Sunday, July 28, 2013

சொர்ணமால்யாவும் தேவதாசி முறையும் -- என் பார்வையில்

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை  ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. 

அதில் சொர்ண்மால்யா பேசினார். 

இவர்  தேவதாசிகள் குறித்தான ஆய்வை செய்து அதில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அவர் பேசுகையில் அது கடவுளுக்கான அர்ப்பணிப்பு  தேவதாசிகள் அதை மனமுவந்து செய்தார்கள். நாட்டியத்தில் ஈடுபாடுள்ள பல சாதி பெண்களும் தாங்களாகவே முன்வந்து தேவதாசிகளானார்கள்  எல்லா சாதியிலிருந்தும் பெண்கள் வந்தனர்


 என்பது போன்று பேசினார்.

இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது குறித்து சில நண்பர்களுடன் பேசியபோது என் கருத்தையும் கேட்டார்கள். அப்போது சொன்னதை இங்கும் பகிர்கிறேன்.

தேவதாசி முறையை ஏற்கிறோமா இல்லையா என்பதை அந்த சொல்லுக்க்கு என்ன அர்த்தம் கொடுக்கிறோம் என்பதை வைத்தே முடிவு செய்ய முடியும்.

தேவதாசிகள் என்றால் சிறிய வயதில் இருந்தே பாலியல் தொழிலுக்கு தயார் செய்யப்படும் என்று வைத்து கொண்டால் இந்த முறையை யார் ஆதரித்து பேசினாலும் கண்டிக்கத்தக்கதே.

சிலரை இப்படி பாலியர் ரீதியாக கொடுமைப்படுத்தினார்கள் என்பது உண்மை.  பெரியார், முத்துலட்சுமி ரெட்டியார் போன்றோரின் கடும் உழைப்பால் இந்த முறை ஒழிக்கபட்டது என்பது வரலாறு.

ஆனால் பண்டைய தமிழகத்தில் இந்த நிலை இருந்ததா? பண்பாட்டில் சிறந்து விளங்கிய தமிழ் மண்ணில் இப்படி ஒரு நிலை இருந்ததா? உலகுக்கே வழிகாட்டும் ராஜராஜசோழன் ஆட்சிக்காலத்தில் இதை அனுமதித்து இருப்பாரா...

ஆராய்ந்து பார்த்தால் பண்டை தமிழகத்தில் தேவதாசி முறை என்பது பிறப்பின் அடிப்படையில் இல்லை 
அது பாலியல் சார்ந்த்தும் இல்லை என சிலர் கூறுகிறார்கள்.

 நான் கடவுள் படத்தில் ஆர்யா இறைத்தேடலில் தன் குடும்ப வாழ்வை துறப்பாரே..அது போல இறைதேடலில் குடும்ப வாழ்வை துறக்கும் பெண்கள் தேவ அடியார்கள் என அழைக்க்பட்டார்களாம். சிலர் முழுக்க முழுக்க துறவு வாழ்க்கையில் இருப்பார்கள்..சிலரோ கலை, ஆடல், பாடலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வார்கள். இவர்களில் சிலர் யாரையேனும் மணந்து கொள்வதும் உண்டு.

ஆனால் ஒரு போதும் பாலியல் தொழில் செய்ய வேண்டிய நிலை இருந்தது இல்லை. அரசனுக்கே ஆலோசனை சொல்லும் நிலையில் கூட இருந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் , நாம் வழிபடும் சில கோயில்கள் இவர்கள் கொடுத்த பணத்தினால்தன் உருவானது.



ஆனால் தமிழர்கள் ஆட்சி அழிந்து, வேற்று கலாச்சார ஆட்சிகள் ஆங்கிலேயர் ஆட்சி போன்றவற்றால் அவர்களுக்கு செல்வாக்கு இல்லாமல் போகவே, சில உயர் சாதியினர் அவர்களை பாலியல் தொழிலில் தள்ளினார்கள். இன்னொரு கொடுமையாக , தேவரடியார் என தனியாக ஒரு சாதியை பிறப்பின் அடிப்படையில் உருவாக்கி , பாலியல் சுரண்டலை ஆரம்பித்தார்கள்.

இந்த நிலையில்தான் பெரியார் போன்றோரின் பணியால் இந்த இழி நிலை மாற்றப்பட்டது.

ஆகவே சொர்ணமால்யா கருத்தை ஏற்பதா இல்லையா என ஒரே வரியில் சொல்ல முடியாது.

பிறப்பின் அடிப்ப்படையிலான , பாலியல் சார்ந்த , பெரியாரால் எதிர்க்கப்பட்ட ஒரு முறையை தேவதாசி முறை என அழைத்த்தால் , அதை ஆதரித்து பேசுவது தவறு.

பண்டையை தமிழ் முறைப்படி அமைந்த , தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட, பாலியல் இல்லாத , பெண்ணுரிமையை மீறாத ஒரு முறையை தேவதாசி முறை என அவர் சொல்லி இருந்தால் அதை தவறு என சொல்ல முடியாது.


25 comments:

  1. திணிப்பு இல்லாது விரும்பி செய்தால்
    நானும் தேவதாசி / தேவதாசர் முறையை ஆதரிக்கிறேன் (எல்லா சாதியினர)

    சுப்பிரமணிய ராஜு , &மாலன் பாலகுமாரனிடம் சொல்வாராம்.
    நாம் மட்டும் பெண்ணாகப் பிறந்து இருந்தால் விரும்பியே பாலியல் தொழிலுக்குச் சென்று இருப்போம் .

    ReplyDelete
  2. நீங்கள் நேரில் சென்று இருந்தீர்களா
    மகிழ்வு

    ReplyDelete
  3. ஏதோ வெள்ளையர்கள் வந்ததால் தேவதாசி முறை வந்தது என கூற வேண்டாம். தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் தூத்துக்குடி நாகர்கோவில் இம்முறையை ஓழித்தவர் கார்மைக்கேல் என்ற அயர்லாந்து நாட்டு பெண்மணி..

    ரிப்பீட்டு.

    ReplyDelete
    Replies
    1. வெள்ளையர் ஆட்சி காலத்துக்கு முன்பே இந்த முறையை ஒழித்து விட்டார் என்கிறீர்கள?

      Delete
  4. புளுகி வைப்பது , வரலாற்றை திரித்து இவர்கள் எதோ நியாயமாக நடந்து கொண்டதாக காட்டுவது பார்பானின் வழக்கமான வேலை தான் ..
    அரசனின் அந்தபுரத்திற்கு பெண்கள் விரும்பி செல்வார்கள் என்று கூறுவது எவ்வளவு தவறு.
    அது போல இந்த தொழில் உலகில் யாராவது விரும்பி ஏற்பார்களா (அதுவும் அந்த காலத்தில் , பெண்களுக்கு எந்த சட்ட பாதுகாப்பும் இல்லாத நிலையில் )

    ReplyDelete
    Replies
    1. தேவதாசி என்பது அந்த காலத்தில் ஒரு “தொழிலாக” இருக்கவில்லை

      Delete
    2. அது ஒரு அடிமை முறை., தொழில் அல்ல

      Delete
    3. நண்பரே கடவுளுக்கு சேவை செய்பவர்களே அவர்கள்.

      Delete
  5. தேவதாசி முறையை ஆதரிக்கும் நடிகை தானே தேவதாசியாகி மயிலாப்பூர் கோவிலுக்கு சென்று விடலாமே!!!

    சும்மா பேசிகிட்டு, கடுப்பேத்திட்டு............

    ReplyDelete
  6. //பண்டையை தமிழ் முறைப்படி அமைந்த , தமிழ் கலாச்சாரத்துக்கு உட்பட்ட, பாலியல் இல்லாத , பெண்ணுரிமையை மீறாத ஒரு முறையை தேவதாசி முறை என அவர் சொல்லி இருந்தால் அதை தவறு என சொல்ல முடியாது.


    // பண்டைய தமிழ் முறை என்றால் சிலப்பதிகாரத்தில் மாதவி போதுமல்லவா? அதுபோன்ற முறை உங்களுக்கு ஓ.கேவா..,

    ReplyDelete
    Replies
    1. மாதவி ஒரு தேவதாசியா?

      Delete
  7. @கல் நெஞ்சம்.. அந்த அயர்லாந்து பெண்மணி தேவதாசி முறையை ஒழித்ததால்தான் ராஜராஜசோழன் பொற்கால ஆட்சி கொடுத்தான் என்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ராஜ ராஜ சோழன் ஆட்சியில் சோழர்களுக்கு பொற்காலம்., மற்றபடி சரித்திரங்கள் ஒன்றும் அவர்களுக்கு சாதகமாக இல்லை.

      தலைமை சிற்பி வெற்றிலை போடும்போது துப்ப எச்சில் பாத்திரத்தை ஒரு சிறுவன் தன் கையிலேயே வைத்திருக்கும் வகையில்தான் இருந்திருக்கிறது.

      Delete
  8. "ராஜராஜசோழன் பொற்கால ஆட்சி கொடுத்தான் என்கிறீர்களா?"

    யாருக்கு பொற்கால ஆட்சி கொடுத்தான்?

    ReplyDelete
    Replies
    1. no doubt only for paarppanas.

      Delete
  9. உண்மை தான். ஏமி கார்மைக்கேல் அம்மையார் என்கிற கிறிஸ்தவ மிஷனெரி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டோனாவூர் கிராமத்தில் தேவதாசி பெண்களுக்காக ஒரு காப்பகம் அம்மைத்து அவார்களை பராமரித்தார்.

    ReplyDelete
  10. நிறைய அறியாத்தகவல்கள் தேவதாசி பற்றி... நன்றி அண்ணே...

    ReplyDelete
    Replies
    1. அறியாத்தகவல்களா ? நீங்க எந்த உலகத்தில் இருந்து வந்திருக்கின்றீர்கள்

      Delete
  11. ராஜராஜசோழன் பொற்கால ஆட்சி கொடுத்தானா என்பதை பெரிய கோவில் சுவர் கல்வெட்டு சொல்லும்....

    http://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/


    --Maakkaan

    ReplyDelete
  12. "சிலரை இப்படி பாலியர் ரீதியாக கொடுமைப்படுத்தினார்கள் என்பது உண்மை. "
    இப்படி சொல்ல உங்களுக்கு கேவலமாக இல்லையா ?
    அனைத்து தேவதாசிகளும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள். யாரும் விதிவிலக்கு பெறவில்லை.

    ReplyDelete
  13. "அது போல இறைதேடலில் குடும்ப வாழ்வை துறக்கும் பெண்கள் தேவ அடியார்கள் என அழைக்க்பட்டார்களாம். சிலர் முழுக்க முழுக்க துறவு வாழ்க்கையில் இருப்பார்கள்..சிலரோ கலை, ஆடல், பாடலில் தம்மை ஈடுபடுத்தி கொள்வார்கள். இவர்களில் சிலர் யாரையேனும் மணந்து கொள்வதும் உண்டு."

    கேவலமான புத்தி கொண்ட மனிதர் நீர். நீ கொண்ட கருத்தை வலுப்படுத்த வரலாற்றையே திரிவுபடுத்தும் கேவலமான வேலையை செய்கின்றீர். இதற்க்கு நீ "பாங்கன்" வேலையே செய்யலாம்.


    ReplyDelete
    Replies
    1. இங்கு நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர் அய்யா?

      Delete
  14. நூறு சதவிதம் உண்மை...கூகிளில் Dohnavur என்று தேடிப்பாருங்கள்.....அந்த அம்மையாரின் தியாகம் தெரியும்..இதற்காக டோனாவூர்காரன் என்ற முறையில் பெருமை கொள்ளுகிறேன்....

    ReplyDelete
  15. ஆங்கிலேய பெண்மணி ஒருவர் இம்முறையை ஒரு பகுதியில் ஒழித்தார் என்பதால் இந்த முறையை அவர்கள் தொடங்கவில்லை என்று ஆகிவிடுமோ? அவர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதால் அவர்கள் நம்மை சுரண்டவில்லை என்று கூற முடியாது தானே?

    ReplyDelete

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா