்க முடியுமா? கையாலாகாத அரசு, தனது நாட்டின் பெருமை, பண்பாடு இதெல்லாம் உணராமல் தான் தோன்றிதனமாக திரியும் மக்கள் இருக்கும் வரை அரபு பிச்சைக்காரர்கள் இங்கே கோலோச்ச முயற்சி செய்யத்தான் செய்வார்கள்.

  ReplyDelete
 12. சார்வாகன் வழக்கமாக பலமுறை பதில் சொல்லப்பட்ட கேள்விகளை கொண்டு வந்து திசை திருப்பப் பார்க்கிறார். என்னதான் முயற்சித்தாலும் இஸ்லாத்தின் மகிமையை மறைக்க முடியாது சார்வாகன். அது ஆனந்த், மதுரை ஆதீனம் போன்றவர்களாலேயே சமீப காலமாக வெளி கொணரப்படுகிறது.

  ReplyDelete
 13. சார்வாகன் என்பருக்கு ஒரு சின்ன கேள்வி ......
  வணக்கம் என்றால் என்ன ?
  வணக்கம் என்கிற சொல்லின் நேரிடையான அர்த்தம் என்ன ??
  தங்களைப்போலுள்ள [நாத்திகர்கள்] வர்கள் வணக்கம் முகமன் கூறலாமா ???
  விளக்கம் தரவும் ...மேலும் முன்பு ஒரு முறை தாங்கள் குரானுக்கு மாற்றாக அதைவிட சிறந்த புத்தகத்தை தம்மால் இயற்றமுடியும் என்று சொன்னீர்கள் . அந்த விஷயம் என்னாச்சு ???
  முதலில் அந்த புத்தகத்தை உலகத்துக்கு காட்டுங்கள் அதன்பிறகு
  உங்க 'வெற்று சவாடல்களுக்கு' பதில் அளிக்கிறேன் ...
  இப்படிக்கு
  உங்க கும்பல்களில் முன்பு 'வெற்று' ஜல்லியடித்தவன் . --

  ReplyDelete
 14. @ அனானி நண்பரே... இந்த நாட்டின் பெருமை , பண்பாடுதான் அனுதினமும் பத்திரிக்கைகளில் சந்தி சிரிக்கிறதே... வெளி நாட்டுக்காரன் காறித்துப்புகிறானே... இதிலிருந்து தப்பிக்க வழி சொல்கிறேனே தவிர மதப்பிரச்சாரம் எல்லாம் செய்யவில்லை...

  கண்டவன் எல்லாம் வந்து ஆட்சி செய்தான் என்கிறீர்களே,, இந்தியா என ஒன்று தோன்றிய பின் , வேறு யாரும் வந்து நம்மை ஆளவில்லை... நாமேதான் இதை ஆண்டு கொண்டு இருக்கிறோம்...

  ReplyDelete
 15. @ சுவனப்பிரியன்... நண்பரே... இஸ்லாமின் மகிமையை யாரும் வெளிகொணர தேவை இல்லாமல் , மக்களே அதன் மகிமையை உணரத்தொடங்கி விட்டார்கள்.. ஆனால் கண்ணியமாக இருத்தல் , பணிவு , குற்றங்களுக்கு கடும் தண்டனை, கொள்கையில் உறுதி , வைராக்கியம் என ஏதாவது ஒன்றை மட்டுமே இஸ்லாத்தில் இருந்து எடுத்து கொள்கிறார்கள்.. அது நல்லதுதான் ,.. ஆனால் அது மட்டுமே போதாது என்பதே என் கருத்து... ஒரு விஷ்யத்தை முழுமையாக பின்பற்றினால்தான் பலன் கிடைக்கும்

  ReplyDelete
 16. முட்டாள்தனமாக வாதம். ஆண்கள் கழுத்து முதல் கணுக்கால்வரை மூடிய உடையை அணிகின்றார்கள்.அதுதான் கௌரவம்.பெண்களும் அப்படி அணிவதுதான் கண்ணியம் என்பதுதான் இந்த மண்ணீன் கருத்து.இன்று சினிமா சமுதாயத்தை ஆட்சி செய்கின்றது.குழப்பங்கள் அதால்தான். இந்தியாவில் உள்ள சமூக பிரச்சகைகளுக்கு மருந்து அரேபிய கலாச்சாரம் என்றால் அது மகா மகா..... முட்டாள்தனம். குரானைப்பின்பற்றும் நாடுகளில் எந்த நாடு முன்னேற்றம் அமைதி உள்ளநாடாக உள்ளது. சீனாவில் கூட முஸ்லீம்கள் உள்ள பகுதி கலவர புமியாக உள்ளது.முகம்மது வாளில் முனையில் அகண்ட அரேபியாவை உருவாக்கிய நினைத்தார்.உலக நாடுகளை அரேபிய கலாச்சாரத்தை பின்பற்ற வைத்து அரேபிய அடிமைநாடுகளாக்கி ....மக்கா மதினா புனித தலமாக்கி அரேபிய தலைமையின் கீழ் உலகம் வர வேண்டும் என்ற திட்டம் தீட்டி வாள் முனையில் கொலை கொள்ளைகற்பழிப்பு மூலம் அதைச் செயல்படுத்தினார்.தன்னை நபி என்று ஏற்றக் கொள்ளாத மக்களை ”காபீர்”கள் என்று பழித்து அவர்களை பெரும் கொடுமைக்கு ஆட்படுத்தினார். முகம்மது வின் லட்சணத்தை அறிய செங்கொடி, இறையில்லா இஸ்லாம் answering islam www.anwar sheik போன்ற வலைதளங்களில் உள்ள சங்கதிகள் போதுமானது- முகம்மது ஒரு சாதாரணமான மனிதன்.முகம்மதுவும் மனித இரத்தத்தில்தான் குளித்தார்.அவரது மறைவிற்கு பின்னரும் அவரது குடும்பத்தினருக்கும் பிறமக்களுக்கும் கலிபா யார் என்பது குறித்து அதிகார போட்டி ஏற்பட்டு இரத்த களறி ஏற்பட்டது.மருமகன் அலிக்கு எதிராக சித்தி -முகம்மதுவின் சிறுவயது மனைவி - நடத்திய போரில் battle of camel வரலாற்றில் ஒட்டகப்போர் என பதிவு செய்யப்பட்டுள்ளது.5000 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனா. உதுமான் -முகம்மதுவின் இரு மகள்களை திருமணம் செய்தவர் - வை முகம்மதுவின் செல்ல குழந்தை மனைவி ஆயிசா ” காபீர” என்று திட்டினார். இத்தகைய அரேபிய குப்பை இந்தியாவிற்கு தேவையில்லை.திருக்குறளும் திருவாசகமும் திருமந்திரமும்விவெகாந்தர் ஞான தீபமும் நமக்கு போதும்.முகம்மதுவிற்கு 13 பெண்ாட்டிகள். எத்தனை குமுஸ் வைப்பாட்டிகள் யாராவது சொல்லுங்களேன். இந்த முன்னணி இயக்கம் 40 என்று சொல்கிறது. யுத்ததத்தில் கைப்பற்றப்பட்ட பெண்களை அடிமைப் பெண்களாக -வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம் என்று குரான் சொல்கிறது. அபலைப் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள் என்று சொல்லும் ஒரு புத்தகம் .... எங்கே போக வேண்டும் ...

  ReplyDelete
 17. சத்ரபதி சிவாஜி மகராஜா முன் யுத்தத்தில் கைப்பற்றப்பட்ட முஸலீம்பெண் கொண்டுவரப்பட்டாள். பெண்ணின் பேரழகில் மகராஜா மயங்கி விடுவார் என்று தளபதியின் நினைப்பு. ஆனால் பேரழகான முஸ்லிம் பெண்னைப் பார்தது சிவாஜி ” இப்பபெண்ணைப் போல்எனது அம்மாவும் பேரழகு பெற்றவராக பிறந்திருந்தால் நான் இப்பொது இருப்பதை விட மிகவும் அழகாகப் பிறந்திருப்பேன் ” என்றாராம். இந்து பண்பாடு வேண்டுமா? குமஸ் பெண்களை வைப்பாட்டியாக அடிமையாக விற்பனை செய்யலாம் என்று கூறும் அரேபிய குரான் வேண்டுமா?

  ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா