Sunday, February 3, 2019

மரண விளிம்பில் ஒரு கதை


எதிர்பார்ப்புடன் வாங்கும் சில நூல்கள் குப்பைகளாக இருப்பதுண்டு

தற்செயலாக வாங்கும் நூல்கள் அரிய அனுபவம் தருவதும் உண்டு


இலக்கியச்சிந்தனை அமைப்பு வருடம்தோறும் சிறந்த கதைகள் சிலவற்றை ( 12 கதைகள் ) தேர்ர்ந்தெடுத்து அதில் சிறந்த கதை ஒன்றை அந்த வருடத்தின் சிறந்த கதையாக தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது

ஆரம்ப கட்ட தேர்வு இலக்கியச்சிந்தனை அமைப்பை சேர்ந்தது... அவற்றில் சிறந்த கதை ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மூத்த எழுத்தாளர் யாராவது ஒருவரிடம் வழங்கப்படும்... அவர் அந்த கதைகள் குறித்த தம் விமர்சனத்தை  சொல்லி விட்டு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து அத்ற்கான காரணங்களையும் சொல்வார்

அந்த அலசல் மிகவும் சுவையாக இருக்கும்.. பயனுள்ளதாகவும் இருக்கும்

வானதி பதிப்பகம் இதை நூலாக வெளியிடுகிறது

 கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த பணி நடந்து வருகிறது... அவற்றில் பெரும்பாலான நூல்களை படித்துள்ளேன்

2012 சிறந்த சிறகதைகள் நூலை வாங்கிய பின்புதான் அது ஒரு அரிய ஆவணம் என்பதை அறிந்தேன்


கிருஷ்ணா டாவின்சியின் கடைசி சிறுகதையும் தமிழருவி மணியனின் முதல் சிறுகதையும் இடம்பெற்றுள்ள தொகுப்பு இது

இதில் வியப்பூட்டும் அம்சம் என்னவென்றால் இரண்டுமே மரணத்தை கதைக்களனாக கொண்டவை

புகழ் பெற்ற ஓர் எழுத்தாளரின் கடைசி கதை எனும் அரிய தருணத்தை படம்பிடிக்க ஒரு மேதையால்தான் முடியும்.. இந்த தொகுப்புக்கு மதிப்புரை வழங்கியுள்ள வண்ணதாசன் அதை சிறப்பாக செய்துள்ளார்


குமுதம் வாசகர்கள் மத்தியில் கிருஷ்ணா டாவின்சி மிகவும் பிரபலம்.. மற்றவர்களும் அவரை அறிவார்கள்.. தனிப்பட்ட முறையிலும் பல நண்பர்களைக்கொண்டவர் அவர்

குமுதத்தில் இருந்து விலகிய பின் சினிமா துறையில் ஈடுபட்டார்.. பல பத்திரிகைகளில் எழுதினார்

அந்த கடைசிக்கதை விகடனில் வெளியானது


மரணத்தை எதிர் நோக்கும் ஒருவனைப் பற்றிய கதை அது.. நீ பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியபின்பும் , மாற்று மருத்துவத்தால் பிழைத்து எழுந்த ஒருவனின் கதை

ஆனால் அந்த கதை வெளியானபோது அதைப்பார்க்க அவர் இல்லை... ஆம்... மருத்துவர்கள் சொன்னது உண்மையாகி அவர் இறந்து விட்டார்.. அந்த குறிப்புடன் அந்த சிறுகதையை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி இருந்தது விகடன்

 நோயின் கொடுமையை டாக்டர்கள் சொல்லும்போது மனதில் ஏற்படும் உணர்வுகள் , அந்த அச்சம் ,  அதை கண்டு கொள்ளாத மருத்துவ மனை நிர்வாகம், பரிதாபப்பட்டாலும் உதவ முடியாத நிலையில் இருக்கும் மருத்துவர்கள் , மாற்று வழி இருக்குமா என நோயாளின் பரிதவிப்பு என பல விஷயங்களை படம் பிடித்துள்ள கதை ஒரு முக்கியமான ஆவணம்

ஆனால் , அந்த ஆவண மதிப்பு மட்டும் போதாது என கருதி , சிறந்த கதையாக ஒற்றைச் சிறகு ( தமிழருவி மணியன் ) கதையை தேர்ந்தெடுத்துள்ளார் வண்ண தாசன்... அந்த கறார்தன்மையும் நூலுக்கு அழகு சேர்க்கிறது

இதே அமைப்பு சார்பாக , சில ஆண்டுகளுக்கு முன் சிறந்த கதைகான பரிசை இரு முறைகள் பெற்றவர்தான் வண்ண தாசன்,,,   அவரை தேர்ந்தெடுத்தவர்கள் சுஜாதா ஒரு முறை , ராஜம் கிருஷ்ணன் ஒரு முறை

இப்போது அவரே நடுவர்... இதுவும் சிறப்பம்சம்

இந்த இரு கதைகள் தவிர மற்ற கதைகளும் நன்றாக உள்ளன

வாய்ப்பிருப்பின் படித்து பாருங்கள்
No comments:

Post a Comment

NCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]
உதாரணமாக [im]http://rajinifans.com/images/top_rajini.jpg[/im]

Followers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன? -http://blogs-lovedby-pichaikaaran.blogspot.com

விரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....

hit

hit counter

Blog Archive

என்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா